1. Home
  2. ஜோதிடம்

ஏப்ரல் மாத ராசி பலன்

ஏப்ரல் மாத ராசி பலன்

april-month-rasi-palan

ஏப்ரல் மாத ராசி பலன்

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீவிளம்பி வருஷம் - உத்தராயணம் - சிசிரருது - பங்குனி மாதம் 17ம் நாள் பின்னிரவு 18ம் நாள் முன்னிரவு - அன்றைய தினம் தினசுத்தி அறிவது ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு திங்கட்கிழமை முன்னிரவு - கிருஷ்ணபக்ஷ ஏகாதசியும் - அவிட்டம் நக்ஷத்ரமும் - ஸாத்யம் நாமயோகமும் - பாலவ கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி இரவு மணி 12.00க்கு தனுசு லக்னத்தில் 2019 ஏப்ரல் மாதம் பிறக்கிறது.

ஏப்ரல் மாதம் பிறக்கும் போது இருக்கக்கூடிய கிரகநிலை:
லக்னம் - .பூராடம் 1ம் பாதம் - சுக்ரன் சாரம்
சூரியன் - ரேவதி 1ம் பாதம் - புதன் ஸாரம்
சந்திரன் - அவிட்டம் - செவ்வாய் ஸாரம்
செவ்வாய் - கிருத்திகை 4ம் பாதம் - சூர்யன் ஸாரம்
புதன் - பூரட்டாதி 2ம் பாதம் - குரு ஸாரம்
குரு - மூலம் 1ம் பாதம் - கேது ஸாரம்
சுக்கிரன் - சதயம் 2ம் பாதம் - ராஹூ ஸாரம்
சனி - பூராடம் 2ம் பாதம் - சுக்கிரன் ஸாரம்
ராகு - புனர்பூசம் 3ம் பாதம் - குரு ஸாரம்
கேது - உத்திராடம் 1ம் பாதம் - சூரியன் ஸாரம்


கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் குரு (அதி. சா), சனி, கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - விரைய ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 09-04-2019 அன்று காலை 4.11 மணிக்கு புதன் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 14-04-2019 அன்று பகல் 1.15 மணிக்கு சூரிய பகவான் விரைய ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார். 16-04-2019 அன்று இரவு 8.32 மணிக்கு சுக்கிர பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 27-04-2019 அன்று காலை 4.13 மணிக்கு புதன் பகவான் விரைய ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார். பலன்: துடிதுடிப்புடன் எடுத்த வேலைகளை செய்யும் மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் தடைபட்டிருந்த அனைத்து காரியங்களும் அடுத்தடுத்து நடைபெறப் போகிறது.  குடும்பத்தில் நீங்கள் படும் கஷ்டம் வெளியே தெரியாது. நீங்கள் எப்போதுமே பிறர் கண்ணுக்கு சௌகரியமான வாழ்க்கை வாழும் ஆளாகத் காட்சி தருவீர்கள். நீங்கள் யாரிடமும் உங்களது குறைகளைத் தெரிவித்துக் கொள்ள மாட்டீர்கள். வீட்டில் நடைபெற வேண்டிய சுபகாரியங்கள் சுமூகமாக நடைபெறும்.  தொழிலில் நூதனப் பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும். வியாபாரம் அபிவிருத்தியாகும்.  பங்குதாரர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பது நன்மை தரும். இல்லையெனில் நஷ்டம் ஏற்படவும் வாய்ப்புண்டு. வெளிவட்டார பழக்க வழக்கங்கள் அபிவிருத்தியைத் தரும். உத்தியோகஸ்தர்கள்  புதிய காரியங்களை செய்ய துவங்குவதற்கு முன் நல்ல நேரம் காலம் பார்த்து செய்வது நல்லது. வேலையில் இருந்த பளு கொஞ்ச கொஞ்சமாகக் குறையும். அதில் இருந்து வந்த சுணக்க நிலையும் மாறும். வெளிநாட்டு வேலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். பெண்கள் எதிர் விளைவுகளை  முன்கூட்டியே யோசித்து வார்த்தைகளை எச்சரிக்கையாக விடுங்க. பக்குவமாகவும்,  இதமாகவும் பேசுவது தான் உங்க நன்மைக்கு பக்க பலம். வெலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் தொழிலிடத்தில் ‘தான்’ என்ற அகங்காரம் தலை தூக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது.   கலைத்துறையினர் கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. பயணங்கள் செல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும். அரசியல் துறையினர் மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். மனதிற்க்குப் பிடித்தவர்களை சந்திக்க நேரிடலாம். பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை.  மாணவர்கள் படிப்பினில் சாதனைகள் புரிவர். எதிர்நோக்கியிருக்கும் சவால்களையும் முடிப்பீர்கள். சுற்றுலா சென்று வருவீர்கள். அஸ்வினி: இந்த மாதம் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் சரியாகிவிடும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம். பிள்ளைகளுக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும். உறவினர்களிடம் கவனம் தேவை.  பரணி: இந்த மாதம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். மனதில் ஒருவித கவலை இருக்கும். மாணவர்களுக்கு தடைகளை தாண்டி கல்வியை கற்க செய்யும் முயற்சி வெற்றி பெறும். சிறப்பாக படித்து முடிப்பீர்கள். நீண்ட தூரப் பயணங்களால் லாபம் உண்டாகும். மனதில் தைரியம் பிறக்கும். வாக்கு வன்மையால் ஆதாயத்தை பெறுவீர்கள். சிலருக்கு இட மாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். கார்த்திகை 1ம் பாதம்: இந்த மாதம் வேலையில் இழுபறி, வீண் அலைச்சல் போன்றவை ஏற்பட்டு நீங்கும். கவனம் தேவை. எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும். வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடங்கல் ஏற்பட்டு நீங்கும். தேவையற்ற மனக்கவலை உண்டாகும். சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம். பெண்கள் அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது. பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வேண்டிக் கொள்ள அனைத்து காரியங்களும் தங்கு தடையின்றி நடைபெறும். சஷ்டி தோறும் அருகிலிருக்கும் முருகனுக்கு அர்ச்சனை செய்யுங்கள். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய் சந்திராஷ்டம தினங்கள்: 22, 23 அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16கிரகநிலை: ராசியில் செவ்வாய் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் குரு (அதி. சா), சனி, கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - லாப ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 09-04-2019 அன்று காலை 4.11 மணிக்கு புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 14-04-2019 அன்று பகல் 1.15 மணிக்கு சூரிய பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 16-04-2019 அன்று இரவு 8.32 மணிக்கு சுக்கிர பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 27-04-2019 அன்று காலை 4.13 மணிக்கு புதன் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: எந்த காரியங்களையும் எளிதில் முடிக்க முடியாமல் திணறும் ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் நல்ல பலன்களை அள்ளித்தரும். நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் மிகச் சாதுர்யமாக கையாளுவீர்கள்.  குடும்பத்தில் பிள்ளைகளுக்கு நிறைய செலவு செய்ய வேண்டிய நேரம். தந்தைக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தங்களுக்கு வரவேண்டிய பணபாக்கிகள் வந்து சேரும். நீண்ட நாட்களாக இருந்த கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்வீர்கள். சுபகாரிய விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். வீடு மாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் அதை நிறைவேற்றிக்  கொள்ளத்தக்க தருணம் வந்து சேரும்.  தொழிலில் விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தை சீரமைப்பதற்கு நீங்கள் சுயமாக மேற்கொள்ளும் முயற்சிகள் நிச்சயம் வெற்றியடையும். வங்கிக் கடன்கள் கிடைக்கும். வெளிநாட்டு தொடர்புடைய வியாபாரங்கள் தக்க லாபத்தைக் கொடுக்கும்.  அலைச்சலும் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் வேலை இழந்தவர்கள் மீண்டும் பணியில் சேர பொன்னான காலமிது. மேலிடத்தில் உள்ள அதிகாரிகள் உங்களுக்கு அனுசரனையாக நடந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடத்தில் உள்ள பிரச்சனைகளை நிதானமான அணூகுமுறையுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். பின் வரும் கஷ்டம் முன்னரயே தெரிந்து விலகுவீர்கள் பெண்கள்  கூடிய மட்டிலும் அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிருங்கள். பெரியோர்களை ஆலோசனைகளைக் கேட்டே எதையும் செய்வது நல்லது. தம்பதிகளிடம் ஒத்த கருத்து ஏற்படும். குடும்பத்தில் நடைபெற இருந்த நற்காரியங்கள் ஒவ்வொன்றாக நடைபெறும். கலைத்துறையினர் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள்  கிடைக்கும். சாதகமாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். ரசிகர்களும் உங்களுக்கு நிறைவான ஆதரவு தருவார்கள். அரசியல் துறையினருக்கு சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். நினைத்தபடி பணவரவுகளைப் பெறலாம். லாபத்தையும் பெறுவார்கள். மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் தாமாகவே அமையும்.  ஆசிரியர்களின் பாராட்டைப் பெறலாம். தந்தையின் ஆதரவு கிட்டும். கார்த்திகை 2, 3, 4 பாதம்: இந்த மாதம் வழக்கு விவகாரங்களில் தாமதமான போக்கு காணப்படும். நிர்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் சரியாக முடிக்க வேண்டுமே என்ற கவலை உண்டாகும். சக ஊழியர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வரலாம். சிலர்  கலைத்துறையினருக்கு எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். ரோகிணி: இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பழி ஏற்பட வாய்ப்பு உண்டு. எதிர்பாராத செலவு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் வரலாம்.  பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை. ஆயுதங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. குடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் ஏற்படலாம் கவனம் தேவை. குடும்ப செலவுகள் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். மிருக சிரீஷம் 1, 2, பாதம்: இந்த மாதம் தேவையற்ற சில காரியங்களை செய்ய வேண்டி இருந்தாலும் அதன் மூலம் நன்மை உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். தேவையான உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும். விளையாட்டு போட்டிகளில் திறமை வெளிப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல் திறமை மூலம் கடின பணிகளையும் எளிதாக செய்து முடிப்பார்கள். தேவையான பண உதவி கிடைப்பதிலும், புதிய ஆர்டர்கள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படும். பரிகாரம்: ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்மரை வணங்குங்கள். நெய் தீபமேற்றி வழிபடுங்கள். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி சந்திராஷ்டம தினங்கள்: 24, 25 அதிர்ஷ்ட தினங்கள்: 17, 18, 19  கிரகநிலை: ராசியில் ராஹூ - களத்திர ஸ்தானத்தில் குரு (அதி. சா), சனி, கேது - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன் - விரைய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 09-04-2019 அன்று காலை 4.11 மணிக்கு புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 14-04-2019 அன்று பகல் 1.15 மணிக்கு சூரிய பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 16-04-2019 அன்று இரவு 8.32 மணிக்கு சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 27-04-2019 அன்று காலை 4.13 மணிக்கு புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: உடன் பிறந்தோருக்காக உழைக்கத் தயாராகும் மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் கொடுக்கல் வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும். வரவேண்டிய பணபாக்கிகள் வசூலாகும்.  குடும்பத்தில் உங்களது யோசனைகளை மற்றவர்கள் கேட்டும் அனுசரித்தும் செல்வார்கள். உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள். எதையும் ஆலோசனை செய்து முடிவெடுங்கள். தெய்வ நம்பிக்கைகளிலும் சடங்குகள் சமம்பிரதாயங்களில் நாட்டம் அதிகரிக்கும். தொழிலில் புதிய குத்தகைகளில் லாபம் கொட்டும். பால் வியாபாரத்தாலும், கால்நடைகளாலும் நன்மை உண்டாகும். நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள், உங்களுக்குச் சாதகமாக முடியும்.  வங்கிகளிடமிருந்து கடன் கிடைக்கும். நீர் வரத்து நன்றாக இருப்பதால் விவசாயத்தில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தூர தேசம் பயணம் எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு வேலை உத்தரவாதம் கிடைக்கவிருக்கிறது. வேலை வாய்ப்பினை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு தகுந்த வேலை கிடைக்கும். வேலை வாய்ப்பினை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு தகுந்த வேலை கிடைக்கும்.  பெண்கள் தாய் மற்றும் தாய் வழி உறவினர்களால் மூலம் பாசம் அன்பு பெறுவீர்கள்.  அழகிய பெரிய வீடும் மற்றும் விலை உயர்ந்த வாகனமும் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். செல்வாக்கு உயரும். சொன்ன சொல்லை செயலாக்கி காட்டுவீர்கள். கலைத்துறையினருக்கு தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இராது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம். பகைவர்கள் பணிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு. அரசியல் துறையினருக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். நட்பு வட்டாரத்தில் குதூகலம் ஏற்படும்.  மாணவர்களுக்கு தேர்வில் நல்ல தேர்ச்சி கிடைக்கும். கனவுகளில் நேரத்தை செலவிடாதீர்கள். புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவீர்கள். மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த மாதம் எல்லா கஷ்டங்களும் நீங்கும். பொருளாதார மேம்பாடு உண்டாகும். பணவரத்து சீராக இருக்கும். வேலை பளு காரணமாக நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்பட்டு நீங்கும். கை, கால் வலி, உடல் சோர்வு உண்டாகலாம். தொழில், வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். தொழில் தொடர்பாக அமைய வேண்டி இருக்கும். குடும்பத்தில் நீண்டநாட்களாக இருக்கும் பிரச்சனை தீரும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். திருவாதிரை: இந்த மாதம் அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் ஏற்பட்டு சரியாகும். கவுரவம் பாதிக்கும்படியான சூழ்நிலை வரலாம். தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். சகோதரர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. பிள்ளைகளால் டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்கள் மற்றவர்கள் நலனை அக்கறையுடன் கவனிப்பீர்கள். செலவுகள் அதிகரிக்கும். வீண் அலைச்சல் உண்டாகும். புனர்பூசம் 1, 2, 3 பாதம்: இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். இயந்திரங்கள், ஆயுதங்கள், நெருப்பு ஆகியவற்றை கையாளும் தொழிலாளர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் பிரச்சனைகள் அதனால் வாக்குவாதம் போன்றவை உண்டாகும். பெண்கள் பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்களில் சாதகமான பலன் பெறுவீர்கள். பரிகாரம்: ஸ்ரீ மஹாவிஷ்ணுவை பூஜித்து துளசி மாலை சாற்றி வழிபட்டு ஏழைகளுக்கு உதவி செய்து வாருங்கள்.  அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி சந்திராஷ்டம தினங்கள்: 1, 26, 27, 28 அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21கிரகநிலை: ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு (அதி. சா), சனி, கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய் - விரைய ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 09-04-2019 அன்று காலை 4.11 மணிக்கு புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 14-04-2019 அன்று பகல் 1.15 மணிக்கு சூரிய பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 16-04-2019 அன்று இரவு 8.32 மணிக்கு சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 27-04-2019 அன்று காலை 4.13 மணிக்கு புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: கடல் கடந்து பயணிக்க ஆசைப்படும் கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் கஷ்டங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் நடக்கும் நேரமிது. சுற்றியிருக்கும் சோம்பேறிகளிடமிருந்து உங்களை நீங்கள் விலக்கிக் கொள்ளுங்கள்.    குடும்பத்தில் எதைத் தொட்டாலும் வெற்றிக்கனியை ருசிப்பதை இந்த கிரக அமைப்பு காட்டுகிறது. குடும்பத்தில் மிகவும் நல்ல நிகழ்ச்சிகள் நடைபெற்று சந்தோஷ தருணங்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி தனவரவுகள் வந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகன்று நிம்மதி பிறக்கும். உங்கள் அந்தஸ்தும் சமுதாயத்தில் உயரும் தொழிலில் வியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள். உங்களின் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள். விவசாயிகளுக்கு நீர்வரத்து நன்றாக இருக்கும். விளை பொருட்களின் விற்பனை மிகவும் நன்றாகவே இருக்கும். உத்தியோகஸ்தர்கள் உங்களது நேர்மையான முன்னேற்றம் எந்த தடங்கல்கள் வந்தாலும் சாதிப்பீர்கள். உங்களது தெய்வ பலம் அத்தனை எதிர்ப்புகளையும் சமாளிப்பீர்கள். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.  வேலையில் குழப்பங்கள் அகன்று குதூகலத்தை தரக்கூடிய அமைப்பாகும். பெண்கள் பிள்ளைகள் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுப்பர். பிள்ளைகளுக்காகப் புதிய கடன்கள் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் வரலாம். அரசல் புரசலாக தங்களை கேலி பேசியவர்கள் கூட தங்களது தவறான போக்கை மாற்றிக் கொள்வர். பாகப் பிரிவினை விஷ்ய பஞ்சாயத்துகள் பைசல் ஆகும். பிதுரார்ஜித சொத்துக்கள் சிலருக்கு அமையும்.  கலைத்துறையினர் எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும்.  அரசியல் துறையினருக்கு பாராட்டு கிடைக்கும். மனகவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும். ஆன்மீக நாட்டமும், மன தைரியமும் உங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். தொழில் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்க கூடிய சூழ்நிலை காணப்படும்.  மாணவர்கள்  அடுத்தவர்களை நம்பி ஏமாற வேண்டாம். யாரையும் ஒப்பிட்டு பேச வேண்டாம். பெரியோர்களுக்கு மரியாதை கொடுங்கள். புனர் பூசம் 4ம் பாதம்: இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்து வெளியில் தங்க நேரலாம். வீண் அலைச்சல், வேலை பளு ஆகியவை அதிகரிக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது திறமையால் அலுவலக பணியை சிறப்பாக செய்வார்கள்.  பூசம்: இந்த மாதம் அடுத்தவரை பற்றிய விமர்சனங்கள், கிண்டல், கேலி பேச்சு போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. குடும்ப கஷ்டங்கள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். தடைபட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கி நன்றாக நடந்து முடியும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிக்கல் தீரும். உங்களது பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. மாணவர்கள் பாடங்களை படிப்பதற்கு கூடுதல் நேரம் ஒதுக்குவது நல்லது.  ஆயில்யம்: இந்த மாதம் எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகி சென்று விடுவார்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். போட்டிகள் குறையும். எதிர்பார்த்த ஆர்டர் வரும். பணவரத்து திருப்தி தரும். புத்தி கூர்மையுடன் செயல் படுவது எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவும். பெண்களுக்கு இழுபறியாக இருந்த பிரச்சனைகள் சாதகமான முடிவு பெறும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். பரிகாரம்: அம்பாள் வழிபாடு செய்து வாருங்கள். லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி சந்திராஷ்டம தினங்கள்: 2, 3, 29, 30 அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில் குரு (அதி. சா), சனி, கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 09-04-2019 அன்று காலை 4.11 மணிக்கு புதன் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 14-04-2019 அன்று பகல் 1.15 மணிக்கு சூரிய பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 16-04-2019 அன்று இரவு 8.32 மணிக்கு சுக்கிர பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 27-04-2019 அன்று காலை 4.13 மணிக்கு புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: தீராத பிரச்சினைகளுக்கெல்லாம் வழி கண்டறிய  முயற்சி செய்யும் சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் சில மாற்றங்கள் வந்து சேரும். அதிர்ஷ்ட வாய்ப்புகளும் வந்து சேரும் குடும்ப பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். குறையாக நின்ற பணிகள் இனி சிக்கலின்றி நடைபெறும். கொடுக்க வாங்கல்கள் ஒழுங்காக இருக்கும். செலவுக்கேற்ற வரவுகள் வந்து சேரும். கைவிட்டுப் போன பொருட்கள் உங்களிடம் வந்து சேரும்.  உலக வாழ்க்கை யோக வாழ்க்கை இரண்டிலும் சரி சமமான எண்ணங்கள் உண்டாகும். அருளாளர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கும். தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழிலில் அனுகூலமான செய்திகள் தேடி வரும். நீண்ட தூர பிரயாணங்களில் இருந்த சுணக்க நிலை மாறும். வழக்குகளில் வெற்றி கிட்டும். பெண்களால் பெருமை சேரும். உங்கள் விடாமுயற்சிக்கு வெற்றிகளை குவிப்பீர்கள். வியாபாரம் அபிவிருத்தி அடையும். கூட்டு வியாபாரம் செய்பவர்களிடத்தில் நம்பிக்கை அதிகரிக்கும்.  உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலைகளைத் தள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை, சில நேரங்களில் உருவாகலாம். அலுவலகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்று நடத்த நல்வாய்ப்பு உருவாகும். இதனால் மனதில் இருந்த காரணமில்லாத வருத்தங்களும், குழப்பங்களும் மறையும். உங்கள் பணிகளை விரைவில் செய்து முடிப்பீர்கள்.  பெண்கள் சக ஊழியர்கள் உங்களிடம் பகை மறந்து நட்பு பாராட்டுவார்கள். தந்தையின் செல்வாக்கால் வழக்கு வியாஜ்ஜியங்களிலிருந்து விடுபடுவீர்கள். பிள்ளைகள் வழியில் கவனம் தேவை. சாப்பிட நேரமில்லாமல் உழைக்க வேண்டி வரலாம். தக்க நேரத்தில் உணவருந்துங்கள். கலைத்துறையினருக்கு நற்பெயரும் கீர்த்தியும் வந்து சேரும். பொருளாதார வசதிகளும் பெருடவும் வாய்ப்பான காலமிது. சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கவும் பாக்கியம் ஏற்படும். அரசியல்துறையினர் வீண் அலைச்சலும், மன சோர்வும் உண்டாகும். மேலிடத்தின் செயல்கள் நிம்மதியை பாதிப்பதாக இருக்கும். வீண் செலவு, சிறு பிரச்சனைகள் உண்டாக நேரலாம். கவனமாக இருப்பது நல்லது.  மாணவர்கள் மாணவர்களுக்கு கேளிக்கையில் நாட்டம் அதிகரிக்கும்.  தந்தை, தாய் இவர்களின் பேச்சைக் கேட்டு நடப்பீர்கள். உங்களின் மனதை எல்லோரும் புரிந்து நடந்து கொள்வார்கள்.  மகம்: இந்த மாதம் கடன் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும். மேல் அதிகாரிகள் ஒத்துழைப்பும் இருக்கும். குடும்பத்தில் உங்களுக்கு எதிராக பிரச்சனையை உண்டாக்கியவர்கள் தானாகவே அடங்கி விடுவார்கள். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டும். ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும். பணவரத்து இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.  பூரம்: இந்த மாதம் வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மதிப்பு கூடும். எந்த ஒரு சின்ன வேலைக்காகவும் மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும் பயணங்களின் போது கவனம் தேவை. குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். கஷ்டமில்லாத சுக வாழ்க்கை உண்டாகும். ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்தினர்கள் வருகை இருக்கும். உத்திரம் 1ம் பாதம்: இந்த மாதம் . பொருளாதாரம் மேம்படும். தைரியம் உண்டாகும். தேவையற்ற மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். திருமண முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சாதகமான  பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. புதிய பதவிகள் தொடர்பான விஷயங்கள் தாமதப்பட்டாலும் பொறுப்புகள் அதிகரிக்கும். பரிகாரம்: தினமும் சிவன் கோவிலுக்குசென்று, தீபமேற்றி  பாலாபிஷேகத்திற்கு பால் வாங்கிக் கொடுங்கள். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள் சந்திராஷ்டம தினங்கள்: 4, 5, 6 அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25  கிரகநிலை: சுக ஸ்தானத்தில் குரு (அதி. சா), சனி, கேது - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 09-04-2019 அன்று காலை 4.11 மணிக்கு புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 14-04-2019 அன்று பகல் 1.15 மணிக்கு சூரிய பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 16-04-2019 அன்று இரவு 8.32 மணிக்கு சுக்கிர பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 27-04-2019 அன்று காலை 4.13 மணிக்கு புதன் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: கணிவான பேச்சால் அனைவரையும் கவரும் கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் சில நேரங்களில் யோசிக்காமல் பேசி வம்பில் மாட்டிக் கொள்ள நேரலாம். உங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.   குடும்ப நிலைகளில் இருந்து வந்த தேக்க நிலை மாறி உற்சாகம் பிறக்கும். எதிர்பார்த்தபடி பணம் மட்டும் கைக்கு வந்து செல்லும். ஆனால் சேமிப்பதற்கு முயற்சி செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும். எதிர்ப்புகளையும், தடைகளையும் தாண்டி செல்வீர்கள். பேசப்பட்டுக் கொண்டிருந்த சுபகாரியங்களில் சிக்கல்கள் விலகும். தொழிலில் வியாபாரிகளுக்கு லாபம் ஈட்டும் காலமிது.  பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பங்குதாரர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். அழகுநிலையம் வைத்திருப்போர், காஸ்மெட்டிக்ஸ் வியாபாரம் செய்வோர் மற்றும் ஆடை அணிகலன்கள் விற்பனை செய்வோருக்கு ஏற்ற காலமிது. தங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்ள சரியான சமயமிது. உத்தியோகஸ்தர்கள் உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். வருமானம் சீராக இருக்கும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். சக ஊழியர்களுடன் நல்ல நட்பு தொடர்வதால் உங்களின் வேலைகள் குறித்த காலத்திற்குள் நிறைவேறிவிடும். உங்களின் வேலைத் திறனைக் கூட்டிக்கொள்ள புதிய அலுவலகப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பெண்கள் ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். பிதுரார்ஜித சொத்து விஷயங்களில் ஒரு நல்ல முடிவுகள் வந்து சேரும். குடும்பச் செலவினங்கள் தாராளமாகும். பிள்ளைகள் வழியில் கடன்பெற வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம்.  கலைத் துறையினருக்கு ஓய்வில்லாமல் உழைக்க நேரும். அதற்கேற்றவாறு கூடுதல் வருமானமும் வரும். புதிய ஒப்பந்தங்கள் வரும். லாபம் பெருகும். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல்நிலையில் இருந்துவந்த சிரமங்கள் முற்றிலும் நீங்கும்.  அரசியல்துறையினர் உங்கள் மேல் போட்டி மற்றும் பொறாமை கொண்டவர்கள் ஒதுங்கி விடுவார்கள்.  அரசு விவகாரங்களில் உள்ள வேலைகளை திறம்படச் செய்வீர்கள். பாராட்டும், பதவியும் உண்டு. மாணவமணிகள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்குரிய வாய்ப்பு தெரியும்.  மிகச் சிலரே உங்களை புரிந்து கொள்வார்கள்.  நண்பர்களுடன் பழகும் போது கவனமாக இருக்கவும். உத்திரம் 2, 3, 4 பாதம்: இந்த மாதம் மற்றவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனை வராமல் தடுக்கலாம். சிறிய விஷயத்துக்கு கூட கோபம் வரலாம். கட்டுப்படுத்துவது நன்மை தரும். திடீர் பண தேவை உண்டாகலாம். தொழில், வியாபாரம், லாபகரமாக நடக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக பலன் தரும். எதிர்ப்புகள் அகலும். எல்லா நலன்களும் உண்டாகும். விரும்பியது கிடைக்க கூடுதல் முயற்சி தேவை. அஸ்தம்: இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகம் பற்றி யாருடனும் விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இருக்கும். சுதந்திரமான எண்ணம் ஏற்படும். சித்திரை 1, 2, பாதம்: இந்த மாதம் பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதப்படலாம். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு டென்ஷன் தருவதாக இருக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வதும் அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பதும் நல்லது. பயணம் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்கள் நட்பு உண்டாகும்.  பரிகாரம்: ஸ்ரீலக்ஷ்மி நாராயணரை வழிபட்டு துளசி செடிக்கு பூஜை செய்து வாருங்கள். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன் சந்திராஷ்டம தினங்கள்: 7, 8  அதிர்ஷ்ட தினங்கள்: 1, 26, 27, 28  கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு (அதி. சா), சனி, கேது - சுக ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 09-04-2019 அன்று காலை 4.11 மணிக்கு புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருன ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 14-04-2019 அன்று பகல் 1.15 மணிக்கு சூரிய பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 16-04-2019 அன்று இரவு 8.32 மணிக்கு சுக்கிர பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருன ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 27-04-2019 அன்று காலை 4.13 மணிக்கு புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: உழைப்பு ஒன்றே மூலதனம் என்று நம்பும் துலாம் ராசி அன்பர்களே, இந்த மாதம் உறுதியின்றிச் செய்த வேலைகளில் ஒரு பிடிப்பு ஏற்பட்டு அவை மளமளவென்று நடந்தேறும். வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்பவும் கை வந்து சேரும்.   குடும்பத்தில் உங்களின் எண்ணங்களும், செயல்களும் உங்களுக்கு வாழ்வில் உயர்ந்த இடத்தைப் பெற்றுத் தரும். உங்களின் உடல் ஆரோக்யத்தில் சிறு பாதிப்புகளை ஏற்படலாம்.  சமூகத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை உயரும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.  தொழிலில் புதிய வியாபார ஒப்பந்தங்கள் நடந்தேறும். புதிய கடனுக்கான முயற்சிகளை இக் கால கட்டத்தில் முடித்துக் கொள்ளுதல் நன்மை பயக்கும். தொழிற்சாலைகளில் பணி செய்வோருக்கு கடுமையாக  உழைக்க வேண்டிய காலகட்டமிது.  உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் உங்களை நம்பிப் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உடலில் இருந்த சோர்வும், மனதிலிருந்த குழப்பமும் மறையும். இதனால் உங்கள் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். சக ஊழியர்கள் உங்களிடம் பகை மறந்து நட்பு பாராட்டுவார்கள். இதனால் ஊதியம் உயரும். பெண்கள் நண்பர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்து மன நிறைவு அடைவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும். உங்கள் எதிரிகளின் பலம் குறையும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும் கலைத்துறையினர் பொறுமையுடன் செயல்பட வேண்டும். மறைமுக போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம். கவனமாகச் செயல்பட்டால் லாபம் பெறலாம். அயல்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும்.  அரசியல்வாதிகள் அரசியல் துறையினருக்கு அலைச்சல் இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்களுக்கு எதிரானவர்கள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம்.  மாணவமணிகளுக்கு புதியதாக கல்வி பயில மனம் ஆனந்தப்படும். நல்ல நட்பு வட்டாரம் கிடைக்கும்.  ஆசிரியர்கள் அறிவுரை வழங்கினால் ஏற்று அதை செயல்படுத்துவதன் மூலம் நற்பெயர் வாங்கலாம். சித்திரை 3, 4 பாதம்: இந்த மாதம் கோபத்தை கட்டுப் படுத்துவதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும். வீண் செலவை தடுக்க திட்டமிட்டு செயல் படுவது நல்லது. மாணவர்கள் சக மாணவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். மிகவும் பொறுமையுடனும், கவனமாகவும் பாடங்களை படிப்பது அவசியம். மாணவர்கள் ஆசிரியர்களிடம் நன்கு பழகி அவர்கள் நன் மதிப்பை பெறுவதுடன் பாடங்களில் இருக்கும் சந்தேகங்களையும் போக்கிக் கொள்வீர்கள்.  சுவாதி: இந்த மாதம் எதையும் சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களது செய்கை உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். எனவே நிதானமாக இருப்பது நல்லது. சொந்த காரியங்களில் தாமதம் ஏற்படலாம். சின்ன விஷயங்களால் மன நிறைவை அடைவீர்கள். எதிர்பாலினரிடம் பழகும் போது கவனம் தேவை. குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும் எதை பற்றியும் கவலைப்படாமல் நினைத்த காரியத்தை செய்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள்.   விசாகம் 1, 2, 3ம்  பாதம்: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். மருந்து, ரசாயனம் போன்ற தொழில்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான காரியங்களில் ஈடுபடும் போது அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவது காரிய வெற்றியை உண்டாக்கும்.  வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகளுக்காக பாடுபடுவீர்கள்.  பரிகாரம்: கோளறு பதிகம் படிப்பது. சிவன் கோவிலுக்கு இளநீர் அபிஷேகம் செய்து சிவபுராணம் சொல்லி வாருங்கள். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி சந்திராஷ்டம தினங்கள்: 9, 10 அதிர்ஷ்ட தினங்கள்: 2, 3, 29, 30  கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (அதி. சா), சனி, கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 09-04-2019 அன்று காலை 4.11 மணிக்கு புதன் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 14-04-2019 அன்று பகல் 1.15 மணிக்கு சூரிய பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருன ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 16-04-2019 அன்று இரவு 8.32 மணிக்கு சுக்கிர பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 27-04-2019 அன்று காலை 4.13 மணிக்கு புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருன ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: உடல் நிலையில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் வீண் பிரச்சனையால் மனக்குழப்பம் ஏற்படலாம். பயணங்களில் தடங்கல் ஏற்படலாம்.  குடும்பத்தில் தடைபட்டிருந்த சுபகாரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நடைபெறும். வீடு கட்டும் முயற்சியில் உள்ளவர்களுக்கு துரித கதியில் பணிகள் நடைபெறும். உறவுகள், நண்பர்கள் மத்தியில் இருந்த கருத்து வேற்றுமை அகலும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பிள்ளைகள் வழியில் பெருமை உண்டாகும்.   தொழிலில் தொழில்துறையாளர்களுக்கு மாதம் முழுக்கவே பணி இருக்கும். வேலையாட்கள் அமைதியாகப் போவார்கள். பேங்க் பணப் பரிமாற்ற முறையில் தங்குதடையின்றி நடைபெறும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.  உத்தியோகஸ்தர்கள் புதிய வழக்குகளை சந்திக்க நேரிடலாம்.  வேலை நிமித்தமாக வெளிநாட்டிற்கு பயணம் செல்ல வேண்டி வரலாம். சிறைத்துறையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உடலில் தோல் உபாதைகள் ஏற்பட்டு மறையும். பெண்கள்  பெண்களால் இருந்த தொல்லைகள் மறைந்து நிம்மதி பிறக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். அண்டை அயலாரின் ஆதரவு கிடைக்கும். குறுகிய பயணங்கள் அதிகரிக்கும்.  பயணங்களின் போது கவனமாக இருக்கவும். கலைத்துறையினருக்கு அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும்.     அரசியல் துறையினர் நல்ல பெயர் வாங்குவீர்கள். தேவையான பணம் வந்து குவியும். எதிரிகள் வகையில் சற்று கவனமுடன் செயல்படவும். அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும். மாணவர்களுக்கு கல்வி விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். புதிய நட்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். நல்ல பல குணாம்சங்கள் வந்து சேரும். கோர்ட் விஷயங்களில் சுமூகமான அணுகுமுறை இருக்கும். சிலருக்கு வழக்கில் வெற்றி அடைவதற்குண்டான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவார். விசாகம் 4ம் பாதம்: இந்த மாதம் எளிதில் மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பம் தொடர்பான கவலைகள் ஏற்படும். குடும்ப செலவை சமாளிக்க  பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் ஆன்மீக எண்ணங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழில் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதற்கு தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். ஆனால் போட்டிகள் பற்றிய கவலைகள் தோன்றும். சமாளிக்க முயல்வீர்கள். அனுஷம்: இந்த மாதம் வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பும்,  மரியாதையும் கூடும். அடுத்தவர்கள் செயல்கள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். எனவே  நிதானமாக செயல்படுவது நன்மையை தரும். எந்த பிரச்சனையையும் சமாளிக்கும் திறமை கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பெண்களுக்கு எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம்.  கேட்டை: இந்த மாதம் மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டி குறையும். எதையும் அவசரப்படாமல் நிதானமாக செய்வது நல்லது. மனதில் அமைதி உண்டாகும். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். மனதில் சஞ்சலம் ஏற்பட்டாலும் அதிர்ஷ்டம் உண்டாகும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் கவுரவம் கூடும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படலாம். பரிகாரம்: ஸ்ரீ துர்காஷ்டகம் படித்து ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபடுங்கள். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன் சந்திராஷ்டம தினங்கள்: 11, 12, அதிர்ஷ்ட தினங்கள்: 4,5, 6  கிரகநிலை: ராசியில் குரு (அதி. சா), சனி, கேது - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - சுக ஸ்தானத்தில் சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 09-04-2019 அன்று காலை 4.11 மணிக்கு புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 14-04-2019 அன்று பகல் 1.15 மணிக்கு சூரிய பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 16-04-2019 அன்று இரவு 8.32 மணிக்கு சுக்கிர பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 27-04-2019 அன்று காலை 4.13 மணிக்கு புதன் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: தேவைப்படும் வார்த்தைகளை  மட்டும் அனைவரிடமும் பேசும் தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் நீங்கள் பிடிவாத குணத்தை மட்டும் தளர்த்திக் கொண்டால் காரிய வெற்றி உங்களைத் தேடி வரும். மனக்கவலை நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். பணவரத்து கூடும்.  குடும்பத்தை சாராத ஒருவரால்  சிரமம் ஏற்பட்டு பின் மறையும். பதற்றத்தை தவிர்த்து நிதானத்தை கடைபிடியுங்கள். சிற்சில விரையங்கள் ஏற்பட்டாலும் அவை யாவுமே சுபச்செலவுகள் தான் என்பதை உணருங்கள். எனினும் பணவரவு திருப்திகரமாக இருக்கும்.  சுபகாரியங்கள் வெகு லகுவாக கூடி வரும். விலகி நின்ற உறவுகளும் உரிய நேரத்தில் கை கொடுப்பார்கள். புதிய வீட்டிற்கு செல்வது சிறிது தள்ளிப் போகலாம் தொழிலில் உங்கள் தன்னம்பிக்கை, திறமை திறன் அதிகரிக்கும். நுண்கலை, கட்டிடக்கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும். உடலைப் பற்றி தவறான எண்ணங்கள் தோன்றி மறையும். குடும்பத்தில் நல்ல சந்தோஷ தருணங்கள் ஏற்படும். சுபகாரியங்கள் வெகு லகுவாக கூடி வரும். விலகி நின்ற உறவுகளும் உரிய நேரத்தில் கை கொடுப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வுக்குரிய அறிவிப்பு வந்து சேரும். சிலருக்கு வெளியூருக்கு மாற்றலும் வரும்.  பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை, திறமை திறன் அதிகரிக்கும். நிலம், வீடு, வாகனங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலிருந்து உங்களை விடுவிப்பதற்கு வழிகள் வந்து சேரும். ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புகளும் வந்து சேரும்.  பெண்கள்  தடைபட்டிருந்த திருமண ஏற்பாடுகள் இனிதே நிறைவேறும். பிள்ளைகள் வழியில் சின்னச் சின்ன செலவுகள் நேரிடலாம். கணவன் மனைவி இடையே ஒற்றுமை தேவை.  சொத்து விஷயங்களில் சிக்கல்கள் ஏற்பட்டு மறையும்.  கலைத்துறையினருக்கு சாதகமான முன்னேற்றம் ஏற்படப்போவது உறுதி. நல்ல அறிமுகம் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் உண்டு.   நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம். அரசியல் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். எந்த முயற்சியையும் தயக்கமின்றிச் செய்யலாம். நட்பு வட்டம் பெருகும். எதிரிகள் விலகிச்செல்வார்கள். மாணவர்கள் படிப்பில் கவனச் சிதறல் வேண்டாம். கேளிக்கை போன்றவற்றில் கவனத்தைச் சிதறவிட வேண்டாம். பெரியோர் பேச்சை கேட்டு நடப்பது நல்லது. மூலம்: இந்த மாதம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தாலும் கொள்கைக்காக பாடுபடுவீர்கள். அதிகம் பேசுவதை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர் சொல்வதை நம்பும் முன் அதைப்பற்றி ஆலோசனை செய்வது நல்லது. குடும்பத்தினருடன் அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு எதிலும் மெத்தன போக்கு காணப்படும். வீண் அலைச்சல் ஏற்படலாம். கோபத்தை குறைப்பது நன்மை தரும்.  பிள்ளைகளிடம் அன்புடன் பேசுவது நன்மை தரும். பூராடம்: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஒரே குறிக்கோளுடன் இருப்பதை விட்டு வாடிக்கையாளர் தேவை அறிந்து செயல்படுவது முன்னேற்றத்திற்கு உதவும். பணவரத்து அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் துணிச்சலாக வேலைகளை செய்து வெற்றி பெறுவார்கள். பெண்களுக்கு வீண் மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. வாகனங்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது. உத்திராடம் 1ம் பாதம்: இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவு இருக்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். அதனால்  நன்மையும் ஏற்படும். பெண்களுக்கு புதிய நபர்கள் அறிமுகமும் அவர்களால்  உதவியும் கிடைக்கும். பயணம் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு காரணமாக அலைய வேண்டி இருக்கும்.  பரிகாரம்: தினமும் முன்னோர்கள் வழிபாடும், சிவாலயத்திற்குச் சென்று வருவதும் நன்று. அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி சந்திராஷ்டம தினங்கள்: 13, 14 அதிர்ஷ்ட தினங்கள்: 7, 8  கிரகநிலை: ராசியில் சந்திரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - தைரிய வீரிய  ஸ்தானத்தில் சூர்யன் - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக  ஸ்தானத்தில் ராஹூ - விரைய ஸ்தானத்தில் குரு (அதி. சா), சனி, கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 09-04-2019 அன்று காலை 4.11 மணிக்கு புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 14-04-2019 அன்று பகல் 1.15 மணிக்கு சூரிய பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 16-04-2019 அன்று இரவு 8.32 மணிக்கு சுக்கிர பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 27-04-2019 அன்று காலை 4.13 மணிக்கு புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: மிடுக்கான நடையை நடந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் மகர ராசி அன்பர்களே, இந்த மாதம்  மனதில் தைரியம் உண்டாகும். எதிலும் தயக்கமோ, பயமோ ஏற்படாது. தனது நேர்மையாலும் ஒழுக்கத்தாலும் அனைத்து காரியங்களையும் சாதிக்கும் திறன் ஏற்படும். குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. நீங்கள் பேசும் வார்த்தைகள் மற்றவர்களுக்கு அக்னியைப் போல சுடலாம். ஆனால் வார்த்தைகள் வழிகாட்டும் ஒளி நிறைந்திருக்கும. நல்ல செய்கைகளினால் மட்டுமே புகழை தக்க வைக்க முடியும். வீடு மனை வாகன வகைகளில் திருப்தியான நடைமுறைகள் இருக்கும். உங்களுக்கு துரோகம் செய்தவர்கள் வெட்கி தலைகுனிந்து திரும்பி போய்விடுவார்கள். கணவன் மனைவி ஒற்றுமை சிறக்கும். தொழிலில் பயணங்களால் பொருள்சேர்க்கை ஏற்படும். சகோதரத்தின் வெளிநாடு பயணம் இனிதே நடைபெறும். சுயசார்பும் தன்னிறைவும் பெறுவீர்கள். தைரியம் பளிச்சிடும். நேரத்திற்கு உணவருந்த முடியாமல் போகலாம். அதற்கு நேரத்தை ஒதுக்குங்கள். உத்தியோகஸ்தர்கள் வெளிநாட்டில் பணிபுரியும் அன்பர்களுக்கு அரசு அனுகூலம் உண்டு. கடன்களிலிருந்து விடுபடவும் உகந்த நேரமிது. வேலை மாற்றம் உறுதிபடுத்தப்படுகிறது.  ஊதிய உயர்வுடன் கூடிய பணி இட மாற்றம் உண்டு. பெண்கள் வாழ்வில் குதூகலம் பிறக்கும்.  இல்லத்தில் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கப் பெறும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களுக்கு சென்று வருவீர்கள். மக்கட் பேறு சிலருக்கு உண்டாகலாம்.  வேலைக்குச் செல்லும் பெண்கள் ஓய்வில்லாமல் உழைக்க வேண்டி வரலாம். கலைத் துறையினர் கலைத்துறையினருக்கு ஓரளவு முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். அதிலும் கலைத்துறையில் டெக்னிக்கல் சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் குவியும்.  அரசியல் துறையினர் விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.  மாணவர்கள் கேளிக்கைகளில் ஈடுபட மனம் ஏங்கும். எச்சரிக்கை தேவை.  அவமானங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. உத்திராடம் 2, 3, 4 பாதம்: இந்த மாதம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அதிகம் பேசுவதை தவிர்த்து செயலில் வேகம் காட்டுவது நல்லது. அடுத்தவர் கூறுவதை செய்யும் முன்பு அது பற்றி ஆலோசனை செய்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கூடுதல் கவனத்துடன் படிப்பீர்கள். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில்  சுபகாரியம் நடைபெறும். மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக  பொழுதை கழிப்பீர்கள்.  திருவோணம்: இந்த மாதம் பணத்தட்டுப் பாடு நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. மனதில் தைரியம் உண்டாகும். வீண்வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது. உடல்நிலையை அவ்வப்போது கவனித்துக் கொள்ளுங்கள்.முன்பு தடைபட்ட காரியங்கள் எவ்வித இடையூறுமின்றி நடந்து முடியும். அவிட்டம் 1,2 பாதம்: இந்த மாதம் தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள்  சாதூரியமான பேச்சின் மூலம் தங்களது வியாபாரத்தை லாபகரமாக செய்வார்கள். தேவையான பண உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக உழைப்பும் அதற்கேற்ற பலனும் உண்டாகும். எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நன்மை தரும். பெண்களுக்கு மனதெளிவு உண்டாகும். சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். கோபத்தை குறைப்பது நன்மை தரும். பரிகாரம்: ஸ்ரீ ஹயக்கீரீவரை வழிபடுவதும், விநாயகரை வழிபடுவதும் நன்று.  அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி சந்திராஷ்டம தினங்கள்: 15, 16 அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10  கிரகநிலை: ராசியில் புதன், சுக்ரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம  ஸ்தானத்தில் ராஹூ - லாப ஸ்தானத்தில் குரு (அதி. சா), சனி, கேது - விரைய ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 09-04-2019 அன்று காலை 4.11 மணிக்கு புதன் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 14-04-2019 அன்று பகல் 1.15 மணிக்கு சூரிய பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 16-04-2019 அன்று இரவு 8.32 மணிக்கு சுக்கிர பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 27-04-2019 அன்று காலை 4.13 மணிக்கு புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: செய்யும் காரியங்களில் திருப்தி அடையாத  கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் கொடுத்த வாக்கை காப்பாற்றி, நன்மதிப்பு பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம். உடற்சோர்வுகள் வரலாம்.    குடும்பத்தில் சிலர் மனம் விரும்பிய வீட்டிற்குக் குடி பெயர்வார்கள். தக்க சமயத்தில் உயர்ந்தவர்களின் நட்பைப் பெற்று கௌரவக் குறைவு ஏற்படாமல் காக்கப்படுவீர்கள். களவு போயிருந்த பொருட்கள் திரும்பவும் கிடைக்கும்.  தொழிலில் வியாபாரிகளுக்கு நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும். கூட்டு வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும். வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் வந்து சேரும். புதிய இட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழிற்சாலைகள் வைத்திருப்போருக்கு நல்ல லாபம் கிடைக்கும். பொதுவான விஷயங்களில் தலையிடுவோருக்கு உங்கள் கருத்துக்களை மற்றவர்கள் ஆமோதிப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு காத்திருந்த இடமாற்றம், பதவி உயர்வு தேடி வரும். மேன்மைகளை அடைவீர்கள். புதிய பணியில் சேர்ந்தவர்களுக்கு அமைதியான முறையில் மனச்சஞ்சலங்கள் விலகும். வெளிநாட்டு வேலை எதிர்பார்ப்பவர்களுக்கு அழைப்புகள் வந்து சேரும் காலமிது. எதிர்பாராத செலவுகள் நேரிடலாம்.  பெண்கள் சகோதர, சகோதரிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை வளரும். அவர்களுடன் சேர்ந்து இனிய பயணங்களைச் செய்வீர்கள். உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். உடல் நலம் சீராகும். வருமானம் சிறப்பாக இருக்கும். உங்களின் பெருந்தன்மையை அனைவரும் பாராட்டுவார்கள். கலைத்துறையினர் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் உண்டு. சோதனைகள் வெற்றியாக மாறும். உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களைக் கவரும். உல்லாசப் பயணங்களில் நாட்டம் செல்லும். அரசியல் துறையினருக்கு விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது. மாணவர்கள் மாணவகண்மணிகளுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். நினைத்த மதிப்பெண்கள் கிடைக்கும். அனைவருடனும் அனுசரித்து செல்வீர்கள். அவிட்டம் 3, 4 பாதம்: இந்த மாதம் குடும்பத்தில் கலகலப்பு உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். அக்கம்பக்கத்தினரிடமும் உறவினர்கள், நண்பர்களிடம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். பெண்களுக்கு எதிரிகளும் நண்பராவார்கள். சதயம்: இந்த மாதம் கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். மனதில் தைரியம் உண்டாகும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வீண்வாக்குவாதத்தை விட்டு நிதானமாக பேசுவது நன்மை தரும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த சகஜ நிலையில் மாற்றம் உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. பூரட்டாதி 1, 2, 3  பாதம்: இந்த மாதம் எதிர்பார்ப்புகளை குறைத்து இருப்பதை வைத்து முன்னேற முயற்சிப்பது நல்லது. எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவதுடன் புதிய முயற்சிகளை தள்ளிபோடுவதும் நல்லது. எல்லா நன்மைகளும் உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டு செய்வதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். கடுமையான முயற்சிகள் மேற்கொள்வது குறையும். பரிகாரம்: முன்னோர்களை வழிபடுவது நல்லது. காகத்திற்கு அன்னமிடுவதும் சிறந்தது.  அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, சனி சந்திராஷ்டம தினங்கள்: 17, 18, 19  அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12  கிரகநிலை: ராசியில் சூர்யன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் - சுக  ஸ்தானத்தில் ராஹூ - தொழில் ஸ்தானத்தில் குரு (அதி. சா), சனி, கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன் - விரைய ஸ்தனாத்தில் புதன், சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 09-04-2019 அன்று காலை 4.11 மணிக்கு புதன் பகவான் விரைய ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார். 14-04-2019 அன்று பகல் 1.15 மணிக்கு சூரிய பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 16-04-2019 அன்று இரவு 8.32 மணிக்கு சுக்கிர பகவான் விரைய ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார். 27-04-2019 அன்று காலை 4.13 மணிக்கு புதன் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: அதிகார தோரணையுடன் நடந்து கொள்ளும் மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்கள் பக்கமுள்ள நியாயம் ஓங்கும். பிள்ளைகள் வழியில் மட்டற்ற மகிழ்ச்சிகள் வந்து சேரும். வருமானத்தை உயர்த்தும். மன அமைதி கிடைக்கும். குடும்பத்தில் திடீர் செலவு உண்டாகலாம். எடுக்கும் காரியங்களில் தடைதாமதம் ஏற்பட்டு பின்பு சரியாகும். நீங்கள் எடுத்த வேலைகளை சரியான நேரத்தில் முடிக்கும் வல்லவர். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். உறவினர்களால் உற்சாகம் உண்டாகும். பயணத்தின் போது ஏற்பட்ட தடங்கல் நீங்கும். தொழிலில் வியாபாரங்கள்  கைகூடா விட்டாலும் அதற்கான விதையை இப்போது ஊன்ற  வேண்டிய காலகட்டமிது. பெற்றோர் நலம் கவனிக்கப்பட வேண்டிய காலமிது. மக்கள் நலனிற்கு எந்த குறைபாடும் இருக்காது. தொழில் வெற்றியடையும் கவலை வேண்டாம். உத்தியோகஸ்தர்கள் உத்தியோகஸ்தர்களுக்கு பார்த்துக் கொண்டிருக்கும் வேலையில் இடமாறுதல்கள் ஏற்படலாம். புதிய பொறுப்புகள் வந்து சேரும். கிடப்பில் போட்டிருந்த வேலைகளை செய்வீர்கள். ஊதிய விஷயங்களில் நல்ல மனநிலை இருக்கும். பெண்கள் திருமண பாக்கியம் கைகூடி வரும். நெடுங்காலமாக சந்தான பாக்கியம் கிட்டாதவர்களுக்கு வரப்பிரசாதம் கிடைக்கும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தார் விட்டுக் கொடுத்துப் போவார்கள். தந்தையாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். வருங்கால முன்னேற்றத்தைக் கருதி சில முயற்சிகளை எடுப்பீர்கள். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும் மாதமிது. எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். செல்வாக்கு உயர் பாடுபடுவீர்கள். அரசியல் துறையினருக்கு தங்கள் இருப்பை மேலிடத்தில் சொல்வதற்கு ஏற்ற காலகட்டம். புதிய உக்திகளைக் கையாண்டு அசத்துவீர்கள். முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாடு வாய்ப்புகள் வரலாம்.  மாணவர்களுக்கு பொன்னான காலகட்டமிது. எதிர்கால படிப்புகளுக்கான பணிகளை இப்போதே ஆரம்பிக்கலாம்.  மாணவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள். பூரட்டாதி 4ம் பாதம்: இந்த மாதம் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை  வெற்றிகரமாக செய்வீர்கள். ஆனால் தாமதமான பலனே கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள்  தாமதமாக வந்து சேரும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் மெத்தனமாக காணப்பட்டாலும் பணவரவு இருக்கும். புதிய வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி வியாபாரம் செய்வது நல்லது.  உத்திரட்டாதி: இந்த மாதம் தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக இல்லாவிட்டாலும் நிதானமாக இருக்கும்.  பணவரத்து வரும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் ஆலோசித்து செய்வது நன்மைதரும். மாணவர்கள் எதிர்கால கல்வி பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது. ரேவதி: இந்த மாதம் மேல் அதிகாரிகள் கூறுவதற்கு மாற்று கருத்துக்களை கூறாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன்  நிதானமாக பேசுவது குடும்ப அமைதியை தரும். நண்பர்கள், உறவினர்கள் விலகி செல்வது போல் இருக்கும். விட்டு பிடிப்பது நல்லது. பேச்சாற்றல் மூலம் தொழில் லாபம் கூடும். போட்டிகளை தவிர்க்க துணிச்சலான முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். பரிகாரம்: முருகன் வழிபாடு, அம்மன் வழிபாடு செய்து மாலை சாற்றி வழிபடுங்கள். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன் சந்திராஷ்டம தினங்கள்: 20, 21 அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14  

newstm.in

Trending News

Latest News

You May Like