1. Home
  2. ஜோதிடம்

9-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் பயணம் செல்ல வேண்டி இருக்கும்

9-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் பயணம் செல்ல வேண்டி இருக்கும்

9-10-2019-newstm-daily-astrology

9-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் பயணம் செல்ல வேண்டி இருக்கும்

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

9-Oct-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

புரட்டாசி - 22

புதன்கிழமை

ஏகாதசி இரவு 7.26 மணி வரை. பின் துவாதசி

அவிட்டம் இரவு 1.50 மணி வரை பின் சதயம்

மரண யோகம்

நாமயோகம்: சூலம்

கரணம்: வணிஜை

அகஸ்: 29.36

த்யாஜ்ஜியம்: -

நேத்ரம்: 2

ஜீவன்: 1

கன்னி லக்ன இருப்பு (நா.வி): 1.30

சூரிய உதயம்: 6.05


ராகு காலம்: மதியம் 12.00 - 1.30

எமகண்டம்: காலை 7.30 - 9.00

குளிகை: காலை 10.30 - 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்

துளசி கௌரி விரதம்.

ஸர்வ ஏகாதசி.

மதுரை ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஸப்தாவரணம்.

புஷ்பச் சப்பரத்தில் பவனி வரும் காட்சி.

இன்று மழை பெய்ய வாய்ப்பு உண்டு.

திதி: ஏகாதசி

சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்

சூரியன்

ஹஸ்தம் 4ம் பாதம் - பகை

சந்திரன்

கும்பம் - பகை

செவ்வாய்

உத்திரம் 4ம் பாதம் - நட்பு

புதன்

சுவாதி 3ம் பாதம் - நட்பு

குரு

கேட்டை 4ம் பாதம் - பகை

சுக்ரன்

சித்திரை 4ம் பாதம் - ஆட்சி

சனி

பூராடம் 1ம் பாதம் - நட்பு

ராகு

திருவாதிரை 4ம் பாதம் - நட்பு

கேது

பூராடம் 2ம் பாதம் - நட்பு

மேஷம்: கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில் ராஹூ -   ரண, ருண ஸ்தானத்தில்  சூர்யன்,  செவ்வாய் -  களத்திர ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன்  -  அஷ்டம ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி , கேது - தொழில் ஸ்தானத்தில்  சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.    இன்று பகல் 12.39 மணிக்கு  சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  பலன்: இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். மாணவர்கள் சகமாணவர்களை  அனுசரித்து செல்வது நன்மை தரும். கல்வியில் ஆர்வம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9ரிஷபம்: கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில் ராஹூ -  பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன்,   செவ்வாய்  -  ரண, ருண ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன்  - களத்திர ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் சனி, கேது -  பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று பகல் 12.39 மணிக்கு  சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  பலன்: இன்று நோய் நீங்கி ஆரோக்கியம் பெறுவீர்கள். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் பிறக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்படலாம். எதிர்பாராத காரிய தடைகள் வரும். வாகனங்களில் செல்லும் போது மிகவும் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9மிதுனம்: கிரகநிலை: ராசியில்  ராஹூ -   சுக ஸ்தானத்தில்  சூர்யன்,  செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன்  -  ரண, ருண ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சனி , கேது - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று பகல் 12.39 மணிக்கு  சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  பலன்: இன்று தொழில் வியாபாரத்தில் சுமாரான போக்கு காணப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செயலாற்றுவதன் மூலம் நன்மை அடைவார்கள். அலுவலக பணிகளில் தாமதம் ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9கடகம்: கிரகநிலை: தைரிய, வீர்ய ஸ்தானத்தில்  சூர்யன்,   செவ்வாய்  - சுக ஸ்தானத்தில்  புதன்,  சுக்ரன் -  பஞ்சம ஸ்தானத்தில் குரு - ரண, ருண ஸ்தானத்தில் சனி , கேது - களத்திர ஸ்தானத்தில்   சந்திரன் -  அயன, சயன, போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று பகல் 12.39 மணிக்கு  சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  பலன்: இன்று குடும்பத்தினருக்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும். பிள்ளைகளின் கல்வி அவர்களது செயல்களில் கவனம் செலுத்துவீர்கள். எதிலும் எதிர்பாராத தடைகள் உண்டாகலாம். தன்னம்பிக்கையுடன்  செயல்பட்டு காரிய வெற்றி அடைவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7சிம்மம்: கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில் சூர்யன்,   செவ்வாய் - தைரிய ஸ்தானத்தில்  புதன்,  சுக்ரன்  -  சுக  ஸ்தானத்தில்  குரு -  பஞ்சம ஸ்தானத்தில்  சனி , கேது - ரண, ருண ஸ்தானத்தில்  சந்திரன் -  லாப ஸ்தானத்தில்  ராஹூ   என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று பகல் 12.39 மணிக்கு  சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  பலன்: இன்று மாணவர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி நம்பிக்கையுடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தடைதாமதம் ஏற்படும். வீண் வழக்குகள் வரலாம். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம் கவனம் தேவை. அலைச்சலை சந்திக்க நேரிடும்.   அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5கன்னி: கிரகநிலை: ராசியில் சூர்யன்,   செவ்வாய்   - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  புதன்,  சுக்ரன்  - தைரிய ஸ்தானத்தில்  குரு -  சுக  ஸ்தானத்தில்  சனி , கேது - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - தொழில்  ஸ்தானத்தில்  ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று பகல் 12.39 மணிக்கு  சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  பலன்: இன்று பயணம் செல்ல வேண்டி இருக்கும். எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது கவனம் தேவை. விருப்பத்திற்கு மாறான சம்பவங்கள் நடக்கலாம். தொழில் வியாபாரத்தில் குறிப்பாக கூட்டு தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7துலாம்: கிரகநிலை: ராசியில்   புதன்,  சுக்ரன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  குரு - தைரிய ஸ்தானத்தில்  சனி , கேது - சுக ஸ்தானத்தில்  சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில்  ராஹூ -  அயன, சயன, போக ஸ்தானத்தில் சூர்யன்,   செவ்வாய்   என கிரகங்கள் வலம் வருகின்றன.   இன்று பகல் 12.39 மணிக்கு  சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  பலன்: இன்று வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது வியாபார மேன்மைக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9விருச்சிகம்: கிரகநிலை: ராசியில்  குரு - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சனி , கேது - தைரிய, வீர்ய ஸ்தானத்தில்  சந்திரன் -   அஷ்டம  ஸ்தானத்தில் ராஹு-  லாப ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய்  - அயன, சயன, போக ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று பகல் 12.39 மணிக்கு  சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  பலன்: இன்று குடும்பத்தில் திடீரென்று பிரச்சனைகள் தோன்றலாம். கணவன், மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படும்படி சம்பவம் நிகழலாம்.  பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்தி தருவதாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9தனுசு: கிரகநிலை: ராசியில்  சனி , கேது -  தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் -   களத்திர ஸ்தானத்தில் ராஹு-   தொழில் ஸ்தானத்தில் சூர்யன்,  செவ்வாய் - லாப ஸ்தானத்தில்  புதன்,  சுக்ரன்  - அயன, சயன, போக ஸ்தானத்தில் குரு  என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று பகல் 12.39 மணிக்கு  சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  பலன்: இன்று மனக்கவலை ஏற்படலாம். முயற்சிகளில் தடை ஏற்படலாம். எதிலும் எச்சரிக்கை தேவை. மாணவர்கள் மிகவும் கவனத்துடன் சந்தேகங்களை தெளிவாக தெரிந்து கொண்டு பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டு  போட்டிகளில் ஈடுபடும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9மகரம்: கிரகநிலை: ராசியில் சந்திரன் - ரண, ருண , ஸ்தானத்தில் ராஹூ -  பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன்,   செவ்வாய்  -  தொழில் ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன்  -  லாப ஸ்தானத்தில்  குரு - அயன, சயன,  போக ஸ்தானத்தில் சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று பகல் 12.39 மணிக்கு  சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  பலன்: இன்று முயற்சிகளில் தடை தாமதம் ஏற்படும். பணிநிமித்தமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குறிக்கோளற்ற வீண் பயணங்கள் அதனால் அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உண்டு. அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிட்டு அதை தீர்த்து வைக்க முயல்வதை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5கும்பம்: கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில்   ராஹூ -  அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன்,   செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில்  புதன்,  சுக்ரன்  - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சனி , கேது - அயன, சயன, போக ஸ்தானத்தில்   சந்திரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று பகல் 12.39 மணிக்கு  சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார்.  பலன்: இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வீண் அலைச்சல், பண வரத்தில் தாமதம் போன்றவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை இருக்கும். அலுவலகம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டிவரும். எந்திரங்களை கையாளும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9மீனம்: கிரகநிலை: சுக ஸ்தானத்தில்   ராஹூ  -  களத்திர ஸ்தானத்தில் சூர்யன்,  செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில்  ஸ்தானத்தில் சனி , கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று பகல் 12.39 மணிக்கு  சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  பலன்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகள் கல்வி மற்றும் நலனில் கூடுதல் கவனம் செலுத்து வது நன்மை தரும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

newstm.in

Trending News

Latest News

You May Like