1. Home
  2. ஜோதிடம்

Newstm-இந்த வார பலன்கள் - பிப்ரவரி 17 முதல் பிப்ரவரி 23 வரையிலான வாரபலன்

Newstm-இந்த வார பலன்கள் - பிப்ரவரி 17 முதல் பிப்ரவரி 23 வரையிலான வாரபலன்

newstm-weekly-astrology

Newstm-இந்த வார பலன்கள் - பிப்ரவரி 17 முதல் பிப்ரவரி 23 வரையிலான வாரபலன்

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இந்த வார கிரக மாற்றங்கள்:

17.02.2019 அன்று காலை 8.42 மணிக்கு சந்திர பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு மாறுகிறார்.

19.02.2019 அன்று பகல் 11.08 மணிக்கு சந்திர பகவான் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு மாறுகிறார்.

21.02.2019 அன்று பகல் 1.36 மணிக்கு சந்திர பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.

23.02.2019 அன்று மாலை 4.59 மணிக்கு சந்திர பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு மாறுகிறார்.

மேஷம்: சின்ன சின்ன விசயத்திற்கு கூட கவலைப்படும் மேஷ ராசி அன்பர்களே, இந்த வாரம் உடனிருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். குடும்பத்தில் வேறொருவர் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வது  குடும்ப நிம்மதிக்கு வழிவகுக்கும். சிலரது பேச்சுகள் விதாண்டவாதமாக இருக்கும். விட்டுக் கொடுத்து செல்வதால் பிரச்சினைகளை முற்றிலுமாக தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்வோர் ஏற்றத்துடன் தொழிலை நடத்துவீர்கள். நிலுவையில் உள்ள பழைய பாக்கிகள் வந்து சேரும். தொழிலை விரிவு படுத்துவதற்கான முயற்சிகள் பங்குதாரர்கள் உதவியுடன் சிறப்பாக நடைபெறும். சிக்கன நடவடிக்கைகளை கையாளுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்கள் இப்போது அதற்கான நேரம் தான். உங்களின் கனவு இப்போது நனவாகும். உங்கள் மேலதிகாரியின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பெண்கள் வேலைக்குச் செல்லும் போது மிக கவனமுடன் சென்று வரவும். பணிச்சுமை அதிகமாக இருக்கும். மாணவர்கள் சகமாணவர்களுடன் பழகும் போது கவனமாக இருக்கவும். பிறர் பழிக்கு நீங்கள் ஆளாக நேரலாம்.  பரிகாரம்: தினமும் கந்த சஷ்டி கவசம் சொல்லி வந்தால புது உற்சாகம் பிறக்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், திங்கள்  ரிஷபம்: உடல் நிலையில் அக்கறையில்லாத ரிஷப ராசி அன்பர்களே, இந்த வாரம் வெளியூர் பயணங்களும் அதன் மூலம் லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப செலவுகளில் வீண் செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. குடும்ப பொறுப்புகளின் காரணமாக கடின உழைப்பு ஏற்படக் கூடும். அதனால் உடற்சோர்வும், அசதியும் ஏற்படும். தூரத்திலிருந்து வரும் செய்திகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். தொழிலில் இருந்த சுணக்க நிலை மாறும். உங்களுக்காக உழைப்பவர்கள் இருக்கும் வரையில் உங்களை யாராலும் அசைக்க முடியாது. சிலர் வதந்திகள் மூலம் உங்களை ஏமாற்ற நினைப்பார்கள் ஆனால் நீங்கள் சுதாரிப்பாக இருப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அனுகூலம் உண்டாகும். வெளியூர் பிரயாணம் ஒன்றை மேற்கொள்ள நேரிடும். சிக்கல்கள் பிறரால் ஏற்பட்டாலும் அதை எளிதில் சமாளித்து விடும் தைரியம் உண்டாகும். புதிய வண்டி வாகனம் வாங்குவதற்கு யோகம் உண்டாகும். பெண்களுக்கு உயர்வான வாரம் என்றே சொல்ல வேண்டும். சிலருக்கு உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டி வரலாம். மாணவ மணிகள் விளையாட்டுகள், போட்டிகளில் கலந்து கொள்வதன் மூலம் சான்றிதழ் மற்றும் பரிசுப் பொருட்களைப் பெறுவீர்கள். பரிகாரம்: மஹாலட்சுமி ஸ்தோத்திரம் சொல்லி வர மனம் ஒரு நிலைப்படும். அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, வியாழன்  மிதுனம்: புதுத் தெம்புடன் பணியாற்றும் மிதுன ராசி அன்பர்களே, இந்த வாரம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வர். குடும்பத்தில் பிதுர் ராஜ்ஜிய சொத்துகளால் ஏற்பட்ட பிரிவினை முடிவுக்கு வரும். குடும்ப உறுப்பினர்கள் விட்டுக் கொடுத்து போவதால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.அனைவரும் ஒன்றாக சுற்றுலா சென்று வருவீர்கள். தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். சென்ற வாரத்தை விட இந்த வாரம் அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. முக்கிய நிறுவனங்களின் பங்களிப்பு இருப்பதால் வியாபாரம் பன்மடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளது. தொழில் நிமித்தமாக வெளியூர் செல்ல நேரிடலாம். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். வெளிநாடுகளுக்கு செல்ல முனைவோருக்கான தருணம் வந்துவிட்டது. கடல் கடந்து செல்ல வேண்டி வரலாம்.வேலைப்பளுவால் உடல் அசதி ஏற்படும். நேரத்திற்கு உணவருந்த முடியாமல் போகலாம். பெண்கள் ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். சேமிப்பதில் மிக கவனமாக இருப்பது நல்லது. மாணவர்கள் நண்பர்களுடன் செல்லும் போது கவனமாக இருக்கவும். பெற்றோர் துணையாக இருப்பார்கள். பரிகாரம்: விஷ்ணு மந்திரங்களை ஜபித்து வர வாழ்வில் வளம் உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், செவ்வாய்  விரைவாக பணிகளை முடித்து பரிசு பெறப் போகும் கடக ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்கான வழிகள் பிறக்கும். குடும்பத்தாருக்கு தேவையான உதவிகளை நீங்கள் முன்னின்று செய்து முடிப்பீர்கள்.  குடும்பத்தின் நிதிநிலைமை சரியாக இருப்பதால் தேவையான அனைத்து வசதிகளும் தானாகவே வந்து சேரும். வரன் தேடும் முயற்சிகளில் ஈடுபடுவீர்களேயானால் அதில் வெற்றி நிச்சயம். தொழில் பங்குதாரர்களிடமிருந்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தொழில் முனைவோர் கேட்ட இடங்களிலிருந்து நிதி உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். போட்டிகள் இருந்தாலும் அதைச் சமாளித்து இலாபத்தை ஈட்டுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அனுகூலம் உண்டாகலாம். மேலதிகாரிகளின் கிடுக்குப்பிடியில் சிக்கி தவிப்பீர்கள். சக வேலையாட்களால் பிரச்சினை ஏற்பட்டால் விட்டுக் கொடுத்து போவது நல்லது. கோபத்தை குறைத்துக் கொள்வது உங்களை பிரச்சினைகளிலிருந்து காப்பாற்றும். பெண்மணிகள் குடும்ப நிர்வாகத்தை கவனிப்பதில் சிக்கல்கள் இருந்தாலும் அதை திறம்படச் செய்து முடிப்பீர்கள். மாணவ மணிகளுக்கு சந்தோஷமான வாரம். நண்பர்களுடன் இன்பச்சுற்றுலா சென்று வருவீர்கள் பரிகாரம்: அபிராமி அந்தாதி படித்து வர வாழ்வில் நிம்மதி கிடைக்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், ஞாயிறு  ஓய்வில்லாமல் உழைக்கக் கூடிய சிம்ம ராசி அன்பர்களே, இந்த வாரம் பொருளாதாரத்தில் சிறந்து விளங்குவீர்கள். குடும்பத்தில் தூரத்திலிருந்து வரும் செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். நீண்ட நாளைய உறவு ஒன்று இல்லம் தேடி வரும். வீடு, நிலம் போன்றவைகளில் பணத்தை முதலீடு செய்து நல்ல லாபத்தை பெறலாம். மொத்தத்தில் பிரச்சினையில்லா வாரம். தொழிலில் இருந்த இடையூறுகளைக் களைவீர்கள். முக்கிய நபர்களை சந்திப்பதை சற்று தள்ளிப்போடுங்கள். உங்களுக்கு சாதகமாகவே உங்களது தொழில் பங்குதாரர் செயல்படுவார். தொழிலாளர்களின் எண்ணங்களை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.  உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். சிலருக்கு அதில் உங்கள் மேல் பொறாமையும், விரோதமும் ஏற்பட வாய்ப்புண்டு. பழைய கடன்கள் வசூலாகும். அதனால் உங்களுக்கு மனநிம்மதி உண்டாகும். பத்திர விசயத்தில் கவனம் தேவை. பெண்மணிகள் வரவுக்கு ஏற்ற செலவு செய்வது நன்மையைத் தரும். சிலருக்கு கோபம் அதிகமாக வரும். மாணவமணிகள் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பரிகாரம்: சிவபெருமான் முன் அமர்ந்து வணங்க மனம் ஒருநிலைப்படும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, சனி  சிந்தனையில் தெளிவில்லாமல் குழப்பத்தை கொண்டுள்ள கன்னி ராசி அன்பர்களே, இந்த வாரம் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சகோதர சகோதரிகளுடன் கருத்து வேறுபாடு வரலாம்.  குடும்பத்தில் தெய்வீக காரியங்கள் அதிகரிக்கும். அதற்கான செலவுகளும் இருக்கும். பிள்ளைகள் உங்களுடன் சேர்ந்து சில நற்காரியங்களைச் செய்வார்கள். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடிவரும். சிரத்தை எடுத்து செய்தால் நல்ல முறையில் திருமணம் நடந்தேறும். தொழிலாளர்கள் ஏதாவது பிரச்சினை இருக்குமாயின் அதை முன்னின்று தீர்த்து வைத்து தொழிலை செவ்வனே நடத்திவிடுவீர்கள். வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். புதிய முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் சிறந்த முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவார்கள். மேலதிகாரிகளின் சில வேலைகளை நீங்கள் முன்னின்று செய்ய வேண்டியதிருக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். உடன் பணிபுரிபவர்களுடன் வெளியூர் பயணம் சென்று வருவீர்கள். பெண்கள் உணர்வுப்பூர்வமான முடிவுகளை தள்ளிப்போடுவது நல்லது. குழந்தைகள்  விசயத்தில்  மகிழ்ச்சியை எதிர்பார்க்கலாம். மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்துவது நல்லது. பொழுது போக்கு, வேடிக்கை நிகழ்ச்சிகளில் கவனத்தை சிதற விடாமல் இருப்பது நல்லது. பரிகாரம்: துளசி மாடத்திற்கு விளக்கேற்றி வர செல்வம் சேரும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், செவ்வாய்  சந்தோஷங்களை சந்திக்கப் போகும் துலா ராசி அன்பர்களே, இந்த வாரம் மற்றவர்களைப் பற்றி புரிந்து கொள்ள பல சூழ்நிலைகள் உருவாகும். குடும்பத்தில் கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். ஒருவருக்கொருவர் புரிந்து நடந்து கொள்வர். மாமியார் - மருமகள் உறவு கற்கண்டாய் தித்திக்கும். அதனால் இல்லத்தில் மகிழ்ச்சியே. தொழில்-வியாபாரம் ஏற்றம் தரும் வகையில் இருக்கும். வரவேண்டிய பணம் உங்களைத் தேடி வரும். கவலை வேண்டாம். தேக்கி வைத்துள்ள பொருட்களை விற்பனை செய்ய முற்படுவது நல்லது. நல்ல வாடிக்கையாளர்கள் கிடைக்கும் சமயமாக இது இருக்கிறது. உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் இருந்து வந்த பனிச்சுமை குறையும். சக பணியாளர்களிடமிருந்து வந்த கருத்து வேறுபாடு குறையும். வேலை விஷயமாக வெளியூர் வெளிமாநிலங்களுக்கு சென்று வர வேண்டி வரும். பெண்கள் சுயமாக முடிவுகளை எடுக்க வேண்டாம். பெரியோர் பேச்சு கேட்டு நடப்பது சிறந்தது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். மாணவர்கள் பெற்றோர்களிடம் நல்ல பாராட்டைப் பெறுவார்கள். கல்வி அல்லாது பிற துறைகளிலும் சாதிப்பீர்கள். பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபட மனதில் இருக்கும் சங்கடங்கள் நீங்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, வியாழன்  வருகின்ற காலங்களில் வசந்தத்தை சந்திக்கப் போகும் விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வாரம் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அதிக ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் கணவன் - மனைவிக்கிடையே சுமூகமான உறவு இருக்கும். சிறுவர்களால் ஒரு சில பிரச்சனைகள் தலை தூக்கலாம். அவற்றை பதட்டம் இல்லாமல் சரி செய்ய முயலுங்கள். குடும்பத்துடன் ஆலயங்களுக்குச் சென்று வருவீர்கள். தொழில் - வியாபாரம் திருப்திகரமாக இருக்கும். புதிய முயற்சிகலில் இறங்குவதற்கு கிரக நிலைகள் சாதகமாக உள்ளன. வங்கி  மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து உதவிகள் எளிதில் கிடைக்கும். சிறு வியாபாரிகள் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். எனினும் சளைக்காமல் கொடுத்த வேலைகளை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். சக பணியாளர்கள் உதவுவார்கள். பெண்களுக்கு வெளியூர் செல்ல வேண்டி வரலாம். நீண்ட நாட்களாக தேடிய பொருள் ஒன்று கிடைக்கும். விஷேஷங்களுக்குச் சென்று வருவீர்கள். மாணவர்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதை தவிர்ப்பது நல்லது. கல்வியில் உங்கள் கவனத்தை திருப்புவதன் மூலம் உங்கள் மதிப்பு உயரும். பரிகாரம்: சுப்பிரமணியருக்கு அரளிமாலை போட்டு வழிபடுங்கள். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், திங்கள்  விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளும் தனுசு ராசி அன்பர்களே,  இந்த வாரம் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு வேலை செய்வீர்கள். ரகசியங்களை காப்பாற்றுவீர்கள். குடும்பம் சுமூகமான சூழ்நிலையில் இருக்கும். வீடு தேடி வந்து உங்களுக்கு நல்வாக்கு சொல்வார்கள். வயிறு சம்மந்தமான பிரச்சினைகள் சிலருக்கு வரலாம். மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. புதிய நண்பர்கள் கிடைப்பார்கல். தொழிலில் சக பங்குதாரர்களால் இருந்து வந்த பிரச்சினை முடிவுக்கு வரும். உங்கள் பேச்சுக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுத்து தொழிலை விரிவுபடுத்துவது பற்றி பேச்சை தொடங்குவார்கள் நன்மையில் முடியும். உத்தியோகத்தில் மேலிடத்தில் நற்பெயர் கிடைக்கும். நிலுவையில் இருந்த சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. சில வாய்ப்புகள் உங்களுக்கு தட்டிப்போனதற்கு காரணமாக இருந்தவர்கள் இப்போது உங்களுக்கு நன்மை செய்வார்கள். பெண்கள் அமைதியாக இருக்க வேண்டியது அவசியம். குடும்ப நிர்வாகம் செய்வதில் பிரச்சினை வராது. மாணவர்களுக்கு பொறுமையும் நிதானமும் தேவை. ஆசிரியரின் கவனம் உங்கள் மேல் இருக்கும் பரிகாரம்: சிவன் ஆலயத்திற்குச் சென்று வந்தால் தொழிலில் முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், புதன்  யார் மேலையும் இரக்க குணமுடைய மகர ராசி அன்பர்களே, இந்த வாரம் வெளியூர் பயணங்கள் உங்களின் வெற்றிக்கு வழிகாட்டுதலாக இருக்கும். குடும்பத்தில் வருமானத்திற்கு குறைவிருக்காது. தொலைபேசி மூலமாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ ஒரு நற்செய்தியை எதிர்பார்க்கலாம். சிலருக்கு மனநிம்மதி இல்லாமல் தூக்கம் வராமல் தவிப்பீர்கள். மொத்ததில் நன்மையும், தீமையும் கலந்தே இருக்கும். தொழிலில் தடைப்பட்டிருந்த நிறுவனங்களிலிருந்து வர வேண்டிய வாய்ப்புகள் சிறந்த முறையில் வந்து சேரும். வருமானமும் அதிகரித்து காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைப்பதால் புதிய முயற்சிகளை இவ்வாரம் தாராளமாக செய்யலாம். உத்தியோகத்தில் சந்தோஷமான வாரமிது. உங்களை தேடி புதிய வாய்ப்புகள் துரிதமாக வரும். வெளி நாடுகளில் வேலை புரிவோர் தாயகத்திற்கு திரும்புவதற்கு முயற்சி செய்தால் இப்போது அது உங்களுக்கு பலிதமாகும். அதில் பிரச்சினைகல் எதுவும் ஏற்படாது. பெண்மணிகள் கவனமாக இருக்க வேண்டிய வாரம் தான். மாமியார் மருமகள் வாக்கு வாதத்தை தவிர்க்கவும். மாணவ மணிகள் சிறந்த மதிப்பெண்களை எதிர்பார்க்கலாம். மேற்படிப்புக்கு முயற்சி செய்பவர்கள் அதற்கான முயற்சியை இப்போது மேற்கொள்ளலாம். பரிகாரம்: வராகி அம்மனுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, வெள்ளி  தொழிலில் உச்சத்தை தொடப் போகும் கும்ப ராசி அன்பர்களே,  இந்த வாரம் கல்வித் துறையில் சிறந்து விளங்குவீர்கள். சிலர் பெரிய சாதனைகளும் செய்வீர்கள். குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்கும்படியான சூழ்நிலை அமையும். ராசியில் சனி இருந்தாலும் பெரிய தீமைகள் ஒன்றும் நடப்பதற்கு வாய்ப்பில்லை. கணவன் மனைவிக்கிடையே நல்ல ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் வழியில் இருந்த மனக்கவலை தீரும். வீடு, வாகனம் போன்றவைகளில் இருந்த இழுபறி நிலை மாறும். தொழில் - வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறைந்து உங்கள் விற்பனை அமோகமாக இருக்கும். வாடிக்கையாளர்கள் விரும்பி உங்கள் பொருட்களை வாங்கி மகிழ்வார்கள். பண விஷயங்களை நீங்கள் உங்கள் நேரடி பார்வையில் வைத்துக் கொள்வது அவசியம். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலை நிமித்தமாக வெளியூர்களுக்கு சென்று வர நேரலாம். உடன் பணிபுரிபவர்களால் சற்று தொல்லைகள் வரலாம்.அதனால் அந்த வேலையை நீங்கள் இழுத்து போட்டுக் கொண்டு செய்வீர்கள். பெண்கள் அண்டை அயலாருடன் பழகும் போது வார்த்தைகளில் நிதானம் தேவை. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகப் பணிகளால் ஒய்வில்லாமல் உழைக்க வேண்டி வரலாம். மாணவர்களுக்கு மேற்கல்வி பயில வேண்டுமென்ற விருப்பமிருப்பின் அதற்கான முயற்சிகளை இப்போது செய்யலாம். கடின உழைப்பின் மூலமாக நல்ல மதிப் பெண்களை பெறமுடியும்.  பரிகாரம்: முருகனுக்கு நெய் விளக்கேற்றி வழிபட குடும்ப பிரச்சனைகள் அகலும். அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, வியாழன்  சின்ன சின்ன துரோகங்களை சந்திக்கப் போகும் மீன ராசி அன்பர்களே, இந்த வாரம் மனதிற்கு நிம்மதியான காலகட்டமாக இருக்கும். குடும்பத்தில் பொருளாதார நிலை திருப்தி கரமாக இருக்கும்.  ஆரோக்கியத்தில் சிறுசிறு உபாதைகள் ஏற்பட்டு பின்பு சரியாகும். உங்களிடம் கடன் வாங்கியிருந்தவர்கள் சரியான நேரத்தில் திருப்பி தராததால் மனச் சங்கடம் ஏற்படக்கூடும். தொழில் ரீதியான பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். பங்குதாரர்களிடமிருந்து மனக்கசப்பு நீங்கி தொழிலை விரிவுபடுத்துவதற்கான திட்டத்தை செயல் படுத்துவீர்கள். தேவையான பண உதவிகள் கிடைப்பதால் செழிப்பாக தொழில் நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் புகழ்ச்சிக்கு இடம் கொடுக்க வேண்டாம். சக ஊழியர்கள் நீங்கள் செய்யும் ஒவ்வொரு விசயத்திலும் எதில் குறை கண்டு பிடிக்கலாம் என்று காத்துக் கொண்டிருப்பார்கள் அதனால் கவனமுடன் பணியாற்றுங்கள். செல்வாக்கு உயரும். பெண்கள் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தால் மேலதிகாரிகளின் நற்பெயரைப் பெறுவீர்கள். முயற்சிகளை தொடர்ந்து செய்து வாருங்கள். மாணவ மணிகள் அதிக மதிப்பெண் பெறுவதற்கு இரவு பகல் பாராமல் படித்து வருவீர்கள். அதற்கேற்ப பலனும் கிடைக்கும். பரிகாரம்: சித்தர்களின் ஜீவ சமாதியை வழிபட மனம் ஒருநிலைப்படும். அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், புதன்  

newstm.in

Trending News

Latest News

You May Like