1. Home
  2. ஜோதிடம்

Newstm-இந்த வார பலன்கள் - மார்ச் 10 முதல் 16 வரையிலான ராசிபலன்

Newstm-இந்த வார பலன்கள் - மார்ச் 10 முதல் 16 வரையிலான ராசிபலன்

newstm-weekly-astrology

Newstm-இந்த வார பலன்கள் - மார்ச் 10 முதல் 16 வரையிலான ராசிபலன்

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இந்த வார கிரக மாற்றங்கள்:

12.03.2019 அன்று சந்திர பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார்.

13.03.2019 அன்று குரு பகவான் அதிசாரம் பெற்று தனுசு ராசிக்கு மாறுகிறார்.

14.03.2019 அன்று சந்திர பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு மாறுகிறார்.

16.03.2019 அன்று சந்திர பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு மாறுகிறார்.

கிரகநிலை: ராசியில் செவ்வாய், சந்திரன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு - பாக்கியஸ்தானத்தில் சனி, கேது - தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் சூரியன், புதன் (வ) என கிரகநிலை இருக்கிறது. பலன்: உடனே கோபம் கொண்டாலும் அதை சட்டென்று மாற்றிக்கொள்ளும் மேஷ ராசி அன்பர்களே, நீங்கள் கொடுத்த வேலையை சரியான நேரத்தில் செய்து பெயர் எடுப்பீர்கள். இந்த வாரம் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். கிரக சேர்க்கைகள் எதிலும் வெற்றியும் சந்தோஷத்தையும் தரும். பணம் வருவது அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் வேகமான முன்னேற்றம் இருப்பது கடினம். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் சுபகாரியங்கள், மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். அதேநேரத்தில் கணவன், மனைவிக்கிடையே ஏதேனும் மனவருத்தம் ஏற்படலாம்.  அக்கம் பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள் வரலாம் கவனமாக இருப்பது நல்லது.  பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பது நல்லது.  பெண்களுக்கு தடைபட்ட காரியங்கள் தடைநீங்கி நல்லபடியாக நடந்து முடியும். பணவரத்து திருப்தி தரும். மாணவர்கள் பாடங்களை கவனமாக படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பரிகாரம்:  மாரியம்மனை அர்ச்சனை செய்து வணங்க எல்லா துன்பமும் நீங்கும். மனநிம்மதி கிடைக்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்  கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - களத்திர ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் சனி, கேது - பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், சந்திரன் என கிரகநிலை இருக்கிறது. பலன்: அனைவரும் உற்சாகமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ரிஷ்ப ராசி அன்பர்களே,  இந்த வாரம் .பணவரத்து அதிகரிக்கும். அறிவு திறமை வெளிப்படும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். அடுத்தவர்களின் குற்றச்சாட்டுக்கு ஆளாகநேரிடலாம் கவனம் தேவை. அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் நன்கு நடக்க தேவையான உதவிகள் கிடைக்கும். வாடிக்கையாளர் தேவை அறிந்து பொருள்களை  அனுப்பி அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக பணிகளை செய்து முடித்து நிர்வாகத்தில் நல்ல பெயர் பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள்  விரும்பும் பொருள்களை வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்ச்சி அடைய செய்வீர்கள். வீடு, வாகனம் போன்ற வற்றை வாங்குவது, புதுப்பிப்பது போன்றவற்றில் ஈடுபடுவீர்கள்.  பெண்களுக்கு இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். மாணவர்கள் சகமாணவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். கல்வியில் ஆர்வம் உண்டாகும். பரிகாரம்: தட்சிணாமூர்த்தி அஷ்டகம் படித்து தட்சிணாமூர்த்தியை வணங்கி வருவதால் பணகஷ்டம் தீரும். கல்வியில் வெற்றி உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி.  கிரகநிலை: ராசியில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சனி, கேது - அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய், சந்திரன் என கிரகநிலை இருக்கிறது. பலன்: சிந்தித்து செயல்பட நினைக்கும் மிதுன ராசி அன்பர்களே, இந்த வாரம். எதையும் யோசித்து செய்வது நன்மை தரும். கோபமாக பேசுவதை தவிர்த்து நிதானமாக பேசி செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். எந்த விஷயத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாகலாம். கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் சுமாரான போக்கு காணப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்.  உத்தியோகத்தில்  இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செயலாற்றுவதன் மூலம் நன்மை அடைவார்கள். அலுவலக பணிகளில் தாமதம் ஏற்படலாம். குடும்பத்தினருக்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும். பிள்ளைகளின் கல்வி அவர்களது செயல்களில் கவனம் செலுத்துவீர்கள்.  பெண்களுக்கு எதிலும் எதிர்பாராத தடைகள் உண்டாகலாம். தன்னம்பிக்கையுடன்  செயல்பட்டு காரிய வெற்றி அடைவீர்கள். மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி நம்பிக்கையுடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். பரிகாரம்: சனி பகவானை வணங்கி காகத்திற்கு எள்சாதம் வைப்பது உடல் ஆரோக்கியத்தை தரும். கஷ்டங்கள் குறையும். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி.  கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி, கேது - களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை இருக்கிறது. பலன்: எந்த விஷயத்தையும் தனது இலக்கை நோக்கி அழைத்து செல்லும்  கடக ராசி அன்பர்களே, இந்த வாரம் இறுதியில் பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும். வீண் வாக்குவாதங்களால் பகையை  வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் குறிப்பாக கூட்டு தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது வியாபார மேன்மைக்கு உதவும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் மறையும். கணவன், மனைவிக்கிடையே நீடித்து வந்த மனவருத்தம் நீங்கி சந்தோஷமான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்தி தருவதாக இருக்கும். யாரிடமும் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். பெண்களுக்கு மனக்கவலை ஏற்படலாம். முயற்சிகளில் தடை ஏற்படலாம். எதிலும் எச்சரிக்கை தேவை. மாணவர்கள் மிகவும் கவனத்துடன் சந்தேகங்களை தெளிவாக தெரிந்து கொண்டு பாடங்களை படிப்பது நல்லது.  விளையாட்டு  போட்டிகளில் ஈடுபடும் போது கவனம் தேவை. பரிகாரம்:  விநாயக பெருமானை அருகம் புல்லால் அர்ச்சனை செய்து வணங்குவதால் காரிய அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி  கிரகநிலை: சுக ஸ்தானத்தில் குரு - பஞ்சம ஸ்தானத்தில் சனி, கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், சந்திரன் - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை இருக்கிறது. பலன்: எந்த காரியத்தையும் நிதானத்துடன் கையாளும் சிம்ம ராசி அன்பர்களே, நீங்கள் மனிதநேயத்திற்கு முக்கியத்துவம் அளிப்பவர். இந்த வாரம் என்பது உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான காலகட்டம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். மிக அருமையான நேரத்தை பயன்படுத்திக் கொள்வது நல்லது. அறிவு திறமை கூடும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாக பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும்.  அடுத்தவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்கும் போது கவனம் தேவை. அவற்றை ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது.  உத்தியோகஸ்தர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு  வேலை கிடைக்கலாம். குடும்பத்தில் வாக்குவாதத்தையும், கோபத்தையும் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. விருந்தினர்கள் வந்து செல்வார்கள். பெண்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்க கூடுதல் நேரம் உழைக்க வேண்டி இருக்கும். பணவரத்து எதிர் பார்த்தபடி இருக்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.. மாணவர்கள் மற்றவர்களை அனுசரித்து செல்வது நன்மைதரும். விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதுடன் கல்வியிலும்  கூடுதல் கவனம் நன்மை தரும். பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை நெய்தீபம் ஏற்றி வழிபடுவது வெற்றிக்கு உதவும். கடன் பிரச்சனை குறையும். கல்வியில் வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளிகிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் சனி, கேது - பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ) - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை இருக்கிறது. பலன்: எதிலும் வளைந்து செல்ல வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும் கன்னி. ராசி அன்பர்களே, இந்த வாரம் சில முக்கிய முடிவுகள் எடுப்பதன் மூலம் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாக நேரிடலாம். கவனமாக இருப்பது நல்லது. மற்றவர்களின் செய்கையால் கோபம் ஏற்படலாம். நிதானம் தேவை. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும். வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி சொல்லிய ஒரு வேலையை முடிக்க அலைந்து திரிய வேண்டி இருக்கும். சக பணியாளர்களிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் விருந்தினர் வருகையால் திடீர் செலவுகள் ஏற்படலாம். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டி இருக்கலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே  பழைய விஷயம் ஒன்றால் வாக்குவாதம் ஏற்பட்டு சரியாகும்.ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை. பெண்களுக்கு:எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை  தவிர்ப்பதும் நல்லது. மாணவர்களுக்கு: வீண் அலைச்சலை தவிர்ப்பதும், பாடங்களில் சந்தேகம் நீங்கி படிப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும். பரிகாரம்: துர்க்கை அம்மனை அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லாபிரச்சனைகளையும் தீர்க்கும். காரிய தடை அகலும். அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன்,சனி  கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி, கேது - சுக ஸ்தானத்தில் சுக்கிரன் - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை இருக்கிறது. பலன்: பொறுப்பேற்றால் அதிலிருந்து மாறாமல் இருக்கும் துலாம் ராசி அன்பர்களே  இந்த வாரம் திட்டமிட்டபடி காரியங்களை  செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப் பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். வீண் அலைச்சலால் வேளை தவறி சாப்பிட வேண்டி இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும். உடல் ஆரோக்கியம்  சீர் அடையும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடின உழைப்புக்குபின் முன்னேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த ஆர்டர் வந்து சேரும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள். கணவன், மனைவிக்கிّடேய நெருக்கம் உண்டாகும். சகோதரர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். மனதில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். பெண்களுக்கு:முக்கியமான  வேலை களில் தாமதம் உண்டாகும். வீண் பிரச்சனைகளை கண்டால் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. மாணவர்களுக்கு: கல்வியில் முன்னேற்றம் காணகூடுதலாக உழைக்க  வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பரிகாரம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வணங்குவதால்  வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்  கிரகநிலை: ராசியில் குரு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி, கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை இருக்கிறது. பலன்: துள்ளியமாக ஆராய்ந்து பார்க்கும் குணம்  விருச்சிக ராசி  அன்பர்களே இந்த வாரம் வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. மற்றவர்களுக்கு உதவும் போது கவனமாக இருப்பது நல்லது. பொருள் சேர்க்கை உண்டாகும். புதிய ஆர்டர் விஷயமாக தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு  இருப்பவர்கள் வெளியூர் செல்ல நேரிடும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம்  காண்பீர்கள். புதிய கிளைகள்  தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சியை தள்ளி போடுவது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி இருக்கும். கொடுத்த கடனை திருப்பி வாங்க முயல்வீர்கள். குடும்பத்தில்  வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனமாக  பேசுவது நல்லது. உறவினர்கள், குடும்ப நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை ஆலோசனை செய்வதையும், அடுத்தவர் பற்றி பேசுவதையும் தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. வாகன சுகம் ஏற்படும்.  வாகனத்தை  ஓட்டும் போது கவனம் தேவை. பெண்களுக்கு: எதிர்பார்த்த தகவல்கள் தாமதமாக வரும். கூட இருப்பவர்களிடம்  எந்த விஷயத்தையும் சொல்லும் போது கவனம் தேவை. மாணவர்களுக்கு: பாடங்களை படிக்கும் போது மனதை ஒரு முகப்படுத்தி படிப்பது நல்லது. கவனம் சிதற விடாமல் இருப்பது வெற்றிக்கு உதவும். பரிகாரம்: நவகிரகங்களை வணங்கி புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது மன அமைதியை தரும். பொருளாதாரம் உயரும். அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி  கிரகநிலை: ராசியில் சனி, கேது - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ) - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரகநிலை இருக்கிறது. பலன்: கோபாக உள்ளவர்களை துள்ளியமாக கணித்து வெற்றிக்கொள்ளும் தனுசு ராசி அன்பர்களே, இந்த வாரம் சுப நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமிருக்கது. விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். இட மாற்றம் ஏற்படும். எடுத்த காரியம் தாமதப்படுகிறதே என்ற கவலை உண்டாகும். இரவில் நீண்ட நேரம் கண் விழிக்க வேண்டி வரலாம் கவனம் தேவை.  தொழில், வியாபாரம் சுமாராக நடக்கும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். ஆர்டர்கள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு நீங்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை  செய்து முடித்து நன்மை பெறுவீர்கள். குடும்பத்தில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே  மனம் வருந்தும்படியான   சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர்போல் இருப்பார்கள் எனவே எல்லோரையும் அனுசரித்து செல்வதால் நன்மை உண்டாகும். வீட்டில் சுபநிகழ்ச்சிகளுக்கான வேலைகளைத் தொடங்குவீர்கள். புதியதாக மனை வாகனம் வாங்குவதற்கு அனுகூலமாக கைக்கு பணம் வந்து சேரும். பெண்களுக்கு நினைத்த காரியத்தை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் மனக்கவலை உண்டாகும்.  கலைத்துறையினருக்கு சக கலைஞர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். ஒப்பந்தங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம். உடன் பணிபுரிபவர்களிடம் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது. வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் கவனம் தேவை.  அரசியல் துறையினருக்கு திறமையான பேச்சின்மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். எதிர்ப்புகள் குறையும். பணவரத்து கூடும். மாணவர்கள் சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு பாடங்களை நன்கு படிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும்.  பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வணங்கி வர கஷ்டங்கள் தீரும். மனநிம்மதி உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளிகிரகநிலை: ராசியில் சுக்கிரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய், சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் குரு - அயன் சயன போக ஸ்தானத்தில் சனி, கேது என கிரகநிலை இருக்கிறது. பலன்: அனுபவ ஞானத்தைக் கொண்டும் சமயோசித சாமர்த்தியத்துடன் செயலாற்றி காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் மகர ராசி அன்பர்களே, இந்த வாரம் எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். கூட இருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. ஒரு சில காரியங்களில் அவசரமாக முடிவு எடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். முக்கிய நபர்களின் அறிமுகம்  கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.  தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணும். தொழில் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வியாபார ஸ்தலத்திற்காக புதியதாக இடம் வாங்குவீர்கள்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடலாம். பணி நிமித்தமாக அலைய வேண்டியதிருக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு கூடும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். குடும்ப வருமானம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் - நண்பர்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள்.  பெண்களுக்கு அறிவுத்திறன் அதிகரிக்கும். இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள்.  மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள். பரிகாரம்: பெருமாள் கோவிலில் தாயாரை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளிகிரகநிலை: ராசியில் சூர்யன், புதன் (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சனி, கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகநிலை இருக்கிறது. பலன்: எந்த சூழ்நிலையிலும் மனம் தளராது விடாமுயற்சியுடன் காரியங்களை செய்து முடிக்கும் ஆற்றல் பெற்ற  கும்ப ராசி அன்பர்களே, இந்த வாரம் எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். தேவையற்ற மனகவலை உண்டாகும். வீண் ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நலம் தரும்.   தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்களில் கவனம் தேவை. தொழில் தொடர்பான காரியங்கள் தாமதமாக நடக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். உழைப்பு அதிகரிக்கும். உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் இல்லாமல் போகலாம்.  குடும்பத்தில் உறவினருடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். வீட்டில் உள்ள பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையில் இடைவெளி குறையும். பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்துவீர்கள். உறவினர்கள் - நண்பர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.  பெண்களுக்கு எதிர்பாராத செலவு உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் நடக்கும்.  மாணவர்களுக்கு கல்விக்கான பணிகளில் தாமதம் உண்டாகும். உழைப்பு அதிகரிக்கும். பரிகாரம்: பெருமாளை தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த காரிய அனுகூலம் கிடைக்கும்.  உத்தியோகம் தொடர்பான பிரச்சனை தீரும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி.கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், சந்திரன் - சுக ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் சனி, கேது - லாப ஸ்தானத்தில் சுக்கிரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ) என கிரகநிலை இருக்கிறது. பலன்: கடின உழைப்பால் வளர்ச்சி அடையும் அதே நேரத்தில் மற்றவர்களின் இடையூறுகளையும் சாதகமாக்கிக் கொள்ளும் மீன ராசி அன்பர்களே, இந்த வாரம் நீங்கள் ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவம் சார்ந்த செலவுகள் நேரலாம். ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம்  தொழில் வியாபாரம் மெத்தனமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதல் தரும்.  வியாபாரம் தொடர்பான காரியங்களில் கூடுதல் கவனம் தேவை.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் புறம் கூறாமல் இருப்பது நன்மை தரும். உங்களுடைய பொருட்களை கவனமாக வைத்துக் கொள்வது அவசியம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளை தட்டி கொடுத்து எதையும் செய்ய  சொல்வது நல்லது. உங்கள் கருத்துகளுக்கு மதிப்பில்லாமல் போகலாம். பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும். வீண் பேச்சை குறைப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்ற மடைய அதிக கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது.  பரிகாரம்: ஆதிபராசக்திக்கு வேப்பிலை மாலை அணிவித்து தீபம் ஏற்றி வணங்க போட்டிகள் விலகும். மனோ தைரியம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன்,சனி

newstm.in

Trending News

Latest News

You May Like