1. Home
  2. ஜோதிடம்

தமிழ் புத்தாண்டு பலன்கள் : இந்த ராசியினருக்கு பண வரவு அதிகமாகப் போகுது... சாதகம் யாருக்கு ? பாதகம் யாருக்கு ?

1

குரோதி வருஷ பலன்கள்

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீசோபக்ருது வருஷம் - உத்தராயனம் - சிசிர ரிது - பங்குனி மாதம் - 31ம் தேதி - 13.04.2020 - அன்றைய தினம் சனிக்கிழமையும் - சுக்ல பக்ஷ சஷ்டியும் - ம்ருகசீர்ஷ நக்ஷத்ரமும் - சோபன நாமயோகமும் - பாலவ கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி இரவு மணி 8.26க்கு (உதயாதி நாழிகை: 35:44)க்கு வ்ருச்சிக லக்னத்தில் ஸ்ரீகுரோதி வருஷம் பிறக்கிறது.

கிரக பாதசார விபரங்கள்:
லக்னம் - அனுஷம் 4ம் பாதம் - சனி சாரம்
சூர்யன் - அசுபதி 1ம் பாதம் - கேது சாரம்
சந்திரன் - ம்ருகசீரிஷம் 3ம் பாதம் - செவ்வாய் சாரம்
செவ்வாய் - பூரட்டாதி 2ம் பாதம் - குரு சாரம்
புதன்(வ) - உத்திரட்டாதி 3ம் பாதம் - சனி சாரம்
குரு - பரணி 4ம் பாதம் - சுக்கிரன் சாரம் 
சுக்ரன் - உத்திரட்டாதி 4ம் பாதம் - சனி சாரம்
சனி - சதயம் 2ம் பாதம் - ராகு சாரம்
ராஹு - ரேவதி 2ம் பாதம் - புதன் சாரம்
கேது - ஹஸ்தம் 4ம் பாதம் - சந்திரன் சாரம்

செவ்வாய் தசை இருப்பு: 01 வருஷம் - 04 மாதம் - 20 நாள்
 
குரோதி வருஷத்தின் நவநாயகர்கள்:
ராஜா - செவ்வாய்
மந்திரி - சனி
அர்க்காதிபதி - சனி
மேகாதிபதி - சனி
ஸஸ்யாதிபதி - செவ்வாய்
சேனாதிபதி - சனி
இரஸாதிபதி - குரு
தான்யாதிபதி - சந்திரன்
நீரஸாதிபதி - செவ்வாய்
பசுநாயகர் - கோபாலன்

குரோதி வருஷ வெண்பா:
கோரக் குரோதி தனிற் கொள்ளி மிகுங் கள்ளரினால் 
பாரிற் சனங்கள் பயமடைவார் - கார்மிக்க 
அற்பமழை பெய்யுமே மஃகங்குறையுமே 
சொற்பவிளையுண்டெனவே சொல் 

பாடல் விளக்கம்: குரோதி தமிழ் ஆண்டு கோரமான வருடம். எங்கும் கொள்ளை களவு பகை பெருகும். திருடர்கள் மக்களை தாக்கி அழிப்பர். ஊரில் பயம் மிகுதியாகும். மழையும் தேவையான நேரத்தில் மிகவும் குறைவாகவே பொழியும். எங்கும் காய்கறிகளின் பற்றாக்குறை காணப்படும். பயிர்களும் அழிந்து போய் மிகவும் அற்பமான விளைச்சலைத் தரும் என்று வெண்பாவில் சொல்லப்பட்டுள்ளது.


பொது பலன்கள்:
இந்த குரோதி ஆண்டை பொருத்தவரை மிதமான மழையும் - மத்திய அரசின் நிலையான ஆட்சியும் - பல முக்கிய தலைவர்களுக்கு பல புதிய பதவி உயர்வுகளும் ஏற்படும். மாநில அரசுகளில் உட்பூசல்கள் சிக்கல்கள் குழப்பங்கள் ஏற்படலாம். இந்த ஆண்டு 9 புயல்கள் உருவாகி அதில் நான்கு புயல்கள் பலஹீனம் அடைந்து மற்ற புயல்களினால் மிதமான மழை ஏற்படும். ஆறு ஏரி குளம் குட்டை கால்வாய்களில் ஓரளவு தண்ணீர் நிரம்பும். இந்த ஆண்டு புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மாதங்களில் வால் நட்சத்திரங்கள் தோன்றும். இந்த ஆண்டு அயல்நாடுகளில் மூலதனம் அதிகமாகும். ஏற்றுமதி இறக்குமதி மூலம் வருவாய் அதிகரிக்கும். இந்த ஆண்டு பூமி நிலம் வீடு மனை விலை சற்று குறையும். பெட்ரோல் டீசல் மண்ணெண்ணெய் எரிவாயு தங்கம் விலை அதிகரிக்கும். இந்த ஆண்டு புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மாதங்களில் ஓரளவு மழையும் - கடல் கொந்தளிப்பும் - கடல் சீற்றங்களும் ஏற்படும்.  ராகு பகவானுடைய சஞ்சாரத்தினால் இந்த ஆண்டு அதிகமான காற்று வெள்ள பாதிப்பு ஏற்படும். இதனால் கடலோர மக்களுக்கு உயிர் சேதம் பொருள் சேதம் ஏற்படும். இந்த ஆண்டு மேற்கு பகுதியில் ஏற்படக்கூடிய காற்று கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் சேதத்தை ஏற்படுத்தலாம். அயல்நாடுகளில் அமெரிக்கா ரஷ்யா வளைகுடா நாடுகளில் ஓரளவு பொருள் சேதம் ஏற்படலாம். இந்த ஆண்டு ராஜாவாக செவ்வாய் வருவதால் மத்திய அரசுகளில் நல்ல வருவாயும் பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட துறையில் முதலீடும் அதிகம் ஏற்படும். அரசுகளின் முயற்சியினால் கல்வித்தரம் சர்வதேச அளவில் உயரும். மத்திய மாநில அரசுகளுக்கு இடையே நட்புறவு நீடிக்கும். மந்திரியாக சனி வருவதால் பெண்களுக்கு இந்த வருடம் நன்றாக இருக்கும். ராணுவம் சம்பந்தப்பட்ட துறைகளில் பல புதிய நவீன ஏவுகணைகள் சேர்க்கப்படும். காவல் துறை நவீனமாகும். கார் லாரி பஸ் இதர வாகனங்கள் நவீன மயமாக்கப்பட்டு விலை ஏறும். இந்த ஆண்டு சேனாதிபதியாக சனி வருவதால் போர் பதற்றம் தணிந்து பேச்சுவார்த்தைகளில் மூலமாக நாடுகளுக்குள் ஒற்றுமை ஏற்படும். பொதுவாக இந்த ஆண்டில் சந்திரன் பலமாக இருப்பதால் ராணுவம் காவல்துறை ஊர்க்காவல்படை இதர துறைகளில் பெண்கள் அதிகமாக சேர்க்கப்படுவார்கள்.  மேக அதிபதியாக சனி ஆட்சியாக இருப்பதால் வருட வெண்பாவையும் தாண்டி ஓரளவு மழை பெற முடியும்.  அணைகள் முக்கால்வாசி நிரம்பும். காய்கறி வகைகள் - பழங்கள் - பருப்பு வகைகள் - எண்ணெய் வித்துக்கள் விலை ஏறும். சிறுதானியங்களின் உபயோகம் அதிகரிக்கும். நீரஸாதிபதியாக செவ்வாய் இருப்பதால் மதுவகைகள் - தேயிலை - காப்பி  - லாகிரி வஸ்துக்கள் வகைகள் விலையில் நல்ல மாற்றம் ஏற்படும். இந்த ஆண்டு ஈரான் ஈராக் அமெரிக்கா கொரியா ஆகிய நாடுகளில் உள்நாட்டு குழப்பங்கள் மனக்கசப்புகள் ஏற்படலாம். அமெரிக்கா ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் ஈரான் ஈராக் இந்தோனேசியா ஜப்பான் ஆகிய நாடுகளில் பூமி வெடிப்பும் நிலநடுக்கம் ஏற்படும். அமாவாசை பவுர்ணமி காலங்களில் கடல் சீற்றம் அதிகரிக்கும். இந்த ஆண்டு மத்திய அரசு வரிகளில் மதிப்பை உயர்த்தும். 

ராஜா செவ்வாய் பலன் 
கல்வி நவீன படுத்தப்படும் சர்வதேச உறவுகள் மேம்படுத்தப்படும் பொருளாதாரத்தின் விகிதத்தில் நல்ல மாற்றம் ஏற்படும் 

மந்திரி சனி பலன் 
இந்த ஆண்டு மந்திரியாக சனி பகவான் வருவதால் நீர் சம்பந்தப்பட்ட பொருட்கள் பெட்ரோலிய பொருட்கள் பெயிண்ட் எண்ணெய் வகைகள் ஆகியவற்றை விலை சற்று உயரும் 

ஆண்டின் அதிபதி சனி பலன் 
இந்த ஆண்டு அதிபதியாக சனி பகவான் வருவதால் பெண்களுக்கு எல்லாத்துறையிலும் முன்னுரிமை அளிக்கப்படும் பெண்களுக்கு அதிகமாக மாநிலங்கள் தரப்படும் 

மேக அதிபதி சனி பலன் 
இந்த ஆண்டு மேக அதிபதியாக சனிபகவான் வருவதால் நெல் கோதுமை தானியங்கள் சோளம் நவ தானியங்கள் நன்கு விளையும் 

ஸஸ்யாதிபதி செவ்வாய் பகவான் பலன் 
இந்த ஆண்டு ஸஸ்யாதிபதியாக செவ்வாய் பகவான் இருப்பதால் மங்கள காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடைபெறும் மேலும் மனிதர்களுக்குள் இருக்கக்கூடிய பூசல்கள் குறையும் 

சேனாதிபதி சனி பலன் 
சனி பலத்தால் இந்த ஆண்டு போர் பதற்றம் குறையும் 

ரஸாதிபதி குரு பகவான் பலன் 
துவர்ப்பு சுவையுள்ள பொருட்கள் - கசப்புச் சுவையுள்ள பொருட்கள் மருத்துவ குணமுள்ள பொருட்கள் ஆகியவை விளைச்சல் அதிகரிக்கும் 

தான்யாதிபதி சந்திரன் பகவான் பலன் 
இந்த ஆண்டு கம்பு கேழ்வரகு சோளம் சிறு தானியங்கள் அதிகமாக விளையும் அதற்கேற்றார் போல் மழையும் இருக்கும் 

நீரஸாதிபதி செவ்வாய் பகவான் பலன் 
இந்த ஆண்டு மஞ்சள் குங்குமப்பூ வாசனை கஸ்தூரி சந்தனம் போன்றவை நன்கு உற்பத்தியாகும் விலை சற்று ஏறும் 

சித்திரை மாதப் பிறப்பின் பலன் 
இந்த ஆண்டு சித்திரை மாதம் செவ்வாய்கிழமை அன்று வருவதால் ஓரளவு மறையும் மத்திய மாநில அரசுகளின் திட்டங்களினால் மக்களுக்கு நல்ல பலன்களும் ஏற்படும் பெண்கள் சம்பந்தப்பட்ட பணிகளில் அதிகமாக ஈடுபாடு கொள்வார்கள் பெண்களை மதிப்பவர்கள் ஏற்றம் காண்பார்கள் 

மகர சங்கராந்தி பலன் 
இந்த ஆண்டு செவ்வாய்கிழமை பிறப்பதால் நல்ல மழை பெய்யும் மங்கல நிகழ்ச்சிகள் நிறைய நடக்கும் மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள் 


மேஷம்:

மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும், மரியாதை கொடுக்கும் மேஷ இராசி வாசகர்களே! நீங்கள் எதிலும் அறிவார்ந்து செயல்படுபவர். வெளிவட்டாரப் பழக்கங்களை விரும்பும் தாங்கள் ஒரு சிறந்த பண்பாளர். வார்த்தைகளில் நிதானம் மிக்கவர். தேவை இல்லாத இடங்களில் கருத்து கூற மாட்டீர்கள். யாரும் கேட்டால் மட்டுமே உதவி செய்வீர்கள். அதிலும் உடல் ஊனமுற்றோருக்கு அள்ளி வழங்குவீர்கள்.

அரசாங்கத்தில் முக்கியமானவர்களின் ஆதரவு கிடைக்கும். அனைவரிடமும் சுமுகமான உறவு தொடரும். சகோதர, சகோதரிகள் பகைமை மறைந்து நட்பு பாராட்டுவார்கள். வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும். செய்தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். புத்திசாலித்தனமாக முதலீடுகளைச் செய்வீர்கள். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். வாழ்க்கையில் இருந்த சலிப்புகள் மறையும். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் உங்களின் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். 

நெடுநாட்களாக வாட்டி வதைத்துக்கொண்டிருந்த உடல் உபாதைகள் நீங்கும். சண்டை சச்சரவுகள் இல்லாமல் செயல்படுவீர்கள். ஆனாலும் முழுமையான வெற்றிகளைப் பெற முடியாமல் போகும். ஆன்மிக அறிவை வளர்த்துக்கொள்வீர்கள். இளைய சகோதர சகோதரிகளின் உதவிகளைப் பெறுவீர்கள். வாழ்க்கை வசதிகளை மேம்படுத்திக்கொள்வீர்கள். உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெறுவீர்கள்.  மனதிலிருந்த தீய எண்ணங்கள் மறைந்து நேர்மையாக சிந்திக்கத் தொடங்குவீர்கள்.

செய்தொழிலில் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். வாக்கு சாதுர்யத்தால் அனைவரையும் வெற்றி கொள்வீர்கள். உங்கள் ஆசைகள் அனைத்தும் சுலபமாகப் பூர்த்தியாகும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். கடன் தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள்.

ஏமாற்றங்களிலிருந்து விடுபடுவீர்கள். அனைவரும் உங்களை மதித்து நடப்பார்கள். இழப்புகளைக் கண்டறிந்து அவற்றை உடனுக்குடன் சரிசெய்து விடுவீர்கள். கொடுத்த வாக்கை சிரமப்பட்டாவது காப்பாற்றிவிடுவீர்கள். கடன் தொல்லை இல்லாவிட்டாலும்  பொருளாதாரம் சிறிது ஏற்ற இறக்கமாகவே இருக்கும்.

உத்யோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரித்தாலும் உங்களின் வேலைகளை சரியாகச் செய்து முடித்துவிடுவீர்கள். சக ஊழியர்களால் உங்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பவர்களைக் கண்டறிந்து விலக்குவீர்கள். வருமானம் சீராக இருக்கும். சிறிய தடை ஏற்பட்டாலும் பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.

வியாபாரிகள் திருப்தியாக வியாபாரத்தை நடத்துவீர்கள். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். வாடிக்கையாளர்களின் விருப்பங்களையும், தேவைகளையும் எப்பாடுபட்டாவது பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தை தனித்தன்மையுடன் நேர்த்தியாகச் செய்வீர்கள். சிறிய முதலீடுகளைச் செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

விவசாயிகளுக்கு விளைச்சல் நல்லபடியாக இருக்கும். பழைய குத்தகை பாக்கிகளைத் திருப்பிச் செலுத்துவீர்கள். பூச்சிக்கொல்லிகளுக்கு செலவு செய்ய நேரிடும். பாசன வசதிகளில் கவனம் செலுத்துவீர்கள். கால்நடைகளுக்கு பராமரிப்பு செலவு செய்ய நேரிடும். சக விவசாயிகளுக்கு உதவிகளைச் செய்து அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக்கொள்ளவும்.

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் திறமைக்கேற்ற பொறுப்புகள் கிடைக்கும். நேரடியாகத் தொல்லைகள் கொடுத்தவர்கள் அடங்கிவிடுவார்கள்.  பிறரின் வலிமையை அறிந்து அதற்கேற்றார்போல் பேசுவீர்கள்.

கலைத்துறையினர் செய்தொழிலில் போட்டி பொறாமைகளை சந்தித்தாலும் உங்களின் முயற்சிகள் வெற்றி பெறும். நண்பர்களின் உதவியுடன் தொழிலில் புதிய நுட்பங்களை அறிந்துகொள்வீர்கள். அவர்களுடனான கூட்டு முயற்சியில் சில வெற்றிகளைக் காண்பீர்கள்.  சிலருக்கு புதிய வாகனச் சேர்க்கை உண்டாகும்.

பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்து நடந்துகொள்வார்கள். பண வரவு சீராக இருக்கும். உடல் ஆரோக்யம் மேம்படும். ஆன்மிகத்தில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். உங்களால் குடும்பம் முன்னேற்றம் அடையும்.

மாணவமணிகள் புத்திசாலித்தனமாக நடந்துகொள்வீர்கள்.  நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களிடம் அனாவசியப் பேச்சு வேண்டாம்.

அசுபதி: தந்தைக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தாங்களுக்கு வரவேண்டிய பணபாக்கிகள் வந்து சேரும். 

பரணி: சுபகாரிய விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். 

கார்த்திகை - 1: புதிய வாகனம் யோகம் வந்துசேரும். உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சனைகளில் தலையிடுவதும் கத்து சொல்வதையும் தவிர்த்தல் நலம். 

பரிகாரம்: செவ்வாய்கிழமைதோறூம் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வரவும். முடிந்தவர்கள் அருகிலிருக்கும் அறுபடை ஸ்தலங்களுக்குச் சென்று வாருங்கள்.
சொல்ல வேண்டிய மந்திரம்: ’கந்த ஷஷ்டி கவசம்’ அன்றாடம் பாராயணம் செய்வது. “ஓம் சரவணபவ” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லுங்கள். உங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறும்.
மலர் பரிகாரம்: “செவ்வரளி” மலரை ஏதேனும் கோவிலில் அருள்பாலிக்கும் முருகனுக்கோ அல்லது அம்மனுக்கோ சாத்திவர குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வள்ர்பிறை: ஞாயிறு, செவ்வாய், வெள்ளி தேய்பிறை: ஞாயிறு, புதன், வெள்ளி

----------------------------------------------------------------------------------------


ரிஷபம்:

சொன்ன நேரத்தில் சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்து பொறுப்புடன் நடந்து கொள்ளும் ரிஷப ராசி வாசகர்களே! நீங்கள் இராப்பகல் பாராமல் உழைப்பதில் வல்லவர். காசு விஷயத்தில் கறாராக இருப்பவர். வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்பவர். தன்னை விட தங்கள் குழந்தைகள் நன்றாக வர வேண்டும் என்று விரும்புபவர்கள்.
முக்கியமான விஷயங்களில் நிதானமாக முடிவெடுத்து வெற்றி பெறுவீர்கள். செய்தொழிலில் நிரந்தர வளர்ச்சி அடைவதற்கான அடித்தளத்தை அமைத்துக்கொள்வீர்கள். குடும்பத்தில் ஒரு நியதிக்கு உட்பட்டு சிறப்பாக சிந்திப்பீர்கள். ஆர்வக் கோளாறைத் தவிர்த்து நடக்கக் கூடியவை பற்றி நேர்வழியில் சிந்தித்து செயல்படுவீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். பெற்றோர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

உடல் ஆரோக்யம் சிறப்பாகவே தொடரும். உங்களின் சூட்சும புத்தியால் இக்கட்டான தருணங்களிலும் சமயோஜிதமாகப் பேசி நிலைமையை சமாளிப்பீர்கள். ஆன்மிகத்தில் நம்பிக்கையுடன் நடைபோடுவீர்கள். கடன் ஏதும் ஏற்படாது.

நண்பர்கள், கூட்டாளிகளுடன் விட்டுக்கொடுத்து இணக்கமாகப் பழகுவீர்கள். கணவன் - மனைவிக்கு இருந்த உடல் உபாதைகள் அனைத்தும் விலகும். சுயதொழில் செய்ய வாய்ப்பு கிடைக்கும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். திருமணம், மகப்பேறு போன்ற சுபகாரியங்களை இல்லத்தில் நடத்துவீர்கள். உங்கள் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள்.

பூர்வீகச் சொத்துகள் கைக்கு வரும். அவற்றிலிருந்து நிரந்தர வருமானம் வரத் தொடங்கும். நற்செயல்களைச் செய்து அதனால் வரும் வருமானத்தைக் கொண்டு சில தான தர்மங்களைச் செய்வீர்கள். குழந்தைகளால் சந்தோஷம் அடைவீர்கள்.

உங்கள் மனம் விரும்பும் மாற்றங்களை இல்லத்திலும் தொழிலிலும் செய்வீர்கள். இதனால் புதிய வழிகளில் வருமானத்தைப் பெற முயற்சி செய்வீர்கள். தொலை தூரத்திலிருந்து நல்ல செய்திகளைக் கேட்பீர்கள்.

உத்யோகஸ்தர்களுக்கு விரும்பிய பணி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களிடம் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். மனதில் புதிய தெளிவு பிறக்கும். சக ஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள். அலுவலகப் பயிற்சிகளில் தேர்ச்சியடைவீர்கள்.

வியாபாரிகள் சுக சௌகர்யங்களைப் பாராமல் கடினமாக உழைப்பீர்கள். ஆனாலும் போட்டியாளர்களின் முட்டுக்கட்டைகளை எதிர்கொள்ள நேரிடும். கூட்டாளிகளை நம்பாமல் நீங்களே முன்னின்று செயல்பட்டால் வியாபாரத்தில் குளறுபடிகளைத் தவிர்க்கலாம். உங்களின் நேரடிப் பார்வையிலேயே பண விஷயங்களைக் கையாளவும்.

விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த கடன் கிடைத்து நீர்வரத்து உயரும். புதிய குத்தகைகளை எடுப்பீர்கள். பால் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தைக் காண்பீர்கள். வழக்குகள் சுமுகமாக முடியும்.

அரசியல்வாதிகள் கட்சியில் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனாலும் தொண்டர்கள் சற்று பாராமுகமாகவே நடந்துகொள்வார்கள். சமுதாயத்திற்குப் பயன்படும் உண்மையான தொண்டுகளில் ஈடுபடுத்திக்கொள்வீர்கள். எதிரிகளின் ரகசியத் திட்டங்களை அம்பலப்படுத்துவீர்கள்.

கலைத்துறையினருக்கு அனைத்து காரியங்களும் வெற்றிகரமாக முடிவடையும். உங்களைத் தேடி புதிய வாய்ப்புகள் வரும். திறமைகளை சரியாக வெளிப்படுத்துவீர்கள். பொருளாதார வசதிகள் உயரும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.பெண்மணிகள் ஆக்கபூர்வமான காரியங்களில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தாருடன் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வீர்கள். முக்கிய முடிவுகளை யோசித்து எடுக்கவும். ஆடம்பரச் செலவுகளைச் செய்ய வேண்டாம்.

மாணவமணிகள் படிப்பில் ஏற்படும் இடையூறுகளை சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். ஒருமித்த மனதுடன் படித்து மதிப்பெண்களை அள்ளுவீர்கள். நண்பர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.


கார்த்திகை - 2, 3, 4: செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. புதிய காரியங்களை செய்ய துவங்குவதற்கு முன் நல்ல நேரம் காலம் பார்த்து செய்வது நல்லது. 

ரோகினி: வேலையில் இருந்த பளு கொஞ்ச கொஞ்சமாகக் குறையும். அதில் இருந்து வந்த சுணக்க நிலையும் மாறும். 

மிருகசீரிஷம் - 1, 2: வெளிநாட்டு வேலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரிகளுக்கு நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும். 


பரிகாரம் : வெள்ளிதோறும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று வாருங்கள். அவளுக்கு மஞ்ச வஸ்திரம் கொடுத்து அணிவியுங்கள்.
சொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி 21 முறையாவது "ராம' நாமத்தை ஜபிக்கவும். தமிழிலோ, வட மொழியிலோ ”சுந்தர காண்டம்” பாராயணம் செய்வது அதிக நன்மை தரும்.
மலர் பரிகாரம்: “மல்லிகை மலரை” சிவனுக்கு பிரதோஷ வேளையில் சாத்திவர குழப்பங்கள் அகலும். 
அதிர்ஷ்ட கிழமைகள்: வள்ர்பிறை: திங்கள், புதன், வெள்ளி தேய்பிறை: புதன், வெள்ளி
-----------------------------------------------------


மிதுனம்:

எதிலும் நிதானத்தைக் கடைபிடித்து காரியங்களை கரை சேர்க்கும் மிதுன ராசி வாசகளே நீங்கள் எதிலும் உங்கள் அறிவை வெளிக்காட்டுபவர். உங்களுடைய சாதுர்யத்தால் காரியங்களை சாத்த்துக் கொள்வீர்கள். இன்முகம் காட்டாது அனைவரையும் அனுசரித்து செல்வீர்கள். உங்களுடைய தாய்மாமனுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுப்பீர்கள்.


பொருளாதாரத்தில் சிறப்பான அபிவிருத்திகள் உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் தவித்தவர்கள் அவற்றை நிறைவேற்றி நற்பெயர் வாங்குவார்கள். மற்றவர்களை உங்களின் வசீகரமான பேச்சினால் கவர்வீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்கு உதவுவீர்கள். சிலருக்கு சொந்த வீடு அமைந்து புதுமனைப் புகுவிழா நடத்த வாய்ப்பு கிடைக்கும். உங்களின் மனோ தைரியம் அதிகரிக்கும். போட்டி பொறாமைகளால் பாதிப்பு வராமல் காக்கப்படுவீர்கள். இதனால் தள்ளி வைத்திருந்த விஷயங்களில் உடனடியாக முடிவெடுப்பீர்கள். உங்களிடமிருந்து விலகியிருந்த உற்றார், உறவினர்கள் நெருங்கி வந்து உறவு பாராட்டுவார்கள்.

இந்தக் காலகட்டத்தில் உங்கள் காரியங்கள் அனைத்தும் அலைச்சல் இல்லாமல் சுலபமாக முடிவடையும். ஆகார விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். வயிறு உபாதைகளிலிருந்து விடுபடுவீர்கள். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும்.

மாற்று இனம், மதத்தைச் சேர்ந்தவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். புதியவர்களுடன் சேர்ந்து புதிய முயற்சிகளைச் செயல்படுத்துவீர்கள். சுதந்திரமாகச் சிந்தித்துச் செயல்படுவீர்கள். அரசாங்கத்திலிருந்தும் எதிர்பார்த்த சலுகைகள் தேடி வரும்.

உங்களின் புத்தி சாதுர்யம் அதிகரிக்கும். காரியங்களை அனுகூலமாக முடித்துக்கொள்வீர்கள். வருமானம் அதிகரிக்கும். பெரியோரின் துணையோடு உங்களின் செயல்களை திறமையாக முடித்து விடுவீர்கள். சமுதாயத்தில் முக்கியஸ்தர் என்கிற அந்தஸ்தைப் பெறுவீர்கள். கடிதப் போக்குவரத்தால் நன்மைகள் உண்டாகும். பொதுநிகழ்ச்சிகளில் முக்கிய விருந்தினராக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்படுவீர்கள்.

உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். கடினமான வேலைகளை சரியாகத் திட்டமிட்டு முடித்துவிடுவீர்கள். மேலதிகாரிகள் உங்களிடம் நட்புடன் நடந்துகொள்வார்கள். உங்களுக்கு சிறு தொல்லைகள் கொடுத்து வந்த சக ஊழியர்கள் அடங்கிவிடுவார்கள். பண வரவிற்கு எந்தக் குறைவும் இருக்காது.

வியாபாரிகள் இந்த ஆண்டு கூடுதல் எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்யவும். எதையும் சிந்தித்து செயல்படுத்தினால் எதிர்பார்த்த லாபத்தைப் பெறலாம். கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுக்கவும்.

விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகும். லாபம் அதிகரிக்கும். விளை பொருட்களை புதிய சந்தைகளில் விற்பனை செய்வீர்கள். கால்நடைகளுக்கு சிறிது செலவு செய்ய நேரிடும். புதிய குத்தகைகளை எடுக்கலாம்.

அரசியல்வாதிகள் பொதுச் சேவையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். தொண்டர்கள் ஆதரவாக இருப்பார்கள். உங்களின் முயற்சிகளில் தடை ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றியடைவீர்கள்.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அவற்றில் நல்ல வருமானத்தைக் காண்பீர்கள். திறமைகள் வெளிப்படும். சக கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். உங்களின் சமயோஜித புத்தியால் தக்க நேரத்தில் சரியான முடிவை எடுப்பீர்கள்.

பெண்மணிகள் தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். உடல் நலம் சுமாராக இருப்பதால் சில மருத்துவச் செலவுகள் செய்ய நேரிடும். சகோதர சகோதரிகளிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டு அவர்களின் ஆதரவை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.

மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களை வாங்குவீர்கள். விரும்பிய பாடப்பிரிவுகளில் சேர்வீர்கள். இந்தக் காலகட்டம் முழுவதும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு தொடரும். உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்.

மிருகசீரிஷம் - 3, 4: வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் வந்து சேரும். புதிய இட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வியாபாரிகளிக்கு நல்ல லாபம் கிடைக்கும். 

திருவாதிரை: பொதுவான விஷயங்களில் தலையிடுவோருக்கு உங்கள் கருத்துக்களை மற்றவர்கள் ஆமோதிப்பார்கள்.  பெண்களால் இருந்த தொல்லைகள் மறைந்து நிம்மதி பிறக்கும். 

புனர்பூசம் - 1, 2, 3: பணத்தேவைகள் பூர்த்தியாகும். அண்டை அயலாரின் ஆதரவு கிடைக்கும். குறுகிய பயணங்கள் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு சாதகமான முன்னேற்றம் ஏற்படப்போவது உறுதி. 

பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயங்களுக்கு செல்லுங்கள், முடிந்தவர்கள் திவ்ய தேசங்களுக்கும் செல்லலாம். செல்வங்கள் குவியும்
சொல்லவேண்டிய மந்திரங்கள் : ஓம் ஹரி ப்ரும்ஹ வாசினே நமஹ - என்ற மந்திரத்தை தினமும் 27 முறை சொல்லவும் 
மலர் பரிகாரம் : தாமரை மலரை அருகிலிருக்கும் பெருமாளுக்கு அர்பணியுங்கள், அவர் எல்லாவற்றையும் சீராக நடத்திவைப்பார்
அதிர்ஷ்ட கிழமைகள்: வள்ர்பிறை: திங்கள், புதன், வியாழன் தேய்பிறை: திங்கள், புதன், வியாழன்
------------------------------------------------------------------------------

கடகம்:

எதிலும் பொறுமையுடனும் தைரியத்துடனும் ஈடுபடும் கடக ராசி வாசகர்களே, நீங்கள் மனசாட்சிக்கி விரோதமான காரியத்தை செய்யமாட்டீர்கள்
நீங்கள் எதிலும் ஈடுபடுவதற்குமுன் யோசிப்பீர்கள். தெய்வ சிந்தனை உடையவர்கள், பெற்றோர்களை மதித்து நடப்பீர்கள்.

வருமானம் படிப்படியாக உயரும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். வெற்றிகள் குவியும். தோல்வியடையும் என்று நினைத்திருந்த காரியங்கள் வெற்றி பெறும். உற்றார் உறவினர்கள், மற்றும் நண்பர்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். உடல் ஆரோக்யம் பலப்படும். புதிய மாற்றம் ஏற்படும். சமுதாயத்தில் உயர்ந்தவர்களின் உதவிகளைப் பெற்று உங்கள் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். நிதி நிலைமையில் குறிப்பிட்ட இலக்கை அடைவீர்கள். சுறுசுறுப்பாக உழைப்பீர்கள். இழந்த சுக சௌகர்யங்களை திரும்பப் பெறுவீர்கள்.

மற்றபடி முக்கியமானவர்களிடம் கவனமாகப் பேசவும். தீயோரிடமிருந்து விலகி இருக்கவும். “கூடா நட்பு போராய் முடியும்’ என்கிற பழமொழிக்கு ஏற்ப உங்களுக்கு சில வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக் கொடுக்கும்.

அறிவிலும், ஆற்றலிலும் சிறப்படையச் செய்யும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை உண்டாகும். புதிய உறவுகள் கிடைக்கும். நல்ல செய்திகள் வந்தடைந்து உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும்.

அதிகாரம் செய்யும் பதவிகளில் அமர்வீர்கள். பிள்ளைகளை வெளியூர் அல்லது வெளிநாட்டிற்கு அனுப்பிப் படிக்க வைப்பீர்கள். குல தெய்வ வழிபாட்டினை மேற்கொள்வீர்கள். உங்களுக்கு எதிராகப் போடப்பட்டிருந்த வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். ஆன்மிகத்தில் உயர்ந்தோரை சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். உங்களின் ஆன்மிக பலம் அதிகரிக்க புராண, இதிகாசங்களை நுணுக்கமாகக் கற்பீர்கள். உங்களின் பேச்சில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த சரியான தருணங்கள் அமையும்.

உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் நன்றாக இருக்கும். சக ஊழியர்களுடன் சுமுக நிலை தொடர்வதால் உங்களின் வேலைகள் குறித்த காலத்திற்குள் முடியும். மற்றபடி பிறரிடம் நன்கு யோசித்துப் பேசவும்.

வியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் அவற்றை சமாளிப்பீர்கள். உங்களின் சமயோஜித புத்தியால் தேவையில்லாத பிரச்னைகளில் சிக்கிக்கொள்ளாமல் தப்பித்துக்கொள்வீர்கள். புதிய வாடிக்கையாளர்களையும், புதிய சந்தைகளையும் நாடிச் செல்வீர்கள். கொடுக்கல், வாங்கல் சாதகமாக இருக்கும்.

விவசாயிகளுக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் தகுந்த நேரத்தில் விதைத்து வளம் பெறவும். விற்பனை நன்றாக இருக்கும். கால்நடைகளால் விரும்பிய பலனைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்களின் கௌரவம் உயரும். சமுதாயத்தில் அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் ரசிகர் மன்றங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். உங்களின் சிந்தனை தெளிவாக இருப்பதால் வெளிப்படையாக செயல்படுவீர்கள். சக கலைஞர்கள் உங்களுக்கு உதவிகளைச் செய்வார்கள்.

பெண்மணிகளுக்கு குடும்பத்தில் அமைதி நிலவும். வெளியூர் அல்லது வெளிநாட்டிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்து சேரும். கணவரை அனுசரித்து நடந்துகொள்வீர்கள். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

மாணவமணிகள் படிப்பில் வெற்றி வாகை சூடுவீர்கள். உங்களின் ஞாபக சக்தியும் அறிவாற்றலும் அதிகரிக்கும். பெற்றோரால் உங்களின் கோரிக்கைகள் நிறைவேறும்.

புனர்பூசம் - 4:  நல்ல அறிமுகம் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் உண்டு. மாணவர்களுக்கு கேளிக்கையில் நாட்டம் அதிகரிக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் மீது தனிக்கவனம் செலுத்துவது நல்லது.

பூசம்: வெற்றிகளைக் குவித்து வாழ்வில் வசந்தம் வீசம். குடும்பத்தை சாராத ஒருவரால் தொழிலில் சிரமம் ஏற்பட்டு பின் மறையும். பதற்றத்தை தவிர்த்து நிதானத்தை கடைபிடியுங்கள். 

ஆயில்யம்: சிற்சில விரையங்கள் ஏற்பட்டாலும் அவை யாவுமே சுபச்செலவுகள் தான் என்பதை உணருங்கள். எனினும் பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை, திறமை திறன் அதிகரிக்கும். 


பரிகாரம் : முடிந்தால் திருவண்ணாமலை அல்லது  பர்வதமலையை பௌர்ணமியன்று வலம் வரவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி லலிதா திரிசதி பாராயணம் செய்யவும்
மலர் பரிகாரம்: “அல்லி மலரை”  அம்பாளுக்கு திங்கள் தோறும் சாத்திவர குழப்பங்கள் அகலும். மனம் தெளிவடையும்
அதிர்ஷ்ட கிழமைகள்: வள்ர்பிறை: ஞாயிறு, திங்கள், வியாழன் தேய்பிறை: ஞாயிறு, திங்கள், வெள்ளி
------------------------------------------------------------------------------
சிம்மம்:

எதிலும் தங்களது தனித்தன்மையை வெளிப்படுத்தும் சிம்ம ராசி வாசகர்களே நீங்கள் தர்ம சிந்தனை உடையவர்கள். அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற வேண்டும் என்று விரும்புவீர்கள். பழமையையும் கலாசாரத்தையும் மதித்து நடப்பீர்கள். முன்னோர்களின் ஆசீர்வாதங்களை முழுமையாக பெற வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள்.

உங்கள் காரியங்களை பெரிய அலைச்சல் இல்லாமல் சிறிது தாமதத்துடன் முடித்துவிடுவீர்கள். பொருளாதாரம் சீராக இருந்தாலும் சில அனாவசிய செலவுகளை செய்ய நேரிடும். மற்றபடி உற்றார், உறவினர்களுடன் ஏற்பட்ட மனக் கசப்புகள் மறைந்து குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். நெடுநாட்களாக இழுத்துக்கொண்டிருந்த வழக்கு விவகாரங்கள் முடிவுக்கு வரும். உங்கள் எதிர்பார்ப்புகள் மற்றும் கோரிக்கைகள் அனைத்தும் முழுமையாக நிறைவேறும். திடமாக சிந்தித்து தீர்க்கமான முடிவுகளை எடுப்பீர்கள். கடினமாக உழைத்து போட்டிகளையும், எதிர்ப்பாளர்களையும் தகர்த்தெறிவீர்கள்.

செய்தொழிலை விரிவுபடுத்தும் எண்ணத்தைத் தள்ளி வைக்கவும். அனாவசிய கடன் வாங்கி புதிய முயற்சிகள் எதையும் செயல்படுத்த வேண்டாம். நிம்மதியாக உறங்குவீர்கள். ஆனாலும் எவருக்கும் வாக்கு கொடுப்பதோ முன் ஜாமீன் போடுவதோ கூடாது. உங்கள் பெயரில் எவருக்கும் கடன் வாங்கித் தர வேண்டாம். குடும்பத்தில் நிம்மதி நிலவும். தாய் வழியிலிருந்து நன்மைகள் கிடைக்கும். சொத்து சேர்க்கை உண்டாகும். புதிய வீட்டிற்கு மாற நினைப்பவர்கள் இந்த ஆண்டு அதை செயல்படுத்தலாம்.

வெளியில் கொடுத்திருந்த கடன் உடனடியாகத் திரும்பக் கிடைக்கும். அசையாச் சொத்துக்களில் இருந்த வில்லங்கம் தீரும். மனம் தெளிவுடன் காணப்படும்.

திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளைத் தேடித் தருவார். முன்பின் அறியாதவர்களும் உதவி செய்வார்கள். களவு போனதாக நினைத்துக்கொண்டிருந்த பொருட்கள் திடீரென்று உங்கள் கைக்கு கிடைக்கும். எவரிடமும் முன் கோபம் கொண்டு அவசியமில்லாத வார்த்தைகளை உதிர்க்க வேண்டாம்.

உத்யோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை முன்கூட்டியே செய்து முடிப்பீர்கள். சில நேரங்களில் சில இடையூறுகளை சந்திக்க நேரிடும். மற்றபடி பண வரவுக்குத் தடைகள் வராது. மேலதிகாரிகளின் ஆதரவு சுமாராக இருப்பதால் கவனமாக நடந்துகொள்ளவும்.

வியாபாரிகளுக்கு பொருளாதாரம் நன்றாக இருக்கும். கொடுக்கல், வாங்கல் சிறப்பாகவே முடிவடையும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். தேவையில்லாத சில அலைச்சல்கள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே அமையும். கூட்டாளிகளால் உங்களின் வேலைப் பளு குறையும்.

விவசாயிகளுக்கு விளைச்சல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாவிட்டாலும் முதலுக்கு மோசம் போகாது. நீர்ப்பாசன வசதிகளில் கவனம் செலுத்துவீர்கள். கால்நடைகளால் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். விவசாய உபகரணங்களை வாங்கி எதிர்கால வளத்திற்கு வித்திடுவீர்கள்.

அரசியல்வாதிகள் பொதுச் சேவையில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். புதிய பொறுப்புகள் கிடைக்கும். மேலிடத்தின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள். தொண்டர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வீர்கள்.

கலைத்துறையினருக்கு பெயரும், புகழும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். சுறுசுறுப்புடன் பணியாற்றி கடினமான வேலைகளையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்துவிடுவீர்கள்.

பெண்மணிகள் அனுகூலமான நிலைமையைக் காண்பீர்கள். உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உற்றார், உறவினர்கள் இணக்கமாக இருப்பார்கள். பெரியோர்களின் ஆலோசனைப்படி நடந்துகொண்டு குழப்பமான சூழ்நிலைகளிலிருந்து விடுபடுவீர்கள்.

மாணவமணிகள் மதிப்பெண்களைப் பெறுவதற்கு கடினமாக உழைக்க நேரிடும். இருப்பினும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவினால் படிப்பில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள்.

மகம்:  கட்டிடக்கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும். உடலைப் பற்றி தவறான எண்ணங்கள் தோன்றி மறையும். 

பூரம்: குடும்பத்தில் நல்ல சந்தோஷ தருணங்கள் ஏற்படும். சுபகாரியங்கள் வெகு லகுவாக கூடி வரும். 
விலகி நின்ற உறவுகளும் உரிய நேரத்தில் கை கொடுப்பார்கள். 

உத்திரம் - 1: புதிய வீட்டிற்கு செல்வது பற்றி முடிவெடுப்பீர்கள். பிள்ளைகள் உயர்கல்வி செல்வதற்குண்டான வேலைகளை ஆரம்பிப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். 


பரிகாரம் : ஞாயிற்றுக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று நெய் விளக்கு ஏற்றி வழிபடவும். முடிந்தவர்கள் ஸ்ரீசூரியனார் கோவில் சென்று வழிபட்டு வரலாம். காலையில் சூரியன் உதிக்கும் போது தரிசம் செய்வதும் நன்மையைத் த்ரும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி ஆதித்யஹ்ருத்யம் அல்லது புருஷஸூக்தம் பாராயணம் செய்யலாம். 
மலர் பரிகாரம்: “எருக்க மலரை” சிவனுக்கு அல்லது கணபதிக்கோ அர்ப்பணம் செய்து வணங்கி வர நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். மேலும் கோமாதாவிற்கு துவாதசி தோறும் அகத்திக்கீரையும் கொடுக்கலாம். உங்களுக்கு அனைத்து காரியங்களும் தங்குதடையின்றி நடக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வள்ர்பிறை: ஞாயிறு, புதன், வியாழன் தேய்பிறை: புதன், வியாழன்
------------------------------------------------------------------------------
கன்னி:

எதிலும் தங்களது உழைப்பையும் தன்னார்வத்தையும் வெளிப்படுத்தும் கன்னி ராசி வாசகர்களே குடும்பத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்கள் நீங்கள். அதீதமான உணர்வுகள் கொண்டவர்கள். கௌரவத்தை அனைத்து இடத்திலும் எதிர்பார்ப்பீர்கள். சிக்கனத்தை கடைபிடிப்பதிலும் வல்லவர்கள். உலகம் முழுவதும் சுற்றிவர வேண்டும் என்று விருப்பம் கொண்டவர்கள்.
தடைபட்டிருந்த புதிய பொறுப்புகள் கிடைக்கும். வாழ்க்கையில் உயர்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். செய்தொழிலில் வருமானம் பல மடங்கு உயரும். மாற்றுக் கருத்துடையோரிடமும் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வீர்கள். இழுபறியாக நடந்துகொண்டிருந்த வழக்குகளில் சாதகமான திருப்பங்களைக் காண்பீர்கள்.

குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு தடை நீங்கி திருமணம் நடக்கும். குறைந்த முதலீட்டில் புதிய தொழில்களைத் தொடங்குவீர்கள். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டேனும் காப்பாற்றி விடுவீர்கள். வங்கிகளிடமிருந்து கடன்களைப் பெற்று புதிய அசையும், அசையாச் சொத்துக்களை வாங்குவீர்கள்.

உங்களின் அனைத்துச் செயல்களையும் திட்டமிட்டு சரியாகச் செயல்படுத்துவீர்கள். உங்களின் தர்க்க ஞானத்தால் சண்டை சச்சரவுகளில் வெற்றி காண்பீர்கள். சகோதர சகோதரிகளுடன் இணக்கமான உறவு தொடரும். சமுதாயப் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் யோகம் உண்டாகும். மற்றபடி உங்கள் காரியங்களை தனித்தே செய்து முடிக்கவும்.

உங்களின் அறிவுத்திறன் வெளிப்படும். ஆன்மிக விஷயங்களில் சிறப்பான ஈடுபாடு காட்டுவீர்கள். புதிய மொழிகளை அறிந்துகொள்ள பயிற்சி வகுப்புகளில் சேர்வீர்கள். உடல் ஆரோக்யம் மேம்பட யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றைச் செய்வீர்கள்.

நெடுநாட்களாக செய்யாமல் விட்டிருந்த நெடுந்தூரப் பயணங்களைச் செய்வீர்கள். சமுதாயத்தில் உங்களின் பெயரும், புகழும் உயரும். உங்களின் பேச்சுக்கு அனைவரும் மதிப்பு கொடுப்பார்கள். அவப்பெயர்களிலிருந்து விடுபடுவீர்கள். வீடு மாற்றம் செய்ய நினைப்போர் இந்தக் காலகட்டத்தில் வசதியான இல்லத்திற்கு மாறுவார்கள்.

உத்யோகஸ்தர்கள் பயணங்களால் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்பு ஏற்படும். மேலதிகாரிகளால் தொல்லைகள் எதுவும் ஏற்படாது. சக ஊழியர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். பதவி உயர்வு உரிய நேரத்தில் வந்து சேரும்.

வியாபாரிகளுக்கு போட்டிகள் குறையும். லாபம் அதிகரிக்கும். நண்பர்களையும், வாடிக்கையாளர்களையும் அனுசரித்து நடந்துகொண்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்த தொய்வுகள் நீங்கி மனதில் உற்சாகம் பெருகும். மற்றபடி புதியவர்களை நம்பிக் கடன் தர வேண்டாம்.

விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். பாசன வசதிகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். ஆனாலும் விவசாய உபகரணங்களுக்கு செலவுகளைச் செய்ய நேரிடும். மற்றபடி புதிய நிலம் குத்தகைக்கு வந்து சேரும். போட்டிக்குத் தகுந்தவாறு விலையை நிர்ணயம் செய்வீர்கள்.

அரசியல்வாதிகளின் பணியாற்றும் திறன் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் உற்சாகப்படுத்தப்படுவீர்கள். கட்சியில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்யம் நன்றாக இருக்கும். அடிக்கடி பிரயாணங்கள் செய்ய நேரிடும்.

கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்களின் பெயரும், புகழும் உயரும். ரசிகர்கள் சிறிது அலட்சியப்படுத்தினாலும் ரசிகர் மன்றங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள்.

பெண்மணிகள் கணவரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆடை, ஆபரணங்களை வாங்கும் யோகம் உண்டாகும். இல்லத்தில் நிம்மதி நிலவும். சுப காரியங்களில் பங்கேற்று மகிழ்வீர்கள்.

மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். உங்களின் கோரிக்கைகளை அவர்கள் நிறைவேற்றுவார்கள். சக மாணவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்யம் சீராக இருக்கும்.


உத்திரம் - 2, 3, 4: வேலை மாற்றம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அனுகூலமாகும். ஊதிய உயர்வுடன் கூடிய பணி மாற்றம் உண்டு. வெளிநாட்டில் பணிபுரியும் அன்பர்களுக்கு அரச அனுகூலம் உண்டு. 


ஹஸ்தம்: வியாபாரிகளுக்கு புதிய திட்டங்களை செயல்படுத்திக் கொள்ள சிறப்பான சந்தர்ப்பம் அமையும்.  சக ஊழியர்களுடன் ஒத்துப் போவீர்கள். 


சித்திரை - 1, 2: பெரிய கடன்களிலிருந்து விடுபடுவீர்கள். உற்பத்தி சார்ந்த தொழிற்துறையாளர்களுக்கு தொய்வு இன்றி தொழில் நடைபெறும். 


பரிகாரம் : புதன்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று தேங்காய் நெய் விளக்கு ஏற்றி வழிபடவும். 
சொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி ஸ்ரீவிஷ்ணு ஸகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். 
மலர் பரிகாரம்: “துளஸி”யை பெருமாளுக்கு சாத்தி அர்ச்சனை செய்து வணங்கி வர தடைகள் விலகி நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். சொத்துக்களில் இருந்தவந்த பிரச்சனைகள் மாறும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வள்ர்பிறை: திங்கள், புதன், வியாழன் தேய்பிறை: திங்கள், புதன்
------------------------------------------------------------------------------
துலாம்:

எதிலும் எந்த இடத்திலும் நியாயத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்காக போராடும் துலா ராசி வாசகர்களே நீங்கள் அனைவராலும்  விரும்பப்படுவீர்கள். அதிகம் சுமைகளை எடுத்துக் கொள்வீர்கள். அதே நேரம் சின்ன சின்ன பிரச்சனைகளில் தலையிட்டு வெளியில் வர தள்ளாடுவீர்கள். 

தலைமையை அனைவரும் ஏற்றுக்கொள்ளச் செய்வார். செல்வத்துடன் செல்வாக்கும் உயரும். செய்யும் தொழிலில் மேன்மையும், பண வரவும் உண்டாகும். பெற்றோர் வழியில் ஏற்பட்ட உடல் உபாதைகள் மறையும். கடன் தொல்லை, மறைமுக எதிர்ப்புகள் என்று எதுவும் ஏற்படாது. வெளியில் கொடுத்திருந்த கடன் வட்டியும் முதலுமாகத் திரும்பி வரும். புதிராக இருந்த உறவினர்கள் நல்லபடியாகப் பழகுவார்கள். எல்லோருக்கும் நல்லவர் என்று பெயரெடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும்.

உங்கள் சிந்தனைகள் தெளிவாகும். நன்கு யோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இதனால் வருமானம் உயரும். இறை வழிபாட்டில் முழு ஈடுபாடு உண்டாகும். நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பீர்கள்.

சகோதர, சகோதரிகளின் ஆதரவு நன்றாக இருக்கும். தாழ்வு மனப்பான்மை மறையும். குடும்பத்தில் உங்கள் பெயரும், செல்வாக்கும் உயரும். தீயோரின் சகவாசம் நீங்கும். நண்பர்களிடம் உங்களுக்கு முன்பு ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும்.

நெடுநாளாக பாதிக்கப்பட்டிருந்த தோல் மற்றும் வயிறு உபாதைகளிலிருந்து விடுபடுவீர்கள். கடினமாக உழைத்து பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். உங்களை வீண் வம்பு வழக்குகளில் சிக்க வைக்க நினைக்கும் நண்பர்களைக் கண்டறிந்து விலக்குவீர்கள்.

உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். ஆனாலும் சக ஊழியர்கள் பகைமை பாராட்டுவார்கள். அதனால் அவர்களிடம் எச்சரிக்கையுடன் பழகவும். அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தினால் தோல்வியிலிருந்து தப்பிக்கலாம். மற்றபடி உங்கள் செயல்களை செவ்வனே செய்து முடிப்பீர்கள். பயணங்களால் எதிர்பார்த்த வருமானம் கிடக்கும்.

வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசவும். முன்கோபத்தைக் குறைத்துக்கொள்ளவும். கடும் போட்டிகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம். எனவே புதிய முதலீடுகள் வேண்டாம். மற்றபடி கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சரளமாக முடியும். கூட்டாளிகள் ஆதரவாக இருப்பார்கள்.

விவசாயிகளுக்கு வருமானம் குறைந்தாலும் செலவு அதிகரித்தாலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். விளைபொருட்களை உடனுக்குடன் சந்தைக்கு எடுத்துச் சென்று நல்ல முறையில் விற்பனை செய்வீர்கள். கால்நடைகளை நன்கு பராமரிப்பீர்கள். பூச்சி மருந்துகளை சரியாகப் பயன்படுத்துவீர்கள்.

அரசியல்வாதிகள் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வீர்கள். புதிய உத்வேகத்துடன் உங்கள் வேலைகளைச் செய்வீர்கள். வழக்குகளில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும். கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் முக்கியமான பயணங்களைச் செய்வீர்கள்.

கலைத்துறையினருக்கு அதிக முயற்சிகளுக்குப் பிறகே புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பிறரின் அபிமானத்தைப் பெறுவீர்கள். இருப்பினும் தொழிலில் போட்டி இருப்பதால் விருதுகளையும், பாராட்டுகளையும் பெற கவனமாக உழைக்க நேரிடும்.

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராக இருந்தாலும் கணவர் வழி உறவினர்களுடன் நல்லுறவு தொடரும். சிலருக்கு வயிறு சம்பந்தமான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே உணவு விஷயங்களில் கவனம் தேவை. ஆன்மிகத்தில் ஈடுபட்டு மனத் தெளிவு பெறவும்.

மாணவமணிகள் நன்றாகப் படித்து எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவீர்கள். விளையாட்டிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். மனதை ஒருநிலைப்படுத்தினால் மேலும் புகழடையலாம்.

சித்திரை - 3, 4: வாகனங்கள், மற்றும் இயந்திரங்களை பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு பகீரதப் பிரயத்தனம் செய்வதன் மூலமாகவே நல்ல முன்னேற்றம் ஏற்படும். 

ஸ்வாதி: சிறிது முயற்சி செய்வதன் மூலம் சிறந்த வாய்ப்புகள் கைகூடும். மேலும் உங்கள் கௌரவம் அதிகரிக்கும். 

விசாகம் - 1, 2, 3: புத்துணர்ச்சியுடன் எதையும் எதிர் கொள்வீர். நல்ல உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் இருக்கும்.   நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் மிகச் சாதுர்யமாக கையாளுவீர்கள். 


பரிகாரம் : வெள்ளிதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று ஸ்ரீகருடனை வணங்கி வரவும். நெய் விளக்கு ஏற்றலாம். முடிந்தவரி  கருட தரிசனம் செய்யவும். தினமும் முன்னோர்களை வணங்கவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி நமசிவய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை சொல்லவும். ராமஜெயமும் எழுதலாம். 
மலர் பரிகாரம்: சனிக்கிழமைதோறும் வில்வ இலையை சிவனுக்கு சாத்தி வழிபட்டு வர உங்கள் துக்கங்கள் சந்தோஷமாக மாறும். உணர்ச்சிகளை  அடக்க யோகா செய்யுங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வள்ர்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி தேய்பிறை: திங்கள், வெள்ளி
------------------------------------------------------------------------------

விருச்சிகம்:

எதிலும் நெஞ்சுரத்துடன் போராடி வெற்றிகளைக் குவிக்கும் விருச்சிக ராசி வாசகர்ளே நீங்கள் எடுத்த முடிவை யாருக்காகவும் மாற்றிக் கொள்ள  தயங்குவீர்கள். உங்களுக்கென்று ஒரு குறிக்கோளுடன் வாழ்வீர்கள். 

பிள்ளைகளால் ஏற்பட்ட கவலைகள் மறையும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். நோய் உபாதைகளிலிருந்து விடுபடுவீர்கள். முகத்திலும் உடலிலும் புதிய பொலிவு உண்டாகும். சமூகத்தில் உங்கள் புகழும் அந்தஸ்தும் உயரும். வருமானம் படிப்படியாக அதிகரிக்கும். சமூகத்தில் உயர்ந்தோரை சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். ஆன்மிகத்திலும், ஆலயத் திருப்பணிகளிலும் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள்.

நண்பர்களிடமும் கூட்டாளிகளிடமும் உங்கள் செல்வாக்கு உயரும். அனாவசிய பயங்களிலிருந்து விடுபடுவீர்கள். ஸ்பெகுலேஷன் மற்றும் பங்குச் சந்தைகளிலிருந்து திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். உங்களின் சொத்து மதிப்பு உயரும். மனதிற்கினிய பயணங்களை மேற்கொள்வீர்கள். யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றைச் செய்து உடல் நலத்தையும், மனவளத்தையும் பாதுகாத்துக்கொள்வீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். அனைத்து இடையூறுகளிலிருந்தும் கடைசி நிமிடத்தில் தப்பித்துக் கொள்வீர்கள்.

உங்களின் இரக்க குணத்தால் பிறருக்கு உதவுவீர்கள். குடும்பத்தில் அனைவரிடமும் பாசத்தோடு பழகுவீர்கள். புதிய முயற்சிகளில் தைரியத்துடன் ஈடுபடுவீர்கள். கண் உபாதைகள் தீரும். அனைத்து சூழ்நிலைகளிலும் சிறப்பான முடிவுகளை எடுப்பீர்கள். இறையருள் தொடர்ந்து கிடைக்கும். உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் உடனுக்குடன் நிறைவேறும்.

உங்கள் கடன்களை தக்க நேரத்தில் திருப்பிச் செலுத்துவீர்கள். நேர்முக மறைமுக போட்டிகளை சாதுர்யமாக சமாளிப்பீர்கள். அபாண்டமான பழிகளிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்தவர்கள் மறுபடியும் குடும்பத்தாருடன் இணைவார்கள்.

பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். புதிய வழிகளில் வருமானம் பெற முயற்சி செய்வீர்கள். பொதுச் சேவையில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். புதிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வெற்றி பெறுவீர்கள்.

உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் நன்றாக இருப்பதால் உங்களின் தோற்றத்தில் மிடுக்கு உண்டாகும். சிலர் நெடுநாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வைப் பெறுவார்கள். அலுவலக ரீதியான பயணங்களால் நன்மை உண்டாகும். உங்களின் வேலைகளை சரியாகத் திட்டமிட்டுச் செய்வீர்கள். மேலிடத்தில் நம்பிக்கைக்கு உரியவர் என்ற பெயரை சம்பாதிப்பீர்கள்.

வியாபாரிகள் பொறுமையுடன் செயல்பட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். கூட்டாளிகளுடன் மனத்தாங்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்வீர்கள். வருமானம் சிறப்பாகவே தொடரும். புதிய முதலீடுகளில் நன்றாக சிந்தித்து செயல்படவும்.

விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். இதனால் கொள்முதல் பொருட்களை விற்று நல்ல லாபத்தைக் காண்பீர்கள். நெருங்கியவர்களுக்கு மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெற்று உங்கள் கௌரவத்தை உயர்த்திக்கொள்வீர்கள். உங்கள் சிந்தனையில் தெளிவும், செயலில் வீரியமும் உண்டாகும்.

அரசியல்வாதிகளின் புகழ் உயரும். புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். உங்கள் கடமைகளை சுறுசுறுப்புடனும் திடமான முயற்சிகளுடனும் செய்வீர்கள். தொண்டர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள்.

கலைத்துறையினருக்கு புகழும், பாராட்டும் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும்.  மற்றபடி திட்டமிட்ட வேலைகளில் பொறுப்புடன் நடந்துகொள்வீர்கள். ரசிகர்களை அனுசரித்துச் செல்வீர்கள். மனதில் இருக்கும் வருத்தங்களை வெளியில் காட்ட மாட்டீர்கள்.

பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். உற்றார், உறவினர்கள் உங்களால் பயன் பெறுவார்கள்.  சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

மாணவமணிகளுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். நண்பர்களிடம்  எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள்.


விசாகம் - 4: உங்களது யோசனைகளை மற்றவர்கள் கேட்டும் அனுசரித்தும் செல்வார்கள். உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள். எதையும் ஆலோசனை செய்து முடிவெடுங்கள். 

அனுஷம்: தெய்வ நம்பிக்கைகளிலும் சடங்குகள் சமிபிரதாயங்களில் நாட்டம் அதிகரிக்கும். உங்களின் செயல்பாட்டினால் உங்கள் குடும்பத்திற்கு நன்மை ஏற்படும். 

கேட்டை: நிலம், வீடு, மனை ஆகியவற்றில் இருந்த சிக்கல்கள் விலகி நன்மையுண்டாகும்.  குடியிருக்கும் வீட்டினை மாற்றவும் சிலருக்கு வாய்ப்புண்டு. பணவரவில் ஓட்டம் இருக்கும். 


பரிகாரம் : செவ்வாய்தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று வலம் வந்து வணங்கி வரவும். நல்லெண்ணெய் விளக்கு ஏற்றலாம். 
சொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி சியாமளா தண்டகம் பாராயணம் செய்யலாம்.
மலர் பரிகாரம்: செவ்வாய்தோறும் எலுமிச்சைமாலையை அம்மனுக்கு அர்ப்பணித்து வலம் வந்து வணங்குங்கள். அவள் ய்ங்களுடன் இருந்து அனைத்து  காரியங்களிலும் வெற்றிகளை தேடித் தருவாள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வள்ர்பிறை: ஞாயிறு, புதன், வியாழன் தேய்பிறை: திங்கள், வியாழன்
------------------------------------------------------------------------------
தனுசு:

எதிலும் நேர்மையுடனும் விடாமுயற்சியுடனும் செயல்பட்டு முன்னுதாரணமாக வாழும் தனுசு ராசி அன்பர்களே நீங்கள் அனைத்து பிரச்சனைகளையும்  உங்கள் வாக்கு சாதுர்யத்தால் சமாளீப்பீர்கள். ஆனால் எந்தக் காரியத்தையும் தள்ளிப் போடுதல் கூடாது என்பதனை கவனித்துக் கொள்ள வேண்டும். 

வருமானம் ஓரளவுக்கு திருப்தியாக அமையும். பழைய கடன்களுக்கு வட்டிகளைச் செலுத்துவீர்கள். பெரிய கடன்கள் ஏதும் ஏற்படாது. செய்தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்ய நேரிடும். பெற்றோர் வழியில் சிறிது மருத்துவச் செலவுகளைச் சந்திக்கலாம். மற்றபடி உங்களின் உடல் ஆரோக்யம் சிறப்பாகவே இருக்கும். உங்கள் வேலைகளை சரியாகத் திட்டமிட்டு செய்வீர்கள். வருமானம் தரக்கூடிய பயணங்களை மட்டுமே மேற்கொள்வீர்கள்.

அதேசமயம் மன அழுத்தம் ஏற்படும். எந்த அனாவசியப் பிரச்னைகளிலும் சிக்கிக் கொள்ள வேண்டாம். வழக்கு விவகாரங்கள் இந்தக் காலகட்டத்தில் முடிவுக்கு வராது. எவரிடமும் கடினமான வார்த்தைகளை உதிர்க்க வேண்டாம். குழப்பமான விஷயங்களிலிருந்து தள்ளி இருக்கவும். மேலும் ஸ்பெகுலேஷன் துறைகளிலும் அதிகமாக ஈடுபட வேண்டாம். மற்றபடி உங்கள் தேவைகளை எப்பாடுபட்டாவது பூர்த்தி செய்துவிடுவீர்கள்.

செலவுகளை ஈடுகட்டும் வகையில் வருமானம் வந்துகொண்டிருக்கும்.  அலைச்சலும், டென்ஷனும் கட்டுக்குள் இருக்கும். உங்கள் கடமைகளை முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.

சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். பழைய முதலீடுகளில் வருமானம் அதிகரிக்கும். உங்கள் பேச்சில் நிதானமும், பொறுமையும் இருக்கும். உங்களின் எண்ணங்கள் கச்சிதமாக செயல்வடிவம் பெறும்.

உற்றார், உறவினர்கள் உங்களிடம் சுமுகமாகப் பழகுவார்கள். உடல் உபாதைகள் பெரிதாக ஏற்படாது. தாயின்  பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும்.

உத்யோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரித்தாலும் உங்களின் வேலைகளை செவ்வனே செய்து முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு நேசக்கரம் நீட்டுவார்கள். பயணங்களால் அனுகூலமான திருப்பங்கள் ஏற்படாது. என்றாலும் கொடுக்கப்பட்ட வேலைகள் நன்றாகவே முடிவடையும். அலுவலகத்தில் உங்கள் கெளரவத்திற்கு எந்தக் குறையும் ஏற்படாது.

வியாபரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மனதில் குதூகலம் நிறையும். புதிய முதலீடுகளால் பயன் பெறுவீர்கள்.  கூட்டாளிகள் உங்களிடம் சுமுகமாக நடந்துகொள்வார்கள். உங்களின் பேச்சுக்கு நல்ல மதிப்பு கிடைக்கும்.

விவசாயிகள் விளை பொருட்களால் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். நீர்ப்பாசன வசதிகளை மேற்கொள்ள எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கும். புதிய குத்தகைகள் உங்களை நாடி வந்தாலும் அவற்றைத் தவிர்க்கவும். வயல், வரப்பு சண்டைகளில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

அரசியல்வாதிகள் பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். இதனால் புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். எதிரிகளால் தொல்லைகள் ஏற்படாது.

கலைத்துறையினர் விழிப்புடன் செயல்பட்டு ஒப்பந்தங்களை நிறைவேற்றுவீர்கள். தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றைச் செய்து உடலையும் மனதையும் சிறப்பாக வைத்துக் கொள்வீர்கள். சக கலைஞர்களை பக்குவமாக சமாளிக்கவும்.

பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையைக் காண்பீர்கள். பெற்றோரின் ஆதரவினால் தனலாபம் அடைவீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். பெற்றோர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.  உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள். திட்டமிட்டு பதற்றப்படாமல் படித்து வெற்றி காண்பீர்கள். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.


மூலம்: சுபகாரிய விஷயங்கள் தொய்வு இல்லாமல் நடக்கும். வேலை இழந்தவர்கள் மீண்டும் பணியில் சேர பொன்னான காலம் வாய்க்கும். 

பூராடம்: மேலிடத்தில் உள்ள அதிகாரிகள் உங்களுக்கு அனுசரனையாக நடந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடத்தில் உள்ள பிரச்சனைகளை நிதானமான அணுகுமுறையுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். 

உத்திராடம் - 1: தொழில்துறையாளர்களுக்கு நன்றாக இருக்கும். ஊழியர்கள் அமைதியாகப் போவார்கள். பேங்க் பணப் பரிமாற்ற முறையில் தங்குதடையின்றி நடைபெறும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். 


பரிகாரம் : வியாழன்தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று ஸ்ரீகுருபகவானை வணங்கி வரவும். தினமும் முன்னோர்களை வணங்கவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி காலை சிவபுராணம் படிக்கவும். தேவாரம் தெரிந்தவர்கள் அதனை பாராயணம் செய்யவும். 
மலர் பரிகாரம்: வியாழகிழமைதோறும் வினாயகருக்கு அருகம்புல்லை அணிவித்து  வழிபட்டு வர உங்கள் பொருளாதார நிலைமை படிப்படியாக  மூன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வள்ர்பிறை: திங்கள், புதன், வியாழன் தேய்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி
------------------------------------------------------------------------------
மகரம்:

எதிலும் போராட்ட குணத்துடன் ஈடுபட்டு வெற்றிகளைக் குவிக்கும் மகர ராசி அன்பர்களே நீங்கள் தன்னம்பிக்கை மிக்கவர்கள். கடுமையான உழைப்பின்  மூலம் அனைத்து காரியங்களிலும் வாகை சூடுவீர்கள். உங்கள் மனசாட்சிக்கு விரோதமான க்காரியங்களை செய்ய மாட்டீர்கள்.


உங்களின் வாழ்க்கை வசதிகள் உயரும். சிலர் வசதியான வீடுகளுக்கு மாறுவார்கள். திருமணம் தடைபட்டவர்களுக்கு திருமணம் நடந்தேறும். குழந்தை செல்வம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். நண்பர்கள், கூட்டாளிகளுடன் ஏற்பட்ட பகை நீங்கும்.

நடக்காமல் தள்ளி வைத்திருந்த விஷயங்கள் சிறப்பாக நடந்தேறும். போட்டிகளை தைரியமாக எதிர்கொள்வீர்கள். புதிய வருமானம் தரும் தொழிலில் ஈடுபடுவீர்கள். புதிய வீடு கட்ட அஸ்திவாரம் போடுவீர்கள். வருமானம் குறைவாக இருந்த தொழில்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். உற்றார், உறவினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வம்பு, வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்புகள் கிடைக்கும். சமுதாயத்தில் உயர்ந்தவர்களின் நட்பால் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். உங்களுக்கு நன்மைகள் செய்யும் வகையில் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.  உங்கள் எண்ணங்கள் அனைத்தும் தடைகள் இல்லாமல் சுலபமாக நிறைவேறும்.

இந்தக் காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டகரமான திருப்புமுனைகள் உண்டாகி புதிய பாதையில் பயணிப்பீர்கள்.

புதிய ஆடை, அணிகலன்களை வாங்குவீர்கள். பொன், வெள்ளி போன்ற விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சொகுசு வாகனங்களில் பயணிப்பீர்கள். பல வழிகளில் வருமானம் கிடைத்து உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.

உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எவரையும் சாராமல் தனித்து காரியங்களைச் செய்து சாதனை புரிவீர்கள். யோகா, ப்ராணாயாமம் செய்து மன அமைதி பெறுவீர்கள். விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். களவு போயிருந்த பொருட்கள் மீண்டும் உங்களின் கை வந்து சேரும். காரியங்களில் பிடிப்பு ஏற்படும்.

மெதுவாக நடந்துகொண்டிருந்த காரியங்கள் விரைவாக முடியும். தனித்து உங்கள் எண்ணப்படி செயல்படுவீர்கள். உங்கள் செயலில் சுறுசுறுப்பு அதிகரிக்கும். மற்றபடி ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

உத்யோகஸ்தர்களுக்கு நெருக்கடி கொடுத்து வந்த மேலதிகாரிகள் இடம் மாறிச் செல்வார்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு ஊதிய உயர்வுடன் இடமாற்றம் கிடைக்கும். அலுவலகத்தில் கடன் பெறுவீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். புதிய அனுபவங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.

வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் எந்தக் குறைவும் ஏற்படாது. கூட்டாளிகளுடன் சேர்ந்து புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். தேவைக்கேற்ற சரக்குகளை வாங்கி விற்பனை செய்வீர்கள். சந்தையில் போட்டிகளை சாதுர்யமாக சமாளிப்பீர்கள்.

விவசாயிகள் நல்ல விளைச்சலைக் காண்பீர்கள். பூமியால் லாபம் உண்டாகும். புதிய குத்தகைகளை நாடிச் செல்வீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை  நடத்தி மகிழ்வீர்கள். வங்கிக் கடன்கள் மானியத்துடன் கிடைக்கும். ஆனாலும் கால்நடைகளுக்கு கூடுதலாக செலவ செய்ய நேரிடும். புழு பூச்சிகளால் பாதிப்பு ஏற்படாது.

அரசியல்வாதிகள் அனைவரையும் அனுசரித்து நடந்துகொள்வீர்கள். கட்சி மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழுந்து உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். அரசு அதிகாரிகள் உங்கள் சொல் கேட்டு நடப்பார்கள். கட்சியில் உங்கள் செல்வாக்கு உயரும். உங்களின் மறைமுக எதிரிகளை இனம் கண்டு ஒதுக்குவீர்கள்.

கலைத்துறையினருக்கு நன்மை தரும் திருப்பங்கள் உண்டாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சக கலைஞர்கள் நட்புடன் பழகுவார்கள்.  அவர்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர் மன்றங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். மற்றபடி சுறுசுறுப்புடன் காரியங்களில் ஈடுபடவும்.

பெண்மணிகள் கணவரிடம் பாசத்தோடு பழகுவீர்கள். இல்லத்தில் மகிழ்ச்சி நிறையும்.  ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். வீண் யோசனைகள் வேண்டாம்.

மாணவமணிகள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவும். இதனால் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கும்.  நண்பர்களிடம் வீட்டுக்கொடுத்துப் பழகவும்.

உத்திராடம் - 2, 3, 4: கலைத்துறையினருக்கு நற்பெயரும் கீர்த்தியும் வந்து சேரும். பொருளாதார வசதிகளும் பெருகிடவும் வாய்ப்பான நாளிது. சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கவும் பாக்கியம் ஏற்படும். 

திருவோணம்: தடைபட்டிருந்த அனைத்து காரியங்களும் அடுத்தடுத்து நடைபெறப் போகிறது. வெள்ளை உள்ளத்துடன் உலவும் உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் நடக்கும். 

அவிட்டம் - 1, 2: சுற்றியிருக்கும் சோம்பேறிகளிடமிருந்து உங்களை நீங்கள் விலக்கிக் கொள்ளுங்கள்.  குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிரிகளின் தொல்லைகள் குறையும். 


பரிகாரம் : சனிதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று ஸ்ரீபைரவரை வணங்கி வரவும். முடிந்தால் மிளகு விளக்கு போடவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி காலபைரவாஷ்டகம் பாராயணம் செய்யவும். 
மலர் பரிகாரம்: சனிக்கிழமைதோறும் பெருமாள் கோவிலில் இருக்கும் தாயாருக்கு மல்லிகைப் பூவை அர்ப்பணித்து 3 முறை வலம் வரவும். உங்களுக்கு  பொன்னான காலம் கனிந்து வரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வள்ர்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி தேய்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி
------------------------------------------------------------------------------

கும்பம்:
கடுமையான சூழ்நிலைகளைக் கூட சமயோசிதமாக கையாண்டு மற்றவர்களை ஆச்சர்யத்துடன் பார்க்க வைக்கும் கும்ப ராசி வாசகர்களே நீங்கள் புது  தொழில்நுட்பங்களை கற்பதில் ஆர்வம் உடையவர்கள். எதிலும் போட்டிகள் இருந்தாலும் பொறாமை கொள்ள மாட்டீர்கள். பொறுப்புகளை சரியாக  நிறைவேற்றுவீர்கள்.

பொருளாதாரம் சீராக இருந்தாலும் முக்கிய செலவுகளுக்கு சிரமப்படுவீர்கள்.  வெளியில் கொடுத்திருந்த பணம் மீண்டும் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். அதனால் அனைத்து விஷயங்களிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். நண்பர்கள் உங்களைப் புரிந்துகொள்ளாமல் கோபப்படுவார்கள். குடும்பத்தில் சிறு சஞ்சலங்களும் குழப்பங்களும் ஏற்படும். மற்றபடி உடல் ஆரோக்யத்தில் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. என்றாலும் உணவு விஷயங்களில் கவனமாக இருக்கவும்.  வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகளை உடனடியாக கவனிக்கவும். சகோதர சகோதரிகளிடம் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். விட்டுக்கொடுத்து நடந்துகொண்டு அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக்கொள்ளவும்.

செய்தொழிலில் இருந்த இடையூறுகளும் தடங்கல்களும் நீங்கும்.  பொருளாதாரத்தில் அபிவிருத்தியைக் காண்பீர்கள். சமுதாயத்தில் உங்களின் பெயரும், புகழும் உயரும். இதனால் சில பாராட்டுகளையும் விருதுகளையும் பெறுவீர்கள். கூட்டாளிகளுக்காக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதிலிருந்த பயம் நீங்கும்.

எதிர்காலத்திற்காக நீங்கள் தீட்டும் திட்டங்கள் வெற்றி பெறும். உங்களைத் தனிமைப்படுத்திய உறவினர்கள் மறுபடியும் வந்து இணைவார்கள். ஆனாலும் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டிய காலகட்டம் இது. சிலருக்கு திடீரென்று நெடுந்தூரப் பயணங்களைச் செய்ய நேரிடும்.

எதிர்பாராத இடங்களிலிருந்து உதவிகளைப் பெறுவீர்கள். உங்களின் மனத்தாங்கல்களை ஆத் ம நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வீர்கள். அசையும், அசையாச் சொத்துக்களை வாங்குவீர்கள். உடல் ஆரோக்யம் சீராகும். மற்றபடி எவருக்கும் இந்த ஆண்டு வாக்கு கொடுப்பதோ முன் ஜாமீன் போடுவதோ கூடாது.

உத்யோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் சற்று தாமதமாகவே பரிசீலிப்பார்கள். இதனால் கோபமடையாமல் பொறுமை காக்கவும். முடிவு உங்களுக்கு சாதகமாகவே அமையும். மற்றபடி உங்கள் திட்டங்களை நன்றாக முடிப்பதில் கவனமாக இருப்பீர்கள். அலுவலக ரீதியான பயணங்களில்  உடனடியாக நன்மைகளை எதிர்பார்க்க முடியாது.

வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் சிறப்பாக முடிந்தாலும் பெரிய லாபம் என்று எதுவும் ஏற்படாது. அதனால் கூட்டாளிகளுடன் சேராமல் உங்கள் காரியங்களை தனித்துச் செய்யவும். புதியவர்களுக்கு கடன் கொடுக்க வேண்டாம். கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக்கொள்ளவும்.  அரசு வழிகளில் கெடுபிடிகள் ஏற்படலாம்.

விவசாயிகளின் திறமைகள் வீண் போகாது. விளைச்சலில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். புழு, பூச்சிகளால் பயிர்களுக்கு சில பாதிப்புகள் ஏற்படும். மற்றபடி சக விவசாயிகளுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள்.  உங்களுக்குக் கடன் கொடுத்தவர்களால் பெரிய தொல்லைகள் ஏற்படாது. இந்தக் காலகட்டத்தில் உபரி வருமானத்தில் கவனம் செலுத்துங்கள்.

அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் ஆதரவு கிடைக்கும். கட்சி மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது எச்சரிக்கை தேவை. மற்றவர்களுக்கு முன் ஜாமீன் கொடுக்க வேண்டாம். மற்றபடி உங்களின் கொள்கைகளில் உறுதியாக இருப்பீர்கள்.

கலைத்துறையினர் தேவையான வருமானத்தைக் காண்பீர்கள். வெளியூரில் நிகழ்ச்சிகளை நடத்திப் புகழ் பெறுவீர்கள். உங்களின் செயல்களில் சிறு தடுமாற்றங்கள் ஏற்படலாம். சிறிய தடைகளுக்குப் பிறகே புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள்.

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். ஆனாலும் குடும்பத்தில் உங்களின் பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செயல்படுவீர்கள். குடும்ப வருமானத்தைப் பெருக்க சுய தொழில்களில் ஈடுபடுவீர்கள்.

மாணவமணிகள் நன்கு உழைத்துப் படித்தால்தான் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற முடியும். உங்களின் உடல்நலம் சீராகவே இருக்கும். வெளிவிளையாட்டுகளிலும் உடற்பயிற்சியிலும் தவறாமல் ஈடுபடவும்.


அவிட்டம் - 3, 4: உங்கள் பக்கமுள்ள நியாயம் ஓங்கும். பிள்ளைகள் வழியில் மட்டற்ற மகிழ்ச்சிகள் வந்து சேரும். திருமண பாக்கியம் கைகூடி வரும். 

ஸதயம்: நெடுங்காலமாக சந்தான பாக்கியம் கிட்டாதவர்களுக்கு வரப்பிரசாதம் கிடைக்கும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். விட்டுக் கொடுத்துப் போவார்கள். தந்தையாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். 

பூரட்டாதி - 1, 2, 3: குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். வருங்கால முன்னேற்றத்தைக் கருதி சில முயற்சிகளை எடுப்பீர்கள். அந்த முயற்சிகள் யாவும் வெற்றிகளைத் தரும். பயணங்களால் பொருள்சேர்க்கை ஏற்படும். 


பரிகாரம் : சனிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும். 
சொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி மாலை வேளையில் ஸ்ரீலலிதா ஸகஸ்ரநாமம் பாராயணம் செய்யவும். 
மலர் பரிகாரம்: சனிக்கிழமைதோறும் வினாயகருக்கு அருகம்புல்லை அணிவித்து  வழிபட்டு வர உங்கள் பொருளாதார நிலைமை படிப்படியாக  மூன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: வியாழன், வெள்ளி; தேய்பிறை: வியாழன், வெள்ளி;
------------------------------------------------------------------------------
மீனம்:
கடும்சொற்களால் உங்களை காயப்படுத்துபவர்களைக் கூட அரவனைக்கும் மீன ராசி அன்பர்களே எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் உங்கள் பொறுப்புகளை  நீங்கள் தட்டிக் கழிக்க மாட்டீர்கள். முடிந்தவரை அனைவருக்கும் நன்மைகள் செய்வதற்கு பாடுபடுவீர்கள். 

உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிக் கொடி நாட்டுவீர்கள்.  எதிர்பார்த்த புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். பிள்ளைகளின் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களின் அறிவாற்றலால் அனைத்து விஷயங்களிலும் முத்திரை பதிப்பீர்கள். குடும்பத்தில் குதூகலம் நிறையும். இல்லத்தில் திருமணம், புத்திர பாக்கியம் ஆகிய சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். குடும்பத்தாருடன் ஆன்மிக சுற்றுலா சென்று வருவீர்கள். உங்களின் பெயரும், புகழும் உயரும். உங்களின் செயலாற்றும் திறமையால் உங்களைச் சுற்றியுள்ளவர்களை கவர்வீர்கள்.

வம்பு, வழக்குகளில் எதிர்பார்த்த திருப்பங்கள் ஏற்பட்டு வருமானம் வரத் தொடங்கும். பல வழிகளிலும் வருமானத்தைக் காண்பீர்கள். ஸ்பெகுலேஷன் துறைகளின் மூலம் சில அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் காரியங்கள் அனைத்தும் தடங்கலின்றி நிறைவேறும்.

சமுதாயத்தில் பெரியோர்களின் நட்பும், ஆசியும் உங்களுக்கு உந்து சக்தியாக அமையும். உங்கள் காரியங்கள் அனைத்திலும் அதிக விழிப்புடன் நடந்துகொள்வீர்கள். எதிரிகள் உங்களைக் கண்டு அஞ்சுவார்கள். வெளிநாடு செல்ல விசா எதிர்பார்த்திருந்தவர்களுக்கு இந்த ஆண்டு விசா கிடைத்து குடும்பத்துடன் வெளிநாட்டில் குடியேறுவார்கள்.

புதிய வாகனம், ஆடை அணிகலன்கள் சேரும். மூத்த சகோதர சகோதரர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வீர்கள். அனாவசிய செலவுகள் ஏற்படாது. சேமிப்பு இரட்டிப்பாகும்.

வாழ்க்கையில் முன்னேற தக்க தருணங்கள் வரும். அவற்றை விட்டுவிடாமல் பிடித்துக்கொள்வீர்கள்.  பூர்வீகச் சொத்துக்களால் லாபம் அடைவீர்கள். தனித்து இயங்கிய நீங்கள் மற்றவர்களால் சூழப்பட்டு மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

உத்யோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் உடனுக்குடன் பரிசீலிப்பார்கள். அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். சக ஊழியர்களும் நட்பு பாராட்டுவார்கள்.  பணவரவிற்கு சிறு தடைகள் ஏற்பட்டாலும் உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெறுவதில் எந்தத் தடையும் இருக்காது. விரும்பிய இடமாற்றங்களையும் பெறுவீர்கள். உங்களின் வேலைத் திறன் பளிச்சிடும்.

வியாபாரிகளின் திட்டங்கள் நல்ல லாபத்தைக் கொடுக்கும். கொடுக்கல், வாங்கலில் சிறப்புகள் உண்டாகும். விற்பனைப் பிரதிநிதிகளைப் பல இடங்களுக்கும் அனுப்பி உங்களின் பொருட்களை விற்பனை செய்ய முற்படுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கினாலும் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே முடிவு செய்யுங்கள்.

விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருந்தாலும் கொள்முதல் விற்பனை சீராக இருக்காது. சிலருக்கு பழைய கடன்கள் வசூலாகும். குத்தகை பாக்கிகளை திருப்பிச் செலுத்துவீர்கள். போட்டிகளையும், வயல், வரப்பு சண்டைகளையும் சந்திக்க நேரிடும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். எதிர்கட்சியினரால் கஷ்டங்கள் ஏற்படாது என்றாலும் கவனமாக இருக்கவும். கட்சித் தலைமையிடம் நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். சச்சரவுகளில் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம்.

கலைத்துறையினருக்கு எதிர்பாராத வகையில் வெற்றிகள் கிடைக்கும். உங்கள் வேலைகளைக் குறித்த நேரத்திற்குள் முடித்துவிடுவீர்கள். உங்கள் திறமைகள் மக்களைக் கவரும் விதத்தில் அமையும். மற்றபடி வெளிவட்டாரங்களில் கவனமாகப் பழகவும். சக கலைஞர்களிடம் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம்.

பெண்மணிகள் கணவரிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம்.

மாணவமணிகள் அதிகம் உழைத்துப் படிப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். சிலருக்கு வெளியூர் சென்று கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கும்.

பூரட்டாதி - 4: சகோதரத்தின் வெளிநாடு பயணம் இனிதே நடைபெறும். சுயசார்பும் தன்னிறைவும் பெறுவீர்கள். தைரியம் பளிச்சிடும். 

உத்திரட்டாதி: புதிய வழக்குகளை சந்திக்க நேரிடலாம். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை நீங்கும். உடலில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு மறையும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். 

ரேவதி: குடும்பத்தில் சிறு சிறு சிக்கல்கள் வந்து வந்து போகும். சிறைத்துறையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பயணம் தொடர்பான தொழில்களில் லாபம் கிடைக்கும். கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும்.

பரிகாரம் : வியாழன்தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று நவகிரகங்களை வலம் வந்து வணங்கி வரவும். தினமும் முன்னோர்களை  வணங்கவும். காக்கைக்கு அன்னமிடவும். ஏழை எளியோர்க்கு உதவவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி கோளறு பதிகம் பாராயணம் செய்யவும். 
மலர் பரிகாரம்: வியாழகிழமைதோறும் உங்களால் முடிந்த அளவு அருகம்புல்லை மாலையாகக் கட்டி விணாயகருக்கு சாத்தவும். முடிந்தவர்கள்  தேங்காய் மாலை சாத்தலாம். 

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: புதன், வியாழன், வெள்ளி; தேய்பிறை: புதன், வியாழன்

***************************************************************************************************************************************************************************************************************************************

Trending News

Latest News

You May Like