Newstm-இந்த வார பலன்கள் - மே 19 முதல் 25 வரையிலான ராசிபலன்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணித்த இந்த வார ராசி பலன்கள் - மே 19 முதல் 25 வரையிலான வாரபலன்

Newstm-இந்த வார பலன்கள் - மே 19 முதல் 25 வரையிலான ராசிபலன்
X

newstm-weekly-astrology

Newstm-இந்த வார பலன்கள் - மே 19 முதல் 25 வரையிலான ராசிபலன்

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இந்த வார கிரக மாற்றங்கள்:

21-05-2019 அன்று காலை 03:57 மணிக்கு சந்திர பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார்.

23-05-2019 அன்று பகல் 01:13 மணிக்கு சந்திர பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு மாறுகிறார்.

25-05-2019 அன்று இரவு 12:23 மணிக்கு சந்திர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுகிறார்.

தளபதி ராசி என்று கருதப்படும் மேஷ ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சில பிரச்சினைகளை தீர்த்து வைக்க நண்பர்கள் சிலர் முயற்சி செய்வார்கள். ஓரளவு வருமானம் இருக்கும். சிலருக்கு வயிறு சம்மந்தமான உபாதைகள் ஏற்படலாம். உடனே மருத்துவரிடம் சென்று வரவும். அலட்சியம் வேண்டாம்.  யாராவது வம்புக்கு சண்டை போடுவார்கள். அதை பொருட்படுத்த வேண்டாம். தொழிலதிபர்களுக்கு வசதி வாய்ப்பில் பிரச்சினைகல் இருக்காது. உற்பத்தியில் தொழிலாளர்களால் அவ்வப்போது பிரச்சினைகள் வரலாம். கவனமாக இருங்கள். உத்யோகத்தில் நன்கு தெரிந்தவர்களாக இருப்பினும் யாரிடமும் எந்த ரகசியங்களையும் கூற வேண்டாம். எதிர்காலத்தில் அது உங்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும். குடும்பத்தை பொறுத்த வரை உடல் நிலை யாருக்காவது பாதித்திருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி தக்க தருணத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. எல்லோரிடமும் அன்பு காட்டுங்கள். உங்கள் வார்த்தை சிலரை நோகடிக்கலாம். கவனமாக பேசுங்கள். பெண்மணிகளுக்கு ஆடை ஆபரணங்கள் விரும்பிய படி கிடைக்க வாய்ப்பிருக்கிறது. வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களையும் வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகளுக்கு அவ்வப்போது குழப்பங்களும், சஞ்சலமும் தோன்றி மறையும். கல்வி நலனை பாதிக்காமல் பார்த்துக் கொள்வது உங்களிடம் தான் உள்ளது. பரிகாரம்:  ஸ்ரீமன் நாராயணருக்கு நெய் விளக்கேற்றி வழிபடுங்கள். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி  பெண் மந்திரி ராசி என்று கருதப்படும் ரிஷப ராசி அன்பர்களே,, இந்த வாரம் முன்னேற்றங்கள் உண்டாகக் கூடிய வாரம். எல்லாவற்றிலும் வெற்றியைக் காண்பீர்கள். நிதி நிலைமைக் கட்டுக்குள் இருக்கும். திருமண வயதினர்களாக இருந்தால் திருமண வாய்ப்பு கட்டாயம் ஏற்படும். திருமண வயதில் மகன் அல்லது மகள் இருப்பின் அவர்களது திருமணம் நிச்சயிக்கக் கூடும்.  கடினமாக உழைக்க வேண்டி வரலாம். தொழிலதிபர்கள் புதிய முயற்சிகளை வாரத்தின் முதலிலோ அல்லது இறுதியிலோ மேற்கொள்ளலாம். எதிர்பார்த்த லாபம் கிடைப்பது சந்தோஷத்தைத் தரும். ஏற்றுமதி தொழில் சிறப்பாக நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடன் பணிபுரிவோரை அனுசரித்து செல்லுதல் அவசியம். சிறு சிறு சங்கடங்கள் வந்தாலும் அதை எளிமையாக சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தில் பெரியோர் அறிவுரை கேட்டு நடப்பது பிரச்சினைகளை தவிர்க்கும். நண்பர் ஒருவருக்கு உதவுவதாக வாக்கு கொடுத்து விட்டோமே என்ற காரணத்திற்காக கடின முயற்சியை மேற்கொள்வீர்கள்.  தந்தையின் ஆதரவு உண்டு. பெண்கள் எதிலும் சற்று நிதானமாக நடந்து கொள்வது உங்களுக்கு நற்பெயரை ஏற்படுத்தித் தரும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை நிம்மதியைத் தராது. மாணவமணிகள் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கப் பெற்று உற்சாகத்துடன் திகழ்வீர்கள். பெற்றோர் உறு துணையாக இருப்பார்கள். பரிகாரம்: தோறும் யோக நரசிம்மரை நெய்தீபம் ஏற்றி வழிபடுங்கள். கோபம் குறையும். அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி  இளவரசன் ராசி என்று கருதப்படும் மிதுன ராசி அன்பர்களே, இந்த வாரம் நிதி நிலைமை நல்லபடி இருக்கும் என்றாலும் எதிர்பாராத வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். வருமானம் திருப்தி தருவதால் அதைச் சமாளித்து விடுவீர்கள். மனதில் ஆன்மீகம் குடிகொண்டிருக்கும். தெய்வீக சிந்தனையுடன் இருப்பதால் தடைகள் வந்தாலும் அதை எளிதில் சமாளித்து விடுவீர்கள். தொழிலில் முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். சிறு வாணிபத்தில் இருப்போருக்கு நல்ல லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருக்கும் சக ஊழியர்களை அனுசரித்து செல்லுங்கள்.  அலுவலகப் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கப் பெற்று நிம்மதி அடைவீர்கள். குடும்பத்தில் உறவினர்கள் தங்களை நாடி வந்து நலம் விசாரிப்பார்கள். தாயாரின் உடல் நலத்தில் அக்கறை காட்டுதல் அவசியம். குடும்பச் சூழ்நிலை மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். பெண்கள் உடல்நிலையில் அக்கறை செலுத்துங்கள். ஆடம்பர செலவுகளை செய்ய வேண்டாம். திடீர் பிரயாணங்கள் ஏற்படுவதால்  செலவுகள் ஏற்படும். மாணவர்கள் செமஸ்டர் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெறுவீர்கள். ஞாபக சக்தி நல்லபடியாக இருக்கும்.  பரிகாரம்:  அம்பாளை வழிபட ஏற்றம் உண்டு. அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள்,  வியாழன்மஹாராணி ராசி என்று கருதப்படும் கடக ராசி அன்பர்களே, இந்த வாரம் மனதில் நிம்மதி குடி கொண்டிருக்கும் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.  வழக்கு, வியாஜ்ஜியங்கள் சற்று தள்ளிப் போகலாம். தொலை தூரத்திலிருந்து வரும் செய்திகள் மனதிற்கு நிம்மதி அளிக்கும். உடல்நிலையில் சற்று பிரச்சினைகள் வரலாம். தக்க நேரத்தில் மருத்துவரை அணுகவும். தொழில்துறையினர் போட்டிகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும். இருப்பினும் அதற்கேற்ற முன்னேற்றம் இருப்பதால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.  அலுவலகத்தில் உங்கள் மதிப்பும், மரியாதையும் கூடும். சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தில் வருமானத்திற்கேற்ப செலவுகளும் இருக்கக்கூடும் என்பதால் நீங்கள் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உறவினர்கள் உங்கள் வீட்டிற்கு வந்து செல்வார்கள். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். பெண்மணிகள் பொறுமையாக இருந்து வர வேண்டிய வாரமிது. பணிக்குச் சென்று வரும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மனநிம்மதியைத் தராது. வெளிநாடுகளில் உயர்கல்வி முடித்த மாணவ மணிகளுக்கு அங்கேயே நல்ல வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. தங்களுக்கு அது மகிழ்ச்சியாக இருக்கும். பரிகாரம்: விநாயகர் அகவல் சொல்லி வாருங்கள். காரியத்தடை நீங்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி  மஹாராஜ ராசி என்று கருதப்படும் சிம்ம ராசி அன்பர்களே, இந்த வாரம் மிகவும் அலைச்சல் இருக்கும்.  இப்பொழுது திருமணத்திற்குச் சம்மத்திப்பார்கள். அது பெற்றோருக்கு மன நிறைவைத் தரும். புதிய வீடு, வாகனம் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும்.  வாரத்தின் மத்தியில் மட்டும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது உங்களுக்கு மன நிம்மதி அளிக்கும். புதிய தொழில்த் திட்டங்களில் ஈடுபடுவதை மட்டும் தவிர்த்து விடுவது நல்லது. மற்றபடி தங்கள் தொழிலி வெற்றியைக் காணமுடியும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலும் சிறப்பாக நடைபெறும். உத்தியோகத்தில் உங்களுடைய வேலையை மட்டும் நீங்கள் செய்து வாருங்கள். சக ஊழியர்களால் பிரச்சினைகள் ஏற்பட்டு பின்பு அகலும். குடும்பத்தில் குழந்தைகளைப் பற்றிய கவலை இருந்து கொண்டிருக்கும். அவர்களின் படிப்பு சம்மந்தமான கவலை இருந்து கொண்டிருக்கும். அவர்களை கடிந்து கொள்வீர்கள். திருமண முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டு பின்பு சரியாகும். பெண்களை பொறுத்தவரை மனநிம்மதிக்கு குறைவிருக்காது என்றே கூற வேண்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்கள் எதிர்பார்த்த மேற்படிப்பு கிடைக்கப் பெறுவீர்கள். தந்தையாரின் ஒத்துழைப்பு உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் மனம் நிம்மதி பெறும். பரிகாரம்: முருகப் பெருமானை விளகேற்றி வழிபடுங்கள். அரளிமாலை சாற்றுங்கள்.  அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்  இளவரசி ராசி என்று கருதப்படும் கன்னி ராசி அன்பர்களே, இந்த வாரம் பொதுவாக வருமானம் நல்லபடி இருக்கும். செலவுகள் ஏற்பட்டாலும் அதை உங்களால் சமாளித்து விட முடியும். ஒரு கடனை அடைப்பதற்கு மற்றொரு கடனை வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். விலையுயர்ந்த பொருட்களை கையாளும் போது கவனம் தேவை. சிலருக்கு திருமண வாய்ப்பு கை கூடி வரலாம். தொழிலதிபர்களுக்கு வசதி வாய்ப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவியும், உற்பத்தியும், வருமானமும் கிடைக்கப் பெறுவதால் சந்தோஷமான வாரம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நற்பெயர் கிடைக்கும். வேலையில் மாற்றம் வந்தால் அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள். சிறு ஊதிய உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் சிலருக்கு குழந்தைச் செல்வம் உண்டாகலாம். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது குடும்பத்தில் பிரச்சினைகள் வராமல் தடுக்கும்.  அக்கம் பக்கத்தில் பழகும் போது கவனம் தேவை. குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு  இந்த வாரம் அனுகூலமாகவே இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு நிம்மதியாகவே இருக்கும். மாணவர்களின் நெருங்கிய நண்பர்களே ஆனாலும் அவர்களிடம் எல்லை மீறி பழகாமலிருப்பது நல்லது. படிப்பில் கவனத்தைச் செலுத்தவும். பரிகாரம்: ஸ்ரீ ராமரை வணங்கவும். நல்லவர்கள், கெட்டவர்கள் அடையாளம் தெரியும். அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி  ஆண் மந்திரி ராசி என்று கருதப்படும் துலா ராசி அன்பர்களே, இந்த வாரம் அதிர்ஷ்டமான வாரம். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் அதிகரிக்கும். மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவது பற்றிய பேச்சு வார்த்தை நடக்கும். விருந்து, கேளிக்கை போன்ற மனதிற்கு சந்தோஷம் ஏற்படுத்தும் வகையில் சூழ்நிலை உண்டாகலாம். தொழிலைப் பொருத்த வரையில் பிரச்சினை ஏதும் இருக்காது இந்த வாரம். வாரக்கடைசியில் சிலர் தொழில் சம்மந்தமாக வெளியூர் செல்ல வேண்டி வரலாம். உத்தியோகத்தில் பொறுமையாக இருக்க வேண்டிய வாரம். சிலர் வேறு நிறுவனத்திற்கு மாறிவிடலாமா என்று நினைப்பீர்கள். குடும்ப வருமானம் நல்ல படியாக இருக்கும். எதிர்பாராத வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். சகோதரர் அல்லது சகோதரியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் பெரிய அளவில் பிரச்சினை ஏதும் வராது. சிலர் குல தெய்வ பிரார்த்தனையை செய்து முடிப்பீர்கள். பெண்கள் குடும்பத்தில் நற்பெயர் எடுக்க பாடுபட வேண்டியிருக்கும். பிள்ளைகள் அடிக்கடி உங்களை தொந்தரவு செய்வார்கள். நேரத்திற்கு உணவருந்துங்கள். மாணவ மணிகள் சிலருக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கிரகிப்புத்திறனும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும். பரிகாரம்:  காகத்திற்கு அன்னமிடவும். பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும், அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, செவ்வாய்பெண் தளபதி ராசி என்று கருதப்படும் விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வாரம் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கை கூடி வரலாம். திருமண காரியங்களை ஒத்திப் போட வேண்டாம். மூத்த சகோதரர்களுடன் விட்டுக் கொடுத்து போகவும்.  வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சி செய்பவர்கள் முயற்சி வெற்றி பெறும்.  தக்க நேரத்தில் நீங்கள் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். நன்மை அதிகம் நடைபெறும் நல்ல நேரம். தொழில் துறையினருக்கு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் அது பாதிப்பை ஏற்படுத்தாது. இருப்பினும் நீங்கள் சற்று கவனமாகவே இருப்பது நல்லது. உத்தியோகத்தில் சிலருக்கு நீண்ட நாளாக  கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதனால் மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கும். குடும்பத்தின் வருமானம் நல்லபடி இருக்கும். கணவன் - மனைவியரிடையே நல்ல ஒற்றுமை இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். பெண்கள் மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். நெருங்கிய உறவினர்களிடமிருந்து ஒரு நல்ல செய்தி வரக்கூடும் மாணவர்களை பிரச்சினைகளிடமிருந்து காப்பாற்றும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவது எதிர்பார்த்த பாடங்களில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். பரிகாரம்:  நல்லெண்ணெய் தீபம் ஏற்றி பைரவரை 11 முறை வழிபடவும். அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி,  சனி  தேவ குருமார்கள் ராசி என்று கருதப்படும் தனுசு ராசி அன்பர்களே, இந்த வாரம் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் தள்ளிப் போகலாம். நிரந்தர நோயினால் அவதிப்பட்டு வந்தவர்களுக்கு அதிலிருந்து சற்று அந்நிலை மாறி நல்ல குணம் ஏற்படும். தற்போதிருந்து வரும் வீட்டிலிருந்து வேறொரு வசதியான வீட்டிற்கு குடிபெயரும் வாய்ப்பு சிலருக்கு அமைந்துள்ளது. தொழில்துறையில்  நீங்கள் எவ்வளவுதான் பாடுபட்டு உழைத்தாலும் அதற்கேற்ற முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியாது. அதிக அளவில் பணத்தை முதலீடு செய்தால் நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உத்யோகஸ்தர்களுக்கு முயற்சிகளில் சாதகமான பலன் உண்டா கும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தில் கலகலப்பு உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர் கள்.  குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். அக்கம்பக்கத் தினரிடமும் உறவினர்கள், நண்பர்களி டம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.  பெண்களுக்கு எதிர்பார்த்த இடத்தில் நல்ல மாற்றம் உண்டாகும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கல்விக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். பரிகாரம்:  அருகிலிருக்கும் சித்தர் கோவிலுக்குச் சென்று வர மனதில் மகிழ்ச்சி உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளிசட்ட வல்லுநர் ராசி என்று கருதப்படும் மகர ராசி அன்பர்களே, இந்த வாரம். சுமாரான வாரமாகவே இருக்கும். நிதிநிலைமையும் எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு இருக்குமா என்றால் சந்தேகம் தான். சிலருக்கு கண் சம்மந்தமான நோய்கள் வரக்கூடும். மனதில் ஏதோ குழப்பமும் சஞ்சலமும் குடி கொண்டிருக்கும். சிலருக்கு ஆன்மிகச் சிந்தனை ஏற்பட்டு அதன் மீது நாட்டம் அதிகரிக்கும். எதிர்பார்த்த எந்த உதவியும் தள்ளிப் போகலாம். தொழில்துறையில் நீங்கள் எவ்வளவுதான் பாடுபட்டு உழைத்தாலும் அதற்கேற்ற முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியாது. அதிக அளவில் பணத்தை முதலீடு செய்தால் நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருந்து வர வேண்டியது அவசியம். பணப் பொறுப்புகளில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்தைச் செலுத்துவது நல்லது குடும்பத்தாரின் சுக, துக்கங்களில் பங்கு கொள்வதுடன் அவருக்கு ஆதரவாகவும் இருந்து வருவீர்கள். வசதி வாய்ப்புக்கு குறைவிருக்காது.  உடன்பிறந்தோர் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடந்து கொள்வார்கள். பெண்கள் குடும்ப நிர்வாகத்தில் உயர்வான பதவியை எட்டுவார்கள். சிலருக்கு வேலைக்கு முயற்சி செய்தால் நல்ல வேலை கிடைக்கும். சிக்கன நடவடிக்கை தேவை. மாணவர்களுக்கு கிர்கிக்கும் ஆற்றல் அதிகரிக்கும். யாரிடமும் விட்டுக் கொடுத்து காரியத்தை நிகழ்த்துங்கள். முடிவு சாதகமாக இருக்கும். பரிகாரம்:  நவகிரகத்தை வலம் வாருங்கள். தடைகள் விலகும். அதிர்ஷ்ட கிழமைகள்: சனி,  செவ்வாய்  உழைக்கும் வர்க்க ராசி என்று கருதப்படும் கும்ப ராசி அன்பர்களே, இந்த வாரம் பணவரவிற்கு குறைவிருக்காது. ஆனால் வரவிற்கு ஏற்ற செலவுகள் இருந்து கொண்டே தான் இருக்கும். கண்ட இடங்களில் கண்ட நேரங்களில் உண்பதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படக் கூடும். தொழில் ரீதியான வெளிநாட்டு பயணமொன்றை மேற்கொள்வதற்குச் சாதகமாக சூழ்நிலைகள் அமைந்துள்ளன. அதைப் பயன்படுத்தினால் எதிர்காலம் நல்லபடியாக அமையும். வேலை தேடி வரும் அன்பர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அதுவும் தாங்கள் விரும்பிய இடத்திலேயே கை நிறைய சம்பளத்துடன் கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை நிலவும். கணவன் - மனைவியரிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உருவாகும். நினைத்ததை தங்கு தடையின்றி நிறைவேற்றுவீர்கள் பெண்மணிகளுக்கு பணவரவு திருப்தியளிப்பதால் குடும்ப நிர்வாகம் செய்வதில் எந்த பிரச்சினையும் இருக்காது.  வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அதிர்ஷ்டமான வாரமாகும். மாணவமணிகள் பெற்றோர், பெரியோர் துணையின்றி வெளியிடங்களுக்கு தனியாகச் செல்ல வேண்டாம். படிப்பில் மனம் ஈடுபட மறுக்கும். பரிகாரம்: தினமும் கந்தர் சஷ்டி கவனம் சொல்லவும். மனம் ஒருநிலைப்படும். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்  பெண் ஆலோசகர் ராசி என்று கருதப்படும் மீன ராசி அன்பர்களே, இந்த வாரம்வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் மிகவும் கவனமாக இருந்து வருவது நல்லது. அத்தருணத்தில் யாருக்கும் கடன் கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம்.  நீங்கள் அமைதியாக இருந்தாலும் சில பிரச்சினைகள் உங்களைத் தேடி வரும். சிலர் வழக்கு, வியாஜ்ஜியங்களில் மாட்டிக் கொள்ள நேரும். ஆனாலும் பயப்பட வேண்டாம். தொழிலைப் பொறுத்தவரை பெரிய அளவில் முன்னேற்றம் இல்லையென்றாலும் பிரச்சினை ஏதும் இருக்காது. வருமானமும் போதுமென்ற அளவிற்கு இருக்கும். உத்தியோகம் செல்பவர்களுக்கு அவ்வப்போது குழப்பமும், சஞ்சலங்களும் ஏற்படுவதால் தங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பணியை விரைந்து முடிக்கமுடியாதபடி சூழ்நிலை நிலவும். எனவே அதற்கு இடமளிக்க வேண்டாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. அனைவரும் ஒன்று சேர்ந்து இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள்.  உங்கள் பேச்சுக்கு குடும்பத்தார் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.  அது உங்களை நெகிழ்ச்சியில் இன்புறச் செய்யும். பெண்மணிகள் சிக்கன நடவடிக்கையை மேற்கொள்வது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இந்த வாரம் அனுகூலமாக இருக்காது. மாணவமணிகளுக்கு மேற்படிப்பிற்கான வாய்ப்பு தாங்களே எதிர்பார்க்காத அளவிற்கு சிலரின் முயற்சியால் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அது உங்களுக்கு சந்தோசத்தை அளிக்கும். பரிகாரம்:  சிவபுராணத்தை படியுங்கள். மனம் தெளிவடையும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்

newstm.in

Tags:
Next Story
Share it