தினபலன் 3-7-2018 மேஷம் முதல் மீனம் வரை...

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணித்த தினப்பலன் மற்றும் பஞ்சாங்கம்.

தினபலன் 3-7-2018 மேஷம் முதல் மீனம் வரை...
X

daily-free-astrology-3-7-2018

தினபலன் 3-7-2018 மேஷம் முதல் மீனம் வரை...

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்!

விளம்பி வருஷம் I உத்தராயணம் I க்ரீஷ்மருது

ஆனி 19 I இங்கிலீஷ்: 03 July 2018 I செவ்வாய்க்கிழமை

பஞ்சமி இரவு 7.50 மணி வரை. பின் ஷஷ்டி I சதயம் இரவு 1.06 மணி வரை. பின் பூரட்டாதி

ஆயுஷ்மா ன் நாமயோகம் I கௌலவம் கரணம் I மரண யோகம்

தியாஜ்ஜியம்: 2.29 I அகசு: 31.32 I நேத்ரம்: 2 I ஜீவன்: 0 I மிதுன லக்ன இருப்பு: 6.51 I சூர்ய உதயம்: 5.57

ராகு காலம் : மதியம் 3.00 - 4.30 I எமகண்டம்: காலை 9.00 - 10.30 I குளிகை: மதியம் 12.00 - 1.30

சூலம்: வடக்கு I பரிகாரம்: பால் I குறிப்பு: இன்று மேல்நோக்கு நாள்

சோழவந்தா ன் ஸ்ரீ ஜனகமாரியம்மன் ரதோற்சவம்.

சுவாமி மலை ஸ்ரீ முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

திதி: பஞ்சமி I சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்

தினபலன் 3-7-2018 மேஷம் முதல் மீனம் வரை...

மே ஷம்

கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன் - சுக ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் - களத்திர ஸ்தானத்தில் குரு(வ) - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன் - என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்புகள் தேடிவரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். சிலருக்கு புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெறமுடியும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 9

தினபலன் 3-7-2018 மேஷம் முதல் மீனம் வரை...

ரி ஷபம்

கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு(வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று ஏற்றத்தாழ்வுடையப் பலன்களைப் பெற முடியும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத வீண் செலவுகளும் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளுக்கு உற்றார்- உறவினர்களே தடையாக இருப்பார்கள். நெருங்கியவர்களிடம் வீணான வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9, 3

தினபலன் 3-7-2018 மேஷம் முதல் மீனம் வரை...

மிது னம்

கிரகநிலை: ராசியில் சூர்யன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு(வ) - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய், கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப்பின் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் பணியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் வேலைப்பளுவைக் குறைத்துக்கொள்ள முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4, 6

தினபலன் 3-7-2018 மேஷம் முதல் மீனம் வரை...

கட கம்

கிரகநிலை: ராசியில் ராகு, சுக்ரன், புதன் - சுக ஸ்தானத்தில் குரு(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை ஏற்படுத்தினாலும் கௌரவமான பதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப்பெற அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவது நல்லது. கல்வி பயிலுபவர்களும் நல்ல மதிப்பெண்களைப்பெற சற்றே கடின முயற்சிகளை மேற்கொள்வது உத்தமம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

தினபலன் 3-7-2018 மேஷம் முதல் மீனம் வரை...

சிம்ம ம்

கிர கநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு(வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் சூர்யன் - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று பணவிஷயத்தில் மட்டும் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு முன்னேற்றமாக அமையும். எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். நெருங்கியவர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதால் குடும்பத்தில் ஒற்றுமை குறையாமல் பார்த்துக்கொள்ள முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 7

தினபலன் 3-7-2018 மேஷம் முதல் மீனம் வரை...

கன் னி

கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு(வ) - சுக ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன் - லாப ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன்என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று பொருளாதார நிலை ஓரளவுக்கு திருப்தியளிப்பதாகவே அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகள் எல்லாவற்றிலும் வெற்றிகளைப் பெறமுடியும் என்றாலும் சுபகாரிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9, 3

தினபலன் 3-7-2018 மேஷம் முதல் மீனம் வரை...

துலா ம்

கிரகநிலை: ராசியில் குரு(வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று அரசியல்வாதிகள் தேவையற்ற செலவுகளையும், பயணங்களையும் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபம் பெறமுடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெறமுடியும். கௌரவமான பதவிகள் அமையும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4, 6

தினபலன் 3-7-2018 மேஷம் முதல் மீனம் வரை...

விருச் சிகம்

கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - சுக ஸ்தானத்தில் சந்திரன் அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு(வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று தேவையற்ற பிரச்னைகள் அனைத்தும் விலகி ஏற்றமான பலனைப் பெறுவீர்கள். எந்தவொரு முயற்சியிலும் சாதகமான பலன்கள் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்பாராத அளவில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

தினபலன் 3-7-2018 மேஷம் முதல் மீனம் வரை...

தனு சு

கிரகநிலை: ராசியில் சனி (வ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் - லாப ஸ்தானத்தில் குரு(வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று வெளியூர், வெளிநாட்டுத் தொடர்பு உடையவற்றாலும் லாபம் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் இருந்து வந்த இடையூறுகள் விலகி நிம்மதியான நிலை ஏற்படும். சிலர் எதிர்பாராத கௌரவப் பதவிகளையும் பெறுவார்கள். குடும்பத்திலும் சுபிட்சமான நிலை நிலவும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 7

தினபலன் 3-7-2018 மேஷம் முதல் மீனம் வரை...

கரம்

கிரகநிலை: ராசியில் செவ்வாய், கேது - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் - தொழில் ஸ்தானத்தில் குரு(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று நினைத்தது நினைத்தபடி நிறைவேறும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கலிலும் நல்ல லாபம் அமையும். வெளிவட்டாரத் தொடர்புகளால் பெயர், புகழ் உயரும். மற்றவர்களுக்கு உதவி செய்து மன சந்தோஷத்தை அடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை

அதிர்ஷ்ட எண்: 1, 7

தினபலன் 3-7-2018 மேஷம் முதல் மீனம் வரை...

கும் பம்

கிரகநிலை: ராசியில் ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு(வ) - லாப ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை சிறப்படையும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பம் நிறைவேறும். எதிர்பாராத பிரச்னைகள், வம்பு வழக்குகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். மறைமுக எதிர்ப்புகளும் அதிகரிக்கும் என்றாலும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 4, 5

தினபலன் 3-7-2018 மேஷம் முதல் மீனம் வரை...

மீன ம்

கிரகநிலை: சுக ஸ்தானத்தில் சூர்யன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு(வ) - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று பொருளாதாரநிலையில் தடைகள் நிலவுவதால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும். எதிர்பாராத வீண்விரயங்களை எதிர்கொள்ள நேரிடும். உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளும் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

newstm.in

Tags:
Next Story
Share it