1. Home
  2. ஜோதிடம்

மார்ச் மாத ராசி பலன்

மார்ச் மாத ராசி பலன்

march-month-rasi-palan

மார்ச் மாத ராசி பலன்

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீவிளம்பி வருஷம் - உத்தராயணம் - சிசிரருது -

மாசி மாதம் 16ம் நாள் பின்னிரவு 17ம் நாள் முன்னிரவு -

அன்றைய தினம் தினசுத்தி அறிவது வியாழக்கிழமை பின்னிரவு வெள்ளிக்கிழமை முன்னிரவு -

கிருஷ்ணபக்ஷ தசமியும் - மூலம் நக்ஷத்ரமும் - ஸித்தி நாமயோகமும் - வணிஜை கரணமும் -

சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி இரவு மணி 12.00க்கு விருச்சிக லக்னத்தில் 2019 மார்ச்சு மாதம் பிறக்கிறது.

மார்ச்சு மாதம் பிறக்கும் போது இருக்கக்கூடிய கிரகநிலை:

லக்னம் - அனுஷம் 3ம் பாதம் - சனி ஸாரம்

சூரியன் - சதயம் 3ம் பாதம் - ராகு ஸாரம்

சந்திரன் - மூலம் - கேது ஸாரம்

செவ்வாய் - பரணி 2ம் பாதம் - சுக்கிரன் ஸாரம்

புதன் - பூரட்டாதி 2ம் பாதம் - குரு ஸாரம்

குரு - கேட்டை 4ம் பாதம் - புதன் ஸாரம்

சுக்கிரன் - உத்திராடம் 3ம் பாதம் - சூரிய ஸாரம்

சனி - பூராடம் 2ம் பாதம் - சுக்கிரன் ஸாரம்

ராகு - புனர்பூசம் 3ம் பாதம் - குரு ஸாரம்

கேது - உத்திராடம் 1ம் பாதம் - சூரியன் ஸாரம்

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்):  கிரகநிலை: ராசியில் செவ்வாய் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு - பாக்கியஸ்தானத்தில் சந்திரன், சனி, கேது - தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் சூரியன், புதன் (வ) என கிரகநிலை இருக்கிறது. கிரக மாற்றங்கள்: இம்மாதம் 13ம் தேதி குரு பகவான் பாக்கியஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இம்மாதம் 15ம் தேதி சூரியன் விரையஸ்தானத்திற்கு மாறுகிறார். இம்மாதம் 20ம் தேதி புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இம்மாதம் 22ம் தேதி சுக்கிரன் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: மனதில் தெளிவு ஏற்படும் மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்களிடம் உள்ள திறமை அதிகரிக்கும்.  விருப்பமானவர்களை சந்தித்து உரையாடி மகிழ்ச்சி அடைவீர்கள். மனதுணிவு உண்டாகும். எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீர்கள். போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஏற்படும் பணதேவையை சரிகட்ட நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில்  முன்னேற்றம் காண தேவையான பணிகளில் ஈடுபடுவீர்கள்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான வேலைகளில் அலைச்சல் இருக்கும். ஆனால் செய்த வேலைக்கு நல்ல பலனை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் வீண் பிரச்சனைகள் தலைதூக்கும். அவற்றை லாவகமாக கையாண்டு சமாளிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே பழைய விஷயங்களை பேசாமல் இருப்பதன் மூலம் ஒற்றுமை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களுக்கு தாராளமாக பணம் செலவு செய்து தேவையானவற்றை வாங்குவீர்கள். மனதில் உற்சாகம் பிறக்கும். தேவையான உதவிகளும் கிடைக்கும். மாணவர்களுக்கு சக மாணவர்களிடம் சகஜமாக பேசி பழகுவது நல்லது.   கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது.  கலைத்துறையினருக்கு கவனம் தேவை. எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம். எதை பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்வது நல்லது. கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. அரசியல் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். எந்தக் கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம். வியாபாரம் பெருகும். போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள். அஸ்வினி: இந்த மாதம் மேலதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு ஓரளவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் மறைமுக எதிர்ப்புகளையும், போட்டிகளையும் சமாளித்து எதிர்நீச்சல் போட்டே முன்னேற்றத்தை அடையமுடியும் பரணி: இந்த மாதம் தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதன்மூலம் ஓரளவுக்கு அனுகூலப்பலனை உண்டாக்கும். எ திர்ப்புகளை சமாளிக்க தேவையான உத்வேகம் கிட்டும்.  கார்த்திகை - 1: இந்த மாதம் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பணம் பலவழிகளில் வந்து உங்களின் பாக்கெட்டை நிரப்பும். பொன், பொருள் சேரும். தொட்டதெல்லாம் துலங்கக்கூடிய காலமாக அமையும்.  பரிகாரம்: செவ்வாய்கிழமைகளில் முருகனை தீபம் ஏற்றி வழிபட, வயதான தம்பதிகளிடம் ஆசீர்வாதம் பெற எல்லா காரியங்களிலும் நன்மை உண்டாகும் செய் தொழில் சிறக்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன் சந்திராஷ்டம தினங்கள்: 25, 26, 27 அதிர்ஷ்ட தினங்கள்: 19, 20  ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்): கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - களத்திர ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன், சனி, கேது - பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை இருக்கிறது. கிரக மாற்றங்கள்: இம்மாதம் 13ம் தேதி குரு பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இம்மாதம் 15ம் தேதி சூரியன் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். இம்மாதம் 20ம் தேதி புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார் இம்மாதம் 22ம் தேதி சுக்கிரன் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: ஒற்றுமையுடன் நடக்க ஆசைப்படும் ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் பொருள் வரவை சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சலும் செலவும் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். அதே நேரத்தில் சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து போவது நல்லது. நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். குடும்பத்தில் அனைவரிடமும் ஒற்றுமை நிலவும். சுலபமாக அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். உடன் பிறந்தோர்கள் அக்கறையுடன் உங்கள் காரியங்களை செய்து கொடுப்பார்கள். பெண்களுக்கு வீண் அலைச்சலும், செலவும் ஏற்பட்டாலும் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். எதிர்பார்த்த  உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டி நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும். கலைத்துறையினருக்கு அனைத்து வகையிலும் நன்மைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும். அரசியல் துறையினருக்கு எடுக்கக் கூடிய ஒப்பந்தகளை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். மேலிடத்தின் கனிவான பார்வை கிடைக்கப் பெறுவீர்கள். கார்த்திகை - 2, 3, 4: இந்த மாதம் உற்றார்-உறவினர்களும் சாதகமாக அமைவார்கள். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் அதிகரிக்கக்கூடிய காலமாக இருக்கும். எந்தவொரு காரியத்தைச் செய்வது என்றாலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது.  ரோகினி: இந்த மாதம் புதிய வீடு, மனை, வண்டி, வாகனம் போன்ற யாவும் வாங்கக்கூடிய யோகம் அமையும். சேமிப்பு பெருகும்.   பிரிந்த உறவினர்களும் தேடிவந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். தொழில்ரீதியாக நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். மிருகசீரிஷம் - 1, 2: இந்த மாதம் புதிய வேலை தேடுபவர்களும் சிறப்பான வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத உயர்வுகளைப்பெற்று மகிழ்ச்சியடைவார்கள்.  பரிகாரம்: ராமாயணத்தில் சுந்தர காண்டம் படித்து வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன் - வெள்ளி சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 28, 29 அதிர்ஷ்ட தினங்கள்: 21, 22  மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) : கிரகநிலை: ராசியில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சந்திரன், சனி, கேது - அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை இருக்கிறது. கிரக மாற்றங்கள்: இம்மாதம் 13ம் தேதி குரு பகவான் ஸப்தம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இம்மாதம் 15ம் தேதி சூரியன் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். இம்மாதம் 20ம் தேதி புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார் இம்மாதம் 22ம் தேதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: தடைப்பட்ட காரியங்களில் இருந்து வெற்றியடையும் மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் முன்பு தடைபட்ட காரியங்கள் எவ்வித இடையூறுமின்றி நடந்து முடியும். வெளியூர்  பயணங்கள் உண்டாகும், அதனால் நன்மையும் ஏற்படும். நண்பர்கள் பலவிதங்களிலும் ஆதரவாக இருப்பவர்கள். மன தெளிவை உண்டாக்கும். ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் வீண் இடையூறுகள் ஏற்பட்டு நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் அனுகூலம் ஏற்பட்டாலும்,சக ஊழியர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.  குடும்பத்தில் இருப்பவர்களின் மூலம் ஏற்பட்ட டென்ஷன் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனத்தாங்கல்கள் நீங்கும். பிள்ளைகள் எதிர்பார்த்தபடி நடந்து கொள்வார்கள்.  உறவினர்களிடம் இருந்து வந்த வேற்றுமைகள் அகலும். பெண்களுக்கு கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவதன் மூலம் நன்மை ஏற்படும். கூடுதலாக எதிலும் உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் கவனமுடனும் ஆசிரியர்களின் உதவியுடனும் பாடங்களை படிப்பது நல்லது. கலைத்துறையினருக்கு புதிய மாற்றம் உருவாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை. வெளியூர் வெளிநாடு செல்ல வேண்டி வரலாம். அரசியல் துறையினருக்கு அலைச்சல் இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்களுக்கு எதிரானவர்கள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம்.  மிருகசீரிஷம் - 3, 4: இந்த மாதம் உங்களுடைய புகழ், பெருமை யாவும் உயரும். உடல்நலம் அற்புதமாக அமையும். மனைவி, பிள்ளைகளும் மகிழ்ச்சியுடனேயே இருப்பார்கள். எந்தவித மருத்துவச் செலவுகளும் இல்லாது  இருக்கும். கவலை வேண்டியதில்லை. திருவாதிரை: இந்த மாதம் பொருளாதாரநிலையும் சிறப்பாக அமைவதால் எல்லாத்தேவைகளும் பூர்த்தியாகி கடன்கள் அனைத்தும் பைசலாகும். சிலருக்கு புதுவீடு கட்டி குடிபுகக்கூடிய எண்ணம் மேலோங்கும் . சிலருக்குப் பெரிய தொகை சேமிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். புனர்பூசம் - 1, 2, 3: இந்த மாதம் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிமேல் வெற்றியினைப் பெறமுடியும். கொடுக்கல்-வாங்கலிலும் சரளமானநிலை இருக்கும்.தொழில், வியாபாரம் நல்ல லாபத்தை உண்டாக்கும். பரிகாரம்: பெருமாளை வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மன குழப்பம் நீங்கும். தைரியம் பிறக்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன் - வெள்ளி சந்திராஷ்டம தினங்கள்: 3, 4, 30, 31 அதிர்ஷ்ட தினங்கள்: 23, 24  கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) : கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன், சனி, கேது - களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை இருக்கிறது. கிரக மாற்றங்கள்: இம்மாதம் 13ம் தேதி குரு பகவான் ரண, ருண, ரோக ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இம்மாதம் 15ம் தேதி சூரியன் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். இம்மாதம் 20ம் தேதி புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார் இம்மாதம் 22ம் தேதி சுக்கிரன் அஷ்டம  ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: எதிர்பார்த்த பலன்களை அடையப் போகும் கடக ராசியினரே, இந்த மாதம் தைரியம் அதிகரிக்கும்.  பணவரவு இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும் முன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண் தகராறு ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது. தொழிலில் மன நிம்மதியும் அதிக நன்மையும் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். வியாபாரம் தொடர்பான பயணங்களால் அலைச்சல் உண்டாகலாம். எதிர்பார்த்த பலன் தாமதப்படும். உத்தியோகஸ்தர்கள் சீரான அனுபவங்களை பெற முடியும். மேல் அதிகாரிகளின் ஆதரவை உத்தியோகஸ்தர்கள் பெறுவார்கள். கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உஷ்ண சம்பந்தமான நோய்வரக்கூடும். எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் அதை தடுக்கலாம். பிள்ளைகள் மனம் மகிழும்படி நடந்து கொள்வார்கள். வீண் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. கடித போக்குவரத்து மூலம் நல்ல தகவல் வரும். வீண் மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். மாணவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். கடன் பிரச்சனை தீரும். எதிர்ப்புகள் அகலும், தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகளும் நீங்கும். அரசியல் துறையினருக்கு விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். புனர்பூசம் - 4: இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். வெளிவட்டாரத் தொடர்புகளால் பெயர், புகழ் உயரும். அரசியல்வாதிகளுக்கு மாண்புமிகு பதவிகள் கிடைக்கப்பெறும்.  பூசம்: இந்த மாதம் கடன்கள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும்.   எல்லாவகையிலும் ஓரளவுக்கு ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரியங்கள் தடைகளுக்குப்பின் கைகூடும்.  ஆயில்யம்: இந்த மாதம் பணவரவுகளில் இருந்து வந்த தடைகள்விலகி மேன்மையான பலன்கள் ஏற்படும். கடன்கள் சற்றுக் குறையும். கணவன்- மனைவி யிடையே ஒற்றுமை நிலவும். எந்தவொரு காரியத்திலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். பரிகாரம்: அபிராமி அந்தாதி சொல்லி அம்மனை வழிபட்டால் பாவம் நீங்கி பிரகாசமான எதிர்காலம் அமையும். பஞ்சமுக விளக்கு ஏற்றுவது சிறந்தது.  அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன் - வெள்ளி சந்திராஷ்டம தினங்கள்: 5, 6, 7 அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26, 27  சிம்மம்  (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்): கிரகநிலை: சுக ஸ்தானத்தில் குரு - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன், சனி, கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை இருக்கிறது. கிரக மாற்றங்கள்: இம்மாதம் 13ம் தேதி குரு பகவான் பஞ்சம, பூர்வ, புண்ணிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இம்மாதம் 15ம் தேதி சூரியன் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். இம்மாதம் 20ம் தேதி புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார் இம்மாதம் 22ம் தேதி சுக்கிரன் ஸப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: பயணங்களை சமாளிக்க முடியாத சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் வெளியூர்  பயணங்களால் அலைச்சலும், எதிர்பாராத பொருள் இழப்பும் இருக்கும். எனவே கவனமாக இருப்பது நல்லது. திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்ப்புகளை சமாளிக்கும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் அலைச்சல் இருந்தாலும் முடிவில் சாதகமான பலன் கிடைக்கும்.  வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலை தொடர்பான கவலை ஏற்பட்டு நீங்கும். அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள்  ஆதரவு கிடைக்கும். ஆனால் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் கணவன், மனைவி நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன்  பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். பெண்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிரிகளும் நண்பராவார்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு பெரியோர்களை அனுசரித்து செல்வது நல்லது. கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும்.  கலைத்துறையினருக்கு எதிர்ப்பார்த்தபடி வரவுகள் இருக்கும். வெளிநாடு செல்வதற்கு வாய்ப்புகள் வந்து சேரும். மருத்துவ செலவுகள் குறையும். அரசியல் துறையினருக்கு கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். மகம்: இந்த மாதம் கொடுக்கல்-வாங்கலில் நிதானமாக செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தைப் பெறமுடியும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும்.   வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பாராத பெரிய ஆர்டர்கள் கிடைக்கும். பூரம்: இந்த மாதம் அபிவிருத்தியும் பெருகும். கூட்டாளிகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள்.மாணவர்கள் கல்வியில் படிப்படியான முன்னேற்றத்தைப் பெறுவார்கள்.  உத்திரம் - 1: இந்த மாதம் தேவையற்ற பொழுதுபோக்குகளையும் நண்பர்களின் சகவாசத்தையும் தவிர்ப்பதன்மூலம் நற்பலனைப் பெற முடியும். ஓரளவுக்கு சேமிப்பு பெருகும். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.  பரிகாரம்: விநாயக பெருமானை அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வழிபடுவது தடைபட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கும். செல்வம் சேரும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன் சந்திராஷ்டம தினங்கள்: 8, 9 அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 28, 29  கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்)   : கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் சந்திரன், சனி, கேது - பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ) - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை இருக்கிறது. கிரக மாற்றங்கள்: இம்மாதம் 13ம் தேதி குரு பகவான் சுக ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இம்மாதம் 15ம் தேதி சூரியன் ஸப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார். இம்மாதம் 20ம் தேதி புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார் இம்மாதம் 22ம் தேதி சுக்கிரன் ரண, ருண, ரோக  ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: வேலையில் மாற்றத்தை எதிர் நோக்கும் கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் எடுத்த காரியம் கைகூடும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும், கடன் விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. தொழில் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். வியாபார போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். ஆனால் வாடிக்கையாளர்களை  அனுசரித்து செல்வது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள தொகை வந்து சேரும். சிலருக்கு வேலை மாற்றம் உண்டாகும்.  குடும்பத்தில் வாழ்க்கை துணை மூலம் ஆதாயம் கிடைக்க பெறுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் உதவிகள் கிடைக்கும்.   பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். அவர்களின் ஆதரவும் கிடைக்கும். பெண்களுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணவரத்து தாமதப்படும். கோபத்தை தவிர்ப்பது நல்லது மாணவர்களுக்கு திறமை வெளிப்படும். சக மாணவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு உங்கள் கௌரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக  இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். அலட்சிய போக்கை கைவிடுவது நல்லது. அரசியல் துறையினருக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். நட்பு வட்டாரத்தில் குதூகலம் ஏற்படும். உத்திரம் - 2, 3, 4: இந்த மாதம் குடும்பத்தில் ஒற்றுமையும், சுபிட்சமும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கணவன்-மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பணம் பலவழிகளில் வந்து குவியும்.  ஹஸ்தம்: இந்த மாதம் வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். சிலருக்கு நினைத்தவரையே கைப்பிடிக்கும் யோகம் அமையும். புத்திரவழியில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும்.  சித்திரை - 1, 2: இந்த மாதம் உங்களுக்கு எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து செயல்படுவதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. பணவிவகாரங்களில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். பரிகாரம்: ஏதேனும் ஒரு காவல் தெய்வத்தை புதன்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை நீங்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வெள்ளி சந்திராஷ்டம தினங்கள்: 10, 11, 12 அதிர்ஷ்ட தினங்கள்: 3, 4, 30, 31  துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்): கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன், சனி, கேது - சுக ஸ்தானத்தில் சுக்கிரன் - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை இருக்கிறது. கிரக மாற்றங்கள்: இம்மாதம் 13ம் தேதி குரு பகவான் தைரிய, வீர்ய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இம்மாதம் 15ம் தேதி சூரியன் ரண, ருண, ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். இம்மாதம் 20ம் தேதி புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார் இம்மாதம் 22ம் தேதி சுக்கிரன் பஞ்சம, பூர்வ, புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: மகிழ்ச்சியில் திளைக்கக் கூடிய துலா ராசி அன்பர்களே, இந்த மாதம் வீண்கவலை ஏற்பட்டு நீங்கும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். அதே நேரத்தில் எதிர்பாராத செலவும் ஏற்படும். உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமான பலன் தரும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் மேல் அதிகாரிகள் மூலம் கிடைக்கும். பொறுப்புகள் கூடும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைக்கக்கூடும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த மனத்தாங்கல் நீங்கி மகிழ்ச்சியும், சகஜ நிலையும் காணப்படும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பேசும் போது நிதானமாக பேசுவது நல்லது. பெண்களுக்கு திறமையாக சமாளித்து எந்த பிரச்சனையிலும் சாதகமான முடிவை பெறுவீர்கள். இழுபறியாக இருந்த காரியங்களில் எதிர்பாராத திருப்பம் ஏற்படும். மாணவர்களுக்கு வழக்கத்தை விட கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டுகளில் கவனம் தேவை.  கலைத்துறையினருக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். விருதுகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த இழுபறியான வேலைகள் முடிவுக்கு வந்து சேரும். அரசியல் துறையினருக்கு விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது சித்திரை - 3, 4: இந்த மாதம் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவச்செலவுகளை ஏற்படுத்தும். மனைவிக்கு வயிற்றுவலி, மாதவிடாய் தொடர்புடைய பிரச்சினைகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகும்.  ஸ்வாதி: இந்த மாதம் முயற்சிகளில் தடைகள் நிலவுவதால் மனநிம்மதி குறையும். சரியான நேரத்திற்கு உணவுண்ண முடியாத நிலை, உடல் சோர்வு, தூக்கமின்மை போன்றவற்றாலும் பாதிக்கப்பட நேரிடும்.  விசாகம் - 1, 2, 3: இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவும், அதிகாரிகளின் ஒத்துழைப்பும் மனமகிழ்ச்சியினை ஏற்படுத்தும்.  பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்தில் தீபம் ஏற்றி வழிபட இழுபறியான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். வாழ்க்கை வளம் பெறும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன் - வெள்ளி சந்திராஷ்டம தினங்கள்: 13, 14,  அதிர்ஷ்ட தினங்கள்: 5, 6, 7  விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) : கிரகநிலை: ராசியில் குரு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன், சனி, கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை இருக்கிறது. கிரக மாற்றங்கள்: இம்மாதம் 13ம் தேதி குரு பகவான் தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இம்மாதம் 15ம் தேதி சூரியன்பஞ்சம, பூர்வ, புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். இம்மாதம் 20ம் தேதி புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார் இம்மாதம் 22ம் தேதி சுக்கிரன் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: துணிவாக காரியங்களை சாதிக்கக் கூடிய விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் பணவரவு அதிகமாகும். எதிர்ப்புகள்  நீங்கி எதிலும் உற்சாகம் உண்டாகும். மனமகிழ்ச்சிக்காக பணம் செலவு செய்ய தயங்க மாட்டீர்கள். நண்பர்கள் சேர்க்கையும்  அவர்களால் உதவியும் கிடைக்கும். தொழில் வியாபாரம் சிறிது மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் குறையாத நிலை இருக்கும். போட்டிகள் பற்றிய கவலையை விட்டுவிட்டு  தொழில் வியாபாரத்தில் கவனம் செலுத்துவது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் மாற்றங்கள் உண்டாகலாம். சக ஊழியர்களிடம் பேசும்போது கோபப்படாமல் இருப்பது நன்மை தரும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பார்கள். அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நல்லுறவு ஏற்படும். குடும்ப உறுப்பினர் உடல்நிலையில் கவனம் தேவை.  கடன் விவகாரங்களில் யோசித்து செயல்படுவது நல்லது.  பெண்களுக்கு பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பயணங்களின் போது பொருட்களின் மீது கவனம் தேவை.   எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற் றம் உண்டாகும். உங்களுக்கு பின்னால் உங்களை பற்றி புறம் பேசியவர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள். எதிலும் எச்சரிக்கை தேவை. கலைத்துறையினருக்கு சிறப்பான மாதமாக இருக்கும். தாமதமாகி வந்த வாய்ப்புகள் அனைத்தும் திரும்ப கிடைக்கும். சமூக சேவையில் உள்ளோர்க்கு சமூக அந்தஸ்து உயரும். அரசியல் துறையினருக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும். விசாகம் - 4: இந்த மாதம் அரசியல்வாதிகள் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி மக்களின் ஆதரவைப் பெறுவார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் அமையும். பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும்.  அனுஷம்: இந்த மாதம் சிலருக்கு வாய்ப்புகள் வந்து குவிவதால் பொருளாதாரநிலையும் உயரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் உண்டாகும். இல்லத்தில் நெய் தீபமேற்றுவது நல்லது.   கேட்டை: இந்த மாதம் இன்று  எதிர்பாராத வீண்விரயங்கள், தேவையற்ற செலவுகள் உண்டாகும். பணவிஷயத்தில் மட்டும் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். குடும்பத்தில் ஒற்றுமை குறையக்கூடிய சம்பவங்கள் நடைபெறும்.  பரிகாரம்: கந்த சஷ்டி கவசம் படித்து முருகனை வணங்க அருள் கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் கூடும். செல்வம் சேரும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன் சந்திராஷ்டம தினங்கள்: 15, 16 அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9    தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்): கிரகநிலை: ராசியில் சந்திரன், சனி, கேது - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ) - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரகநிலை இருக்கிறது. கிரக மாற்றங்கள்: இம்மாதம் 13ம் தேதி குரு பகவான் ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். இம்மாதம் 15ம் தேதி சூரியன் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். இம்மாதம் 20ம் தேதி புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார் இம்மாதம் 22ம் தேதி சுக்கிரன் தைரிய, வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: மனம்பாதிக்கும் படியான சூழ்நிலையை சந்திக்கும் தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் வீண் அலைச்சல் உண்டாகும். ஆனாலும் சுபமாக எதுவும் நடந்து முடியும். புதிய காரியங்களில் ஈடுபடும் போது யோசித்து  செய்வது நல்லது.  மன அமைதி பாதிக்கும்படியான சூழ்நிலை ஏற்பட்டு நீங்கும். நண்பர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களிடம் கவனமாக பேசுவது  வியாபார விருத்திக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோபப்படாமல் மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை  செய்து முடிப்பது நல்லது. சக ஊழியர்கள் பேச்சை கேட்டு நடப்பதை தவிர்ப்பது நன்மை தருவதாக இருக்கும். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். கணவன், மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். தெய்வ நம்பிக்கை கூடும். உறவினர்கள், நண்பர் கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு வீண் அலைச்சலும் எதிர்பாராத செலவும் உண்டாகும். கவனம் தேவை. முயற்சிகள் தாமதப்படும். மாணவர்களுக்கு கவனமாக பாடங்களை படிப்பது நன்மை தரும். அடுத்தவர்களுக்கு ஆதரவாக செயல்படும் போது கவனம் தேவை. கலைஞர்களுக்கு தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம். புகழ் பாராட்டு வந்து சேரும். நற்பெயர் எடுப்பத்ற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். அரசியலில் உள்ளவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைத்தாலும் அதே நேரத்தில் விழிப்புடன் செயல்படுவதும் நன்மைதரும். இழுபறியாக இருந்த சில காரியங்கள் நன்றாக நடந்து முடியும். கையிருப்பு கூடும் மூலம்: இந்த மாதம் மனநிம்மதி குறையும். எதிர்பாராத வீண்பிரச்சினைகளாலும் மனக்குழப்பம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். பூராடம்: இந்த மாதம் உற்றார்-உறவினர்களிடையே வீண் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்துசெல்ல நேரிடும். எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படும். திருமண சுபகாரிய முயற்சிகளுக்கான பேச்சு வார்த்தைகளைத் தவிர்ப்பது நல்லது.  உத்திராடம் - 1: இந்த மாதம் முடிந்தவரை பேச்சில் நிதானத்தைக்கடைப்பிடிப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது, குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதிருப்பது உத்தமம்.  பரிகாரம்: சனீஸ்வர ஸ்தோத்திரங்களை சொல்லி நல்லெண்ணை தீபம் ஏற்றி சனி பகவானை வழிபடுவதால் துன்பங்கள் நீங்கி வாழ்க்கையில் இன்பம் உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன் சந்திராஷ்டம தினங்கள்: 17, 18 அதிர்ஷ்ட தினங்கள்: 10, 11, 12  மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள்): கிரகநிலை: ராசியில் சுக்கிரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் குரு - அயன் சயன போக ஸ்தானத்தில் சந்திரன், சனி, கேது என கிரகநிலை இருக்கிறது. கிரக மாற்றங்கள்: இம்மாதம் 13ம் தேதி குரு பகவான் அயன, சயன, போக ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இம்மாதம் 15ம் தேதி சூரியன் தைரிய, வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார். இம்மாதம் 20ம் தேதி புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார் இம்மாதம் 22ம் தேதி சுக்கிரன் தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்:  மேல் அதிகாரிகளால் நன்மையைப் பெறப் போகும் மகர ராசியினரே, இந்த மாதம் எதிர்பாராத செலவு உண்டாகும். எதிர்பார்த்த வெற்றி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். எதிர்பாராத பணவரத்தும் இருக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கையும் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.   அலுவலக வேலைகளால் அலைச்சல் உண்டாகும். சக ஊழியர்களிடம் அலுவலகம் தொடர்பான ரகசியங்களை கூறுவதை தவிர்ப்பது நல்லது. . மேல் அதிகாரிகளால் உத்தியோகஸ்தர்களுக்கு நன்மை உண்டாகும். வெளியூர் பயணம் ஏற்படும் குடும்பத்தில் சுப காரியம் நடக்கலாம். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளால் நன்மை ஏற்படும். அவர்களது திறமைகண்டு மன மகிழ்ச்சி கொள்வீர்கள்.  பெண்களுக்கு மனதில் இருந்த பயம் நீங்கி துணிவு உண்டாகும். வீண் வாக்குவாதஙக்ளை தவிர்ப்பது நல்லது  மாணவர்களுக்கு அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அலைச்சல் இருக்கும். ஆனால் கடந்த காலத்தை விட கூடுதல் வருவாயைப் பெறலாம். புதிய ஒப்பந்தம் தொடங்குவதற்கு முன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் ஆலோசனை செய்யவும். அரசியல்துறையிலிருந்து முன்னேறுவதற்கான பாதையை நாம் கண்டறிந்து செல்வதற்கு புதிய விதமான வழிகளை அமைத்துக்கொண்டு அவ்வழிகளை பயனப்பாதையாக்கிச் செல்வீர்கள். உங்கள் மேலதிகாரிகள் உங்களின் சேவையைப் புரிந்துக் கொள்வார்கள். உத்திராடம் - 2, 3, 4: இந்த மாதம் தொழில், வியாபாரம் செய்பவர்களும் புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது சிந்தித்து செயல்படுவது உத்தமம். கூட்டாளிகளை அனுசரித்துச் சென்றால் ஓரளவுக்கு அனுகூலமான பலனைப் பெறுவீர்கள்.  திருவோணம்: இந்த மாதம் வேலைப்பளு அதிகரிப்பதால் உடல்நிலை சோர்வடையும். அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு சோதனை நிறைந்த காலமாக இருக்கும். மக்களின் தேவையறிந்து செயல்படுவது உத்தமம்.  அவிட்டம் - 1, 2: இந்த மாதம் அதிக கவனம் செலுத்துவது, தேவையற்ற பொழுதுபோக்குகளைத் தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டாலும் மருத்துவச் செலவுகளுக்குப்பின் உடனே குணமாகும். பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவனையும் நந்தியையும் தீபம் ஏற்றி வழிபட எல்லா பிரச்சனைகளும் நீங்கும்.  எதிலும் வெற்றி உண்டாகும். மனநிம்மதி ஏற்படும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன் - வெள்ளி சந்திராஷ்டம தினங்கள்: 19, 20 அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14      கும்பம்  (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதங்கள்): கிரகநிலை: ராசியில் சூர்யன், புதன் (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சந்திரன், சனி, கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகநிலை இருக்கிறது. கிரக மாற்றங்கள்: இம்மாதம் 13ம் தேதி குரு பகவான் லாப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இம்மாதம் 15ம் தேதி சூரியன் தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார். இம்மாதம் 20ம் தேதி புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார் இம்மாதம் 22ம் தேதி சுக்கிரன் ராசிக்கு மாறுகிறார். பலன்:  நல்ல காரியங்களை சந்திக்க காத்திருக்கும் கும்ப ராசியினரே, இந்த மாதம் புதிய நண்பர்கள் சேர்க்கை உண்டாகும்.  திறமையாக எதையும் சமாளிப்பீர்கள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடக்கும்.  பொருள் வரவை தரும்.  செலவுகள் கட்டுக்குள் இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும்.  கூட்டு தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வியாபாரம் தொடர்பான முயற்சி வீண் முயற்சியாக இருந்தாலும் பின்னாளில் அதற்கான பலன் கிடைக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலை சுமை இருக்கும். எப்படியும் செய்து முடித்து நல்ல பெயர் வாங்கி விடுவீர்கள்.  குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக் கும். நிம்மதி ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலைகள் நீங்கும்.  குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.  வாழ்க்கை துணையின் ஆதரவும் கிடைக் கும். உறவினர்கள் வருகையும் அவர்களால் உதவியும் கிடைக்க பெறுவீர்கள்.  பெண்களுக்கு தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மனதெளிவு உண்டாகும். பணவரத்து இருக்கும். மாணவர்களுக்கு தேர்வுகள் பற்றிய பயம் நீங்கும். கல்வியில் முன்னேற்றம்  காணப்படும்.  கலைஞர்களுக்கு திருப்தியான சூழ்நிலை நிலவும். பழைய கலைஞர்களின் ஆதரவும், பாராட்டும் கிடைக்கப் பெறுவீர்கள். அரசியல் துறையினர் அரசு விவகாரங்களைல் தலையிடும் போதும், கையெழுத்திடும் போதும் மிகவும் கவனமாக இருக்கவும். அவிட்டம் - 3, 4: இந்த மாதம் மனைவி, புத்திரர்களின் உடல்நிலை சுமாராக இருக்கும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். தேவையற்ற மனசஞ்சலங்களும், வீண் செலவுகளும் ஏற்படக்கூடும் என்றாலும் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். சதயம்: இந்த மாதம் குடும்ப வாழ்வில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் அனைவரையும் அனுசரித்துச் செல்வதினால் ஒற்றுமை குறையாது. பொருளாதாரநிலை சிறப்பாக இருந்தாலும் வரவுக்குமீறிய செலவுகள் ஏற்படும். முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் நற்பலன் உண்டாகும்.  பூரட்டாதி - 1, 2, 3: இந்த மாதம் திருமண காரியங்கள் தடைப்படும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் அமையும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். புதிய பொருட்சேர்க்கைகளும் ஆடை, ஆபரணமும் சேரும். பரிகாரம்: விநாயகரை சனிக்கிழமைகளில் வணங்கி வருவது மன அமைதியை தரும். கடன் தொல்லை குறையும்.] அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன் சந்திராஷ்டம தினங்கள்: 21, 22  அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி): கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் சந்திரன், சனி, கேது - லாப ஸ்தானத்தில் சுக்கிரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ) என கிரகநிலை இருக்கிறது. கிரக மாற்றங்கள்: இம்மாதம் 13ம் தேதி குரு பகவான் தொழில் ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இம்மாதம் 15ம் தேதி சூரியன் ராசிக்கு  மாறுகிறார் இம்மாதம் 20ம் தேதி புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார் இம்மாதம் 22ம் தேதி சுக்கிரன் அயன,சயன, போக ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: வேலையில் கவனமாக இருக்கும் மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் எதிலும் நன்மையே நடக்கும். எந்த ஒரு வேலைபற்றியும் அதிகம் யோசிப்பதை தவிர்ப்பது நல்லது. திடீர் பணதேவை உண்டாகலாம்.  வெளியூரில் இருந்துவரும் கடிதங்கள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த இடையூறுகள் குறையும். கடித போக்குவரத்து மூலம் அனுகூலம் உண்டாகும். தொழில் விருத்தி அடைவதுடன் ஆதாயமும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திருப்தியாக உணர்வார்கள். பணவரத்து இருக்கும் சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கலாம். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பெரியோர் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளிடம் இனிமையாக பேசுவது நல்லது.  பெண்களுக்கு நண்பர்களிடம் உறவினர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. வீண் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். புதிய செயல்களை யோசித்து செய்வது நல்லது.  மாணவர்களுக்கு ஆசிரியர் ஆதரவு கிடைத்தாலும் சக மாணவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.  கல்வியில் ஏற்பட்ட தடை நீங்கும். கலைத்துறையினருக்கு பணவரவு ஏற்ற இறக்கமாக இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும். அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். எடுத்திருக்கும் அரசாங்க வேலைகள் மூலம் நன்மை உண்டாகும். பூரட்டாதி - 4: இந்த மாதம் லாபம் காணமுடியும். பணவிஷயங்களில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்த்துவிடுவது உத்தமம். வம்பு வழக்குகளில் சாதகமான பலன்கள் உண்டாகும்.  உத்திரட்டாதி: இந்த மாதம் தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. எதிர்பார்க்கும் லாபங்களைப்பெற இயலாது.  ரேவதி: இந்த மாதம் எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் தாமதப்பட்டாலும், கௌரவமான பதவிகளைப் பெறமுடியும். உயரதிகாரிகளின் ஆதரவும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் உங்களின் வேலைப்பளுவைக் குறைக்கும்.  பரிகாரம்: வியாழக்கிழமை அன்று வீரபத்திர ஸ்வாமியை வழிபட்டால் எதிர்ப்புகள் அகலும், மனதில் தைரியம் உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - வியாழன் சந்திராஷ்டம தினங்கள்: 23, 24 அதிர்ஷ்ட தினங்கள்: 17, 18  

newstm.in

Trending News

Latest News

You May Like