1. Home
  2. ஜோதிடம்

தினபலன் 7-6-2018 - இந்த ராசிகாரர்களுக்கு வீண் செலவு உண்டு!


daily-free-astorlogy-7-6-2018

தினபலன் 7-6-2018 - இந்த ராசிகாரர்களுக்கு வீண் செலவு உண்டு!

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்!

விளம்பி வருஷம் I உத்தராயணம் I வஸந்தருது

வைகாசி 24 I இங்கிலீஷ்: 07 June 2018 I வியாழக்கிழமை

அஷ்டமி காலை 9.03 மணி வரை. பின் நவமி I பூரட்டாதி மாலை 6.50 மணி வரை. பின் உத்திரட்டாதி

ப்ரீதி நாமயோகம் I கௌலவம் கரணம் I சித்த யோகம்

ராகு காலம்: மதியம் 1.30 - 3.00 I எமகண்டம்: காலை 6.00 - 7.30 I குளிகை: காலை 9.00 - 10.30

சூலம்: தெற்கு I பரிகாரம்: நல்லெண்ணெய் I இன்று கீழ் நோக்கு நாள் I திதி:நவமி I சந்திராஷ்டமம்: மகம், பூரம்

மேஷம்

கிரகநிலை:

தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன், புதன் - சுக ஸ்தானத்தில் ராகு - களத்திர ஸ்தானத்தில் குரு(வ) - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று உங்கள் காரியங்களும் முயற்சிகளும் தங்குதடையின்றி நடைபெறும். நீண்டகால திட்டங்கள் நிறைவேறும். கணவன் அல்லது மனைவியின் உடல்நிலையில் சுகமும் முன்னேற்றமும் உண்டாகும். குடும்பத்தில் அன்யோன்யமும் ஒற்றுமையும் ஏற்படும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்துப்போவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

ரிஷபம்

கிரகநிலை: ராசியில் சூர்யன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன், புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு(வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று பிரச்னைகள் ஒருபுறம் கவலையை உருவாக்கினாலும் அதற்குண்டான தீர்வுகளும் கிடைக்கும். வைத்தியச் செலவு இருக்காது. சேமிப்பு இல்லாவிட்டாலும் கடன் அடைபடுகிறதே என்று ஆறுதல் அடையலாம். புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடவும். செய்த முயற்சிகளைத் தொடரவும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

மிதுனம்

கிரகநிலை: ராசியில் சுக்ரன், புதன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு(வ) - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய், கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று உடல்நலம் சீராகும். இதுவரை நோய்களினால் அவதிப்பட்டவர்களுக்கு, நோயின் தாக்கம் முழுமையாகக் குறையும். பூரண குணம் ஏற்படும். அதனால் வைத்தியச் செலவுகளும் விலகும். தொழில்துறையில் போட்டியாளர்கள் காணாமல் போவார்கள். தொழிலை லாபகரமாக நடத்தலாம். கடன்களையும் அடைக்கலாம். சிறிது சிறிதாக சேமிக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பிரவுண்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

கடகம்

கிரகநிலை: ராசியில் ராகு - சுக ஸ்தானத்தில் குரு(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் சூர்யன் - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று தேவையற்ற விவகாரங்களை அடியோடு விலக்குவது நல்லது. குடும்பத்தில் அமைதியும் ஆனந்தமும் உண்டாகும். குடும்பத்தினர் வேண்டுவதை நிறைவேற்றி வைப்பீர்கள். அதனால் உங்கள் மரியாதை உயரும். பழைய கடன்களை அடைத்து, வாக்கு நாணயத்தைக் காப்பாற்றி, புதிய கடன்களை வாங்கி தொழிலைப் பெருக்கலாம். தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 7

சிம்மம்

கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு(வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன் - லாப ஸ்தானத்தில் சுக்ரன், புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று உறவினர்கள் வகையில் தவிர்க்கமுடியாத சுபச் செலவுகளை சுமக்க நேரும். முக்கியமான பயணமும், முக்கிய பிரமுகர்களின் சந்திப்பும் உண்டாகும். அது உங்கள் எதிர்காலத்துக்கு நல்ல அஸ்திவாரமாக இருக்கும். சிலர் கூட்டு முயற்சிகளில் லாபம் தேடலாம். சிலர் குடும்பத்தினரோடு கூட்டுச் சேர்ந்து தொழில் செய்து லாபம் பார்க்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

கன்னி

கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு(வ) - சுக ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன், புதன் - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொழில், வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் வெற்றி அடையலாம். சேமிப்பும் அடையலாம். உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் உங்களுக்கு முழுமையான பலனையும் திருப்தியையும் தரும். எதிர்ப்பும் இடையூறும் ஒருபுறம் இருந்தாலும், உங்களின் தன்னம்பிக்கையாலும் தைரியத்தாலும் அவற்றைப் போராடி எதிர்த்துநின்று வெற்றிகொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

துலாம்

கிரகநிலை: ராசியில் குரு(வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன், புதன் - தொழில் ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று கடமைகளைக் காப்பாற்றுவீர்கள். பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது என்றாலும், வைத்தியச் செலவும் அல்லது வீண்விரயச் செலவும் தவிர்க்க முடியாததாக இருக்கும். அதனால் சிலசமயம் விரக்தி ஏற்படலாம். ஜாதக தசாபுக்தியை அனுசரித்து தேவையான பரிகாரங்களைச் செய்து கொள்வதால், மனதில் ஆறுதலும் நம்பிக்கையும் உண்டாகும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் பிரச்னை இருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 7

விருச்சிகம்

கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - சுக ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சுக்ரன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் குரு(வ) - என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பிவந்து சேரும் நாள். உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. சுபநிகழ்ச்சிகள் இடம்பெறும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

தனுசு

கிரகநிலை: ராசியில் சனி (வ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன், புதன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் குரு(வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று சில அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்ய பணப்பற்றாக் குறையை சந்திக்கலாம். ஒரு பிரச்சினை முடிந்ததும் இன்னொரு பிரச்சினை உருவாகலாம். ஆனாலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் பிரச்சினைகள் எவ்வளவு இருந்தாலும் தோல்வியும் தொய்வும் இல்லாமல் சமாளித்து ஜெயிக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

மகரம்

கிரகநிலை: ராசியில் செவ்வாய், கேது - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன், புதன் - களத்திர ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில் குரு(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். உங்கள் விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பழகும் நண்பர்களை எடைபோட முடியாது. வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பும் உங்கள் பெருந்தன்மையை கொஞ்சம் ஒதுக்கி வைக்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

கும்பம்

கிரகநிலை: ராசியில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் சூர்யன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்ரன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் குரு(வ) - லாப ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று சில காரியங்கள் எதிர்மறையாக நடக்கும். பொதுவில் நீங்கள் இதுவரை எதிர்பார்த்த காரியங்கள் எல்லாம் இழுபறியாக நிறைவேறாமல் இருந்தாலும், ஏதோவொரு வகையில் எப்படியும் நடந்துவிடும் என்று நம்பிக்கை இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

மீனம்

கிரகநிலை: தைர்ய வீர்ய ஸ்தானத்தில் சூர்யன் - சுக ஸ்தானத்தில் சுக்ரன், புதன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு(வ) - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று பழகும் மனிதர்களின் வார்த்தைகளை நம்புவதா வேண்டாமா என்று சமயத்தில் சந்தேகம் ஏற்படலாம். ராசியில் இருக்கும் கிரக சேர்க்கை வாழ்க்கையில் பிடிப்பும் ஆர்வமும் இல்லாமல் சலிப்பை உண்டாக்கினாலும், பாதிப்பை உண்டாகாமல் காப்பாற்றப்ப்டுவீர்கள். இனிப்பும் கசப்பும் மாறிமாறி இன்றைய பலன்கள் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

newstm.in

Trending News

Latest News

You May Like