நியூஸ்டிஎம் புரட்டாசி மாத ராசி பலன்கள் - 2018

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணித்த புரட்டாசி மாத ராசி பலன்கள்!

நியூஸ்டிஎம் புரட்டாசி மாத ராசி பலன்கள் - 2018
X

newstm-purattasi-month-prediction

நியூஸ்டிஎம் புரட்டாசி மாத ராசி பலன்கள் - 2018

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீவிளம்பி வருஷம் தக்ஷிணாயனம் வருஷ ரிது புரட்டாசி மாதம் 01ம் தேதி - 17.09.2018 அன்றைய தினம் திங்கட்கிழமையும் - சுக்ல பக்ஷ அஷ்டமியும் - கேட்டை நக்ஷத்ரமும் - ஆயுஷ்மான் நாமயோகமும் - பத்ரம் கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 27.56 க்கு (மாலை மணி 5.16க்கு) கும்ப லக்னத்தில் (சதயம் - 1ம் பாதத்தில்) புரட்டாசி மாதம் பிறக்கிறது.

புரட்டாசி மாதம் பிறக்கும் போது இருக்கும் கிரகநிலை:

லக்னம் - சதயம்- 1ம் பாதம் - ராகு சாரம்

சூரியன் - உத்ரம் - 2ம் பாதம் - சுய சாரம்

சந்திரன் - கேட்டை - புதன் சாரம்

செவ்வாய் - திருவோணம் - 3ம் பாதம் - சந்திரன் சாரம்

புதன் - உத்ரம் - 3ம் பாதம் - சூரியன் சாரம்

குரு - விசாகம் - 4ம் பாதம் - குரு (சுய) சாரம்

சுக்கிரன் - சுவாதி - 3ம் பாதம் - ராகு சாரம்

சனி - மூலம் - 2ம் பாதம் - கேது சாரம்

ராகு - பூசம் - 1 ம் பாதம் - சனி சாரம்

கேது - உத்திராடம் - 3ம் பாதம் - சூரியன்

புரட்டாசி மாதம் பிறக்கும் போது கடக ராசியில் ராகு - கன்னி ராசியில் சூரியன், புதன் - துலா ராசியில் குரு, சுக்கிரன் - விருச்சிக ராசியில் சந்திரன் - தனுசு ராசியில் சனி - மகர ராசியில் செவ்வாய், கேது என கிரகங்களுடைய சஞ்சாரம் அமைந்திருக்கிறது.

கிரக மாற்றங்கள்:

02.10.2018 அன்று பகல் 12.19 மணிக்கு புதன் பகவான் கன்னி ராசியில் இருந்து துலா ராசிக்கு மாறுகிறார்

04.10.2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் துலா ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார்

11.10.2018 அன்று பகல் 12.05 மணிக்கு சுக்ர பகவான் துலா ராசியில் வக்ரம் ஆகிறார்.

மேஷம்: கிரக நிலைகள்: செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்த சூரிய பகவான் ரண, ருண,ரோக சத்ரு ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 3 ந்தேதி  ரண, ருண,ரோக சத்ரு ஸ்தானத்தில் இருந்த புதன் பகவான் களத்திரஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு களத்திரஸ்தானத்தில் இருந்த குருபகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி களத்திரஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார். பலன்: எதிலும் தனித்தன்மையை வெளிப்படுத்தும் மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். வாழ்வில் முன்னேற்றம் பெறுவதற்கான புதிய வழி உண்டாகும். பொருளாதார நிலை திருப்தி தரும்.  குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும். உறவினர்கள் வருகை இருக்கும் அதே நேரத்தில் அவர்களுடன் வாக்குவாதம் செய்வதை  தவிர்ப்பது நல்லது.  கணவன், மனைவிக்கிடையே  மனம்விட்டு பேசுவதன் மூலம்  கருத்து வேற்றுமை வருவதை தவிர்க்கலாம்.  தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு  இருப்பவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களால் லாபம்  கிடைக்க பெறுவீர்கள்.  சரக்குகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது.   உத்தியோகத்தில் இருப்பவர்கள்  எந்த ஒரு வேலையையும் செய்து முடிப்பதில் வேகம் காட்டுவார்கள். சக ஊழியர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில் இருந்த மெத்தன போக்கு மாறும்.  பெண்கள் துணிச்சலுடன் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மைதரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.  மாணவர்கள் மிகவும் கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. கல்வியை பற்றிய கவலை நீங்கும். திட்டமிட்டபடி பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண்  பெறுவீர்கள்.  பரிகாரம்: சனிக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும்.   சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 17; அக்டோபர் 12, 13, 14 அதிர்ஷ்ட தினங்கள்: அக்டோபர் 6, 7 அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்ரிஷபம்: கிரக நிலைகள்: செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் இருந்த சூரிய பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 3 ந்தேதி பூர்வ புண்ணிய  ஸ்தானத்தில் இருந்த புதன் பகவான் ரண, ருண, ரோக ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு ரண, ருண, ரோக ஸ்தானத்தில் இருந்த குருபகவான் களத்திர ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி ரண, ருண, ரோக ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார். பலன்: எந்தச் செயலையும் தைரியத்துடன் அணுகும் ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் மனதில் புத்துணர்வு அதிகரிக்கும். தம்பி, தங்கையின் சுபநிகழ்ச்சிகளை தலைமையேற்று நடத்துவீர்கள். வீடு, வாகனத்தில் விரும்பிய மாற்றத்தை தாராளச் செலவில் நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன்  சில்லறை சண்டைகள் உண்டாகலாம் கவனம் தேவை.  கணவன், மனைவிக்கிடையே  மனவருத்தம் ஏற்படும் நிலை உருவாகலாம். பின் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன்  பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.  தொழில் வியாபாரம் தொடர்பான  காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். திட்டமிட்டு  செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில்  கூடுதல் லாபம் பெற முடியும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், வீண் அலைச்சலும் உண்டாகும். கவனமாக  வேலைகளை செய்யாவிட்டால்  மேல் அதிகாரிகளின்  அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம்.  பெண்களுக்கு மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் சந்திப்பு உண்டாகும். வீண் செலவும் ஏற்படலாம். கோபத்தை குறைப்பது நல்லது. நம்பிக்கையுடன் காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.  மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம்  உண்டாகும். அதே நேரத்தில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும். கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.  பரிகாரம்: அருகிலிருக்கும் நவக்கிரக கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும்.  சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 18, 19; அக்டோபர் 15, 16 அதிர்ஷ்ட தினங்கள்: அக்டோபர் 8, 9 அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி மிதுனம்: கிரக நிலைகள்: செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசிக்கு தைரிய, வீரிய ஸ்தானத்தில் இருந்த சூரிய பகவான் சுக  ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 3 ந்தேதி சுக ஸ்தானத்தில் இருந்த புதன் பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்த குருபகவான் ரண, ருண, ரோக  ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி பூர்வ, புண்ணிய ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார். பலன்: எதிர்கால தேவை கருதி சேமிப்பில் ஆர்வம் காட்டும் மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் புதிய ஒப்பந்தங்கள் நிறைவேறும். நவீன எந்திரங்களின் மூலம் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணியில் திறமையை வெளிப்படுத்துவர்.  குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். மற்றவர்கள்  உங்களை அனுசரித்து செல்வார்கள்.  கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். அன்பு அதிகரிக்கும். மருத்துவ செலவு ஏற்படலாம். பேச்சின் இனிமை சாதூரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும்.  தொழில் வியாபாரம்  சிறப்படையும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும்.  உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் காரிய அனுகூலம்  உண்டாகும். சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்க பெறுவீர்கள்.  பெண்களுக்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். மனதில் வீண்குழப்பம் உண்டாகும்.   மாணவர்களுக்கு கல்வியில் உயர்வு உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் ஏற்படும். போட்டிகளில் பங்கு பெற ஆர்வம் உண்டாகும்.   பரிகாரம்: வியாழக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும்.   சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 20, 21; அக்டோபர் 17 அதிர்ஷ்ட தினங்கள்: அக்டோபர் 10, 11 அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்கடகம்: கிரக நிலைகள்: செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசிக்கு தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் இருந்த சூரிய பகவான் தைரிய, வீர்ய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 3 ந்தேதிதைரிய, வீர்ய ஸ்தானத்தில் இருந்த புதன் பகவான் சுகஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு சுக ஸ்தானத்தில் இருந்த குருபகவான் பூர்வ, புண்ணிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி சுக ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார். பலன்: எதையும்  எதிர்கொள்ளும் துணிச்சல் கொண்ட கடக ராசி அன்பர்களெ, இந்த மாதம் எதிலும்  முன்னேற்றம் காணப்படும். உங்கள் இஷ்டத்திற்கு விரோதமாக  காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும் வீண்  ஆசைகள் மனதில் தோன்றும்.  குடும்பாதிபதி சூரியன் தைரிய ஸ்தானத்தில் புதன் பகவானுடன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் உறவினர் வருகை ஏற்படும். பெரியோர்களின் வார்த்தைக்கு தேவையில்லாமல் மறுப்பு தெரிவிக்க வேண்டாம். உடல்நலம் அவ்வப்போது பாதிக்கப்பட்டு பின்பு சரியாகும். தொழில் ஸ்தானத்தை புதன், குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்களின்  பார்வை இருப்பதால் பணவரவு எதிர்பார்ப்பதை விட அதிகமாக இருக்கும். வெளியூர், வெளிநாடு பயணங்கள் சென்றுவர வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  நிர்வாக திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள்.  பெண்களுக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லா தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். அடுத்தவர்களின் செயல்களால் கோபம் உண்டாகலாம்.  மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பிரச்னைகள் நீங்கும். திறமை வெளிப்படும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.  பரிகாரம்: அம்பாள் கோவிலுக்குச் சென்று காலையில் 3 முறை வலம் வரவும்.  சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 22, 23,24 அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 17; அக்டோபர் 12, 13, 14 அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளிசிம்மம்: கிரக நிலைகள்: செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசியில்  இருந்த சூரிய பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 3 ந்தேதி தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் இருந்த புதன் பகவான் தைரிய, வீர்ய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு தைரிய, வீர்ய ஸ்தானத்தில் இருந்த குருபகவான் சுக ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி தைரிய, வீர்ய ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார். பலன்: வீண் விவகாரங்களில் தலையிடாத சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டு  செய்வதன் மூலம் சாதகமான பலன்  கிடைக்கும்.  குடும்பஸ்தானத்தில் ராசிநாதன் சஞ்சாரம் இருப்பதால் குடும்பப் பிரச்னைகள் சுமூகமாக முடியும். குடும்பாதிபதி புதன் பகவான் குரு, சுக்ரனுடன் இணைந்து இருப்பதால் எதிர்பார்த்திருந்த சுப காரியங்கள் அனைத்திற்கும் வழி பிறக்கும். திருமணத்திற்கு தடை கூறியவர்கள் மனமுவந்து திருமணம் செய்து கொள்ள ஒப்புதல் தருவார்கள். இரத்தம் சம்பந்தமான சிறு பிரச்னைகள் வரலாம். கவனம் தேவை. தொழில் ஸ்தானாதிபதி ஆட்சியாக இருப்பதுடன் புதன் மற்றும் குருவுடன் இணைந்து இருக்கிறார். இது தொழிலில் ஏற்றமான நிலையையே காட்டுகிறது. கடன்களை திருப்பிச் செலுத்துவீர்கள். பொருளாதார முன்னேற்றமும் இருக்கும். உத்யோகஸ்தர்கள் அவர்களின் தேவைகளை மேலிடத்திற்குத் தெரிவிப்பதன் மூலம் அனுகூலமான முடிவுகள் கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். பெண்கள் வேலை செய்யும் இடத்தில் துணிவுடன் செயல்படுவதன் மூலம் நற்பெயர் கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். மாணவர்கள் உங்களுக்கு தேவையான நிதி உதவி கிடைக்கப் பெறுவீர்கள். தாய் தந்தையர் ஆதரவு தெரிவிப்பார்கள். மனநிம்மதி கிடைக்கும். பரிகாரம்: வியாழன் தோறும் சிவனுக்கு வில்வ மாலை சாற்றி வலம் வாருங்கள். சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 25, 26 அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 18, 19; அக்டோபர் 15, 16 அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்கன்னி: கிரக நிலைகள்: செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசிக்கு அயன, சயன ,விரய ஸ்தானத்தில் இருந்த சூரிய பகவான் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 3 ந்தேதி ராசியில் இருந்த புதன் பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் இருந்த குருபகவான் தைரிய, வீர்ய  ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார். பலன்: நன்மையும் சிரமமும் கலந்த பலன்களைக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் தாராள பணப்புழக்கம் இருப்பதால் குறுக்கிடும் சிரமங்களைக் குறைத்துவிடுவீர்கள். தம்பி, தங்கையின் எதிர்பார்ப்புகளை ஓரளவு நிறைவேற்றுவீர்கள்.  உங்கள் ராசியாதிபதி புத பகவான் உங்கள் குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் மேலும் அவருடன் சுக்கிரனும் சஞ்சரிப்பதாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியும், செல்வாக்கும் உண்டாகும். குடும்பத்தார் அனைவரும் ஒன்று சேர்ந்து குலதெய்வ பிரார்த்தனையை முடித்து விடுவீர்கள். நீண்ட நாட்களாக இருந்த சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தொழிலில்  இதுநாள் வரை இல்லாத முன்னேற்றம் உண்டாகும். முக்கிய ஆர்டர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். தந்தையார் தொழில் செய்து வருபவர்கள் சற்று அவர்கள் முன்னிலையில் விசயங்களை முடிவு செய்வது நன்மையைத் தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களுக்கான பதவி உயர்வுக்கு பரிந்துரை செய்வார்கள். சக ஊழியர்கள் உங்கள் மேல் பொறாமையாக இருந்தாலும் மேலிடத்தில் உங்கள் மேல் நம்பிக்கை இருப்பதால் கவலை  வேண்டாம்.  பெண்களுக்கு... வீட்டு விஷயங்களில் கவனத்தை செலுத்தவும். மாமியார் மருமகள் அன்பு அதிகரிக்கும். பிறந்த வீட்டிற்கு சென்று வருவீர்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பெற்றோர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள்.சக நண்பர்களுடன் பழகும் போது எச்சரிக்கை தேவை. பரிகாரம்: புதன்கிழமை தோறும் பெருமாள் கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வாரை வணங்கவும். சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 27, 28, 29 அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 20, 21; அக்டோபர் 17 அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி துலாம்: கிரக நிலைகள்: செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் இருந்த சூரிய பகவான்  ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 3 ந்தேதி அயன,சயன, போக ஸ்தானத்தில் இருந்த புதன் பகவான் ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு ராசியில்   இருந்த குருபகவான் தனம், , குடும்ப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி ராசியில்  இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார். பலன்: நல்லவர்களின் ஆலோசனையைக் கேட்டுப் பெறும் துலா ராசி அன்பர்களே, இந்த மாதம் உடல்நலனில் அக்கறை ஏற்படும். எதிரியால் இருந்து வந்த தொல்லை குறையும். வழக்கு விவகாரங்களில் அனுகூலமான தீர்வு கிடைக்கும்.  ராசியாதிபதி சுக்ரன் ராசியிலேயே குருவுடன் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் முடிவாகும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவார்கள். கணவன் - மனைவியிடையே சுமூக உறவு இருக்கும். குரு பகவான் மாதத்தின் பிற்பகுதியில் குடும்ப ஸ்தானத்திற்கு வருவதால் நீண்ட நாளைய நோக்கங்கள் அனைத்தும் நிறைவேறும். தொழில் ஸ்தானத்தில் ராஹூ பகவான் சஞ்சரிக்கிறார். முடிவெடுப்பதில் சிறு குழப்பங்கள் உருவாகலாம். எனவே அனுபவமிக்கவர்களை ஆலோசித்து முடிவெடுப்பது நன்மை தரும். வாடிக்கையாளர்களின் தேவைகளை புரிந்து செயல்படுவதன் மூலம் தொழிலில் முன்னேற்றம் இருக்கும். உத்யோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகம் இருக்கும் என்றாலும் உங்கள் திறமையை பரிசோதிக்கவே கொடுக்கப்பட்டதாக இருக்கும். எனவே முழு மனதுடன் செய்தால் பலன் நிச்சயம் கிடைக்கும். பெண்கள் நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட கோவில்களுக்குச் சென்று வர வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் முக்கிய சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். உங்கள் மேல் இருந்த பல குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொள்வீர்கள். பாடத்தில் கவனத்தை செலுத்துவீர்கள். பரிகாரம்: நவகிரக குரு பகவானுக்கு வியாழன் தோறும் மஞ்சள் மலர் வாங்கிக் கொடுப்பது நன்மை தரும். சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 30; அக்டோபர் 1 அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 22, 23,24 அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளிவிருச்சிகம்: கிரக நிலைகள்: செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் இருந்த சூரிய பகவான் லாப  ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 3 ந்தேதி லாப ஸ்தானத்தில் இருந்த புதன் பகவான் அயன, சயன, போக ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு அயன, சயன, போக ஸ்தானத்தில் இருந்த குருபகவான் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி அயன, சயன,போக ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார். பலன்: அதிக பயன் தராத பொருள் வாங்குவதை தவிர்க்கும் விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் தொழிலில் ஏற்படும் குறுக்கீடுகளை மாற்றுத்திட்டத்தின் மூலம் முறியடிக்க முயல்வீர்கள். தொழில் சார்ந்த பயணத்தை அடிக்கடி மேற்கொள்வீர்கள்.  குடும்பஸ்தானத்தில் பகை கிரகமான சனி பகவான் இருந்தாலும், மாதத்தின் பிறபகுதியில் குரு பகவான் உங்கள் ராசிக்கு வருவதால் இது நாள் வரையில் ஏற்பட்டு வந்த குடும்பப் பிரச்னைகளில் இருந்து ஓரளவிற்கு விடுபடுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். ஒருவருக்கொருவர் புரிந்து நடந்து கொள்வீர்கள். தொழில் ஸ்தானாதிபதி சூர்ய பகவான் இந்த மாதம் லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். இதனால் தொழிலில் முன்னேற்றம் இருக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். இதுவரை இருந்த நஷ்டம் ஈடுகட்டப்படும். உத்யோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பணி இடமாற்றம் ஊதிய உயர்வுடன் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். முக்கிய வேலையினைச் செய்து பாராட்டு பெறுவீர்கள். பெண்களுக்கு வெளியிடங்களில் மரியாதை கிடைக்கும். நிம்மதியான தூக்கம் கிடைக்கும். ஓய்வில்லாமல் உழைத்தவர்களுக்கு இப்போது ஓய்வு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு. ஆசிரியர்கள் உங்களுடன் நண்பர்களைப் போல் பழகுவார்கள். இதனால் உங்களின் பாடத்தில் உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வீர்கள். பரிகாரம்: அம்பாளுக்கு செவ்வாய் கிழமை தோறும் அர்ச்சனை செய்து வர பணப்பிரச்னை அகலும். சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 2, 3 அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 25, 26 அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன் தனுசு: கிரக நிலைகள்: செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் இருந்த சூரிய பகவான் தொழில் ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 3 ந்தேதி தொழில் ஸ்தானத்தில் இருந்த புதன் பகவான் லாப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு லாப ஸ்தானத்தில் இருந்த குருபகவான் அயன,சயன, போக ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி லாப ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார். பலன்: புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டு பணியினை செவ்வனே செய்யும் தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் லாபகரமான தொழில்களில் முதலீடு செய்யுங்கள். எதிர்காலத்திற்கு சேமித்து வைக்கும் நேரமிது. வீண் ஆடம்பர செலவுகள், தேவையற்ற வீண் பேச்சுகள் ஆகியவற்றை குறையுங்கள்.  குடும்பாதிபதி சனி பகவான் ராசியிலேயே சஞ்சாரம் செய்வதால் கணவன் - மனைவிக்கிடையே ஒரு புரிதல் இருக்கும். குடும்பஸ்தானத்தில் இருக்கும் செவ்வாய் மற்றும் கேது பகவான் சேர்க்கை உங்கள் வார்த்தைகளால் சில பிரச்னைகளை உருவாக்குவார். கவனம் தேவை. எதுவாக இருந்தாலும் ஒருமுறைக்கு இருமுறை கலந்தாலோசிக்க பிரச்னைகள் வராமல் தவிர்க்கலாம்.  தொழில் ஸ்தானாதிபதி புதன் பகவான் லாப ஸ்தானத்தில் இருப்பதால் தொழில் செய்பவர்களுக்கு பொன்னான காலமாகவே இருக்கும். புதிய முடிவுகள் எடுப்பதாக இருந்தாலும், தொழிலுக்காக புது இடம் வாங்குவாதாக இருந்தாலும் துணிந்து செய்யலாம். உத்யோகஸ்தர்களுக்கு ராசியிலேயே சனி பகவான் இருப்பதால் வேலையில் முன்னேற்றம் உண்டாகும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு யோகமான மாதமாக இருக்கும். வேலை செய்யும் பெண்களுக்கு பணியிடங்களில் பாராட்டுகளும் பரிசுகளும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பிடித்த பாடங்களில் அதிக மதிப்பெண் பெறுவதன் மூலம் அவர்கள்  மனதில் குதூகலம் பிறக்கும். பரிகாரம்: சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட தாமதப்பட்ட காரியங்கள் அனைத்தும் விரைவில் நடந்து முடியும். சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 4, 5 அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர்  27, 28, 29 அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்மகரம்: கிரக நிலைகள்: செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் இருந்த சூரிய பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 3 ந்தேதி பாக்கிய ஸ்தானத்தில் இருந்த புதன் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு தொழில் ஸ்தானத்தில் இருந்த குருபகவான் லாப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி தொழில் ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார். பலன்: எதிரிகளின் மறைமுக சூழ்ச்சிக்கு தக்க பதிலடி கொடுக்கும் மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் வழக்கு விவகாரத்தில் ஓரளவே சாதகமான தீர்வு கிடைக்கும். புதிய பதவி, பொறுப்பு பெறுவதில் தாமதம் உண்டாகும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் வந்து குவியும். குடும்பஸ்தானாதிபதி சனி பகவான் விரையஸ்தானத்தில் இருப்பதால் குடும்பத்தில் சில செலவுகள் இருக்கும். புதிய ஆடை ஆபரணம் வாங்குதல், குடும்பத்திற்குத் தேவையான பொருட்கள் வாங்குதல் என செலவுகள் இருக்கும். கணவன் - மனைவியிடையே சிறு கருத்து வேறுபாடு வந்து போகலாம். கவனம் தேவை. தொழில் ஸ்தானத்தில் குரு, புதன், சுக்ரன் என சுபர்களின் கூட்டமைப்பு இருப்பதால் தொழிலில் நல்ல லாபமான காலமாக இந்த மாதம் இருக்கும். நீங்கள் நம்பியவர்கள் உங்களுக்கு நல்வழி காட்டுவார்கள். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய நுட்பங்களை பயில்வீர்கள். உத்யோகத்தில் பண வரவு சீராக இருக்கும். உங்களின் நீண்ட நாளைய கனவுகள் நிறைவேறும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பெண்கள் பெரியோரின் பாராட்டைப் பெறுவார்கள். புதிதாக வேலைக்குச் செல்ல விரும்புபவர்கள் தங்களுக்கு பிடித்த வேலையில் சேரும் வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் செயல்முறைக் கல்வியில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். எளிதில் புரிந்து கொள்வார்கள். உதவித் தொகைகள் கிடைக்கும். பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் வைத்து வழிபட குடும்ப பிரச்னைகள் தீரும். சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 6, 7 அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 30; அக்டோபர் 1 அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனிகும்பம்: கிரக நிலைகள்: செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசிக்கு களத்திர ஸ்தானத்தில் இருந்த சூரிய பகவான் அஷ்டம  ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 3 ந்தேதி அஷ்டம ஸ்தானத்தில் இருந்த புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு பாக்கிய ஸ்தானத்தில் இருந்த குருபகவான் தொழில் ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி பாக்கிய ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார். பலன்: எங்கு போனாலும் உங்களுக்கு நன்மையே நடக்கும் பாக்கியம் பெற்ற கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் நன்மையும் தாராள வருமானமும் கிடைக்கும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும்.  குடும்ப ஸ்தானத்தை சூரிய பகவான் பார்ப்பதால் குடும்பத்தில் உங்கள் ஆதிக்கம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். சில முக்கிய முடிவுகளில் உங்களின் ஆலோசனைக்காக காத்திருப்பார்கள். குடும்பஸ்தானாதிபதி குரு பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் சில சுப நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் துவங்கும். கணவன் - மனைவியிடையே உறவு நன்றாக இருக்கும். தொழில் ஸ்தானத்திற்கு மாதத்தின் பிற்பகுதியில் குரு பகவான் வருவதால் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அவர் தனஸ்தானத்தை பார்க்கிறார். எனவே வர வேண்டிய நிலுவையில் உள்ள பணம் அனைத்தும் கைக்கு வந்து சேரும். உத்யோகஸ்தர்களுக்கு இதுவரை இருந்து வந்த அவப்பெயர் நீங்கும். மனம் தெளிவடையும். இதனால் உங்களுக்குக் கொடுத்த வேலைகளை கச்சிதமாக முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். பெண்கள் சற்று கவனமுடன் இருக்க வேண்டும்.தேவையில்லாமல் வார்த்தைகளை விடுவதைத் தவிர்த்தால் சில பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். மாணவர்களுக்கு கல்வியில் சில தடைகள் வந்தாலும் அது தானாகவே சரியாகி விடும். தேவையில்லாமல் மனதைக் குழப்பிக் கொள்ளவேண்டாம். பரிகாரம்: லக்ஷ்மி நரசிம்மருக்கு மல்லிகை மலர் வாங்கிக் கொடுக்க மனக்குழப்பம் நீங்கும். சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 8, 9 அதிர்ஷ்ட தினங்கள்: அக்டோபர் 2, 3 அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனிமீனம்: கிரக நிலைகள்: செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசிக்கு ரண, ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் இருந்த சூரிய பகவான் களத்திர ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 3 ந்தேதி களத்திர  ஸ்தானத்தில் இருந்த புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு அஷ்டம ஸ்தானத்தில் இருந்த குருபகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி அஷ்டம ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார். பலன்: ஆடம்பரச்செலவு செய்யும் எண்ணம் இல்லாத மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் தம்பதியர் ஒற்றுமையாக நடந்து சமூகத்திலும் உறவினர்களிடமும் நன்மதிப்பு பெறுவர். வியாபாரம் செய்வோருக்கு அபரிமிதமான பணவரவு கிடைக்கும்.  குடும்பாதிபதி செவ்வாய் பகவான் தனது ஸ்தானத்தைப் பார்ப்பதால் குடும்பத்தில் பிரச்னைகள் ஓரளவிற்குக் குறையும். குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய குடும்ப உறுப்பினர்கள் சிலர் நல்ல யோசனைகளைச் சொல்வார்கள். அதன்படி நடத்துவதற்கான பொருளாதாரமும் கிடைக்கும். கவலை வேண்டாம். காலில் சிறு பிரச்னைகள் தோன்றி மறையும். கவனமுடன் இருப்பது நல்லது.  தொழில் ஸ்தானத்தில் சனி பகவானின் சஞ்சாரம் இருப்பதால் நடக்க வேண்டிய செயல்கள் சிறிது தாமதமானாலும் வெற்றிகரமாக நடந்து முடியும். புதிய ஆர்டர்களுக்காக காத்திருப்பவர்களுக்கும் சிறிது கால தாமதத்திற்குப் பின் நல்ல செய்தி வரும். பொறுமை அவசியம். உத்யோகஸ்தர்களுக்கு அதிக வேலைப்பளு இருக்கும். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். இதனால் அதிக நேரம் வேலை செய்ய வேண்டி வரும். பெண்களுக்கு குடும்பத்தில் முக்கியத்துவம் இருக்கும். பிள்ளைகளுக்கு தேவையானதை வாங்கித்தருவீர்கள். குடும்பத்துடன் வெளியில் சென்று வருவீர்கள். மாணவர்கள் தானாக முன்வந்து ஆசிரியரிடம் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.அது உங்களை தவறாக காட்டவும் வாய்ப்பு இருக்கிறது. பரிகாரம்: சித்தர்கள் சமாதிக்குச் சென்று வர மனம் நிம்மதி அடையும். சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 10, 11 அதிர்ஷ்ட தினங்கள்: அக்டோபர் 4, 5 அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்

newstm.in

Tags:
Next Story
Share it