1. Home
  2. ஜோதிடம்

17-12-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு நிலம், வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கை கூடி வரும்

17-12-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு நிலம், வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கை கூடி வரும்

17-12-2019-newstm-dwstm-daily-astrology

17-12-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு நிலம், வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கை கூடி வரும்

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
ஹேமந்தருது
மார்கழி - 01
செவ்வாய்கிழமை

சஷ்டி மறு நாள் காலை 3.02 மணி வரை. பின் ஸப்தமி
மகம் மறு நாள் காலை 3.07 மணி வரை பின் பூரம்
சித்த யோகம்
நாமயோகம்: விஷ்கம்பம்
கரணம்: கரஜை

அகஸ்: 28.26
த்யாஜ்ஜியம்: 23.29
நேத்ரம்: 2
ஜீவன்: 0
தனுசு லக்ன இருப்பு (நா.வி): 5.20
சூரிய உதயம்: 6.27

ராகு காலம்: மதியம் 3.00 - 4.30
எமகண்டம்: காலை 9.00 - 10.30
குளிகை: மதியம் 12.00 - 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்


குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்
சகல ஆலயங்களிலும் திருப்பாவை.
திருவெம்பாவை உற்ஸவாரம்பம்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாள் திருக்கோவிலில் ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன ஸேவை.
சுபிட்ச மழை வருஷிக்கும்.

திதி: ஷஷ்டி
சந்திராஷ்டமம்: திருவோணம்


சூரியன் மூலம் 1ம் பாதம் - நட்பு
சந்திரன் சிம்மம் - பகை
செவ்வாய் விசாகம் 1ம் பாதம் - நட்பு
புதன் கேட்டை 2ம் பாதம் - நட்பு
குரு மூலம் 3ம் பாதம் - ஆட்சி
சுக்ரன் உத்திராடம் 2ம் பாதம் - நட்பு
சனி பூராடம் 2ம் பாதம் - நட்பு
ராகு திருவாதிரை 3ம் பாதம் - நட்பு
கேது பூராடம் 1ம் பாதம் - நட்பு

கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில்  ராஹூ -  பஞ்சம ஸ்தானத்தில்  சந்திரன் -   களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் புதன்  - பாக்கிய ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன், குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.   இன்று இரவு 8.36 மணிக்கு சுக்கிர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று வழக்கில் வெற்றி அல்லது நீண்ட நாட்களாக இழுபறியில் உள்ள பிரச்சினை முடிவில் செல்வம், உரிமை, அதிகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். சுய ஜாதகத்தில் திசாபுக்திகள் அனுகூலமற்றுயிருப்பின் தவறான வழிமுறைகளில் செல்வம் கரையவும் வாய்ப்புண்டு. எச்சரிக்கையாக இருக்கவும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7  கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - சுக ஸ்தானத்தில்  சந்திரன்  -   ரண, ருண ஸ்தானத்தில்  செவ்வாய்  -  களத்திர ஸ்தானத்தில்  புதன்  - அஷ்டம ஸ்தானத்தில்   சூர்யன், சுக்ரன்,  குரு, சனி, கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று இரவு 8.36 மணிக்கு சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு சிறு வாக்குவாதங்கள் வரலாம். வரவுக்கேற்ற செலவுகளும் வந்து சேரும். எனினும் வருங்காலத்திற்குத் தேவையான முதலீடுகளை அதற்குண்டான நபர்களிடம் ஆலோசனைகள் செய்து முதலீடுகள் செய்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 1, 3  கிரகநிலை: ராசியில்  ராஹூ - தைரிய ஸ்தானத்தில்  சந்திரன் -   பஞ்சம ஸ்தானத்தில்   செவ்வாய் -  ரண, ருண ஸ்தானத்தில்  புதன்  -   களத்திர ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன், குரு, சனி , கேது -   என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று இரவு 8.36 மணிக்கு சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று பல நன்மைகள் கிடைக்கும். பரம்பரை சொத்துக்கள் கிடைக்கும். உங்கள் குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். சகோதர சகோதரிகளிடம் இணக்கமாக இருப்பீர்கள். சந்தோஷமான நாளாக அமையும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9  கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில்  செவ்வாய் -   பஞ்சம ஸ்தானத்தில்  புதன் - ரண, ருண ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன்,  குரு, சனி , கேது -   அயன, சயன, போக ஸ்தானத்தில்  ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று இரவு 8.36 மணிக்கு சுக்கிர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று உங்களது மேலான யோசனைகளை சொல்ல தயாராகுங்கள். சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் தவித்த நிலையும் மாறப் போகிறது. இனியாவது வாக்கு கொடுப்பதற்கு முன் யோசித்து கொடுக்கவும். தைரியம் பிரகாசிக்கும் நேரமிது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3  கிரகநிலை: ராசியில் சந்திரன் - தைரிய ஸ்தானத்தில்  செவ்வாய் -  சுக  ஸ்தானத்தில்  புதன்  -   பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், குரு, சனி , கேது  -   லாப ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று இரவு 8.36 மணிக்கு சுக்கிர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று உத்யோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் உடனுக்குடன் பரிசீலிப்பார்கள். அலுவலகத்தில் அனுகூலமான சூழலைக் காண்பீர்கள். சக ஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள். இடையூறுகளை ஒரு பொருட்டாகவே கருதமாட்டீர்கள். பண வரவில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெறுவதில் எந்தக் குறையும் ஏற்படாது. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்:  4, 6  கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  செவ்வாய் -  தைரிய, வீர்ய ஸ்தானத்தில்  புதன்  -  சுக  ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன், குரு, சனி , கேது - தொழில்  ஸ்தானத்தில்   ராஹூ - அயன, சயன, போக ஸ்தானத்தில்  சந்திரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று இரவு 8.36 மணிக்கு சுக்கிர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று மேலிடத்தின் நம்பிக்கைக்கு உரியவராக உயர்வீர்கள். வியாபாரிகள் பொறுமையுடன் செயல்பட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வருமானம் சிறப்பாகவே தொடரும். அதேசமயம் கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். புதிய முதலீடுகளில் நன்றாகச் சிந்தித்த பிறகே ஈடுபடவும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6  கிரகநிலை: ராசியில் செவ்வாய் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்   புதன் -  தைரிய ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன், குரு, சனி , கேது -  பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ -  லாப   ஸ்தானத்தில் சந்திரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.   இன்று இரவு 8.36 மணிக்கு சுக்கிர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று பந்தயங்கள், போட்டிகளிலும் வெற்றி வாகை சூடுவீர்கள். ஸ்பெகுலேஷன் போன்ற துறைகளின் மூலம் நல்ல வருமானம் வர, பிரகாசமான வாய்ப்புகள் தென்படுகின்றன. பெற்றோர் வழியில் நிலவி வந்த மனக் கஷ்டங்கள் தீர்ந்து, குடும்பத்தில் குதூகலம் நிறையும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7  கிரகநிலை: ராசியில் புதன்  - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், குரு, சனி , கேது  -  அஷ்டம  ஸ்தானத்தில்  ராஹு - தொழில் ஸ்தானத்தில்  சந்திரன் -  அயன, சயன, போக ஸ்தானத்தில்  செவ்வாய்  என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று இரவு 8.36 மணிக்கு சுக்கிர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று நிலம், வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கை கூடி வரும். குழந்தைகளின் கல்வி, நடத்தை ஆகியன நன்றாக இருக்கும். நீதிமன்ற வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். வேதாந்த விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5  கிரகநிலை: ராசியில் சூர்யன், சுக்ரன், குரு, சனி , கேது -  களத்திர ஸ்தானத்தில்  ராஹு - பாக்கிய  ஸ்தானத்தில்  சந்திரன் -  லாப ஸ்தானத்தில் செவ்வாய் -  அயன, சயன, போக ஸ்தானத்தில் புதன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று இரவு 8.36 மணிக்கு சுக்கிர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு சிக்கல்கள் வந்து வந்து போகும். சிறைத்துறையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பயணம் தொடர்பான தொழில்களில் லாபம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9  கிரகநிலை: ரண, ருண  ஸ்தானத்தில்  ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில்  சந்திரன் -  தொழில் ஸ்தானத்தில்  செவ்வாய் -  லாப ஸ்தானத்தில்  புதன்  -   அயன, சயன,  போக ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன்,  குரு,  சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று இரவு 8.36 மணிக்கு சுக்கிர பகவான் ராசிக்கு மாறுகிறார். பலன்: இன்று வெளிநாடு சென்று படிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேரும். விரும்பியது கிடைக்கவில்லை என கவலை கொள்ள வேண்டாம். கவனமுடன் உங்கள் கல்வியைத் தொடரவும். கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு நடனம் மற்றும் சண்டைப் பயிற்சியாளர்கள் சிறந்த நிலைக்கு வரலாம்.           அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9  கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ - களத்திர ஸ்தானத்தில்  சந்திரன்  -   பாக்கிய ஸ்தானத்தில்  செவ்வாய் -  தொழில் ஸ்தானத்தில்  புதன் -  லாப ஸ்தானத்தில்   சூர்யன், சுக்ரன், குரு, சனி , கேது   என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று இரவு 8.36 மணிக்கு சுக்கிர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று உறவினர் வகையிலும் கூட ஒருவருடன் மனஸ்தாபம் உருவாகலாம். அதீத எதிர்பார்ப்புகள் வேண்டாம். சிலருக்கு தூரத்திலிருந்து விரும்பத்தகாத செய்திகள் வரலாம். தீவிர முயற்சிகளின் பேரில் சிலருக்கு சுபமான நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9  கிரகநிலை: சுக ஸ்தானத்தில் ராஹூ - ரண, ருண  ஸ்தானத்தில் சந்திரன்  -   அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில்  புதன் - தொழில்  ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், குரு, சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று இரவு 8.36 மணிக்கு சுக்கிர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று புதியதாக வாகனங்கள் ஏதேனும் வாங்கும் எண்ணமிருந்தால் நன்கு ஆராய்ந்தும், ஆலோசனைகள் செய்தும் வாங்குவது நல்லது. மின்னணு மற்றும் மருத்துவ சம்பந்தமான பொருட்களை விற்பவர்கள் நல்ல லாபம் பெறலாம்.         அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9  

newstm.in

Trending News

Latest News

You May Like