1. Home
  2. ஜோதிடம்

நியூஸ்டிஎம் கார்த்திகை மாத ராசி பலன்கள் - 2018

நியூஸ்டிஎம் கார்த்திகை மாத ராசி பலன்கள் - 2018

newstm-karthigai-month-prediction

நியூஸ்டிஎம் கார்த்திகை மாத ராசி பலன்கள் - 2018

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீவிளம்பி வருஷம் - தக்ஷிணாயனம் - சரத் ரிது - ஐப்பசி மாதம் 30ம் தேதி வெள்ளிக்கிழமை பின்னிரவு - கார்த்திகை மாதம் 1ம் தேதி முன்னிரவு - சுக்லபக்ஷ நவமியும் - சதய நக்ஷத்ரமும் - வியாகாத யோகமும் - கௌலவ கரணமும் - அமிர்தயோகமும் - கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி இரவு 2.17க்கு (உதயாதி நாழிகை: 50.13க்கு) கன்னியா லக்னத்தில் கார்த்திகை மாதம் பிறக்கிறது.

கிரகநிலை:

கடக ராசியில் ராகு - கன்னி ராசியில் லக்னம் - துலா ராசியில் புதன் (வ), சுக்ரன் (வ) - விருச்சிக ராசியில் சூரியன், குரு - தனுசு ராசியில் சனி - மகர ராசியில் கேது - கும்ப ராசியில் சந்திரன், செவ்வாய் என கிரகங்களுடைய சஞ்சாரம் அமைந்திருக்கிறது.

கிரக மாற்றங்கள்:

கார்த்திகை 8ம் தேதி (24.11.2018) - சனிக்கிழமை - புதன், சுக்ரன் வக்ர நிவர்த்தி ஆகிறார்கள்.

கார்த்திகை 22ம் தேதி (08.12.2018) - சனிக்கிழமை - விருச்சிக ராசிக்கு புதன் மாறுகிறார்.

கிரகங்களுடைய பாதசார விபரங்கள்:

லக்னம் - ஹஸ்தம் 2ம் பாதம் - சந்திரன் சாரம்

சூரியன் - விசாகம் 4ம் பாதம் - குரு சாரம்

சந்திரன் - சதயம் 3ம் பாதம் - ராகு சாரம்

செவ்வாய் - சதயம் 2ம் பாதம் - ராகு சாரம்

புதன் - விசாகம் 3ம் பாதம் - குரு சாரம் - வக்ரம்

குரு - அனுஷம் 2ம் பாதம் - சனி சாரம்

சுக்ரன் - சித்திரை 4ம் பாதம் - செவ்வாய் சாரம் - வக்ரம்

சனி - மூலம் 3ம் பாதம் - கேது சாரம்

ராகு - பூசம் 1ம் பாதம் - சனி சாரம்

கேது - உத்திராடம் 3ம் பாதம் - சூரியன் சாரம்

மேஷம் (அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை: சுக ஸ்தானத்தில் ராஹூ -  களத்திர  ஸ்தானத்தில் புதன் (வ), சுக்ரன் (வ) -  அஷ்டம  ஸ்தானத்தில் சூர்யன், குரு -  பாக்கிய  ஸ்தானத்தில் சனி - தொழில்  ஸ்தானத்தில் கேது -  லாப  ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: உங்களுக்கு தற்பெருமை இருந்தாலும் தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் சகோதரர்கள் மூலம்  நன்மை உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி  இருக்கும். வாகனங்களை  ஓட்டி செல்லும் போது கவனம் தேவை.தொழில், வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படலாம். புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கு அலைய வேண்டி இருக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். உடனிருப்பவர்களை ஆலோசித்து காரியங்களை முன்னெடுப்பது உங்கள் வெற்றிக்குத் தடை வராமல் காக்கும். அரசியல் துறையினருக்கு சாதகமான காலகட்டமாக இருந்தாலும் புத்திக்கூர்மையுடன் செயல்களை ஆராய்ந்து செய்வது நன்மை பயக்கும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் தேவையற்ற வாக்குவாதம் வரலாம்.  பெண்களுக்கு மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி  திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை.  அஸ்வினி: இந்த மாதம் உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். எதிர்பாலினத்தாரிடம் பழகும்போது மிகவும எச்சரிக்கை தேவை. எந்த காரியத்தை செய்தாலும் அதில் வேகத்தை காட்டாமல் மெத்தனமாகவே செய்ய தோன்றும்.  பரணி: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகும். பணவரத்து தாமதப்பட்டாலும் வந்து சேரும். சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கார்த்திகை 1ம் பாதம்: இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பான கவலை உண்டாகும். குடும்ப விஷயமாக அலைய வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே  இருக்கும் நெருக்கம் குறையும்.  பரிகாரம்: தேவி கருமாரியம்மனை வணங்கி வர எல்லா பிரச்சனைகளிலும் நல்ல தீர்வு கிடைக்கும். கஷ்டங்கள் நீங்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன் அதிர்ஷ்ட தினங்கள்:  நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 சந்திராஷ்டம தினங்கள்:  டிசம்பர் 6, 7ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்) கிரகநிலை: தைரிய வீரிய  ஸ்தானத்தில் ராஹூ -  ரண ருண ரோக  ஸ்தானத்தில் புதன் (வ), சுக்ரன் (வ) -  களத்திர  ஸ்தானத்தில் சூர்யன், குரு -  அஷ்டம ஸ்தானத்தில் சனி -  களத்திர  ஸ்தானத்தில் கேது -  தொழில்  ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: அனைவரையும் கவர்ந்து இழுப்பதில் திறமையானவரான ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம்  எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பகைவர்களால்  ஏற்படும் சிறு தொல்லைகளை  சமாளிக்க வேண்டி இருக்கும்.    புதிய நண்பர் களுடன் பழகும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும்.   கடன்விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான  முயற்சிகள் சாதகமான பலன் தரும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை  சந்திக்க வேண்டி இருக்கும்.  அலுவலக பணிகள் மூலம் டென்ஷன்  உண்டாகும்.கவனமாக பேசுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.  கணவன், மனைவிக் கிடையில் வாக்கு வாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. அக்கம் பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை வரலாம். அரசியல்துறையினர் தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும்  நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும்  சந்திக்க நேரலாம்.   கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும்.  பெண்கள் அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தெய்வபக்தி அதிகரிக்கும்.  மாணவர்களுக்கு  கல்வியை பற்றி டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். பாடங்களை ஒருமுறைக்கு  இருமுறை படித்து புரிந்து கொள்வது நல்லது.  கார்த்திகை 2, 3, 4 பாதம்: இந்த மாதம் எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நற்பெயர் பெறுவீர்கள். அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடவுள் பக்தி  அதிகரிக்கும்.  ரோகிணி: இந்த மாதம் வாக்கு வன்மையால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். அடுத்தவர் கூறுவதை தவறாக புரிந்து கொண்டு பின்னர் வருத்தப்படும் சூழ்நிலை ஏற்படலாம்.  மிருக சிரீஷம் 1, 2, பாதம்: இந்த மாதம் கொடுக்கல், வாங்கல்,  சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக பிரச்சனைகள் தீரும். தொடங்கிய வேலையை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் இழுபறியாக இருக்கும். பரிகாரம்:  அஷ்டலட்சுமிகளையும் வணங்கி வர மனோதைரியம் கூடும். பணகஷ்டம் குறையும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.  அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி அதிர்ஷ்ட தினங்கள்: டிசம்பர் 2, 3 சந்திராஷ்டம தினங்கள்:  டிசம்பர்  8, 9 ,10மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை,  புனர்பூசம் 1, 2, 3 பாதம்) கிரகநிலை: தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் ராஹூ -  பஞ்சம பூர்வ புண்ணிய  ஸ்தானத்தில் புதன் (வ), சுக்ரன் (வ) -  ரண ருண ரோக  ஸ்தானத்தில் சூர்யன், குரு -  களத்திர  ஸ்தானத்தில் சனி -  ரண ருண ரோக  ஸ்தானத்தில் கேது -  பாக்கிய  ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: பிடிவாத குணம் இருந்தாலும் ஆக்கப் பூர்வமான யோசனைகள் கொண்ட மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம்  காரியங்களில் தாமதம் உண்டாகும். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது.  மற்றவர்களுடன்  கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக  இருப்பது நல்லது.   தொழில் வியாபாரம் மந்தமாக காணப் பட்டாலும் பழைய பாக்கிகளை  வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள்.  ஆர்டர் தொடர்பான காரியங்களில் தாமதம் இருக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைபளு இருக்கும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நன்மைதரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை. அரசியல்வாதிகள் உத்வேகத்துடன் பணியாற்றுவார்கள். தெய்வீகப் பணிகளில் நேரடியாகவும் பின்புலமாகவும் இருந்து செயல்படுவார்கள்.  கலைத்துறையினர் தொழில் வாய்ப்புகள் பெற்று வருமானம் அதிகரித்து வீடு மனை வாங்கும் யோகம் பெறுவார்கள். தங்களுக்குத் தேவையான ஆடம்பர விஷயங்கள்  போன்றவற்றில் கவனம் செலுத்தாமல் உழைப்பிற்கேற்ற ஊதியத்தை பெறுதில் கண்ணும் கருத்துமாக செயல்படுவது நல்லது. பெண்கள் வீண் பேச்சை குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். மாணவர்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் கவனம் தேவை.  பாடங்களை படிப்பதில் தீவிரம் காட்டுவீர்கள். மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளுக்காக  செலவு செய்ய வேண்டி இருக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.   திருவாதிரை: இந்த மாதம் எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மை தரும். அடுத்தவர் கூறும் கருத்துக்களை  அப்படியே  ஏற்றுக்கொள்ளாமல் அதில் உள்ள நல்லது கெட்டதை யோசிப்பது நல்லது. பண விவகாரங்களில் கவனம் தேவை.  புனர்பூசம் 1, 2, 3 பாதம்: இந்த மாதம் எந்த காரியத்தையும்  செய்து முடிக்கும்  திறமை அதிகரிக்கும். வயிற்று கோளாறு உண்டாகலாம். பணவரத்து கூடும். ஆன்மீக நாட்டம் தெய்வ பக்தி அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும்.  பரிகாரம்: கும்பகோணம் அருகே உள்ள உப்பிலியப்பன் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள உப்பிலியப்பன், பூமிதேவியை  வணங்கிவர முன்ஜென்ம பாவம் நீங்கும்.  அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன் அதிர்ஷ்ட தினங்கள்: டிசம்பர் 4, 5 சந்திராஷ்டம தினங்கள்:  டிசம்பர் 11, 12கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை: ராசியில்  ராஹூ -  சுக ஸ்தானத்தில் புதன் (வ), சுக்ரன் (வ) -  பஞ்சம பூர்வ புண்ணிய  ஸ்தானத்தில் சூர்யன், குரு -  ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி -  பஞ்சம பூர்வ புண்ணிய  ஸ்தானத்தில் கேது -  தொழில்  ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: எதிலும் சுறுசுறுப்பாக செயல்படும் கடக ராசி அன்பர்களே, இந்த மாதம்  எதிர்ப்புகள் விலகும்.  பணவரத்து திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வாகனங்களை  ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம்.   தனிமையாக இருக்க நினைப்பீர்கள்.தொழில் வியாபாரம்  சுமாராக நடக்கும்.  ஆர்டர்கள் கிடைத்தாலும்  சரக்குகள் அனுப்புவது  தாமதமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூல் ஆனாலும் எதிர்பார்த்தபடி இருப்பது சிரமம்.  உத்தியோகத்தில்  இருப்பவர்கள் மிகவும் கவனமாக  பணிகளை  மேற்கொள்வது நல்லது. பதவி உயர்வு, நிலுவையில் உள்ள பணம் வருவது தாமதப்படும். குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே  கருத்து வேற்றுமை வந்து நீங்கும். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது.  பிள்ளைகளை அனுசரித்து செல்வது நன்மை தரும்.  அரசியல்வாதிகளுக்கு மக்களுக்கு தேவையானவற்றை பெற்றுத்தர எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். உங்கள் வளர்ச்சியின் மீது பொறாமைப்படுபவர்களை பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பதே நல்லது. கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும்.  பெண்கள்  எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.  பயணங்களின் போது உடமைகளை  கவனமாக  பார்த்துக் கொள்வது நல்லது.  மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் இருந்த மனவருத்தம்  நீங்கும். பாடங்கள் படிப்பதில் இருந்த தடைகள் நீங்கி ஆர்வமாக படிப்பீர்கள்.  புனர் பூசம் 4ம் பாதம்: இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் நீங்கள் கூறுவதை ஏற்காமல் தங்களது விருப்பப்படி எதையும் செய்வார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி நீங்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு  அனுப்பும் போது கவனம் தேவை.  பூசம்: இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடன் அனுசரித்து செல்வார்கள்.  விசேஷ நிகழ்ச்சிகளில்  குடும்பத்தினருடன்  கலந்து கொள்ள நேரிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும்.  ஆயில்யம்: இந்த மாதம் பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் தேவை.  திறமையாக செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும். மனோதைரியம் கூடும். பரிகாரம்: பிரத்தியங்கரா தேவியை  அர்ச்சனை செய்து வணங்கிவர எல்லா கஷ்டமும் நீங்கும். எதிர்ப்புகள்  அகலும்.  அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன் அதிர்ஷ்ட தினங்கள்: டிசம்பர் 6, 7 சந்திராஷ்டம தினங்கள்:  நவம்பர் 17, 18 டிசம்பர் 13,14,15சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை: தைரிய வீரிய  ஸ்தானத்தில் புதன் (வ), சுக்ரன் (வ) -  சுக ஸ்தானத்தில் சூர்யன், குரு -  பஞ்சம பூர்வ புண்ணிய  ஸ்தானத்தில் சனி -  சுக ஸ்தானத்தில் கேது -  களத்திர  ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் - அயன சயன போக  ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: எதற்கும் கலங்காத மனம் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம்  வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். களைப்பு, பித்தநோய் உண்டாகலாம். வீண்கவலை இருக்கும்.  மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வெளி வட்டார தொடர்புகளில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான  அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை  அனுசரித்து செல்வது நல்லது.  பழைய பாக்கிகளை  வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களால் டென்ஷன்  உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை வராமல் இருக்க மனம்விட்டு பேசுவது நல்லது.  பிள்ளைகள்  நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.  எதிலும் திருப்தி இல்லாதது போல் தோன்றும். அரசியல் துறையினருக்கு தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும்  நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும்  சந்திக்க நேரலாம்.   கலைத்துறையினருக்கு நிலுவையில் உள்ள காரியங்கள் சிறப்பாக முடிய வழி பிறக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். இரவு பகலாக உழைக்க வேண்டி இருக்கும். பெண்கள்  எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. மாணவர்கள்  கல்வியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். மகம்: இந்த மாதம் வீண்குழப்பம், காரிய தடை ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.  பூரம்: இந்த மாதம் கவன தடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து தாமதப்படும். தொழில் வியாபாரத்தில் சீரான நிலை காணப்படும். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகலாம். சிக்கன நடவடிக்கை கைகொடுக்கும்.  உத்திரம் 1ம் பாதம்: இந்த மாதம் அரசாங்கம்  தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றம் உண்டாகலாம். மாணவர்களுக்கு நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன்  பாடங்களை படிப்பது நல்லது.  பரிகாரம்:  சரபேஸ்வரரை வணங்க காரிய தடை நீங்கும். மன அமைதி கிடைக்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய் அதிர்ஷ்ட தினங்கள்: டிசம்பர் 8, 9, 10 சந்திராஷ்டம தினங்கள்:  நவம்பர் 19, 20கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்) கிரகநிலை: தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் புதன் (வ), சுக்ரன் (வ) -  தைரிய வீரிய  ஸ்தானத்தில் சூர்யன், குரு -  சுக ஸ்தானத்தில் சனி -  தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது -  ரண ருண ரோக  ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் - லாப  ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: அனைவரிடமும் நேசமுடன் பழகும் கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம்  வீண் செலவுகள் உண்டாகும். மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும். அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது.  எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். எதிர்ப்பு களை சமாளிக்க வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும். ஆனால் புதிய ஆர்டர்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான செலவு கூடும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது  நல்லது. அவர்களின் நலனுக்காக  செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையில்  திடீர் இடைவெளி ஏற்படலாம். பிள்ளைகள் அறிவு திறன் கண்டு ஆனந்தப்படுவீர்கள். அவர்களுக்காக செலவு செய்யவும் நேரிடும். அரசியல்வாதிகள் மக்கள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மக்கள் பிரச்சனைகளைத் தீர்த்து அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது உங்களுக்கு எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் பிரச்சனைகளை தவிர்க்க வழிவகை செய்யும்.  பெண்களுக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரியதாமதம் ஏற்படும். வீண்கவலை இருக்கும். மாணவர்களுக்கு  கூடுதல் மதிப்பெண் பெற மிகவும் கவனமாக படிக்க வேண்டி இருக்கும்.  உத்திரம் 2, 3, 4 பாதம்: இந்த மாதம் தாய், தந்தையரின் உடல்நலத்தில் கவனம் தேவை. எதிலும் உற்சாகம் குறைந்து சோம்பல் ஏற்படும். மனதெளிவு உண்டாகும். ஏற்றுமதி சிறக்கும்.  எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும்.  அஸ்தம்: இந்த மாதம் பழைய பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். கல்வியில் சிரமபட்டு முன்னேற்றம் காண வேண்டி இருக்கும்.  சித்திரை 1, 2, பாதம்: இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷனை உண்டாக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை.  பரிகாரம்:  லட்சுமி வராஹப் பெருமாளை தரிசித்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன் அதிர்ஷ்ட தினங்கள்: டிசம்பர் 11, 12 சந்திராஷ்டம தினங்கள்: நவம்பர் 21, 22துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்) கிரகநிலை: ராசியில்  புதன் (வ), சுக்ரன் (வ) -  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் சூர்யன், குரு -  தைரிய வீரிய  ஸ்தானத்தில் சனி -  தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது -  பஞ்சம பூர்வ புண்ணிய  ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் - தொழில்  ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: மனஉறுதிமிக்கவரான துலா ராசி அன்பர்களே, இந்த மாதம் . பணவரத்து அதிகப்படும்.  அதே நேரத்தில் வீண்செலவு உண்டாகும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும்  அதை செய்ய முடியாத  சூழ்நிலை வரும். எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுப்பார்கள். எனவே  கவனமாக இருப்பது நல்லது.தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்த படி கிடைக்கும்.  வாக்கு வன்மையால் வாடிக்கை யாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக  தள்ளிப்போன பதவி உயர்வு வர வேண்டிய பணம் வந்து சேரலாம். குடும்பத்தில் எதிர்பார்த்த சுமுகமான சூழ்நிலை காணப்படும்.   கணவன், மனைவி இருவரும் சேர்ந்து  எடுக்கும் முடிவுகள்  நல்ல பலன் தருவதாக இருக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். அரசியல்வாதிகள் கவனமுடன் செயல்பட்டால் மேலிடத்தின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். உங்களிடம் உதவி கேட்டு வருபவர்களை உதாசீனப் படுத்தாதீர்கள்.  கலைத்துறையினருக்கு மகிழ்ச்சியான காலகட்டம். பணவரவு இருக்கும். வாய்ப்புகள் தேடிவரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வாய்ப்புகளும் சிலருக்கு கிடைக்கும். பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும் விதத்தில் இருக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும்.   மாணவர்கள்  சாமர்த்தியமான பேச்சின் மூலம் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள்.  சித்திரை 3, 4 பாதம்: இந்த மாதம் எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டு அதன்படி செயல்படுவது நல்லது. பயணங்கள் செல்லும் போது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. பண வரவு திருப்தி தரும். சுவாதி: இந்த மாதம் எதிலும் மெத்தனமாக செயல்படுவதை தவிர்ப்பது முன்னேற்றத்திற்கு உதவும். அரசியல்வாதிகளுக்கு  மனம் மகிழும்படியான சுழ்நிலை உருவாகும். வெளியூர் செல்ல நேரிடும். விசாகம் 1, 2, 3ம்  பாதம்: இந்த மாதம் அரசாங்க பணிகள் மிக துரிதமாக நடப்பதற்கான சூழல் உருவாகும். கடும் முயற்சிக்கு பிறகு நீங்கள் எடுக்கும் காரியம் வெற்றி பெறும். வீண் வழக்குகள் வரலாம். மனம் தளர மாட்டீர்கள். பரிகாரம்: நவகிரகத்தில் சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி வணங்க குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். மனமகிழ்ச்சி ஏற்படும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி அதிர்ஷ்ட தினங்கள்: நவம்பர் 17, 18 மற்றும் டிசம்பர் 13, 14, 15 சந்திராஷ்டம தினங்கள்:  நவம்பர் 23, 24விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை: ராசியில்  சூர்யன், குரு -  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் சனி -  ராசியில்  கேது -  சுக ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ -  அயன சயன போக  ஸ்தானத்தில் புதன் (வ), சுக்ரன் (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: எடுத்த காரியத்தை செய்துமுடிப்பதில் வல்லவரான விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம்  இழுபறியான நிலை காணப்படும். சாதாரணமாக பேசினாலும் மற்றவர்கள் அதில் குறை காண்பார்கள்.  வாகனங்களில் செல்லும் போதும், ஆயுதங்களை கையாளும் போதும் கவனம் அவசியம். தொழில், வியாபாரத்தில் சிக்கல்கள் தீர பாடுபடுவீர்கள். புதிய ஆர்டர் பிடிக்க அதிகம் அலையவேண்டி இருக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே  இடைவெளி குறைய மனம் விட்டு பேசுவது நல்லது. பிள்ளைகள் எதிர்கால நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும்.  அரசியல் துறையினருக்கு நிலவி வந்த பிரச்சனைகள் மறையும். யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன் ஆலோசனைகள் செய்து கொள்ளவும். கலைத்துறையினருக்கு நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம்.  பெண்களுக்கு  உங்களது செயல்களில் மற்றவர் குறை காண நேரலாம். தெய்வ பக்தி அதிகரிக்கும். பயணம் செல்ல நேரலாம்.  மாணவர்களுக்கு செயல் திறமை அதிகரிக்கும்.  கல்வியில் வெற்றி பெறுவதை  குறிக்கோளாக கொண்டு செயல்படுவீர்கள்.  விசாகம் 4ம் பாதம்: இந்த மாதம் உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம் கவனம் தேவை. பயணம் செல்ல வேண்டி இருக்கும். எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது கவனம் தேவை. விருப்பத்திற்கு மாறான சம்பவங்கள் நடக்கலாம். அனுஷம்: இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. . குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் மறையும்.  கேட்டை: இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே நீடித்து வந்த மனவருத்தம் நீங்கி சந்தோஷமான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்தி தருவதாக இருக்கும்.  பரிகாரம்:  மாரியம்மனை தீபம் ஏற்றி வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். காரிய தடங்கல் நீங்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன் அதிர்ஷ்ட தினங்கள்: நவம்பர் 19, 20 சந்திராஷ்டம தினங்கள்: நவம்பர் 25, 26தனுசு (மூலம், பூராடம்,  உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை: ராசியில்  சனி -  அயன சயன போக  ஸ்தானத்தில் கேது -  தைரிய வீரிய  ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்  - அஷ்டம  ஸ்தானத்தில் ராஹூ - லாப  ஸ்தானத்தில் புதன் (வ), சுக்ரன் (வ) -  அயன சயன போக  ஸ்தானத்தில் சூர்யன், குரு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: எளிதாக பழகக் கூடியவரான தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம்  பணவரத்து திருப்தி தரும்.    எதிர்பாராத திருப்பம் உண்டாகும். சிந்தித்து செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். பயணங்களின் போதும் வாகனங்களை ஓட்டி செல்லும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. புதியநபர்களின் அறிமுகம் கிடைக்கும்.  அவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம்  அனுசரித்து நிதானமாக நடந்து கொள்வது  வியாபாரம் நன்கு நடக்க உதவும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்ட மிட்டு செய்யும் காரியங்கள் நல்ல பலன் தரும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். உறவினர்க ளுடன்  அனுசரித்து செல்வதும், வாக்கு வாதத்தை தவிர்ப்பதும் நல்லது.  பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நல்லது.    அரசியல்வாதிகள் யாரைப்பற்றியும் யாரிடமும் குறை கூற வேண்டாம். வாக்குவாதத்திற்கு இடம் தர வேண்டாம். மூத்தோர் சொல் கேட்டு நடப்பது வெற்றியை உண்டாக்கும். பிறமதத்தினர் உறுதுணையாக இருந்து நம்பிக்கை அளிப்பார்கள். கலைத்துறையினருக்கு தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இராது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம். பகைவர்கள் பணிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு. பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.  மாணவர்களுக்கு சக மாணவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. கவனத்தை சிதறவிடாமல் படிப்பது அவசியம்.  மூலம்: இந்த மாதம் மனக்கவலை ஏற்படலாம். முயற்சிகளில் தடை ஏற்படலாம். எதிலும் எச்சரிக்கை தேவை. கலைத்துறையினருக்கு உடனிருப்பவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும்.  பூராடம்: இந்த மாதம் வாக்குவாதங்களைத் தவிர்த்து சாதுர்யமாக கையாள்வது நல்லது. வரவேண்டிய பணம் வந்து சேரும். உங்கள் பணிகளில் பல குறுக்கீடுகள் வந்தாலும் அதை சாமர்த்தியாமாக சமாளித்து வெற்றி காண்பீர்கள். உத்திராடம் 1ம் பாதம்: இந்த மாதம் நீண்ட நாட்களாக வரவேண்டி இருந்த பணம் வந்து சேரும். அறிவு திறமை வெளிப்படும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். அடுத்தவர்களின் குற்றச்சாட்டுக்கு ஆளாகநேரிடலாம் கவனம் தேவை.  பரிகாரம்: தேவாரம் , திருவாசகம் படித்து கடவுளை வணங்குவது நன்மையை தரும். தடைபட்ட காரியம் தடைநீங்கி நடக்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன் அதிர்ஷ்ட தினங்கள்: நவம்பர் 21, 22  சந்திராஷ்டம தினங்கள்: நவம்பர் 27, 28, 29மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்) கிரகநிலை: தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் - களத்திர  ஸ்தானத்தில் ராஹூ -  தொழில்  ஸ்தானத்தில் புதன் (வ), சுக்ரன் (வ) -  லாப ஸ்தானத்தில் சூர்யன், குரு -  அயன சயன போக  ஸ்தானத்தில் சனி -  லாப  ஸ்தானத்தில் கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: வைராக்கியம் மிக்கவரான மகர ராசி அன்பர்களே, இந்த மாதம்  வீண்செலவுகள் ஏற்படும்.   எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில்  தாமதம் ஏற்படும்.  கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடு பட வேண்டி இருக்கும். மற்றவர்களின்  பிரச்சனைகளுக்கு வலியசென்று உதவிகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. விருப்பம் இல்லாத இடமாற்றம் உண்டாகலாம்.தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண மிகவும் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.   பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்தபடி பணிகள் முடியாமல் மனசங்கடத்திற்கு ஆளாக நேரிடும். குடும்பத்தில் இருப்பவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பாடுபடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே வெளியில் சொல்ல முடியாத மனக்குறைகள் வரலாம்.  பிள்ளைகள்  கல்வி மற்றும் அவர்கள் எதிர் காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும்.  அரசியல்வாதிகள் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி, பொறுப்புகள் உங்களையே வந்தடையும். எதிர்பார்த்த ஒவ்வொரு விசயங்களிலும் நன்மையே கிட்டும். எதிரிகளைவிட உடனிருப்போரிடம் கவனம் வையுங்கள்.  கலைத்துறையினர்பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டிருந்தவர்கள், சிறுசிறு துன்பங்களுக்கு ஆட்பட்டவர்கள் கூட இப்பொழுது சிரமங்கள் இல்லாத வாழ்க்கையை பெறமுடியும். புதிய வாய்ப்புகளை சரியான ஆட்களிடமிருந்து சரியான தருணத்தில் கிடைக்கப் பெற்று முன்னேறப் போகிறீர்கள்.  பெண்களுக்கு  விருப்பம் இல்லாமல் பயணம் செல்ல நேரிடலாம். வீண் மன சங்கடத்திற்கு  ஆளாகலாம். எதிலும் கவனம் தேவை.  மாணவர்களுக்கு  விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்கள் எளிமையாக தோன்றினாலும் கவனமாக படிப்பது அவசியம். உத்திராடம் 2, 3, 4 பாதம்: இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு  வேலை கிடைக்கலாம். இந்த மாதம் வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாக பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும். அடுத்தவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்கும் போது கவனம் தேவை. அவிட்டம் 1,2 பாதம்: இந்த மாதம் குடும்பத்தில் வாக்குவாதத்தையும், கோபத்தையும் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த நோய் நீங்கும். பரிகாரம்: சனிபகவானுக்கு எள் சாதம் நைவேதியம் செய்து காகத்திற்கு வைக்க பிணிகள் நீங்கும். காரிய தடை, எதிர்திருவோணம்:ப்புகள் அகலும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி அதிர்ஷ்ட தினங்கள்: நவம்பர் 23, 24 சந்திராஷ்டம தினங்கள்: நவம்பர் 30 மற்றும் டிசம்பர்  1கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்) கிரகநிலை: ராசியில்  சந்திரன், செவ்வாய்  - ரண ருண ரோக  ஸ்தானத்தில் ராஹூ -  பாக்கிய  ஸ்தானத்தில் புதன் (வ), சுக்ரன் (வ) -  தொழில்  ஸ்தானத்தில் சூர்யன், குரு -  லாப  ஸ்தானத்தில் சனி -  தொழில்  ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: ரகசியம் காப்பதில்  வல்லவரான கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம்  குறிக்கோளற்ற  பயணங்கள் அதன் மூலம் அலைச்சல், உடல்நலக்கேடு போன்றவை ஏற்படலாம். எனவே  திட்டமிட்டு  எதையும்  செய்வது நல்லது.  மனதில் வீண்கவலைகள் உண்டாகக் கூடும். அடுத்தவரை  நம்பி எதையும்  ஒப்படைப்பதை  தவிர்ப்பது நல்லது.  தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி  நடந்தாலும் சற்று நிதானமாக இருக்கும்.  சரக்குகளை  வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படலாம். போட்டிகள் தலைதூக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான வேலை பளுவால் உடல் சோர்வடைவார்கள். குடும்பத்தில் இறுக்கமான சூழ்நிலை காணப்படும். மனதில் இருப்பதை வெளியில் சொல்லாமல் செய்கையில் காட்டுவார்கள்.  கணவன், மனைவிக்கிடையில் இணக்கமான போக்கு காண்பது சிரமம்.  அரசியல்வாதிகள் கடந்த கால தவற்றை எண்ணாமல் புதிய முயற்சிக்கு வித்திடுவீர்கள். மன உலைச்சலால்  ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படலாம். மனதை தைரியமாக வைத்துக் கொள்ளுங்கள்.  கலைத்துறையினர் முன்னோர்கள் வழிபாட்டை முறைப்படி ஒழுங்குபடுத்தினால் உங்களை துரத்திக் கொண்டிருந்த தொல்லைகள் அகலும்.  பெண்களுக்கு வீண்கவலைகள், எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம்.  எதையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும்.  மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் ஏற்பட்டு நீங்கும். தெளிவாக பாடங்களை படிப்பது நல்லது.  அவிட்டம் 3, 4 பாதம்: இந்த மாதம் குடும்பத்தார் நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். தூரத்தில் இருந்து வரும் செய்திகள் மனதிற்கு சந்தோஷத்தை அளிக்கும். சதயம்: இந்த மாதம் பிள்ளைகளிடம் கவனமாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனை தீரும். பெண்களுக்கு உங்களது காரியங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும்.   பூரட்டாதி 1, 2, 3  பாதம்: இந்த மாதம் பணவரத்து திருப்தி தரும். மனகுழப்பம் நீங்கும். மாணவர்களுக்கு பாடங்கள் படிக்க வேண்டுமே என்ற கவலைகுறையும். வியாபாரத்தில் புது யுக்தியை கையாளுவீர்கள். பரிகாரம்:  விநாயக பெருமானை தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்கி வர வீண் அலைச்சல் குறையும். காரிய தடை நீங்கும். கல்வி அறிவு அதிகரிக்கும்.  அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி அதிர்ஷ்ட தினங்கள்: நவம்பர் 25, 26 சந்திராஷ்டம தினங்கள்:  டிசம்பர் 2, 3மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை: பஞ்சம பூர்வ புண்ணிய  ஸ்தானத்தில் ராஹூ -  அஷ்டம  ஸ்தானத்தில் புதன் (வ), சுக்ரன் (வ) -  பாக்கிய  ஸ்தானத்தில் சூர்யன், குரு -  தொழில் ஸ்தானத்தில் சனி -  பாக்கிய  ஸ்தானத்தில் கேது -  அயன சயன போக  ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: மற்றவர்கள் மனது அறிந்து செயல்படும் மீன ராசி அன்பர்களே, இந்த மாதம்  காரியவெற்றி கிடைக்கும்.  நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக வாங்க திட்டமிட்ட வாகனம் சொத்து மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.  பயணங்கள் சாதகமான  பலன் தருவதாக இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டமும் கிடைக்கலாம். உடல் ஆரோக்யம் உண்டாகும். தெய்வ பக்தி அதிகரிக்கும்.தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து மன மகிழ்ச்சியடைவார்கள். மேல் அதிகாரிகளின் உதவியும், ஆலோசனையும் கிடைக்கும். புதிய வேலைக்கான முயற்சிகளில் சாதகமான போக்கு காணப்படும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை அதனால் நன்மையும் இருக்கும். கணவன், மனைவிக் கிடையில் நெருக்கம் அதிகரிக்கும்.  பிள்ளைகளின் அறிவுதிறன் அதிகரிக்கும். ஆனால் அவர்களது உடல்நலத்தில் கவனம் தேவை. அரசியல்வாதிகள் அரசு சம்மந்தமான பிரச்சனைகளை மற்றவருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. யாரிடமும் எதைப்பற்றியும் விவாதிக்க வேண்டாம். சில விஷமிகளின் தொந்தரவு இருந்தாலும் சுலபமாக சமாளித்து விடுவீர்கள்.  கலைத்துறையினர் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவீர்கள். நல்ல சூழ்நிலைகள் அமையப் பெற்று அதனால் மன மகிழ்ச்சி உண்டாகலாம். மூத்த கலைஞர்கள் நல் ஆசி வழங்குவார்கள்.  பெண்களுக்கு பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும். முயற்சிகள் நல்ல பலன் தரும். பணவரத்து திருப்தி தரும்.  மாணவர்களுக்கு  கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கஷ்டமாக தோன்றிய பாடங்களை எளிதாக படித்து முடிப்பீர்கள்.  பூரட்டாதி 4ம் பாதம்: இந்த மாதம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சுபகாரியங்கள் நடத்துவது பற்றிய பேச்சு வார்த்தைகள் வெற்றி அளிக்கும். சிக்கன நடவடிக்கை மேற்கொள்வீர்கள். உத்திரட்டாதி: இந்த மாதம் உங்கள் தொழிலில் உங்களுக்கென தனி முத்திரையை பதிப்பீர்கள். சிலருக்கு வாக்கு கொடுக்க வேண்டி நிர்ப்பந்தம் ஏற்படும். மிக அருமையாக உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கும். ரேவதி: இந்த மாதம் பெரியோர்களின் ஆசி உண்டாகும். ஆடை, அணிகலன் புதிதாக வாங்குவீர்கள். சிலரின் பொறாமைக்கு ஆளாவீர்கள். உன்னத நிலைக்கு செல்ல வேண்டி மனம் ஏங்கும். பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வணங்கிவர எல்லா நன்மைகளும் உண்டாகும். தேவையான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.   அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி அதிர்ஷ்ட தினங்கள்: நவம்பர்  27, 28, 29 சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 4, 5

newstm.in

Trending News

Latest News

You May Like