பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணித்த ஆவணி மாத பலன்கள் மற்றும் பரிகாரங்கள்..!!

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணித்த ஆவணி மாத பலன்கள் மற்றும் பரிகாரங்கள்..!!

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணித்த ஆவணி மாத பலன்கள் மற்றும் பரிகாரங்கள்..!!
X

1

மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன், செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது, சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் சனி () - லாப ஸ்தானத்தில் குரு () என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:

17-08-2021 அன்று சூரிய பகவான் சுக ஸ்தானத்திலிருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

23-08-2021 அன்று புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்திலிருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

07-09-2021 அன்று சுக்ர பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திலிருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

07-09-2021 அன்று செவ்வாய் பகவான் பஞ்சம ஸ்தானத்திலிருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

14-09-2021 அன்று குரு பகவான் லாப ஸ்தானத்திலிருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

உழைப்பவரே உயர்ந்தவர் என்பதற்கேற்ப அனைவராலும் விரும்பப்படும் மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் நல்ல பணப்புழக்கமும், பொருளாதார ஏற்றமும் இருக்கும். காரியத் தடைகள் நீங்கி, அனுகூலம் பிறக்கும். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சந்தித்து முறியடிக்கும் வல்லமையைப் பெறலாம். எந்த வேலையிலும் உங்கள் தனித்தன்மை வெளிப்படும்.

குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். தூரத்தில் இருக்கும் உறவினரால் நன்மை ஏற்படும். கணவன், மனைவியரிடையே அவ்வப்போது பிரச்சனைகள் வந்து போகும். மதிப்பு மரியாதை சுமாராகவே இருக்கும்.

தொழிலதிபர்கள் சொந்தத் தொழில் புரிவோர் சிறிது சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். எதிர்காலத்திற்கு தேவையான முறையான சேமிப்புகளுக்கான ஏற்பாடுகளை செய்வீர்கள்.உத்தியோகஸ்தர்கள் உடன் பண்புரிவோரிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். சிலர் எதிர்பாராத இட மாற்றத்தை சந்திக்கலாம்.

பெண்கள் சுபச் செலவு உங்களால் ஏற்படும். பெண்கள் குடும்ப ஒற்றுமைக்காக விட்டுக் கொடுத்து போக வேண்டியிருக்கும். பொதுநல சேவை செய்ய ஆர்வம் அதிகரிக்கும்.

கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அதனால் பொருளாதாரரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். பிறமொழி, இனத்தவரின் ஆதரவு, ஒத்துழைப்பு உங்கள் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும்.

அரசியல்துறையினருக்கு பண விஷயம் திருப்திகரமாக இருக்கும். நல்லோர் ஆதரவு கிடைக்கப் பெற்று நற் காரியங்களில் ஈடுபட்டு அதனால் சில காரியங்கள் வெற்றி அடையலாம். சக நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது மட்டுமல்லாமல் அனுசரனையாக இருப்பதும் தான் உங்களுடைய வெற்றிக்கு வடிகோலாக அமையும்.

மாணவர்கள் படிப்பில் தீவிர அக்கறை எடுக்க வேண்டும். கேட்பார் பேச்சைக் கேட்டு விளையாட்டுத் தனமாக இருத்தல் கூடாது.

அஸ்வினி:

இந்த மாதம் பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். வாழ்க்கைவளம் முன்னேறும். தைரியமாகவும் அதே வேளையில் தெய்வ அனுகூலத்துடனும் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். சகோதர சகோதரிகளிடம் நெருக்கம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தினில் சிற்சில பிரச்சனைகள் வரலாம். உடன் வேலை செய்வோரின் ஆதரவால் அதனைச் சமாளிப்பீர்கள்.

பரணி:

இந்த மாதம் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். ஆனாலும் வீட்டில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் தலைதூக்கலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவதால் நிலைமையைச் சமாளிக்கலாம். உறவினர் வகையிலும் கூட ஒருவருடன் மனஸ்தாபம் உருவாகலாம்.

கார்த்திகை 1ம் பாதம்:

இந்த மாதம் அதீத எதிர்பார்ப்புகள் வேண்டாம். சிலருக்கு தூரத்திலிருந்து விரும்பத்தகாத செய்திகள் வரலாம். தீவிர முயற்சிகளின் பேரில் சிலருக்கு சுபமான நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். உழைப்புக்கு ஏற்ற பிரதிபலன் கிடைக்காமல் இருந்தவர்களுக்கு தற்போதைய காலகட்டத்தில் நன்மை நடக்கும்.

பரிகாரம்: தினமும் அருகிலுள்ள முருகன் கோவிலுக்கு சென்று வர பிரச்சினைகள் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 17; செப் 12, 13, 14

அதிர்ஷ்ட தினங்கள்: செப் 6, 7

2

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

கிரகநிலை:

ராசியில் ராஹூ - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன், செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் கேது, சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி () - தொழில் ஸ்தானத்தில் குரு () என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:

17-08-2021 அன்று சூரிய பகவான் தைரிய வீரிய ஸ்தானத்திலிருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

23-08-2021 அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்திலிருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

07-09-2021 அன்று சுக்ர பகவான் பஞ்சம ஸ்தானத்திலிருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

07-09-2021 அன்று செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்திலிருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

14-09-2021 அன்று குரு பகவான் தொழில் ஸ்தானத்திலிருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

எருது துரிது என்பதற்கேற்ப எதிலும் அவசரகதியில் காரியத்தை கச்சிதமாக முடிக்கும் ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் இதுவரை இருந்து வந்த பலவிதமான பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். பின் தங்கிய நிலையிருப்பவர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வார்கள். எடுத்த காரியம் அனுகூலத்தை கொடுக்கும்.

குடும்பத்தில் தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. சிலருக்கு நல்ல பணப்புழக்கம் ஏற்படலாம். உறவினர்கள் அன்னியோன்யமாக இருப்பார்கள். குடும்பத்தில் கண்வன், மனைவியருக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் சுமூகமாக மறையும். பிரிந்திருந்த உறவுகள் ஒன்று சேரும்.

தொழிலதிபர்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். நண்பர்கள், உங்களை நம்பிக் காத்திருந்து உதவிகளைப் பெற்றுக் கொள்வார்கள். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். சற்று முயற்சி எடுத்தால் பதவி உயர்வு உங்களை வந்து சேரும்.

பெண்கள் பொருளாதாரம் எதிர்பார்த்தபடி இருக்காது. குடும்பத்தில் உங்களுடைய கோரிக்கைகள் நிராகரிக்கப்படலாம். அதனால் மன வேதனை தான் ஏற்பட்டு மறையும். பிள்ளைகளால் தொந்தரவு ஏற்படும்.

கலைத்துறையினருக்குப் புதிய ஒப்பந்தங்கள் சற்று தாமதமாக வந்தாலும் முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும். கிடைக்க வேண்டிய இடத்திலிருந்து பணம் கிடைக்காது. உடனிருப்போரால் பிரச்சனைகள் வரலாம்.

அரசியல்துறையினர் சீரான பலனை எதிர்பார்க்கலாம். மூத்த அரசியலமைப்பாளர்கள் உங்களுடைய பிரச்சனைகளை காது கொடுத்து கேட்டு முடித்து வைப்பர். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி ஒன்று உங்களை இன்பக் கடலில் ஆழ்த்தும்.

மாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பர். ஆசிரியர்களிடம் பாராட்டுப் பெற்று சக மாணவர்களுடன் போட்டியிடுவீர்கள்.

கார்த்திகை 2, 3, 4 பாதம்:

இந்த மாதம் சிலருக்கு இடமாற்றம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் நடக்கும். உடன்பணிபுரிவோரால் அனுகூலம் உண்டு. உங்கள் பொறுப்புகளை வேறு நபரிடம் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். அலைச்சல் இருக்கும். தொழில் நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். கூட்டு வியாபாரத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

ரோகிணி:

இந்த மாதம் எதிலும் முதலீடு செய்வதற்கு முன் குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்து கொள்ளவும்.இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ்ந்திட முயற்சியுங்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நீண்டதூர தகவல்கள் சாதகமானதாக இருக்கும். உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். கலைத்துறையினருக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

மிருக சிரீஷம் 1, 2, பாதம்:

இந்த மாதம் உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகள், சமூக சேவகர்கள் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. இடம் விட்டு இடம் பெயரும் சூழ்நிலை உருவாகும். உங்களின் தரத்தை விட தீயோரோடு சகவாசத்தை குறைக்க வேண்டும்.

பரிகாரம்: மகா லட்சுமியை வழிபட்டு வாருங்கள் வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 18, 19; செப் 15, 16

அதிர்ஷ்ட தினங்கள்: செப் 8, 9

3

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)

கிரகநிலை:

தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன், செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது, சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் சனி () - பாக்கிய ஸ்தானத்தில் குரு () - அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:

17-08-2021 அன்று சூரிய பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலிருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

23-08-2021 அன்று புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்திலிருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

07-09-2021 அன்று சுக்ர பகவான் சுக ஸ்தானத்திலிருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

07-09-2021 அன்று செவ்வாய் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்திலிருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

14-09-2021 அன்று குரு பகவான் பாக்கிய ஸ்தானத்திலிருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

சாமர்த்திய மிதுனம் என்பதற்கேற்ப எந்த செயலிலும் தங்களது நல்ல சாதுர்ய குணத்தை வெளிப்படுத்தும் குணம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் நற்சுகமும் பொருளாதார மேம்பாடும் உண்டாகும். நன்மைகள் கிடைக்கும். மதிப்பு, மரியாதை கூடி செல்வாக்கு அதிகரிக்கும். திருமண பாக்கியம் கை கூடும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும். குழந்தை பாக்கியம் கிட்டும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். கணவன், மனைவியிடையே அன்பும், பாசமும் பெருகும். ஏதேனும் ஒரு காரணத்தால் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேருவார்கள்.

தொழில் செய்வோருக்கு கடந்த காலத்தை விட அதிக வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். லாபம் கூடும். எதிரிகளால் இருந்து வந்த தொல்லை குறையும். அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும். முன்யோசனையுடன் திட்டமிடல் அவசியம். உத்தியோகஸ்தர்கள் உத்தியோகம் ஒப்பந்தங்கள் நிறை வேறும். சிலருக்குப் பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

பெண்கள் குடும்பத்தில் நிதானமாக நடந்து கொள்ள வேண்டிய கால கட்டம். தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த பிணக்கு நிலை மறைந்து உறவு பிரகாசிக்கும்.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களால் பொருளாதார லாபம் கிடைக்கும். எதிர்பார்த்திருந்த வெற்றி வாய்ப்பு கிடைக்கும். உங்கள் திறமைக்கு மற்றவர்கள் தலை வணங்குவார்கள்.

அரசியல்துறையினர் சமூக நல சேவை புரிபவர்கள் சிறப்படைய மிகுந்த முயற்சி தேவை. அரசு காரியங்கள் அனைத்தும் அனுகூலமாக இருந்தாலும் எதையும் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது நல்லது.

மாணவர்களுக்கு அனுகூலமான போக்கே காணப்படுகிறது. எதிலும் வெற்றி காண்பீர்கள். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். தீவிர முயற்சியின் பேரிலேயே எல்லாவித உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:

இந்த மாதம் தெய்வ அனுகூலத்தால் முன்னேற்றம் வந்து சேரும். உறவினர்கள் வகையில் வீண்மனக்கசப்பு வரலாம். வெளியூர் பயணம் ஏற்படும். அதீத உழைப்பின் மூலமே அனைத்து நற்பலன்களையும் பெற முடியும். இருந்து வந்த தடைகள் அகலும். உங்கள் முயற்சிகளில் வெற்றியும், பொருளாதார வளமும் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

திருவாதிரை:

இந்த மாதம் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் பெருகும். உறவினர்கள் வகையில் நிலவி வந்த பிரச்சனைகள் அனைத்தும் அடியோடு மறையும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பெண்களால் அனுகூலம் கிடைக்கும். மிகவும் உதவிகரமாக இருப்பர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு மனை வாங்கும் யோகம் சிலருக்கு கூடி வரும்.

புனர்பூசம் 1, 2, 3 பாதம்:

இந்த மாதம் புதிய சொத்துக்கள் வாங்க நேரம் கைகூடி வரும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். ஆனால் அதற்காக சிலர் கடன் வாங்க வேண்டி வரலாம். உடல் நலம் சீராக இருக்கும். பித்தம், மயக்கம் தொடர்பான உபாதைகள் வரலாம். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு முன்னேற்றம் காண்பர். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை தங்கு தடையின்றி கிடைக்கும்.

பரிகாரம்: புதன் கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று வர பொருளாதாரம் உயரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 20, 21, 22

அதிர்ஷ்ட தினங்கள்: செப் 10, 11

4

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன், செவ்வாய் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் கேது, சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் சனி () - அஷ்டம ஸ்தானத்தில் குரு () - லாப ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:

17-08-2021 அன்று சூரிய பகவான் ராசியிலிருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

23-08-2021 அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலிருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

07-09-2021 அன்று சுக்ர பகவான் தைரிய வீரிய ஸ்தானத்திலிருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

07-09-2021 அன்று செவ்வாய் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலிருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

14-09-2021 அன்று குரு பகவான் அஷ்டம ஸ்தானத்திலிருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

உணர்ச்சிக்கடகம் எனபதற்கேற்ப அனைவரது உணர்ச்சிகளையும் மதிக்கும் சிந்தனையில் இருக்கும் கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் நன்மைகள் ஏராளமாக நடக்கக் கூடிய கால கட்டம். தேவைகள் பூர்த்தியாகி மதிப்பும் மரியாதையும், அந்தஸ்தும் உருவாகும். வெகு நாட்களாக தடைப்பட்டு வந்த திருமணத்திற்கு, புதிய வீடு கட்டுவதற்கான வேலைகளையும், இப்பொழுது துவங்கலாம்.

குடும்பத்தில் தாய்வழி உறவினர்களுடன் சின்ன கருத்து மோதல்கள் வரலாம். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். அமைதியாக விட்டுக் கொடுத்து போவதினால் மட்டுமே ஆதாயம் கிடைக்கும். நீங்கள் நல்வழியில் செல்ல பெரியோர் ஒருவருடன் ஒத்துழைப்பு கிடைக்கும்.

தொழில்புரிவோருக்கு இருந்து வந்த மந்த நிலை மறையும். படிப்படியாக லாபம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வேலைகளுக்கு அரசாங்க அனுகூலம் கிடைக்கும். சிறு தொழில் நடத்துபவர்களுக்கு அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அலைச்சலும், வேலைப்பளுவும் ஓரளவு இருக்கத்தான் செய்யும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கும்.

பெண்கள் நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற சிறிது போராட வேண்டி வரலாம். தொழில் புரியும் பெண்கள் நல்ல ஆதாயத்தை எதிர்பார்க்கலாம். சேமிப்புகள் அதிகரிக்கும்.

கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான சூழ்நிலை இருக்கும். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் கூட இப்பொழுது நல்ல முன்னேற்றத்தைக் காண முடியும்.

அரசியல்துறையினருக்கு மூத்த அறிஞர்களுடன் வாக்கு வாதம் ஏற்படலாம். அரசியல்வாதிகள் நீங்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு. தேவையில்லாத இடங்களில் வாக்கை கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம்.

மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தை அடையலாம். கடந்த சில நாட்களாக இருந்த மந்த நிலை அடியோடு மாறும். மருத்துவச் செலவு குறையும்.

புனர் பூசம் 4ம் பாதம்:

இந்த மாதம் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவுடன் இருப்பர். வேலையின்றி இருப்பவர்கள் வேலை கிடைக்கப் பெறலாம். வியாபாரிகளுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். அலைச்சல் இருக்கும். ஆனால் கடந்த காலத்தை விட கூடுதல் வருவாயைப் பெறலாம். புதிய வியாபாரம் தொடங்குவதற்கு முன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் ஆலோசனை செய்யவும்.

பூசம்:

இந்த மாதம் இருப்பதை சிறப்பாக நடத்துவதற்கு முயற்சி செய்யவும். அறிவைப் பயன்படுத்தி ஏற்றம் காணலாம். பெண்கள் உற்சாகமாக காணப்படுவர். கணவர் மற்றும் அண்டை அயலாரின் அன்பும் பாசமும் கிடைக்கும். பிள்ளை வளர்ப்பில் பெருமை அடைவீர்கள். கலைஞர்கள், புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவர். புகழ் பாராட்டு கிடைக்கும்.

ஆயில்யம்:

இந்த மாதம் மாணவர்கள் தொடர்ந்து சிறப்பான நிலையில் இருப்பர். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். பலருக்கு வெற்றி நிச்சயம். பொதுநல சேவகர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவியை அடையலாம். இறுக்கமான சூழ்நிலையிலும் சில நல்ல முன்னேற்றங்களைப் பெற போகிறீர்கள். வாகன மூலம் லாபம் வரும். மற்றவர்கள் பிரச்சனைகளில் வாதாடி வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீ ராகவேந்திரரை பூஜை செய்யுங்கள். கவலைகள் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 23, 24

அதிர்ஷ்ட தினங்கள்: ஆக 17; செப் 12, 13, 14

5

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

கிரகநிலை:

ராசியில் சூர்யன், புதன், செவ்வாய் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் கேது, சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி () - களத்திர ஸ்தானத்தில் குரு () - தொழில் ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:

17-08-2021 அன்று சூரிய பகவான் அயன சயன போக ஸ்தானத்திலிருந்து ராசிக்கு மாறுகிறார்.

23-08-2021 அன்று புதன் பகவான் ராசியிலிருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

07-09-2021 அன்று சுக்ர பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலிருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

07-09-2021 அன்று செவ்வாய் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

14-09-2021 அன்று குரு பகவான் களத்திர ஸ்தானத்திலிருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

சிம்மம் பெருமை என்பதற்கேற்ப எந்த காரியத்தைக் கொடுத்தாலும் அதில் பெருமை தேடித்தரும் சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் பிரச்சனைகளை முறியடிக்கும் வல்லமை உங்களை வந்து சேரும். மனதில் நிம்மதியும், ஆனந்தமும் ஏற்படும். உங்கள் முயற்சி அனைத்தும் வெற்றி பெறும். சந்தான பாக்கியம் கிடைப்பதற்கான உன்னதமான கால கட்டம். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடைபெறும்.

குடும்பத்தில் மனைவி வழியில் சிற்சில கருத்து வேறுபாடுகள் வரலாம். ஆனாலும் அது நொடிப் பொழுதில் சரியாகி விடும். ஆனால் உறவினர்கள் மத்தியில் தொடர்ந்து கருத்து வேறுபாடு வரலாம். பிள்ளைகளால் பெருமை காணலாம்.

தொழில் உன்னத நிலையை அடையும். புதிய தொழில் ஆரம்பித்தவர்களுக்கு பொன்னான காலகட்டமிது. வியாபாரிகளுக்கு உங்களுடைய வியாபாரம் சீராக நடக்கும். முதலீடுகளை எடுப்பதோடு மட்டுமல்லாமல் லாபத்தையும் அள்ளுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் நெருப்பு தொடர்பான வேலைகளில் இருப்பவர்களுக்கு மிகுந்த கவனம் தேவை. கோரிக்கைகள் நிறை வேறும். சக ஊழியர்கள் உதவிகள் செய்து அனுசரனையாக இருப்பார்கள்.

பெண்கள் வழக்கு, வியாஜ்ஜியங்களில் வெற்றி கிட்டும். வீட்டில் நிலவி வந்த கருத்து வேறுபாடு மறைந்து உறவுகள் நல்ல முறையில் இருக்கும். உடல் நலம் சிறப்படையும். சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு தேவை.

கலைத்துறையினருக்குப் பொன்னான காலமிது. சிறிது முயற்சி எடுத்தாலும் வாய்ப்புகள் வந்து குவியும். புதிய ஒப்பந்தங்களை துணிந்து ஏற்றுக் கொள்ளலாம். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும்.

அரசியல்துறையினர் அதிகமாக உழைத்து பாராட்டைப் பெறுவீர்கள். வரவு செலவு கணக்கில் இருந்து வந்த சந்தேகம் விலகும். உங்களின் மதிப்பு மிகுந்த ஒருவர் உங்களைச் சந்திக்க வருவார்.

மாணவர்கள் சிறிது சிரத்தை எடுத்தாலே பெரு வெற்றி பெறலாம். அனைத்திலும் நினைத்த மதிப்பெண்கள் கிடைக்கும். நண்பர்களின் பிரச்சனைகளை நீங்கள் தீர்த்து வைத்து பாராட்டைப் பெறுவீர்கள்.

மகம்:

இந்த மாதம் எதிர்பாராத செலவினங்கள் இருந்தாலும் நல்ல பணப்புழக்கமும், பொருளாதார ஏற்றமும் இருக்கும். பிள்ளைகளால் அனுகூலம் ஏற்படும். எந்த பிரச்சனையையும் சந்தித்து முறியடிக்கும் வல்லமையைப் பெறலாம். காரியத்தடைகள் நீங்கி அனுகூலம் பிறக்கும். மதிப்பு மரியாதை சுமாராகவே இருக்கும். வீண் வாதங்களைத் தவிர்க்கவும். பணவரத்து அதிகரிக்கும். பயணம் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள்.

பூரம்:

இந்த மாதம் குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். புதிய வீடு வாங்க வாய்ப்பு உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும் சிற்சில பிரச்சனைகள் வரத்தான் செய்யும். எனவே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். அதே போல் உறவினர் வகையிலும் அதிக நெருக்கம் வேண்டாம். புதிய நபர்கள் நட்பு உண்டாகும்.

உத்திரம் 1ம் பாதம்:

இந்த மாதம் சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். தூரத்தில் இருக்கும் உறவினரால் நன்மை ஏற்படும். உடல்நலத்தைப் பொறுத்தவரையில் பித்தம் மயக்கம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். மருத்துவச் செலவு வெகுவாகக் குறையும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். விரும்பியது கிடைக்க கூடுதல் முயற்சி தேவை.

பரிகாரம்: சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்து பூஜித்து வாருங்கள் பிரச்சினைகள் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 25, 26

அதிர்ஷ்ட தினங்கள்: ஆக 18, 19; செப் 15, 16

6

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்)

கிரகநிலை:

ராசியில் சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது, சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் சனி () - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு () - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், புதன், செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:

17-08-2021 அன்று சூரிய பகவான் லாப ஸ்தானத்திலிருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

23-08-2021 அன்று புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்திலிருந்து ராசிக்கு மாறுகிறார்.

07-09-2021 அன்று சுக்ர பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

07-09-2021 அன்று செவ்வாய் பகவான் அயன சயன போக ஸ்தானத்திலிருந்து ராசிக்கு மாறுகிறார்.

14-09-2021 அன்று குரு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திலிருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

கன்னி புத்தி என்பதற்கேற்ப எல்லாத் துறைகளிலும் ஆற்றல் பெற துடிக்கும் கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் நல்ல பொருளாதார வளமும் மேன்மையும் உண்டாகும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். நீண்ட நாட்களாக காத்திருந்தவர்களுக்கு நல்ல இனிப்பான செய்தி காத்திருக்கிறது.

குடும்பத்தில் வீடு, மனை விஷயத்தில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். உறவினர்களுக்கு விருந்து, விழாக்களுக்காக செலவு செய்வீர்கள். புதிய சொத்துகள் வாங்கலாம். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். மனைவி வழியே இருந்து வந்த கருத்து வேறுபாடு அடியோடு ஒழியும்.

தொழிலதிபர்கள் தொழில் நிமித்தமாக வெளியூர் செல்ல நேரிடலாம். சிலர் தூர தேச பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். வியாபாரிகளுக்கு செய்து வரும் தொழிலில் சிறப்பான பலன்களைக் காணலாம். உத்தியோகஸ்தர்கள் உத்தியோகம் பார்ப்பவர்கள் உன்னதமான நிலையை அடையலாம். பிள்ளைகளால் பெருமை அடையலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை இருக்கும்.

பெண்களுக்கு வீட்டிற்குத் தேவையான பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சிற்சில கசப்பூட்டும் சம்பவங்கள் நடந்தாலும் சில அனுகூலம் ஏற்படும். உடல்நலத்தில் சீரான முன்னேற்றம் ஏற்படும்.

கலைத்துறையினர் தங்கு தடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம். புகழ் பாராட்டு வந்து சேரும். பலர் மதிக்கத்தக்க வகையில் அந்தஸ்து உயரும். முற்போக்கான விஷயங்களில் மனம் செல்லும்.

அரசியல்துறையினர் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் வந்து சேரும். நற்பெயர் எடுப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைத்தே தீரும். ஆனால் யாரிடமும் பழகும் போதும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.

மாணவர்கள் நல்ல நிலைக்கு உயர்த்தப் படுவீர்கள். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். மனதில் இருந்து வந்த பயம் போவதற்கு தகுந்த பெரியோர்களிடம் ஆலோசனையும், பயிற்சிகளையும் கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள்.

உத்திரம் 2, 3, 4 பாதம்:

இந்த மாதம் வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. உடன் பணிபுரிவோரிடம் அனுசரனையாக நடந்து கொள்ளவும். சிலர் எதிர்பாராத இடமாற்றத்தை சந்திக்கலாம். சொந்தத் தொழில் புரிவோர் சிறிது சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். ஆனாலும் உழைப்புக்கேற்ற லாபம் கிடைக்கும். தொழில் நிமித்தமாக நீண்ட தூரம் பயணம் போக வேண்டி வரும்.

அஸ்தம்:

இந்த மாதம் எதிரிகள் வகையில் அசட்டையாக இருத்தல் கூடாது. புதிய முதலீடுகளின் போது ஆலோசனைகள் அவசியமாகிறது. பணவிஷயத்தில் தொடர்ந்து அக்கறை தேவை. எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. அடுத்தவர் கூறுவதை யோசித்து பார்த்து அதன் பிறகு அந்த காரியத்தில் ஈடுபடுவது நன்மை தரும். எல்லா நலன்களும் உண்டாகும்.

சித்திரை 1, 2, பாதம்:

இந்த மாதம் கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவை புரிவோருக்கு பண விஷயம் திருப்திகரமாக இருக்கும். ஆனால் எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் வாக்குவாதம் ஏற்படலாம். உடன்பிறந்த சகோதரர்கள் ஒன்றுசேர்வார்கள். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வந்து சேரும்.

பரிகாரம்: துளசி செடி வைத்து பூஜை செய்யுங்கள் எல்லா நன்மைகளும் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 27, 28, 29

அதிர்ஷ்ட தினங்கள்: ஆக 20, 21, 22

7

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்)

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது, சந்திரன் - சுக ஸ்தானத்தில் சனி () - பஞ்சம ஸ்தானத்தில் குரு () - அஷ்டம ஸ்தானத்தில் ராஹூ - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன், செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன் கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:

17-08-2021 அன்று சூரிய பகவான் தொழில் ஸ்தானத்திலிருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

23-08-2021 அன்று புதன் பகவான் லாப ஸ்தானத்திலிருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

07-09-2021 அன்று சுக்ர பகவான் அயன சயன போக ஸ்தானத்திலிருந்து ராசிக்கு மாறுகிறார்.

07-09-2021 அன்று செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்திலிருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

14-09-2021 அன்று குரு பகவான் பஞ்சம ஸ்தானத்திலிருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

சமம் தராசு என்பதற்கேற்ப அனைத்து விதமான மக்களையும் ஒரே நியாயத் தராசில் வைத்துப் பார்க்கும் துலாம் ராசி அன்பர்களே, இந்த மாதம் இப்போது இருக்கும் சூழ்நிலையில் பல்வேறு இன்னல்களுக்கிடையில் நன்மைகளை அனுபவிக்கப் போகிறீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியில் உள்ள பிரச்சினை முடியும் செல்வம், உரிமை, அதிகாரம் கிடைக்கப் பெறுவீர்கள்.

குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தள்ளிப் போகலாம். எனினும் முயற்சிகளைத் தொடர்ந்து செய்வது நல்லது. தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த குறைகள் ஒவ்வொன்றாக மாறும். பொருளாதார வளம் சிறப்படையும்.

தொழிலதிபர்கள் வியாபாரிகள் முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும். நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில் ஆரம்பிக்கக் கூடிய முயற்சிகள், ஆலோசனைகளில் ஈடுபடலாம். வரவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளுங்கள். உத்தியோகஸ்தர்கள் உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும்.

பெண்களுக்கு சிறப்பான பலன்கள் வந்து சேரும். சொத்து தொடர்பான பிரச்சனைகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். அக்கம் பக்கத்தினரிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு மறைந்து அவர்கள் இல்ல விசேஷங்களுக்கு உங்களை முன் நிறுத்துவார்கள்.

கலைத்துறையினர் நல்ல புகழும் பெருமையும் கிடைக்கப் பெறுவீர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். கலைத்துறையில் சீரான நிலைமை இருக்கும். நல்லவிதமான ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள்.

அரசியல்துறையினர் சமூக சேவை செய்வோர் நல்ல செல்வாக்கோடு காணப்படுவர். கௌரவம் உயரும். அதிக பாடுபட வேண்டியிருந்தாலும், பிற்பகுதி மிகவும் நன்றாக இருக்கும்.

மாணவர்கள் தீவிர முயற்சி எடுத்துப்படிப்பது அவசியமாகும். உடல்நலனைப் பொறுத்தவரை வயிறு உபாதைகள் வந்து வந்து மறையும்.

சித்திரை 3, 4 பாதம்:

இந்த மாதம் மாணவர்கள் படிப்பில் தீவிர அக்கறை எடுக்க வேண்டும். குடும்ப ஒற்றுமைக்காக விட்டுக் கொடுத்து போக வேண்டியிருக்கும். மனதில் பட்டதை பளிச்சென்று சொல்வீர்கள். இதுவரை இருந்து வந்த பலவிதமான பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். பின்தங்கிய நிலையிருப்பவர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வார்கள். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை.

சுவாதி:

இந்த மாதம் உங்களுடைய உடல்நலத்தை பொறுத்தவரை உஷ்ணம் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட உபாதைகள் வரலாம். சிலருக்கு ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை ஏற்படலாம். நல்ல பணப்புழக்கம் இருக்கும். எடுத்த காரியம் அனுகூலத்தைக் கொடுக்கும். மதிப்பு மரியாதை சீராக இருக்கும். வீன்விவாதங்களைத் தவிர்க்கவும்.

பிள்ளைகள் பாராட்டைப் பெற்று பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி தருவார்கள்.

விசாகம் 1, 2, 3ம் பாதம்:

இந்த மாதம் குடும்பத்தில் தம்பதிகளிடையே இடையே இருந்து வந்த பிரச்சனைகள் சுமூகமாக மறையும். பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். முயற்சிகளின் பேரில் சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். குழந்தை பாக்கியம் கிட்டும். வீட்டிற்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். புதிய வீடு, மனை ஆகியவற்றை வாங்கும் போது கவனம் தேவை.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் லலிதாம்பிகையை அர்ச்சனை செய்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். செல்வம் சேரும். செல்வாக்கு உயரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 30, 31

அதிர்ஷ்ட தினங்கள்: ஆக 23, 24

8

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

கிரகநிலை:

ராசியில் கேது, சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி () - சுக ஸ்தானத்தில் குரு () - களத்திர ஸ்தானத்தில் ராஹூ - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன், செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சுக்ரன் - என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:

17-08-2021 அன்று சூரிய பகவான் பாக்கிய ஸ்தானத்திலிருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

23-08-2021 அன்று புதன் பகவான் தொழில் ஸ்தானத்திலிருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

07-09-2021 அன்று சுக்ர பகவான் லாப ஸ்தானத்திலிருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

07-09-2021 அன்று செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்திலிருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

14-09-2021 அன்று குரு பகவான் சுக ஸ்தானத்திலிருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

உழைப்பவரே உயர்ந்தவர் என்பதற்கேற்ப உழைப்பை மட்டுமே நம்பி சாதனைகளை புரிய விருப்பப்படும் விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் வாழ்க்கை வளம் முன்னேறும். அதே வேளையில் தெய்வ அனுகூலத்துடனும் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். வயிறு சம்மந்தமான பிரச்சனையுள்ளவர்களுக்கு மேலும் சில பாதிப்புகள் வரலாம். உணவுக்கட்டுப்பாடு அவசியம். கைவிட்டுப்போன பொருட்கள் மீண்டும் உங்களை வந்தடையும்.

குடும்பத்தில் இருந்து வந்த சின்னச் சின்ன குழப்பங்கள் மறைந்து நன்மைகள் கிடைக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வர். தந்தை, தந்தை வழி உறவினர்கள், பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள் வரலாம். சுபச் செலவுகள் நிகழும். சாகோதர சகோதரிகளிடம் நெருக்கம் அதிகரிக்கும். முன் யோசனையுடன் திட்டமிடல் குடும்பத்தில் சிக்கலை தீர்க்கும்.

தொழிலதிபர்கள் வாழ்க்கையில் பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். பணத்தை விட அறிவை மூலதனமாக வைத்துச் செய்யப்படும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். அதே நேரம் சில புதிய வியாபார யுக்திகளை நீங்கள் பயன்படுத்த வேண்டி வரும். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய பதவி கிடைக்கும். எதிரிகளின் இன்னல் இருக்கும் இடம் தெரியாமல் போகும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். உங்களுடைய கோரிக்கைகளை மேலதிகாரிகள் ஏற்று நடப்பார்கள்.

பெண்கள் அக்கம், பக்கத்தாரிடையே ஒற்றுமை பலப்படும். பொருளாதார வலிமை கூடும். அதே வேளையில் பொருட்களின் மீது கவனமும் தேவை. இழப்புகளும் ஏற்படலாம். நண்பர்களிடம் பழகும் போது எச்சரிக்கை தேவை.

கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சீரான வாய்ப்புகள் வந்தாலும் அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும். எதிலும் சாதிக்க வேண்டி கடினமான உழைப்புக்கு ஆளாவீர்கள். மூத்த கலைஞர்கள் உங்களிடம் உள்ள திறமைகளை புரிந்து கொள்வார்கள். நன்மைகள் சிறிது தாமதத்திற்கு பின்னரே கிடைக்கும்.

அரசியல்துறையினர் சமூக சேவையில் உள்ளவர்களுக்கு மிகுந்த உற்சாகமாக இருக்கும் காலகட்டம். பொது இடத்தில் பேசும் போது கவனம் தேவை. மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.

மாணவர்கள் மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் புதிய உற்சாகமும் நம்பிக்கையும் கிடைக்கும். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். சிலருக்கு மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்,

விசாகம் 4ம் பாதம்:

இந்த மாதம் ஒருமுறைக்கு இருமுறை விசாரித்து பொருட்களை வாங்குவது நல்லது. நண்பர்கள், உறவினர்கள் அன்னியோன்னியமாக இருப்பர். உத்தியோலத்தில் இருப்பவ்ர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். சற்று முயற்சி எடுத்தால் பதவி உயர்வு உங்களை வந்து சேரும். எதிர்பார்திருந்த பணி இடமாற்றம் உங்களை வந்து சேரும். மேலதிகாரிகளின் அனுசரனை இருந்துவரும்.

அனுஷம்:

இந்த மாதம் வியாபாரிகள் சிறப்பான முன்னேற்றத்தைப் பெறலாம். லாபம் அதிகரிக்கும். உங்கள் வியாபாரத்தை விரிவாக்கம் செய்வீர்கள். எதிரிகளை உதிரிகளாக்குவீர்கள். புதியதாக ஆரம்பித்த தொழிலில் ஏற்றம் உண்டு. இரும்பு தொடர்பான தொழிலில் அதிக வருவாய் வந்து சேரும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலம் ஏற்படும்.

கேட்டை:

இந்த மாதம் எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் சற்று தாமதமாக வந்தாலும் முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும். பொருளாதாரம் எதிர்பார்த்தபடி இருக்காது. உடன் இருப்போரால் பிரச்சனைகள் வரலாம்.

பரிகாரம்: ஸ்ரீ மகாதேவரை பூஜை செய்து வர காரிய தடைகளை நீக்கும். எதிர்ப்புகள் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: செப் 1, 2, 3

அதிர்ஷ்ட தினங்கள்: ஆக 25, 26

9

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி () - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு () - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன், செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது, சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:

17-08-2021 அன்று சூரிய பகவான் அஷ்டம ஸ்தானத்திலிருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

23-08-2021 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்திலிருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

07-09-2021 அன்று சுக்ர பகவான் தொழில் ஸ்தானத்திலிருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

07-09-2021 அன்று செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்திலிருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

14-09-2021 அன்று குரு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்திலிருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

வில்லுக்கு சீரிய சிந்தனை என்பதற்கேற்ப எதிலும் நேர்மையுடனும் நேர்மறையான சிந்தனைகளுடனும் இருந்து காரியத்தை சாதிக்கும் தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்கள் திறமையில் இருந்து வந்த பின் தங்கிய நிலை இனி மாறும். முயற்சிகளில் தடைகள் வந்தாலும், இறைவனின் வல்லமையால் அதையெல்லாம் முறியடித்து வெற்றிப் பாதையில் பயணிப்பீர்கள். பிரச்சனைகளை முறியடிக்கும் வல்லமை உங்களை வந்து சேரும்.

குடும்பத்தில் வீட்டில் சின்னச்சின்ன வாக்குவாதங்கள் தலைதூக்கலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவதால் நிலைமையைச் சமாளிக்கலாம். உறவினர் வகையிலும் கூட ஒருவருடன் மனஸ்தாபம் உருவாகலாம். சிலருக்கு விரும்பத்தாகாத செய்தி ஒன்று தூரத்துலிருந்து வரலாம். கணவன், மனைவியரிடையே அன்பு மேலோங்கும்.

தொழிலில் தேவையில்லாத பண விரயம் ஏற்படலாம். கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். உங்கள் கூட்டாளிகளுடன் கருத்து மோதல்கள் வரலாம். சிலருக்கு வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் மிக அவசியம். உத்தியோகஸ்தர்கள் உடன் வேலை செய்வோரின் ஆதரவால் பிரச்சனைகளைச் சமாளிப்பீர்கள். தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு சிறு வாக்கு வாதங்கள் வரலாம். காரிய அனுகூலம் கிட்டும்.

பெண்களுக்கு அதிக வேலைப்பளு உண்டாகலாம். எந்த வேலையிலும் கவனச் சிதறல் ஏற்படாமல் கவனமாக இருங்கள். வெற்றி உங்களைத் தேடி வரும்.

கலைத்துறையில் உள்ளவர்களுக்கு கேட்ட இடத்தில் கடன்கள் கிடைக்கும். அதனால் சிக்கல்கள் தீரும். பணிச்சுமையின் காரணமாக அசதி ஏற்படும். தேவைகள் பூர்த்தியாகும். செல்வாக்கில் முன்னேற்றம் ஏற்படும்.

அரசியல்துறையினர் தீவிர முயற்சிக்குப் பின்னரே சிலருக்கு நடக்க வேண்டிய காரியங்கள் நடைபெறும். சில கட்டங்களில் நன்மை, தீமை கலந்தே நடைபெற்றாலும் இறுதியில் நன்மையே உண்டாகும்.

மாணவர்கள் படிப்பில் நிதானமும் கவனமும் தேவை. சுற்றுலாச் செல்ல நேர்ந்தால் அனைவருடன் ஒற்றுமையாக பழகி பக்குவமாக நடந்து கொள்ளுதல் அவசியம்.

மூலம்:

இந்த மாதம் அரசியல்வாதிகள் சீரான பலனை எதிர்பார்க்கலாம். மாணவமணிகள் சிரத்தை எடுத்து படிப்பர். உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் வந்தே தீரும். வழக்கு விவகாரங்கள் மேலும் தள்ளிப் போகும். தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். இதுவரை தொல்லை கொடுத்துவந்த எதிரிகள் விலகிச் செல்வார்கள்.

பூராடம்:

இந்த மாதம் எதிலும் கவனமாக பேசுவது நல்லது. வீண் பழி உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் தேவை. வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் செய்வோர் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நாள்.

உத்திராடம் 1ம் பாதம்:

இந்த மாதம் கெட்டகனவுகள் தோன்றும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களை விட்டு விலகி செல்லலாம். மனதில் நிலையான எண்ணம் இருக்காது. பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதில் விமர்சனம் கிடைக்கும்.

பரிகாரம்: வியாழக்கிழமையில் மஞ்சள் நிற பூ கொண்டு சிவனை வழிபடவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி

சந்திராஷ்டம தினங்கள்: செப் 4, 5

அதிர்ஷ்ட தினங்கள்: ஆக 27, 28, 29

10

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள்)

கிரகநிலை:

ராசியில் சனி () - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு () - பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன், செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் கேது, சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:

17-08-2021 அன்று சூரிய பகவான் களத்திர ஸ்தானத்திலிருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

23-08-2021 அன்று புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்திலிருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

07-09-2021 அன்று சுக்ர பகவான் பாக்கிய ஸ்தானத்திலிருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

07-09-2021 அன்று செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்திலிருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

14-09-2021 அன்று குரு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலிருந்து ராசிக்கு மாறுகிறார்.

பலன்:

மகரம் பணி என்பதற்கேற்ப எந்த வேலையைக் கொடுத்தாலும் சோம்பலில்லாமல் செய்யத் துடிக்கும் மகர ராசி அன்பர்களே

இந்த மாதம் சில நன்மைகள் தரக்கூடிய வகையில் இருக்கும் கால கட்டம். சோம்பலுக்கு இடம் கொடுக்காமல் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நடந்து கொண்டால் பொருளாதார வகையிலும் வாழ்க்கைத் தரத்திலும் வளர்ச்சி உண்டாகும்.

குடும்பத்தில் எதிலும் முதலீடு செய்வதற்கு முன் குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்து கொள்ளவும். இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ்ந்திட முயற்சி செய்யுங்கள். தொலைந்து போன பொருட்கள் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும்.

தொழிலதிபர்கள் உழைப்புக்கு ஏற்ற பிரதிபலன் கிடைக்காமல் இருந்தவர்களுக்கு தற்போதைய கால கட்டத்தில் நன்மைகள் நடக்கும். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். தொழில் நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டுப் பிரிய நேரிடலாம். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். சம்பள உயர்வும், பதவி உயர்வும் தங்கு தடையின்றி கிடைக்கும்.

பெண்கள் நிறைய விசயங்களில் காரியத்தாமதம் ஏற்படலாம். உத்தியோகம் பார்க்கும் பெண்கள் வேலையில் கவனச் சிதறல் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். உங்கள் கௌரவம் நிலை நாட்டப்படும்.

கலைத்துறையினர் நல்ல பெருமையும், புகழும் கிடைக்கப் பெறுவர். கடினமாக உழைக்க வேண்டி வரும். மிகவும் பணிச்சுமையால் நேரத்திற்கு உணவருந்த முடியாமல் வாயுத் தொல்லை வயிற்று உபாதைகள் ஏற்பட்டு மறையும்.

அரசியல்துறையினர் அரசு சார்ந்த விசயங்களில் பிரத்தியேகமான சலுகைகளை பெற முடியாமல் போகலாம். மக்கள் தொடர்பான பணிகளில் பணியாற்றும் போது கவனம் தேவை. நல்ல செல்வாக்கு கௌரவம் கிடைக்கும்.

மாணவர்கள் மாணவிகள் நல்ல சிறப்பான பலனைக் காணலாம். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.

உத்திராடம் 2, 3, 4 பாதம்:

இந்த மாதம் ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. பணவரத்து தாமதப்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிடிவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும்.

திருவோணம்:

இந்த மாதம் பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். எச்சரிக்கையாக பேசுவது நல்லது. கலைத்துறையினருக்கு மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். மன சஞ்சலம் ஏற்படுத்தும். திடீர் கோபம் ஏற்படும். வீண் செலவும் இருக்கும்.

அவிட்டம் 1,2 பாதம்:

இந்த மாதம் அரசியலில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். இருப்பினும் நற்பெயர் கிடைக்கும்.

மாணவர்களுக்கு கல்விக்காக செலவு உண்டாகும். கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். உடல்நிலையைப் பொறுத்தவரை மருத்துவ செலவு உண்டாகலாம். வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.

பரிகாரம்: சனிக்கிழமையில் விநாயகரை வழிபடுவது கஷ்டங்களை போக்கும். மனதில் தைரியம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி

சந்திராஷ்டம தினங்கள்: செப் 6, 7

அதிர்ஷ்ட தினங்கள்: ஆக 30, 31

11

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்)

கிரகநிலை:

ராசியில் குரு () - சுக ஸ்தானத்தில் ராஹூ - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன், செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் கேது, சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி () என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:

17-08-2021 அன்று சூரிய பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திலிருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

23-08-2021 அன்று புதன் பகவான் களத்திர ஸ்தானத்திலிருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

07-09-2021 அன்று சுக்ர பகவான் அஷ்டம ஸ்தானத்திலிருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

07-09-2021 அன்று செவ்வாய் பகவான் களத்திர ஸ்தானத்திலிருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

14-09-2021 அன்று குரு பகவான் ராசியில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

கும்பம் பந்தம் என்பதற்கேற்ப சொந்த பந்தங்களின் மேல் அதீத பாசம் வைத்திருக்கும் கும்ப ராசி அன்பர்களே,

இந்த மாதம் போதிய அளவில் பணம் வந்து தேவையை பூர்த்தி பண்ணும் கால கட்டம். தீவிர முயற்சிகளின் பேரில் சில சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். தெய்வ அனுகூலத்தால் சிக்கலில் இருந்து விடுபட்டு முன்னேற்றம் ஏற்படும். தூரத்திலிருந்து வரும் செய்திகள் உங்களுக்கு அனுகூலம் இல்லாமல் இருக்கலாம்.

குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவதால் நிலைமையைச் சமாளிக்கலாம். கணவன், மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். வீட்டில் சின்னச் சின்ன வாக்கு வாதங்கள் தலை தூக்கலாம். உறவினர் வகையிலும் கூட ஒருவருடன் மனஸ்தாபம் உருவாகலாம். அதீத எதிர்பார்ப்புகள் வேண்டாம். தடைகள் வந்தாலும் சமாளிப்பீர்கள்.

தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி ஏற்படும். எதிலும் புதிய முதலீடு செய்வதற்கு முன் குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்து கொள்ளவும். இல்லையெனில் அவர்களால் தொந்தரவுகள் வரலாம். உத்தியோகஸ்தர்கள் உடன்பணிபுரிபவரால் அனுகூலம் உண்டு. உங்கள் பொறுப்புகளை வேறு நபரிடம் ஒப்படைக்க வேண்டாம். சிலருக்கு இடமாற்றம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் நடக்கும்.

பெண்களுக்கு மகிழ்ச்சியின் மிகுதியால் அலட்சியமாகப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. நாவடக்கம் மிகத் தேவை. உடல் நலத்தில் தீவிர அக்கறையும், கண்காணிப்பும் அவசியம். பிள்ளைகளால் நற்செய்தி, முன்னேற்றம் உண்டு.

கலைத்துறையினருக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். உடனிருப்போரிடம் எந்த விதமான ரகசியங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

அரசியல் துறையினர் அதிகமாக உழைக்க வேண்டி வரலாம். ஆனாலும் மிகக் குறைந்த அளவே பலனை எதிர்பார்க்க முடியும். சிலரை உங்களுக்கு புரிந்து கொள்ள முடியாது. அவர்களின் செயல்களால் உங்களுக்கு மன உளைச்சல் வரலாம்.

மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்துப் படிப்பது நல்லது. சமூக சேவைகள் செய்ய ஆசிரியர்கள் பணிப்பார்கள். நண்பர்களுக்கு பிரதிபலன் பாராது உதவி புரிவீர்கள்.

அவிட்டம் 3, 4 பாதம்:

இந்த மாதம் காரிய தடை ஏற்படலாம். மனதில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சாமர்த்தியமான பேச்சு கை கொடுக்கும். பணவரத்து திருப்தியாக இருக்கும். நீண்ட நாட்களாக இழுத்து வந்த வீண் பிரச்சனைகள் நீங்கும். மரியாதை அந்தஸ்து உயரும். வெளிநாட்டு பயணங்கள் கைகூடும். எதிர்பார்த்த காரியம் வெற்றிகரமாக நடந்து முடியும். சக ஊழியர்களுடன் கடுமையாக பேசாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

சதயம்:

இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் உண்டாகும். பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதம்:

இந்த மாதம் தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். கணவன், மனைவிக்குள் திடீர் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நல்லது.

பரிகாரம்: அமாவாசையில் முன்னோர்கள் வழிபாடு செய்வது உகந்தது.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, சனி

சந்திராஷ்டம தினங்கள்: செப் 8, 9

அதிர்ஷ்ட தினங்கள்: செப் 1, 2, 3

12

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

கிரகநிலை:

தைரிய வீரிய ஸ்தானத்தில் ராஹூ - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன், செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது, சந்திரன் - லாப ஸ்தானத்தில் சனி () - அயன சயன போக ஸ்தானத்தில் குரு () என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:

17-08-2021 அன்று சூரிய பகவான் பஞ்சம ஸ்தானத்திலிருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

23-08-2021 அன்று புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திலிருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

07-09-2021 அன்று சுக்ர பகவான் களத்திர ஸ்தானத்திலிருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

07-09-2021 அன்று செவ்வாய் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திலிருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

14-09-2021 அன்று குரு பகவான் அயன சயன போக ஸ்தானத்திலிருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

மீனம் ஓட்டம் என்பதற்கேற்ப வாழ்க்கையில் கடுமையான உழைப்பிற்கு எப்போதுமே தயங்காத முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாக செயல்படும் மீன ராசி அன்பர்களே,

இந்த மாதம் எந்தத் துறையிலும் முத்திரையைப் புதிய வழியில் பதிப்பீர்கள். தெய்வ அனுகூலத்தால் கஷ்டங்களில் இருந்து விடுபட்டு முன்னேற்றம் வந்து சேரும். அதீத உழைப்பின் மூலம் வெற்றிகள் கிடைக்கும்.

குடும்பத்தில் உறவினர்கள் முறையில் நிலவி வந்த பிரச்சனைகள் அனைத்தும் அடியோடு மறையும். சுப நிகழ்ச்சிகள் குடும்பத்தில் நிகழும். உங்கள் முயற்சிகளில் வெற்றியையும். பொருளாதார வளத்தையும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிப்பதையும் காண்பீர்கள்.

தொழிலதிபர்கள் வியாபாரிகளுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். அலைச்சலும், கவனச் சிதற்லும் இருக்கும். ஆனால் கடந்த காலத்தை விட கூடுதல் வருவாயைப் பெறலாம். உத்தியோகஸ்தர்கள் முன்னேற்றம் காண்பர். பதவி உயர்வு, சம்பள உயர்வு, போன்றவை தங்கு தடையின்றி கிடைக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவுடன் இருப்பர்.

பெண்கள் பிள்ளை வளர்ப்பில் பெருமை அடைவீர்கள். பெண்கள் உற்சாகமாக காணப்படுவர். கணவர், மற்றும் அண்டை அயலாரின் அன்பும், பாசமும் கிடைக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் ஆகையால் கடினமான வேலைகளிலும் கூட உற்சாகமாக காணப்படுவீர்கள்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெற்று பொருளாதார உயர்வும், புகழும், பாராட்டும் கிடைக்கப் பெறுவர். சிலருக்கு வேறு மொழிப்படங்களிலும், பிரகாசிக்கக் கூடிய கால கட்டம். உடல் நலம் சீராக இருக்கும்.

அரசியல் துறையினர் எதிர்பார்த்த பதவியை அடையலாம். கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கப் பெற்று மன நிம்மதியை அடைவீர்கள். சிலருக்கு பித்தம், சூடு போன்ற உடல் உபாதகள் வந்து போகும்.

மாணவர்கள் தொடர்ந்து சிறப்பான நிலையில் இருப்பர். நல்ல மதிப்பெண்கள் பெற்று சிறந்த பேரை எடுக்க முடியும். நண்பர்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர்.

பூரட்டாதி 4ம் பாதம்:

இந்த மாதம் சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அலுவலகத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சனை தலை தூக்கலாம். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். மிகவும் கவனமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நன்மை தரும்.

உத்திரட்டாதி:

இந்த மாதம் திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். காரிய தடைகள் நீங்கும். மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். பெண்களுக்கு மற்றவர்கள் செயல்களால் திடீர் கோபம் உண்டாகலாம். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வீண் செலவை குறைப்பது நல்லது.

ரேவதி:

இந்த மாதம் புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அரசியலில் உள்ளவர்கள் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. வாடிக்கையாளர்களிடம் கோபமான வார்த்தைகளை பேசாமல் சாந்தமாக உரையாடுவது வியாபார விருத்திக்கு வழி செய்யும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் கோவிலுக்குச் சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். முடிந்தால் எண்ணெய் வாங்கிக் கோவிலுக்கு கொடுக்கவும்.

அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு - வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: செப் 10, 11

அதிர்ஷ்ட தினங்கள்: செப் 4, 5

Next Story
Share it