தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள் - வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள புத்தாண்டு

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணித்த தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள்

தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள் - வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள புத்தாண்டு
X

newstm-2019-tamil-newyear-prediction

தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள் - வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள புத்தாண்டு

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

விகாரி வருஷ தமிழ் புத்தாண்டு பலன்கள் !

நிகழும் மங்களகரமான 1194ம் ஆண்டு ஸ்வஸ்திஸ்ரீ விகாரி வருஷம் உத்தராயணம் வஸந்தருது சித்திரை மாதம் 01ம் தேதி (14.04.2019) ஞாயிற்றுக்கிழமை - சுக்லபக்ஷ நவமியும் - ஆயில்ய நக்ஷத்ரமும் - சூலம் நாமயோகமும் - கௌலவ கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 17.18க்கு (பகல் 01.15மணிக்கு) கடக லக்னத்தில் விகாரி வருஷம் பிறக்கிறது.

கிரக பாதசார விபரங்கள்:

லக்னம் - ஆயில்யம் 1ம் பாதம் - புதன் சாரம்
சூர்யன் - அசுபதி 1ம் பாதம் - கேது சாரம்
சந்திரன் - ஆயில்யம் 2ம் பாதம் - புதன் சாரம்
செவ்வாய் - ரோஹிணி 2ம் பாதம் - சந்திரன் சாரம்
புதன் - உத்திரட்டாதி 2ம் பாதம் - சனி சாரம்
சுக்ரன் - பூரட்டாதி 3ம் பாதம் - குரு சாரம்
சனி - பூராடம் 2ம் பாதம் - சுக்கிரன் சாரம்
ராஹு - புனர்பூசம் 3ம் பாதம் - குரு சாரம்
கேது - பூராடம் 3ம் பாதம் - சுக்கிரன் சாரம்

புதன் தசை இருப்பு: 08 வருஷம் - 04 மாதம் - 20 நாள்

விகாரி வருஷத்தின் நவநாயகர்கள்:

ராஜா - சனி
மந்திரி - சூரியன்
அர்க்காதிபதி - சனி
மேகாதிபதி - சனி
ஸஸ்யாதிபதி - புதன்
சேனாதிபதி - சனி
இரஸாதிபதி - சுக்கிரன்
தான்யாதிபதி - சந்திரன்
நீரஸாதிபதி - புதன்
பசுநாயகர் - கோபாலன்

விகாரி வருஷ வெண்பா:

பார விகாதிதனிங் பாரண நீருங் குறையும்
மாரியில்லை வேளாண்மை மத்திபமாம் - சேரார்
பயம் அதிகம் உண்டாம் பழையோர்கள் சம்பாத்
திய வுடைமை விற்றுண்பார் தேர்
- இடைக்காடர் வாக்கு

தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள் - வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள புத்தாண்டு

பொது பலன்கள்:

ஜெகத் உலக ஜாதகம் பிறப்பு ஆயில்யம் நக்ஷத்ரம் - கடக ராசி - கடக லக்னம் - ஆயில்ய சாரம் கொண்டு - தனுசு லக்ன நவாம்சை - மகர சந்திர நவாம்சையில் பிறக்கிறது. ஆண்டு பிறக்கும் போது உச்ச ராஜகிரக சூரியனை குரு பார்ப்பது நல்ல அமைப்பு. இந்த வருடத்தின் தோஷம் அனைத்தும் இதன் மூலம் விலகுகிறது. வருடம் பிறக்கும் போது வர்கோத்திர யோகம் - சகட யோகம் - அம்சையில் சுக்கிர மங்களயோகம் - கடக ராஜ யோகம் - ஆகியவை ஏற்படுகிறது. தோஷத்தை பொறுத்தவரை குரு - சனி இணைவால் பிரம்மஹத்தி தோஷம் - குரு, சந்திரன் சஷ்டாஷ்டக தோஷம் ஆகியவை ஏற்படுகிறது. ஆனாலும் குரு ஆட்சியாக இருப்பதால் அனைத்து தோஷங்களும் விலகுகிறது. இந்தாண்டின் நட்சத்திர தேவதை ஊமா மகேஸ்வரர். பஞ்சபக்ஷி - ஆந்தை. இவ்வருடத்தின் ஆதாயம் 59 - விரையம் 62. மழையின் அளவு வெண்பாவில் குறைவு என்று சொன்னாலும் கிரகநிலைப்படி மழையின் அளவு அதிகமாகவே இருக்கும். இந்த வருடத்தில் வெயில் மக்களை வாட்டி வதைக்கும். அதிகபக்ஷ வெப்பநிலை பதிவாகும். கட்டிடங்களுக்கு பாதிப்புகள் ஏற்படலாம். லக்னத்திலேயே சந்திரன் இருப்பதால் பெண்களுக்கு இந்த வருடம் சாதகமாக அமைந்திருக்கும். அதிக மழை பொழிவும் அதன் மூலம் ஆதாயமும் ஏற்படும். தனஸ்தானத்தை செவ்வாய் - குரு - சுக்கிரன் ஆகியோர் பார்ப்பதால் பொருளாதார அபிவிருத்தி காணப்படும். பங்கு சந்தை அதிக வளர்ச்சி பெறும். உலக அளவில் பொருளாதாரம் நல்ல முன்னேற்றம் காணும். தைரிய ஸ்தானத்தை புதன் பார்ப்பதாலும் சனி பார்ப்பதாலும் மக்களிடையே தைரியம் நம்பிக்கை அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் துறையில் சில குழப்பங்கள் அவ்வப்போது நிகழும். ஆனாலும் வளர்ச்சி சிறப்பாகாவே இருக்கும். பூர்வ புண்ணியஸ்தானத்தை அதன் அதிபதி செவ்வாயே பார்ப்பதால் அதிக குழந்தை பிறப்பு காணப்படும். நாடுகளுக்கிடையே போர் பதற்றம் குறையும். ரணருண ரோக சத்ரு ஸ்தானத்தை செவ்வாய் பார்ப்பதால் புதிய வியாதிகள் தோன்றுவதும் அதே வியாதிகளுக்கு மருந்து கண்டுபிடிப்பதும் நிகழும். அதிக திருமணங்கள் நடைபெறும். பண மோசடி அதிகரிப்பதும் அரசாங்கம் புதிய சட்டங்கள் மூலமாக அதை தடுப்பதும் நிகழும். பெட்ரோல் டீசல் விலை உயர்வு கடுமையாக இருக்கும். தங்கம் விலை விண்ணைத் தொடும்.

தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள் - வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள புத்தாண்டு

மேஷம்: சொல்லும் செயலும் ஒருங்கே அமையப்பெற்ற மேஷ ராசி அன்பர்களே விகாரி வருட கிரகநிலை: விகாரி வருடம் பிறக்கும் போது, ராசியில் சூரியன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராஹூ - சுக ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு (வ), சனி, கேது - லாப ஸ்தானத்தில் சுக்ரன் - விரைய ஸ்தானத்தில் புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரக மாற்றங்கள்: 28-10-2019 அன்று குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: செவ்வாய் பகவானை ராசி அதிபதியாக கொண்ட மேஷ ராசி அன்பர்களே இந்த வருடம் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். சேமிக்கும் பழக்கம் உங்களுக்கு உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை வாகனங்களைப் பயன்படுத்தும் போது அதிக கவனம் தேவை. தேவையற்ற வேகம் கூடாது. மனதில் உற்சாகம் பிறக்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமான பலன்தரும். எதிலும் தயக்கம் காட்டமாட்டீர்கள்.  தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். போட்டிகள் விலகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். வாடிக்கையாளர்களை திருப்தி அடையும்படி நடந்து கொள்வீர்கள். புதிய தொழில் தொடங்கவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டபடி  பணிகளை முடிக்க முடியாமல் தாமதம் ஏற்படலாம். சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. மேலிடம் உங்கள் மீது கரிசனப் பார்வை வைக்கும். பெண்களுக்கு அடுத்தவர்களின் செயல்களால் கோபம் உண்டாகலாம். கொடுத்த கடனை திரும்ப பெறுவதில் முழுமூச்சுடன் செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு திட்டமிட்டபடி பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண்  பெறுவீர்கள். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்தரும். கலைத்துறையினருக்கு திடீர் செலவுகள் ஏற்படலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை. அரசியல் துறையினருக்கு எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை  தவிர்ப்பதும் நல்லது. திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். முக்கியமான பணிகள் திட்டமிட்டபடி நடக்கும். அசுபதி: இந்த ஆண்டு உங்கள் பிரச்சனைக்கு முக்கிய  முடிவெடுக்க முற்படுவீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. நீங்கள் நடந்து கொள்ளும் விதம் சிலருக்கு புதிராக இருக்கும். அதைப் பற்றி நீங்கள் கவலைப் பட வேண்டாம். நீங்கள் தெளிவாக இருந்தாலே நல்லது நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு கூடுதல் பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். எதிலும் திட்டமிட்டு செயலாற்றுவதால் மேல் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். வீண் செலவை குறைப்பது நல்லது. தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீரும்.  பரணி: இந்த ஆண்டு உங்கள் குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணருவீர்கள். குடும்ப மகிழ்ச்சிக்காக உங்கள் மனதை மாற்றிக் கொள்ள முற்படுவீர்கள். இழந்த பெருமையை மீட்டுக் கொள்ளும் புத்திசாதுர்யம் உங்களுக்கு உண்டு. ஆனால் வீட்டில் உங்கள் நிம்மதி குறையும் நிலை காணப்படும். குடும்பத்திலும் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெற்று மேலும் மனநிம்மதி ஏற்படும். தொலை தூரப்பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் அனுகூலமான பலன்களும் உண்டாகும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி தொடர்பான கஷ்டங்கள் குறையும். கிருத்திகை - 1 : இந்த ஆண்டு தொழில் செய்யும் இடம் மற்றும் வியாபார தலங்களில் உற்சாகமான சூழ்நிலை இருக்கும். எனினும் நிதானத்தைக் கடைபிடிப்பது அவசியம். வார்த்தைகளை கோர்த்துப் போட்டு பேசுவது நன்மை தரும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது அமைதியை தரும். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகளால் குடும்ப விஷயங்கள் சாதகமாக நடக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி விறுவிறுப்படையும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும்.  பரிகாரம்: தினமும் விநாயகர் அகவல் படித்து விநாயகரை வணங்க எதிர்ப்புகள் விலகும். போட்டிகள் குறையும். எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன் அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன் - செவ்வாய் - குரு எண்கள்: 1 - 3 - 6 - 9 சொல்ல வேண்டிய மந்திரம்: ‘”ஓம் சரவணபவ” என்ற மந்திரத்தை தினமும் சொல்லவும் செல்ல வேண்டிய ஸ்தலம்: முருகன் கோவில்கள் மலர் பரிகாரம்: தினமும் செவ்வரளி மலரை முருகனுக்கு அர்ப்பணித்து வணங்கி வரவும். நிதானமாக எந்த ஒரு முடிவையும் எடுக்கும் ரிஷப ராசி அன்பர்களே  விகாரி வருட கிரகநிலை: விகாரி வருடம் பிறக்கும் போது, ராசியில் செவ்வாய் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் குரு (வ), சனி, கேது - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் புதன் - விரைய ஸ்தானத்தில் சூரியன் என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரக மாற்றங்கள்: 28-10-2019 அன்று குரு பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: சுக்கிர பகவானை ராசி அதிபதியாக கொண்ட ரிஷப ராசி அன்பர்களே நீங்கள்  இந்த வருடம் எந்த காரியம் செய்தாலும் தாமதம் உண்டாகும். எல்லாவற்றிலும் ஒரு பயம் ஏற்படும். புதிய நபர்களின்  நட்பு உண்டாகும். வீடு வாகனம் தொடர்பான விஷயங்களில்  கூடுதல் கவனம் தேவை.  குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் டென்ஷன் உண்டாகலாம். கணவன் மனைவிக்கிடையே கோபத்தை விட்டுவிட்டு இதமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். உடல் ஆரோக்யத்தில் சிறு சிறு சங்கடங்கள் வரலாம். கவனமுடன் இருந்தால் பயம் இல்லை. சந்தோஷத்தை தருவதாக இருக்கும்.  கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உங்களது சிறப்பான செயல்கள் மற்றவர்களின் பாராட்டை பெற்றுதரும்.  தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மெத்தனமான போக்கு காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்களை திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியாத நிலை உண்டாகும். புதிய சிக்கல்கள் உருவாகலாம். கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவிகள் கூடுதல் பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். அலுவலக பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பெண்களுக்கு மனதில் வீண்குழப்பம் உண்டாகும். உங்களிடம் ஆலோசனை கேட்டு உங்களை நாடி சிலர் வரக்கூடும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை சரியான நேரத்தில் மருந்துகளை உட்கொள்வது நன்மை தரும்.  மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.கலைத்துறையினருக்கு வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. மற்றவர்களுக்கு உதவும் போது கவனமாக இருப்பது நல்லது. மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும்.  அரசியல் துறையினருக்கு அரசு விவகாரங்களை கவனமாக கையாளவும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை ஆலோசித்து செய்யுங்கள். தீர்க்கமாக  முடிவெடுப்பதை தள்ளிப்போடுங்கள். கிருத்திகை 2, 3, 4 : இந்த ஆண்டு அனைவருடைய ஒத்துழைப்பும் ஒருசேர கிடைக்கப் பெறுவீர்கள். யார் எவர் என்று பாராமல் அனைவருக்கும் உதவியும் புரிவீர்கள். உடன் பணிபுரிவோர் ஆதரவாக இருப்பார்கள்.உடன் பிறந்தோரிடம் விட்டுக் கொடுத்துப் போவது உத்தமம். மனதில் தெளிவு உண்டாகும். ஆக்க பூர்வமான யோசனைகள் தோன்றும். கடித போக்குவரத்து அனுகூலமான பலனை தரும். பயணம் லாபகரமாக இருக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பெண்களுக்கு உங்களது செயல்களுக்கு மற்றவர்களின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ரோகிணி: இந்த ஆண்டு கோபுர தரிசனம் உங்களுக்கு கை கொடுக்கும். வேலை பார்க்கும் இடத்தில் பிரச்சனைகள் எழலாம். கவனமுடன் இருப்பது மிக முக்கியம். கிடைத்த வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்துங்கள்.  திருமண முயற்சிகள் கை கூடும். நேரம் கிடைக்கும் போது ஓய்வு அவசியம். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பங்குதாரர்களுடன் ஆலோசனை செய்து வியாபாரத்தை  மேற்கொள்வது கூடுதல் லாபம் கிடைக்க   வழிசெய்யும். மாணவர்களுக்கு பெற்றோர், ஆசிரியர் கூறியபடி செயல்படுவது கல்வியில் வெற்றி பெற உதவும். மனோ தைரியம் கூடும். மிருகசீரிஷம் 1, 2 : இந்த ஆண்டு வருமானம் திருப்திகரமாக இருக்கும். கைக்கு வராது என்றிருந்த பணம் கூட கைக்கு வந்து சேரும். உடலில் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும். தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணியை குறித்த நேரத்தில் முடித்து அலுவலகத்தில் நற்பெயர் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து முக்கிய முடிவுகள் எடுப்பது நன்மை தருவதாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும். கணவன்-மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். உற்றார்-உறவினர்களின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி அளிக்கும். பரிகாரம்:  குலதெய்வத்தை வணங்கி வர பணவரத்தில் இருந்த தடைநீங்கும். காரிய வெற்றி உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன் அதிர்ஷ்ட ஹோரைகள்: சுக்ரன் - செவ்வாய் எண்கள்: 2, 5, 9 சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஸ்ரீம் மங்களாயை நமஹ என்ற மந்திரத்தை தினமும் 21 முறை சொல்லவும். செல்ல வேண்டிய ஸ்தலம்: அலமேலுமங்காபுரம்  மலர் பரிகாரம்: தினமும் தாமரை  மலரை மஹாலட்சுமிக்கு அர்பணித்து வணங்கி வரவும்.  சாமர்ந்தியமாக முடிவெடுக்கும் மிதுன ராசி அன்பர்களே கிரகநிலை: விகாரி வருடம் பிறக்கும் போது, ராசியில் ராஹூ - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் குரு (வ), சனி, கேது - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் புதன் - லாப ஸ்தானத்தில் சூரியன் - விரைய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரக மாற்றங்கள்: 28-10-2019 அன்று குரு பகவான் ரண ருண ரோக ஸ்1தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே  இந்த வருடம் எதிர்பாராத செலவு ஏற்படும். சிந்தித்து செயல்படுவது நன்மை தரும்.  பணவரவு இருக்கும். அடுத்தவர் நலனுக்காக  பாடுபட வேண்டி இருக்கும்.  குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதி குறைவு உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கர்ப்பிணிப் பெண்கள் இந்த வருடம் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.நினைத்த வசதிகள் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். மனதெம்பு உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் கை கூடும். வாக்கு வன்மையால் காரியம் கைகூடும். ஆன்மிக எண்ணம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தனப் போக்கு மாறும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சுமாரான பலன் தரும். தொழிலுக்காக கேட்ட இடத்தில் கடன் வசதிகள் கிடைக்கும். அதை வைத்து தொழில் சார்ந்த பிரச்சினைகளை சமாளித்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பெண்களுக்கு எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் காரிய தாமதம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு மனதில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். முக்கியமான வேலைகளில் தாமதம் உண்டாகும். வீண் பிரச்சனைகளை கண்டால் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.  அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். உடன் இருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. ஒரு சில காரியங்களில் அவசரமாக முடிவு எடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். மிருக சீரிஷம் 3, 4 : இந்த ஆண்டு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பழமையான கோயில் ஒன்றுக்குச் சென்று வருவீர்கள். புதிய வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு யோகமான வருடம். குடும்பத்தில் சுமூகமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கை துணை உங்களுக்கு பல விதத்திலும் உதவிகள் செய்வார். உறவினர் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. அனுபவப் பூர்வமான அறிவுத் திறனை உபயோகித்து எதிலும் வெற்றி காண்பீர்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடபுடலாக கைகூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சிலருக்கு தொலைதூரங்களிலிருந்தும் நல்ல செய்திகள் வரும்.  திருவாதிரை: இந்த ஆண்டு ஓயாது உழைக்க வேண்டி வரலாம். உடல் நலனில் சற்று கவனம் தேவை. கைபேசியைப் பயன்படுத்திக் கொண்டு வாகனத்தை பிரயோகிக்க வேண்டாம். எதிலும் சற்று நிதானமாக நடந்து கொள்வது அவசியமாகிறது. பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் கடன்கள் அனைத்தும் குறைந்து சேமிப்பு பெருகும். வசதிகள்  அதிகரிக்கும். மதிப்பும், மரியாதையும் கூடும். ஆனால் வீண் செலவுகள் உண்டாகும். மனதுக்கு பிடிக்காத இடத்திற்கு சென்று வரவேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடந்து முடிய திறமையாக செயல்படுவீர்கள். புனர்பூசம் 1, 2, 3 : இந்த ஆண்டு தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது உத்தமம். முக்கிய முடிவுகளை சற்று ஒத்திப் போடுவது நல்லது. நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல செய்திகள் வரவில்லை என்ற கவலை வேண்டாம். கூடிய விரைவில் உங்கள் காதுகளை அது எட்டும். குடும்பத்தில் மரியாதை கூடும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் மனம்விட்டு பேசி எடுக்கும் முக்கிய முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் அவசரப்படாமல் இருப்பது நல்லது. பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வர காரிய  அனுகூலம் உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி அதிர்ஷ்ட ஹோரைகள்: புதன் - சுக்ரன் -  சனி எண்கள்: 3, 6, 7 சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஸ்ரீகோவிந்தாய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 21 முறை சொல்லவும் செல்ல வேண்டிய ஸ்தலம்: பெருமாள் கோவில்களுக்குச் சென்று வரவும்.  மலர் பரிகாரம்: துளசியை பெருமாளுக்கு அர்பணித்து வணங்கி வரவும்.உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் கடக ராசி அன்பர்களே விகாரி வருட கிரகநிலை: விகாரி வருடம் பிறக்கும் போது, ராசியில் சந்திரன் - ரண ருண ரோக  ஸ்தானத்தில் குரு (வ), சனி, கேது - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் புதன் - தொழில் ஸ்தானத்தில் சூரியன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய் - விரைய ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரக மாற்றங்கள்: 28-10-2019 அன்று குரு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக  ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: சந்திர பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட  கடக ராசி அன்பர்களே,  இந்த வருடம் சுபகாரியங்களில் இருந்த தடங்கல்கள் நீங்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பயணங்கள் சாதகமான பலன் தரும். மனக்கவலை நீங்கி தெளிவு உண்டாகும்.  குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே  விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்ய முற்படுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண்டாகும். வீடு, வாகனம் தொடர்பான செலவு குறையும். வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை நீண்ட நாட்களாக பட்ட கஷ்டங்கள் மறைந்து ஆரோக்கியம் மேம்படும்.  தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன்தரும். புதிய தொழில் அபிவிருத்தி அடையும். தொழில் வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளால் டென்ஷன் உண்டாகலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.  பெண்களுக்கு பயணங்களால் செலவு ஏற்படும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் தரும். சக மாணவர்களின் நட்பும் கிடைக்கும். கலைத் துறையினருக்கு அதிக வாய்ப்புகள் வந்து குவியும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். உன்னத வாய்ப்புகளை கண்டு மனம் மகிழ்ச்சியில் திளைக்கும். அரசியல்துறையினருக்கு வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். எந்த சூழ்நிலையிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் வரை அந்த காரியம் முடியுமோ, முடியாதோ என்ற மனக் கவலை இருக்கும்.  புனர்பூசம் 4 : இந்த ஆண்டு சிலருக்கு திருமண பேச்சு வார்த்தை கைகூடி வரலாம். வாய்ப்புகள் வரும் போது இறைவனை வேண்டி தொடங்குங்கள். எதையும் தள்ளிப் போட வேண்டாம். சிறு தவறு கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். கவனமாக இருக்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏற்கனவே  செய்த திறமையான பணிகளுக்கு உரிய நற்பலனை பெறுவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களிடம் தன்மையாக பேசி பழகுவது நல்லது. தகப்பனாருடன் வீண் தகராறு ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வியை பற்றிய பயம் நீங்கும். குழப்பம் இல்லாத தெளிவான மனதுடன் பாடங்களை படித்து வெற்றி பெறுவீர்கள். பூசம்: இந்த ஆண்டு புதிய வேலைக்கு விண்ணப்பிபவர்கள் நல்ல முறையில் செய்யலாம். நிலுவையிலுள்ள முதலீடுகள் கைக்கு கிடைக்க அலைய நேரலாம். நீங்கள் துணிந்து எடுக்கும் முடிவுகளால் எதையும் சாதிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள்  தீரும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும்.  மற்றவர்கள் மூலம்  உதவி கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை  வாங்கி மகிழ்வீர்கள்.  கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.  ஆயில்யம் : இந்த ஆண்டு உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். உங்களிடம் வேலை பார்ப்பவர்களுக்காக சிறு தொகை செலவிட நேரலாம். அவரின் தேவையைக் கருதி பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு பாராட்டுகள் கிடைக்கலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பேசி செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். குழந்தைகளுடன் நிதானமாக பேசி அவர்களுக்கு எதையும் புரிய வைப்பது நல்லது. அவர்களது முன்னேற்றத்துக்காக பாடுபடுவீர்கள். பெண்களுக்கு மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பயணங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் மஹாலக்ஷ்மியை மல்லிகைப் பூவால் அர்ச்சனை செய்து வணங்க காரிய வெற்றி உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய் அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன் - சுக்ரன் - குரு எண்கள்: 3, 5, 6 சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஸ்ரீஅம்பிகாயை நமஹ என்ற மந்திரத்தை தினமும் 21 முறை சொல்லவும் செல்ல வேண்டிய ஸ்தலம்: அம்மன் கோவில்களுக்குச் சென்று வரவும். மலர் பரிகாரம்: மல்லிகை பூவை அம்மனுக்கு அர்பணித்து வணங்கி வரவும்.உழைப்பதற்கு தயங்காத சிம்ம ராசி அன்பர்களே விகாரி வருட கிரகநிலை: விகாரி வருடம் பிறக்கும் போது, பஞ்சம ஸ்தானத்தில் குரு (வ), சனி, கேது - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் ராஹூ - விரைய ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரக மாற்றங்கள்: 28-10-2019 அன்று குரு பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: சூர்ய பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே, எடுத்துக் கொண்ட  இந்த வருடம் எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும்  மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளாக வேண்டி வரும். எதிர்த்து செயல்பட்டவர்கள் அடங்கி விடுவார்கள். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.   குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சின்ன சின்ன கருத்து வேற்றுமைகள் வரும். பிள்ளைகளின்  செயல்பாடுகள் ஆறுதலைத் தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை அலர்ஜி சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம். வெளியூர் பயணங்கள் மனதுக்கு திருப்தி தரும். பெரியோர் உதவி கிடைக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.  தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆர்டர் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். பழைய பாக்கிகள் வசூலாவது மனதிருப்தியை தரும். தொழிலாளர்கள் அவ்வப்போது பிரச்சினை எழுப்பலாம். வியாபாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள். பெண்களுக்கு வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். மற்றவர்கள் பிரச்சனை தீர பாடுபடுவீர்கள். காரிய தடை, தாமதம் ஏற்படலாம்.  மாணவர்களுக்கு  கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். திடமான மனதுடன் படிப்பது வெற்றியை தரும். கலைத்துறையினருக்கு முன்பு கிடைத்ததை விட அதிக பாராட்டுகளும் பரிசுகளும் கிடைக்கும். லாபம் அதிகமாகும். வெளியூர் பயணங்கள் திருப்தி அளிக்கும். அரசியல்துறையினருக்கு மேலிடத்தை அனுசரித்து செல்வது நன்மை தரும். வேலைப் பளு ஏற்பட்டாலும், எப்படியாவது செய்து முடித்து விடுவீர்கள். நண்பர்களிடம் ஒத்துழைப்பும் இருக்கும். மகம்: இந்த ஆண்டு வாய்ப்புகள் நல்லபடி அமைந்தும் அதைப் பயன்படுத்திக் கொள்ள முடியாதபடி சூழ்நிலை ஏற்படும். மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் உங்கள் பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்ளவும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள்  தீரும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும்.  மற்றவர்கள் மூலம்  உதவி கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை  வாங்கி மகிழ்வீர்கள்.  கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். தேவையற்ற மருத்துவ செலவு ஏற்படக்கூடும். வீடு, பூமி மூலம் வரவேண்டிய வருமானம் தாமதப்படலாம். பூரம்: இந்த ஆண்டு பண விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. கவனச் சிதறல்கள் வந்து போகும். தேவையற்ற மனக் குழப்பமும், சஞ்சலமுமே உங்கள் மனதிற்கு சங்கடங்களை ஏற்படுத்தும். இறைவழிபாடு ஒன்று தான் தக்க தீர்வாக அமையும். வாழ்க்கையில்  சந்தோஷம் அதிகரிக்கும்.  பிள்ளைகளால் கவுரவம் அந்தஸ்து உயரும். துக்கமும், துன்பமும் நீங்கும். தடைபட்ட காரியங்களில் இருந்த தடைநீங்கி சாதகமாக நடந்து  முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலையும் காரிய தாமதத்தையும் சந்திக்க வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும்.  உத்திரம் 1 : இந்த ஆண்டு முற்பகுதி அமைதியாகவும், ஆரோக்கியத்துடனும் இருக்கும். பிற்பாதியில் சிறு சிறு உடல் உபாதைகளால் அவதிப் பட நேரலாம். ஆதலால் மனசோர்வும் உண்டாகலாம். செலவுகள் ஏற்படும் நேரம். வாழ்க்கை துணையுடன் விவாதம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. புத்தி கூர்மையுடன் எதையும் செய்வீர்கள். எதிர்காலம் தொடர்பான திட்டங்கள் மனதில் தோன்றும். எதையும் முன்னேற்பாட்டுடன் செய்வீர்கள். விவேகம் உண்டாகும். வீண் அலைச்சல் எதிர்பாராத செலவும் உண்டாகும். பரிகாரம்: சிவபுராணம் சொல்லி சிவனை வணங்கி வர குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். உத்தியோகம் நிலைக்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன் அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன் - குரு - செவ்வாய் எண்கள்: 1, 2, 9 சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஸ்ரீருத்ராய நமஹ என்ற மந்திரத்தை தினமும் 36 முறை சொல்லவும். செல்ல வேண்டிய ஸ்தலம்: சிவன் கோவில்களுக்குச் சென்று வரவும். மலர் பரிகாரம்: வில்வத்தை சிவனுக்கு அர்பணித்து வணங்கி வரவும்.  தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்ட கன்னி ராசி அன்பர்களே விகாரி வருட கிரகநிலை: விகாரி வருடம் பிறக்கும் போது,  சுக ஸ்தானத்தில் குரு (வ), சனி, கேது - ரண ருண ரோக  ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் புதன் - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் ராஹூ - லாப ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரக மாற்றங்கள்: 28-10-2019 அன்று குரு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே, இந்த வருடம் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். வீண் வாக்குவாதத்தால் பகை உண்டாகலாம். பயணத்தில் தடங்கல், வீண் செலவு போன்றவை ஏற்படும்.  பணவரத்து இருக்கும். நன்மைகள் உண்டாகும்.    குடும்பத்தில் இருப்பவர்களின் நலனுக்காக  செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே  அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி  செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்கள் உங்களை மதிப்பது மனதுக்கு இதமளிக்கும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை நீண்ட நாட்களுக்குப் பிறகு முன்னேற்றத்தை சந்திப்பீர்கள். எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிடலாம். வீண் செலவு உடல் நல பாதிப்பு ஏற்படலாம்.  தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். லாபம் கூடும். பாக்கிகள் வசூலாகும். கேட்ட வங்கிக் கடன்கள் கை கூடும். சிறு தொழில் நிறுவனங்கள் நல்ல லாபத்தைக் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிசுமையால் டென்ஷனுடன் காணப்படுவார்கள். நிலுவையில் உள்ள தொகைகள் வந்து சேரலாம். தொலைதூர செய்திகள் மனதிற்கு நிம்மதி அளிக்கும். பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு  பாடங்களை நன்கு படித்து மற்றவர்களின் மதிப்புக்கு ஆளாவீர்கள். திறமையான செயல்பாடுகள் வெற்றிக்கு உதவும்.   கலைத்துறையினருக்கு ஏதாவது ஒரு வகையில் வாக்குவாதம் உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் போது ஆவணங்களை சரியாக பார்க்கவும். வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். அரசியல் துறையினருக்கு எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை  தவிர்ப்பதும் நல்லது. திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். முக்கியமான பணிகள் திட்டமிட்டபடி நடக்கும்.  உத்திரம் 2, 3, 4 : இந்த ஆண்டு தேவையான அளவு பணம் கிடைக்கும். வழக்கத்தை விட அதிக அலைச்சல் இருக்கும். தந்தை வழி சொத்துகளில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். வழக்கு, வியாஜ்ஜியங்களில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரிகள் கூறிய வேலையை  செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதையும் புத்திசாதுரியத்தை பயன்படுத்தி சமாளிப்பீர்கள்.  ஹஸ்தம்: இந்த ஆண்டு முக்கிய பதவியொன்று கிடைக்க வாய்ப்புகள் அதிகம். மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெகு விரைவில் சிறந்த இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்திற்கு  தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக வாங்க  நினைத்த ஆடை, ஆபரணம் வாங்க நேரிடும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் விருந்து நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவீர்கள். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிய நபர்களிடம் எச்சரிக்கை தேவை. சித்திரை 1, 2 : இந்த ஆண்டு வேலை பார்ப்பவர்கள் அலுவலகத்தில் புகழ் கூடும். அதனால் மனம் களிப்பில் இருப்பீர்கள்.  குடும்பத்திலும் உங்கள் கை ஓங்கியே இருக்கும். அதனால் மகிழ்ச்சிக்கு குறைவு இருக்காது. தொழில் வியாபார போட்டிகள் குறையும். பணவரத்து இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். உறவினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களின்போது கவனம் தேவை. அடுத்தவர்களுக்காக பொறுப்புகளை ஏற்கும்போது ஒரு முறைக்கு பலமுறை யோசித்து முடிவு எடுப்பது நல்லது. பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம்.    பரிகாரம்: ராஜராஜேஸ்வரியை தீபம் ஏற்றி வணங்க செல்வம் சேரும். செல்வாக்கு உயரும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி அதிர்ஷ்ட ஹோரைகள்: புதன் - சனி - சுக்ரன் எண்கள்: 5, 7, 8 சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தை தினமும் 21 முறை சொல்லவும் செல்ல வேண்டிய ஸ்தலம்: ரங்கநாதர் கோவில்களுக்குச் சென்று வரவும். மலர் பரிகாரம்: வெண் தாமரையை பெருமாளுக்கு அர்பணித்து வரவும்.  அனைவரையும் சரிசமமாக பாவிக்கும் துலா ராசி அன்பர்களே விகாரி வருட கிரகநிலை: விகாரி வருடம் பிறக்கும் போது, தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு (வ), சனி, கேது - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் - ரண ருண ரோக  ஸ்தானத்தில் புதன் - களத்திர ஸ்தானத்தில் சூரியன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் -  என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரக மாற்றங்கள்: 28-10-2019 அன்று குரு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: சுக்கிர பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட துலா ராசி அன்பர்களே, இந்த வருடம் எதிர்பார்த்த பணம் வரலாம். எதிர்ப்புகள் விலகும். வழக்குகளில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். எடுத்துக் கொண்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.  குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக  இருந்த குடும்பம் தொடர்பான  பிரச்சனைகள் சாதகமாக முடியும். கணவன், மனைவிக்கிøடையே  இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகள் கல்விக்காக பாடுபட வேண்டி இருக்கும். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். காரிய அனுகூலங்களும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்க்கவும்.  தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சாதூரியமான பேச்சின் மூலம் முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்தபடி நிதிநிலை உயரும். வாடிக்கையாளர்கள் திருப்தி அடைவார்கள். புதிய  முதலீடுகள் செய்ய எண்ணம் மேலோங்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் நல்ல லாபத்தை தரும். வீணாக யாரிடமும் பெச வேண்டாம். பெண்களுக்கு வாக்குவாதங்கள் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சுபநிகழ்ச்சிகள் நன்றாக நடைபெறும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சி மேற்கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு மூத்த கலைஞர்களின் ஆதரவும், நட்பும் கிடைக்கும். மனம் மகிழும் படியான சம்பவங்கள் நடைபெறும். அரசியல்துறையினருக்கு வீண் அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். அனைவரையும் அனுசரித்து செல்வதன் மூலம் காரியங்கள் நடந்து முடியும். திறமையுடன் செயல்பட்டு மேலிடத்தால் பாராட்டு கிடைக்க பெறுவீர்கள்.  சித்திரை 3, 4 : இந்த ஆண்டு தாங்கள் எதிர்பார்த்திருந்த உதவிகள் கடின முயற்சிக்குப் பின்பே கிடைக்கும்.  சிலருக்கு பணவரவு கிடைக்க அலைய வேண்டி வரலாம். பண உதவி கிடைக்க தாமதமானாலும் அது கிடைத்து விடும். வீண் அலைச்சலை குறைத்துக்கொண்டு வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது. பெரியோர்களின் உதவியும் கிடைக்கும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உண்டாகும். துணிச்சலுடன் எந்த காரியத்திலும் ஈடுபட்டு சாதகமாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள்  கூடுதல் முயற்சிக்கு பிறகு எதிர்பார்த்தபடி  நடந்து முடியும். பயணங்கள் செல்ல நேரிடலாம்.  சுவாதி: இந்த ஆண்டு வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் தங்களுக்கு எதிராக செயல்பட்டு வந்தவர்களின் ஆதிக்கம் குறையும். ஆதலால் நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். மனம் நிம்மதி பெற தியானம் செய்யுங்கள். நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் காரியம் சாதகமான பலன் தரும். திட்டமிட்டு செய்யும் பயணங்கள் வெற்றி பெறும். செலவு செய்வது பற்றி யோசனை செய்து தேவையென்றால் மட்டுமே செய்வீர்கள். புத்தியை உபயோகித்து வியாபாரத்தில் புதுமையை செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் கிடைக்கலாம். விசாகம் 1, 2, 3 : இந்த ஆண்டு சில அன்பர்களுக்கு கண் சம்மந்தமான நோய் ஏற்பட்டு மறையும். கணவன்,மனைவியரிடேயே பிரச்சினைகள் இருந்தால் சரியாகி விடும். எதிர்பார்த்திருந்த வருமானம் கைக்கு கிடைப்பது மன நிறைவைத் தரும். குடும்பத்தில் வாக்குவாதங்கள் உண்டாகலாம். பெண்களுக்கு எடுத்த காரியத்தை செய்து முடிக்க கால தாமதம் ஏற்படும். திட்டமிட்டு செயல்படுவது முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். மாணவர்களுக்கு எதிர்காலம் பற்றிய திட்டங்கள் மனதில் தோன்றும். கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். புத்திசாதூர்யம்  அதிகரிக்கும்.  யாருக்கும் வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.   பரிகாரம்: ஸ்ரீராமருக்கு பானகம் நிவேதனம் செய்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி அதிர்ஷ்ட ஹோரைகள்: சுக்ரன் - சனி - புதன் எண்கள்: 4, 6, 8 சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஸ்ரீமாத்ரே நமஹ என்ற மந்திரத்தை தினமும் 27 முறை சொல்லவும் செல்ல வேண்டிய ஸ்தலம்: பெருமாள் தாயாருடன் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வரவும். மலர் பரிகாரம்: மல்லிகையை பெருமாளுக்கு அர்பணித்து வரவும்.சொன்ன சொல்லை காப்பாற்றும் விருச்சிக ராசி அன்பர்களே விகாரி வருட கிரகநிலை: விகாரி வருடம் பிறக்கும் போது, தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (வ), சனி, கேது - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் புதன் - ரண ருண ரோக  ஸ்தானத்தில் சூரியன் - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரக மாற்றங்கள்: 28-10-2019 அன்று குரு பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: செவ்வாய் பகவானை ராசி அதிபதியாக கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே,  இந்த வருடம் பேச்சின் இனிமை சாதூர்யத்தின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து கூடும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். மனகவலை நீங்கும் படியான சூழ்நிலை இருக்கும்.  குடும்பத்தில் சில்லறை சண்டைகளும், பூசல்களும் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகும். உறவினர்களுடன் கருத்து வேற்றுமை வரலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பது நல்லது. மனோ தைரியம்  அதிகரிக்கும். வீடு, வாகனங்கள் தொடர்பான செலவு ஏற்படும். எதையும் ஆராய்ந்து அதன் பிறகே அதில் ஈடுபடும் மனநிலை உண்டாகும். எதிர்பாராத திருப்பங்களால் சிலரது வாழ்க்கை தரம் உயரும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் சிறக்க கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். தந்தை வழி தொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடையலாம். புது நிறுவனங்கள் தொடங்க ஆவல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாக நடந்து முடியும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் நல்லவிதமாக நடந்து முடியும்.  பெண்களுக்கு எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சாதூரியமான பேச்சு வெற்றிக்கு உதவும்.  மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். உயர்கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும்.  கலைத்துறையினர் வேலைகளை துரிதமாக செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது, அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். உடன் இருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. ஒரு சில காரியங்களில் அவசரமாக முடிவு எடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். விசாகம் 4 : இந்த ஆண்டு ஏற்கனவே பணியிலிருந்து வருபவர்களுக்கு இது நாள் வரை மறுக்கப்பட்டு வந்த உயர்பதவியொன்று இப்போது கிடைக்க வாய்ப்புள்ளது. தொழில் வழக்கம் போல் நடந்து வரும். வாழ்க்கை துணையையும் குழந்தைகளிடமும் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டியது இருக்கும். நிம்மதியும், சுகமும் அதிகமாகும். புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செல்ல வேண்டி வரலாம்.  பணவரத்து திருப்திகரமாக  இருக்கும். பலவகையிலும் பிறர் உதவி கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும்.  உறவினர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. அனுஷம்: இந்த ஆண்டு பெண்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். நேரத்திற்கு உணவருந்ததால் அல்சர் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். தொழில் ரீதியான முடிவுகள் எடுக்கும் போது கவனம் தேவை.  எல்லாவிதமான காரியங்களும் சாதகமான பலன்தரும். பணவரத்து திருப்திதரும். பக்தியில் நாட்டம் ஏற்படும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும்.  உதவிகளை செய்து மன திருப்தி அடைவீர்கள்.  கொடுத்த வாக்கை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும்.  கேட்டை: இந்த ஆண்டு நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். திருமண வயதிலுள்ள அன்பர்களுக்கு நல்ல வரன் அமையக்கூடும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும்.  பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். தொழில் தொடர்பான விஷயங்களில் தீர ஆலோசித்து ஒரு முடிவுக்கு வருவீர்கள். பலராலும் செய்ய முடியாத காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் நிலை வரலாம். பணவரத்து திருப்தி தரும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். உத்தியோகஸ்தர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.   பரிகாரம்: முருகனுக்கு பாலபிஷேகம் செய்து அர்ச்சனை செய்து வணங்க மன அமைதி உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.  அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி அதிர்ஷ்ட ஹோரைகள்: செவ்வாய் - குரு - சந்திரன் எண்கள்: 4, 5, 7 சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் கார்த்திகேயாய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 27 முறை சொல்லவும். செல்ல வேண்டிய ஸ்தலம்: முருகன் கோவில்களுக்குச் சென்று வரவும். மலர் பரிகாரம்: செவ்வரளிப் பூவை முருகனுக்கு அர்பணித்து வரவும்.  நேர்மையாக நடந்து கொள்ளும் தனுசு ராசி அன்பர்களே விகாரி வருட கிரகநிலை: விகாரி வருடம் பிறக்கும் போது, ராசியில் குரு (வ), சனி, கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் புதன் - பஞ்சம ஸ்தானத்தில் சூரியன் - ரண ருண ரோக  ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரக மாற்றங்கள்: 28-10-2019 அன்று குரு பகவான் விரைய ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார். பலன்: குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே, இந்த வருடம் திடீர் மனத் தடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து திருப்தி தரும். சின்ன சின்ன பிரச்சனைகள் தீரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.  குடும்பத்தில் இருப்பவர்களால் நன்மை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷமான நிலை காணப்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மூலம் அலுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை அதிக காரத்தை தவிர்ப்பது நன்மை தரும். கண் சம்பந்தமான உபாதைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும். மேலிடத்துடன் இணக்கத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும்.  பெண்களுக்கு எதிர்பாராத பணவரத்து இருக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற நன்கு படிக்க வேண்டி இருக்கும். ஆசிரியர்கள் சக மாணவர்களின்  ஆதரவும் கிடைக்கும். கலைத்துறையினருக்கு மிகவும் நன்மை பயக்கும் காலமாக இது அமையும். தொடர் பணிகளால் களைப்படைவீர்கள். வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு முக்கியமானவர்களின் நட்பு கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். சமூகத்தில் முக்கியஸ்தர் என்று பெயரெடுப்பீர்கள். கட்சிப் பணிகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். கட்சியில் முக்கிய பொறுப்புகளையும் ஏற்பீர்கள். நண்பர்களாலும் தொண்டர்களாலும் ஏற்றம் பெறுவீர்கள்.  மூலம்: இந்த ஆண்டு வருமானம் நல்லபடி இருந்தும் வீண் செலவுகள் ஏற்படுவதால் மனம் கவலையில் இருக்கும்.  குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள் எடுக்க சற்று கஷ்டப்பட வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் கூடுதல் வருமானம் கிடைக்கும். முக்கிய நபர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாக பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும்.  அடுத்தவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்கும் போது கவனம் தேவை. அவற்றை ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது.  பூராடம்: இந்த ஆண்டு புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது. கைக்கு வர வேண்டிய பாக்கிகள் இப்போது வசூலாகும்.  வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு  வேலை கிடைக்கலாம். கணவன், மனைவிக்கிடையே சுமூகமான நிலை காணப்படும். பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் செலவு செய்ய வேண்டி இருக்கும்.  பெண்களுக்கு பணவரத்து அதிகரிக்கும். எந்த ஒரு காரியமும் லாபகரமாய் நடந்து முடியும். செயல்திறன் கூடும். மாணவர்களுக்கு பாடங்களை மனநிறைவுடன் படிப்பீர்கள். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையும். உத்திராடம் 1 இந்த ஆண்டு ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டியது அவசியமாகிறது.கண்ட நேரங்களில், கண்ட இடத்தில் உண்பதை தவிர்ப்பது நல்லது.  குடும்பச் சூழ்நிலை மனதிற்கு நிம்மதி தரும். பயணங்கள் செல்ல நேரிடலாம். வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில்  இருந்த போட்டிகள் விலகும். பணியாட்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும்.  சரக்குகளை  பாதுகாப்பாக வைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு  அதிகரிக்கும்.  எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய உதவித் தொகை தடையின்றி கிட்டும்.   பரிகாரம்:  சிவனை வில்வ இலையால் அர்ச்சனை செய்து வணங்க காரிய தடைகள் நீங்கும். நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும்.  அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி அதிர்ஷ்ட ஹோரைகள்: குரு - செவ்வாய் - சூரியன் எண்கள்: 1, 3, 5 சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் சிவாய நம என்ற மந்திரத்தை தினமும் 21 முறை சொல்லவும். செல்ல வேண்டிய ஸ்தலம்: சித்தர்களின் கோவில்களுக்குச் சென்று வருவது நல்லது. மலர் பரிகாரம்: சாமந்திப் பூவை சித்தர்களுக்கு அர்பணித்து வணங்கி வருவது நல்லது.வழக்காடுவதில் வல்லவரான மகர ராசி அன்பர்களே விகாரி வருட கிரகநிலை: விகாரி வருடம் பிறக்கும் போது, தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன் - சுக ஸ்தானத்தில் சூரியன் - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக  ஸ்தானத்தில் ராஹூ - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - விரைய ஸ்தானத்தில் குரு (வ), சனி, கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரக மாற்றங்கள்: 28-10-2019 அன்று குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசி அன்பர்களே இந்த வருடம் எதிர்பார்த்த படி காரியங்கள் நடந்து முடியாமல் காரிய தாமதம் உண்டாகலாம். வாகன யோகத்தை தரும். பெரியோர்களின் உதவி கிடைக்கும்.   குடும்பத்தில் இருப்பவர்களுடன் அவ்வப்போது வாக்குவாதங்கள் உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும்.  பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தியை தரும். உறவினர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர் நலனுக்காக  பாடுபட வேண்டி இருக்கும். பெரியோர் உதவி கிடைக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.      தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. தொழிலுக்கு தேவையான உப கரணங்கள் வாங்க முயற்சி எடுங்கள் அது பலிதமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளால் டென்ஷன் அடைவார்கள். எதிர்பார்த்தபடி சக ஊழியர்களால் உதவிகள் கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள் சிறிது நாட்கள் தள்ளிப் போடுவது நல்லது. பெண்களுக்கு  மனக்குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை உண்டாகும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். உடல் ஆரோக்கியத்தை அதிக கவனம் எடுத்துக் கொள்வது அவசியம். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். மாணவர்களுக்கு உயர்கல்வி கற்க தேவையான பணவசதி கிடைக்கும். கூடுதலாக கவனம் செலுத்தி படிப்பது வெற்றிக்கு உதவும்.  கலைத்துறையினருக்கு மிகவும் அனுகூலமான காலமிது. வாய்ப்புகள் குவியும். புத்திசாதுர்யத்துடன் கையாள்வதால் லாபமான காலமாக அமையக்கூடிய வாய்ப்பு உண்டு. அரசியல்வாதிகள் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தின் கவனத்தை ஈர்ப்பீர்கள். அதேசமயம் புதிய பொறுப்புகளை கவனத்துடன் கையாளவும். தொண்டர்கள் ஆதரவாக இருப்பார்கள். யோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.   உத்திராடம் 2, 3, 4 : இந்த ஆண்டு இது வரை சரியான வேலை கிடைக்க வில்லையே என வருந்தி வந்தவர்களுக்கு அந்நிலை மாறி நல்ல வேலை கிடைக்கும். சிலர் ஒத்துழைப்பு நல்குவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகள்  உங்கள் சொல்படி நடப்பது  மனதுக்கு  மகிழ்ச்சி தரும்.  சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். திருவோணம் :  இந்த ஆண்டு  குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும்.  பொறுமையை கடைபிடியுங்கள். குடும்பத்தாரின் ஆதரவு கிடைக்கும். நல்லபடியாக அனைத்து விஷயங்களையும் முடித்துக் கொடுப்பீர்கள். தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் அலுவலகத்தில் கொடுத்த வேலையை சிறப்பாக  செய்து முடிப்பார்கள். அலுவலக வேலையாக வெளியூர் செல்ல நேரலாம். பெண்களுக்கு புத்தி கூர்மையுடன் செயல்பட்டு காரியங்களை வெற்றி கரமாக செய்து முடிப்பீர்கள். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. அவிட்டம்1, 2 : இந்த ஆண்டு  திட்டமிட்டபடி அனைத்து காரியங்களும் வெற்றி பெறும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். சிலர் உறுதுணையாக இருப்பார்கள். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் பழகும்போது கவனம் தேவை. கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது. தொழில் வியாபாரம் வேகம் பிடிக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தைப் பற்றி மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும்.  குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அனுசரித்து செல்வது நல்லது. பரிகாரம்: விநாயகருக்கு சனிக்கிழமையில் தீபம் ஏற்றி வழிபட குடும்பத்தில் அமைதி உண்டாகும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி அதிர்ஷ்ட ஹோரைகள்: சனி - சுக்ரன் - புதன் எண்கள்: 6, 7, 9 சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் கம் கணபதயே நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 21 முறை சொல்லவும் செல்ல வேண்டிய ஸ்தலம்: நவகிரகங்கள் இருக்கும் கோவில்களுக்குச் சென்று நவகிரகங்களை 9 முறை சுற்றி வரவேண்டும். மலர் பரிகாரம்: மல்லிகை பூவை சிவனுக்கு அர்பணித்து வணங்கி வருவது நல்லது.  உழைப்பின் மூலம் உன்னத நிலையை அடையும் கும்ப ராசி அன்பர்களே விகாரி வருட கிரகநிலை: விகாரி வருடம் பிறக்கும் போது, ராசியில் சுக்ரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ - ரண ருண ரோக  ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் குரு (வ), சனி, கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரக மாற்றங்கள்: 28-10-2019 அன்று குரு பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே  இந்த வருடம் எதிர்ப்புகள் விலகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும்.  குடும்பத்தில் இருப்பவர்களின் நடவடிக்கை டென்ஷனை ஏற்படுத்தலாம்.  கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை வண்டி - வாகனங்கள் - இயந்திரங்கள் ஆகியவற்றை பயன்படுத்தும் போது கவனம் தேவை. மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கலாம். நீங்கள் நிதானமானவர்கள் அதே வேளையில் பொருளாதார விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.  தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு நீடிக்கும். தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் உண்டாகும். வெளிநாட்டு தொடர்புகளில் ஆதரவு நீடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணி தொடர்பாக அலைய நேரிடலாம். பணிகளில் இருந்த தொய்வு நீங்கும். எதிர்பார்க்கும் பணி இட மாற்றம் - பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள்.  பெண்களுக்கு எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் அதுபற்றி ஒருமுறைக்கு பலமுறை யோசித்தபின் ஈடுபடுவது நல்லது. துணிச்சல் அதிகரிக்கும். மாணவர்களுக்கு  கல்வி பற்றிய கவலை  அதிகரிக்கும். கவனமாக  பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். கலைத்துறையினருக்கு பணவரவு ஏற்ற இறக்கமாக இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும். அரசியல்வாதிகள் எதிரிகளுக்குத் தக்க பதிலடி கொடுப்பர். வழக்குகளிலும் சாதகமான தீர்ப்பு வரும். கட்சியில் புதிய பணிகளைச் சாதுர்யமாகச் செய்து முடிப்பீர்கள். செல்வாக்கு உயரும். சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். தொண்டர்களையும் அனுசரித்துச் செல்லவும்.  அவிட்டம் 3, 4 : இந்த ஆண்டு எதிர்பார்த்த லாபம் வரும். தொழில் போட்டிகள் நீங்கும். தொழில் விரிவாக்கம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் வாக்கு வன்மையால்  காரிய வெற்றி பெறுவார்கள். குடும்பத்தில்  வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே  திடீர் கருத்து  வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் பேச்சை கேட்டு நற்பெயர் எடுப்பார்கள்.  மருத்துவ செலவு குறையும். தூர தேசத்திலிருந்து வரும் செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். சதயம்: இந்த ஆண்டு எதிர்பார்த்திருந்த வேலை இடமாற்றம் பற்றி நற்செய்திகள் வரலாம். அது உங்கள் எதிர்காலத்திற்கு நன்மையாகவே அமையும். உடன்பணிபுரிபவர்கள் உங்கள் மீது பொறாமை பட நேரலாம். கணவன் மனைவிக்கிடையே தேவையற்ற மன வருத்தம் உண்டாகலாம் கவனம் தேவை. மருத்துவம் தொடர்பான செலவும் ஏற்படலாம். ஆயுதம், நெருப்பு ஆகியவற்றை கையாளும் போது கவனமாக இருப்பது நல்லது. பெண்களுக்கு புத்தி கூர்மையுடன் செயல்பட்டு காரியங்களை வெற்றி கரமாக செய்து முடிப்பீர்கள். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. பூரட்டாதி 1, 2, 3 : இந்த ஆண்டு சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவது பற்றிய பேச்சுவார்த்தை நடக்கும். நல்லதொரு நற்பணிகளில் ஈடுபடுவீர்கள்.  உடன்பிறந்தோர் உற்ற துணையாக இருப்பார்கள். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய வேலைகள் திருப்திகரமாக நடந்து முடியும். சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண காரியங்கள்  கைகூடும்.  கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது.  பரிகாரம்: ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு பாயாசம் நிவேதனம் செய்து வணங்கி வர எதிர்ப்புகள் அகலும். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி அதிர்ஷ்ட ஹோரைகள்: சனி - புதன் - சுக்ரன் எண்கள்: 6, 7, 8   சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஸ்ரீஆஞ்சநேயாய நமஹ” என்ற ம்ந்திரத்தை தினமும் 17 முறை சொல்லவும். செல்ல வேண்டிய ஸ்தலம்: சிவன் கோவில்களுக்குச் சென்று வரவேண்டும். மலர் பரிகாரம்: முல்லைப் பூவை சிவனுக்கு அர்பணித்து வணங்கி வருவது நல்லது.  அனைவருக்கும் நல்லது செய்யும் மீன ராசி அன்பர்களே கிரகநிலை: விகாரி வருடம் பிறக்கும் போது, ராசியில் புதன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் குரு (வ), சனி, கேது - விரைய ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரக மாற்றங்கள்: 28-10-2019 அன்று குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசி அன்பர்களே இந்த வருடம் காரிய தடை, வீண் அலைச்சல் ஏற்படலாம். கெட்ட கனவுகள் வரலாம். திடீர் கோபம் ஏற்படும். எதிர்பாலினத்தாரிடம் கவனமாக பழகுவது அவசியம்.  குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே  இடைவெளி காணப்படும்.  பிள்ளைகள்  புத்திசாதூர்யமாக நடந்து கொள்வது மன மகிழ்ச்சியை தரும். வயிறு கோளாறு உண்டாகலாம். தூக்கம் குறையும். எதிர் பாலினத்தாரின் நட்பு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும்.     தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்த தடங்கல்கள் நீங்கும். சாதூரியமான பேச்சு வியாபார விருத்திக்கு கைகொடுக்கும். தொழிலாளர்கள் நல்ல ஆதரவு தருவார்கள். நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த வியாபாரம் நல்ல சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிறப்பாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டு பெறுவார்கள். உடனிருப்பவர்களுடன் கவனமாக பழகவும். பெண்களுக்கு எடுத்த காரியத்தை சாதகமாக செய்து முடிப்பீர்கள். திடீர் மன தடுமாற்றம் உண்டாகலாம். பெரியோர் ஆலோசனை கை கொடுக்கும். மாணவர்களுக்கு கவனத்தை சிதற விடாமல் வகுப்பை கவனிப்பது அவசியம். கூடுதலாக பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.  கலைத்துறையினருக்கு அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் வந்து சேரும். அரசியல் துறையினருக்கு கடின உழைப்புக்குபின் முனனேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் வந்து சேரும். மேலிடத்தை திருப்தி செய்ய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். தொண்டர்களின் பாராட்டை பெறுவீர்கள். பூரட்டாதி 4 : இந்த ஆண்டு அலுவலக விசயத்தில் கவனம் தேவை. உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். பணம் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகலாம். காரியங்களில் தடை தாமதம் உண்டாகும். எதிலும் தலையிடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் வலிய வந்து  உங்களையும் இழுப்பார்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் மந்தமாக காணப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.   உத்திரட்டாதி: இந்த ஆண்டு சிறு தொழில், வாணிபம் செய்பவர்கள் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். முடிவுகள் எடுக்கும் போது பெரியோர் அறிவுரை கேட்டு நடப்பது அவசியமாகிறது. எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், வேலை பளுவும் ஏற்படலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன்  அனுசரித்து செல்வது நல்லது.  கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து செல்வது நன்மை தரும். பிள்ளைகளுக்காக அலைய வேண்டி இருக்கும். தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.  ரேவதி: இந்த ஆண்டு பொருள்வரத்து அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மற்றவர் களால் கைவிடப்பட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள்  அனுகூலமாக நடந்து முடியும். புதிய ஆர்டர்கள்  கிடைப்பதில் சாதகமான நிலை காணப்படும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமில்லாத இடமாற்றம் உண்டாகலாம். சொத்து வழக்கு வியாஜ்ஜியங்கள் உங்கள் பக்கம் தீர்ப்பாகும். புதிய சொத்து வாங்குவதில் கவனம் செல்லும்.  பரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் உடல் நலம் சீராகும். பொருளாதார சூழ்நிலை நன்றாக இருக்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி அதிர்ஷ்ட ஹோரைகள்: குரு - சந்திரன் - செவ்வாய் எண்கள்: 1, 5, 7 சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் நமசிவாய” என்ற மந்திரத்தை தினமும் 21 முறை சொல்ல வேண்டும். செல்ல வேண்டிய ஸ்தலம்: சிவன் கோவில்களுக்குச் சென்று வரவேண்டும். மலர் பரிகாரம்: நீர்நிலைகளில் இருக்கும் சிவன் அல்லது முருகன் கோவில்களுக்குச் சென்று வர வேண்டும்.  

newstm.in

Tags:
Next Story
Share it