Newstm-இந்த வார பலன்கள் - ஜூன் 16 முதல் 22 வரையிலான ராசிபலன்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணித்த இந்த வார ராசி பலன்கள் - ஜூன் 16 முதல் 22 வரையிலான வாரபலன்

Newstm-இந்த வார பலன்கள் - ஜூன் 16 முதல் 22 வரையிலான ராசிபலன்
X

newstm-weekly-astrology-for-june-16-22

Newstm-இந்த வார பலன்கள் - ஜூன் 16 முதல் 22 வரையிலான ராசிபலன்

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இந்த வார கிரக மாற்றங்கள்:

17-06-2019 அன்று பகல் 11:42 மணிக்கு சந்திர பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார்.

19-06-2019 அன்று இரவு 08:44 மணிக்கு சந்திர பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு மாறுகிறார்.

22-06-2019 அன்று காலை 07:47 மணிக்கு சந்திர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுகிறார்.

கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன்  - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ. சூர்யன்  - அஷ்டம ஸ்தானத்தில் குரு (வ), சந்திரன்  - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: சின்ன சின்ன விசயங்களைக் கூட படபடவென்று செய்யும் மேஷ ராசியினரே இந்த வாரம் மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனகவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள்.   திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். குடும்பத்தில் சுமூகமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கை துணை உங்க ளுக்கு பல விதத்திலும் உதவிகள் செய்வார். உறவினர் வருகை இருக்கும். அவர்களி டம் நிதானமாக பேசுவது நல்லது. அனுபவ பூர்வமான அறிவு திறனை உபயோகித்து எதிலும் வெற்றி காண்பீர்கள். தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்கள் மூலம் நன்மை உண்டாகும். வியாபாரத்திற்கு தேவையான நிதி உதவியும் கிடைக்கலாம்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, தேடி வரும். நீண்ட நேரம் கண் விழிக்க நேரிடும். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை.  சகோதரர் வழியில் மனவருத்தம் உண்டாகலாம். திடீரென்று  கவனம் தடுமாறலாம்.  பெண்களுக்கு: குழப்பங்கள் நீங்கள் மனதில் தெளிவு உண்டாகும். எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. கனவு தொல்லை  உண்டாகலாம். மாணவர்களுக்கு: கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு பாடங்களை படிப்பதும் தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. பரிகாரம்: பழனி முருகனை நினைத்து வணங்கி வர நீண்ட நாள் தடைகள் விலகும். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி  கிரகநிலை: ராசியில் சுக்ரன்  - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ. சூர்யன்  - களத்திர ஸ்தானத்தில் குரு (வ), சந்திரன்  - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: அமைதியான மனநிலையையும் நல்ல பண்புகளையும்  உடைய ரிஷப ராசியினரே இந்த வாரம் இறுதியில் பணவரத்து கூடும். செயல்திறமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் தாய்வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறும். கணவன், மனைவிக்கிடையே  நெருக்கம் அதிகரிக்கும். உயர்ந்த ஆடை ஆபரணங் கள் சேரும். நல்லது கெட்டது அறிந்து செயல்பட்டு நன்மை கிடைக்க பெறுவீர்கள். பணவசதி கூடும். குழந்தைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவர்களிடம் அன்பு அதிகரிக்கும். தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். எதிர்பார்த்த பணவரத்து இருந்தாலும் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். போட்டிகள் தொல்லை தராமல் இருக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பேச்சினால் மேல் அதிகாரிகளை கவர்ந்து விடுவார்கள். அதனால் எதிர்பார்த்த உதவியும் நன்மை யும் கிடைக்கும். ஆனால் பொருட்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது. பெண்களுக்கு: கோபத்தை குறைத்துக் கொள்வது நன்மை தரும். எதிர்ப்புகள் விலகும். பயணங்கள் சாதகமான பலன் தரும். மாணவர்களுக்கு: கல்வியில் வெற்றி பெற துணிச்சலாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும். பரிகாரம்: தினமும் மகாலட்சுமி அஷ்டகம் சொல்லி நமஸ்காரம் செய்யுங்கள். பிரச்சினைகள் தீரும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி  கிரகநிலை: ராசியில் செவ்வாய், புதன், ராஹூ. சூர்யன்  - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு (வ), சந்திரன்  - களத்திர ஸ்தானத்தில் சனி (வ), கேது - விரைய ஸ்தானத்தில்  சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: சரியான முடிவுகளை சரியான நேரத்தில் எடுத்து அனைவரின் பாராட்டையும் பெறும் மிதுன ராசியினரே இந்த வாரம் முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை  அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு  காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். விருப்பங்கள்  கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. வீண் பகை ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். கணவன், மனைவியி டையே மனஸ்தாபங்கள் ஏற்படலாம். எனவே கவனமாக எதையும் பேசுவது நல்லது. பிள்ளைகளிடம் அன்புடன் பேசுவது நன்மை தரும். அக்கம் பக்கத்தி னருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் தராவிட்டாலும் வருமானத்திற்கு குறைவு இருக்காது. தொழில் விரிவாக்கம் செய்யும் திட்டத்தை தள்ளி போடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.  பெண்களுக்கு: கோபத்தை கட்டுப் படுத்துவதன் மூலம் காரியங்களை சாதகமாக செய்து முடிக்க முடியும். எதிர்பார்த்த தகவல் தாமதப்படலாம். மாணவர்களுக்கு: கல்வியில் வெற்றி பெற நண்பர்களின் உதவி கிடைக்கும். வீண் செலவை குறைப்பது நல்லது. பரிகாரம்: அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வர தீமைகள் எதுவும் ஏற்படாது. அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்  கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில் குரு (வ), சந்திரன்  - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ), கேது - லாப ஸ்தானத்தில்  சுக்ரன்  - விரைய ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ. சூர்யன்   என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை ஒன்று சேர்க்க நினைக்கும் கடகராசியினரே இந்த வாரம் எல்லா முயற்சிகளும், காரியங்களும் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிக்கும் திறமை உண்டாகும். மனதில் இருந்த தயக்கம், பயம் நீங்கும். வெளியூர், வெளிநாடு பயணங்கள் செல்ல எடுக்கும் முயற்சிகள் சாதகமான முடியும். குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் கணவன்மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதும் நல்லது. சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எச்சரிக்கை தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். கடன் பிரச்சனை தீரும். ஆர்டர் பிடிப்பதில் இருந்த கஷ்டம் குறையும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சொல்லியபடி நடப்பது நன்மை தரும். சிலர் புதிய வேலைக்கு நடப்பது நன்மை தரும். சிலர் புதிய வேலைக்கு முயற்சி செய் வார்கள். அது கிடைப்பது தாமதமாகலாம். பெண்களுக்கு: கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவதன் மூலம் நன்மை ஏற்படும். கூடுதலாக எதிலும் உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு: கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். கவலை நீங்கும்.  பரிகாரம்: மாங்காடு அம்மனை நினைத்து வணங்க பிரச்சனைகள் தீரும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்  கிரகநிலை: சுக ஸ்தானத்தில் குரு (வ), சந்திரன்  - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ), கேது - தொழில் ஸ்தானத்தில்  சுக்ரன்  - லாப ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ. சூர்யன்  -   என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: மலை போல் பிரச்சினைகள் வந்தாலும் அதை சமாளிக்கும் திறனுடைய சிம்மராசியினரே, இந்த வாரம் எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சில நேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம் கவனம் தேவை. குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். விருந்தினர்கள் வருகையால்  செலவு கூடும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போதும், நெடுந்தூர பயணங்களின் போதும் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். புதிய ஆர்டர்கள் தொடர்பாக அலையும்படி இருந்தாலும் சாதகமாக முடியும். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க நேரும். மேல் அதிகாரிகள் கூறு வதை கேட்டு அதன்படி நடப்பது நல்லது. பெண்களுக்கு: கோபத்தை தவிர்த்து நிதானமாக பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். யோசித்து செய்யும் வேலைகள் சாதகமாக  முடியும். மாணவர்களுக்கு: கல்வியை அதிகம் கவலைப்படாமல் பாடங்களை  நன்கு படிப்பது நல்லது. பரிகாரம்: திருவண்ணாமலைக்குச்  சென்று கிரிவலம் வர நன்மைகள் அதிக அளவில் நடக்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்  கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு (வ), சந்திரன்  - சுக ஸ்தானத்தில் சனி (வ), கேது - பாக்கிய ஸ்தானத்தில்  சுக்ரன்  - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ. சூர்யன்     என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: எல்லா காரியங்களிலும் சற்று பிடிவாத குணமுடைய கன்னி ராசியினரே இந்த வாரம் காரியங்களில் வெற்றி கிடைக்கும். பண வரத்து வழக்கத்தை விட அதிகரிக்கும். ஆனால் செலவும் அதற்கு ஏற்றார்போல் இருக்கும். மற்றவர்களது உதவியும் கிடைக்கும். சாதூர்யமாக பேசிஎதிலும் வெற்றி காண்பீர்கள். அனுபவ பூர்வமான அறிவுதிறன் அதிகரிக்கும். குடும்பத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் வார இறுதியில் மாறி சகஜ நிலை ஏற்படும். குழந்தை களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். பயணங்கள் தாமதப்படும். தொழில் வியாபாரத்தில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது. வாடிக்கையாளர்கள் மன நிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.  உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். சக ஊழியர்களிடம் இருந்த மன வருத்தங்கள் நீங்கும். மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண்களுக்கு: சாதக பாதகங்களை பற்றி கவலைப்படாமல் எந்த காரியத்தை யும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். மாணவர்களுக்கு: கல்வியை பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். பணிகளை தாமதம் இல்லாமல் முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். பரிகாரம்: பெருமாள் கோவிலுக்கு சென்று பச்சை பட்டு வாங்கி சாற்றுங்கள். நீங்கள் நினைத்தது நடக்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்  கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (வ), சந்திரன்  - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ), கேது - அஷ்டம ஸ்தானத்தில்  சுக்ரன்  - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ. சூர்யன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: மனதில் குழப்பங்கள் இருந்தாலும் தெளிவான முடிவுகளை எடுக்கும் துலா ராசியினரே இந்தவாரம் எந்த காரியத்தை செய்தாலும் தடை தாமதம் ஏற்படலாம். பணவரத்து குறையும். உடல் சோர்வு ஏற்படும். வீண் பிரச்சனைகள் தலைதூக்கும். நண்பர்கள் உறவினர்களுடன் மனவருத்தம் உண்டாகலாம். பயணங்கள் செல்ல நேரிடும். குடும்பத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதம் உண்டாகலாம் கவனம் தேவை.   பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். நண்பர்கள் உறவினர்கள் மூலம் நன்மை ஏற்படும்.   தொழில் வியாபாரம் முன்னேற்றமாக நடக்கும். லாபம் அதிகரிக்கும். பல வழிகளிலும் பண வரத்து இருக்கும்.  உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் மேல் அதிகாரிகள் மூலம் கிடைக்கும். பொறுப்புகள் கூடும். சிலருக்கு எதிர் பார்த்த பதவி உயர்வும் கிடைக்கக்கூடும். பெண்களுக்கு: சாதூரியமான பேச்சின் மூலம் சிக்கலான பிரச்சனைகளையும் தீர்த்து விடுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடலாம்.  மாணவர்களுக்கு: கல்வியை பற்றிய பயம் நீங்கும். குழப்பம் இல்லாத தெளி வான மனதுடன் பாடங்களை படித்து வெற்றி பெறுவீர்கள். பரிகாரம்: ஸ்ரீ யோக நரசிம்மருக்கு பானகம் நிவேதனம் செய்து வழிபட பிரச்சினைகள் குறையும். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி  கிரகநிலை: ராசியில் குரு (வ), சந்திரன்  - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ), கேது - களத்திர ஸ்தானத்தில்  சுக்ரன்  - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ. சூர்யன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: பிறர் மீது நம்பிக்கை இல்லாமல் சொந்த முயற்சியில் முன்னுக்கு வரத் துடிக்கும் விருச்சிக ராசியினரே இந்த வாரம் திடீர் கோபம் உண்டாகும். விருப்பத்திற்கு மாறாக எதுவும் நடக்கும். ஆனால் பகைகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். பணவரத்து திருப்திகரமாக இருக் கும். பயணங்கள் சாதகமான பலன் தரலாம். குடும்பத்தில் திடீர் செலவு ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அதன் மூலம் அவர்களின் நன்மதிப்பை பெறு வீர்கள். கணவன்மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். வழக்கு களை தள்ளிப் போடுவதும் சமாதான முறையில் பேசி தீர்த்துக்கொள்வதும் நல்லது. தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஆர்டர்கள் கைக்கு வந்து சேரும்.  உத்தியோகத்தில்  இருப்பவர்கள் அலுவல கத்தில் கொடுத்த வேலையை சிறப்பாக  செய்து முடிப்பார்கள்.   அலுவலக வேலையாக வெளியூர் செல்ல நேரலாம். பெண்களுக்கு சுய நம்பிக்கை அதிகரிக்கும். வார இறுதியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனம் மகிழும் சம்பவங்கள் நிகழும்.  மாணவர்களுக்கு: கவன தடுமாற்றம் இல்லாமல் பாடங்களை படிப்பது நன்மை தரும். சக மாணவர்களிடம் எச்சரிக்கை யாக பழகுவது நல்லது. பரிகாரம்: உடல் ஊனமுற்றோருக்கு உதவுங்கள்.  அவர்களுக்கு அரிசி தானமிடுங்கள். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்   கிரகநிலை: ராசியில் சனி (வ), கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில்  சுக்ரன்  - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ. சூர்யன்  - விரைய ஸ்தானத்தில் குரு (வ), சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: எந்த விசயத்திலும் எதிர்பார்ப்பை வைக்காத தனுசு ராசியினரே இந்த வாரம் அனுகூலமான பலன்களை தரும் வகையில் இருக்கிறது. மறைமுக எதிர்ப்புகள் குறையும். எடுத்த காரியத்தில் ஏற்பட்ட தடை, தாமதம் நீங்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வழக்குகள், தகராறுகளில் சாதகமான பலன்  கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் மிகவும் அக்கறை காட்டுவீர்கள். அதேவேளையில் கடுமையான முயற்சிகளும் தேவை. குடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் ஏற்படலாம் கவனம் தேவை. குடும்ப செலவுகள் அதிகரிக்கும். ஆயுதங்கள், நெருப்புகள் பயன்படுத்தும் போது கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது  எச்சரிக்கை தேவை. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டியவை தாமதப்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு: தடைபட்ட காரியங் களை செய்து முடிக்க மீண்டும் முயற்சிகள்  மேற்கொள்வீர்கள். உற்சாகம் உண்டாகும். மாணவர்களுக்கு: கவனமாக பாடங் களை படிப்பது நன்மை தரும். அடுத்தவர் களுக்கு ஆதரவாக செயல்படும் போது கவனம் தேவை. பரிகாரம்: நவகிரகத்தில் இருக்கும் குருவை வழிபட பிரச்சினைகள் அகலும். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்  கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில்  சுக்ரன்  - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ. சூர்யன்  - லாப ஸ்தானத்தில் குரு (வ), சந்திரன்  - விரைய ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: யாரையும் எந்த நேரத்திலும் தகுதி குறையாமல் நடத்தும் மகர ராசியினரே நீங்கள் உயர்ந்த எண்ணங்களை உடையவர்கள். இந்த வாரம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் திருப்திகரமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடை யில் நெருக்கம் அதிகரிக்கும். குடும்ப விஷயங்களை மூன்றாவது நபரிடம் பேசாமல் இருப்பது நன்மை தரும். குழந்தைகள் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய  முடிவுகள் எடுக்க நேரிடும்.  பணவரத்து தாமதப்படும்.  உத்தியோகத்தில் இருபப்பவர்கள் குறித்த  நேரத்தில் பணிகளை முடித்து மனநிறைவு அடைவார்கள். பெண்களுக்கு: தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மனதெளிவு உண்டாகும். பணவரத்து இருக்கும்.  மாணவர்களுக்கு: கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும். எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நல்லது. பரிகாரம்: நவகிரகத்தை ஒன்பது முறை வலம் வந்து வேண்டியதை பெற்றுக் கொள்ளுங்கள். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி  கிரகநிலை: சுக ஸ்தானத்தில்  சுக்ரன்  - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ. சூர்யன்  - தொழில் ஸ்தானத்தில் குரு (வ), சந்திரன்  - லாப ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: எந்த காரியத்தையும் தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் குணமுடைய கும்ப ராசியினரே இந்த வாரம் இறுதியில் பணவரத்து இருக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வீண் மன குழப்பங்களை ஏற்பட்டாலும் முடிவில் தெளிவு உண்டாகும். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். வீண் கனவுகள் தோன்றும். திடீர் கோபம் தோன்றலாம். மிகவும் கவனமாக பேசுவது நன்மை தரும். குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு சரியாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக்குள் கருத்து வேற்றுமை ஏற்படலாம். உங்கள் செயல்களை குடும்பத்தில் உள்ளவர்கள் குற்றம் சொல்லலாம். எனவே வாக்குவாதத்தில் ஈடுபடாமல் கண்டும் காணாமல் செல்வது நன்மை தரும். பிள்ளைகளின் எதிர்கால நலனில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். தொழில் விரிவுபடுத்துவது பற்றிய ஆலோசனை மேற்கொள்வீர்கள். அனுபவப்பூர்வமான அறிவு திறன் கைகொடுக்கும். உத்தியோகத்தில் இருப் பவர்களுக்கு முக்கிய பொறுப்பு கிடைக் கலாம். தேவையான உதவிகள் தாமதமாக கிடைக்கும்.   பெண்களுக்கு: தடைபட்டு வந்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கடித போக்குவரத்து சாதகமான பலன் தரும். மாணவர்களுக்கு: கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பதன் மூலம் கல்வியில் வெற்றி உண்டாகும்.  பரிகாரம்: நவகிரகத்திற்கு மல்லிகை மலர் கொடுத்து வணங்கி வர காரியங்கள் கைகூடும். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி  கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில்  சுக்ரன்  - சுக ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ. சூர்யன்  - பாக்கிய ஸ்தானத்தில் குரு (வ), சந்திரன்  - தொழில் ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: கடினமான வேலைகளையும் சுலபமாக செய்து முடிக்கும் மீன ராசியினரே நீங்கள் உதவிக்கரம் நீட்டுவதில் ஆர்வம் மிக்கவர். இந்த வாரம் சுபகாரியங்களில் கலந்து கொள்ள நேரலாம். பணம் வரவு நன்றாக இருக்கும். இழுபறியாக இருந்தவை சாதகமாக முடியக்கூடும். தேவையற்ற கவலைகள் நீங்கும்.   உங்களை பற்றி விமர்சனம் செய்து வந்தவர்கள் அதனை விட்டு விடுவார்கள். குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும். தொழில் வியாபாரம் தொடர்பாக அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். அதற்கேற்ற பலனும் கிடைக்க பெறுவீர்கள்.  நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகும்.  உத்தியோகத்தில் இருப்ப வர்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.   அலுவலக வேலைகளால் அலைச்சல் உண்டாகும். சக ஊழியர்களிடம் அலுவலகம் தொடர்பான ரகசியங்களை கூறுவதை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்களுக்கு: கூடுதல் மதிப்பெண் பெற அதிகமாக படிக்க வேண்டி இருக்கும். கல்வி தொடர்பான பிரச்சனைகள் குறையும். தேவையான உதவி கிடைக்கும். பரிகாரம்: சப்த மாதாக்களை வழிபட்டு சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யுங்கள். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்  

newstm.in

Tags:
Next Story
Share it