1. Home
  2. ஜோதிடம்

6-8-2018 தினப்பலன் - வாரத்தின் முதல்நாள் எப்படி இருக்கப்போகிறது?

6-8-2018 தினப்பலன் - வாரத்தின் முதல்நாள் எப்படி இருக்கப்போகிறது?

daily-free-astrology-prediction-6-8-2018

6-8-2018 தினப்பலன் - வாரத்தின் முதல்நாள் எப்படி இருக்கப்போகிறது?

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்!

விளம்பி வருஷம் I தக்ஷிணாயணம் I க்ரீஷ்மருது I ஆடி 21 I இங்கிலீஷ்: 06 August 2018 I திங்கள்கிழமை

தசமி மறு நாள் காலை 3.56 மணி வரை. பின் ஏகாதசி I கிரு த்திகை காலை 10.49 மணி வரை. பின் ரோகிணி

வ்ருத்தி நாமயோகம் I வணிஜை கரணம் I மரண யோகம் I தியாஜ்ஜியம்: 50.02 I அகசு: 31.04

நேத்ரம்: 1 I ஜீவன்: 1/2 I கடக லக்ன இருப்பு: 6.54 I சூர்ய உதயம்: 6.05

ராகு காலம்: காலை 7.30 - 9.00 I எமகண்டம்: காலை 10.30 - 12.00 I குளிகை: மதியம் 1.30 - 3.00 I சூலம்: கிழக்கு I பரிகாரம்: தயிர்

குறிப்பு: இன்று கீழ்நோக்கு நாள் I ஸ்ரீவில்லிப்புத்தூ ர் ஸ்ரீஆண்டாள் சந்திரப் பிரபையிலும், ஸ்ரீரெங்கமன்னார் சிம்மவாகனத்திலும் திருவீதிஉலா

திதி: தசமி I சந்திராஷ்டமம்: விசாகம்

இந்த வார ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்களை தெரிந்துகொள்ள கிளிக் செய்யுங்கள்...

மேஷம்  கிரகநிலை:  தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது எனக் கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்:  இன்று முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும். உங்களது பேச்சை மற்றவர்கள் தவறாகப் புரிந்து கொள்வார்கள். எந்த ஒரு காரியமும் இழுப்பறியாக இருந்து முடிவில் சாதகமான பலன்தரும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்  அதிர்ஷ்ட எண்: 5, 6 சனிப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்களைத் தெரிந்துகொள்ள கிளிக் செய்யுங்கள்...ரிஷபம்  கிரகநிலை:  ராசியில் சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது எனக் கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்:  இன்று வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்குப் பொறுப்புகள் அதிகரிக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு  அதிர்ஷ்ட எண்: 4, 6மிதுனம்  கிரகநிலை:  தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் எனக் கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்:  இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். ஆனால் மனதில் குடும்பக் கவலை உண்டாகும். கணவன் மனைவி கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகள் உங்களது பேச்சை கேட்டு நடப்பது திருப்தி தரும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம்  அதிர்ஷ்ட எண்: 2, 9கடகம்  கிரகநிலை:  ராசியில் சூர்யன்,புதன், ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன் எனக் கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்:  இன்று காரியங்கள் செய்து முடிப்பதில் மெத்தன போக்குக் காணப்படும். எதிர்பாராத திருப்பமும் உண்டாகும். முன்பு கிடைத்த அனுபவம் இப்போது கை கொடுக்கும். பொறுப்புகள் கூடும். எதிலும் எச்சரிக்கையாகப் பேசுவது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை  அதிர்ஷ்ட எண்: 9, 3 இதைப் படிச்சீங்களா?  கிரிக்கெட் உலகின் சிறந்த ஃபிரண்ட்ஷிப் பார்ட்னர்கள் தோனி - ரெய்னா!சிம்மம்  கிரகநிலை:  தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு எனக் கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்:  இன்று காரிய தடை நீங்கும். குடும்பப் பிரச்னை தீரும். அடுத்த வரைநம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நன்மை தரும். ஏற்கனவே பாதியில் நின்ற பணிகள் நடக்கும். விருப்பத்திற்கு மாறாகச் சில காரியங்கள் நடக்கலாம்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்  அதிர்ஷ்ட எண்: 4, 6கன்னி  கிரகநிலை:  ராசியில் சுக்ரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு எனக் கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்:  இன்று தொழில் வியாபாரத்தில் தொய்வு காணப்படும். விட்ட இடத்தைப் பிடிக்கப் பாடுபட வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு வீண் அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்திற்காக வாக்குவாதம் செய்து அமைதியை குறைப்பார்கள்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்  அதிர்ஷ்ட எண்: 5, 6துலாம்  கிரகநிலை:  ராசியில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன் எனக் கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்:  இன்று கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். கவனம் தேவை. பிள்ளைகளிடம் அன்பாகப் பேசி பழகுவது நல்லது. பாதியில் நின்ற காரியங்களை விரைவாகச் செய்து முடிப்பீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்  அதிர்ஷ்ட எண்: 3, 7விருச்சிகம்  கிரகநிலை:  தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - லாப ஸ்தானத்தில் சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு எனக் கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்:  இன்று கடினமான பணிகளும் எளிதாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். பல யோகங்கள் உண்டாகும். நினைத்த காரியத்தைச் செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். புத்திசாதூரியத்தால் எந்தத் தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை  அதிர்ஷ்ட எண்: 1, 7தனுசு  கிரகநிலை:  ராசியில் சனி (வ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் குரு எனக் கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்:  இன்று எந்தஒரு பிரச்னையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்குக் கண்மூடி தனமாக எதையும் செய்யாமல் விழிப்புடன் இருப்பது லாபம் அதிகரிக்கச் செய்யும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு  அதிர்ஷ்ட எண்: 4, 5 இதைப் படிச்சீங்களா?  அமெரிக்காவில் 'கேப்டன்' - வைரலாகும் புகைப்படங்கள்மகரம்  கிரகநிலை:  ராசியில் செவ்வாய் (வ), கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) எனக் கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்:  இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே இதமான உறவு காணப்படும். பிள்ளைகள் மூலம் நன்மை உண்டாகும் அவர்களது செயல்களால் பெருமை கிடைக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை  அதிர்ஷ்ட எண்: 5கும்பம்  கிரகநிலை:  சுக ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது எனக் கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்:  இன்று எந்த ஒரு வேலையையும் விரைவாகவும், திறமையாகவும் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். விழிப்புடன் செயல்படுவது நல்லது. எல்லாக் காரியங்களும் அனுகூலமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்  அதிர்ஷ்ட எண்: 2, 3 இதைப் படிச்சீங்களா?  தமிழக கோவில்களின் சிறப்புக்கள்... சுவாரஸ்ய தகவல்கள்!மீனம்  கிரகநிலை:  தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது எனக் கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்:  இன்று பல வகையிலும் நற்பலன்களைத் தரும். தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சிதரும். மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். கவனமாகப் பேசுவது நல்லது. வீண்பழி உண்டாகலாம்.  அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்  அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

newstm.in

Trending News

Latest News

You May Like