1. Home
  2. ஜோதிடம்

Newstm - இந்த வார ராசிபலன் ஜூலை 07 - 13 வரையிலான பலன்கள்

Newstm - இந்த வார ராசிபலன் ஜூலை 07 - 13 வரையிலான பலன்கள்

newstm-weekly-astrology-july-07-13

Newstm - இந்த வார ராசிபலன் ஜூலை 07 - 13 வரையிலான பலன்கள்

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இந்த வார கிரகமாற்றங்கள்:
08-07-2019 அன்று காலை 06:10 மணிக்கு சந்திர பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.
10-07-2019 அன்று காலை 09:01 மணிக்கு சந்திர பகவான் கன்னி ராசியில் இருந்து துலா ராசிக்கு மாறுகிறார்.
12-07-2019 அன்று பகல் 01:14 மணிக்கு சந்திர பகவான் துலா ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார்.

மிதுனம்: கிரகநிலை: ராசியில் சூர்யன், புதன் (வ), சுக்ரன், ராஹூ - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு (வ) - களத்திர ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: கடுஞ்சொற்கள் பேசுவதை விரும்பாத மிதுன ராசி அன்பர்களே, இந்த வாரம் நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாகவும், பொறுப்பாகவும் செயல்படவேண்டும். தங்கள் உடல்நிலை சிறப்பான முன்னேற்றம் அடையும். இருந்தாலும் அவ்வப்போது சிற்சில அசௌகரியங்கள் வந்து போகலாம். தூக்கத்திற்கு ஆசைப்படாமல் உழைத்தீர்களென்றால் வெற்றி நிச்சயம். உங்கள் வாக்கு வன்மை கூடும். உங்கள் பேச்சிற்கு மதிப்பு கிடைக்கும்.  குடும்பத்தில் பிள்ளைகளின் படிப்பு மிகவும் நன்றாக இருக்கும்.உங்கள் பிள்ளைகள் படிப்பில் சாதனைகள் புரிய வேண்டிய காலமிது. பயன்படுத்திக் கொள்ளுங்கள். உடல்நிலையில் கவனம் தேவை. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மேலிடம் கொடுக்கும் அனைத்து வேலைகளையும் திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். தொழில் செய்பவர்கள் லாபகரமான தொழில்களில் முதலீடு செய்யுங்கள். எதிர்காலத்திற்கு சேமித்து வைக்கும் நேரமிது. வீண் ஆடம்பர செலவுகள், தேவையற்ற வீண் பேச்சுகள் ஆகியவற்றை குறையுங்கள். பெண்களுக்கு நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் மிகுந்த கவனம் தேவை. வாழ்க்கைத்துணைக்கு சந்தேகம் ஏற்படும்படி நடந்து கொள்வதை தவிருங்கள். தந்தையாருடன் தர்க்கம் கூடவே கூடாது. நண்பர்களின் மீது கோபம் கொள்வதையும் தவிர்க்கவும். மாணவர்கள் விளையாட்டில் சிறந்து விளங்குவீர்கள். புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பரிகாரம்: சிவனை வழிபட்டால் பாவம் நீங்கி பிரகாசமான எதிர்காலம் அமையும். அதிர்ஷ்டகிழமைகள்: புதன், வெள்ளி  கடகம்: கிரகநிலை: ராசியில் செவ்வாய் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் குரு (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ), கேது - விரைய ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன், ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: குடும்பத்தினருடன் அதீத பற்று கொண்ட கடக ராசி அன்பர்களே, இந்த வாரம் மேலான யோசனைகளை சொல்ல தயாராகுங்கள். சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் தவித்த நிலையும் மாறப் போகிறது. தைரியம் பிரகாசிக்கும். எனவே எந்த முடிவையும் சட்டென்று முடிவெடுங்கள். நல்ல விஷயங்களை தள்ளிப் போட வேண்டாம். வீடு, மனை, ஆடை, ஆபரணங்கள் போனற விஷயங்களில் அவசரம் வேண்டாம். குடும்பத்தில் பேசுவதற்கு முன் நன்கு யோசித்து பேசுங்கள். பண விஷயங்களில் மிகவும் கறாராக இருக்கவும். தேவையற்ற வீண் ஆடம்பர செலவுகளை குறையுங்கள். தைரியம் பிரகாசிக்கும் காலமிது. ஆனாலும் அசட்டுத்தைரியம் வேண்டாமே. தாயார் தாய்வழி உறவினர்களுடன் உறவுகள் மேலோங்கும். வீடு, மனை, வாகனம், ஆபரணங்கள் யோகம் கூடி வரும் காலமிது. உத்யோகஸ்தர்களுக்கு வாகனம், இயந்திரங்கள் பயன்படுத்தும்போதும் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தினில் நல்ல மதிப்பு கிடைக்கும். உங்களுக்கு பணி இட மாறுதல், பணி உயர்வு கிடைக்கும். பணம், நகை சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. தொழில் செய்பவர்கள் முதலீடுகள் செய்யும்போது மனைவியின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். தூங்கப் போகும் போது தேவையற்ற வீண் குழப்பங்களை களையுங்கள். பெண்களுக்கு கணவன் மனையின் உறவில் நல்ல முன்னேற்றம் உண்டு. கொஞ்சம் கோபத்தை குறைத்து கொள்வது நல்லது.  மாணவர்களுக்கு படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனம் தேவை. மற்றவருக்கு சொல்லி சொல்லி கொடுப்பதை விடுத்து நீங்கள் நன்று படியுங்கள். பரிகாரம்: புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் ஏதேனும் ஒரு கோவிலுக்குச் சந்தணம், குங்குமம் கொடுத்து  வழிபடவும். அதிர்ஷ்டகிழமைகள்: செவ்வாய், வியாழன்  சிம்மம்: கிரகநிலை: ராசியில் சந்திரன் - சுகஸ்தானத்தில் குரு (வ) - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ), கேது - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன், ராஹூ - விரைய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: மற்றவர்கள் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிம்ம ராசி அன்பர்களே, இந்த வாரம் வீடு, மனை வாங்க தடை, சுபகாரியம் செய்வதற்கு தடை, நற்செயல்கள் எது செய்வதற்கும் இருந்து வந்த தடைகள் நீங்கும். தாயாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். தாய் வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள், பிணக்குகள் நீங்கி புதிய விதமான உறவுகள் நீடிக்கும்.  குடும்பத்தில் பிள்ளைகளின் வளர்ப்பில் கவனம் தேவை. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். கவனம் தேவை. வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். உத்யோகஸ்தர்களுக்கு உங்களுக்கு பணியிடத்தினில் அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். தொழில் செய்பவர்கள் லாபகரமான முதலீடுகள் செய்ய தயங்க வேண்டாம். எந்த முதலீடுகளையுமே குறுகிய காலம் செய்யாமல் நீண்ட காலமாக செய்யுங்கள். தாய் தந்தையரை வணங்கி எந்த காரியத்தையும் ஆரம்பித்தால் வெற்றியே. பெண்கள் சிறிய நோய் என்றாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. மருத்துவம் சார்ந்த செலவுகள் காத்திருக்கின்றன. கவனம் தேவை. கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். இருந்தாலும் விட்டு கொடுத்து போவது நல்லது. திருமணத்தடை நீங்கி திருமணம் இனிதே நடைபெறும்.  மாணவமணிகள் மிகுந்த எச்சரிகையுடன் படிக்க வேண்டும். படிப்பில் மந்த நிலை ஏற்படலாம். தங்களது முழு திறனையும் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம்.   பரிகாரம்: அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று வியாழக்கிழமைதோறும் வலம் வரவும். அதிர்ஷ்டகிழமைகள்: ஞாயிறு, திங்கள்  கன்னி: கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு (வ) - சுகஸ்தானத்தில் சனி (வ), கேது - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன், ராஹூ - லாப ஸ்தானத்தில் செவ்வாய் - விரைய ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: செய்யும் தொழிலில் அதீத நம்பிக்கை கொள்ளும் கன்னி ராசி அன்பர்களே, இந்த வாரம் தடைபட்டிருந்த திருமணம், தடை பட்டிருந்த கல்வி, என தடையாக இருந்த அனைத்து காரியங்களும் தடைகள் விலகி ஒன்றன் பின் ஒன்றாக சிறப்பாக நடக்கும். கடுஞ்சொற்களை பேசுவவதை தவிர்ப்பது நல்லது. உங்கள் மதிப்பு உயரும். குடும்பத்தில் எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுக்கவும். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புண்டு. கவனம் தேவை. பிள்ளைகள் படிப்பில் மிகுந்த கவனம் தேவை. குழந்தைகள் இல்லாதவர்களுக்கு சந்தாண பாக்கியம் கிட்டும். அவர்களை கடிந்து கொள்ள வேண்டாம். எடுத்து சொல்லுங்கள். அவர்களை அவசரப்படுத்த வேண்டாம். உத்யோகஸ்தர்களுக்கு வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும். தேவையற்ற வீண் குழப்பங்கள், கற்பனைகள் வேண்டாம். தொழில் செய்பவர்கள் லாபகரமான முதலீடுகளில் யாரையும் நம்பவேண்டாம். உங்கள் மீது யார் மிகுந்த அன்பு வைத்திருக்கிறார்களோ அவர்களை நம்பவும். பெண்களுக்கு வாழ்க்கைத்துணையுடன் உறவு சிறக்கும். நண்பர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். எதிரிகளை வீழ்த்த வியூகம் அமைப்பீர்கள். வழக்கு வியாஜ்ஜியங்களில் உங்கள் பக்கம் வெற்றி கிடைக்கும். தந்தையாருடன் உறவு பிரகாசிக்கும். பிதுரார்ஜித சொத்துக்கள் உங்களை வந்து அடையும். மாணவர்கள் கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிறிது முயற்சி தேவை.   பரிகாரம்: பெருமாள் கோவிலுக்கு சென்று வலம் வரவும்.  எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். அதிர்ஷ்டகிழமைகள்: புதன், வெள்ளி  துலாம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ), கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன், ராஹூ - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: அடிமனதில் எதையும் கணக்கு பார்க்கும் துலாம் ராசி அன்பர்களே, இந்த வாரம்  எதிர்பார்த்திருந்த தனலாபம், தேக ஆரோக்கியத்தில் நன்மை, தாயார் தாய் வழி உறவினர்களுடன் இருந்த சுமூக நிலைமை என அனைத்து நல்ல பலன்களும் அப்படியே நடக்கும். எந்த இடத்திற்கு சென்றாலும் ஏதாவது ஒரு தடங்கல் வந்து கொண்டே இருந்ததல்லவா இனி அந்த நிலைமை மாறும். சொன்னால் சொன்ன நேரத்தில் உங்களால் இனி செல்ல முடியும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் பேச்சைக்க் கேட்டு நடப்பர். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஒரு முறைக்கு இரு முறை யோசித்து செயல்படவும். தைரியத்தை இழக்காதீர்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும். வீடு, வாகனம், ஆபரணங்கள் வாங்கும் போது கவனம் தேவை. தாயார், தாய் வழி உறவினர்களுடன் தேவைப்படும்போது மட்டும் பேசுங்கள். உத்யோகஸ்தர்களுக்கு நினைத்த இடத்தில் நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் அங்கீகரிக்கப்படுவீர்கள். தொழில் செய்பவர்கள் யாருக்கும் கடன் கொடுக்கும் முன் எச்சரிக்கை தேவை. நன்கு விசாரித்து எதையும் செய்யவும். எங்கும் பயணம் செய்யும் முன் மிகுந்த முன்னேற்பாடுடன் செல்லவும்.   பெண்களுக்கு வாழ்க்கைத்துணையுடன் உரசல்கள் எழலாம். விட்டு கொடுத்து, அனுசரித்து போங்கள். வாகனங்களை கையாளும்போது கவனம் தேவை. வேகம் கூடவே கூடாது. தந்தையாருடன் உறவு பிரகாசிக்கும்.  மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை. சின்ன சின்ன இடையூறுகளை களைந்தால் உங்கள் சாதனைகளை பார்க்கலாம். பரிகாரம்: மாரியம்மனை ஞாயிற்றுக் கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை நீங்கும். அதிர்ஷ்டகிழமைகள்: புதன், வெள்ளி  விருச்சிகம்: கிரகநிலை: ராசியில் குரு (வ) - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ), கேது - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன், ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: புதிய உறவுகள் அதிகம் கிடைக்கப் பெறும் விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்கள் முரட்டுதனத்தை விட்டுவிட்டு சற்று இறங்கி வாருங்கள். உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். வாகனம், இயந்திரங்கள், நீர்நிலைகளில் கவனம் தேவை. சோம்பல் கூடவே கூடாது. தந்தையாருடன் நல்ல இணக்கமான சூழ்நிலை நிலவும்.  குடும்பத்தில் சின்ன சின்ன கருத்து மோதல்கள் வந்து மறையும். கடன் கொடுப்பதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கவும். வாக்கு கொடுப்பதற்கு முன் யோசனை செய்து கொடுக்கவும். காப்பாற்ற முடியாமல் போகலாம். தைரியம் சிறக்கும். அதற்காக அசட்டு தைரியம் எதிலும் கூடாது. இளைய சகோதரத்திடமிருந்து அனுகூலம் கிடைக்கும். வீடு, மனை, வாகனம் யோகம் உண்டு. பயன்படுத்தி கொள்ளவும். உத்யோகஸ்தர்களுக்கு பணி செய்யும் இடத்தினில் எச்சரிக்கை தேவை. சிலருக்கு பணியின் காரணமாக வெளிநாடு அயலூர் செல்ல வேண்டி வரலாம். தொழிலில் லாபகரமான முதலீடுகளில் முதலீடு செய்ய தகுதியானவர்களின் ஆலோசனைகளை பெற்று செய்யவும். தூங்கப்போகும் முன் வீண் கற்பனைகள், சந்தேகங்கள் கூடவே கூடாது. பெண்களுக்கு உடல்நிலையில் கவனம் தேவை. மருத்துவத்திற்கு என சேமிக்க பழகுங்கள். திடீர் செலவுகள் வந்து கடுப்பேற்றலாம். கவனம். வாழ்க்கைத்துணையுடன் அமைதியை கடைபிடியுங்கள்.  மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை. எச்சரிக்கையுடன் நேரத்தை வீணாக்காமல் படிக்கவும். வெற்றி நிச்சயம். குறுக்கு வழிகளை நாடக்கூடாது. அவமானம் ஏற்படலாம். பரிகாரம்: தினம்தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று வலம் வருவது  நல்லது.  அதிர்ஷ்டகிழமைகள்: செவ்வாய், புதன்  தனுசு: கிரகநிலை: ராசியில் சனி (வ), கேது - களத்திர  ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன், ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - விரைய ஸ்தானத்தில் குரு (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: கொடுத்த வாக்கை காப்பாற்றத் துடிக்கும் தனுசு ராசி அன்பர்களே, இந்த வாரம் முயற்சி செய்த அளவுக்கு வெற்றி, ஆனால் நினைத்த இடத்திற்கு வரத்தடைகள் என அனைத்தும் இனி மாறும். முயற்சிகளை இருமடங்காக்குங்கள், வெற்றிகள் உங்களைத் தேடி வரும் காலமிது. உங்கள் பொன்னான நேரத்தை அடுத்தவருக்காக வீணாக்காதீர்கள். அடுத்தவரை பற்றி பேசாவிட்டாலும் நீங்கள் கூறியதாக சிலர் பற்ற வைக்க கூடும். கவனம் தேவை. குடும்பத்தில் வாழ்க்கைதுணையுடன் உறவு சிறக்கும். உடல்நிலையில் மிகுந்த கவனம் தேவை. வாகனங்களை கையாளும்போது எச்சரிக்கை தேவை. புதிய நண்பர்களை தேர்ந்தெடுக்கும்போது கவனம் தேவை. தந்தையுடன் உறவு சிறக்கும். உத்யோகஸ்தர்களுக்கு வேலை செய்யும் இடத்தினில் மேலதிகாரிளுடன் வாக்குவாதம் ஏற்படலாம். உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் மென்மையை கடைபிடியுங்கள். நல்ல பெயர் கிடைக்கும். பணி மாற்றம் கிடைக்கும். புதிய இடத்தில் பணிச்சுமை ஏற்படலாம். புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டு பணியினை செவ்வனே செய்யுங்கள். தொழில் செய்பவர்கள் உங்கள் வியாபாராத்தை பெருக்கும் காலமிது. மிகவும் லாபகரமான முதலீடுகள் செய்வீர்கள். தூங்கப் போகும் முன் எந்த விதமான யோசனைகளும் வேண்டாம். ஏதேனும் பயணம் செய்ய நேர்ந்தால் சரியாக திட்டமிடவும். பெண்களுக்கு வீடு, மனை வாகனம் வாங்கும் யோகம் அமையும். தாயார், தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் ஏற்பட்டு மறையும். முன்னோர்கள் வழிபாடு மிகவும் முக்கியமானது என்பதை உணர்ந்து அதை செய்ய மறவாதீர்கள்.  மாணவர்கள் நண்பர்களிடத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டிய நேரமிது. பரிகாரம்: அம்பாளை தீபம் ஏற்றி வழிபட, வயதான தம்பதிகளிடம் ஆசீர்வாதம் பெற எல்லா காரியங்களிலும் நன்மை உண்டாகும் செய்   தொழில் சிறக்கும். அதிர்ஷ்டகிழமைகள்: வியாழன், சனி  மகரம்: கிரகநிலை: ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன், ராஹூ - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் குரு (வ) - விரைய ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: கொடுத்த வேலையை சிரமேற்க்கொண்டு செய்யும் மகர ராசி அன்பர்களே, இந்த வாரம் இளைய சகோதரத்துடன் சின்ன சின்ன நெருடல்கள் இருக்கும். சின்ன சின்ன குழப்பங்களனைத்தும் மறையும். தாய் தந்தை ஆரோக்கியத்தின் மீது கவனம் தேவை. அவர்களின் மருத்துவ செலவிற்கு சிறிது தொகையை செலவழிக்க வேண்டி வரலாம். குடும்பத்தில் இளையசகோதரத்தின் மூலம் லாபம் கிடைக்கும். சந்தாண பாக்கியம் கிட்டும். தெய்வ யாத்திரை, புனித ஸ்தலங்களுக்கு செல்வது போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும். முன்னோர்களை வழிபட மறக்க வேண்டாம். கோபம் கூடவே கூடாது உத்யோகஸ்தர்களுக்கு வேலை செய்யும் இடத்தினில் நல்ல பெயர் கிடைக்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு பொன்னான காலமிது.    தொழில் செய்யும் இடத்தில் தர்க்கம் கூடாது. மேலதிகாரிகள் பளு கொடுக்கலாம். எதையும் செய்யும் திறமை உங்களிடம் இருப்பதை உணருங்கள். பாராட்டுகளும், பரிசுகளும் குவியும். பெண்களுக்கு பிள்ளைகள் படிப்பில் கவனம் தேவை. பிள்ளைகளுடன் தேவையற்ற வீண் வாதங்களில் ஈடுபடாதீர்கள். உடல்நிலையில் சீரான நிலை இருந்தாலும் கவனம் தேவை. கணவன் மனைவி உறவில் மிகுந்த எச்சரிக்கை தேவை.  மாணவர்கள் பாதியில் விட்ட படிப்பை தொடருவீர்கள். படிப்பில் சாதனைகள் புரிய முயற்சி மேற்கொள்வீர்கள். நல்ல நண்பர்களின் மூலம் பல நன்மைகளைப் பெறுவீர்கள். பரிகாரம்: சிவனை வியாழக்கிழமைகளில் வணங்கி வருவது மன அமைதியை தரும். கடன் தொல்லை குறையும். அதிர்ஷ்டகிழமைகள்: வெள்ளி,சனி  கும்பம்: கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன், ராஹூ - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் குரு (வ) - லாப ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: நம்பியவர்களை உயர்ந்த நிலையில் வைத்துப் பார்க்கத் துடிக்கும் கும்ப ராசி அன்பர்களே, இந்த வாரம் வாழ்க்கைத்துணையுடன் இருந்த பிணக்க நிலை மாறும். முன்கோபம், பிடிவாதம் நீங்கும். குடும்பத்தில் இருந்த வந்த மந்த நிலை மாறி உற்சாகம் துளிர்விடும். வரவுக்கு மேல் செலவு இருந்த நிலைமையும் மெல்ல மெல்ல மாறும்.  குடும்பத்தில் நல்ல நல்ல விஷயங்கள், விஷேசங்கள் நடக்கும். உங்கள் தைரியத்திற்கு இறைவனை வேண்டுங்கள். பிள்ளைகளின் மேல் கவனம் வைக்க வேண்டும். முன்னோர்களை அமாவாசை தோறும் வழிபடவும். மறைவிடங்களில் சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம். கவனம் தேவை. வாழ்க்கைத்துணையுடன் இருந்த வந்த மனக்கசப்பு நீங்கி புதிய உத்வேகம் பிறக்கும். தந்தையாருடன் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. சக ஊழியர்களிடம் பேசும் போதும் கவனமுடன் பேசவும். தேவையில்லாதவற்றை பேச வேண்டாம். தொழில் செய்யும் இடத்தில் இடமாற்றம், பணி பளு வரலாம். எதிர்கொள்ள தயாராகுங்கள். மிகுந்த சாமர்த்தியசாலியான நீங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்குவீர்கள். பெண்கள் தேவையற்ற வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். தந்தையார் உடல்நிலை முன்னேற்றம் ஏற்படும். தந்தையுடன் கருத்து பரிமாற்றம் செய்யும் போது கவனம் தேவை.  மாணவர்களுக்கு புத்தம் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். படிப்பில் முன்னேற்றம் இருக்கும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். பரிகாரம்: அறுபடை வீடு முருகனை தரிசித்து தீபம் ஏற்றி வழிபட இழுபறி யான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். வாழ்க்கை  வளம் பெறும். அதிர்ஷ்டகிழமைகள்: செவ்வாய், சனி  மீனம்: கிரகநிலை: சுகஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன், ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு (வ) - தொழில் ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: காரியமே கண்ணாக இருக்கும் மீன ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்கள் பேச்சிற்கு அடையாளம் கிடைக்கும். சிறிய சிறிய செலவுகள் வந்து பயமுறுத்தினாலும் அதை சமாளித்து விடுவீர்கள்.  தைரியமாக எதையும் எதிர் கொள்வீர்கள். உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை பிறக்கும். குடும்பத்தில் எதற்கெடுத்தாலும் பிள்ளைகளை சத்தம் போடுவதை குறையுங்கள். உங்கள் பிள்ளைகள் உங்களை விட புத்திசாலிகள். தாய், தாய்வழி உறவினர்களுடன் உறவு பலிக்கும். மருத்திவ செலவுகள் காத்திருக்கிறது. கவனம் தேவை. உத்யோகஸ்தர்களுக்கு வேலை செய்யும் இடத்தினில் நல்ல பெயர் கிடைக்கும். சிலருக்கு அவார்டுகள் கிடைக்கலாம். தொழில் செய்பவர்கள் எங்கு முதலீடு செய்வது என்பதனை தகுந்த ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று செய்யுங்கள். நீங்களாகவே எதிலும் முயற்சி செய்து பார்த்தல் கூடாது. பெண்களுக்கு வாழ்க்கைத்துணையுடன் தூரதேச பிரயாணங்கள் செய்யும் சூழ்நிலைகள் வரலாம். நண்பர்கள், உறவினர்களிடம் கவனம் தேவை. நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்றே தெரியாமல் நீங்கள் பழக வேண்டி வரலாம்.  மாணவர்களுக்கு படிப்பில் மிகுந்த கவனம் தேவை. மிகுந்த நிதானமாக எந்த காரியத்தையும் செய்ய வேண்டும். வார்த்தைகளில் நிதானம் தேவை. தேவை இல்லாத இடங்களில் கருத்து கூற முயல வேண்டாம். பரிகாரம்: முடிந்தவரை பெருமாள் ஆலயத்தை வலம் வந்தால் நல்லது. அதிர்ஷ்டகிழமைகள்: ஞாயிறு, வியாழன்  

newstm.in

Trending News

Latest News

You May Like