1. Home
  2. ஜோதிடம்

4-7-2018 தினப்பலன்! - இந்த ராசிகாரர்களுக்கு நிதி பிரச்னை வரலாம்

4-7-2018 தினப்பலன்! - இந்த ராசிகாரர்களுக்கு நிதி பிரச்னை வரலாம்

daily-free-astrology-4-7-2018

4-7-2018 தினப்பலன்! - இந்த ராசிகாரர்களுக்கு நிதி பிரச்னை வரலாம்

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்!

விளம்பி வருஷம் I உத்தராயணம் I க்ரீஷ்மருது

ஆனி 20 I இங்கிலீ ஷ்: 04 July 2018 I புதன்கிழமை

ஷஷ்டி இரவு 8.44 மணி வரை. பின் ஸப்தமி I பூரட்டாதி இரவு 2.35 மணி வரை. பின் உத்திரட்டாதி

சௌபாக்யம் நாமயோ கம் I கரஜை கரணம் I அமிர்த யோகம்

தியாஜ்ஜியம்: 4.51 I அகசு: 31.31 I நேத்ரம்: 2 I ஜீவன்: 1/2 I மிதுன லக்ன இருப்பு: 6.48 I சூர்ய உதயம்: 5.58

ராகு காலம்: மதியம் 12. 00 - 1.30 I எமகண்டம்: காலை 7.30 - 9.00 I குளிகை: காலை 10.30 - 12.00

சூலம்: வடக்கு I பரிகாரம்: பால் I இன்று கீழ் நோக்கு நாள்

சோழவந்தான் ஸ்ரீ ஜனக மாரியம்மன் மஞ்சள் நீராட்டு விழா. ஊஞ்சலில் உற்சவ ஸேவை.

திதி: ஷஷ்டி I சந்திராஷ்டமம்: ஆயில்யம்

மே ஷம்

கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன் - சுக ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் - களத்திர ஸ்தானத்தில் குரு(வ) - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று கணவ ன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் முடிந்தவரை பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உற்றார்- உறவினர்களை அனுசரி த்து நடந்து கொண்டால் மட்டுமே அனுகூலமானப்பலனைப் பெறமுடியும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தொடர் முயற்சிகளுக்குப் பின்பே சாதகப்பலன் உண்டாகும். பொருளாதாரத்தில் பிரச்னை இருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 3

ரிஷ பம்

கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு(வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகையை ஈடுபடுத்தாமல் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனநிறைவைத்தரும். வேலைப்பளு அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சியளிக்கும். குடும்ப வாழ்வு சுமூகமாக இருக்கும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

மிது னம்

கிரகநிலை: ராசியில் சூர்யன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு(வ) - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய், கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று தொழில், வியாபாரத்தில் நெருக்கடிகள், போட்டி, பொறாமைகள் போன்றவற்றைச் சமாளிக்க வேண்டிவரும். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்வதும், வேலையாட்களிடம் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவதும் உத்தமம். பண வரவு, பொருளாதாரத்தில் பாதிப்பு இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். பயப்படும் அளவுக்கு பிரச்னைகள் இல்லை.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

கட கம்

கிரகநிலை: ராசியில் ராகு, சுக்ரன், புதன் - சுக ஸ்தானத்தில் குரு(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று தண்ணீர் தொடர்புடைய பாதிப்புகள், உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி குறையும். அடிக்கடி உடல் நிலையிலும் பாதிப்புகள் உண்டாகும். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். வார்த்தைகளை கவனத்துடன் வெளியிடுங்கள். மன வருத்தம் தரக்கூடிய வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள். பொறுமையாக, கவனமாக இருந்தால் பிரச்னைகளை எளிதில் சமாளிக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

சிம் மம்

கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு(வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் சூர்யன் - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று பணவரவுகளில் தடைகள் நிலவுவதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய திண்டாட வேண்டியிருக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும். உற்றார், உறவினர்களால் எதிர்ப்புகள் அதிகரிக்கும். புத்திரர்களால் மனசஞ்சலங்களும் வீண்விரயங்களும் ஏற் படும். வேலையில் குறைவு இருக்காது. எதிலும் கவனமாக செயல்பட்டால் எதிர்பார்க்காத திடீர் உதவிகளால் எதையும் சமாளிக்கமுடியும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கன் னி

கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு(வ) - சுக ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன் - லாப ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று எதிர்பார்த்த லாபத்தை விட குறைவாகவே கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாத சூழ்நிலைகளால் பிறரின் நம்பிக்கையை இழக்க நேரிடலாம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுத்தால் வீண் பிரச்னைகள் ஏற்படும். உங்களை, உங்கள் குடும்பத்தை நினைத்து எந்த காரியத்திலும் ஈடுபடுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

துலா ம்

கிரகநிலை: ராசியில் குரு(வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று தொழில், வியாபாரம் செய்பவர்களுக்குப் போட்டிகள் அதிகரிக்கும். எந்தவொரு புதிய முயற்சியிலும் வெற்றிகளை அடைவதில் தடைகள் ஏற்படும். அபிவிருத்திக் குறைவதால் ஆர்டர்களும் குறையும். வங்கிக் கடன்களைத் திருப்பிச்செலுத்த நெருக்கடி ஏற்படும். எதைப் பேசுவதாக இருந்தாலும் பேச்சில் நிதானம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா

அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6

விருச் சிகம்

கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - சுக ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு(வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று தொழிலாளர்களும் தேவையற்ற பிரச்னைகளை ஏற்படுத்துவார்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் வீண்செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். பொருட்தேக்கம் உண்டாகி லாபம் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு அதிகாரிகளின் கெடுபிடிகளால் வேலைப்பளு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

னுசு

கிரகநிலை: ராசியில் சனி (வ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் - லாப ஸ்தானத்தில் குரு(வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புக் குறைவாக இருக்கும். நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவிகளும் பிறர் ஏற்படுத்தும் பிரச்னைகளால் தாமதப்படும். வேலையில் ஈடுபாடற்றநிலை ஏற்படும். பிறர் செய்யும் தவறுகளுக்கும் நீங்களே பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

மகர ம்

கிரகநிலை: ராசியில் செவ்வாய், கேது - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் - தொழில் ஸ்தானத்தில் குரு(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று புதிய வேலை தேடுபவர்களுக்கும் கிடைக்கும் வாய்ப்புகளை தற்போது பயன்படுத்திக்கொள்வது சிறப்பு. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகள் ஏற்படும். நினைத்த காரியங்களை நிறைவேற்ற முடியாமல் எல்லாவகையிலும் நெருக்கடிகள் நிலவும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கும் பம்

கிரகநிலை: ராசியில் சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு(வ) - லாப ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று பணவரவுகளிலும் தடைகள் நிலவினாலும் குடும்பத் தேவைகள் பூர்த்தி ஆகும். பிறரிடம் எந்தவொரு பொருளையும் இரவல் வாங்குவதைத் தவிர்க்கவும். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். புத்திரர்களாலும் வீண் பிரச்னைகளைச் சந்திப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

மீ னம்

கிரகநிலை: சுக ஸ்தானத்தில் சூர்யன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு(வ) - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் - என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று பணிபுரியும் பெண்களுக்கு உடனிருப்பவர்களால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படும். அரசியல்வாதிகளின் பெயர், புகழுக்கு களங்கங்கள் உண்டாகும். உடனிருப்பவர்களே வீண்பிரச்னைகளை ஏற்படுத்துவார்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

newstm.in

Trending News

Latest News

You May Like