இந்த வார ராசிபலன் 6 - 12- அக்டோபர் - 2019
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணிப்பில் இந்த வார ராசிபலன்

newstm-weekly-astrology-6-12-oct-2019
கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
06.10.2019 முதல் 12 . 10. 2019 வரையிலான இந்த வார ராசிபலன்கள்..
மேஷம்: கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில் ராஹூ - ரண, ருண ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி , கேது, சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 6-Oct-19 அன்று இரவு 2.22 மணிக்கு சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 9-Oct-19 அன்று பகல் 12.39 மணிக்கு சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 11-Oct-19 அன்று இரவு 12.15 மணிக்கு சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: எப்போதும் விழிப்புடன் இருக்கும் மேஷ ராசி அன்பர்களே, இந்த வாரம் மனதில் உற்சாகம் பிறக்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் தயக்கம் காட்டமாட்டீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியங்கள் வேகமெடுக்கும். கண்மூடித்தனமாக எதிலும் ஈடுபடாமல் யோசித்து செய்வது நல்லது. எந்த ஒரு விஷயத்தையும் தக்க ஆலோசனையுடன் செய்வது நன்மையைத் தரும். குடும்பத்தில் அமைதி காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை இருக்கும். பிள்ளைகள் கல்வி தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை அதிகரிப்பதுடன் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும். பெண்களுக்கு மற்றவர்களால் ஏற்படும் தொல்லைகளில் சிக்காமல் இருக்க கவனமாக செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் மந்தமான நிலை மாற கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நன்மை தரும். பரிகாரம்: சனிக்கிழமையில் ஆஞ்சநேயரை வெண்ணெய் சாற்றி வணங்கி தீபம் ஏற்றி வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். பொருளாதாரம் மேம்படும் தைரியம் உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்ரிஷபம்: கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் - ரண, ருண ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் சனி, கேது, சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 6-Oct-19 அன்று இரவு 2.22 மணிக்கு சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 9-Oct-19 அன்று பகல் 12.39 மணிக்கு சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 11-Oct-19 அன்று இரவு 12.15 மணிக்கு சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: அடுத்தவர் ஆலோசனை கேட்டு செயல்படுவது போல் தோன்றினாலும் உண்மையில் சிந்தித்து செயலாற்றும் ரிஷப ராசி அன்பர்களே, இந்த வாரம் இறுதியில் பணவரத்து கூடும். செயல்திறமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீர எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் மீது பாசம் அதிகரிக்கும். அவர்களுடன் இனிமையான பேசி பொழுதை கழிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் ஏற்றுமதி - இறக்குமதியில் இருப்பவர்கள் நல்ல லாபத்தைக் காண முடியும். சின்ன சின்ன விவகாரங்களைச் சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும். பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். வரவேண்டிய பணம் வந்து சேரும். செயல் திறமை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றிபெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். பரிகாரம்: சஷ்டி கவசம் சொல்லி முருகனை வணங்க நோய் நீங்கும். மனகுழப்பம் தீரும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி மிதுனம்: கிரகநிலை: ராசியில் ராஹூ - சுக ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - ரண, ருண ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சனி , கேது, சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 6-Oct-19 அன்று இரவு 2.22 மணிக்கு சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 9-Oct-19 அன்று பகல் 12.39 மணிக்கு சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 11-Oct-19 அன்று இரவு 12.15 மணிக்கு சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: அடுத்தவர் கொடுத்த வேலையை எப்பாடுபட்டாவது செய்து முடிக்கும் மிதுன ராசி அன்பர்களே நீங்கள் உங்கள் வேலையை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்ட மாட்டீர்கள். இந்த வாரம் நல்ல பலன்கள் உண்டாகும். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகளில் சாதகமான நிலை காணப்படும். தான தர்மம் செய்யவும் ஆன்மிக பணிகளில் ஈடுபடவும் தோன்றும். நீண்ட தூர பயணங்கள் செல்ல நேரலாம். பயணத்தின் போது கவனம் தேவை. குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல் சந்தோஷத்தை தரும். பயணங்கள் செல்லும் போது கவனம் தேவை. சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி வரும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளிடமிருந்த சங்கடங்கள் சரியாகும். புது தெம்புடம் வேலைகளைச் செய்வீர்கள். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருளை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. ஒரு முறைக்கு இருமுறை பாடங்களை படிப்பது நல்லது. பரிகாரம்: திருப்பாவை சொல்லி தாயாரை வணங்கி வர துன்பங்கள் விலகும். மனநிம்மதி குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனிகடகம்: கிரகநிலை: தைரிய, வீர்ய ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் - சுக ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் குரு - ரண, ருண ஸ்தானத்தில் சனி , கேது, சந்திரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 6-Oct-19 அன்று இரவு 2.22 மணிக்கு சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 9-Oct-19 அன்று பகல் 12.39 மணிக்கு சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 11-Oct-19 அன்று இரவு 12.15 மணிக்கு சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இயல்பிலேயே மற்றவர்களை கவர்ந்திழுப்பதில் திறமை உடைய கடக ராசி அன்பர்களே இந்த வாரம் வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாக நடந்து முடியும். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணும். தொழில் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வியாபார ஸ்தலத்திற்காக புதியதாக இடம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடலாம். பணி நிமித்தமாக அலைய வேண்டியதிருக்கும். பெண்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதில் தாமதம் உண்டாகும். கவனமாக வேலைகளை செய்வது நல்லது. பணவரத்து தாமதமாகலாம். மாணவர்களுக்கு சீரான கல்வி நாட்டம் இருக்கும். சிலருக்கு கவனமும், பக்குவமும் உண்டாகும். உங்களுக்கு சிலர் உந்துதலாக இருப்பார்கள். பரிகாரம்: முருகனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன் சிம்மம்: கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் - தைரிய ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - சுக ஸ்தானத்தில் குரு - பஞ்சம ஸ்தானத்தில் சனி , கேது, சந்திரன் - லாப ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 6-Oct-19 அன்று இரவு 2.22 மணிக்கு சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். 9-Oct-19 அன்று பகல் 12.39 மணிக்கு சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 11-Oct-19 அன்று இரவு 12.15 மணிக்கு சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: சுத்தம், சுகாதாரம் சுகமான வாழ்க்கை என்பதில் கவனமாக இருக்கும் சிம்ம ராசி அன்பர்களே இந்த வாரம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். இஷ்டத்திற்கு விரோதமாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும். வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. திடீர் செலவு ஏற்படலாம். தொழில், வியாபாரம் சுமாராக நடக்கும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். ஆர்டர்கள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற வாய்ப்புகள் வரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கலாம். பெண்களுக்கு கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் கருத்து வேற்றுமை நீங்கி மீண்டும் நட்பு பாராட்டுவாக்ரள். மனதில் புது தெம்பும் உற்சாகமும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் மெத்தன போக்கு காணப்படும். மிகவும் கவனமாக படிப்பது கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். பரிகாரம்: லட்சுமி நரசிம்ம பெருமாளை வணங்கி வர எதிர்ப்புகள் நீங்கும். தொழிற்போட்டிகள் குறையும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்கன்னி: கிரகநிலை: ராசியில் சூர்யன், செவ்வாய் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - தைரிய ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் சனி , கேது, சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 6-Oct-19 அன்று இரவு 2.22 மணிக்கு சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 9-Oct-19 அன்று பகல் 12.39 மணிக்கு சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். 11-Oct-19 அன்று இரவு 12.15 மணிக்கு சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: சின்ன விஷயத்தையும் பெரிதாக நினைத்து குழம்பிக் கொள்ளும் அதே நேரத்தில் பிரச்சனையை சமாளிக்கும் திறமை பெற்ற கன்னி ராசி அன்பர்களே இந்த வாரம் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். மனதில் இருந்த கவலை நீங்கி நிம்மதி கிடைக்கும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம். வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளை தட்டி கொடுத்து எதையும் செய்ய சொல்வது நல்லது. உங்கள் கருத்துகளுக்கு மதிப்பில்லாமல் போகலாம். தொழில், வியாபாரம் தொடர்பாக புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதனால் நன்மை உண்டாகும். உங்கள் கீழ் பணியாற்றுபவர்கள் சிறப்பாக பணிபுரிந்து உங்கள் நிலையை உயரச் செய்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி இருக்கும். கொடுத்த கடனை திருப்பி வாங்க முயல்வீர்கள். பெண்களுக்கு வீண் மனக்கவலை உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம், வீண் செலவு ஏற்படலாம். மாணவர்களுக்கு பாடங்களில் இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாக படிப்பீர்கள். சக மாணவர்களிடம் பழகும்போது கவனம் தேவை. பரிகாரம்: ஆதிபராசக்தி அன்னையை தரிசித்து வருவதுஉடல் ஆரோக்கியத்தை தரும். எதிர்பார்த்த காரியம் தாமதமாக முடியும். ஆனால் நல்ல பலனை தரும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்துலாம்: கிரகநிலை: ராசியில் புதன், சுக்ரன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு - தைரிய ஸ்தானத்தில் சனி , கேது, சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ - அயன, சயன, போக ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 6-Oct-19 அன்று இரவு 2.22 மணிக்கு சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 9-Oct-19 அன்று பகல் 12.39 மணிக்கு சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 11-Oct-19 அன்று இரவு 12.15 மணிக்கு சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: எந்த காரியத்திலும் வேகத்தைக் காட்டி காலத்தில் முடிக்கும் துலா ராசி அன்பர்களே உங்களுக்கு தெய்வீக ஈடுபாடு இருக்கும். இந்த வாரம் வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும். எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. எதிர்ப்புகள் குறையும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களது ஆலோசனை கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தி தரும். கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதால் வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதுக்கு திருப்தி தருவதாக இருக்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வரும். தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் அதனால் அலைச்சல் ஏற்படலாம். வியாபார விரிவாக்கம் தொடர்பான பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலில் தாமதமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் அலைச்சல், கூடுதல் செலவை சந்திப்பார்கள். வேறு ஒருவர் செய்த செயலுக்கு வீண் பழி ஏற்க வேண்டி இருக்கும். எனவே கவனம் தேவை. பெண்கள் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி பெறவும் கூடுதல் மதிப்பெண் பெறவும் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். பரிகாரம்: குல தெய்வத்தை வணங்க குடும்ப பிரச்சனை, தொழிற்பிரச்சனை கல்வியில் தடை போன்றவை விலகும். எதிலும் நன்மை உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளிவிருச்சிகம்: கிரகநிலை: ராசியில் குரு - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சனி , கேது, சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் ராஹு- லாப ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் - அயன, சயன, போக ஸ்தானத்தில் புதன், சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 6-Oct-19 அன்று இரவு 2.22 மணிக்கு சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 9-Oct-19 அன்று பகல் 12.39 மணிக்கு சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 11-Oct-19 அன்று இரவு 12.15 மணிக்கு சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: எந்த ஒரு வேலையிலும் ஈடுபடும் முன்பு அதனால் ஏற்படும் நல்லது கெட்டது பற்றி ஆராய்ந்த பின்னரே அதை செய்யும் விருச்சிக ராசி அன்பர்களே இந்த வாரம். வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடங்கல் ஏற்பட்டு நீங்கும். தேவையற்ற மனக்கவலை உண்டாகும். வழக்கு விவகாரங்களில் தாமதமான போக்கு காணப்படும். நிர்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் மனதில் ஏதாவது குறை இருக்கும் வெளிக்காட்ட மாட்டீர்கள். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான பிரயாணங்கள் வெற்றியைத் தரும். புதிய உத்வேகத்துடன் தொழிலாளர்கள் வேலை செய்வார்கள். உன்னதமான நிலையை அடையப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சால் மேல் அதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்றி பாராட்டு பெறுவார்கள். நீண்ட நாட்களாக நின்ற பதவி உயர்வு உங்களை தேடி வரலாம். பெண்கள் எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும். மாணவர்கள் எந்த வேலை செய்தாலும் கவனமாக செய்வது நல்லது. பாடம் தொடர்பான சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு படிப்பது நல்லது. பரிகாரம்: சதுர்த்தியன்று விநாயகரை வணங்க பிரச்சனைகள் குறையும். மனதில் அமைதி உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்தனுசு: கிரகநிலை: ராசியில் சனி , கேது, சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் ராஹு- தொழில் ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் - லாப ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 6-Oct-19 அன்று இரவு 2.22 மணிக்கு சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். 9-Oct-19 அன்று பகல் 12.39 மணிக்கு சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 11-Oct-19 அன்று இரவு 12.15 மணிக்கு சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: உழைப்புக்கு அஞ்சாத தனுசு ராசி அன்பர்களே நீங்கள் நேர்மைக்காக பாடுபடுவீர்கள். இந்த வாரம் மங்கள காரியங்கள் இருந்து வந்த தடைகள் அகலும். பணவரத்து சீராக இருக்கும். வேலை பளு காரணமாக நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்பட்டு நீங்கும். அக்கம்பக்கத்தின ரிடம் சில்லறை சண்டைகள் ஏற்பட்டு சரியாகும். கவுரவம் பாதிக்கும்படியான சூழ்நிலை வரலாம். குடும்பத்தில் உறவினருடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். வீட்டில் உள்ள பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் போட்டிகள் நீங்கி நன்கு நடக்கும். உங்களது வியாபாரத்திற்கு பக்கபலமாக ஒருவரது உதவி கிடைக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக எதையும் செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். கவுரவம் கூடும். நிலுவை தொகை வந்து சேரும். பதவி உயர்வு கிடைக்கலாம். பெண்கள் திறமையான பேச்சின்மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். எதிர்ப்புகள் குறையும். பணவரத்து கூடும். மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும். சகமாணவர், நண்பர்கள் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. பரிகாரம்: நவகிரகத்தில் குருபகவானை முல்லை மலர்சூடி வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். செல்வநிலை உயரும். அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனிமகரம்: கிரகநிலை: ரண, ருண , ஸ்தானத்தில் ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - லாப ஸ்தானத்தில் குரு - அயன, சயன, போக ஸ்தானத்தில் சனி , கேது, சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 6-Oct-19 அன்று இரவு 2.22 மணிக்கு சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார். 9-Oct-19 அன்று பகல் 12.39 மணிக்கு சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். 11-Oct-19 அன்று இரவு 12.15 மணிக்கு சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: யாருக்கும் அஞ்சாமல் நேர்மையாக செயலாற்றும் மகர ராசி அன்பர்களே இந்த வாரம் தடைபட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கி நன்றாக நடந்து முடியும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிக்கல் தீரும். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகி சென்று விடுவார்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் எதிர்பாராத திடீர் செலவு ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பக்குவமாக நடந்து கொள்வது நன்மை தரும். உறவினர்கள் நண்பர்கள் வருகை இருக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்ற பாதையில் சென்றாலும் மனதிருப்தியளிக்காத நிலை காணப்படும். வியாபாரம் தொடர்பான காரியங்களில் முழுகவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் நன்மை தரலாம். அவர்களிடம் பொறுப்புகள் கொடுப்பதில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த இடத்திற்கு வேலை மாற்றம் கிடைக்கும். அரசு பணிகளில் கையெழுத்திடும் போது கவனமாக இருக்கவும். பெண்கள் நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். நட்பு வட்டத்தில் நிதானமாக பழகுவது நல்லது. மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு பாடங்களை படிப்பதும் தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது பரிகாரம்: நவகிரகத்தில் ராகுவிற்கு நாகபுஷ்ப மலர் சாற்றி நெய் தீபம் ஏற்றி வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். பொருளாதார மேம்பாடு உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, சனிகும்பம்: கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சனி , கேது, சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 6-Oct-19 அன்று இரவு 2.22 மணிக்கு சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 9-Oct-19 அன்று பகல் 12.39 மணிக்கு சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார். 11-Oct-19 அன்று இரவு 12.15 மணிக்கு சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: மற்றவர்கள் ஒப்படைத்த வேலையை பொறுப்போடு செய்து முடிக்கும் குணம் உடைய கும்ப ராசி அன்பர்களே இந்த வாரம் .எதையும் சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களது செய்கை உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். எனவே நிதானமாக இருப்பது நல்லது. சொந்த காரியங்களில் தாமதம் ஏற்படலாம். சின்ன விஷயங்களால் மன நிறைவை அடைவீர்கள். எதிர்பாலினரிடம் பழகும் போது கவனம் தேவை. குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனகிலேசங்கள் மறைந்து ஒற்றுமை ஓங்கும். பிள்ளைகளிடம் பாசம் அதிகரிக்கும். பெற்றோகள் - உறவினர்களின் அரவணைப்பு அதிகமாகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். தொழில் தொடர்பான காரியங்கள் வெற்றி பெறும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலிப்பது வேகம் பிடிக்கும். வியாபாரம் தொடர்பான பிரச்சனைகளில் சாதகமான நிலையே உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். சக பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். அலுவலகம் மூலம் வாகனம் கிடைக்கலாம். என்றோ செய்த ஒரு வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கலாம். பெண்கள் யாரையும் எதிர்த்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். வீண் மனக்கவலை, காரிய தாமதம் உண்டாகலாம் கவனம் தேவை. மாணவர்கள் பாதியில் நிறுத்திய கல்வி தொடர்பான விஷயங்களை மீண்டும் தொடர்வீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பரிகாரம்: நாகதேவதையை வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனிமீனம்: கிரகநிலை: சுக ஸ்தானத்தில் ராஹூ - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் சனி , கேது, சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 6-Oct-19 அன்று இரவு 2.22 மணிக்கு சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 9-Oct-19 அன்று பகல் 12.39 மணிக்கு சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 11-Oct-19 அன்று இரவு 12.15 மணிக்கு சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார். பலன்: எதையும் சமாளித்து குறுகிய காலத்தில் முன்னுக்கு வரும் திறன் கேதுவை அதிபதிக் கொண்ட மீன ராசி அன்பர்களே இந்த வாரம் மற்றவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனை வராமல் தடுக்கலாம். சிறிய விஷயத்துக்கு கூட கோபம் வரலாம். கட்டுப்படுத்துவது நன்மை தரும். திடீர் பண தேவை உண்டாகலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். மனவருத்தத்துடன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். கவனமாக செயல்படுவது நல்லது. கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நீடிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். புதிய ஆர்டர் விஷயமாக தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வெளியூர் செல்ல நேரிடும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காண்பீர்கள். புதிய கிளைகள் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சியை தள்ளி போடுவது நல்லது உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து நன்மை பெறுவீர்கள். பெண்கள் வலிய சென்று உதவுவதன் மூலம் வீண் பழி ஏற்படலாம். கவனம் தேவை. கோபத்தை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. பாடங்களை படிப்பதில் கூடுதல் கவனமும், ஆசிரியர்களிடத்தில் பேசும்போது நிதானமும் தேவை. பரிகாரம்: விநாயக பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி அர்ச்சனை செய்து வர குடும்ப கஷ்டங்கள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளிnewstm.in
Tags:
Next Story