Newstm-இந்த வார பலன்கள் - ஜூன் 30 முதல் ஜூலை 06 வரையிலான ராசிபலன்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணித்த இந்த வார ராசி பலன்கள் - ஜூன் 30 முதல் ஜூலை 06 வரையிலான வாரபலன்

Newstm-இந்த வார பலன்கள் - ஜூன் 30 முதல் ஜூலை 06 வரையிலான ராசிபலன்
X

newstm-weekly-astrology-for-june-30-july-06

Newstm-இந்த வார பலன்கள் - ஜூன் 30 முதல் ஜூலை 06 வரையிலான ராசிபலன்

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இந்த வார கிரகமாற்றங்கள்:
01-07-2019 அன்று இரவு 08:58 மணிக்கு சந்திர பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு மாறுகிறார்.
03-07-2019 அன்று இரவு 01:03 மணிக்கு சந்திர பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு மாறுகிறார்.
06-07-2019 அன்று காலை 03:50 மணிக்கு சந்திர பகவான் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு மாறுகிறார்.

மேஷம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன், ராஹூ - சுகஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் குரு (வ) - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: பேச்சு சாமர்த்தியத்தால் மற்றவரைக் கவரும் மேஷ ராசிஅன்பர்களே, இந்த வாரம்  உறவுகளிடையே பேசும் போது கவனம் தேவை. பண விசயங்களில் தெளிவாக நடந்து கொள்ளுங்கள். தொழில்-வியாபாரம் கடந்த காலத்தை போன்றே எந்த மாற்றமுமின்றி நடக்கும்.  நிலுவையில் உள்ள வேலைகள் துரிதமாக நடைபெறும். ஏற்றுமதியில் ஏற்றம் உண்டாகும். பங்குதாரர்கள் திருப்தி அடைவார்கள். அடிக்கடி போக்கு வரத்துக்கு செலவு செய்ய வேண்டி வரலாம். . பயணங்கள் லாபம் தரும். புதிய வாடிக்கையாளர்கள் திருப்தியுடன் காணப்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு  நல்ல ஏற்றம் இருக்கும். புதிய நண்பர்களின்  அறிமுகம் கிடைக்கும். இட மாற்றம் வேண்டி விண்ணப்பித்திருந்தால் அது இப்போது கிடைக்கும்.  குடும்பத்தில் பெரியவர்கள் உங்களுக்கு தேவையான நேரத்தில் உதவி செய்வார்கள்.  உங்களின் ஒரு சில பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.  நேரத்திற்கு உணவு கிடைக்கும்.  பெண்கள் வேலை செய்யும் இடத்தில் உற்சாகமாக இருப்பீர்கள். புத்தாடை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்கள்  தாணுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க பார்ப்பீர்கள். புதிய தகவல்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.  பரிகாரம்: மஹாலட்சுமிக்கு தாமரை மலர் சாற்றி வழிபடவும். மஹாலட்சுமி மந்திரம் சொல்லி வர பிரச்சனைகள் அண்டாது. அதிர்ஷ்டகிழமைகள்: திங்கள், வியாழன்  ரிஷபம்: கிரகநிலை: ராசியில் சந்திரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன், ராஹூ - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் குரு (வ) - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: மற்றவரைக் கவரும் வசீகரத் தோற்றம் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே, இந்த வாரம்  குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. தொழிலில் நிதி நிலைமை திருப்தியை அளிக்கும்.  உற்பத்தி விசயங்கள் அதிகரிக்கும். புதிய விஸ்தரிப்புத் திட்டங்களின் மூலம் சிறந்த முன்னேற்றம் ஏற்படக்கூடும். இபோதைக்கு தொழிலில் பிரச்சினைகள் எதுவும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. உத்தியோகஸ்தர்கள் வேலையில் எதிர்பார்த்த மாற்றங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். சிலரது தலையீட்டால் உங்கள் பதவி உயர்வு தள்ளிப் போயிருக்கலாம். இப்பொழுது அது சரியாகி உங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பம் அமைதியான சூழ்நிலையில் இருக்கும். சிலரது காரியங்கள் நமக்கு சாதகமாக மாறும்.  திருமண முயற்சிகளிலும், இதர சுப காரியங்களிலும் முயற்சி செய்வதை தவிர்த்துவிடுவது நல்லது. ஏனெனில் பிரச்சினைகள் உங்களுக்கு ஏற்படும். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். பெண்மணிகளுக்கு உற்சாகமான வாரமிது. எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். தங்கள் கையில் அதிகம் பணம் புரளும். மாணவர்கள் தொழில் ரீதியான படிப்புகளை தேர்ந்தெடுத்து படிப்பவர்கள் சிறந்த பலனை எதிர்பார்க்கலாம். பரிகாரம்: சிவன் கோவிலுக்குச் சென்று வழிபட்டு வர மனதிற்கு நிம்மதி கிடைக்கும். அதிர்ஷ்டகிழமைகள்: திங்கள், வெள்ளி  மிதுனம்: கிரகநிலை: ராசியில் சூர்யன், புதன் (வ), சுக்ரன், ராஹூ - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு (வ) - களத்திர ஸ்தானத்தில் சனி (வ), கேது - விரைய ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: உங்கள் அறிவின் மூலம் மற்றவரை வெல்லும் திறனுடைய மிதுன ராசி அன்பர்களே, இந்த வாரம் தேவையில்லாத செலவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் முதலீடு செய்யும் போது கவனமுடன் இருக்க வேண்டும்.  தொழிலில் உற்பத்தி திருப்தி தரும். வருமானமும் திருப்திகரமாக இருப்பதால் வேறு எந்த சிந்தனையும் தொழிலில் இருக்காது. வியாபாரிகளுக்கு நன்மை அளிக்கக்கூடிய வாரமாக இருப்பதால் எந்த காரியங்களை நீங்கள் செய்தாலும் வெற்றி அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு ஒன்று கிடைக்கக்கூடிய சாத்தியக் கூறு உள்ளது. வேலை பார்த்து வரும் இடத்தில் உங்களுக்கு எந்தவித பிரச்சினையும் இருக்காது. கவலை வேண்டாம். வண்டி, வாகனம் வாங்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் நீண்ட நாட்களாக பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் தங்களுடன் ஒன்று சேர்வதற்கு சிறந்த வாய்ப்புள்ளது. அத்தருணத்தில் நீங்கள் பகைமை பாராட்டாதீர்கள். திருமண வயதில் பெண் அல்லது பிள்ளை இருப்பின் அவர்கள் மனதிற்குப் பிடித்த வரன் அமைவதற்கு வாய்ப்புள்ளது. பெண்கள் குடும்ப நிர்வாகத்தை செவ்வனே செய்து வருவீர்கள். கற்பனையான பயத்தை விட்டொழியுங்கள். நல்லதே நடக்கும். மாணவர்கள் ஆசிரியரிடத்தில் மிகுந்த மரியாதை செய்வீர்கள். அதிக மதிப்பெண் பெற கடினமாக உழைக்க வேண்டி வரும். பரிகாரம்: நவகிரகத்திற்கு விளக்கேற்றி வழிபட உடல் நிலை முன்னேறும். அதிர்ஷ்டகிழமைகள்: புதன், வியாழன்  கடகம்: கிரகநிலை: ராசியில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் குரு (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ), கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன் - விரைய ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன், ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: அனைவரையும் ஒருங்கினைக்கும் திறன் உடைய கடக ராசி அன்பர்களே, இந்த வாரம் பணவரவு இருக்கும். அதை பெரியவர்களிடம் ஆலோசனை செய்து தேவையானவற்றில் மட்டும் முதலீடு செய்வது நல்லது. தொழிலில் அபரிவிதமான முன்னேற்றத்தை காண முடியும். அதனால் நல்ல லாபத்தை காண முடியும். சிலருக்கு கொடுத்த கடன் சரியான நேரத்தில் வராததால் பதட்டம் உண்டாகலாம். கவலை வேண்டாம் தாமதமானாலும் பணம் கைக்கு கிடைக்கும்.. உத்தியோகத்தில் பொறுமை நிதானம் அவசியம். அலுவலகத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தானுண்டு தன் வேலையுண்டு இருந்தால் யாரோட பகைக்கும் ஆளாகாமல் இருப்பீர்கள். பொறுப்பான பதவியொன்றிற்கு உங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும். குடும்பத்தை பொறுத்தவரை அனைவரின் மனதிலும் சந்தோஷம் கை கூடும். உங்கள் சகோதரர்கள் உங்களுக்கு ஆதரவாகவும், பக்கபலமாகவும் இருப்பார்கள். கணவன் -  மனைவியிடையே பரஸ்பர அனனியோன்யம் மேலோங்கி காணப்படும். பெண்கள் சுபச் செலவு உங்களால் ஏற்படும். பெண்கள் குடும்ப ஒற்றுமைக்காக விட்டுக் கொடுத்து போக வேண்டியிருக்கும். பொதுநல சேவை செய்ய ஆர்வம் அதிகரிக்கும்.  மாணவர்கள் கல்வியைத் தவிர மற்ற விசயங்களில் கவனத்தை சிதற விட வேண்டாம். நண்பர்கள் விசயத்தில் எச்சரிக்கை தேவை. பரிகாரம்: முன்னோர்களை வழிபட பூர்வீக சொத்துக்களில் இருக்கும் தடைகள் விலகும். அதிர்ஷ்டகிழமைகள்: திங்கள், வியாழன்  சிம்மம்: கிரகநிலை: சுகஸ்தானத்தில் குரு (வ) - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ), கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன், ராஹூ - விரைய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: உடன் இருப்பவர்களுக்காக அதிகம் கவலைப்படும் சிம்ம ராசி அன்பர்களே, இந்த வாரம் தொழிலில் கவனமாக செயல்படவும். லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும், நஷ்டம் இருக்காது. தொழிலதிபர்கள் சொந்தத் தொழில் புரிவோர் சிறிது சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். எதிர்காலத்திற்கு தேவையான முறையான சேமிப்புகளுக்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். தொழில்,  வீடு, நிலம் ஆகியவற்றில் இருந்து வந்த சுணக்க நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் நிம்மதி பெருமூச்சு விடும் கால கட்டம். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கப் பெறுவீர்கள். வேலை பார்த்து வரும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் கடின உழைப்பு ஏற்படக்கூடும். என்றாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் நிம்மதி இருக்கும். குடும்பத்தில் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பச் சூழ்நிலையும் ஓரளவே நிம்மதியைத் தரும். சகோதர சகோதரி வழிகளில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் முடிவுக்கு வரும். கூடிய வரை பயணங்களை ஒத்திப் போடுவது நல்லது. பெண்கள் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான வாரம். மாணவர்கள் படிப்பில் தீவிர அக்கறை எடுக்க வேண்டும். கேட்பார் பேச்சைக் கேட்டு விளையாட்டுத் தனமாக இருத்தல், எதிர்காலம் முழுவதையும் இருட்டாக அமைத்திடும். எச்சரிக்கையாக இருங்கள்.  பரிகாரம்: சித்தர்கள் கோவிலுக்குச் சென்று வர மனதில் நிம்மதி பிறக்கும். அதிர்ஷ்டகிழமைகள்: ஞாயிறு, திங்கள்  கன்னி: கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு (வ) - சுகஸ்தானத்தில் சனி (வ), கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன், ராஹூ - லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: பிரதிபலன் பாராமல் உழைக்கும் குணமுடைய கன்னி ராசி அன்பர்களே, இந்த வாரம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தொழிலில் முன்னேற்றம் இருக்கும். தொழிலில் முக்கிய முடிவுகளை இந்த வாரம் துணிந்து எடுக்கலாம். கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை இருந்தால் அது சரியாகும். வியாபாரம் சீராக இருக்கும். அதற்கேற்ற வருமானமும் இருப்பதால் திருப்திகரமாக இருப்பீர்கள். சிக்கனமாக இருங்கள். உத்தியோகஸ்தர்கள் முக்கியமானவர்களை சந்திக்க நேரிடும். அலுவலக விசயங்களை யாரிடமும் கலந்துரையாட வேண்டாம். எதையும் படித்து பார்க்காமல் அவசர நிமித்தமாக கையெழுத்திட வேண்டாம். தேவையான உதவிகளை மேலதிகாரிகள் செய்வார்கள். குடும்பத்தில் திருமண வயதில் உள்ளவர்களுக்கு வரன் தேடும் முயற்சிகளில் ஈடுபடலாம்.  சிலர் என்றோ கடன் வாங்கியிருந்தவர்கள் கூட தேடி வந்து பணத்தை தந்து விடுவார்கள். பழமையான ஆலயம் ஒன்றிற்குச் சென்று வருவீர்கள். பெண்கள் தங்கள் பேச்சுகளில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய தருணமிது. நிம்மதியான உறக்கம் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் அதிகம் நாட்டம் இருக்கும். கொடுக்கின்ற பொறுப்புகளை திறமையாக  செய்து முடிப்பீர்கள். பரிகாரம்: பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபட தேவையில்லாமல் பணம் செலவாவதைத் தவிர்க்கலாம். அதிர்ஷ்டகிழமைகள்: புதன், வெள்ளி  துலாம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ), கேது - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன், ராஹூ - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: எவரையும் கண்டவுடன் சரியாக எடை போடும் திறனுடைய துலா ராசி அன்பர்களே, இந்த வாரம் வாழ்க்கைத் துணையுடன் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தேவையில்லாத பிரச்சனைகளில் தலையிட வேண்டாம். தொழிலில் முக்கிய முடிவுகளை சற்று தள்ளிப்போடுவது உங்களுக்கு நல்லது. மற்றபடி தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். தேவையான உதவிகள் பங்குதாரர்களிடமிருந்து கிடைக்கும். ஏற்றுமதி தொழிலில் உள்ளவர்கள் நல்ல லாபத்தை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் உடன் பண்புரிவோரிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். சிலர் எதிர்பாராத இட மாற்றத்தை சந்திக்கலாம். வேலைப்பளு மிக அதிகமாக இருக்கும். செய்யும் வேலையில் உங்கள் தனித் தன்மை வெளிப்படும். குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். தூரத்தில் இருக்கும் உறவினரால் நன்மை ஏற்படும். கணவன், மனைவியரிடையே அவ்வப்போது பிரச்சனைகள் வந்து போகும். மதிப்பு மரியாதை சுமாராகவே இருக்கும். பெண்களுக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு உற்சாகம் உண்டாகும். மாணவர்கள் அதிக சிரத்தையுடன் படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்ணை எதிர்பார்க்கலாம். பரிகாரம்: அம்பாள் கோவிலுக்குச் சென்று எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபடுவதன் மூலம் பணம் விரையமாகாமல் தவிர்க்கலாம். அதிர்ஷ்டகிழமைகள்: புதன், வெள்ளி  விருச்சிகம்: கிரகநிலை: ராசியில் குரு (வ) - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ), கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன், ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: மனதில் உள்ளதை வெளிப்படையாக சொல்லும் குணமுடைய விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வாரம் குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. மற்றவர்களுக்காக ஜாமின் போடுவதைத் தவிர்ப்பது நல்லது. தொழில் இருந்து வந்த மந்த நிலை மாறும். சிலருக்கு பழைய தொழிலை புதுப்பிக்க தேவையான வங்கிக் கடன் மற்றும், மூலதனப் பொருட்கள் இப்பொழுது தங்கு தடையின்றி கிடைக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது. நண்பர்கள் உதவுவார்கள். உத்தியோகஸ்தர்கள் காரிய சித்தி பெறுவீர்கள். மேலதிகாரியிடம் நற்பெயர் கிடைக்கும். ஆதலால் பதவி உயர்வு, ஊதிய உயர்வு, போன்றவற்றை எதிர்பார்க்கலாம். புதிய நிறுவனங்களிலிருந்து அழைப்புகளை எதிர்பார்க்கலாம். சக ஊழியர்களுடன் நல்லிணக்கம் ஏற்படும். குடும்பத்தில் கணவன் - மனைவிக்கிடையே இருந்த சின்ன சின்ன பிரச்சினைகள் மறையும். உறவினர் வருகையால் இல்லம் விழாக் கோலம் கொண்டாடும். பங்காளிகளின் சொத்து பிரச்சினை சிறு விவாதத்திற்கு பிறகு முடிவுக்கு வரும். பெண்கள் வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருக்கவும். பேசும் போது வார்த்தையில் நிதானம் தேவை. மாணவர்கள் கல்வியில் சிறப்பாக பயிலுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். பரிகாரம்: சிவன் கோவிலுக்குச் சென்று வழிபட்டு வர தொழிலில் பிரச்சனைகள் வராது. அதிர்ஷ்டகிழமைகள்: வியாழன், வெள்ளி  தனுசு: கிரகநிலை: ராசியில் சனி (வ), கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர  ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன், ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - விரைய ஸ்தானத்தில் குரு (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: ஆன்மீக காரியங்களில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக் கொள்ளும் தனுசு ராசி அன்பர்களே, இந்த வாரம் உடல் நலனில் முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் அன்பு அதிகரிக்கும். தொழில் - வியாபாரம் லாபகரமானதாக இருக்கும். உங்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் உங்களை வழிநடத்துவார். முடிந்த வரை உங்கள் முழு முயற்சியை கொடுத்தால் உங்கள் தொழிலில் வெற்றி காணலாம். உங்களிடம் தொழில் கற்றவர்களும் சிறந்து விளங்குவார்கள் உத்தியோகஸ்தர்கள் சிறந்த பெயரை எடுப்பதற்கு கடினமாக உழைக்க வேண்டி வரலாம். நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு உங்களுக்கு கிடைக்கும். உங்கள் மீது பகைமை கொண்டவர்கள் கூட உங்களுக்கு நன்மை நடப்பதற்கு உதவுவார்கள். குடும்பத்தில் உறவுகள் சுமூகமாக இருக்கும். குல தெய்வ பிரார்த்தனையை அனைவரும் சேர்ந்து செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பஞ்சாயத்துகள் முடிவுக்கு வரும்.  நண்பர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு அறவே நீங்கும். பெண்கள் உடன்பணிபுரிபவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. பணிச்சுமை அதிகமாக இருக்கும். மாணவர்கள் மேற்கல்வி பயில விரும்புவர்களுக்கு தடங்கல்கள் ஏற்படலாம். அதைக் கண்டு நீங்கள் அஞ்ச வேண்டாம். பரிகாரம்: மஹாலட்சுமிக்கு மல்லிகை மலர் கொடுத்து வணங்க மனதிற்கு சந்தோஷமான காரியங்கள் நடக்கும். அதிர்ஷ்டகிழமைகள்: செவ்வாய், வியாழன்  மகரம்: கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன், ராஹூ - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் குரு (வ) - விரைய ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: மற்றவர்கள் குறை கூறுவதற்கு முன் அந்த வேலையை செய்து முடிக்கும் மகர ராசி அன்பர்களே, இந்த வாரம் வழக்குகளில் உங்களுக்கு எதிரான போக்கு காணப்படலாம். உடல் நிலையில் கவனம் செலுத்தவும். தொழிலில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.  சின்ன சின்ன தொந்தரவுகள் வந்து போகும்.  மற்றபடி எந்த விதமான பெரிய பாதிப்புகளும் வர வாய்ப்பில்லை. சிறு தொழில் முனைவோர் தேவையற்ற கடன் உதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்கள் வேலையில் கவனமாக செயல்பட்டால் பிரச்சினைகள் வராமல் இருக்கும். உங்களைக் கண்டு சக பணியாளர்கள் பொறாமைப் படுவார்கள். வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல நேரலாம். குடும்பத்தில் நிதிநிலைமை திருப்தி தரும். வீண் செலவுகள் வந்து தொல்லை ஏற்படுத்தும். பேச்சுகளில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. தேவையில்லாமல் அவசரப் பட்டு பேசி பின்பு வருந்த வேண்டாம். மனதிற்கு பிடித்த விசயங்கள் நடைபெறுவதற்கு சாத்தியம் உள்ளது. பெண்கள் அண்டை அயலாருடன் பழகும்போது மிக கவனமுடன் இருப்பது நல்லது. குழந்தைகள் விசயத்தில் அக்கறை காட்டுவீர்கள். மாணவர்கள் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பீர்கள். தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெறுவீர்கள். பரிகாரம்: முருகன் கோவிலுக்குச் சென்று அரளி மாலை சாற்றி வழிபடுவதால் மூன்றாம் நபர்களால் வரும் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். அதிர்ஷ்டகிழமைகள்: புதன், சனி  கும்பம்: கிரகநிலை: சுகஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன், ராஹூ - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் குரு (வ) - லாப ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: பெரியவர்களை மதிக்கும் குணமுடைய கும்ப ராசி அன்பர்களே, இந்த வாரம் வீடு மனை வாங்குவதில் சிறு தடைகள் வரலாம். பூர்வீக சொத்து சம்பந்தமான விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும்.  தொழில் வியாபாரம் நல்லபடி இருக்கும். எதிர்பார்த்த பண வரவு உண்டாகும். இருப்பினும் நிதி நிறுவனங்களிடமிருந்து கிடைக்க வேண்டிய உதவிகள் சற்று கால தாமதமாகவே கிடைக்கும். புதிய தொழிலில் நாட்டம் அதிகரிக்கும். அதற்கேற்றாற்போல் வாய்ப்புகளும் வரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடங்களில் பாராட்டு கிடைக்கும். உங்களின் வேலை சிறப்பாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்திருந்த பணியிடமாற்றம் கிடைக்கும். பதவி உயர்வுக்காக நீங்கள் சில தேர்வுகளில் கலந்து கொள்ள வேண்டி வரலாம். குடும்பத்தில் உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். விருந்து, கேளிக்கை போன்ற நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறும். அதனால் எப்பொழுதும் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. குல தெய்வத்தை வணங்குங்கள். பெண்கள் சிக்கன நடவடிக்கையை மேற்கொள்வது நல்லது.  தேவையில்லாதவற்றில் பணத்தை முடக்க வேண்டாம். மாணவர்கள் ஆசிரியர்களின் நன்மதிப்பை பெற்று மகிழ்வீர்கள். சக மாணவர்களிடம் சகஜமாக பழகுங்கள். பரிகாரம்: வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமானை வழிபட குடும்பப் பிரச்சனைகள் நீங்கும். அதிர்ஷ்டகிழமைகள்: ஞாயிறு, சனி  மீனம்: கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - சுகஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன், ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் குரு (வ) - தொழில் ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: ஓய்வில்லாமல் உழைக்கும் குணமுடைய மீன ராசி அன்பர்களே, இந்த வாரம்  இளைய சகோதரர் வழியில் சில அனுகூலமான விஷயங்கள் வரும். தாய், தாய் வழி உறவினர்கள் உதவுவார்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். தொழில் தொய்வின்றி நடைபெறுவதற்கு தேவையான நிதியுதவிகள் தானாக கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் தொழிலுக்கு இடையூராக இருந்தவர்கள் காணாமல் போய்விடுவார்கள். வருமானம் சீராக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவார்கள். அவர்களின் பாராட்டு உங்களுக்கு உந்துதலாக இருக்கும். கிடைக்க வேண்டிய சலுகைகள் அனைத்தும் தங்கு தடையின்றி கிட்டும். ஓய்வில்லாமல் உழைக்க வேண்டி வரலாம். குடும்பத்தில் கணவன் - மனைவி உறவு நன்றாக இருக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடந்து கொள்வார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். அவரால் சில காரியங்களைச் சாதித்துக்கொள்வீர்கள். சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டி வரலாம். பெண்கள் அக்கம் பக்கத்தாரிடம் கவனமாக பழகுவது நல்லது. வீட்டு விசயங்களை ரகசியமாக வைத்துக் கொள்வது உங்களை பிரச்சினையிலிருந்து காப்பாற்றும். மாணவர்கள்  கல்வியில் அக்கறை எடுத்து படிப்பதன் மூலம் நல்ல பாராட்டை பெற முடியும். நேரத்தை வீணாக்க வேண்டாம். பரிகாரம்: நரசிம்மர் கோவிலுக்குச் சென்று வர குடும்பப் பிரச்சனைகள் தீரும். அதிர்ஷ்டகிழமைகள்: ஞாயிறு, திங்கள்  

newstm.in

Tags:
Next Story
Share it