1. Home
  2. ஜோதிடம்

இந்த வார ராசிபலன்-15-21-செப்டம்பர்- 2019

இந்த வார ராசிபலன்-15-21-செப்டம்பர்- 2019

newstm-weekly-astrology-15-21-sep-2019

இந்த வார ராசிபலன்-15-21-செப்டம்பர்- 2019

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

15.09.2019 முதல் 21. 09.2019 வரையிலான இந்த வார ராசிபலன்கள்..

மேஷம்:  கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில்  ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் -  ரண, ருண ஸ்தானத்தில் புதன், சுக்ரன் -  அஷ்டம ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி , கேது - அயன, சயன, போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 17-Sep-19 காலை 04:29 மணிக்கு சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார். 19-Sep-19 பகல்  01:46 மணிக்கு சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். 21-Sep-19 இரவு 08:35 மணிக்கு சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: என்றும் சுறுசுறுப்புடன் செயல்படும் மேஷ ராசி அன்பர்களே, இந்த வாரம் பெரும் முதலீடுகளைத் தவிர்க்கவேண்டும். வீடு, மனை விருத்தி செய்யும் திட்டங்களைத் தள்ளிவைக்க வேண்டும்.  கடன்பட நேரிடும். அந்த கடனே பெரும் சிரமத்தைக் கொடுக்கும் எனவே நிதிநிலைகளில் அதிக கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் சுமாரான முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த கடன்வசதி கிடைப்பதில் சாதகமான பலன்  இருக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் சற்று கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது.  குடும்பத்தில் நிம்மதியும், சுகமும் உண்டாகும். மனவருத்ததில் விட்டு சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.  கணவன், மனைவிக் கிடையில் சுமுகமான உறவு இருக்கும். பெண்களுக்கு மறைமுகமாக உங்களை குறை சொல்லியவர்கள் தங்கள் தவறை உணர்வார்கள். காரிய அனுகூலத்தால் மனமகிழ்ச்சி ஏற்படும்.  மாணவர்களுக்கு கல்வியில் திருப்தியான நிலை காணப்படும். வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை.  பரிகாரம்: நவகிரகத்தில் சந்திரனை பூஜிக்க வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன்,சனிரிஷபம்:  கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில்  ராஹூ - சுக ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய் -  பஞ்சம ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் சனி, கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 17-Sep-19 காலை 04:29 மணிக்கு சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 19-Sep-19 பகல்  01:46 மணிக்கு சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார். 21-Sep-19 இரவு 08:35 மணிக்கு சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: என்றும் துடிப்புடன் செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்கள் உழைப்புக்கேற்ற லாபத்தைப் பெறுவீர்கள். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் நல்லமுறையில் முடியும். படித்த  பிள்ளைகளுக்கு தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு கிடைக்கும். உடல்நிலையில் இருந்துவந்த தொந்தரவுகள் நீங்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கோபத்தை குறைத்து  வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன்  மூலம் முன்னேற்றம் காண முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பதவி உயர்வு நிலுவை தொகை வருவதில்  தாமதம் ஏற்படும்.  குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கும். கணவன், மனைவிக்கிடையே  வாக்குவாதங்கள்  உண்டாகலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுபிடிப்பது நல்லது. பெண்கள் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மைதரும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பது பற்றிய மனசஞ்சலம்  ஏற்பட்டு நீங்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண கடுமையாக படிக்க வேண்டி இருக்கும். பரிகாரம்: முருகனை வணங்கி வர எல்லா பிரச்சனைகளும் தீரும். செல்வ செழிப்பும், ஆரோக்கியமும் உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி.மிதுனம்:  கிரகநிலை: ராசியில் ராஹூ - தைரிய ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் - சுக ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன் - ரண, ருண ஸ்தானத்தில் குரு  - களத்திர ஸ்தானத்தில் சனி , கேது -  தொழில் ஸ்தானத்தில்- சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 17-Sep-19 காலை 04:29 மணிக்கு சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 19-Sep-19 பகல்  01:46 மணிக்கு சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 21-Sep-19 இரவு 08:35 மணிக்கு சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார். பலன்: யாரிடமும் சகஜமாக பேசும் மிதுன ராசி அன்பர்களே, இந்த வாரம் இளைஞர்கள் மிகவும் எச்சரிக்கையாக வாகனங்களைக் கையாள வேண்டும். வேகத்தை விவேகத்துடன்  செயல்படுத்தினால் விபத்தைத் தடுக்கலாம். பெற்றோர் பிள்ளைகளுக்காகத் தேடும் வரன்கள் நல்லபடியாக அமையும்.  தொழிலாளர்கள் ஒற்றுமையால் தொழிலதிபர்களின் லாபம் கூடும். உற்பத்தி பெருகும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.  வியாபாரிகள் திட்டமிட்டபடி நல்ல லாபம் கிடைக்கும். உத்யோகஸ்தர்கள் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். பணிச்சுமை கூடியபோதும் அதிகாரிகளின் பாராட்டு  தெம்பைக் கொடுக்கும். கடிதத் தொடர்பில் நல்ல தகவல்கள் வந்துசேரும்.  குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமையில் குறைவு வராது. உறவினர்கள் வருகையினால் குடும்பச் செலவுகள்  கூடும். பெண்களுக்கு கடன் தொல்லைகள் நீங்கும். சொத்துப் பிரச்சினையும் தீரும். பிரிந்துசென்ற பிள்ளைகள் வந்துசேர்வார்கள். மாணவர்கள் கல்வியில் உயர்ந்து பெற்றோரின் பாராட்டைப் பெறுவார்கள்.  பரிகாரம்: சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்வதால் பிணிகள் நீங்கும். காரிய தடை, எதிர்ப்புகள் அகலும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளிகடகம்:   கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய் - தைரிய, வீர்ய ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன் -  பஞ்சம ஸ்தானத்தில் குரு - ரண, ருண ஸ்தானத்தில் சனி , கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 17-Sep-19 காலை 04:29 மணிக்கு சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 19-Sep-19 பகல்  01:46 மணிக்கு சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 21-Sep-19 இரவு 08:35 மணிக்கு சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: யாரையும் பகைக்காமல் நண்பனாக பாவிக்கும் கடக  ராசி அன்பர்களே, இந்த வாரம் புதிய வீடுகட்டும் திட்டம் நிறைவேறும். பிரிந்து சென்ற தம்பதியர் ஒன்றுகூடுவார்கள். நீண்ட நாட்களாக குழந்தை  பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். ஆலயத் திருப்பணிகள் தடையின்றி நடக்கும்  தொழிலதிபர்கள் எதிர்பார்த்தபடி புதிய தொழில் தொடங்குவதோடு, புதிய ஒப்பந்தத்தையும் பெறுவார்கள். வியாபாரிகளின் லாபத்துக்குக் குறைவு வராது. சிலர் வீடு மாற்றம் செய்வார்கள். உத்யோகஸ்தர்கள் கேட்ட மாறுதலை அடையலாம். மேலதிகாரிகளின் பாராட்டையும் பெறுவார்கள்.  குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமைக்குக் குறைவிருக்காது. உறவினர்கள் வருகையால் எதிர்பாராத செலவுகள்  இருக்கும். இளைஞர்கள் வேலை தேடும் முயற்சியில் முன்னேற்றம் உண்டு. பெண்கள் உணவுப்பழக்கத்தில் எச்சரிக்கையாக இருந்தால் பின்னடைவைத் தவிர்க்கலாம். பிள்ளைகளின் படிப்பில்  இருந்த மந்தநிலை மாறும். நீண்ட நாட்களாக வரன் தேடியவர்களுக்கு நல்ல வரன்கள் வந்துசேரும். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று கல்வி நிறுவனத்தாரின் பாராட்டைப் பெறுவார்கள். பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்கி வர வீண் அலைச்சல் குறையும். காரிய தடை நீங்கும். கல்வி அறிவு அதிகரிக்கும்.  அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளிசிம்மம்:  கிரகநிலை: ராசியில்  சூர்யன், செவ்வாய் -  குடும்ப ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன்- சுக  ஸ்தானத்தில்  குரு -  பஞ்சம ஸ்தானத்தில்  சனி , கேது - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.  கிரகமாற்றங்கள்: 17-Sep-19 காலை 04:29 மணிக்கு சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 19-Sep-19 பகல்  01:46 மணிக்கு சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 21-Sep-19 இரவு 08:35 மணிக்கு சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: அனைவரிடமும் பாசமாக இருக்கும் சிம்ம ராசி அன்பர்களே, இந்த வாரம் புதிதாகத் திருமணமான தம்பதியர் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள். அவர்களுக்குள் இருந்துவந்த கருத்து  வேறுபாடுகள் மாறும். மனதில் உற்சாகம் பெருகும். உதவி செய்யாத சகோதரர்கள் முன்வந்து உதவுவார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்குக் கடந்த காலங்களில் இருந்து வந்த தடைகள், போட்டிகள், முன்னேற்றமற்ற  நிலை போன்ற யாவும் விலகி நல்ல மேன்மை உண்டாகும். லாபத்தையும் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்குக் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் தக்கசமயத்தில் அமைந்து அதிகாரிகளின்  பாராட்டுதல்களைப் பெறுவீர்கள்.  குடும்பத்தில் பொருளாதாரநிலை சிறப்பாக அமைவதால் குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடை  ஆபரணம் சேரும். கடன்கள் அனைத்தும் குறையும்.  பெண்கள் உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். கணவர் மற்றும் புத்திரவழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள்  உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. மாணவ- மாணவியர் கல்வியில் நல்ல மேன்மையான நிலைகள் உண்டாகும். கல்விக்காக எடுக்கும் எந்தவொரு  முயற்சியிலும் வெற்றி கிட்டும். அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப்பெறும்.  பரிகாரம்: அம்மனை வழிபடுவது நன்மை தரும். அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனிகன்னி:  கிரகநிலை: ராசியில் புதன்,  சுக்ரன் - தைரிய ஸ்தானத்தில்  குரு -  சுக  ஸ்தானத்தில்  சனி , கேது - களத்திர  ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில்   ராஹூ - அயன சயன போக ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய்  என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 17-Sep-19 காலை 04:29 மணிக்கு சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 19-Sep-19 பகல்  01:46 மணிக்கு சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 21-Sep-19 இரவு 08:35 மணிக்கு சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: எப்பவும் உற்சாகமாக இருக்கும் கன்னி ராசி அன்பர்களே, இந்த வாரம் பயணம் செல்ல நேரிடலாம். காரிய அனுகூலம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவ முன்வருவீர்கள். வாழ்க்கை துணை  மூலம் லாபம் கிடைக்கும். மனதில் இருந்த சஞ்சலம் நீங்கி மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்க பெறுவீர்கள். உங்கள் மீது  குற்றம் சொல்ல நினைப்பவர்கள் அதனை விட்டுவிடுவார்கள்.  தொழிலதிபர்கள் தொழிலாளிகளின் ஒற்றுமையால் இரண்டு பங்கு லாபத்தைப் பெறுவார்கள். வியாபாரிகளின் கடன்  பாக்கிகள் வசூலாகி, வியாபாரமும் லாபத்தோடு நடக்கும். உத்யோகஸ்தர்கள் அதிகாரிகளின் அரவணைப்பையும் பாராட்டையும் பெறுவார்கள். உடன் பணிபுரியும் பெண்  ஊழியர்களிடம் எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் எதிர்ப்புகள் விலகும். உடன்பிறந்த சகோதரர்கள், உங்கள் பேச்சைமீறி நடக்கலாம். சொத்துப்பிரச்சினை  வரும். உற்றார்-உறவினர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். பெண்களுக்கு பணப்புழக்கம் கூடும். அரசியல்வாதி கள் பொதுமக்களிடையே நல்ல பெயர் எடுப்பார்கள். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் செலுத்துவார்கள். நீண்ட நாளைய நண்பரைப் பிரிய வேண்டி வரலாம். பரிகாரம்: அம்மனை தீபம் ஏற்றி வணங்கி வர காரியத் தடைகள் நீங்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்துலாம்:  கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  குரு - தைரிய ஸ்தானத்தில்  சனி , கேது - ரண, ருண ஸ்தானத்தில் சந்திரன் -  பாக்கிய ஸ்தானத்தில்  ராஹூ - லாப ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய் -  அயன, சயன, போக ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  கிரகமாற்றங்கள்: 17-Sep-19 காலை 04:29 மணிக்கு சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 19-Sep-19 பகல்  01:46 மணிக்கு சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 21-Sep-19 இரவு 08:35 மணிக்கு சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: அனைவரையும் ஆதிக்கமாக கொண்டு செல்லும் துலா ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களின் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும். கணவன்-மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள்  ஏற்படும். உற்றார்-உறவினர்களின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி அளிக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடபுடலாக கைகூடி  மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சிலருக்கு தொலைதூரங்களிலிருந்தும் நல்ல செய்திகள் வரும். தொழிலதிபர்கள் தங்கள் தொழிற்சாலை நடவடிக்கைகளை நேரடியாக கவனித்தால் நஷ்டத்தைத் தவிர்க்கலாம்.  வியாபாரிகள் அதிக கொள்முதல் செய்யாமல் இருப்பது நல்லது.  உத்யோகஸ்தர்களுக்கு நினைத்த இடத்திற்கு மாறுதல் கிடைக்கும். வரவேண்டிய பாக்கிகள் வந்துசேரும். பணியில் தடை  ஏற்பட்டவர்கள் மீண்டும் வேலையில் சேர்வார்கள். குடும்பத்தில் வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வரும். விலகியிருந்த பிள்ளைகள் வந்துசேர்வார்கள். காலங்காலமாய்  இருந்துவந்த பங்காளி சண்டை முடிவுக்கு வரும். பெண்கள் முக்கிய பிரச்சினைகள் காரணமாக வெளியூர் சென்றுவர வேண்டியிருக்கும். மாணவர்கள் கல்வியில் ஊக்கம் பெறுவார்கள். பிடித்தனவற்றை கற்றுக் கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும். பரிகாரம்: முருகனை வணங்கி வர காரியத் தடைகள் நீங்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளிவிருச்சிகம்:  கிரகநிலை: ராசியில்  குரு - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சனி , கேது - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் -  அஷ்டம  ஸ்தானத்தில் ராஹு- தொழில் ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் - லாப ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  கிரகமாற்றங்கள்: 17-Sep-19 காலை 04:29 மணிக்கு சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். 19-Sep-19 பகல்  01:46 மணிக்கு சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 21-Sep-19 இரவு 08:35 மணிக்கு சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: தகுந்த நேரத்தில் தகுந்த முடிவுகளை அனைவருக்கு ஏற்றார்ப்போல் எடுக்கும்  விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வாரம் அனைத்து சங்கடங்களும் விலகி நல்ல பலன்களை அடைவீர்கள். உங்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்த எதிரிகள்  விலகிச்செல்வார்கள். வாகனம் வாங்கும் திட்டம் நினைத்தபடி நடக்கும் தொழிலதிபர்களுக்கு வரவும் செலவும் சரிசமமாக இருக்கும். உற்பத்தி பெருகும். வியாபாரிகளுக்கு போட்டியாளர்கள்  விலகிச்செல்வார்கள். வியாபாரம் பெருகும். உத்யோகஸ்தர்களுக்கு பணிச்சுமை கூடும். மேலதிகாரிகளின் தயவும் பாராட்டும் உண்டு. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு வர வாய்ப்புள்ளது. பிள்ளைகளால் நன்மையுண்டு.  பிள்ளைகளுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் தேடிவரும். வரன் தேடுவோருக்கு நல்ல வரன் வந்து சேரும். பெண்களுக்கு குடும்பத்தில் ஆரோக்கியம் கூடுதலாகும். உங்களைப் பிரிந்திருந்த உறவுகள் வந்துசேர்வார்கள். சில  இளைஞர்கள் வேலைக்காக வெளிநாடு செல்வார்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தினால் மந்தநிலை மாறும். பரிகாரம்: மகாலட்சுமியை தீபம் ஏற்றி வழிபட்டு வர செல்வம் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்தனுசு:  கிரகநிலை: ராசியில்  சனி , கேது - சுக ஸ்தானத்தில் சந்திரன் -  களத்திர ஸ்தானத்தில்  ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் -  தொழில் ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் குரு  என கிரகங்கள் வலம் வருகின்றன.  கிரகமாற்றங்கள்: 17-Sep-19 காலை 04:29 மணிக்கு சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 19-Sep-19  01:46 மணிக்கு சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். 21-Sep-19 இரவு 08:35 மணிக்கு சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: ரகசியங்களை காக்கும்  தனுசு ராசி அன்பர்களே, இந்த வாரம் விருப்பங்கள் நிறைவேறும்.  மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் போது கவனம் தேவை. எதிர்பாலினரால் லாபம்  கிடைக்கும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். தொழிலதிபர்கள் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவார்கள். புதிய ஆர்டர்கள் வந்துசேரும். சிலர் ஆர்டர் நிமித்தம் வெளிநாடு  சென்று வருவார்கள். தொழிலாளர்கள் ஒத்துழைப்பு கூடும். வியாôபரிகள் எதிர்பார்த்தபடி விற்பனை, லாபம் கிடைக்கும். உத்யோகஸ்தர்கள் உற்சாகமாகப் பணிபுரிவார்கள். புதிய வேலைகள் மேலிடத்திலிருந்து கிடைக்கும். அதற்கான  ஊதியமும் கிடைக்கும். குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமையில் பிணக்குகள் வராது. புதிய வீடு கட்டும் திட்டம் நிறைவேறும். தடைப்பட்ட ஆலயத் திருப்பணிகள் தடையின்றி முடியும். பெண்கள் குடும்பத்தில் ஒற்றுமையற்ற நிலைகளால் நிம்மதி குறையும். கணவன்-மனைவியிடையே கருத்து  வேறுபாடுகள் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் நிலவும். மாணவர்கள் உற்சாகமாகப் படிப்பார்கள். புதிய வழிகாட்டுதல்கள் கிடைக்கும்.   பரிகாரம்: பெருமாளை துளசியால்  அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி வணங்க கஷ்டங்கள் குறையும். காரிய வெற்றியும், நன்மையும் உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன்,சனிமகரம்:  கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில் சந்திரன் - ரண, ருண ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் புதன், சுக்ரன்-  லாப ஸ்தானத்தில்  குரு- அயன, சயன, போக ஸ்தானத்தில் சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  கிரகமாற்றங்கள்: 17-Sep-19 காலை 04:29 மணிக்கு சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 19-Sep-19  01:46 மணிக்கு சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 21-Sep-19 இரவு 08:35 மணிக்கு சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: அனைத்து இடங்களுக்கும் முன்னோடியாக திகழும் மகரம் ராசி அன்பர்களே, இந்த வாரம் இதுவரை உங்களுக்கு எதிர்ப்பாக செயல்பட்டு வந்த பிள்ளைகளின் மனநிலை மாறும். அவர்கள் நல்ல வேலை  வாய்ப்பை அடைவார்கள். தொழிலதிபர்கள் புதிய தொழிற்சாலை நிறுவும் திட்டம் நிறைவேறும். உங்களை எதிர்த்துத் தொழில் செய்தவர்கள்  உங்களைக் கண்டு மிரண்டு ஓடுவார்கள். வெளிநாட்டில் தொழில் துவங்க இருந்த தடைகள் விலகும். உத்யோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும், மாறுதலும் கிட்டும். காவல்துறை, நீதிமன்ற வழக்குகள் சாதகமாக  முடியும். குடும்பத்தில் பிரிந்து சென்ற தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். முதியோர்களால் வைத்தியச் செலவுகள் வரலாம். பிள்ளைகளின் உயர்கல்வி எண்ணம் ஈடேறும். பெண்கள் விரும்பிய ஆபரணங்களை வாங்கி மகிழ்வார்கள். அடகுபோன நகைகளையும் மீட்பார்கள். மாணவர்கள் கல்வியில் திறமையோடு இருப்பார்கள். குடும்பத்தில் உங்களின் மதிப்பு கூடும். பரிகாரம்: அங்காளம்மனை தீபம் ஏற்றி வணங்க மன கவலை தீரும். எதிர்ப்புகள் அகலும். எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளிகும்பம்:  கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ - களத்திர ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய் -  அஷ்டம ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன்- தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.  கிரகமாற்றங்கள்: 17-Sep-19 காலை 04:29 மணிக்கு சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 19-Sep-19 01:46 மணிக்கு சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 21-Sep-19 இரவு 08:35 மணிக்கு சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: தங்களின் கொடுத்த வாக்குகளை என்றும் மரவாதவர்கள்  கும்ப ராசி அன்பர்களே, இந்த வாரம் நீங்கள் முன்யோசனையுடன் செயல்பட வேண்டும். ஒரு காரியத்தை இருமுறை யோசித்துச் செய்தால் சிரமத்திலிருந்து  மீளலாம்.  தொழிலதிபர்கள் எதிர்பார்த்தபடி லாபம் பெருகும். வியாபாரிகளும் நல்ல லாபம் பெறுவார்கள். எதிர்பார்த்த வங்கிக்கடன்  வந்துசேரும். சகோதரர்கள் சண்டை நீங்கி ஒன்றுகூடுவார்கள். உத்யோகஸ்தர்கள் பணிச்சுமையில் அவதிப்பட்டது மாறும். கேட்டபடி மாறுதல் கிடைக்கும். சிலர் விருப்ப ஓய்வில்  செல்வார்கள். திட்டமிட்டபடி எதிர்காலத்தை அமைத்துக்கொள்வார்கள். குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். பொருளாதாரநிலையிலும் பற்றாக்குறைகள்  நிலவுவதால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். பெண்களுக்கு எதிர்பார்த்தபடி பதவி வந்துசேரும். லாபம் பெறுவார்கள். குடும்பத்தினரிடம் பாராட்டைப் பெறுவார்கள். மாணவர்கள் உங்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்த நண்பர்களை அடையாளம் கண்டு விலகுவீர்கள். பரிகாரம்: நவகிரகத்தில் சூரியனை தீபம் ஏற்றி வழிபட்டு வர கடன் பிரச்சனை குறையும். முன்னேற தேவையான உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனிமீனம்:  கிரகநிலை: ராசியில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் ராஹூ - ரண, ருண ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய்  -  களத்திர ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன் -  பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில்  ஸ்தானத்தில் சனி , கேது -  என கிரகங்கள் வலம் வருகின்றன.  கிரகமாற்றங்கள்: 17-Sep-19 காலை 04:29 மணிக்கு சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். 19-Sep-19  01:46 மணிக்கு சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 21-Sep-19 இரவு 08:35 மணிக்கு சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: அனைவரையும் கவரும் குணம் கொண்ட மீன ராசி அன்பர்களே, இந்த வாரம் இதுவரை வாட்டி வதைத்து வந்த பிணி, பீடைகள் உங்களை விட்டு விலகும். நீண்டநாள் பிரிந்து வாழ்ந்த தம்பதியர்  ஒன்றுகூடுவார்கள். குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுபகாரியம் தடையின்றி நடக்கும். உறவினர் வருகை, சுபகாரியப்  பேச்சுகள் என்று வீட்டில் கலகலப்பு நிலவும். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தம் போடும்முன் சக நண்பர்களைக் கலந்து செய்யும் முடிவு லாபத்தைத் தரும்.  எதிர்பார்த்தபடி வெளிநாடு செல்வீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு நினைத்தபடி மாறுதல் கிட்டும். அரசு ஊழியர்களை ஆட்டிப்படைத்துவரும் அதிகாரிகள் சிலர்  லஞ்ச வழக்குக்கு ஆட்படுவார்கள். குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமை உண்டு. பெண்களால் குடும்பத்தில் நன்மையுண்டு. கால்நடை வளர்ப்போர்  நல்ல லாபம் பெறுவார்கள். பெண்களுக்கு கணவரால் இருந்து வந்த தொந்தரவுகள் மாறும். மாணவர்களின் தொழிற்கல்வி உயரும். கல்விக்கடனும் தடையின்றிக் கிடைக்கும். சிலர் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு  செல்லும் திட்டம் நிறைவேறும்.  பரிகாரம்: நவகிரகத்தில் புதனை தீபம் ஏற்றி வணங்கி வருவதும் புத்தி சாதுரியத்தை தரும். சிக்கலான பிரச்சனைகளையும் எளிதாக தீர்ப்பீர்கள். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி.

newstm.in

Trending News

Latest News

You May Like