பங்குனி மாத ராசி பலன்கள் - 2019

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணித்த தை மாத ராசி பலன்கள்!

பங்குனி மாத ராசி பலன்கள் - 2019
X

newstm-panguni-month-prediction

பங்குனி மாத ராசி பலன்கள் - 2019

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீவிளம்பி வருஷம் - உத்தராயணம் - சிசிரருது - மாசி மாதம் 30-ம் நாள் பின்னிரவு, பங்குனி 01- ம் நாள் முன்னிரவு அன்றையதினம் தினசுத்தி அறிவது வியாழக்கிழமை பின்னிரவு வெள்ளிக்கிழமை முன்னிரவு - சுக்ல பட்ச நவமியும் - திருவாதிரை நக்ஷத்ரமும் -ஆயுஷ்மான் நாமயோகமும் - பாலகரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி காலை மணி 5.31 க்கு கும்ப லக்னத்தில் பங்குனி மாதம் பிறக்கிறது.

பங்குனி மாதம் பிறக்கும் போது இருக்கக்கூடிய கிரகநிலை:

லக்னம் - சதயம் 1ம் பாதம் - ராஹூ ஸாரம்
சூரியன் - உத்திரட்டாதி 1 ம் பாதம் - ராகு ஸாரம்
சந்திரன் - திருவாதிரை - ராகு ஸாரம்
செவ்வாய் - கிருத்திகை 2ம் பாதம் - சூர்யன் ஸாரம்
புதன் - சதயம் 2ம் பாதம் - ராகு ஸாரம்
குரு - மூலம் 1ம் பாதம் - கேது ஸாரம்
சுக்கிரன் - அவிட்டம் 1 ம் பாதம் - செவ்வாய் ஸாரம்
சனி - பூராடம் 3ம் பாதம் - சுக்கிரன் ஸாரம்
ராகு - புனர்பூசம் 3ம் பாதம் - குரு ஸாரம்
கேது - உத்திராடம் 1ம் பாதம் - சூரியன் ஸாரம்

கிரகநிலை: ராசியில் செவ்வாய் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் ராகு, சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு,  சனி, கேது - தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் புதன் (வ) - விரைய ஸ்தானத்தில் சூர்யன் என கிரகநிலை இருக்கிறது. கிரக மாற்றங்கள்: பங்குனி மாதம் 01ம் தேதி சூரியன் விரையஸ்தானத்திற்கு மாறுகிறார். பங்குனி மாதம் 06ம் தேதி செவ்வாய் தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.  பங்குனி மாதம் 06ம் தேதி புதன் லாப ஸ்தானத்தில்  வக்ர நிவர்த்தி அடைகிறார்.  பங்குனி மாதம்  08ம் தேதி சுக்கிரன் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். பங்குனி மாதம் 25ம் தேதி புதன் விரைய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். பங்குனி மாதம் 27ம் தேதி பாக்கிய ஸ்தானத்தில்  குரு பகவான் வக்கிரம் ஆகிறார். பலன்: சொன்ன சொல்லை காப்பாற்ற துடிக்கும் மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நன்மை தரும். எதைப் பேசினாலும் வார்த்தைகளில் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும். ராஜாங்க ரீதியிலான காரியங்கள் கை கொடுக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பொருள் சேர்க்கை உண்டாகும். சிற்றின்ப செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களுக்கு உதவிகள்  செய்வீர்கள். பணவரத்து திருப்திதரும். வீண்பழி ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் திருமணம் போன்ற  சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். உறவினர்கள் மூலம் உங்களின் செயல்பாடுகளுக்கு ஆதரவு அதிகரிக்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி சிறப்பாக நடக்கும். பணவரத்தும் அதிகரிக்கும். பழைய கடன்களை திருப்பி செலுத்தக் கூடிய நிலை உருவாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த ராஜாங்க ரீதியிலான சிரமங்களிலிருந்து விடுபடுவீர்கள்.   உத்தியோகஸ்தர்கள் நிலை மேம்படும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். மேலதிகாரிகளின் பாராட்டும், ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும். கலைத்துறையினருக்கு நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் உண்டு. சோதனைகள் வெற்றியாக மாறும். உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களைக் கவரும். உல்லாசப் பயணங்களில் நாட்டம் செல்லும். அரசியல்துறையினருக்கு மேலிடத்தில் இருப்பவர்களிடம் இருந்து மனம் நோகும்படியான வார்த்தைகள் வெளிப்படலாம்.  அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். பதவிகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும். பெண்களுக்கு எதிர்பாராத செலவு உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்ற மடைய அதிக கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது. அஸ்வினி: இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம். உறவினர்களுடன் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது. பரணி: இந்த மாதம் வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். கார்த்திகை: இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். எதிர்பாரத இடமாற்றம் ஏற்படலாம். எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. எதிர்ப்புகள் குறையும். பரிகாரம்: முருகனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து பிராத்தனை செய்து வழிபட்டு வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன் சந்திராஷ்டம தினங்கள் : மார்ச்: 25, 26, 27     அதிர்ஷ்ட தினங்கள் : மார்ச்: 19, 20கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப  ஸ்தானத்தில் ராகு,  சந்திரன் - அஷ்டம  ஸ்தானத்தில் குரு, சனி, கேது - பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் புதன் (வ) - லாப ஸ்தானத்தில் சூர்யன் - விரைய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை இருக்கிறது. கிரக மாற்றங்கள்: பங்குனி மாதம் 01ம் தேதி சூரியன் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். பங்குனி மாதம் 06ம் தேதி செவ்வாய் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.  பங்குனி மாதம் 06ம் தேதி புதன் தொழில் ஸ்தானத்தில்  வக்ர நிவர்த்தி அடைகிறார்.  பங்குனி மாதம்  08ம் தேதி சுக்கிரன் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். பங்குனி மாதம் 25ம் தேதி புதன் லாப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். பங்குனி மாதம் 27ம் தேதி அஷ்டம ஸ்தானத்தில்  குரு பகவான் வக்கிரம் ஆகிறார். பலன்: மற்றவர்கள் செய்யும் செயலுக்கு திருப்தி அடையாத ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் எதிலும் சாதகமான நிலை காணப்படும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். வாக்கு வன்மை ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் செவி சாய்ப்பார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். குடும்பத்தில் கணவன் மனைவி அனுசரித்து செல்வதன்மூலம் அமைதி ஏற்படும்.  விருந்தினர்கள் வருகை இருக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் கோபத்தை காண்பிக்காமல் பேசுவது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகலாம். தொழில் வியாபாரம் மெத்தனமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதல் தரும்.  வியாபாரம் தொடர்பான காரியங்களில் கூடுதல் கவனம் தேவை.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் புறம் கூறாமல் இருப்பது நன்மை தரும். உங்களுடைய பொருட்களை கவனமாக வைத்துக் கொள்வது அவசியம். கலைத்துறையினருக்கு தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இராது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம். பகைவர்கள் பணிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு. அரசியல்துறையினருக்கு  இனிமையான செய்திகள் தேடி வரும். நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நண்பர்களால் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும் வாய்ப்புகள் இருப்பதால் கவனமுடன் இருப்பது நல்லது.  பெண்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதில் தாமதம் உண்டாகும். கவனமாக வேலைகளை செய்வது நல்லது. பணவரத்து தாமதமாகலாம். மாணவர்கள் சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு பாடங்களை நன்கு படிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். கார்த்திகை: இந்த மாதம் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும். வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும்.  ரோகினி: இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டுபேசுவது நன்மை தரும். உறவினர்கள் வருகை  இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது  நல்லது. மகிழ்ச்சி உண்டாகும். மிருகசீரிஷம்: இந்த மாதம் வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன்மூலம் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள்.  பரிகாரம்: ஸ்ரீசரபேஸ்வரரை ஞாயிற்றுக்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட்டு வர எல்லா தடங்கல்களும் நீங்கும். காரிய வெற்றி ஏற்படும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வெள்ளி சந்திராஷ்டம தினங்கள் : மார்ச்: 28, 29 அதிர்ஷ்ட தினங்கள் : மார்ச்:21, 22கிரகநிலை: ராசியில் ராகு,  சந்திரன் -  ஸப்தம  ஸ்தானத்தில் குரு,  சனி, கேது - அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் புதன் (வ) - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், - லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை இருக்கிறது. கிரகமாற்றங்கள்: பங்குனி மாதம் 01ம் தேதி சூரியன் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். பங்குனி மாதம் 06ம் தேதி  செவ்வாய் விரைய ஸ்தானத்திற்கு  பெயர்ச்சி ஆகிறார். பங்குனி மாதம் 06ம் தேதி புதன் பாக்கிய ஸ்தானத்தில்  வக்ர நிவர்த்தி அடைகிறார்.  பங்குனி மாதம்  08ம் தேதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பங்குனி மாதம் 25ம் தேதி புதன் தொழில் ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். பங்குனி மாதம் 27ம் தேதி ஸப்தம  ஸ்தானத்தில்  குரு பகவான் வக்கிரம் ஆகிறார்.   பலன்: எந்தக் காரியத்திலும் ஆர்வமாக செயல்படும் மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் அறிவுத்திறன் அதிகரிக்கும். உங்களது பேச்சு மற்றவரை மயக்குவதுபோல் இருக்கும். ருசியான உணவை உண்டு மகிழ்வீர்கள். மனநிம்மதி கிடைக்கும். சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு கூடும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். குடும்ப வருமானம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் - நண்பர்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடுகள் ஏற்பட்டு பின்னர் விலகும். வியாபாரம் தொடர்பான பிரச்சனைகளை கையாளும் போது கவனம் தேவை. பாக்கிகள் வசூலாவது தாமதமாகும்.  உத்யோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக தங்களது வேலைகளை செய்வது நல்லது. யாரிடமும் கோபமும், வெறுப்பையும் காண்பிக்காமல் இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு மிகவும் அனுகூலமான காலமிது. வாய்ப்புகள் குவியும். புத்திசாதுர்யத்துடன் கையாள்வதால் லாபமான காலமாக அமையக்கூடிய வாய்ப்பு உண்டு. அரசியல்துறையினருக்கு  மேலிடத்திலிருந்து சந்தோஷமான செய்தி வரும். தொண்டர்கள் உங்கள் சொல்படி நடந்து கொள்வது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.  பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருளை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தோர் உறுதுணையாக இருப்பார்கள். மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும். மிருகசீரிஷம்: இந்த மாதம் தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தாமதப்படும். திருவாதிரை: இந்த மாதம் எதிர்ப்புகள் அகலும். தெளிவான மனநிலை இருக்கும். எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும் . ஆனால் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை. புனர்பூசம்: இந்த மாதம்  எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும். எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். பரிகாரம்: புதன்கிழமைகளில் பெருமாளை வணங்குவதும் வயதானவர்களுக்கு உதவிகள் செய்வதும் எல்லா நன்மைகளையும் தரும். செல்வ சேர்க்கை உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - புதன் சந்திராஷ்டம தினங்கள் : மார்ச்:30, 31; ஏப்ரல்: 1 அதிர்ஷ்ட தினங்கள் : மார்ச்: 23, 24கிரகநிலை: ரண, ருண, ரோக   ஸ்தானத்தில் குரு, சனி, கேது - ஸப்தம ஸ்தானத்தில் சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் புதன் (வ) -  பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், - விரைய ஸ்தானத்தில் ராகு , சந்திரன் என கிரகநிலை இருக்கிறது. கிரகமாற்றங்கள்: பங்குனி மாதம் 01ம் தேதி சூரியன் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பங்குனி மாதம் 06ம் தேதி  செவ்வாய் லாப ஸ்தானத்திற்கு  பெயர்ச்சி ஆகிறார்.  பங்குனி மாதம் 06ம் தேதி புதன் அஷ்டம ஸ்தானத்தில்  வக்ர நிவர்த்தி அடைகிறார்.  பங்குனி மாதம்  08ம் தேதி சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பங்குனி மாதம் 25ம் தேதி புதன் பாக்கிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். பங்குனி மாதம் 27ம் தேதி ரண, ருண, ரோக  ஸ்தானத்தில்  குரு பகவான் வக்கிரம் ஆகிறார். பலன்: எதிர்பார்த்திருந்த வாய்ப்புகளை பெறப் போகும் கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் மனதில் உற்சாகம் பிறக்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் தயக்கம் காட்டமாட்டீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியங்கள் வேகமெடுக்கும். கண்மூடித்தனமாக எதிலும் ஈடுபடாமல் யோசித்து செய்வது நல்லது. எந்த ஒரு விஷயத்தையும் தக்க ஆலோசனையுடன் செய்வது நன்மையைத் தரும். குடும்பத்தில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே  மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர்போல் இருப்பார்கள். எனவே எல்லோரையும் அனுசரித்து செல்வதால் நன்மை உண்டாகும். வீட்டில் சுபநிகழ்ச்சிகளுக்கான வேலைகளைத் தொடங்குவீர்கள். புதியதாக மனை வாகனம் வாங்குவதற்கு அனுகூலமாக கைக்கு பணம் வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம், தொழில் தொடர்பான கடிதபோக்கு சாதகமான பலன் தரும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக எதையும் செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். கவுரவம் கூடும். நிலுவை தொகை வந்து சேரும். பதவி உயர்வு கிடைக்கலாம். கலைத்துறையினருக்கு  உடனிருப்பவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். வாக்குவாதங்களைத் தவிர்த்து சாதுர்யமாக கையாள்வது நல்லது. வரவேண்டிய பணம் வந்து சேரும். அரசியல்துறையினருக்கு  நீண்ட நாட்களாக வரவேண்டி இருந்த பணம் வந்து சேரும். உங்கள் பணிகளில் பல குறுக்கீடுகள் வந்தாலும் அதை சாமர்த்தியாமாக சமாளித்து வெற்றி காண்பீர்கள். பெண்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். தொலை தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். எதிர்பார்த்த பணம் வரும் வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்க பாடுபட்டு படிப்பீர்கள். புனர்பூசம்: இந்த மாதம்  அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். பூசம்: இந்த மாதம்  வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும். எதிலும்  மிகவும் கவனமாக  ஈடுபடுவது நன்மை தரும். திட்டமிட்டு செயல்படுவது வெற்றிக்கு உதவும். பணவரத்து அதிகரிக்கும். அதே நேரத்தில் செலவும் கூடும்.   ஆயில்யம்: இந்த மாதம் எதிர்பார்த்த உதவிகள்  கிடைக்கும்.  மனத்துணிச்சல் உண்டாகும்.  அதனால் எதை பற்றியும் முன்பின் யோசிக்காமல் செயல்களில் இறங்கி விடுவீர்கள். தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். பரிகாரம்: மாரியம்மனை திங்கட்கிழமைகளில் தீபம் ஏற்றி வணங்கி வர கஷ்டங்கள் தீரும். மனநிம்மதி உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - திங்கள் - வெள்ளி சந்திராஷ்டம தினங்கள் : ஏப்ரல்: 2, 3 அதிர்ஷ்ட தினங்கள் : மார்ச்: 25, 26, 27கிரகநிலை: பஞ்சம, பூர்வ, புண்ணிய  ஸ்தானத்தில் குரு,  சனி, கேது - ரண, ருண, ரோக ஸ்தானத்தில் சுக்கிரன் - ஸப்தம ஸ்தானத்தில் புதன் (வ), -  அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் -  லாப ஸ்தானத்தில் ராகு, சந்திரன் என கிரகநிலை இருக்கிறது. கிரகமாற்றங்கள்: பங்குனி மாதம் 01ம் தேதி சூரியன் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பங்குனி மாதம் 06ம் தேதி  செவ்வாய் தொழில்  ஸ்தானத்திற்கு  பெயர்ச்சி ஆகிறார்.  பங்குனி மாதம் 06ம் தேதி புதன் ஸப்தம ஸ்தானத்தில்  வக்ர நிவர்த்தி அடைகிறார்.  பங்குனி மாதம்  08ம் தேதி சுக்கிரன் ஸப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பங்குனி மாதம் 25ம் தேதி புதன் அஷ்டம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். பங்குனி மாதம் 27ம் தேதி பஞ்சம, பூர்வ, புண்ணிய  ஸ்தானத்தில்  குரு பகவான் வக்கிரம் ஆகிறார். பலன்: எச்சரிக்கையுடன் காரியங்களை செய்து முடிக்கும் சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் வீண் பிரச்சனையால் மனக்குழப்பம் ஏற்படலாம். பயணங்களில் தடங்கல் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடைகள் ஏற்படலாம். வழக்குகள் சம்பந்தமான விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கை அவசியம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளை தட்டி கொடுத்து எதையும் செய்ய  சொல்வது நல்லது. உங்கள் கருத்துகளுக்கு மதிப்பில்லாமல் போகலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வேகம் இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் இருந்த தடை தாமதம் நீங்கும். போட்டிகள் சமாளிக்கும் திறமை உண்டாகும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை ஏற்படும். சக ஊழியர்கள், மேல் அதிகாரிகளிடம் இருந்து வந்த மனக்கசப்பு மாறும். தேங்கி இருந்த பண வரவு சீராகும். கலைத்துறையினர் இரவு பகலாக உழைக்க வேண்டி இருக்கும். அடுத்தவர் வேலையையும் தானே செய்யும் நிலை உருவாகும். எனினும் உதவிகள் கிடைக்கும். வரவேண்டிய பணம் இழுபறியாக இருந்தாலும் வந்து சேரும். அரசியல்துறையினருக்கு  முன்னேற்றத்தில் தடைகள் இருக்கும். பொறுமையாக கையாள்வதன் மூலம் பெரிய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். மிகவும் பொறுமையாக செயல்பட வேண்டியது அவசியம். பெண்களுக்கு பயணங்களில் எதிர்பாராத தடங்கல் உண்டாகலாம். யோசித்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன்தரும். பிள்ளைகள் மீது கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில்  மந்தமான நிலை மாற கூடுதல் கவனத்துடன்  பாடங்களை படிப்பது நன்மை தரும். மகம்: இந்த மாதம் குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும். குடும்பத்திற்கு  அதிகப்படியான வருமானமும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே  சகஜ நிலை காணப்படும். குழந்தைகள்  திறமையை கண்டு அவர்களை பாராட்டுவீர்கள்.  பூரம்: இந்த மாதம் உறவினர் வருகை இருக்கும். யாரிடம் பேசும் போதும்  நிதானமாக பேசுவது நன்மை தரும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபம் தருவதாக இருக்கும். உத்திரம் - 1: இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள்  மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை கவனமாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். செயல் திறமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் ஏற்படும். பரிகாரம்:  ஞாயிற்றுக்கிழமைதோறூம் சிவனை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன் சந்திராஷ்டம தினங்கள் : ஏப்ரல்: 4, 5, 6 அதிர்ஷ்ட தினங்கள் : மார்ச்: 28, 29கிரகநிலை: சுக ஸ்தானத்தில் குரு, சனி, கேது -  பஞ்சம, பூர்வ, புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் -  ரண, ருண, ரோக ஸ்தானத்தில் புதன் (வ) -  ஸப்தம ஸ்தானத்தில் சூர்யன், அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய்,  தொழில்ஸ்தானத்தில் ராகு, சந்திரன் என கிரகநிலை இருக்கிறது. கிரகமாற்றங்கள்: பங்குனி மாதம் 01ம் தேதி சூரியன் ஸப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பங்குனி மாதம் 06ம் தேதி  செவ்வாய்  பாக்கிய ஸ்தானத்திற்கு  பெயர்ச்சி ஆகிறார்.  பங்குனி மாதம் 06ம் தேதி  ரண, ருண, ரோக  ஸ்தானத்தில்  வக்ர நிவர்த்தி அடைகிறார்.  பங்குனி மாதம்  08ம் தேதி சுக்கிரன் ரண,ருண, ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். பங்குனி மாதம் 25ம் தேதி புதன் ஸப்தம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். பங்குனி மாதம் 27ம் தேதி சுக  ஸ்தானத்தில்  குரு பகவான் வக்கிரம் ஆகிறார். பலன்: எடுத்த காரியங்களை திட்டமிட்டு நடத்தும் கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். விரும்பிய  பொருள்களை வாங்கி மகிழ்வீர். முக்கிய நபரின் அறிமுகமும், உதவியும்  கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். மரியாதை கூடும். திட்டமிட்ட காரியங்கள் நன்றாக நடந்து முடியும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல் சந்தோஷத்தை தரும். பயணங்கள் செல்லும் போது கவனம் தேவை. சகோதரர்களிடம்  கருத்து வேற்றுமை உண்டாகலாம். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணும். தொழில் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வியாபார ஸ்தலத்திற்காக புதியதாக இடம் வாங்குவீர்கள்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறமை கூடும். வெளியூர் பயணங்களும் செல்ல நேரிடலாம். பணி நிமித்தமாக அலைய வேண்டியதிருக்கும்.  கலைத்துறையினருக்கு சில அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்ய பணப்பற்றாக் குறையை சந்திக்கலாம். ஒரு பிரச்சினை முடிந்ததும் இன்னொரு பிரச்சினை உருவாகலாம். அரசியல்துறையினருக்கு  மனம் மகிழும்படியான சுழ்நிலை உருவாகும். வெளியூர் செல்ல நேரிடும். கட்சிப்பணிகள் மிக துரிதமாக நடப்பதற்கான சூழல் உருவாகும். பெண்களுக்கு வீண் மனக்கவலை உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம், வீண் செலவு ஏற்படலாம். மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும். சகமாணவர், நண்பர்கள் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. உத்திரம்: இந்த மாதம்  போட்டிகளில் பங்கு பெற ஆர்வம் உண்டாகும்.  மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். ஆனால் மற்றவர்களிடம் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. சமூகத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். ஹஸ்தம்: இந்த மாதம் குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். மற்றவர்கள்  உங்களை அனுசரித்து செல்வார்கள்.  கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். பிள்ளைகள்  துணையால் மருத்துவ செலவு ஏற்படலாம். சித்திரை: இந்த மாதம் பேச்சின் இனிமை சாதூரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும். எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். தொழில் வியாபாரம்  சிறப்படையும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பரிகாரம்: பெருமாளை தீபம் ஏற்றி வணங்க எதிர் பார்த்த காரிய அனுகூலம் கிடைக்கும்.  உத்தியோகம் தொடர்பான பிரச்சனை தீரும்.. அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - புதன் - வியாழன் சந்திராஷ்டம தினங்கள் : ஏப்ரல்: 7, 8  அதிர்ஷ்ட தினங்கள் : மார்ச்: 30, 31    ஏப்ரல்:1கிரகநிலை: தைரிய, வீர்ய ஸ்தானத்தில் குரு, சனி, கேது - சுக ஸ்தானத்தில் சுக்கிரன் - பஞ்சம, பூர்வ, புண்ணிய ஸ்தானத்தில் புதன் (வ) - ரண, ருண, ரோக  ஸ்தானத்தில் சூர்யன்- ஸப்தம  ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் ராகு, சந்திரன் என கிரகநிலை இருக்கிறது. கிரகமாற்றங்கள்: பங்குனி மாதம் 01ம் தேதி சூரியன்  ரண,ருண, ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். பங்குனி மாதம் 06ம் தேதி  செவ்வாய்  அஷ்டம  ஸ்தானத்திற்கு  பெயர்ச்சி ஆகிறார்.  பங்குனி மாதம் 06ம் தேதி  பஞ்சம, பூர்வ, புண்ணிய  ஸ்தானத்தில்  வக்ர நிவர்த்தி அடைகிறார்.  பங்குனி மாதம்  08ம் தேதி சுக்கிரன் பஞ்சம, பூர்வ, புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பங்குனி மாதம் 25ம் தேதி புதன்  ரண,ருண, ரோக ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். பங்குனி மாதம் 27ம் தேதி தைரிய, வீர்ய  ஸ்தானத்தில்  குரு பகவான் வக்கிரம் ஆகிறார். பலன்: அனுகூலங்களை அதிகமாக பெறப்போகும் துலாராசி அன்பர்களே, இந்த மாதம் நீண்ட நாட்களாக முயற்சி செய்த காரியங்கள் வெற்றியை தரும். வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். திடீர் செலவு ஏற்படும். சிலருக்கு மருத்துவ செலவு ஏற்படும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். குடும்பத்தில் உறவினருடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். வீட்டில் உள்ள பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையில் இடைவெளி குறையும். பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்துவீர்கள். உறவினர்கள் - நண்பர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரம் நல்ல நிலைக்கு உயரும். போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தேவையான நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். நிர்வாக திறமை வெளிப்படும். மேலிடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும் கலைத்துறையினருக்கு மிகவும் அனுகூலமான காலமிது. வாய்ப்புகள் குவியும். புத்திசாதுர்யத்துடன் கையாள்வதால் லாபமான காலமாக அமையக்கூடிய வாய்ப்பு உண்டு அரசியல்துறையினருக்கு  உற்சாகமான காலமாக அமையும். கட்சிப் பணிகளுக்காக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். நேரத்தை வீணாக்காமல் உபயோகப்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். பெண்களுக்கு  அறிவுத்திறன் அதிகரிக்கும். இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில்  வெற்றிபெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். சித்திரை: இந்த மாதம்  பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் பதவிஉயர்வு உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் காரிய அனுகூலம்  உண்டாகும். சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். ஸ்வாதி: இந்த மாதம் தொழிலில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பகைகள் விலகும். அடுத்தவர்களால் இருந்த பிரச்சனைகள் சரியாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். தர்மசிந்தனை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். விசாகம்: இந்த மாதம் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் இருந்த தகராறுகள் நீங்கும். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லா தரப்பினரிடம் இருந்தும்  ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். பரிகாரம்: ஆதிபராசக்திக்கு வேப்பிலை மாலை அணிவித்து தீபம் ஏற்றி வணங்க போட்டிகள் விலகும். மனோ தைரியம் அதிகரிக்கும் அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வெள்ளி சந்திராஷ்டம தினங்கள் : ஏப்ரல்: 9, 10 அதிர்ஷ்ட தினங்கள் : ஏப்ரல்: 2, 3கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு, சனி, கேது - தைரிய, வீர்ய ஸ்தானத்தில் சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் புதன் (வ) -  பஞ்சம, பூர்வ, புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன்-   ரண, ருண, ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் ராகு, சந்திரன் என கிரகநிலை இருக்கிறது. கிரகமாற்றங்கள்: பங்குனி மாதம் 01ம் தேதி சூரியன்  பஞ்சம, பூர்வ, புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பங்குனி மாதம் 06ம் தேதி  செவ்வாய்  ஸப்தம  ஸ்தானத்திற்கு  பெயர்ச்சி ஆகிறார்.  பங்குனி மாதம் 06ம் தேதி  சுக  ஸ்தானத்தில்  வக்ர நிவர்த்தி அடைகிறார்.  பங்குனி மாதம்  08ம் தேதி சுக்கிரன் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். பங்குனி மாதம் 25ம் தேதி புதன் பஞ்சம, பூர்வ, புண்ணிய  ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். பங்குனி மாதம் 27ம் தேதி தன, வாக்கு, குடும்ப  ஸ்தானத்தில்  குரு பகவான் வக்கிரம் ஆகிறார். பலன்: கருத்து வேற்றுமை நீங்கப் பெறும் விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பது தாமதமாகும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பதும் நல்லது. பணவரத்து எதிர்பார்த்த நேரத்தை விட தாமதமாக வந்து சேரும். ஆனால் பூர்வீக சொத்துக்களில் இருந்து பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.  வாகனம் வாங்கும் அல்லது புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். பயணம் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்களில் கவனம் தேவை. தொழில் தொடர்பான காரியங்கள் தாமதமாக நடக்கும். புதுத் தொழில் பற்றி ஆலோசிக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். உழைப்பு அதிகரிக்கும். உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் இல்லாமல் போகலாம். கலைத்துறையினருக்கு மகிழ்ச்சியான காலகட்டம். பணவரவு இருக்கும். வாய்ப்புகள் தேடிவரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வாய்ப்புகளும் சிலருக்கு கிடைக்கும்.  அரசியல் துறையினருக்கு நிலவி வந்த பிரச்சனைகள் மறையும். யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன் ஆலோசனைகள் செய்து கொள்ளவும். பெண்கள் எதிலும் தயக்கம் காட்டாமல் துணிச்சலாக காரியங்களை செய்து முடிப்பீர்கள். அக்கம் பக்கத்தாரிடம் கவனமாக பழகவும். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. பாடங்களை படிப்பதில் கூடுதல் கவனமும், ஆசிரியர்களிடத்தில் பேசும்போது நிதானமும் தேவை. விசாகம்: இந்த மாதம் உத்தியோகம் தொடர்பான பிரச்சனைகள்  நீங்கும். திறமை வெளிப் படும். சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  நிர்வாக திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள்.  அனுஷம்: இந்த மாதம் குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும்.  திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை சாதகமான பலன் தரும்.  கணவன், மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும்.  பிள்ளைகளுக்காக  செய்யும் பணிகள் திருப்தி தரும்.   கேட்டை: இந்த மாதம்  மரியாதையும், கவுரவமும் அதிகரிக்கும். எல்லாதரப்பினரிடம் இருந்தும்  ஆதரவு கிடைக்கும்.  நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். தொழில் வியாபாரம் முன்னேற்றமடையும். பரிகாரம்:  நடராஜர் பெருமானை வணங்கி வர எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். . அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - புதன் - வெள்ளி சந்திராஷ்டம தினங்கள் : மார்ச்:15, 16; ஏப்ரல்: 11, 12 அதிர்ஷ்ட தினங்கள் : ஏப்ரல்: 4,5, 6கிரகநிலை: ராசியில் குரு, சனி, கேது - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் - தைரிய, வீர்ய ஸ்தானத்தில் புதன் (வ) -   சுக ஸ்தானத்தில் சூர்யன்-  பஞ்சம, பூர்வ  ஸ்தானத்தில் செவ்வாய் -  ஸப்தம ஸ்தானத்தில் ராகு, சந்திரன் என கிரகநிலை இருக்கிறது. கிரகமாற்றங்கள்: பங்குனி மாதம் 01ம் தேதி சூரியன்  சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். பங்குனி மாதம் 06ம் தேதி  செவ்வாய்  ரண, ருண, ரோக  ஸ்தானத்திற்கு  பெயர்ச்சி ஆகிறார்.  பங்குனி மாதம் 06ம் தேதி  தைரிய, வீர்ய  ஸ்தானத்தில்  வக்ர நிவர்த்தி அடைகிறார். பங்குனி மாதம்  08ம் தேதி சுக்கிரன் தைரிய, வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பங்குனி மாதம் 25ம் தேதி புதன் சுக  ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். பங்குனி மாதம் 27ம் தேதி ராசியில்   குரு பகவான் வக்கிரம் ஆகிறார். பலன்: பிரச்சினைகள் ஏற்பட்டு பின்பு சரியாகும் தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் நீங்கள் மற்றவர் மத்தியில் உயர்ந்து நிற்பீர்கள். தைரியம் அதிகரிக்கும். சகோதரர்கள் வகையில் மிக நல்ல பலனை எதிர்பார்க்கலாம். நினைத்த வசதிகள் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். மனதெம்பு உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் கை கூடும். வாக்கு வன்மையால் காரியம் கைகூடும். ஆன்மிக எண்ணம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனகிலேசங்கள் மறைந்து ஒற்றுமை ஓங்கும். பிள்ளைகளிடம் பாசம் அதிகரிக்கும். பெற்றோகள் - உறவினர்களின் அரவணைப்பு அதிகமாகும். தொழில் வியாபாரம் மெத்தனமாக காணப்பட்டாலும் பணவரவு இருக்கும். புதிய வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி வியாபாரம் செய்வது நல்லது. போட்டிகளை கண்டு கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது.  உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. தீடீர் பயணங்கள் ஏற்படலாம். கலைத்துறையினருக்கு சோதனைகள் மிகுந்த காலமாக இருக்கும். வாய்ப்புகள் இருந்தாலும் உடல்நலம் ஒத்துழைக்காமல் போகலாம். சிறு பிரச்சனையாக இருந்தாலும் கவனமுடன் இருப்பது நல்லது அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கலாம். மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது. பணிகள் நிறைவடைய அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம். பெண்களுக்கு மனோதைரியம் கூடும். சாமர்த்தியமான பேச்சால் எடுத்த காரியம் வெற்றிபெறும். எடுத்த விசயங்கள் அனைத்திலும் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்விநிலை உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மற்றவர்களிடம் பாராட்டுகள் கிடைக்கும். மூலம்: இந்த மாதம் போட்டிகள் குறையும். தொழில் தொடர்பான தகராறுகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்க பெறுவீர்கள். கடன் பிரச்சனை தீரும். கணவன், மனைவிக்கிடையே  மனம்விட்டு பேசுவதன் மூலம் கருத்து வேற்றுமை வருவதை தவிர்க்கலாம். பிள்ளைகளிம் அனுசரணையாக நடந்து கொள்வது நன்மை தரும். பூராடம்: இந்த மாதம்  குடும்பத்திற்கு தேவையான  பொருட்கள் வாங்குவதன்  மூலம் செலவு உண்டாகும். சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும். உறவினர்கள் வருகை இருக்கும் அதே நேரத்தில் அவர்களுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.   உத்திராடம்:  இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள்  எந்த ஒரு வேலையையும் செய்து முடிப்பதில் வேகம் காட்டுவார்கள். சக ஊழியர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குலதெய்வத்தை வணங்குவதில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் விலகும். பரிகாரம்:  பைரவருக்கு அர்ச்சனை செய்து வணங்க மனகஷ்டம் நீங்கும். எல்லா நன்மைகளும் உண்டாகும்.  அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வியாழன் - வெள்ளி சந்திராஷ்டம தினங்கள் : மார்ச்:17, 18; ஏப்ரல்: 13 அதிர்ஷ்ட தினங்கள் : ஏப்ரல்: 7, 8கிரகநிலை: ராசியில் சுக்கிரன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் புதன் (வ) - தைரிய, வீர்ய ஸ்தானத்தில் சூர்யன்  -   சுக ஸ்தானத்தில் செவ்வாய் - ரண,ருண, ரோக ஸ்தானத்தில் ராகு, சந்திரன் - விரைய ஸ்தானத்தில் குரு, சனி, கேது என கிரகநிலை இருக்கிறது. கிரகமாற்றங்கள்: பங்குனி மாதம் 01ம் தேதி சூரியன் தைரிய, வீர்ய  ஸ்தானத்திற்கு மாறுகிறார். பங்குனி மாதம் 06ம் தேதி  செவ்வாய்  பஞ்சம, பூர்வ, புண்ணிய ஸ்தானத்திற்கு  பெயர்ச்சி ஆகிறார்.  பங்குனி மாதம் 06ம் தேதி  தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் புதன்  வக்ர நிவர்த்தி அடைகிறார்.  பங்குனி மாதம்  08ம் தேதி சுக்கிரன் தன, வாக்கு, குடும்ப  ஸ்தானத்திற்கு மாறுகிறார். பங்குனி மாதம் 25ம் தேதி புதன்  தைரிய, வீர்ய  ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். பங்குனி மாதம் 27ம் தேதி விரைய ஸ்தானத்தில்   குரு பகவான் வக்கிரம் ஆகிறார். பலன்: உழைப்பு அதிகமாக இருக்கும் மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் வீண் செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகலாம். காரியங்கள் முடிவதில் தாமதபோக்கு காணப்படும். தேவையற்ற மன சஞ்சலம் உண்டாகலாம். யாரையும் நேருக்கு நேர் எதிர்க்காமல் அனுசரித்து செல்வது நன்மைதரும். கெட்ட கனவுகள் தோன்றலாம். வயிறு தொடர்பான நோய்கள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.  வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் சென்று கலந்து கொள்ள நேரிடும். சிலருக்கு திருமணம் கைகூடும்.  கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். பிள்ளைகளால் நன்மை கிடைக்கும். தொழில், வியாபாரம் சுமாராக நடக்கும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். ஆர்டர்கள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு நீங்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை  செய்து முடித்து நன்மை பெறுவீர்கள். கேட்ட பண உதவி கிடைக்கப் பெறுவீர்கள். கலைத்துறையினர் கடுமையாக உழைப்பின் மூலம் முன்னேற வேண்டி இருக்கும். நண்பர்களின் உதவியால் நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது. அரசியல் துறையினருக்கு தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும்  நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும்  சந்திக்க நேரலாம். பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும். வீண் பேச்சை குறைப்பது நன்மை தரும். தேவையான பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்விக்கான பணிகளில் தாமதம் உண்டாகும். உழைப்பு அதிகரிக்கும். உத்திராடம்: இந்த மாதம் தொழிலதிபர்கள் தொழிலை விரிவு செய்வார்கள். எதிர்பார்த்த பணவரவுகள் வந்துசேரும். வியாபாரிகள் சிலர் வெளிநாட்டில் கிளைகள் தொடங்குவார்கள்.  கலைத்துறையினருக்கு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு மதிப்பு உயரும். திருவோணம்: இந்த மாதம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாகன சேர்க்கை ஏற்படும். சகோதரர்கள் மத்தியில் ஒற்றுமை கூடும். சொத்துப் பிரச்சினையில் நல்ல முடிவு வரும். வழக்குகள் சாதகமாகும்.  திருமணம் நடத்துவதில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் நீங்கும். வேலைசெய்யும் பிள்ளைகள் குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்வார்கள். அவிட்டம்: இந்த மாதம் உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் வந்துசேரும். தொழிலதிபர்கள் தொழிலை அபிவிருத்தி செய்வார்கள். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். பிள்ளைகள் பெற்றோர்களால் பாராட்டப்படுவார்கள். நீண்டகாலமாக இருந்துவந்த சொத்துப் பிரச்சினைகள் நல்ல தீர்வுக்கு வரும். பரிகாரம்: துர்க்கை அம்மனை வணங்க எல்லா நலனும் உண்டாகும். எதிர்ப்புகள் நீங்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வியாழன் - வெள்ளி சந்திராஷ்டம தினங்கள் : மார்ச்:19, 20 அதிர்ஷ்ட தினங்கள் : ஏப்ரல்: 9, 10கிரகநிலை:   ராசியில் புதன் (வ) - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் -  தைரிய, வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய் -   பஞ்சம, பூர்வ, புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன், ராகு - லாப ஸ்தானத்தில் குரு, சனி, கேது - விரைய ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகநிலை இருக்கிறது. கிரகமாற்றங்கள்: பங்குனி மாதம் 01ம் தேதி சூரியன் தன, வாக்கு, குடும்ப  ஸ்தானத்திற்கு மாறுகிறார். பங்குனி மாதம் 06ம் தேதி  செவ்வாய்  சுக ஸ்தானத்திற்கு  பெயர்ச்சி ஆகிறார்.  பங்குனி மாதம் 06ம் தேதி  ராசியில் புதன்  வக்ர நிவர்த்தி  அடைகிறார்.  பங்குனி மாதம்  08ம் தேதி சுக்கிரன் ராசிக்கு மாறுகிறார். பங்குனி மாதம் 25ம் தேதி புதன்   தன, வாக்கு, குடும்ப  ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். பங்குனி மாதம் 27ம் தேதி லாப ஸ்தானத்தில்   குரு பகவான் வக்கிரம் ஆகிறார். பலன்: லாபகரமான சூழ்நிலையை சந்திக்கப் போகும்  கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் வெளியூர் பயணவாய்ப்புகள் உண்டாகலாம். சோம்பலும் சோர்வும் உண்டாகலாம். மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஏற்படும். ஆனாலும் உங்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கையால் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வீர்கள். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடைதாமதம் ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் தொல்லைகள்  ஏற்படலாம். தாய் வழி உறவினர்களிடம் வீண் மனஸ்தாபம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே  கருத்து வேற்றுமை வரலாம். பிள்ளைகள் மேல் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.  தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நடக்காமல் சற்று மந்தமாக  காணப்படும்.  பணவரத்து தாமதமாகும். யோசித்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  உழைப்பு அதிகமாகும். முயற்சிகள் பயன்தராமல் போகலாம். சாதாரணமாக செய்யக்கூடிய காரியங்களைக் கூட அதிகமாக முயற்சிகள் எடுத்து செய்ய வேண்டியதிருக்கும். கலைத்துறையினருக்கு பொறுமையுடன் செயல்பட வேண்டும். மறைமுக போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம். கவனமாகச் செயல்பட்டால் லாபம் பெறலாம். அயல்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். அரசியல்வாதிகள் வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். மேலிடத்திலிருந்து முக்கிய பொறுப்புகள் உங்கள் கையில் வரும். சந்தோஷமான செய்தி வந்து சேரும். பெண்கள் யாரையும் எதிர்த்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். வீண் மனக்கவலை, காரிய தாமதம் உண்டாகலாம் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள். அவிட்டம்: இந்த மாதம் அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் வந்துசேரும். புதிய வீடுகட்டும் எண்ணம் நிறைவேறும். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்தபடி வருமானம் கிடைக்கும். குடும்பத்தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். ஸதயம்: இந்த மாதம் பிள்ளைகளுக்கு நல்ல வரன் அமையும். பிரிந்து வாழ்ந்த தம்பதியர்கள் ஒன்றுசேர்வார்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். எதிர்பார்த்த அரசு வேலை வந்துசேரும். ஒருசிலர் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பதவி உயர்வும், விரும்பிய இடத்துக்கு மாறுதலும் வந்துசேரும்.  பூரட்டாதி: இந்த மாதம் பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். தொழிலதிபர்கள் தொழிலை விரிவு செய்து, புதிய பங்குதாரர்களையும் பெறுவார்கள். அரசு ஊழியர்களின் வேலைப் பளு குறையும். உங்களுக்கு நன்மைகள் தரும் நாளாக இருக்கும். தொட்ட காரியம் அனைத்திலும் நன்மைகளைப் பெறுவீர்கள். நல்ல வருவாயையும் அடைவீர்கள்.  பரிகாரம்:  விநாயகர் அகவல் சொல்லி விநாயகரை வணங்க நோய் நீங்கும். மனகுழப்பம் தீரும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வெள்ளி சந்திராஷ்டம தினங்கள் : மார்ச்:21, 22 அதிர்ஷ்ட தினங்கள் : மார்ச் 15, 16; ஏப்ரல்: 11, 12கிரகநிலை:   ராசியில் சூர்யன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சந்திரன், ராகு -  தொழில் ஸ்தானத்தில் குரு, சனி, கேது - லாப ஸ்தானத்தில் சுக்ரன், - விரைய ஸ்தானத்தில் புதன் (வ)  என கிரகநிலை இருக்கிறது. கிரகமாற்றங்கள்: பங்குனி மாதம் 01ம் தேதி சூரியன் ராசிக்கு மாறுகிறார். பங்குனி மாதம் 06ம் தேதி  செவ்வாய்  தைரிய, வீர்ய ஸ்தானத்திற்கு  பெயர்ச்சி ஆகிறார்.  பங்குனி மாதம் 06ம் தேதி  விரைய ஸ்தானத்தில்  வக்ர நிவர்த்தி அடைகிறார்.  பங்குனி மாதம்  08ம் தேதி சுக்கிரன் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பங்குனி மாதம் 25ம் தேதி புதன்  ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். பங்குனி மாதம் 27ம் தேதி தொழில் ஸ்தானத்தில்   குரு பகவான் வக்கிரம் ஆகிறார். பலன்: மனம் மகிழும் படியான சூழ்நிலையில் இருக்கும் மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். தேவையற்ற மனகவலை உண்டாகும். வீண் ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நலம் தரும். குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாக பேசி பழகுவது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம். தொழிலில் இருந்து வந்த நிதி பிரச்சனை நீங்கும். வியாபாரம் தொய்வு நீங்கி சூடுபிடிக்கும். வாடிக்கையாளர்களின் வரவு கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலாளர்கள் உங்கள் மீது திருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  எதையும் குழப்பத்துடனேயே செய்ய நேரிடும். சக ஊழியர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உங்களை சிலர் காட்டிக் கொடுக்க நினைப்பர். கலைத்துறையினருக்கு நீண்டநாட்களாக இருந்த மன அழுத்தம் நீங்கும்படியான சூழல் உருவாகும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். எனினும் கவனமுடன் செயல்படுவது நன்மை தரும். அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள்  சாதகமான பலன் தரும். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது.எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். கிரகங்கள் உங்களுக்கு அனுகூலமான பலனைத் தரும். பணவரத்து அதிகரிக்கும். பெண்களுக்கு நினைத்த காரியத்தை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் மனக்கவலை உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைப்பதில் தடை ஏற்படலாம். கவனமாக படிப்பது நல்லது. பூரட்டாதி: இந்த மாதம் குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். தம்பதிகளிடையே இணக்கம் கூடும். வீட்டில் தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் இனிதே நடக்கும். பிள்ளைகளுக்கு திருமண வரன்கள் கை கூடி வரும். தாய்மாமன் வழியில் அனுகூலம் ஏற்படும். உத்திரட்டாதி: இந்த மாதம் வீண் சச்சரவுகள் வர வாய்ப்புண்டு. குழந்தை பாக்கியம் கிட்டும். பிள்ளைகள் வீட்டின் நிலையை அறிந்து நடப்பார்கள். பெற்றோர் உடல்நலனில் கவனம் தேவை. உழைப்பதற்குண்டான வாய்ப்புகள் நிறைய கிடைக்கும். தனியார் பணியில் இருப்பவர்கள் அதிகமான வேலைப் பளுவை சந்திப்பார்கள். ரேவதி: இந்த மாதம் பங்குதாரர்களிடம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். புதிதாக தொழில் தொடங்க போட்ட திட்டம் தள்ளிப்போகும். குடும்பத்தினரிடம் அமைதியாக செல்லவேண்டும். இளைஞர்கள் தகுதிக்கேற்ப புதிய பதவிகளை அடைவார்கள்.  பரிகாரம்: நவகிரகத்தில் குருபகவானை முல்லை மலர்சூடி வணங்க  எல்லா நன்மைகளும் உண்டாகும். செல்வநிலை உயரும்.. அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - புதன் - வியாழன் சந்திராஷ்டம தினங்கள் : மார்ச்: 23, 24 அதிர்ஷ்ட தினங்கள் : மார்ச் 17, 18; ஏப்ரல்: 13

newstm.in

Tags:
Next Story
Share it