1. Home
  2. ஜோதிடம்

இந்த வார ராசிபலன்கள் (12.01.2020 - 18.01.2020)


இந்த வார ராசிபலன்கள் (12.01.2020 - 18.01.2020)

கணித்தவர் : கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம் கிரக நிலை: தைரிய ஸ்தானத்தில்  ராஹூ - சுக ஸ்தானத்தில் சந்திரன் -  அஷ்டம ஸ்தானத்தில்  செவ்வாய் -   பாக்கிய ஸ்தானத்தில்  சூர்யன்,  குரு, சனி , கேது - தொழில் ஸ்தானத்தில்  புதன் - லாப ஸ்தானத்தில் சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.  கிரகமாற்றம்: 13-01-2020 அன்று பகல் 12.48 மணிக்கு சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 15-01-2020 அன்று காலை 5.38 மணிக்கு சூரிய பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 15-01-2020 அன்று மாலை 3.21 மணிக்கு சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். 17-01-2020 அன்று மாலை 5.45 மணிக்கு சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்கள்: புத்தி சாதுரியத்தால்  புகழையும், செல்வத்தையும் பெறும் மேஷ ராசிக்காரர்களே இந்த வாரம்  எண்ணிய காரியங்களை  திறமையாக செய்து முடிப்பீர்கள். பணவரவும் இருக்கும். எதிர்பார்த்த  இடமாற்றம் கிடைக்கும். பயணம்  செல்ல வேண்டி இருக்கும்.  சில முக்கியமான  முயற்சிகள் அதிக உழைப்பின் பேரில் செய்ய வேண்டி இருக்கும். சொத்துக்கள் மீது கவனம் தேவை.. குடும்பத்தில் கணவன், மனைவி இருவ ரும் மனம் விட்டு பேசுவது நல்லது. குடும்ப விஷயங்களை  அடுத்தவரிடம் கூறி ஆலோசனை கேட்பதை தவிர்ப்பது நன்மை தரும். குழந்தைகள் முன்னேற்றத் தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர், நண்பர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் கடினமான முயற்சிக்கு பிறகு எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். போட்டிகள் குறையும். புதிய வாடிக்கையாளர்களால் திருப்தி ஏற்படும்.  கடன் தொல்லைகள் குறை யும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார முன்னேற் றம் உண்டாகும். புது தொழிலில் முதலீடு  செய்யும் போது கவனம் தேவை. பெண்களுக்கு அறிவு திறமை அதிகரிக் கும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி கிடைக்கும். தேவை யான பண உதவியும் எதிர் பார்க்கலாம். மாணவர்களுக்குஉயர் கல்வி பற்றிய எண்ணம் அதிகரிக்கும். கூடுதல் மதிப் பெண் பெற படிப்பில் வேகம் காட்டுவீர்கள். பரிகாரம்: திருத்தணி முருகனை தரிசித்து வணங்க மனதில் நிம்மதி பிறக்கும். அதிர்ஷ்ட கிழமைகள்:  செவ்வாய், வெள்ளிகிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில் ராஹூ -  தைரிய ஸ்தானத்தில் சந்திரன்  -  களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய்  -  அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன்,  குரு, சனி, கேது  - பாக்கிய ஸ்தானத்தில் புதன் -  தொழில் ஸ்தானத்தில்  சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றம்: 13-01-2020 அன்று பகல் 12.48 மணிக்கு சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 15-01-2020 அன்று காலை 5.38 மணிக்கு சூரிய பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 15-01-2020 அன்று மாலை 3.21 மணிக்கு சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 17-01-2020 அன்று மாலை 5.45 மணிக்கு சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்கள்: சொன்ன சொல்லை காப்பாற்றும் குணமுடைய ரிஷப ராசியினரே  இந்த வாரம் தைரியமாக எதையும் செய்ய தோன்றும். உங்களது செயல்களால் உங்களுக்கு  மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சி யில் கலந்து கொள்வீர்கள். எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபடு வீர்கள். தந்தை மூலம் உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் இருக்கும். சகோதரர்களுக்குள் ஒற்றுமை குறையும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றி மறையும். வார இறுதியில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளுக்காக பாடுபட வேண்டி இருக்கும். ஒரு நல்ல குறிக்கோளுக் காக புண்ணிய பயணம் செய்ய வேண்டி இருக்கும். ஆடம்பர பொருட்கள், வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் வருமானம் வந்து சேரும். புதிய முயற்சிகள்  காலதாமதமாக முடியும். வாடிக்கையாளர்களிடம்  வாக்கு வாதத்தை  தவிர்த்து அனுசரித்து பேசுவது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம் முடிவில் எதிர்பார்த்தபடி காரியம் முடியும். சக ஊழியர்கள்  ஆதரவும் இருக்கும். பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவுக்குவரும். புதிய தொடர்புகளால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். இடமாற்றம் ஏற்படலாம். மாணவர்களுக்குகல்வி தொடர்பான விஷயங்களில் நேரடியாக கவனம் செலுத்துவது நல்லது. பாடங்களில் சந்தேகங்களை  உடனுக்குடன் போக்கிக் கொள்ள ஆசிரியர் உதவி கிடைக்கும். பரிகாரம்: நவகிரகத்தில் இருக்கும் சுக்கிர பகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். நன்மைகள் உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளிகிரகநிலை: ராசியில்  ராஹூ -  குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் -   ரண, ருண ஸ்தானத்தில்  செவ்வாய் -  களத்திர ஸ்தானத்தில்  சூர்யன், குரு, சனி , கேது - அஷ்டம ஸ்தானத்தில்  புதன் -  பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றம்: 13-01-2020 அன்று பகல் 12.48 மணிக்கு சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 15-01-2020 அன்று காலை 5.38 மணிக்கு சூரிய பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 15-01-2020 அன்று மாலை 3.21 மணிக்கு சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 17-01-2020 அன்று மாலை 5.45 மணிக்கு சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்கள்: எளிதில் யாருடனும் நண்பராகும் திறமை பெற்ற மிதுன ராசியினரே இந்த வாரம் வீண் மனக் கவலையை  உண்டாக்குவார்.  எந்த ஒரு காரியத்திலம் எதிர்பார்த்த வெற்றி தாமதமாக கிடைக்கும்.ஒதுங்கி இருந்தால் கூட வலுக்கட்டாய மாக எதிலாவது ஈடுபட சுற்றமும், நட்பும் தூண்டுவார்கள். கவனமாக அதை தவிர்ப்பது நல்லது. எதிலும் கவனமாக இருப்பது நல்லது. வீண் அலைச்சல் செலவு ஏற்படலாம். பயணங்களின் போது  எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். பூமி மூலம் லாபம் கிடைக்கும் சகோதரர்களால் நன்மை உண்டாகும். வாழ்க்கை துணைக்கு தேவையான வசதிகள் செய்து தருவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். எல்லா வகையிலும் நன்மையையும் மகிழ்ச்சியையும் கிடைக்கும். வியாபாரம், தொழில் மூலம் உண்டாகும் செலவுகள் குறையும். புதிய வாடிக்கை யாளர்கள் கிடைப்பார்கள். ஆனால் அவர்களிடம் திறமையாக  பேசி தக்க வைத்துக் கொள்வது நல்லது. வியாபாரம் தொழில் போன்றவற்றை விரிவாக்கம் செய்ய புது திட்டங்களை பற்றி ஆலோ சனை செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பதவிகள் தாமதமாக கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்க ளுக்கு நல்ல பலன் ஏற்படும். பெண்களுக்கு எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து கூடும். எதிர்ப்புகள் விலகும். மன மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்களுக்குகல்விக்கான செலவு உண்டாகும். திறமை வெளிப்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதன் மூலம் நன்மை ஏற்படும். பரிகாரம்: முடிந்தபோதெல்லாம் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று வாருங்கள் நன்மைகள் நடக்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்கிரகநிலை: ராசியில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில்  செவ்வாய் -  ரண, ருண ஸ்தானத்தில்  சூர்யன்,  குரு, சனி , கேது - களத்திர ஸ்தானத்தில் புதன் -  அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் -   அயன, சயன, போக ஸ்தானத்தில்  ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றம்: 13-01-2020 அன்று பகல் 12.48 மணிக்கு சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். 15-01-2020 அன்று காலை 5.38 மணிக்கு சூரிய பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 15-01-2020 அன்று மாலை 3.21 மணிக்கு சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 17-01-2020 அன்று மாலை 5.45 மணிக்கு சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்கள்: கவலைகளை வெளிக்காட்டாமல் எப்போதும் சிரித்த  முகத்துடன் காணப்படும் கடக ராசிக்காரர்களே  இந்த வாரம் எதிலும் கவனமாக  செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த  காரியங்களை  வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாக்கு நாணயம் உண்டா கும்.  முக்கிய நபர்கள் நட்பு கிடைப்பது டன் அவர்களால் நன்மையும் உண்டாகும். அடுத்தவரை பற்றி எந்த பேச்சும் பேசாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் உண்டாகும். சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சி மேற் கொண்டவர் களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். கஷ்டமில்லா சுகவாழ்க்கை இருக்கும். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவும் கிடைக்கும். நெடுநாளைய சங்கடம் தீரும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதபோக்கு காணப் படும். செலவும் அதிகரிக்கும் தேவை யான பணவசதி கிடைக்கும். விரிவாக்கம் தொடர்பான முயற்சிகள் இழுபறியான நிலையில் இருந்து பின்னர் முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்க லாம்.  வேலை தொடர்பாக வெளியூரில் தங்க நேரிடலாம். பெண்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றும் முயற்சியில்  வெற்றி பெறுவீர்கள். அடுத்தவரை பற்றி  எந்த பேச்சும் பேசாமல் இருப்பது நல்லது. மாணவர்களுக்குகல்வியில் முன்னேற்ற மடைய கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது. கல்வி தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கும். பரிகாரம்: திருவேற்காடு அம்மனை நினைத்து வணங்க மனக்குழப்பம் தீரும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்கிரகநிலை: சுக ஸ்தானத்தில்  செவ்வாய்  -  பஞ்சம ஸ்தானத்தில்  சூர்யன்,  குரு, சனி , கேது  - ரண, ருண ஸ்தானத்தில் புதன் -  களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் -  லாப ஸ்தானத்தில்  ராஹூ -  அயன, சயன, போக ஸ்தானத்தில்  சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றம்: 13-01-2020 அன்று பகல் 12.48 மணிக்கு சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார். 15-01-2020 அன்று காலை 5.38 மணிக்கு சூரிய பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். 15-01-2020 அன்று மாலை 3.21 மணிக்கு சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். 17-01-2020 அன்று மாலை 5.45 மணிக்கு சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்கள்: துணிச்சலாக எதையும் செய்து வெற்றி  பெறும் சிம்ம ராசியினரே இந்த வாரம் வீண் அலைச்சல் காரிய தடை ஏற்பட்டாலும் தடை நீங்கி காரியங்கள்  நடந்து முடியும். அலைச்சல் ஏற் பட்டாலும் எடுத்த முயற்சி கைகூடும். தேவையான வசதிகள்  உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி  இருக்கும்.  சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். உடல் சோர்வு மன குழப்பம் ஏற்பட்டாலும், அவை நீங்கும். செலவு கட்டுக்குள் இருக்கும். வாழ்க்கை துணையின் ஆலோசனை உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். எதிர்பாராமல் ஏற்படும் குடும்ப செலவை சமாளிக்க தேவையான பண உதவியும் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான வசதிகள் கிடைக் கும். நண்பர்கள், உறவினர்கள் மூலம் தேவையான உதவிகளும் கிடைக்க பெறுவீர்கள். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக் கும். பலவகை முன்னேற்றங் களும் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலா கும். தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கலின்றி எதையும் செய்து முடிப் பார்கள். பணி தொடர்பான பயணங்கள் இருக்கும். பெண்களுக்கு சில முக்கியமான காரியங் களை கூடுதலாக கவனம் செலுத்துவதன் மூலமும் அதிக உழைப்பினாலும் செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். மாணவர்களுக்குகல்வியில் வெற்றி பெற எல்லா முயற்சிகளையும் மேற்கொள் வீர்கள். சக மாணவர்கள் ஆதரவும் இருக்கும். பரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். உள்ளத்தில் அமைதி உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில்  செவ்வாய் - சுக  ஸ்தானத்தில்  சூர்யன்,  குரு, சனி , கேது - பஞ்சம ஸ்தானத்தில் புதன் -  ரண, ருண ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில்  ஸ்தானத்தில்   ராஹூ - லாப ஸ்தானத்தில் சந்திரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றம்: 13-01-2020 அன்று பகல் 12.48 மணிக்கு சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 15-01-2020 அன்று காலை 5.38 மணிக்கு சூரிய பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 15-01-2020 அன்று மாலை 3.21 மணிக்கு சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார். 17-01-2020 அன்று மாலை 5.45 மணிக்கு சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்கள்: வாக்கு நாணயம் தவறாமலும்  உண்மைக்காக பாடுபடும் குணமும் உடைய கன்னி ராசியினரே இந்த வாரம் மனதில் புது திட்டங்கள் உருவாகும். புதிய தொடர்புகளால் நன்மை உண்டாகும். வீண் பகை, மன சஞ்சலம், தேவையற்ற செலவு ஏற்பட்டாலும் செலவு கட்டுக்குள் இருக்கும். மன சஞ்சலம் தீரும். பகைகள் தொல்லை தராமல் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில்  கவனம் தேவை. தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். மற்றவர்களுக்காக பரிந்து பேசும் போதும் அவர்களுக்கு உதவிகள் செய்யும் போதும் கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். தொழில், வியாபாரம் தொடர்பாக கடுமை யாக உழைக்க வேண்டி இருக்கும்.  பயணங்கள்  செல்ல நேரிடலாம். தொழில், வியாபாரம் பற்றிய விஷயங்களில் நேரடி கவனம் தேவை. தேவையான பணம் தாமதமாக கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார் கள். புதிய பொறுப்புகளும் அதனால் வருமானமும் இருக்கும். எதிர்ப்புகள் அகலும். பெண்களுக்குகடன் பிரச்சனைகள் குறையும். புதிய எண்ணங்கள் உண்டா கும். புது நபர்களின் நட்பும் கிடைக்கலாம். மாணவர்களுக்குகல்வியை பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பாடங்களை படிக்கும் போது மனதை ஒருமுகபடுத்தி படிப்பது நல்லது. பரிகாரம்: காஞ்சி புரம் வரதராஜ பெருமாளை தரிசித்து விட்டு வாருங்கள். வெற்றி உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் -  தைரிய ஸ்தானத்தில்  சூர்யன், குரு, சனி , கேது -  சுக  ஸ்தானத்தில் புதன் -  பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ - தொழில் ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.  கிரகமாற்றம்: 13-01-2020 அன்று பகல் 12.48 மணிக்கு சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 15-01-2020 அன்று காலை 5.38 மணிக்கு சூரிய பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 15-01-2020 அன்று மாலை 3.21 மணிக்கு சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 17-01-2020 அன்று மாலை 5.45 மணிக்கு சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார். பலன்கள்: நடக்காது என்று எதையும் நினைக்கா மல் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்ற துடிப்புடைய துலா ராசியினரே இந்த வாரம் எதையும் ஒரு முறைக்கு பலமுறை  ஆலோசித்து செய்வது நல்லது, மனம் நிலை கொள்ளாமல்  ஏதாவது சிந்தித்து கொண்டே இருக்கும். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. பணவரத்து அதிகரிக் கும். உடல் ஆரோக்கியம் பெறும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளின் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவது நல்லது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கூறும் கருத்துகளுக்கு எதிர்த்து பேசுவதை விட்டுவிட்டு நிதானமாக உங்கள் கருத்தை சொல்வது  நன்மை தரும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் தங்களது திறமையை வெளிபடுத்தி வியாபாரம் செய்ய வேண்டி இருக்கும். நீண்ட நாட்களாக  இழுபறியாக இருந்த ஆர்டர் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூல் தாமதமாக இருந்தாலும் பணம்  வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக எதை யும் செய்வது நல்லது. வீண் அலைச்சல் வேலை பளு ஆகியவை இருக்கும். பெண்களுக்குசதா எதையாவது யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். எந்த காரியத்திலும் முடிவு எடுக்கும்  முன்பு தீர ஆலோசிப்பது நல்லது. மாணவர்களுக்குதிறமையாக செயல் பட்டு பாராட்டுகள் கிடைக்க பெறுவீர் கள். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். பரிகாரம்: ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு கல்கண்டு நிவேதனம் செய்து வழிபட்டு வாருங்கள். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளிகிரகநிலை: ராசியில் செவ்வாய் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன்,  குரு, சனி , கேது  - தைரிய ஸ்தானத்தில் புதன் -  சுக  ஸ்தானத்தில் சுக்ரன் -  அஷ்டம  ஸ்தானத்தில்  ராஹு -  பாக்கிய ஸ்தானத்தில்  சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றம்: 13-01-2020 அன்று பகல் 12.48 மணிக்கு சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 15-01-2020 அன்று காலை 5.38 மணிக்கு சூரிய பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 15-01-2020 அன்று மாலை 3.21 மணிக்கு சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 17-01-2020 அன்று மாலை 5.45 மணிக்கு சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்கள்: மற்றவர்களை அறிந்து அவர்களுக் கேற்ப நடந்து கொண்டு காரியம் சாதிக் கும் திறமை உடைய விருச்சிக ராசியினரே இந்த வாரம் சாமர்த்தியமான பேச்சின் மூலம்  காரியவெற்றி உண்டாகும். எந்த ஒரு வேலையிலும் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். உங்களுடன் பக்கபலமாக ஒருவர் இருந்து தேவையான உதவிகளைச் செய்வார். நண்பர்கள் மூலம் புதிய வசதிகள் கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி ஏற்பட குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. விருந்தினர்கள் வருகையும் அதனால் செலவும் உண்டாகலாம். வழக்குகளை தள்ளி போடுவதும் பேசி தீர்த்துக் கொள்வ தும் நல்லது. ஆயுதம், தீ ஆகியவற்றில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் எதிர்பார்த்தபடி நடக்கும். கூட்டு தொழிலில் இருப்பவர்கள் கவனமாக  எதையும் செய்வது நன்மையை தரும். தேவையான பண உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணம் செல்ல வேண்டி இருக்கும் சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் தாமதப்படலாம். பெண்களுக்குதிறமையான பேச்சின் மூலம் காரியவெற்றி உண்டாகும். எதிர் பார்த்த பணவரவு இருக்கும். பொறுப்பு கள் அதிகரிக்கும். மாணவர்களுக்குகல்வியில் வெற்றி பெற ஆசிரியர்களின் ஆலோசனையை கேட்டு பயன் பெறுவது நல்லது. முயற்சிகள் வெற்றி பெறும். பரிகாரம்: திருப்புகழை பாடி மனதார முருகனை வழிபடுங்கள் நல்லவை எல்லாம் கிட்டும். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளிகிரகநிலை: ராசியில்  சூர்யன்,  குரு, சனி , கேது -  தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் புதன் - தைரிய ஸ்தானத்தில் சுக்ரன் -  களத்திர ஸ்தானத்தில்  ராஹு -  அஷ்டம  ஸ்தானத்தில் சந்திரன் -  அயன, சயன, போக ஸ்தானத்தில் செவ்வாய்  என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றம்: 13-01-2020 அன்று பகல் 12.48 மணிக்கு சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 15-01-2020 அன்று காலை 5.38 மணிக்கு சூரிய பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். 15-01-2020 அன்று மாலை 3.21 மணிக்கு சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 17-01-2020 அன்று மாலை 5.45 மணிக்கு சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்கள்: சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்புடன் இருக்கும் தனுசு ராசியினரே இந்த வாரம்  எதிர்பார்த்த காரியங்கள் மனதுக்கு திருப்தி அளிக்கும் விதத்தில் நடந்து முடியும். கடன் சுமை குறையும். எதிர்ப்புகள்  அகலும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை  யோசித்து செய்ய தோன்றும். யாருக்காவது உத்திரவாதம் தரும்போது கவனமாக  இருப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். குடும்பத்தில்  இருப்பவர்களுடன் கோபமாக  பேசும் சூழ்நிலை ஏற்படும். கவனமாக இருப்பது நல்லது. மனைவி குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாக லாம். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. வயிறு தொடர்பான நோய் வந்து நீங்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். தேவையான சரக்குகள் கையிருப்பில் இருக்கும். புது நபர்கள் கூறும் வியாபாரம் தொடர்பான விஷயங் களில் முடிவு எடுக்கும் போது கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணியை  கவனிக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளிடமும் சக பணி யாளர் களிடமும் அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்குஎதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபட்டு சிறப்பாக செய்வீர்கள். பெரியவர்கள் மூலம் உதவி கள் கிடைக்கும். மாணவர்களுக்குவீண் விவாதங்களை தவிர்த்து கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங் களை படிப்பது முன்னேற்றத்திற்கு உதவும். பரிகாரம்: சிவாலயத்திற்குச் சென்று  நமசிவாய மந்திரத்தை உரக்கச் சொல்லி வழிபடுங்கள். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்கிரகநிலை: ராசியில் புதன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - ரண, ருண  ஸ்தானத்தில்  ராஹூ - களத்திர ஸ்தானத்தில்  சந்திரன் - லாப ஸ்தானத்தில்  செவ்வாய் -  அயன, சயன,  போக ஸ்தானத்தில்  சூர்யன், குரு,  சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றம்: 13-01-2020 அன்று பகல் 12.48 மணிக்கு சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 15-01-2020 அன்று காலை 5.38 மணிக்கு சூரிய பகவான் ராசிக்கு மாறுகிறார். 15-01-2020 அன்று மாலை 3.21 மணிக்கு சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 17-01-2020 அன்று மாலை 5.45 மணிக்கு சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்கள்: எந்த ஒரு வேலையையும் நுணுக்கமாக செய்து மற்றவர்களின் பாராட்டை பெறும் மகர ராசியினரே இந்த வாரம் பல்வேறு நன்மைகள் உண்டாகும். கடினமான பணிகளையும் செய்து முடிக்கும் துணிச்சல் ஏற்படும். காரிய வெற்றி யால் மனதில் சந்தோஷம் உண்டாகும். இடத்தை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடும். கணவன், மனைவிக்கிடையே  நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கை  துணையின்  மூலம் ஆதாயம் உண்டாகும். குடும்பத்து டன் புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்வீர் கள். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். உங்களது பொருட்களின் மீது கவனம் தேவை. சாதுரியமான செயல்களால் லாபம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். புதிய ஆர்டர்கள் வருவதில் இருந்த தடைகள் விலகும். தேவையான பணவசதி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள், அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும். உங்களது பணி திறமையால் மேல் அதிகாரிகள் திருப்தி அடைவார்கள். பெண்களுக்குஉடல் சோர்வும் திடீர் கவலைகளும் ஏற்பட்டு நீங்கும். பணவரத்து திருப்தி தரும். மதிப்பும், மரியாதையும் கூடும். மாணவர்களுக்குகல்வியில் தடங்கல் இன்றி நன்றாக படிப்பீர்கள். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மூலம் கல்விக்கான உதவிகள் கிடைக்கும். பரிகாரம்: தினமும் காகத்திற்கு சாதமிட்டு முன்னோர்களை வழிபட வாழ்வில் வளத்தைப் பெறலாம். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனிகிரகநிலை: ராசியில் சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ -  ரண, ருண  ஸ்தானத்தில் சந்திரன் -  தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் -  லாப ஸ்தானத்தில் சூர்யன், குரு, சனி , கேது  - அயன, சயன,  போக ஸ்தானத்தில் புதன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றம்: 13-01-2020 அன்று பகல் 12.48 மணிக்கு சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 15-01-2020 அன்று காலை 5.38 மணிக்கு சூரிய பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 15-01-2020 அன்று மாலை 3.21 மணிக்கு சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 17-01-2020 அன்று மாலை 5.45 மணிக்கு சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்கள்: எந்த காரியத்தையும் தீர ஆலோசித்து அதில் ஈடுபடும் குணமுடைய கும்பராசி யினரே இந்த வாரம் எல்லா காரியங்களும் முன்னேற்றமாக நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். புதிய தொடர்புகளை ஏற்படுத்தும்.  திறமை வெளிப்படும். பல வகையிலும் முன்னேற்றம் உண்டாகும். சொத்து தொடர்பான விஷயங்களில் இழுபறி யான நிலை காணப்படும். இடமாற்றம் உண்டாகும். சுப செலவுகள் ஏற்படும். எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபடும் முன்பு தயக்கம் ஏற்பட்டு பின்னர் தெளிவு உண்டாகும். குடும்பத்தில் தீடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே எதையும் பேசி தெளிவு படுத்திக்கொள்வது நன்மை தரும். குழந்தைகளுக்கான பொருட்களை வாங்குவீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். வங்கியில் இருப்பு கூடும். வாங்கிய கடனை திருப்பி செலுத்தி மன நிம்மதி அடைவீர்கள். தொழில் தொடர்பான பயணங்கள் வெற்றி கிடைக்கும். செயல் திறமை மூலம் கடினமான பணியையும் சிறப்பாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். அதிகாரம் செய்யும் பதவிகள் தேடிவரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமையும் சாமர்த்தியமும் உண்டாகும். பெண்களுக்குஅடுத்தவர்கள் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபடாமல் இருப்பது நன்மை தரும். வீண் அலைச்சலும், செலவும் உண்டாகலாம் கவனம் தேவை. மாணவர்களுக்குகல்வியில் கூடுதல் மதிப்பெண் கிடைக்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். ஆசிரியர்களின் பாராட்டும் கிடைக்கும். பரிகாரம்: நவகிரக சனி பகவானுக்கு அரளி மலர் கொடுத்து வணங்கி வர நல்லது நடக்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனிகிரகநிலை: சுக ஸ்தானத்தில் ராஹூ -  பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில்  செவ்வாய் -  தொழில்  ஸ்தானத்தில் சூர்யன், குரு, சனி , கேது - லாப ஸ்தானத்தில் புதன் - அயன, சயன,  போக ஸ்தானத்தில் சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றம்: 13-01-2020 அன்று பகல் 12.48 மணிக்கு சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். 15-01-2020 அன்று காலை 5.38 மணிக்கு சூரிய பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 15-01-2020 அன்று மாலை 3.21 மணிக்கு சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 17-01-2020 அன்று மாலை 5.45 மணிக்கு சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்கள்: எந்த ஒரு காரியத்தையும் முன்னின்று செய்ய ஆசைப்படும் மீன ராசியினரே இந்த வாரம்   எல்லா வகையிலும் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு இருப்பவர்கள் தொடர்ந்து அதனை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனை தரும். குடும்ப வாழ்க்கையில் கஷ்டமில்லாத  சுக வாழ்க்கை உண்டாகும். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்தினர்கள் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இருக்கும். சுதந்திரமான எண்ணம் ஏற்படும். எதை பற்றியும் கவலைப்படாமல் தொழில், வியாபாரத்தில் முழு கவனத்தை யும் செலுத்துவீர்கள். எதிர்பார்த்த  பணம் கைக்கு வந்து சேரும். அரசாங்கம் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களும் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையி லும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. பெண்களுக்குஅடுத்தவர்களுக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. மாணவர்களுக்குகல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனமகிழ்ச்சி உண்டா கும். சிறப்பாக செயல் படுவீர்கள். பரிகாரம்: ஆற்றங்கரையில் வீற்றிருக்கும் அம்மனை வழிபட்டு வாருங்கள். நினைத்த காரியம் நடக்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்

newstm.in

Trending News

Latest News

You May Like