1. Home
  2. ஜோதிடம்

தினபலன் மற்றும் பஞ்சாங்கம் 2-6-2018

தினபலன் மற்றும் பஞ்சாங்கம் 2-6-2018

daily-free-astorlogy-2-6-2018

தினபலன் மற்றும் பஞ்சாங்கம் 2-6-2018

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணித்த இன்றைய ராசி பலன் மற்றும் பஞ்சாங்கம்!

விளம்பி வருஷம் I உத்தராயணம் I வஸந்தருது

வைகாசி 19 I இங்கிலீஷ்: 02 June 2018 I சனிக்கிழமை

சதுர்த்தி மறு நாள் காலை 3.17 மணி வரை. பின் பஞ்சமி

பூராடம் காலை 8.27 மணி வரை. பின் உத்திராடம்

சுப்ரம் நாமயோகம் I பவம் கரணம் I சித்த யோகம்

ராகு காலம்: காலை 9.00 - 10.30 I எமகண்டம்: மதியம் 1.30 - 3.00 I குளிகை: காலை 6.00 - 7.30

சூலம்: கிழக்கு I பரிகாரம்: தயிர்

இன்று கீழ் நோக்கு நாள் I திதி:சதுர்த்தி I சந்திராஷ்டமம்: திருவாதிரை

மேஷம்:

கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் ராகு - களத்திர ஸ்தானத்தில் குரு(வ) - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ), சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று விடாமுயற்சியும், கடினமான உழைப்புமே உங்களை முன்னேற்றும் என்பதில் நம்பிக்கை வையுங்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் மறையும். நீங்கள் எதைப் செய்தாலும் அதில் முழுகவனத்துடன் செய்யுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

ரிஷபம்

கிரகநிலை: ராசியில் சூர்யன், புதன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு(வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி (வ), சந்திரன் பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று வெற்றிகள் கிட்டும். குடும்பத்தில் பிரச்சனைகள் வரலாம். ஊர் சுற்றுவதை குறைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஒப்பனையாளர்கள், சண்டைப் பயிற்சியாளர்கள் மற்றும் துணை நடிகர்கள் ஏற்றம் காண்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

மிதுனம்

கிரகநிலை: ராசியில் சுக்ரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு(வ) - களத்திர ஸ்தானத்தில் சனி (வ), சந்திரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று உங்கள் பொருட்கள் திருடு போகலாம். கவனமுடன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். புதிய ஒப்பந்தம் மூலம் சிறப்பான வளர்ச்சி காண்பீர்கள். புகழும், விருதுகளும் கிடைக்கும். எழுத்து பணியில் இருப்பவர்கள் சளைக்காமல் பணியைச் செய்யவும். சூட்டிங் விஷயமாக அலைச்சலும், அதன்மூலம் மனமும் உடலும் சோர்வடையலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா

அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6

கடகம்

கிரகநிலை: ராசியில் ராகு - சுக ஸ்தானத்தில் குரு(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ), சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், கேது - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: புதிய தொழில் தொடங்குவதற்கு சரியான ஆலோசனை செய்யவும். வாழ்க்கைத்துணையின் பெயரையும் சேர்த்தே புதிய தொழில் தொடங்க வேண்டும்.வாகனம் சேர்க்கை சேரும். செய்யும் தொழிலில் அலைச்சல் அதிகமாக இருக்கும். எந்த தொழிலானாலும் நீங்களே நேரிடையாக செயல்படுவது நல்லது. புதிய காண்டிராக்ட் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

சிம்மம்

கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு(வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி (வ), சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன் - லாப ஸ்தானத்தில் சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று அறிமுக இல்லாதவர்களிடம் வரவு, செலவு வைத்துக் கொள்ள வேண்டாம். பழைய பாக்கி வசூல் ஆகும். வேறு பல உபதொழில்களும் இந்த நேரத்தில் ஆரம்பிக்கலாம். உடன்பிறந்தவர்களால் உதவிகள் வந்து சேரும். முயற்சிகளுக்குத் தகுந்த லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

கன்னி

கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு(வ) - சுக ஸ்தானத்தில் சனி (வ), சந்திரன் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும். தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் அனைத்துச் செயல்களிலும் வெற்றியடைவீர்கள். வாடிக்கையாளர்களைக் கவர, புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தினாலும் கடன் சுமை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளவும். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9


துலாம்:

கிரகநிலை: ராசியில் குரு(வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ), சந்திரன் சுக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: மனதில் இனம் தெரியாத பயம் அவ்வப்போது வந்து போகும். அந்த நேரத்தில் இறை வழிபாட்டில் மனதைச் செலுத்துவது நன்மையைத் தரும். உத்தியோகஸ்தர்களுக்கு அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கு சாதனைகள் செய்யும் காலமிது. பணத்தை பாதுகாப்பது சம்பந்தப்பட்ட வேலைகளில் இருப்பவர்கள் கவனமுடன் கையாளவும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5


விருச்சிகம்:

கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ), சந்திரன் தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் குரு(வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று மேலதிகாரிகளிடம் சுமூகமான உறவை வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வேலைகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். மனிதர்களை இனம் கண்டு கொள்வீர்கள். தங்கள் பணிகளைச் சரியாகச் செய்து முடிப்பீர்கள். அதேநேரம் சில சமயங்களில் காரணமில்லாமல் மனதில் தைரியம் குறையும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9


தனுசு:

கிரகநிலை: ராசியில் சனி (வ), சந்திரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் குரு(வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: உங்களது கோரிக்கைகளும் ஆசைகளும் நிறைவேறும். தாய் மற்றும் தாய் வழி உறவினர்களுடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். மற்றவர்கள் செய்யும் சிறு தவறுகளை மன்னிக்க பழகிக் கொள்ளுங்கள். அரசியலில் உள்ளவர்களுக்கு பதவியை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியது இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9


மகரம்:

கிரகநிலை: ராசியில் செவ்வாய், கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில் குரு(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ), சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கசப்பு மறைந்து சந்தோஷம் ஏற்படும். பெற்றோரின் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் தாமதமானாலும் சிறப்பாக நடக்கும். புதிய வீடு, நிலம் வாங்கலாம். பழைய வீட்டை பழுது பார்க்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9


கும்பம்:

கிரகநிலை: சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் குரு(வ) - லாப ஸ்தானத்தில் சனி (வ), சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று பணப்புழக்கம் சரியாக இருக்கும். ஆனால் சுபநிகழ்ச்சிகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். தூங்கும் போது கவனம் தேவை. பொருட்களை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போட கூடாது. அப்படி போட்டால் பிரச்சனைகள் வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7


மீனம்:

கிரகநிலை: தைர்ய வீர்ய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு(வ) - தொழில் ஸ்தானத்தில் சனி (வ), சந்திரன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று நண்பர்களை தேர்ந்தெடுக்கும் போது மிகவும் கவனம் தேவை. பெரியோர்களின் ஆதரவால் நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பொருளாதார சிக்கல்கள் தீரும். சிலர் கடன் வாங்கி உடனே திருப்பி கொடுத்து விடுவார்கள். மனதில் தேவையில்லாத வெளியில் சொல்லமுடியாத வேதனை மற்றும் பிரச்சனைகள் வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

ராசி பலன்கள் மற்றும் செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ள newstm.in உடன் இணைந்திருங்கள்!

newstm.in

Trending News

Latest News

You May Like