ஆனி மாத பலன்கள்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணிப்பில் ஜூன் மாத ராசி பலன்

ஆனி மாத பலன்கள்
X

aani-month-rasi-palan

ஆனி மாத பலன்கள்

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ஆனி மாத பலன்கள்

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீவிகாரி வருஷம் உத்தராயணம் வஸந்தரிது வைகாசி மாதம் 32ம் தேதி (15.06.2019) அன்றைய தினம் சனிக்கிழமை சுக்லபக்ஷ சதுர்த்தசி - அனுஷ நக்ஷத்ரம் - ஸித்தி நாமயோகம் - கரஜி கரணம் - சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி இரவு மணி 9.01க்கு (உதயாதி நாழிகை: 37.49க்கு) மகர லக்னத்தில் ஆனி மாதம் பிறக்கிறது.

ஆனி மாதம் பிறக்கும் போது இருக்கக்கூடிய கிரகநிலை படம்:

ஆனி மாத பலன்கள்

மேஷம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன், குரு (வ) -பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: நயமான அணுகு முறையால் அனைவரையும் கவரும் மேஷ ராசியினரே, இந்த மாதம் நீங்கள் ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும்.  உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவம் சார்ந்த செலவுகள் நேரலாம். ஆயுதங்கள் கையாளும் போதும், வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். அடுத்தவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம். கவனம் தேவை. உங்களை சார்ந்தவர்களே உங்களை தவறாக நினைக்கலாம். குடும்பத்தில் இதமான சூழ்நிலை  காணப்படும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. அடுத்தவர் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது.  பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வேகம் இருக்காது. நிதானமான போக்கு காணப்படும். பணவரத்து தாமதப்படும். தொழில் வியாபாரத்திற்காக கடன் வாங்க நினைப்பதை தள்ளிபோடுவது நல்லது.   உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்படுவார்கள். நிர்வாகத்தினரின் ஆதரவும் கிடைக்க பெறுவார்கள். யாரிடமும் ரகசியத்தை கூறாமல் இருப்பது உங்கள் எதிர்காலத்திற்கு நல்லது. கலைத்துறையினருக்கு நல்ல சூழ்நிலைகளை அமையப் பெறுவீர்கள். சிறந்து விளங்குவதற்கு ஏற்ற காலம். நண்பர்களுடன் உல்லாசமாக நாட்களை செலவிடுவீர்கள். எதைப் பற்றியும் கவலையின்றி  நிம்மதியான உறக்கம் வரும்.  அரசியல்வாதிகள் கட்சியில் தங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். அதன் காரணமாக முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். சில முக்கிய பிரமுகர்கள் கட்சியில் வந்து இணைவார்கள். அது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். பெண்களுக்கு காரியங்களில் பின்னடைவு ஏற்படலாம். மற்றவர்களிடம்  சில்லறை சண்டைகள் ஏற்படாமல் இருக்க கவனமாக பேசி பழகுவது நல்லது.  மாணவர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய எண்ணம் உண்டாகும். மேல் படிப்பு பற்றிய சிந்தனையில் ஈடுபடுவீர்கள். சக மாணவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது நல்லது. அசுபதி: இந்த மாதம் மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகலாம். எந்த காரியத்தையும் ஆலோசித்து செய்வது நல்லது. ஆன்மீக போக்கு மனதிற்கு நிம்மதியைத் தரும். மேலிடத்தில் கணிசமான ஆதரவைப் பெறுவீர்கள்.  பரணி: இந்த மாதம் அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும். உங்களைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் தாமாகவே அமையும். பொருளாதார வசதிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். கார்த்திகை - 1: இந்த மாதம் எதிர்காலத்திற்குத் தேவையான முறையான சேமிப்புகளுக்குண்டான ஏற்பாடுகளை செய்வீர்கள். எதிரிகளின் இன்னல்கள் இருக்கும் இடம் தெரியாமல் போகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். இருந்து வந்த நீண்ட நாள் வேலைகளை முழுமூச்சுடன் முடிப்பீர்கள்.  பரிகாரம்: தினமும் கந்தகுரு கவசத்தை பாராயணம் செய்யுங்கள். எதிலும் சிரமம் ஏற்படாது. அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன் சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 16, 17, ஜூலை 13, 14 அதிர்ஷ்ட தினங்கள்: ஜுலை 6, 7 ரிஷபம்: கிரகநிலை: ராசியில் சுக்கிரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், ராகு - களத்திர ஸ்தானத்தில் சந்திரன், குரு(வ) - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: தங்கள் காரியத்தில் அதிக வீரியத்துடன் செயல்படும் குணமுடைய ரிஷப ராசியினரே, இந்த மாதம் சிற்றின்ப செலவு அதிகரிக்கும். மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கி சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம். கவனமாக இருப்பது நல்லது. கண் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படலாம். வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். குடும்பத்தில் திடீர் குழப்பங்கள் தலை தூக்கும். அமைதியாக இருக்க முயன்றாலும் கூட மற்றவர்கள் வலுக்கட்டாயமாக பேசுவார்கள்.  கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.  அக்கம்பக்கத்தினரிடம்  சில்லறை சண்டைகள் ஏற்படலாம்.  தொழில் வியாபாரத்தில் ஏற்படும் பணதேவையை சரிகட்ட நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில்  முன்னேற்றம் காண தேவையான பணிகளில் ஈடுபடுவீர்கள். வியாபார விருத்தியை எதிர்பார்க்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு  சாதகமான பலன் காண்பார்கள். வேலை சம்மந்தமாக வெளியூர் பயணங்கள் ஏற்படலாம். நேரத்திற்கு உணவருந்த முடியாமல் போகலாம். கலைத்துறையினருக்கு நல்ல பாராட்டுகளும், விருதுகளும் கிடைக்கப் பெறுவீர்கள். சொந்த விசயங்களில் வெளிநபர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கலைஞர்கள் புதிய வண்டி வாகங்கள் வாங்கக் கூடிய வாய்ப்புகள் உருவாகும். அரசியல்வாதிகள் எந்த ஏற்ற இறக்கத்தையும் இப்போதைக்கு காண முடியாது. கட்சிகளில் சில கருத்து வேற்றுமை வந்தாலும் அது உங்களை பெரிதாக பாதிக்காது. சிலரது பேச்சின் வலிமை உங்களுக்கு பிடித்துப் போகும் அதற்கு பரிசு வழங்குவீர்கள். பெண்களுக்கு காரியங்களை துணிச்சலாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நடந்து முடியும். மாணவர்களுக்கு எதிர்காலம் பற்றிய திட்டங்கள் மனதில் தோன்றும். கல்வி யில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். கார்த்திகை - 2, 3, 4: இந்த மாதம் உங்களது பொருட்களின் மீது கூடுதல் கவனம் இருப்பது நல்லது. பணம் சம்பந்தமான விஷயங்களில் ஈடுபடும் போது கவனத்துடன் இருப்பது நல்லது. வாழ்க்கை தரம் உயரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எல்லாவற்றிலும் மனகவலை ஏற்படும். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை.  ரோகினி: இந்த மாதம் தாயின் உடல்நிலையில் கவனம் அவசியம்.  திட்டமிட்டபடி காரியங்களை செய்ய முடியாமல் தடங்கல்கள் ஏற்படலாம். எதிர்பாராத செலவு உண்டாகும். மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல்நலத்தில் கவனம் தேவை. மிருகசீரிஷம் - 1, 2: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் கவனமாக இருப்பது  லாபம் அதிகரிக்க செய்யும். பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.   பரிகாரம்: சிவன் கோவிலுள்ள நந்தீஸ்வரருக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுங்கள். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 18, 19, அதிர்ஷ்ட தினங்கள்: ஜுலை 8, 9, 10  மிதுனம்: கிரகநிலை: ராசியில் சூரியன், செவ்வாய், புதன், ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன், குரு(வ) - களத்திர ஸ்தானத்தில் சனி(வ), கேது - விரைய ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகங்கள் வலம் வருகின்றன பலன்: சூழ்நிலைகளை அதன் போக்கில் சென்று சமாளிக்கும் மிதுனராசியினரே, இந்த மாதம்  எந்த ஒரு காரியத்திலும் லாபம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் மூலம்  நன்மை உண்டாகும். எதை விரும்பினாலும் அது கிடைக்க வழி தெரியும். தொலைதூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து  செல்வது நல்லது.  பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஒரு சில சிக்கலான கட்டங்களை சந்திக்க நேரிடும். ஆனால் முடிவில் எதிர்பார்த்த படி சாதகமான பலன் கிடைக்கும். கூடுதலான லாபம் கிடைக்க அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக பணிகளை  செய்து பாராட்டு பெறுவார்கள். சிலருக்கு பதவி உயர்வும் கிடைக்கக்கூடும்.  இடமாற்றம் உண்டாகலாம். கலைத்துறையினர் வெளியிடங்களுக்கு செல்லும் போதும், சண்டைக்காட்சிகளில் நடிக்கும் போதும் கவனமாக இருப்பது மிக அவசியம். உங்களுக்கு தந்தை வழி பாராட்டுகள் கண்டிப்பாக கிடைக்கும். உங்களது திறமையை அனைவரும் போற்றுவார்கள். அரசியல்துறையினருக்கு தொண்டர்களுடன் ஏற்பட்டிருந்த மனக்கசப்புகள் நீங்கும். அவர்களுடன் நல்லுறவு ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. அவர்கள் உங்களுக்கு ஆதரவாகவும், அனுசரணையாகவும் நடந்து கொள்வார்கள். அதனால் மனநிம்மதி கிடைக்கும். பெண்களுக்கு கூடுதலாக செய்யும் முயற்சிகள் மூலம் விரும்பியபடி காரியத்தை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்களுக்கு எதையும் அவசரமாக செய்யாமல் யோசித்து செயல்படுவது நல்லது. கல்வியை பற்றிய கவலை குறையும். மிருகசீரிஷம் - 3, 4: இந்த மாதம் குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து  செல்வது நல்லது.  பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். திருவாதிரை: இந்த மாதம் திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. அலைச்சலால் உடல் சோர்வு ஏற்படலாம். ஆன்மீக நாட்டம் மனதிற்கு நிம்மதியைத் தரும். குல தெய்வ தலங்களுக்கு சென்று வருவது மனதிற்கு அமைதியைத் தரும். வாழ்க்கைத்துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. புனர்பூசம் - 1, 2, 3: இந்த மாதம் உங்கள் வியாபாரத்தை சீரமைப்பதற்கு சுயமாக மேற்கொள்ளும் முயற்சிகள் நிச்சயம் வெற்றியடையும். காரிய அனுகூலம் உண்டாகும். சிந்தித்துச் செயல்படுவது நன்மை தரும். உடனிருப்பவருகள் உங்களுக்கு உதவுவார்கள். லாபம் அதிகரிக்கும். விற்பனை அமோகமாகும்.     பரிகாரம்: நரசிம்மர் கோவிலுக்குச் சென்று நெய் விளக்கேற்றி வழிபடுங்கள்.  அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 20, 21, 22  அதிர்ஷ்ட தினங்கள்: ஜுலை 11, 12   கடகம்: கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன், குரு(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி(வ), கேது - லாப ஸ்தானத்தில் சுக்கிரன் - விரைய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன பலன்: மற்றவர்களின் குறைகளை கேட்கும் குணமுடைய கடக ராசியினரே, இந்த மாதம் எதிலும் லாபம் கிடைக்கும். காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண்கவலை நீங்கும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் அமைதி குறைவது போல் தோன்றும் சகோதரர்கள் வழியில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கலாம், கவனம் தேவை.  பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். விருப்பமான நபரை சந்தித்து மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமான பலன் தரும்.  புதிய தொழில் தொடங்க ஆயத்தமாவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மற்ற விஷயங்களில் தலையிடாமல் இருப்பது வீண் பிரச்சனை வராமல் தடுக்கும். கலைத்துறையினர் நல்ல மேன்மை அடைய வாய்ப்புகள் சற்று குறைந்தே உள்ளது. தடை தாமதங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. சக கலைஞர்களிடம் கவனமாக நடந்து கொள்ளுங்கள்.  அரசியல் துறையினர் முக்கிய முடிவுகளில் நல்ல ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். தந்தை வழி அரசியல் செய்பவர்களுக்கு அனுகூலமாக இருக்கும். பூர்வீகம் சம்மந்தமான பிரச்சினைகள் ஏதேனும் இருப்பின் அது நல்ல முடிவுக்கு வரும். பெண்களுக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இழுபறியாக இருந்த காரியம் நன்கு நடந்து முடியும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பாக எடுக்கும் முடிவுகளில் அவசரம் காட்டாமல் நிதானமாக செயல்படுவது நன்மை தரும். புனர்பூசம் - 4: இந்த மாதம் சொந்தங்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். நண்பரிகள் மற்றும் அருகிலிருப்பவர்களின் உதவியால் தொழில் முன்னேற்றம் உண்டாகும். மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனால் அதன் முழுப்பலன்களையும் அனுபவிக்க இயலாத அளவிற்கு மற்றவர்களால் சிறு குறுக்கீடுகளும் தோன்றும்.  பூசம்: இந்த மாதம் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையில் செல்லும். புதிய நட்புகளால் நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு நிறைவான ஆதரவு தருவார்கள்.  மன நிம்மதி கிடைக்கும். ஆயில்யம்: இந்த மாதம் உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சனைகளில் தலையிடுவதும் கருத்து சொல்வதையும் தவிர்த்தல் நலம். முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. புதிய காரியங்களை செய்ய துவங்குவதற்கு முன் நல்ல நேரம் காலம் பார்த்து செய்வது நல்லது.    பரிகாரம்: மாங்காடு காமாட்சி அம்மனை மனதார துதித்து வழிபடுங்கள். தடைகள் அகலும்.  அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய் சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 23, 24  அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன் 15, 16, 17 ஜூலை13, 14  சிம்மம்: கிரகநிலை: சுக ஸ்தானத்தில் சந்திரன், குரு(வ) - பஞ்சம ஸ்தானத்தில் சனி(வ), கேது - தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன பலன்: அனைவரையும் வழிநடத்தும் திறமையுடைய சிம்ம ராசியினரே, இந்த மாதம் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். நல்லது எது கெட்டது எது என்று பிரித்து பார்த்து செயல் படுவீர்கள். எதிர்பாராத சில திருப்பங்களால் காரிய வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் இருந்த மனவருத்தம் நீங்கும். வாழ்க்கை துணையின் உடல் நிலையில் கவனம் தேவை. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு கூடும். விருந்தினர் வருகை இருக்கும். புதிய முடிவுகள் எடுப்பதில் தயக்கம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் உண்டாகலாம். பிள்ளைகள் வழியில் செலவு உண்டாகலாம். பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் சற்று மந்தமான நிலை காணப்படும். வரவேண்டிய பணம் கைக்கு கிடைக்க தாமதமாகலாம். போட்டிகளை சமாளிக்க வேண்டி வரும்.  எதிர்பார்த்த ஆர்டர்களில் ஏதாவது தடங்கல் வரலாம். கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மற்ற விஷயங்களில் தலையிடாமல் இருப்பது வீண் பிரச்சனை வராமல் தடுக்கும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வெளிநாடு படப் பிடிப்புகளுக்குச் சென்று வருவீர்கள். முக்கியஸ்தர்கள் நல்ல வாய்ப்புகளை தருவார்கள். முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.  அரசியல்துறையினர் கட்சி சம்மந்தமாக முடிவுகள் எதையும் எடுக்க முடியாமல் தவித்து வருவீர்கள். யாரிடமும் எதையும் சொல்லக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பீர்கள். உங்களுக்கு உறுதுணையாக ஒருவர் செயல்படுவார். பெண்களுக்கு கோபத்தை தவிர்த்து நிதானமாக பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். யோசித்து செய்யும் வேலைகள் சாதகமாக  முடியும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான கவலைகள் நீங்கும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும். மகம்: இந்த மாதம் புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். பணவரவு கூடுதலாகும். சேமிப்பும் உயரும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். நண்பர்களிடையே இருந்துவந்த பிணக்குகள் நீங்கி நேசத்தோடு வாழ்வீர்கள். தடைப்பட்டுவந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதாக நடக்கும்.  பூரம்: இந்த மாதம் ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோர்கள் வகையில் மருத்துவச் செலவுகள் குறையும். வீடு வாங்க வாய்ப்பு நிறைவேறும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தை அடைவீர்கள். வியாபாரிகள் புதிய கிளைகள் துவங்க போட்ட திட்டம் நிறைவேறும்.  உத்திரம் - 1: இந்த மாதம் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் தட்டுப்பாடு வராது. கடன் பாக்கிகள் அடையும். பூர்வீக சொத்துகளில் உள்ள வில்லங்கம் நீங்கும். புதிய தொழில் தொடங்க போட்ட திட்டம் நிறைவேறும்.    பரிகாரம்: தினமும் சிவன் ஆலயத்திற்குச் சென்று விளக்கேற்றி வழிபட இன்னல்கள் குறையும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள் சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 25, 26, 27  அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன்  18, 19  கன்னி: கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன், குரு(வ) - சுகஸ்தானத்தில் சனி(வ), கேது - பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன பலன்: அனைத்து துறையிலும் ஞானம் பெற்ற கன்னி ராசியினரே, இந்த மாதம் நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும். எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் வைப்பது நல்லது. பணவரத்து அதிகமாகும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் இருந்த மனவருத்தம் நீங்கும். வாழ்க்கை துணையின் உடல் நிலையில் கவனம் தேவை. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு கூடும். விருந்தினர் வருகை இருக்கும். புதிய முடிவுகள் எடுப்பதில் தயக்கம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் உண்டாகலாம். பிள்ளைகள் வழியில் செலவு உண்டாகலாம். பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் திடீர் செலவு ஏற்படும். எதிர்பார்த்த லாபம் குறையலாம். புதிய ஆர்டர்களுக்காக கூடுதலாக  அலைய வேண்டி இருக்கும். வீண் அலைச்சலால் மனம் நோகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தயக்கத்துடன் தங்களது பணிகளை செய்ய வேண்டி இருக்கும். எந்திரங்களை  இயக்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு உயர் இடத்தில் இருந்து வாய்ப்புகள் தேடி வரும். நீங்கள் நினைத்த மாதிரியான பட வாய்ப்புகள் வருவதால் உடனடியாக நீங்கள் அடுத்த கட்ட வேலைகளை ஆரம்பிப்பீர்கள். விருதுகளும், பாராட்டுகளும் கிடைக்கும். அரசியல்துறையினருக்கு சுணக்க நிலை மாறி நல்ல வருவாய் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. நினைத்ததை விட அதிக அளவில் தொழிலில் மாற்றங்கள் நிகழக் கூடும். சிலர் வெளிநாடுகள் செல்லும் சந்தர்ப்பங்கள் அமையும்.  பெண்களுக்கு சமையல் செய்யும் போது கவனம் தேவை. மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்சனை உண்டாகலாம். கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சந்தேகங்கள் உண்டாகலாம். உடனுக்கு டன் அவற்றை கேட்டு தெரிந்து கொள்வது நல்லது. உத்திரம் - 2, 3, 4: இந்த மாதம் சரக்குகளை நல்ல விலைக்கு விற்பீர்கள். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். புத்திர பாக்கியத்தை அடைவீர்கள். நீண்ட காலமாகத் தடைப்பட்டு வந்த திருமணம் கைகூடும். பிரிந்து சென்ற பிள்ளைகள் வந்து சேர்வார்கள். இளைஞர்கள் தகுதிக்கேற்ப புதிய பதவிகளை அடைவார்கள்.  ஹஸ்தம்: இந்த மாதம் பொதுமக்கள் சேவையில் நல்ல பெயரையும் புகழையும் அடைவார்கள். உழைப்பதற்குண்டான வாய்ப்புகள் நிறைய கிடைக்கும். தனியார் பணியில் இருப்பவர்கள் அதிகமான வேலைப் பளுவை சந்திப்பார்கள். பங்குதாரர்களிடம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். புதிதாக தொழில் தொடங்க போட்ட திட்டம் தள்ளிப்போகும்.  சித்திரை - 1, 2: இந்த மாதம் வீண் சச்சரவுகள் வர வாய்ப்புண்டு. வியாபாரிகள் அரசுக்குச் செலுத்தவேண்டிய வரி பாக்கிகளால் அரசாங்கத்தின் கெடுபிடியை சந்திப்பார்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். பிள்ளைகள் வீட்டின் நிலையை அறிந்து நடப்பார்கள். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவேண்டும். பெற்றோர் உடல்நலனில் கவனம் தேவை.    பரிகாரம்: ஏழை பிராமணருக்கு அன்னமிட்டு உதவுங்கள். தொல்லைகள் அகலும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 28,29  அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன் 20, 21, 22  துலாம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன், குரு (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி(வ), கேது - அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன பலன்: பொதுகாரியங்களில் அதிக ஈடுபாடு உடைய துலா ராசியினரே, இந்த மாதம் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வீண் கவலை நீங்கும். தடைபட்ட காரியங்கள் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும். குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கலாம். எல்லோரையும் அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே  திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். கவனம் தேவை. பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நன்மை தரும். உறவினர் வகையில் மனவருத்தம் ஏற்படலாம். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான ஏற்பாடுகள் நிம்மதியைத் தரும். தொழில் வியாபாரத்தில் திடீர் போட்டி உண்டாகும். எதிர்பார்த்த அளவு வியாபாரத்தில் லாபம் கிடைக்குமா என்ற எண்ணம் உண்டாகும். கூட்டு தொழில், வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். மேல் அதிகாரிகள் ஆதரவும் கிடைக்கும். சக ஊழியர்களிடன் எந்த வித ரகசியத்தையும் கூறாமல் இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு இதுவரை இருந்த தொய்வு நிலை காணாமல் போகும். சிறு விசயங்களுக்கு கூட மனம் அமைதி இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தீர்கள். இப்போது அந்த நிலை மாறி அனைவரின் சிபாரிசுக்கும் உங்கள் பெயர் பரிந்துரைக்கப்படும். அரசியல்துறையினர் பிறரால் போற்றக் கூடிய நிலைக்கு உயரப்போகிறீர்கள். அரசாங்கம் சம்மந்தமான அனைத்து விசயங்களும் உங்களுக்கு சாதகமாக நடந்தேறும். கட்சியின் நிலைபாடுகள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். பெண்களுக்கு சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சிக்கல்கள் குறையும். எதிர்பார்த்த மதிப்பெண் பெற அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது. சித்திரை - 3, 4: இந்த மாதம் திறமைகள் வெளிப்படும். எதிலும் எந்த இடத்திலும் நியாயத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்காக போராடுவீர்கள். நீங்கள் அனைவராலும் விரும்பப்படுவீர்கள். அதிக சுமைகளை எடுத்துக் கொள்வீர்கள். அதேநேரம் சின்னச் சின்ன பிரச்னைகளில் தலையிட்டு வெளியில் வர தள்ளாடுவீர்கள்.  ஸ்வாதி: இந்த மாதம் ஏற்ற இறக்கமாக பொருளாதாரத்தில் இருந்த பாதிப்புகள் படிப்படியாக விலகும். புதிய தொழில்களில் கால் பதிக்க போராடிக் கொண்டிருந்தவர்கள் எதிர்பார்த்த மாற்றத்தைக் காண்பார்கள். நண்பர்களுடன் இருந்த பிரச்னைகள் தீர்வுக்கு வருவதால் அலுவலகச் சூழல்களில் இருந்த இறுக்கம்  மறைந்து சகஜநிலை உருவாகும்.  விசாகம் - 1, 2, 3: இந்த மாதம் அரசுத்துறையிலிருந்து சலுகைகளை பெற குறுக்கு வழிகளை தேட வேண்டாம். நேர்வழியிலேயே எதையும் சாதித்துக் கொள்ளுங்கள். பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்களின் புகழைத் தக்க வைத்துக் கொள்ள சிறிது சிரமப்பட வேண்டியிருக்கும்.    பரிகாரம்: பெருமாள் கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வாரை 11 முறை வலம் வரவும்.  அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 30, ஜூலை 1 அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன் 23, 24  விருச்சிகம்: கிரகநிலை: ராசியில் சந்திரன், குரு(வ) - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி(வ), கேது - களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், ராகு போன்ற கிரகங்கள் வலம் வருகின்றன பலன்: செய்யும் செயலில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் விருச்சிகராசியினரே, இந்த மாதம் மனதில் துணிச்சல் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எங்கும் எல்லோரிடத்தி லும் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பலரும் உங்களை தேடி வருவார்கள். அடுத்தவர்களுக்காக உதவிகள் செய்வதில் உற்சாகம் உண்டாகும். குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது.  கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுவதன் மூலம் இடைவெளி குறையும். பிள்ளைகள்  நலனுக்காக செலவுகள் செய்ய வேண்டி இருக்கும். தொழில் வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும். தொழிலாளர்களின் ஆதரவு உங்களுக்கு நல்ல படியாக அமையும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் திடீர் பயணத்தை சந்திக்க நேரலாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது.  புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு தக்க பலன் கிடைக்கும்.   எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும்.  கலைத்துறையினருக்கு அனைவரும் கவரக் கூடிய தோற்றப் பொலிவு உண்டாகும். உங்களைப் பார்த்து உடனிருப்பவர்கள் பொறாமைப் படுவார்கள். உன்னத நிகழ்வுகள் நிகழப் பெறலாம். அரசியல் துறையினருக்கு அரசியலில் பதவி உயர்வு ஈடுபாடு அதிகரித்து காணப்படும். தந்தை மூலம் கிடைக்க வேண்டிய பாராட்டுகள் நிச்சயமாக கிடைக்கும். சிலரின் தேவைகளை புரிந்து  அவர்களுக்கு தேவையானவற்றை செய்து  வருவீர்கள். பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். மனக்கவலை நீங்கும். பணவரத்துகூடும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் வீண் அலைச்சல் உண்டாகும். எதையும் செய்யும் போது கவனமாக இருப்பது நல்லது. விசாகம் - 4: இந்த மாதம் தொழிலில் புதிய திருப்பங்களைக் காண்பீர்கள். வேறு ஊருக்குச் சென்று தொழில் செய்யும் வாய்ப்பு சிலருக்குக் கிடைக்கும். சமுதாயத்தில் உயர்ந்தவர்கள் உங்களுக்கு பாதுகாப்பாக இருப்பதால் மறைமுகமான போட்டிகளால் பாதிப்புகள் ஏற்படாது. உடலில் ஏற்படும் சிறிய உபாதைகளுக்கு உடனுக்குடன் வைத்தியம் செய்து கொண்டால் மருத்துவச் செலவுகளை குறைக்கலாம்.  அனுஷம்: இந்த மாதம் பங்குச் சந்தை போன்ற விஷயங்களில் நல்ல பலன்களை பெறுவீர்கள். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுக்குத் தேவையான அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்குவீர்கள். கவலைகொள்ள வைத்த கடன் தொல்லைகள் குறைவதால், உங்களின் மனதில் தைரியம் பிறக்கும்.  கேட்டை: இந்த மாதம் புதிய நண்பர்களிடம் கவனமாக இருக்கவும். பூர்வீகச் சொத்தில் இருந்த இழுபறியான நிலைமை மாறும். சகோதர, சகோதரிகளிடம் உள்ள கருத்து வேறுபாடுகளை களைந்து குடும்ப ஒற்றுமையை பேணிக்காப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றங்களை பெறுவீர்கள்.    பரிகாரம்: நமசிவாய மந்திரத்தை உச்சரித்து கொண்டே இருங்கள். தீவினை நெருங்காது. அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 2, 3 அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன் 25, 26, 27  தனுசு: கிரகநிலை: ராசியில் சனி, கேது - ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், ராகு - விரய ஸ்தானத்தில் சந்திரன், குரு(வ) என கிரகங்கள் வலம் வருகின்றன பலன்: முன்னேற்றத்திற்கான படிகளை தேடிச்செல்லும் தனுசு ராசியினரே, இந்த மாதம் எல்லா காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.  கடன் பிரச்சனை தீரும். தகராறு, வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.  நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும்.  கவுரவம் அதிகரிக்கும். மறைமுக நோய் ஏற்படலாம் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் புத்திசாதூரியத்தால் முன்னேற்றம் காண்பீர்கள்.  சரக்குகளை அனுப்பும் போது கூடுதல் கவனம் தேவை.  யாரிடமும் வீண் வாக்கு வாதம் வேண்டாம்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு காரியங்களை செய்து எதிர்பார்த்த வெற்றியை அடைவார்கள். உடன் பணிபுரிவோரின் மரியாதைக்கு ஆளாவீர்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்தபடியான சூழ்நிலைகள் அனைத்தும் நடந்தேறும். தொய்வின்றி உழைத்து மேலிடத்தாரிடம் நன்மதிப்பை பெற்று விடுவீர்கள். மூத்த கலைஞர்களின் பாராட்டுக்கு ஆளாவீர்கள். அரசியல் துறையினர் எதிர்பார்த்தபடி சூழ்நிலை அமையும். எடுத்த பணிகளை தீவிரமாக செய்து மேலிடப் பாராட்டை பெற முடியும். எதிர்பார்த்த அரசு விவகாரங்கள் நல்லபடியாக நடந்து முடியும்.  பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து திருப்திகரமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். விளையாட்டு போட்டிகளில் திறமை வெளிப்படும். மூலம்: இந்த மாதம் உங்கள் வேலைகள் அனைத்தும் திட்டமிட்டபடியே குறித்த காலத்திற்குள் முடிவடையும். உங்களின் வேலைகளில் தெளிந்த மனநிலையுடன் ஈடுபடுவீர்கள். மேலதிகாரிகளிடம் சுமுகமான உறவு நிலை உண்டாகும். சக ஊழியர்களின் குறைகளை முன்னின்று தீர்த்து வைப்பீர்கள்.  பூராடம்: இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பான  விஷயங்கள் சாதகமாக  நடக்கும். நயமாக பேசுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது. உத்திராடம் - 1: இந்த மாதம் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவு பலப்படும்.  பிள்ளைகள் மகிழ்ச்சியடைய தேவையானவற்றை செய்வீர்கள். காரிய அனுகூலம் உண்டாகும். மனதில்  ஏதாவது கவலை இருந்து வரும்.   பரிகாரம்: சுப்பிரமணிய சுவாமிக்கு நெய் விளக்கேற்றி வழிபடுங்கள். நன்மைகள் நடக்கும்.  அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன் சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 4, 5 அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன் 28, 29  மகரம்: கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் புதன், ராகு - லாப ஸ்தானத்தில் சந்திரன், குரு(வ) - விரைய ஸ்தானத்தில் சனி(வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன பலன்: வாய் வார்த்தைகளால் அனைவரையும் கவரும் மகர ராசியினரே, இந்த மாதம் காரியங்களில் தாமதமான போக்கு காணப்படும். உங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். உங்கள் பேச்சு வெறும் பேச்சு போல் மற்றவர்கள் நினைப்பார்கள். அதனால் அளவுடன் பேசுவது நல்லது. உங்களது உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. குடும்பத்தில் இருந்து வந்த மனம் நோகும் படியான சூழ்நிலைகள் மாறும். ஆனாலும் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே  எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும்.      தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். வியாபாரம் தொடர்பான அலைச்சலும் புதிய ஆர்டர் பற்றிய கவலையும் ஏற்படும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் திருப்தியாக உணர்வார்கள். எதிர்பார்த்த பணவரத்தும்  இருக்கும் . சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும்.  கலைத் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று மனதில் மகிழ்ச்சி உண்டாகப் பெறுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு முக்கிய நபரை சந்திக்க வாய்ப்புகள் உண்டாகும். அரசியல் கலைஞர்கள் பெரியோர்களின் ஆதரவிற்காக காத்துக் கொண்டிருப்பீர்கள். அரசு விவகாரங்களில் கையெழுத்திடும் போது நன்கு கவனமாக நடந்து கொள்ளுங்கள். எதிர்பார்த்த விசயங்கள் சற்று தாமதமாக நடந்து முடியும். பெண்களுக்கு சிக்கலான விஷயங்களை கூட சுமுகமாக முடித்து விடுவீர்கள். மனதடுமாற்றம் இல்லாமல் நிதானமாக செயல்படுவது நன்மைதரும்.  மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலையை தவிர்த்து கூடுதல் கவனத்து டன் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் இருக்கும். உத்திராடம் - 2, 3, 4: இந்த மாதம் மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும் பாராட்டு கிடைக்கும். மனகவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும். திருவோணம்: இந்த மாதம் தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க கூடிய சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள்  கிடைக்கும். அவிட்டம் - 1, 2: இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள். மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம்.   பரிகாரம்: ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று துளசி மாலை சாற்றி வழிபடுங்கள்.  அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 6, 7 அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன் 30, ஜூலை 1  கும்பம்: கிரகநிலை: சுக ஸ்தானத்தில் சுக்கிரன் - பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், ராகு - தொழில் ஸ்தானத்தில் குரு(வ), சந்திரன் - லாப ஸ்தானத்தில் சனி(வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன பலன்: அனைவரின் மனதிலும் உயரிய இடத்தில் இருக்கும் கும்ப ராசியினரே, இந்த மாதம் கவுரவ பிரச்சனை உண்டாகும். நீங்கள் நல்லதாக பேசினாலும் எதிரில் உள்ளவர்கள் அதை தவறான கண்ணோட்டத்துடனேயே பார்ப்பார்கள்.  குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்களை செயல்படுத்துவீர்கள். புதிதாக வீடு - மனை வாங்குவதற்கான வேலைகளைத் தொடங்குவீர்கள். தொழில் வியாபாரத்தில் முன்னேற்ற வாய்ப்புகள் எதிரில் வந்து தோன்றும். வியாபாரம் தொடர்பான செலவு திக்கு முக்காட வைப்பதால் கடன் வாங்க நேரலாம்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். உங்களுக்கு நற்பெயர் கிடைப்பதில் எந்த இடையூறும் இருக்காது. கலைத்துறையில் உள்ளவர்கள் சீரான வருமானத்தை  இப்போது எதிர்பார்க்கலாம். விட்டுக் கொடுத்து போவதன் மூலம் நன்மைகள் ஏராளமாக நடந்து வரும். புதிய வாய்ப்புகளையும் எதிர்பார்க்கலாம். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி உயர்வு சற்று தள்ளிப் போகலாம். மேலிடத்தின் பார்வை உங்கள் மீது படும். அதனால் எதிலும் சற்று எச்சரிக்கையுடன் செயல் படுவது உங்களுக்கு நன்மையைத் தரும்.  பெண்களுக்கு திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும். திட்டமிட்டபடி பாடங்களை படிப்பதில் கவனம் செலுத்துவீர்கள்.  அவிட்டம் - 3, 4: இந்த மாதம் வீண் செலவை  உண்டாகும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம்.  திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். ஸதயம்: இந்த மாதம் தொழில் வியாபாரம் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம்.  புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகம் தொடர்பான பயணங்கள்  செல்ல நேரலாம். உத்தியோகஸ்தர்கள் புத்தி சாதூரியத்தால் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள். பூரட்டாதி - 1, 2, 3: இந்த மாதம் குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே  இருந்த மனவருத்தம்  நீங்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. காரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.   பரிகாரம்: நவகிரகங்களை தினமும் வலம் வந்து வணங்கவும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, சனி சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 8, 9, 10 அதிர்ஷ்ட தினங்கள்: ஜுலை 2, 3   மீனம்: கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்கிரன் - சுகஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன், குரு(வ) - பாக்கிய ஸ்தானத்தில் சனி(வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன பலன்: களைப்பில்லாமல் உழைக்கும் மீனராசியினரே, இந்த மாதம் எதிலும் சாதகமான நிலை காணப்படும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். வாக்கு வன்மை ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் செவிசாய்ப்பார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். குடும்பத்தில்  சுபகாரியம் நடைபெறும். மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக  பொழுதை கழிப்பீர்கள். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன லாபம் ஏற்படும். தகப்பனாருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளி தொடர்புகளில் எச்சரிக்கை தேவை. தொழில் வியாபாரத்தில் முன்னேற்றத் திற்கு தேவையான பண உதவி கிடைக் கும். தொழிலாளர்கள் உங்களை பாராட்டுவார்கள். அவர்களின் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகம் தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு உத்தியோகம் கிடைக்கும்.  மனதில் இருந்த கவலைகள் நீங்கி அலுவலக வேலைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். முன்னேற்ற வாய்ப்புகள் கிடைக்கும்.  கலைத் துறையில் உள்ளவர்கள் எதிர்பார்த்த படி சூழ்நிலை அமையும். மூத்த கலைஞர்கள், பெரியோர்கள் உங்களுக்கு ஆசி கொடுப்பார்கள். அது உங்கள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.  அரசியல் கலைஞர்கள் உள்ளது உள்ளது படி நடந்து கொள்வது பலருக்கு பொறாமையாக இருக்கும். எதிரிகள் உங்களிடம் நட்பு பாராட்டுவார்கள். பெண்களுக்கு திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடித்து மன நிம்மதி அடைவீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மற்றவர்கள் மேல் இரக்கம் உண்டாகும்.  மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயத்தை விலக்கி விட்டு ஆர்வமாக படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. பூரட்டாதி - 4: இந்த மாதம் தனலாபம் கிடைக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் செலவு  ஏற்படும். கோபத்தால் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்திரட்டாதி: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். விற்பனை அதிகரிக்கும். வார இறுதியில் பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதூரியத்தால் வேலைகளை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கலாம். ரேவதி: இந்த மாதம் குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளின் செயல்களால் பெருமை அடைவீர்கள். உதவி கேட்டு உங்களை நாடி வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள்.  பரிகாரம்: தினமும் மகாலட்சுமி அஷ்டகம் படியுங்கள். வெற்றி கிட்டும்.  அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன் சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 11, 12 அதிர்ஷ்ட தினங்கள்: ஜூலை 4, 5   

newstm.in

Tags:
Next Story
Share it