1. Home
  2. ஜோதிடம்

இந்த வார ராசிபலன் - 17- நவம்பர் -23- 2019

இந்த வார ராசிபலன் - 17- நவம்பர் -23- 2019

newstm-weekly-astrology-17-nov-23-2019

இந்த வார ராசிபலன் - 17- நவம்பர் -23- 2019

கணித்தவர் : கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

17.11.2019 முதல் 23.11.2019 வரையிலான இந்த வார ராசிபலன்கள்..

கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில் சந்திரன்,  ராஹூ -  களத்திர ஸ்தானத்தில்   புதன், செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன்,  சுக்ரன்  - பாக்கிய ஸ்தானத்தில்   குரு, சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.   கிரகமாற்றங்கள்: 17-Nov-19 அன்று காலை 8.30மணிக்கு  சூரிய பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 17-Nov-19 அன்று மாலை 5.04 மணிக்கு சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  19-Nov-19 அன்று இரவு 8.24 மணிக்கு சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  21-Nov-19 அன்று இரவு 10.51 மணிக்கு சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  22-Nov-19 அன்று இரவு 11.56 மணிக்கு  சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  23-Nov-19 அன்று இரவு 1.19 மணிக்கு  சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  பலன்: எந்த காரியத்திலும் துடிதுடிப்புடன் செயல்படும் மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை.  தொழில்-வியாபாரம் சீராக இருக்கும். வாடிக்கையாளர்கள் கருத்துக்களை கேட்டு அதன்படி உங்கள் யுக்திகளை பயன்படுத்துவது நல்லது. வெளிநாடு பயண வாய்ப்புகள் வரலாம். அதன் மூலம் உங்கள் தொழிலை விரிவுபடுத்த வாய்ப்புகள் வரலாம். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது சிறப்பாக இருக்கும்.  உத்தியோகஸ்தர்களுக்கு சக பணியாளர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் வரலாம். அதை அவர்களிடமே தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது. வரவேண்டிய பண பாக்கிகள் வந்து சேரும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக செல்ல வேண்டும் என்று நினைத்த ஒரு ஆலயத்திற்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். இந்த பயணம் உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். தேவையில்லாதவற்றை அனைவரிடமும் ஆலோசிக்காமல் விடுவது ஒரு சில பிரச்சனைகளைத் தடுக்கும். கவனம் தேவை. பெண்கள் குடும்பத்தில் முக்கிய முடிவு எடுக்க வேண்டி வரும். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தி தருவீர்கள். உழைப்பு அதிகரிக்கும். மாணவர்கள் உங்கள் சந்தேகங்களை நேரடியாக ஆசிரியரிடம் கேட்டு சரி செய்து கொள்வது நல்லது. எனவே நீங்கள் குழம்பாமல் தெளிவாக இருக்க முடியும். பரிகாரம்: கந்த சஷ்டி கவசம் சொல்லி வர மனக்கஷ்டம் குறையும். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - புதன்கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில் சந்திரன்,  ராஹூ -   ரண, ருண ஸ்தானத்தில்  புதன்,   செவ்வாய்   -  களத்திர ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன்  - அஷ்டம ஸ்தானத்தில்   குரு, சனி, கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 17-Nov-19 அன்று காலை 8.30மணிக்கு  சூரிய பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 17-Nov-19 அன்று மாலை 5.04 மணிக்கு சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  19-Nov-19 அன்று இரவு 8.24 மணிக்கு சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  21-Nov-19 அன்று இரவு 10.51 மணிக்கு சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  22-Nov-19 அன்று இரவு 11.56 மணிக்கு  சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  23-Nov-19 அன்று இரவு 1.19 மணிக்கு  சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  பலன்: கொடுத்த வாக்கை காப்பாற்றத் துடிக்கும் ரிஷபராசி அன்பர்களே! இந்த வாரம் நம்பிக்கையுடன் காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. தொழில் - வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். உங்களின் வருமானம் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமானதாக இருக்கும். அதை முறையான வழியில் முதலீடு செய்வதால் உங்களின் பணம் காப்பாற்றப்படும். எனவே மிகுந்த ஆலோசனைக்குப் பிறகே நீங்கள் முடிவெடுப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு சக பணியாளார்களுடன் சுமூகமான உறவு இருக்கும். உடன்பணிபுரிபவர்களின் உதவியால் சில வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். உங்களின் பதவிஉயர்வுக்கு இது முக்கிய காரணமாகவும் அமையலாம். குடும்பத்தில் உறவுகளுக்கிடையே சிறிய மனக்கிலேசங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. விட்டுக் கொடுத்துப் போவதால் பிரச்சினைகள் வராமல் தவிர்க்கலாம். சகோதரர் வழியில் ஆதாயம் உண்டு. உங்கள் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்வார். பெண்கள் ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர் வருகையால் மனதிலும், இல்லத்திலும் மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்கள் ஆசிரியர்களின் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுப்பது உங்கள் மேல் நன்மதிப்பை கொடுக்கும். பரிகாரம்: ஓம் மஹாலக்ஷ்மியே நம: என்ற மந்திரத்தை உச்சரித்து வர மனம் ஒருநிலைப்படும். அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனிகிரகநிலை: ராசியில் சந்திரன்,  ராஹூ -    பஞ்சம ஸ்தானத்தில் புதன், செவ்வாய் -  ரண, ருண ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன்  -   களத்திர ஸ்தானத்தில்  குரு, சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 17-Nov-19 அன்று காலை 8.30மணிக்கு  சூரிய பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். 17-Nov-19 அன்று மாலை 5.04 மணிக்கு சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  19-Nov-19 அன்று இரவு 8.24 மணிக்கு சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  21-Nov-19 அன்று இரவு 10.51 மணிக்கு சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  22-Nov-19 அன்று இரவு 11.56 மணிக்கு  சுக்கிர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  23-Nov-19 அன்று இரவு 1.19 மணிக்கு  சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  பலன்: உழைப்பை உறுதியென நம்பும் மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம்  புதியநபர்களின்  நட்பு உண்டாகும். வீடு வாகனம்  தொடர்பான விஷயங்களில்  கூடுதல் கவனம் தேவை. தொழிலில் தொழிலாளர்களுக்கும் உங்களுக்கும் இருந்து வந்த பனிப்போர் முடிவுக்கு வரும். கொடி பிடித்தவர்கள் கூட கட்டுக்குள் இருப்பார்கள். முக்கிய முடிவுகளை மட்டும் சிறிது நாட்களுக்கு ஒத்திப் போடுங்கள். வர வேண்டிய பாக்கிகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் வேலைப்பளுவால் உணவருந்த முடியாமல் உழைக்க வேண்டி வரும். யாரிடமும் எந்த ரகசியத்தையும் பகிர வேண்டாம். உடனிருப்பவரால் கூட பணியில் தொந்தரவு  வரலாம். கவனமாக கையாளுங்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சகோதர சகோதரி வழியில் இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தூரத்திலிருந்து வரும் செய்திகளால் குடும்ப உறவுகளுக்கு மகிழ்ச்சி உண்டாகும். அனைவரும் ஒன்றாக சுற்றுலா சென்று வருவீர்கள். பெண்கள் ஆரோக்கியத்தை சற்று கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. நேரத்திற்கு  உணவு உட்கொள்ளுங்கள். மாணவர்கள் ஆசிரியர்களிடம் நன்மதிப்பை பெறுவார்கள். நண்பர்களுடன் பழகும் போது கவனமாக இருக்கவும்.  பரிகாரம்: விஷ்ணு கோவிலுக்குச் சென்று வர பணப்பிரச்சனைகள் தீரும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்  கிரகநிலை: சுக ஸ்தானத்தில் புதன், செவ்வாய் -   பஞ்சம ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன் - ரண, ருண ஸ்தானத்தில்  குரு, சனி , கேது   -   அயன, சயன, போக ஸ்தானத்தில்  சந்திரன், ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 17-Nov-19 அன்று காலை 8.30மணிக்கு  சூரிய பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 17-Nov-19 அன்று மாலை 5.04 மணிக்கு சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார்.  19-Nov-19 அன்று இரவு 8.24 மணிக்கு சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  21-Nov-19 அன்று இரவு 10.51 மணிக்கு சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  22-Nov-19 அன்று இரவு 11.56 மணிக்கு  சுக்கிர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  23-Nov-19 அன்று இரவு 1.19 மணிக்கு  சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  பலன்: மனதில் உற்சாகமாக செயல்படத்துடிக்கும் கடகராசி அன்பர்களே! இந்த வாரம்  குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதி குறைவு உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். தொழிலில் உங்களுக்கு போட்டியாக உள்ளவர்கள் கூட உங்களிடம் வந்து சமரசம் பேசுவார்கள். வியாபாரத்தில்  ஏற்ற - இறக்கம் இல்லாமல் சீராக நடக்கும். வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்திருந்த வங்கிக் கடன் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் ஆவணங்களை கையாளும் போது கவனமாக இருக்கவும். யாரிடமும் நம்பி பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம். அது உங்களை பிரச்சினையில் கொண்டுபோய் விட்டு விடும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிட்டும். குடும்பத்தில் பெரியோர்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் இருக்கும். தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். சொத்து விவாகாரங்கள் தொடர்பான பேச்சுகளை சற்று தள்ளிப்போடுங்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பெண்கள் மாமியார் - மருமகள் உறவு சுமூகமாக இருக்கும். சிலருக்கு உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டி வரலாம். மாணவர்கள் தங்களது உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். பொருட்கள் களவு போவதற்கு வாய்ப்புள்ளது.    பரிகாரம்: அம்பாளுக்கு மல்லிகை மலர் கொடுக்க பயம் அகலும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி  கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில்  புதன், செவ்வாய் -  சுக  ஸ்தானத்தில்  சூர்யன்,  சுக்ரன்  -   பஞ்சம ஸ்தானத்தில்  குரு, சனி , கேது   -  லாப ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ   என கிரகங்கள் வலம் வருகின்றன.  கிரகமாற்றங்கள்: 17-Nov-19 அன்று காலை 8.30மணிக்கு  சூரிய பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 17-Nov-19 அன்று மாலை 5.04 மணிக்கு சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  19-Nov-19 அன்று இரவு 8.24 மணிக்கு சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார்.  21-Nov-19 அன்று இரவு 10.51 மணிக்கு சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  22-Nov-19 அன்று இரவு 11.56 மணிக்கு  சுக்கிர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  23-Nov-19 அன்று இரவு 1.19 மணிக்கு  சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  பலன்: தாயார் நலனில் அக்கறை கொண்டுசெயல் படத் துடிக்கும் சிம்ம ராசி அன்பர்களே!  இந்த வாரம் வாக்குவாதங்கள் மற்றும் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. பணவரத்து கூடும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். மனகவலை நீங்கும் படியான சூழ்நிலை இருக்கும். தொழில் வியாபாரம் சூடு பிடிக்கும். வருமானம் அதிகரிக்கும். முன்பு உற்பத்தி செய்து வைத்திருந்த பொருட்கள் கூட இப்பொழுது விற்பனையாகி விடும். ஏற்றுமதி தொழில்  செய்பவர்கள் எதிர்பார்த்திருந்த ஆர்டர்கள் கிடைக்கப் பெற்று  மகிழ்ச்சி அடைவீர்கல். உத்தியோகஸ்தர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் அலுவலகத்தில் கிடைக்கப் பெறுவீர்கள். உடன் பணிபுரிபவர்களின் பொறாமைக்கு ஆளாவீர்கள்.  யாரையும் நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். குடும்பத்தில் பிரச்சினைகள் எதுவும் இராது. இல்லத்திற்கு தேவையான அனைத்து வசதிகளும் தாராளமாக கிட்டும். சகோதர - சகோதரி வகையில் இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தாயின் ஆதரவு பெருகும். பெண்கள் முக்கியமான முடிவுகளை குடும்ப உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். மாணவர்கள் கல்விச்சுற்றுலா சென்று வர வாய்ப்புண்டு. ஆசிரியர் மாணவர் உறவு நல்லபடியாக இருக்கும். பரிகாரம்: சிவன் அர்ச்சனைக்கு வில்வம்  கொடுக்க மனதில் தைரியம் பிறக்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்  கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  புதன், செவ்வாய் -  தைரிய, வீர்ய ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன்   -  சுக  ஸ்தானத்தில்   குரு, சனி , கேது  -  தொழில்  ஸ்தானத்தில் சந்திரன்,  ராஹூ   என கிரகங்கள் வலம் வருகின்றன.  கிரகமாற்றங்கள்: 17-Nov-19 அன்று காலை 8.30மணிக்கு  சூரிய பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 17-Nov-19 அன்று மாலை 5.04 மணிக்கு சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  19-Nov-19 அன்று இரவு 8.24 மணிக்கு சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  21-Nov-19 அன்று இரவு 10.51 மணிக்கு சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார்.  22-Nov-19 அன்று இரவு 11.56 மணிக்கு  சுக்கிர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  23-Nov-19 அன்று இரவு 1.19 மணிக்கு  சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  பலன்: தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம்  போட்டிகள் விலகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். தொழிலில் ஏற்றம் உண்டாகும். தேவையில்லாமல் போர்க்கொடி தூக்கியவர்கள் கூட இப்பொழுது சமாதானமாக பேச்சுவார்த்தை மூலம் சமரசம் கேட்டு வருவார்கள். முக்கியமானவர்கள் சந்திக்க வருவார்கள். தவிர்க்க வேண்டிய விசயங்களை தவிர்த்து விடுங்கள். உத்தியோகஸ்தர்கள் பிறரது பாராட்டுக்கு மயங்க வேண்டாம். அவர்களது வேலையை உங்கள் தலையில் கட்டுவதற்காக அத்தகைய செயல்களில் ஈடுபட வாய்ப்புண்டு. பொறுமை நிதானம் அவசியம் . திட்டம் போட்டு காரியங்களை நடத்துங்கள். வெற்றி உண்டாகும்.  குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடத்துவதற்கான முயற்சிகளில் இந்த வாரம் முற்பகுதியில் இறங்கலாம். நீதி மன்றத்தில் ஏதாவது வழக்குகள் இருப்பின் அது இப்போது தங்களுக்குச் சாதகமாக மாறும். கணவன் - மனைவி ஒற்றுமையாக இருப்பார்கள். பெண்மணிகள் குடும்பத்தை சற்று அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. அண்டை அயலாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின்பு சரியாகும். மாணவ மணிகள் பெற்றோரின் ஆசீர்வாதமும், அரவணைப்பும் கிடைக்கப் பெறுவீர்கள். பொறுமையும், நிதானமும் எதிலும் அவசியம். பரிகாரம்: பெருமாளுக்கு துளசியை அர்ப்பணிக்க மனக் கவலைகள் அகலும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி  கிரகநிலை: ராசியில்  செவ்வாய்,  புதன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன்,  சுக்ரன் -  தைரிய ஸ்தானத்தில்  குரு, சனி , கேது -  பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன.   கிரகமாற்றங்கள்: 17-Nov-19 அன்று காலை 8.30மணிக்கு  சூரிய பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். 17-Nov-19 அன்று மாலை 5.04 மணிக்கு சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  19-Nov-19 அன்று இரவு 8.24 மணிக்கு சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  21-Nov-19 அன்று இரவு 10.51 மணிக்கு சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  22-Nov-19 அன்று இரவு 11.56 மணிக்கு  சுக்கிர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  23-Nov-19 அன்று இரவு 1.19 மணிக்கு  சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார்.  பலன்: நியாயமான கோரிக்கைகளை மனதில் வைத்து நிறைவேற்றத் துடிக்கும் துலாராசி அன்பர்களே! இந்த வாரம் கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும்.  எதிர்பாராத பணவரத்து இருக்கும் தொழிலில் கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்க வில்லையென்றாலும் நிறைய ஆர்டர்கள் எதிர்காலத்தில் கிடைக்க வாய்ப்புள்ளது. முக்கிய முடிவுகள் எடுக்கும் போது பங்குதாரர்களை அருகில் வைத்து கொண்டு செய்யுங்கள்.  உத்தியோகஸ்தர்கள் உங்கள் உழைப்பு மற்றவர்களை பொறாமைப் பட வைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த சம்பள உயர்வு இப்போது கிட்டும். மேலதிகாரிகள் உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள். நேரம் கிடைக்கும் போது ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் சிக்கல்கள் வரவழைக்க காத்திருப்போருக்கு தக்க பதிலடி  கொடுப்பீர்கள். கணவன் - மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், புகழும் கிடைக்கப் பெறுவீர்கள். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும்.  பெண்கள் மிக அக்கறையுடன் குடும்பத்தை நிர்வகித்து செல்வீர்கள். வேலைக்கு செல்பவர்கள் திறம்படச் செய்து பாராட்டை பெறுவீர்கள். மாணவச் செல்வங்களுக்கு நன்மையளிக்கக் கூடிய வாரமாக இது இருக்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.  பரிகாரம்: நவகிரகத்தில் உள்ள குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றுங்கள். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி  கிரகநிலை: ராசியில்  சூர்யன், சுக்ரன்  - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  குரு, சனி , கேது  - அஷ்டம  ஸ்தானத்தில் சந்திரன்,  ராஹு-  அயன, சயன, போக ஸ்தானத்தில் -   புதன், செவ்வாய்  என கிரகங்கள் வலம் வருகின்றன.  கிரகமாற்றங்கள்: 17-Nov-19 அன்று காலை 8.30மணிக்கு  சூரிய பகவான் ராசிக்கு மாறுகிறார். 17-Nov-19 அன்று மாலை 5.04 மணிக்கு சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  19-Nov-19 அன்று இரவு 8.24 மணிக்கு சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  21-Nov-19 அன்று இரவு 10.51 மணிக்கு சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  22-Nov-19 அன்று இரவு 11.56 மணிக்கு  சுக்கிர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  23-Nov-19 அன்று இரவு 1.19 மணிக்கு  சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  பலன்: எண்ணிய  காரியத்தை மனதில் வைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் குடும்ப பிரச்சனை தீரும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. ஏதேனும் மனகஷ்டம் உண்டாகும். வீண்செலவு ஏற்படும். உடல் சோர்வு வரலாம்.  மனோ தைரியம் கூடும். தொழிலில் சற்று மந்த நிலை காணப்படும். நல்ல வாய்ப்புகள் வந்தால் அதை பயன் படுத்திக் கொள்ளுங்கள். எதையும் தட்டிக் கழிக்க வேண்டாம். சக போட்டியாளர்களிடமிருந்து மோதல் போக்கு ஏற்படக்கூடும்.  கூடியவரை வீண் விவாதம் செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் வேலை மாற்றம் வேண்டி விண்ணப்பித்து இருந்தால் அது உங்களுக்கு இப்போது கிட்டும். சிலருக்கு பணி நிமித்தமாக வெளியூர் செல்லவும். நேரலாம். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக கடன் வாங்க வேண்டாம்.  அவை அடைபடுவதில் சிக்கல்கள் வரலாம். குடும்பத்தில் வெற்றி செய்தியை கேட்க முடியும். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.  எதிர்பார்த்த வகையில் செலவுகள் அதிகரித்து காணப்படும். சகோதர வழிகளிலிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பெண்கள் கவனமாக பணியாற்றுங்கள். பயணங்கள் மேற்கொள்ளும்போது கவனமாக இருப்பது நல்லது, மாணவச் செல்வங்கள் அதிக அக்கறையுடன் பயின்று நன்மதிப்பை பெறுவீர்கள். சிலருக்கு ஆர்வம் அதிகரிக்கும்.  பரிகாரம்: சுப்பிரமணியருக்கு அரளி மாலை சாற்றுங்கள். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்  கிரகநிலை: ராசியில் குரு, சனி , கேது -  களத்திர ஸ்தானத்தில் சந்திரன்,  ராஹு -  லாப ஸ்தானத்தில்  செவ்வாய்,  புதன் -  அயன, சயன, போக ஸ்தானத்தில்   சூர்யன், சுக்ரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.  கிரகமாற்றங்கள்: 17-Nov-19 அன்று காலை 8.30மணிக்கு  சூரிய பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 17-Nov-19 அன்று மாலை 5.04 மணிக்கு சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  19-Nov-19 அன்று இரவு 8.24 மணிக்கு சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  21-Nov-19 அன்று இரவு 10.51 மணிக்கு சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  22-Nov-19 அன்று இரவு 11.56 மணிக்கு  சுக்கிர பகவான் ராசிக்கு மாறுகிறார்.  23-Nov-19 அன்று இரவு 1.19 மணிக்கு  சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  பலன்: மற்றவர்களுக்காக நன்மை செய்யத்துடிக்கும் தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். நல்லவர்கள் உடன் இருப்பார்கள். குடும்பம் சுமூகமாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகள் வரும் காலங்களில் முடிவுக்கு வருவதான சூழ்நிலைகள் தெரிய ஆரம்பிக்கும். உற்றார் உறவினர்கள் வருகை குடும்ப சூழ்நிலையை மகிழ்ச்சியாக மாற்றும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தொழிலில் புதிய விஸ்தரிப்புத் திட்டங்களில் ஈடுபடுவதற்கான சூழ்நிலை தானாகவே அமையும். சக தொழில் போட்டியாளர்களுடன் பிரச்சினை இருந்தால் அது இப்போது சரியாகி விடும். பணத்தட்டுப்பாடு வராது. உத்தியோகத்தில் மறைமுக எதிரிகள் தோன்றலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். தாங்கள் விரும்பிய இடத்திலேயே வேலை மாறுதல் உண்டாகலாம். பெண்களுக்கு குடும்ப நிர்வாகத்தில் மிகுந்த அக்கறையுடன் இருப்பீர்கள். பிள்ளைகள் மீது அன்பும், பாசமும் அதிகமாகும். நீங்கள் காட்டும் அக்கறை அவர்களுக்கு புரிய வில்லையே என்ற கவலை மனதில் வந்து போகும். மாணவமணிகள் நீங்கள் விரும்பிய இடத்திலேயே படிக்க இடம் கிடைப்பது  மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவு தருவார்கள். பரிகாரம்: சிவாலயம் சென்று வழிபடவும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்  கிரகநிலை: ரண, ருண , ஸ்தானத்தில் சந்திரன்,  ராஹூ -   தொழில் ஸ்தானத்தில்  செவ்வாய்,  புதன் -  லாப ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன்  -   அயன, சயன,  போக ஸ்தானத்தில்   குரு,  சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.  கிரகமாற்றங்கள்: 17-Nov-19 அன்று காலை 8.30மணிக்கு  சூரிய பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 17-Nov-19 அன்று மாலை 5.04 மணிக்கு சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  19-Nov-19 அன்று இரவு 8.24 மணிக்கு சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  21-Nov-19 அன்று இரவு 10.51 மணிக்கு சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  22-Nov-19 அன்று இரவு 11.56 மணிக்கு  சுக்கிர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  23-Nov-19 அன்று இரவு 1.19 மணிக்கு  சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  பலன்: திட்டமிட்ட விஷயங்களை விரைவில் செய்யத்துடிக்கும் மகர ராசி அன்பர்களே! இந்த வாரம்  வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும். தொழிலில் ஆதாயம் ஏற்படும். முன்பு உற்பத்தி செய்து வைத்திருந்த பொருட்கள் விற்பனையாகவில்லையே என்று வைத்திருந்த பொருட்கள் கூட இப்பொழுது விற்பனையாகி விடும். அதனால் நல்ல லாபம் உண்டாகி அடுத்த கட்ட நடவடிக்கைகளை செய்வீர்கள். உத்தியோகத்தில் ஏற்பட்ட பணிச்சுமை குறையும். சிலருக்கு பணியிட மாற்றம் உண்டாகும். வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் இப்போது அதற்கான முயற்சியை செய்தால் நல்ல இடத்தில் மாற்றம் கிடைக்கும். அது உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு நல்வழியை உண்டாக்கும். குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் ஆசி கிட்டும்.  சிக்கன நடவடிக்கைகளை குடும்பத்தில் மேற்கொள்வீர்கள். உறவினர் வருகையால் இல்லம் விழாக்கோலம் பூணும். அனைவரும் ஒன்றாக சேர்ந்து இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள். குல தெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பெண்கள் உடல் நலத்தில் மிகுந்த அக்கறையுடன் செயல் படுவது நல்லது. அவ்வப்போது மருத்துவ செலவுகள் ஏற்படும். மாணவர்கள் சக நண்பர்களுடன் எல்லை மீறி பழகாமலிருப்பது நல்லது. கவனத்தை சிதறவிடாமல் இருப்பது நல்லது. பரிகாரம் விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் சாற்றி வழிபடவும். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி  கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில்  சந்திரன்,  ராஹூ  -  பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய்,  புதன் -  தொழில் ஸ்தானத்தில்   சூர்யன், சுக்ரன்  -  லாப ஸ்தானத்தில்  , குரு, சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.  கிரகமாற்றங்கள்: 17-Nov-19 அன்று காலை 8.30மணிக்கு  சூரிய பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 17-Nov-19 அன்று மாலை 5.04 மணிக்கு சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  19-Nov-19 அன்று இரவு 8.24 மணிக்கு சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  21-Nov-19 அன்று இரவு 10.51 மணிக்கு சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  22-Nov-19 அன்று இரவு 11.56 மணிக்கு  சுக்கிர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  23-Nov-19 அன்று இரவு 1.19 மணிக்கு  சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  பலன்: உன்னத நடவடிக்கைகளிம் மூலம் உயர்ந்த நிலையை அடையும் கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம்  பணவரத்து இருக்கும். மனகவலை நீங்கும். எடுத்த காரியத்தை திருப்தியுடன் செய்து முடிப்பீர்கள். சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கைகொடுக்கும். தொழிலில் போட்டிகள் அதிகமாக இருந்தாலும் அதை எளிதில் சமாளித்து விடுவீர்கள். தொழில் மாற்றம் வேண்டுவோர் அதை செய்யலாம். புதிய முடிவுகளை இப்போது எடுக்கலாம். தாங்கள் நினைத்ததை காட்டிலும் இரண்டு மடங்காக நன்மை நடக்கும். உத்தியோகத்தில் சிக்கல்கள் தீரும். முக்கிய முடிவுகள் எடுக்கும் போது ஒருமுறைக்கு பலமுறை  யோசனை செய்தபின் முடிவுகளை எடுக்கவும். அலுவலக பணி காரணமாக வெளியூர் செல்ல நேரலாம். வெளிநாடுகளுக்கு திட்டமிட்டோர் இப்போது அதற்கான முயற்சியை செய்யலாம். குடும்பத்தில் சில முக்கிய பெரியோர்கள் வந்து செல்வார்கள். சொத்து விவகாரத்தில் வாக்கு வாதம் வேண்டாம். உங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பொருட்கள் உங்களை வந்து சேரும். பங்காளி சண்டையை நீங்களே தீர்த்து வைப்பீர்கள். பெண்கள் முக்கியமாக யாரிடமும் எந்த கருத்தையும் கூற வேண்டாம். வெளியிடங்களில் கவனம் தேவை. மாணவச் செல்வங்களுக்கு அவ்வப்போது தேவையற்ற குழப்பமும், சஞ்சலங்களும் ஏற்படும்.  பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபட குழப்பம் தீரும். அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, ஞாயிறு    கிரகநிலை: சுக ஸ்தானத்தில் சந்திரன்,  ராஹூ  -  அஷ்டம ஸ்தானத்தில்  செவ்வாய்,  புதன் - பாக்கிய ஸ்தானத்தில்  சூர்யன்,  சுக்ரன் - தொழில்  ஸ்தானத்தில்  குரு, சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 17-Nov-19 அன்று காலை 8.30மணிக்கு  சூரிய பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 17-Nov-19 அன்று மாலை 5.04 மணிக்கு சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  19-Nov-19 அன்று இரவு 8.24 மணிக்கு சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  21-Nov-19 அன்று இரவு 10.51 மணிக்கு சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  22-Nov-19 அன்று இரவு 11.56 மணிக்கு  சுக்கிர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  23-Nov-19 அன்று இரவு 1.19 மணிக்கு  சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  பலன்: பிறர் மனதை சுலபமாக புரிந்து கொள்ளும் மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து மன நிம்மதி அடைவார்கள்.  தொழிலில் முக்கியஸ்தர்களை சந்திக்க கூடிய வாய்ப்பு உங்களுக்கு உருவாகும்.  தொழிலாளர்களை திருப்தி படுத்தி சந்தோஷத்தை அடைவீர்கள். வேண்டிய உபகரணங்கள் வாங்குவதற்கு தேவையான வங்கிக்கடன் உடனடியாக உங்களுக்கு கிடைக்கும். அலுவலகத்தில் எந்தப் பிரச்சினையும் வராது. ஆனால் முக்கிய ஆவணங்களில் , பண விஷயங்களை கையாளும் போது மிக கவனமாக இருப்பது நல்லது. யாரையும் நம்பி எந்தப் பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். கடமையே கண்ணாக உழைக்க வேண்டி வரும். குடும்ப விஷயங்களில் மற்றவர்கள் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. தாங்களே எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். நடந்து முடிந்த விசயங்கள் சில மனதிற்கு நிம்மதியைக் கொடுக்கும். பெண்கள் மனதிற்கு சந்தோஷத்தை தரும் விஷயங்கள் நடைபெறும். சிலதருணங்கள் வாழ்வில் மறக்க முடியாத்தாக அமையும். மாணவர்கள் கல்விச்சுற்றுலா சென்று வருவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பரிகாரம்: முல்லைமலர் சாற்றி குருபகவானை வழிபடவும். அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், ஞாயிறு  

newstm.in

Trending News

Latest News

You May Like