1. Home
  2. ஜோதிடம்

இந்த வார ராசிபலன் 20 - 26 - அக்டோபர் - 2019

இந்த வார ராசிபலன் 20 - 26 - அக்டோபர் - 2019

newstm-weekly-astrology-20-19-oct-2019

இந்த வார ராசிபலன் 20 - 26 - அக்டோபர் - 2019

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

20.10.2019 முதல் 26 . 10. 2019 வரையிலான இந்த வார ராசிபலன்கள்..

மேஷம்: கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ -   ரண, ருண ஸ்தானத்தில்   செவ்வாய் -  களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ),  சுக்ரன்  -  அஷ்டம ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.   கிரகமாற்றங்கள்: 21-Oct-19 அன்று  காலை 9.06 மணிக்கு சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  23-Oct-19 அன்று  பகல் 12.17 மணிக்கு சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  25-Oct-19 அன்று  பகல் 2.42 மணிக்கு சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  பலன்: முயற்சி உடையார் இகழ்ச்சியடையார் என்பதற்கேற்ப விடா முயற்சியுடன் செயல்படும்  மேஷ ராசி அன்பர்களே நீங்கள் ரத்த சம்பந்தமான உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். இந்த வாரம் ஏதாவது மனகவலை இருக்கும். எதிலும் சாதகமான போக்கு காணப்படும். துணிச்சலாக சில முக்கயி முடிவுகளை எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.  வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தடை தாமதம் ஏற்படலாம் குடும்ப பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே மனகசப்பு நீங்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான  பொருட்களை வாங்க நினைப்பீர்கள். எதிர்பாராத திருப்பங்களால் திடீர் நன்மை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். எதிர்பாரத இடமாற்றம் ஏற்படலாம். பெண்களுக்கு  அறிவுத்திறன் அதிகரிக்கும். இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான கவலைகள் நீங்கும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும் பரிகாரம்:  நவகிரகத்தில் சூரியனுக்கு நெய்தீபம் ஏற்றி வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். கல்வியில் வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டகிழமைகள்: செவ்வாய், புதன்ரிஷபம் : கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ -  பஞ்சம ஸ்தானத்தில்   செவ்வாய்  -  ரண, ருண ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ),  சுக்ரன்  - களத்திர ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் சனி, கேது   என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 21-Oct-19 அன்று  காலை 9.06 மணிக்கு சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  23-Oct-19 அன்று  பகல் 12.17 மணிக்கு சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  25-Oct-19 அன்று  பகல் 2.42 மணிக்கு சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  பலன்: சமயத்திற்கேற்ப கருத்துக்களை மாற்றிக் கொண்டு செயல்பட்டு வெற்றி பெறும் ரிஷப ராசி அன்பர்களே இந்த வாரம் பணவரத்து காரிய தடை நீங்கும். மனதில் ஏதாவது கவலை தோன்றும், பய உணர்வு உண்டாகும். தூக்கம் குறையலாம். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. அடுத்தவருடன்  பகை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. குடும்ப விஷயங்களில் ஆர்வம் காண்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் கவனம் செல்லும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடுகள் ஏற்பட்டு பின்னர் விலகும். வியாபாரம் தொடர்பான பிரச்சனைகளை கையாளும் போது கவனம் தேவை. பாக்கிகள் வசூலாவது தாமதமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு  மேலிடத்தில் நன்மதிப்பும், மரியாதையும் கிடைக்கப் பெறுவீர்கள். திடீர் பயணங்களால் நன்மை உண்டாகும். பெண்களுக்கு புதுவிதமான செயல்பாடுகளால் மனம் அமைதி பெறும்.  சின்ன சின்ன விசயங்கள் உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும் பரிகாரம்: ஆஞ்சனேய கவசத்தை படித்து வருவதுடன் அநாதை இல்லங்களுக்கு சென்று தொண்டு செய்து வர மன குழப்பங்கள் நீங்கும். தைரியம் உண்டாகும். தடைபட்ட காரியங்கள்  நன்கு நடந்து முடியும். அதிர்ஷ்டகிழமைகள்: புதன், வெள்ளிமிதுனம்: கிரகநிலை: ராசியில்  சந்திரன் , ராஹூ -   சுக ஸ்தானத்தில்   செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ),  சுக்ரன்  -  ரண, ருண ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சனி , கேது -   என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 21-Oct-19 அன்று  காலை 9.06 மணிக்கு சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  23-Oct-19 அன்று  பகல் 12.17 மணிக்கு சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  25-Oct-19 அன்று  பகல் 2.42 மணிக்கு சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  பலன்: பயத்தை  வெளிக்காட்டாமல் தைரியமாக இருப்பது போல் மற்றவர் முன்பு செயல்படும் மிதுன ராசி அன்பர்களே இந்த வாரம் எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். தேவையற்ற மனகவலை உண்டாகும். வீண் ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நலம் தரும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கனிவுடன் பேசுவது நல்லது. விருந்தினர் வருகை இருக்கும். குடும்ப பிரச்சனைகளில் சாதகமான முடிவே உண்டாகும். தொழில் வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை  ஏற்பட்டாலும் அதை சமாளித்து முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  உழைப்பு அதிகமாகும். முயற்சிகள் பயன்தராமல் போகலாம். சாதாரணமாக செய்யக்கூடிய காரியங்களைக் கூட அதிகமாக முயற்சிகள் எடுத்து செய்ய வேண்டியதிருக்கும். பெண்களுக்கு அக்கம் பக்கத்தினரிடையே இருந்த பிரச்சனைகள் அகலும். செவி மூலம் வரும் செய்திகள் மனதிற்கு நிம்மதி அளிக்கும். மாணவர்களுக்கு:  கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள். பரிகாரம்: ஊனமுற்றவர்களுக்கு தொண்டு செய்வதும் பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவதும் கஷ்டங்களை நீக்கி வீண் விரயத்தை குறைக்கும். காரியத்தடை நீங்கும். அதிர்ஷ்டகிழமைகள்: திங்கள்,புதன்கடகம்: கிரகநிலை: தைரிய, வீர்ய ஸ்தானத்தில்   செவ்வாய்  - சுக ஸ்தானத்தில் சூர்யன்,  புதன்(வ),  சுக்ரன் -  பஞ்சம ஸ்தானத்தில் குரு - ரண, ருண ஸ்தானத்தில் சனி , கேது -   அயன, சயன, போக ஸ்தானத்தில்  சந்திரன்,  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 21-Oct-19 அன்று  காலை 9.06 மணிக்கு சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார்.  23-Oct-19 அன்று  பகல் 12.17 மணிக்கு சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  25-Oct-19 அன்று  பகல் 2.42 மணிக்கு சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  பலன்: எந்த சூழ்நிலையிலும் சுயகவுரவத்தை விட்டுக் கொடுக்காமல் செயல்படும் கடக ராசி அன்பர்களே இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பல வகையான  யோகங்கள் ஏற்படும்.  உடல் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும். மன குழப்பம் நீங்கும். ஆனால் பிறருடன் பழகும் போது நிதானம் தேவை. குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். குழந்தைகள் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்களால் பெருமை சேரும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி சிறப்பாக நடக்கும். பணவரத்தும் அதிகரிக்கும். பழைய கடன்களை திருப்பி செலுத்தக் கூடிய நிலை உருவாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த ராஜாங்க ரீதியிலான சிரமங்களிலிருந்து விடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளில் அலட்சியம் காட்டாமல் செயல்படுவது நல்லது. பெண்களுக்கு நினைத்த காரியத்தை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் மனக்கவலை உண்டாகும். மாணவர்களுக்கு: ஆசிரியர்கள், சக மாணவர்கள் உதவிகள் கிடைக்கும். பாடங்களை நன்கு படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும்.  பரிகாரம்: கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வர பணத்தட்டுப்பாடு நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும். அதிர்ஷ்டகிழமைகள்: திங்கள், வியாழன் ********************************************** சிம்மம்: கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில்   செவ்வாய் - தைரிய ஸ்தானத்தில் சூர்யன்,  புதன்(வ),  சுக்ரன்  -  சுக  ஸ்தானத்தில்  குரு -  பஞ்சம ஸ்தானத்தில்  சனி , கேது   -  லாப ஸ்தானத்தில்  சந்திரன்,  ராஹூ   என கிரகங்கள் வலம் வருகின்றன.  கிரகமாற்றங்கள்: 21-Oct-19 அன்று  காலை 9.06 மணிக்கு சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  23-Oct-19 அன்று  பகல் 12.17 மணிக்கு சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார்.  25-Oct-19 அன்று  பகல் 2.42 மணிக்கு சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  பலன்: அனுபவ அறிவைக் கொண்டு காரியங்களை திறம்பட செய்யும் திறமை பெற்ற சிம்ம ராசி அன்பர்களே இந்த வாரம் எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். கூட இருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. ஒரு சில காரியங்களில் அவசரமாக முடிவு எடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். முக்கிய நபர்களின் அறிமுகம்  கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் அனுசரித்து செல்வதன் மூலம் எல்லா பிரச்சனைகளும் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக  முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நடக்காமல் சற்று மந்தமாக  காணப்படும்.  பணவரத்து தாமதமாகும். யோசித்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும். பெண்களுக்கு பணவரத்து திருப்திகரமாக இருக்கும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். முழுகவனத்துடன் செய்யும் காரியம் வெற்றியாகும். மாணவர்களுக்கு: கல்வி தொடர்பான விஷயங்களில் சாதகமான நிலை காணப்படும். திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள். பரிகாரம்: விரதம் இருந்து மாலையில் சிவன், நவகிரகங்களை வணங்கி செவ்வாய் பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வர எதிர்ப்புகள் விலகும். பிரச்சனைகளில் சுமூக முடிவு உண்டாகும். தைரியம் கூடும். அதிர்ஷ்டகிழமைகள்: ஞாயிறு, திங்கள்துலாம்: கிரகநிலை: ராசியில்  சூர்யன்,  புதன்(வ),  சுக்ரன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  குரு - தைரிய ஸ்தானத்தில்  சனி , கேது - பாக்கிய ஸ்தானத்தில்  சந்திரன்,  ராஹூ -  அயன, சயன, போக ஸ்தானத்தில்   செவ்வாய்   என கிரகங்கள் வலம் வருகின்றன.   கிரகமாற்றங்கள்: 21-Oct-19 அன்று  காலை 9.06 மணிக்கு சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  23-Oct-19 அன்று  பகல் 12.17 மணிக்கு சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  25-Oct-19 அன்று  பகல் 2.42 மணிக்கு சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  பலன்: நிறைய யோசிக்கும் திறமையுடைய துலா ராசி அன்பர்களே, நீங்கள் புதுமை படைக்க எண்ணுபவர்கள். இந்த வாரம்: மனோ தைரியம் உண்டாகும். மனதில் இருந்த கவலை, வருத்தம் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்க செய்யும். பணவரத்து அதிகரிக்கும். பயணத்தின் போது கவனம் தேவை. குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவு இருக்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். அதனால்  நன்மையும் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம். பெண்களுக்கு சாதுரியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து கூடும். காரிய தடைகள் நீங்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பரிகாரம்: தினமும் கோதுமை தூளை துவரம் பருப்புடன் கலந்து காகத்திற்கு வைக்க பிரச்சனைகள் குறையும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும். அதிர்ஷ்டகிழமைகள்: புதன், வெள்ளிகன்னி: கிரகநிலை: ராசியில்   செவ்வாய்   - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ),  சுக்ரன்  - தைரிய ஸ்தானத்தில்  குரு -  சுக  ஸ்தானத்தில்  சனி , கேது -   தொழில்  ஸ்தானத்தில்  சந்திரன்,  ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன.  கிரகமாற்றங்கள்: 21-Oct-19 அன்று  காலை 9.06 மணிக்கு சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  23-Oct-19 அன்று  பகல் 12.17 மணிக்கு சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  25-Oct-19 அன்று  பகல் 2.42 மணிக்கு சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார்.  பலன்: எந்த ஒரு சிறிய  விஷயத்தையும் கவனமாக  கிரகித்துக் கொள்ளும் தன்மை உடைய கன்னி  ராசி அன்பர்களே, இந்த வாரம்: ஆக்க பூர்வமான யோசனைகளை செயல்படுத்தி எதிலும் வெற்றி காண்பீர்கள். தெளிவான மனநிலை இருக்கும். சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும் ஆனால் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை. நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தாமதப்படும். குடும்பத்தில் எதிர்பாராத செலவு உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் ஏற்படலாம். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதுக்கு திருப்தி அளிப்பதாக இருக்கும். உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நல்லது. வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தொழில் வியாபாரம் தொடர்பாக இழுபறியாக இருந்த சில பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். ஏற்கனவே வியாபாரம் தொடர்பாக செய்து பாதியில் நின்ற பணிகளை மீண்டும் செய்து முடிப்பீர்கள். உத்தியோகம் தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்கள், மேல் அதிகாரிகளிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது பெண்களுக்கு: திடீர் கோபங்கள் உண்டாகலாம். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள்.  மாணவர்கள் ஆசிரியர்களின் ஆதரவுடன் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். விளையாட்டில் ஆர்வம் ஏற்படும். பரிகாரம்: திருவோணம் தோறும் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று வணங்க வாழ்க்கை வளம்பெறும். மனஅமைதி உண்டாகும். அதிர்ஷ்டகிழமைகள்: ஞாயிறு, புதன்விருச்சிகம்: கிரகநிலை: ராசியில்  குரு - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சனி , கேது  -   அஷ்டம  ஸ்தானத்தில்  சந்திரன், ராஹு-  லாப ஸ்தானத்தில் செவ்வாய்  - அயன, சயன, போக ஸ்தானத்தில் சூர்யன்,  புதன்(வ),  சுக்ரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.  கிரகமாற்றங்கள்: 21-Oct-19 அன்று  காலை 9.06 மணிக்கு சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  23-Oct-19 அன்று  பகல் 12.17 மணிக்கு சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  25-Oct-19 அன்று  பகல் 2.42 மணிக்கு சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  பலன்: அதிகார தோரணையும் எடுத்த முடிவை மாற்றிக் கொள்ளாத  குணமுடைய விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வாரம் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவை குறைக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது. கூடுமானவரை பயணத்தை தவிர்ப்பது நன்மை தரும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். புதிய நபர்களிடம் கவனமாக இருப்பது நன்மை தரும். உறவினர் உதவி கிடைக்கும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டுபேசுவது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது நல்லது. மகிழ்ச்சி உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் அலைச்சலுக்கு பின் நடந்து முடியும். தேவையான பண உதவி சற்று தாமதமாக கிடைக்கலாம். தொழில் தொடர்பாக எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் நிலை மேம்படும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். பெண்கள் அடுத்தவர் ஆச்சரியபடும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவார்கள். புதிய நட்பு மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் கவனம்  செலுத்தி படிப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும். சகமாணவர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. பரிகாரம்: நவக்கிரகத்தில் புதனை வணங்க குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பண கஷ்டம் குறையும். அதிர்ஷ்டகிழமைகள்: செவ்வாய், வியாழன்தனுசு: கிரகநிலை: ராசியில்  சனி , கேது -     களத்திர ஸ்தானத்தில்  சந்திரன்,  ராஹு-   தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில்  சூர்யன்,  புதன்(வ),  சுக்ரன்  - அயன, சயன, போக ஸ்தானத்தில் குரு  என கிரகங்கள் வலம் வருகின்றன.  கிரகமாற்றங்கள்: 21-Oct-19 அன்று  காலை 9.06 மணிக்கு சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  23-Oct-19 அன்று  பகல் 12.17 மணிக்கு சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  25-Oct-19 அன்று  பகல் 2.42 மணிக்கு சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  பலன்: எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப் போடாமல்  உடனே முடிவு காண துடிக்கும் குணமுடைய தனுசு ராசி அன்பர்களே, இந்த வாரம் இழுபறியாக பாதியில்  நின்ற காரியம் நன்கு நடந்து முடியும். விரும்பிய  காரியத்தை நிறைவேற்ற  தேவையான மனோ பலத்தை தரும். வராமல் நின்ற பணம் கைக்கு வந்துசேரும். புதிய நபர்களின் நட்பும், அதனால் மன மகிழ்ச்சியும் ஏற்படும். மதிப்புகள் கூடும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் சரியாகி விடும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம். பிள்ளைகளுக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும். உறவினர்களிடம் கவனம் தேவை தொழில் வியாபாரம் மெத்தனமாக காணப்பட்டாலும் பணவரவு இருக்கும். புதிய வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி வியாபாரம் செய்வது நல்லது. போட்டிகளை கண்டு கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. பெண்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து புகழ் பெறுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடும் மாணவர்கள் சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு பாடங்களை நன்கு படிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். பரிகாரம்: பவுர்ணமி அன்று சத்ய நாராயணா பூஜை செய்து விரதம் இருப்பது கஷ்டங்களை போக்கும். மன குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும்.  அதிர்ஷ்டகிழமைகள்: வியாழன், வெள்ளிமகரம்: கிரகநிலை: ரண, ருண , ஸ்தானத்தில்  சந்திரன், ராஹூ -  பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய்  -  தொழில் ஸ்தானத்தில்  சூர்யன்,   புதன்(வ),  சுக்ரன்  -  லாப ஸ்தானத்தில்  குரு - அயன, சயன,  போக ஸ்தானத்தில் சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.  கிரகமாற்றங்கள்: 21-Oct-19 அன்று  காலை 9.06 மணிக்கு சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  23-Oct-19 அன்று  பகல் 12.17 மணிக்கு சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  25-Oct-19 அன்று  பகல் 2.42 மணிக்கு சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  பலன்: எவரையும் தம்பால் இழுத்துக் கொள்ளும் வசீகர சக்தி படைத்த மகர ராசி அன்பர்களே, இந்த வாரம். அறிவுதிறன் அதிகரிக்கும். உங்களது பேச்சு மற்றவரை மயக்குவதுபோல் இருக்கும். ருசியான உணவை உண்டு மகிழ்வீர்கள். மனநிம்மதி கிடைக்கும். சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். தேவையான நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தேவையான சரக்குகளை வாங்குவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது பெண்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும். மாணவர்கள் திறமையாக செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கூடுதல் நேரம் படிக்க வேண்டி இருக்கும். பரிகாரம்:  பெருமாளை வணங்கி 9 ஏழைகளுக்கு புளியஞ்சாதம் அன்னதானம் வழங்க மனதெளிவு உண்டாகும். அறிவு திறன் அதிகரிக்கும். அதிர்ஷ்டகிழமைகள்: ஞாயிறு, சனிகும்பம்: கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில்  சந்திரன்,  ராஹூ -  அஷ்டம ஸ்தானத்தில்   செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில்  சூர்யன், புதன்(வ),  சுக்ரன்  - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சனி , கேது -    என கிரகங்கள் வலம் வருகின்றன.  கிரகமாற்றங்கள்: 21-Oct-19 அன்று  காலை 9.06 மணிக்கு சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  23-Oct-19 அன்று  பகல் 12.17 மணிக்கு சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  25-Oct-19 அன்று  பகல் 2.42 மணிக்கு சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  பலன்: முன்கோபத்தை குறைத்து செயல்படுவதன் மூலம் அதிர்ஷ்ட பாதையில் முன்னேற்றங்கள் பல காணும் கும்ப ராசி அன்பர்களே, இந்த வாரம் புத்தி சாதூரியமும் அறிவு திறனும் அதிகரிக்கும். எதைச் செய்வது எதை விடுவது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பண வரவு தாமதப்படும். திடீர் சோர்வு உண்டாகும். அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் உண்டாகும். திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும்.  வீடு, வாகனம் வாங்குவது அல்லது புதுப்பிப்பதில் நாட்டம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் செலவுகள் அதிகரிக்கும். உங்கள் கீழ் வேலை செய்பவர்களின் செயல்களால் உங்களுக்கு கோபம் உண்டாகலாம். நிதானமாக அவர்களிடம் பேசுவது நன்மை தரும்.  பழைய பாக்கிகளை  வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக தங்களது வேலைகளை செய்வது நல்லது. பெண்கள் முன் பின் யோசிக்காமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது. செலவு கூடும். முயற்சிகளில்  சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு மற்றும் பொழுது போக்குகளில் ஆர்வம் உண்டாகும். பரிகாரம்:  குரு பகவானுக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து 9 ஏழைகளுக்கு தயிர் சாதம் அன்னதானமாக வழங்க செல்வம் சேரும். செயல்திறன் கூடும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். அதிர்ஷ்டகிழமைகள்: திங்கள், சனிமீனம்: கிரகநிலை: சுக ஸ்தானத்தில்  சந்திரன், ராஹூ  -  களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ),  சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில்  ஸ்தானத்தில் சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 21-Oct-19 அன்று  காலை 9.06 மணிக்கு சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  23-Oct-19 அன்று  பகல் 12.17 மணிக்கு சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  25-Oct-19 அன்று  பகல் 2.42 மணிக்கு சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  பலன்: மனசாட்சிக்கு கட்டுபட்டு செயல்படும் மீன ராசி அன்பர்களே, இந்த வாரம் வீண் செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகலாம். காரியங்கள் முடிவதில் தாமதபோக்கு காணப்படும். தேவையற்ற மன சஞ்சலம் உண்டாகலாம். யாரையும் நேருக்கு நேர் எதிர்க்காமல் அனுசரித்து செல்வது நன்மைதரும். கெட்ட கனவுகள் தோன்றலாம். வயிறு தொடர்பான நோய்கள் ஏற்பட்டு நீங்கும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் திருமணம் போன்ற  சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். உறவினர்கள் மூலம் உங்களின் செயல்பாடுகளுக்கு ஆதரவு அதிகரிக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். பணவரத்து திருப்தியாக இருக்கும். புதிய பொறுப்புகள் ஏற்படலாம். பெண்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். தொலை தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். எதிர்பார்த்த பணம் வரும் வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் பாடங்களை படிக்கும் போது மனதை ஒரு முகப்படுத்தி படிப்பது நல்லது. கவனம் சிதற விடாமல் இருப்பது வெற்றிக்கு உதவும் பரிகாரம்:  விரதம் இருந்து குருபகவானுக்கு கொண்டைக்கடலை மாலை அர்ப்பணித்து வணங்கி வர செல்வம் சேரும். வாழ்க்கை துணையின் ஆதரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அதிர்ஷ்டகிழமைகள்: வியாழன், சனிமீனம்: கிரகநிலை: சுக ஸ்தானத்தில்  சந்திரன், ராஹூ -  களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ),  சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 21-Oct-19 அன்று  காலை 9.06 மணிக்கு சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  23-Oct-19 அன்று  பகல் 12.17 மணிக்கு சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  25-Oct-19 அன்று  பகல் 2.42 மணிக்கு சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  பலன்: மனசாட்சிக்கு கட்டுபட்டு செயல்படும் மீன ராசி அன்பர்களே, இந்த வாரம் வீண் செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகலாம். காரியங்கள் முடிவதில் தாமதபோக்கு காணப்படும். தேவையற்ற மன சஞ்சலம் உண்டாகலாம். யாரையும் நேருக்கு நேர் எதிர்க்காமல் அனுசரித்து செல்வது நன்மைதரும். கெட்ட கனவுகள் தோன்றலாம். வயிறு தொடர்பான நோய்கள் ஏற்பட்டு நீங்கும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் திருமணம் போன்ற  சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். உறவினர்கள் மூலம் உங்களின் செயல்பாடுகளுக்கு ஆதரவு அதிகரிக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். பணவரத்து திருப்தியாக இருக்கும். புதிய பொறுப்புகள் ஏற்படலாம். பெண்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். தொலை தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். எதிர்பார்த்த பணம் வரும் வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் பாடங்களை படிக்கும் போது மனதை ஒரு முகப்படுத்தி படிப்பது நல்லது. கவனம் சிதற விடாமல் இருப்பது வெற்றிக்கு உதவும் பரிகாரம்:  விரதம் இருந்து குருபகவானுக்கு கொண்டைக்கடலை மாலை அர்ப்பணித்து வணங்கி வர செல்வம் சேரும். வாழ்க்கை துணையின் ஆதரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அதிர்ஷ்டகிழமைகள்: வியாழன், சனி

newstm.in

Trending News

Latest News

You May Like