1. Home
  2. ஜோதிடம்

08-09-2018 தினப்பலன் - இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு பணவரத்து உண்டு!

08-09-2018 தினப்பலன் - இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு பணவரத்து உண்டு!

08-09-2018-newstm-daily-free-astrology

08-09-2018 தினப்பலன் - இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு பணவரத்து உண்டு!

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்!

விளம்பி வருஷம் I தக்ஷிணாயணம் I வர்ஷருது I ஆவணி 23 I இங்கிலீஷ்: 08 September 2018 I சனிக்கிழமை

சதுர்த்தசி இரவு 2.21 மணி வரை. பின் அமாவாஸ்யை I ஆயில்யம் காலை 10.08 மணி வரை. பின் மகம்

சிவம் நாமயோகம் I பத்ரை கரணம் I மரண யோகம் I தியாஜ்ஜியம்: 38.15 I அகசு: 30.21

நேத்ரம்: 0 I ஜீவன்: 0 I சிம்ம ல க்ன இருப்பு: 6.42 I சூர்ய உதயம்: 6.06

ராகு காலம்: காலை 9.00 - 10.30 I எமகண்டம்: மதியம் 1.30 - 3.00 I குளிகை: காலை 6.00 - 7.30 I சூலம்: கிழக்கு I பரிகாரம்: தயிர்

குறிப்பு: இன்று கீழ்நோக்கு நாள் I மாதசிவராத்திரி I இன்று மழை பெய்ய வாய்ப்பு உண்டு I கெருட தரிசனம் நன்று

திதி: சதுர்த்தசி I சந்திராஷ்டமம்: திருவோணம்

உங்கள் ராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்களை தெரிந்துகொள்ள கிளிக் செய்யுங்கள்!

மேஷம்:  கிரகநிலை: சுக ஸ்தானத்தில் ராஹூ, சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - களத்திர ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோர்கள் வகையில் மருத்துவச் செலவுகள் குறையும். வீடு வாங்க வாய்ப்பு நிறைவேறும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தை அடைவீர்கள். வியாபாரிகள் புதிய கிளைகள் துவங்க போட்ட திட்டம் நிறைவேறும்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 குளிச்சு முடிச்சதும் தலையைத் துவட்டக்கூடாது ஏன் தெரியுமா?ரிஷபம்:  கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் ராஹூ, சந்திரன் - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் தட்டுப்பாடு வராது. கடன் பாக்கிகள் அடையும். பூர்வீக சொத்துகளில் உள்ள வில்லங்கம் நீங்கும். புதிய தொழில் தொடங்க போட்ட திட்டம் நிறைவேறும்.  அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6  நியூஸ்டிஎம் இன்றைய டாப் 10 செய்திகள்..!மிதுனம்:  கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ, சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் சனி - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று சரக்குகளை நல்ல விலைக்கு விற்பீர்கள். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். புத்திர பாக்கியத்தை அடைவீர்கள். நீண்டகாலமாகத் தடைப்பட்டுவந்த திருமணம் கைகூடும். பிரிந்துசென்ற பிள்ளைகள் வந்துசேர்வார்கள். இளைஞர்கள் தகுதிக்கேற்ப புதிய பதவிகளை அடைவார்கள்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5 அட்லீயிடம் இருந்து வந்த "கால்" - கோகோ அன்புதாசனின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டிகடகம்:  கிரகநிலை: ராசியில் ராஹூ, சந்திரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன் - சுக ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், கேதுஎன கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று பொதுமக்கள் சேவையில் நல்ல பெயரையும் புகழையும் அடைவார்கள். உழைப்பதற்குண்டான வாய்ப்புகள் நிறைய கிடைக்கும். தனியார் பணியில் இருப்பவர்கள் அதிகமான வேலைப் பளுவை சந்திப்பார்கள். பங்குதாரர்களிடம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். புதிதாக தொழில் தொடங்க போட்ட திட்டம் தள்ளிப்போகும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6சிம்மம்:  கிரகநிலை: ராசியில் சூர்யன், புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ, சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று வீண் சச்சரவுகள் வர வாய்ப்புண்டு. வியாபாரிகள் அரசுக்குச் செலுத்தவேண்டிய வரி பாக்கிகளால் அரசாங்கத்தின் கெடுபிடியை சந்திப்பார்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். பிள்ளைகள் வீட்டின் நிலையை அறிந்து நடப்பார்கள். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவேண்டும். பெற்றோர் உடல்நலனில் கவனம் தேவை.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6 பயமுறுத்துகிறதா  'தி நன்' -  ஹாலிவுட் திரைப்பட விமர்சனம்!கன்னி:  கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - சுக ஸ்தானத்தில் சனி - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - லாப ஸ்தானத்தில் ராஹூ, சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று திறமைகள் வெளிப்படும். எதிலும் எந்த இடத்திலும் நியாயத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்காக போராடுவீர்கள். நீங்கள் அனைவராலும் விரும்பப்படுவீர்கள். அதிக சுமைகளை எடுத்துக் கொள்வீர்கள். அதேநேரம் சின்னச் சின்ன பிரச்னைகளில் தலையிட்டு வெளியில் வர தள்ளாடுவீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9துலாம்:  கிரகநிலை: ராசியில் குரு, சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - தொழில் ஸ்தானத்தில் ராஹூ, சந்திரன் - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று ஏற்ற இறக்கமாக பொருளாதாரத்தில் இருந்த பாதிப்புகள் படிப்படியாக விலகும். புதிய தொழில்களில் கால் பதிக்க போராடிக் கொண்டிருந்தவர்கள் எதிர்பார்த்த மாற்றத்தைக் காண்பார்கள். நண்பர்களுடன் இருந்த பிரச்னைகள் தீர்வுக்கு வருவதால் அலுவலகச் சூழல்களில் இருந்த இறுக்கம் மறைந்து சகஜநிலை உருவாகும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 உங்கள் நட்சத்திரத்தை கிளிக் செய்யுங்கள்... நீங்கள் யார் என்று தெரிந்துகொள்ளுங்கள்! பகுதி - 1விருச்சிகம்:  கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ, சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு, சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று அரசுத்துறையிலிருந்து சலுகைகளை பெற குறுக்கு வழிகளை தேட வேண்டாம். நேர்வழியிலேயே எதையும் சாதித்துக் கொள்ளுங்கள். பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்களின் புகழைத் தக்க வைத்துக் கொள்ள சிறிது சிரமப்பட வேண்டியிருக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9 ஜெயலில் கன்னடம், இந்தி படிக்கும் சசிகலா... எதுக்குத் தெரியுமா?தனுசு:  கிரகநிலை: ராசியில் சனி - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராஹூ, சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - லாப ஸ்தானத்தில் குரு, சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று தொழிலில் புதிய திருப்பங்களைக் காண்பீர்கள். வேறு ஊருக்குச் சென்று தொழில் செய்யும் வாய்ப்பு சிலருக்குக் கிடைக்கும். சமுதாயத்தில் உயர்ந்தவர்கள் உங்களுக்கு பாதுகாப்பாக இருப்பதால் மறைமுகமான போட்டிகளால் பாதிப்புகள் ஏற்படாது. உடலில் ஏற்படும் சிறிய உபாதைகளுக்கு உடனுக்குடன் வைத்தியம் செய்து கொண்டால் மருத்துவச் செலவுகளை குறைக்கலாம்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 6மகரம்:  கிரகநிலை: ராசியில் செவ்வாய், கேது - களத்திர ஸ்தானத்தில் ராஹூ, சந்திரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன், புதன் - தொழில் ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று பங்குச் சந்தை போன்ற விஷயங்களில் நல்ல பலன்களை பெறுவீர்கள். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுக்குத் தேவையான அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்குவீர்கள். கவலைகொள்ள வைத்த கடன் தொல்லைகள் குறைவதால், உங்களின் மனதில் தைரியம் பிறக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6கும்பம்:  கிரகநிலை: ரண ருண ரோக ஸ்தானத்தில் ராஹூ, சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - லாப ஸ்தானத்தில் சனி - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று புதிய நண்பர்களிடம் கவனமாக இருக்கவும். பூர்வீகச் சொத்தில் இருந்த இழுபறியான நிலைமை மாறும். சகோதர, சகோதரிகளிடம் உள்ள கருத்து வேறுபாடுகளை களைந்து குடும்ப ஒற்றுமையை பேணிக்காப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றங்களை பெறுவீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6மீனம்:  கிரகநிலை: பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராஹூ, சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று உங்கள் வேலைகள் அனைத்தும் திட்டமிட்டபடியே குறித்த காலத்திற்குள் முடிவடையும். உங்களின் வேலைகளில் தெளிந்த மனநிலையுடன் ஈடுபடுவீர்கள். மேலதிகாரிகளிடம் சுமுகமான உறவு நிலை உண்டாகும். சக ஊழியர்களின் குறைகளை முன்னின்று தீர்த்து வைப்பீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9

newstm.in

Trending News

Latest News

You May Like