1. Home
  2. ஜோதிடம்

இந்த வார ராசிபலன்-08-14-செப்டம்பர்- 2019

இந்த வார ராசிபலன்-08-14-செப்டம்பர்- 2019

newstm-weekly-astrology-08-14-sep-2019

இந்த வார ராசிபலன்-08-14-செப்டம்பர்- 2019

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

08.09.2019 முதல் 14. 09.2019 வரையிலான இந்த வார ராசிபலன்கள்..

மேஷம்: கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில்  ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய்,  சுக்ரன் -  ரண, ருண ஸ்தானத்தில்  புதன் -  அஷ்டம ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன், சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 9-Sep-19 இரவு 07:06 மணிக்கு சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 10-Sep-19 இரவு 09:57 மணிக்கு சுக்கிர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். 12-Sep-19 காலை 05:32 மணிக்கு சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 14-Sep-19மாலை 05:14 மணிக்கு  சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: எதையும் ஒருமுறைக்கு இரண்டுமுறை யோசித்து செயல்படும் மேஷ ராசி அன்பர்களே, நீங்கள் உலக அனுபவம் பெற்றவர். இந்த வாரம் குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்- உறவினர்களை  அனுசரித்துச் செல்வதன்மூலம் ஓரளவுக்கு அனுகூலமான பலனை அடைவீர்கள். திருமண சுபகாரிய முயற்சிகளை  மேற்கொள்வதை சில காலம் தள்ளிவைப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே எதிர்பார்த்த லாபத்தைப் பெறமுடியும்.  உற்பத்தியிலும் விற்பனையிலும் அதிக முயற்சிகளை மேற்கொண்டால் எந்த போட்டி பொறாமைகளையும்  எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு ஓரளவுக்கு முன்னேற்றமான பலன்கள் உண்டாகும் என்றாலும் வேலைப்பளுவும்,  பொறுப்புகளும் அதிகரிக்கும். எந்தப் பணி முடிப்பதற்கும் கடின உழைப்புக்களை மேற்கொள்ள நேரிடும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களால் மனசஞ்சலம் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்-  உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதால் ஓரளவுக்கு அனுகூலப்பலனைப் பெறுவீர்கள். பெண்களுக்கு உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதல்கள் உண்டாகாது. பணிபுரியும்  பெண்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முழுமூச்சுடன் செயல்பட்டால் நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். நண்பர்களால்  தேவையற்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.    பரிகாரம்:  மகாலட்சுமியை பூஜிக்க பணபிரச்சனை நீங்கும். மனநிம்மதி உண்டாகும்.ரிஷபம்: கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில்  ராஹூ - சுக ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய்,  சுக்ரன் -  பஞ்சம ஸ்தானத்தில் புதன் - களத்திர ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் சனி, கேது, சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 9-Sep-19 இரவு 07:06 மணிக்கு சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 10-Sep-19 இரவு 09:57 மணிக்கு சுக்கிர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 12-Sep-19 காலை 05:32 மணிக்கு சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 14-Sep-19மாலை 05:14 மணிக்கு  சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: எதையும் ஆராய்ந்து பார்க்கும் எண்ணம் கொண்ட ரிஷபம் ராசி அன்பர்களே, நீங்கள் முயற்சியில் வெற்றியை குறிக்கோளாக கொள்வீர்கள். இந்த வாரம் வீண்செலவு குறையும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி நிம்மதி உண்டாகும். வர வேண்டிய பணம் வந்துசேரும்.  சாமர்த்தியமான பேச்சினால் காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். அலைச்சல் ஏற்படலாம். அடிக்கடி கனவுகள்  வரக்கூடும். தொழில் வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள்  வருவது அதிகரிக்கும்.  உத்தியோகத்தில் இருபப்பவர்கள் குறித்த  நேரத்தில் பணிகளை முடித்து மனநிறைவு அடைவார்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சுமுகமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு  பேசி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பயணங்கள் மூலம்  அலைச்சல் உண்டாகலாம். மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது எதிர்பார்த்ததுபோல் எளிமையாக இல்லாமல் கடினமாக இருக்கலாம். கூடுதல்  முயற்சி வெற்றிக்கு உதவும். பரிகாரம்: உத்திரமேரூர் ஸ்ரீசுந்தர வரதராஜப் பெருமாளை தரிசித்து அர்ச்சனை செய்து வழிபட குழப்பம் நீங்கி மனநிம்மதி கிடைக்கும். சொத்து பிரச்சனை தீரும்.மிதுனம்:  கிரகநிலை: ராசியில் ராஹூ - தைரிய ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய்,  சுக்ரன் - சுக ஸ்தானத்தில் புதன் - ரண ருண ஸ்தானத்தில் குரு  - களத்திர ஸ்தானத்தில் சனி , கேது, சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 9-Sep-19 இரவு 07:06 மணிக்கு சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 10-Sep-19 இரவு 09:57 மணிக்கு சுக்கிர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 12-Sep-19 காலை 05:32 மணிக்கு சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 14-Sep-19மாலை 05:14 மணிக்கு  சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படும் மிதுன ராசி அன்பர்களே, இந்த வாரம் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக நடந்து முடியும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம்  உண்டாகும். தந்தை மூலம் செலவு உண்டாகலாம். வெளியூர்  பயணம் செல்ல நேரிடலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான  நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறைந்து வீண் அலைச்சலும் குறையும். ஆனால் பணியை பற்றிய   சிந்தனை அதிகரிக்கும். குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலைதூக்கி பின்னர் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும்.   பிள்ளைகளால் செலவும் ஏற்படும். உறவினர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். பெண்களுக்கு  தடைபட்ட காரியங்களில் தடைநீங்கி சாதகமாக நடக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். மாணவர்களுக்கு  கல்வியில் எதிர்பார்த்த  வெற்றி கிடைக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள். பரிகாரம்: துர்க்கை அம்மனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். வீண் அலைச்சல் குறையும்.கடகம்:  கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய்,  சுக்ரன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் புதன் -  பஞ்சம ஸ்தானத்தில் குரு - ரண ருண ஸ்தானத்தில் சனி , கேது, சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 9-Sep-19 இரவு 07:06 மணிக்கு சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 10-Sep-19 இரவு 09:57 மணிக்கு சுக்கிர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 12-Sep-19 காலை 05:32 மணிக்கு சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 14-Sep-19மாலை 05:14 மணிக்கு  சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: சிந்தனையை நேர்கோட்டில் வைத்து பார்க்கும்  கடக ராசி அன்பர்களே, இந்த வாரம் குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள் உண்டாகி ஒற்றுமைக் குறைவுகளை ஏற்படுத்தும். சுபகாரிய முயற்சிகள் சில  தடைகளுக்குப்பின் கைகூடும். பொருளாதாரநிலை ஓரளவுக்கு திருப்தியளிப்பதாக இருந்தாலும் வரவுக்குமீறிய  செலவுகளையும் எதிர்கொள்ள நேரிடும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச்செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று  கவனமுடன் செயல்படுவது நல்லது. கையிலிருக்கும் ஆர்டர்களைக்கூட முடித்துக்கொடுப்பதில் சிக்கல்கள் ஏற்படும்.  உத்தியோகஸ்தர்கள் தங்கள் உழைப்பிற்கான முழுப்பலனை அடையமுடியும். அதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி  அளிக்கும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கப்பெற்றாலும் சில நேரங்களில் அதிகநேரம் உழைக்க  வேண்டியிருக்கும். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை நீடிக்கும். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள், வாக்குவாதங்கள்  ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. உடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மறையும். அசையா  சொத்துகளாலும், வண்டி, வாகனங்களாலும் வீண்செலவுகள் ஏற்படும் பெண்கள் உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. புத்திரவழியில் சிறுசிறு மன சஞ்சலங்கள்  உண்டாகும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றமுடன் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெறமுடியும். அடிக்கடி ஞாபகமறதி  ஏற்படும் என்றாலும் பெரிய கெடுதி இல்லை.  பரிகாரம்: முருகனை வணங்கி வர காரிய தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.சிம்மம்:  கிரகநிலை: ராசியில்  சூர்யன், செவ்வாய், சுக்ரன் -  குடும்ப ஸ்தானத்தில் புதன் -  சுக  ஸ்தானத்தில்  குரு -  பஞ்சம ஸ்தானத்தில்  சனி , கேது, சந்திரன் - லாப ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.  கிரகமாற்றங்கள்: 9-Sep-19 இரவு 07:06 மணிக்கு சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். 10-Sep-19 இரவு 09:57 மணிக்கு சுக்கிர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். 12-Sep-19 காலை 05:32 மணிக்கு சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 14-Sep-19மாலை 05:14 மணிக்கு  சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: அன்பைக் காட்டி அனைவரையும் வேலை வாங்கும்  சிம்ம ராசி அன்பர்களே, இந்த வாரம் குடும்ப வாழ்வில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் அனைவரையும் அனுசரித்துச் செல்வதினால் ஒற்றுமை  குறையாது. பொருளாதாரநிலை சிறப்பாக இருந்தாலும் வரவுக்குமீறிய செலவுகள் ஏற்படும். முயற்சிகளில் சில  தடைகளுக்குப்பின் நற்பலன் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன்  செயல்படுவது நல்லது. எதிர்பார்க்கும் லாபங்களைப்பெற இயலாது.  உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் தாமதப்பட்டாலும், கௌரவமான பதவிகளைப் பெறமுடியும். உயரதிகாரிகளின் ஆதரவும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் உங்களின் வேலைப்பளுவைக் குறைக்கும். குடும்பத்தில் பணவரவுகளில் தடைகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் வீண்செலவுகளைக் குறைப்பது நல்லது.  பிறருக்குக் கொடுக்கும் பணத்தையும் எளிதில் வசூலிக்கமுடியாத நிலைகள் ஏற்படக்கூடும். திருமண சுபகாரிய  முயற்சிகளைச் சற்றுத் தள்ளிவைப்பது நல்லது. புத்திரவழியில் சுபச்செலவுகள் ஏற்படக்கூடும். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு சற்றே அதிகரிக்கும்.பெண்கள் எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்துமுடிக்க  முடியும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, தூக்கமின்மை, மனஉளைச்சல்கள் ஏற்படக்கூடும். நெருங்கியவர்களை  அனுசரித்துச்செல்வது நல்லது. மாணவர்கள் சற்றுக்கூடுதல் கவனம்செலுத்திப் படித்தால் எதிர்பார்க்கும் மதிப்பெண்களைப் பெறமுடியும். விளையாட்டுப்போட்டிகளில் பல பரிசுகளைத் தட்டிச்செல்வீர்கள்.  பரிகாரம்: நவக்கிரகத்தில் சந்திரனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த பணவரத்து இருக்கும்கன்னி:   கிரகநிலை: ராசியில் புதன் - தைரிய ஸ்தானத்தில்  குரு -  சுக  ஸ்தானத்தில்  சனி , கேது, சந்திரன் - தொழில் ஸ்தானத்தில்   ராஹூ - அயன சயன போக ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய்,  சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 9-Sep-19 இரவு 07:06 மணிக்கு சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 10-Sep-19 இரவு 09:57 மணிக்கு சுக்கிர பகவான் ராசிக்கு மாறுகிறார். 12-Sep-19 காலை 05:32 மணிக்கு சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். 14-Sep-19மாலை 05:14 மணிக்கு  சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: மற்றவர்களின் துயர் துடைக்க எண்ணும் கன்னி ராசி அன்பர்களே, இந்த வாரம் நினைத்த காரியத்தை நிறைவேற்றுவதில் வேகம் காட்டுவீர்கள். சகோதரர் வழியில்  நன்மை உண்டாகும். எதையும்  மனோ தைரியத்துடன் செய்து முடிப்பீர்கள். வீடு தொடர்பான பணிகள் விரைந்து நடக்கும். அதே வேலையில்  நெருக்கடியான  நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் தாமதப்படும்.  தொழில்கள் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களால் லாபம் உண்டாகும். எதிர்பார்த்த  நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம் பற்றி ஆலோசிப்பார்கள். குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை மாறி  மகிழ்ச்சியான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையில்  அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பார்கள்.  உறவினர்களுடன்  சுமுக உறவு  இருந்தாலும் அவர்களால் கிடைக்கும் உதவி தாமதப்படும். பெண்கள் எதிலும்  மிகவும் கவனமாக ஈடுபடுவது நன்மை தரும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. மாணவர்களுக்கு பாடங்களில் சந்தேகம் கேட்பதற்கு தயக்கம் காட்டாமல் இருப்பது வெற்றிக்கு உதவும்.  வாகனங்களில்  செல்லும் போது கவனம் தேவை. பரிகாரம்: பெருமாளை தரிசித்து அர்ச்சனை செய்ய எல்லா நலனும் உண்டாகும். துலாம்:  கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  குரு - தைரிய ஸ்தானத்தில்  சனி , கேது, சந்திரன் -  பாக்கிய ஸ்தானத்தில்  ராஹூ - லாப ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய், சுக்ரன் -  அயன, சயன, போக ஸ்தானத்தில் புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 9-Sep-19 இரவு 07:06 மணிக்கு சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 10-Sep-19 இரவு 09:57 மணிக்கு சுக்கிர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 12-Sep-19 காலை 05:32 மணிக்கு சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 14-Sep-19மாலை 05:14 மணிக்கு  சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: அடுத்தவரை சந்தோஷமாக வைத்துக்கொள்ள நினைக்கும் துலா ராசி அன்பர்களே, இந்த வாரம் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண் கவலை நீங்கும். தடைபட்ட  காரியங்களில் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்த தடைகள் விலகும்.  போட்டிகள் குறையும்,  புதிய ஆர்டர்கள்  பெறுவதற்கான தடைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான  அலைச்சல் குறையும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் இணக்கமான  போக்கு காணப்படும்.  கணவன் மனைவிக்கிடையில் இருந்த   மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின்  எதிர்கால நலன் குறித்து கவலை உண்டாகலாம். பெண்களுக்கு வீண்செலவு குறையும். பயணங்கள் செல்ல நேரிடலாம். திறமையான செயல்கள் மூலம் எடுத்த காரியம்  சாதகமாக நடந்து முடியும். மாணவர்களுக்கு கல்வியில்  முன்னேற்றத்திற்கு  இருந்த  முட்டுக் கட்டைகள் விலகும். சக மாணவர்களின்  ஒத்துழைப்பு இருக்கும். பரிகாரம்: அம்மனை வணங்கி வர குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்விருச்சிகம்:  கிரகநிலை: ராசியில்  குரு - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சனி , கேது, சந்திரன் - அஷ்டம  ஸ்தானத்தில் ராஹு- தொழில் ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய்,  சுக்ரன் - லாப ஸ்தானத்தில் புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  கிரகமாற்றங்கள்: 9-Sep-19 இரவு 07:06 மணிக்கு சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 10-Sep-19 இரவு 09:57 மணிக்கு சுக்கிர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 12-Sep-19 காலை 05:32 மணிக்கு சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 14-Sep-19மாலை 05:14 மணிக்கு  சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: தனது செயல்களினால் எல்லோரையும் ஆச்சிரியபடவைக்கும் விருச்சிக  ராசி அன்பர்களே, இந்த வாரம் எதிலும் அவசரப்படாமல் நிதானமாக முடிவு எடுப்பது நன்மை தரும்.  உடல் ஆரோக்கியம்  ஏற்படும்.  மனதில் இருந்த  குழப்பம், கவலை நீங்கும். தைரியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் அதிகரிக்கும்.  புதிய ஆர்டர்கள் பெறுவதற்கு  கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தயக்கத்துடன் தங்களது பணிகளை செய்ய வேண்டி இருக்கும். எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த  கருத்து வேற்றுமை நீங்கும்.  பிள்ளைகளிடம் கவனமாக  பேசுவது  நல்லது.  உறவினர்கள் வருகை இருக்கும். சொத்துக்கள் வாங்க எடுக்கும்  முயற்சிகள் தாமதப்படும். பெண்களுக்கு  எடுத்த முடிவை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள்  தாமதப்படும். மாணவர்கள்  கல்வியில் வெற்றி பெற மிகவும் கவனமாக பாடங்களை படிப்பீர்கள். மனகுழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை மேலோங்கும்.  பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து வணங்கி வர உடல் ஆரோக்கியம் பெறும். குடும்ப பிரச்சனை தீரும். தனுசு:  கிரகநிலை: ராசியில்  சனி , கேது, சந்திரன் - களத்திர ஸ்தானத்தில்  ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய், சுக்ரன் -  தொழில் ஸ்தானத்தில் புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு  என கிரகங்கள் வலம் வருகின்றன.  கிரகமாற்றங்கள்: 9-Sep-19 இரவு 07:06 மணிக்கு சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். 10-Sep-19 இரவு 09:57 மணிக்கு சுக்கிர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 12-Sep-19 காலை 05:32 மணிக்கு சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 14-Sep-19மாலை 05:14 மணிக்கு  சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: ஒரு செயலை செய்ய யாரையும் எதிர்பார்க்காமல் தாமாகவே முன்வருவதற்கு செய்ய நினைக்கும் தனுசு ராசி அன்பர்களே, இந்த வாரம் பணப் பற்றாக்குறை நீங்கும். மற்றவர்களால் குற்றம் சாட்டப்படும் சூழ்நிலை உருவாகலாம் கவனம் தேவை.  எதிர்பாராத செலவு உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். கடும் முயற்சிக்குப் பின் வெற்றி கிடைக்கும். வீடு, வாகனம் போன்றவற்றை புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். மனோ தைரியம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறும். புதிய ஆர்டர்கள்  வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக பணிகளை  செய்து பாராட்டு பெறுவார்கள். சிலருக்கு பதவி உயர்வும்  கிடைக்கக்கூடும்.  இடமாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் கஷ்டம்,  சுகம் இரண்டும் ஏற்படலாம். எல்லாரும் நட்புடன் பழகுவார்கள். பெண்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நடந்து முடியும். மாணவர்கள் அவசரப்படாமல் நிதானமாக மனதில் பதியும்படியாக பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற  உதவும். திறமை வெளிப்படும்.  பரிகாரம்: மஹாலக்ஷ்மி ஆலயத்திற்கு சென்று தீபம் ஏற்றி வழிபட துன்பங்கள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்மகரம்:  கிரகநிலை: ரண, ருண ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய்,  சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் புதன்-  லாப ஸ்தானத்தில்  குரு - அயன சயன போக ஸ்தானத்தில் சனி , கேது,  சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  கிரகமாற்றங்கள்: 9-Sep-19 இரவு 07:06 மணிக்கு சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார். 10-Sep-19 இரவு 09:57 மணிக்கு சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 12-Sep-19 காலை 05:32 மணிக்கு சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். 14-Sep-19மாலை 05:14 மணிக்கு  சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: ஒவ்வொன்றும் புதிதாக யோசிக்கும்  மகர ராசி அன்பர்களே, இந்த வாரம் குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களால் ஒற்றுமைக்குறைவுகள் உண்டாகும். கணவன்-மனைவியிடையே கருத்து  வேறுபாடுகளும், புத்திரர்களால் மனநிம்மதியற்ற நிலையும் உண்டாகும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும்  என்பதால் குடும்பத்தேவைகளைப் பூர்த்திசெய்ய கடன் வாங்க நேரிடும். முடிந்தவரை ஆடம்பரச் செலவுகளைக்  குறைப்பது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நெருக்கடிகளும், போட்டிகளும் ஏற்படும் என்றாலும் எதையும் சமாளிக்கக்கூடிய  ஆற்றலும் உண்டாகும். வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தமுடியாத சூழ்நிலைகளும் ஏற்படும். கூட்டாளிகளின்  ஒற்றுமையற்ற செயல்பாட்டால் அபிவிருத்தி குறையும் என்பதால் முடிந்தவரை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் எடுக்கும் பணிகளை சரிவரச்செய்து முடிக்க முடியும்.  எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தடை தாமதங்களுக்குப்பின் கிடைக்கும். உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து  கொள்வதன்மூலம் வீண் பிரச்சினைகள் உண்டாவதைத் தவிர்க்க முடியும். குடும்பத்தில் திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். கணவன்-மனைவியிடையே  ஒற்றுமை சுமாராக இருக்கும். உற்றார்-உறவினர்களை அனுசரித்துச்செல்ல வேண்டிவரும். எதிர்பார்க்கும் பணவரவுகளும்  தாமதப்படுவதால் குடும்பத்தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தடைகள் நிலவும். புத்திரவழியில் வீண்கவலைகள்  ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்கு உயரதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்து மனநிம்மதி குறையும். கடன் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு குறையும். ஞாபகமறதி, மந்த நிலை உண்டாகும். படிப்பில் கவனம் குறைவதால்  எதிர்பார்க்கும் மதிப்பெண்களைப் பெறமுடியாது.  பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய வெற்றி கிடைக்கும்.கும்பம்:  கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ - களத்திர ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய், சுக்ரன் -  அஷ்டம ஸ்தானத்தில் புதன்- தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சனி , கேது, சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  கிரகமாற்றங்கள்: 9-Sep-19 இரவு 07:06 மணிக்கு சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 10-Sep-19 இரவு 09:57 மணிக்கு சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 12-Sep-19 காலை 05:32 மணிக்கு சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார். 14-Sep-19 மாலை 05:14 மணிக்கு  சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: எதற்கும் தயங்காமல் இருக்கும் கும்ப ராசி அன்பர்களே, இந்த வாரம் எதிலும் லாபம் கிடைக்கும். காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண்கவலை நீங்கும்.  ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரம் விருத்தியடையும்.  தடைபட்ட நிதி உதவி கிடைக்கும்.  ஏற்கனவே  வரவேண்டி இருந்து  வராமல்  நின்ற ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் வேலைபளு வீண் அலைச்சல் குறையும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். புதிய வீடு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சிலர் பழைய  வீட்டை புதுப்பிப்பார்கள். வாகனம் மூலம் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகள் சந்தோஷமாக காணப்படுவார்கள். குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடலாம். குடும்பம் சார்ந்த விஷயங்களில்  கலந்துரையாடும் போது வார்த்தைகளை கோர்த்து பேசுவது நன்மை தரும். பெண்களுக்கு  மனக்குழப்பம் தீரும். தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள்  கிடைக்கும். மாணவர்களுக்கு  மிக கவனமாக பாடங்களை படித்து கூடுதல் மதிப் பெண் பெற முயற்சி செய்வீர்கள்.  தேவையான  உதவிகள் கிடைக்கும். பரிகாரம்: பெருமாளை வணங்க வறுமை நீங்கி வாழ்வு வளம் பெறும். பகை விலகும். எதிர்ப்புகள் அகலும்.மீனம்:  கிரகநிலை: சுக ஸ்தானத்தில் ராஹூ - ரண ருண ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய், சுக்ரன்  -  களத்திர ஸ்தானத்தில் புதன் -  பாக்கிய ஸ்தானத்தில்  குரு - தொழில்  ஸ்தானத்தில் சனி , கேது, சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  கிரகமாற்றங்கள்: 9-Sep-19 இரவு 07:06 மணிக்கு சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 10-Sep-19 இரவு 09:57 மணிக்கு சுக்கிர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 12-Sep-19 காலை 05:32 மணிக்கு சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 14-Sep-19மாலை 05:14 மணிக்கு  சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார். பலன்: மனதிற்கு தொன்றுவதை செய்யும் மீன ராசி அன்பர்களே, இந்த வாரம் குடும்ப வாழ்வில் குதூகலமும் பூரிப்பும் உண்டாகும். கடந்தகால சோதனைகள் விலகி மகிழ்ச்சி ஏற்படும். தடைப்பட்ட  திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். பொருளாதாரநிலையும் மிகச்சிறப்பாக அமைவதால் பொன், பொருள்,  ஆடை, ஆபரணம் சேரும். தொழில், வியாபாரத்தில் இதுநாள்வரை நிலவிய நலிவுகள் மறைந்து ஏற்றமான பலனை ஏற்படுத்தும். மறைமுக  எதிர்ப்புகளும் போட்டி பொறாமைகளும் விலகும். கூட்டுத்தொழிலிலும் கூட்டாளிகளின் ஒற்றுமையாக செயல்பாட்டால்  பெரிய முதலீடுகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி உண்டாகும். எடுக்கும்  முயற்சிகளில் வெற்றி கிட்டும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும், உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புக்களும் எந்தக் காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கக்கூடிய ஆற்றலைக் கொடுக்கும். குடும்பத்தில் திருமணவயதை அடைந்தவர்களுக்கு சிறப்பான மணவாழ்க்கை அமையும். சிலர் நினைத்தவரையே  கைப்பிடிப்பர். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். பெண்கள் உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்பாகச்  செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்ட தடைகள் விலகி ஈடுபாடு அதிகரிக்கும். படிப்புக்காக எடுக்கும் முயற்சிகளில்  சாதகமான பலனைப் பெறுவீர்கள். பரிகாரம்: குலதெய்வத்தை பூஜித்து வணங்க குடும்ப பிரச்சனை தீரும். கடன் கட்டுக்குள் இருக்கும்.  

newstm.in

Trending News

Latest News

You May Like