1. Home
  2. ஜோதிடம்

5-8-2018 - தினப்பலன்: இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்!

5-8-2018 - தினப்பலன்: இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்!

daily-free-astrology-prediction-5-8-2018

5-8-2018 - தினப்பலன்: இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்!

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

இன்றைய பஞ்சாங்கம்...

விளம்பி வருஷம் I தக்ஷிணாயணம் I க்ரீஷ்மருது I ஆடி 20 I இங்கிலீஷ்: 05 August 2018 I ஞாயிற்றுக்கிழமை

அஷ்டமி காலை 7.07 மணி வரைபின் நவமி. நவமி மறு நாள் காலை 5.43 மணி வரை. பின் தசமி I பரணி பகல் 11.33 மணி வரை. பின் கிருத்திகை

கண்டம் நாமயோகம் I கௌலவம் கரணம் I சித்த யோகம் I தியாஜ்ஜியம்: 42.45 I அகசு: 31.05 I நேத்ரம்: 1

ஜீவன்: 1/2 I கடக லக்ன இருப்பு: 6.58 I சூர்ய உதயம் : 6.05 I ராகு காலம்: மாலை 4.30 - 6.00

எமகண்டம்: மதியம் 12.00 - 1.30 I குளிகை: மதியம் 3.00 - 4.30 I சூலம்: மேற்கு I பரிகாரம்: வெல்லம்

குறிப்பு: இன்று கீழ்நோக்கு நாள் I ஸ்ரீவில்லிப்புத் தூர் ஸ்ரீஆண்டாள் பிரம்மோற்சவாரம்பம். I பதினாறு வண்டிச்சப்பரத்தில் பவனி.

கார்த்திகை விரதம். I கரிநாள் I திதி: நவமி I சந்திராஷ்டமம்: சுவாதி, விசாகம்

இந்த வார ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்களைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்...

மேஷம்  கிரகநிலை: ராசியில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்: இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறையும். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனில் அக்கறைகாட்ட வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே மறைமுக மனவருத்தம் இருக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 சனிப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்களைத் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்...ரிஷபம்  கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்: இன்று ஏதாவது ஒரு காரணமாக வாக்குவாதம் ஏற்படலாம். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பயணம் செல்ல நேரலாம். வீண் அலைச்சல், காரிய தடை, மனகுழப்பம் ஏற்படலாம். கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5 இதைப் படிச்சீங்களா? உங்கள் நட்சத்திரத்தை சொல்லுங்கள் (லிங்கை கிளிக் செய்யுங்க)... நீங்கள் யார் என்று சொல்கிறோம்! பகுதி - 2மிதுனம்  கிரகநிலை: லாப ஸ்தானத்தில் சந்திரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்: இன்று எதிர்பார்த்த காரிய நன்மைகள் உண்டாகும். செல்வம் சேரும். எதிர்ப்புகள் விலகும். பயணத்தின் மூலம் லாபம் உண்டாகும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6கடகம்  கிரகநிலை: ராசியில் சூர்யன்,புதன், ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்: இன்று விரும்பி பொருள்களை வாங்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த இழுபறியான நிலை நீங்கி சாதகமான பலன் கிடைக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6சிம்மம்  கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவை தொகை வந்து சேரலாம். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சகஜமான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9கன்னி  கிரகநிலை: ராசியில் சுக்ரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன.   பலன்கள்: இன்று எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நீண்டதூர தகவல்கள் சாதகமானதாக இருக்கும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. வீண் அலைச்சலும் காரிய தாமதமும் உண்டாகும். புதிய நபர்களின் நட்பை ஏற்படுத்தும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 இதைப் படிச்சீங்களா? கஜினிகாந்த் திரை விமாச்னம்... முரட்டுக்குத்து மாதிரி படம் எடுக்க ஆர்யாவை பலியிட்ட டைரக்டர்!துலாம்  கிரகநிலை: ராசியில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்: இன்று உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். சில்லறை பிரச்னையை சமாளிக்க வேண்டி இருக்கும். பணம் இருந்தும் உரிய நேரத்தில் கைக்கு கிடைக்காமல் தாமதமாக வரும். தொழில் வியாபாரம் சீராக நடக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நன்மைதரும்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9விருச்சிகம்  கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - லாப ஸ்தானத்தில் சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.   பலன்கள்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் அலுவலக வேலைகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கோபமான பேச்சு தலைதூக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 6 இதைப் படிச்சீங்களா? சண்டி ராணி ஐஸ்வர்யா செய்ததில் எந்த தப்பும் இல்லையாம்... எரிச்சல் கிளப்பும் பிக்பாஸ்!தனுசு  கிரகநிலை: ராசியில் சனி (வ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்: இன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. அடுத்தவர் கூறுவதை யோசித்து பார்த்து அதன் பிறகு அந்த காரியத்தில் ஈடுபடுவது நன்மை தரும். நட்பு வட்டம் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6மகரம்  கிரகநிலை: ராசியில் செவ்வாய் (வ), கேது - சுக ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்: இன்று குழப்பங்கள் நீங்கும். எதிர்ப்புகள் அகலும். நீங்கள் எதிலும் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். ஏதாவது ஒரு கவலை மனதில் இருக்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6கும்பம்  கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்: இன்று பணவரத்து தாமதமாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்கு பாடுபட வேண்டி இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் எதிலும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படாமல் ஆலோசித்து செயல்படுவது வெற்றிக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பக்குவமாக செயல்படுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9 இதைப் படிச்சீங்களா? நண்பர்கள் தினம் ஸ்பெஷல்... நட்பைக் கொண்டாடும் 8 பாடல்கள் எவை தெரியுமா?மீனம்  கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்: இன்று குடும்பத்தில் உங்களது வார்த்தைக்கு மதிப்பு இருக்கும். கணவன், மனைவிக் கிடையே சகஜநிலை காணப்படும். பிள்ளைகள் மூலம் நன்மை உண்டாகும். எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5

newstm.in

Trending News

Latest News

You May Like