1. Home
  2. ஜோதிடம்

3-6-2018 தினபலன்! - இன்று இந்த ராசிக்காரர்கள் வாயைத் திறக்காமல் இருப்பது நல்லது!

3-6-2018 தினபலன்! - இன்று இந்த ராசிக்காரர்கள் வாயைத் திறக்காமல் இருப்பது நல்லது!

daily-free-astrology-3-6-2018

3-6-2018 தினபலன்! - இன்று இந்த ராசிக்காரர்கள் வாயைத் திறக்காமல் இருப்பது நல்லது!

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணித்த இன்றைய ராசி பலன் மற்றும் பஞ்சாங்கம்!

விளம்பி வருஷம் I உத்தராயணம் I வஸந்தருது

வைகாசி 20 I இங்கிலீஷ்: 03 June 2018 I ஞாயிற்றுக்கிழமை

பஞ்சமி மறு நாள் காலை 5.10 மணி வரை. பின் ஷஷ்டி தொடர்கிறது

உத்திராடம் பகல் 11.01 மணி வரை. பின் திருவோணம்

ராகு காலம்: மாலை 4.30 - 6.00 I எமகண்டம்: மதியம் 12.00 - 1.30 I குளிகை: மதியம் 3.00 - 4.30

சூலம்: மேற்கு I பரிகாரம்: வெல்லம் I இன்று மேல் நோக்கு நாள்

திதி:பஞ்சமி I சந்திராஷ்டமம்: திருவாதிரை, புனர்பூசம்

மேஷம்:

கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் ராகு - களத்திர ஸ்தானத்தில் குரு(வ) - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், கேது, சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று மிகச் சிறந்த பலன்களை உழைப்பின் மூலம் அடையும் நாளிது. நண்பர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்து மன நிறைவு அடைவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

ரிஷபம்

கிரகநிலை:

ராசியில் சூர்யன், புதன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு(வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி (வ) பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது, சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று உங்கள் எதிரிகளின் பலம் குறையும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். மன அழுத்தம் மறையும். சிந்தனையில் தெளிவு உண்டாகும். இந்த மகிழ்ச்சியை நீட்டிக்க, உங்கள் குல தெய்வம் அல்லது இஷ்ட தெய்வ கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று வாருங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

மிதுனம்

கிரகநிலை: ராசியில் சுக்ரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு(வ) - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய், கேது, சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன. சந்திராஷ்டமம்: திருவாதிரை, புனர்பூசம்

பலன்: இன்று சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் மூலமாக நன்மை அடைவீர்கள். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். ஆன்மீகப் பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். உங்கள் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். புத்திசாலிகளின் நட்பைப் பெற்று பலனடைவீர்கள். திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம். எனவே, வாயைத் திறக்காமல் இருப்பதே உங்களுக்கு நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

கடகம்

கிரகநிலை: ராசியில் ராகு - சுக ஸ்தானத்தில் குரு(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், கேது, சந்திரன் - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று எதிரிகளால் தொல்லைகள் ஏற்படாது. உடல் உபாதைகள் ஏதேனும் இருப்பின், இக்கால கட்டத்தில் தீரும். வீண் வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். அலைச்சல்களுடன் நடந்த செயல்கள் நல்லபடியாக முடிவடையும். வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்பவும் கை வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்

திர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

சிம்மம்

கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு(வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி (வ) ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், கேது, சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன் - லாப ஸ்தானத்தில் சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று சிலர் மனம் விரும்பிய வீட்டிற்குக் குடி பெயர்வார்கள். தக்க சமயத்தில் உயர்ந்தவர்களின் நட்பைப் பெற்று கௌரவக் குறைவு ஏற்படாமல் காக்கப்படுவீர்கள். களவு போயிருந்த பொருட்கள் திரும்பவும் கிடைக்கும். உறுதியின்றிச் செய்த வேலைகளில் ஒரு பிடிப்பு ஏற்பட்டு அவை மளமளவென்று நடந்தேறும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

கன்னி

கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு(வ) - சுக ஸ்தானத்தில் சனி (வ) பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது, சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். வருமானம் சீராக இருக்கும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். சக ஊழியர்களுடன் நல்ல நட்பு தொடர்வதால் உங்களின் வேலைகள் குறித்த காலத்திற்குள் நிறைவேறிவிடும். எனவே இன்று உங்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7


துலாம்:

கிரகநிலை: ராசியில் குரு(வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) சுக ஸ்தானத்தில் செவ்வாய், கேது, சந்திரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று உங்களின் வேலைத் திறனைக் கூட்டிக்கொள்ள புதிய அலுவலகப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள். திருப்திகரமான நாளாகவே இன்றைய தினம் இருக்கும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுங்கள் மகிழ்ச்சியான நாளாக மாறிவிடும்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9


விருச்சிகம்:

கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது, சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் குரு(வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று உங்களின் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு இன்றைய நாள் நன்றாக இருக்கும். வியாபாரிகளுக்கு பொருட்களின் விற்பனை மிகவும் நன்றாகவே இருக்கும். அரசியல்வாதிகள், தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9


தனுசு:

கிரகநிலை: ராசியில் சனி (வ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், கேது, சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் குரு(வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் சொந்தங்களுக்காகச் செலவு செய்வீர்கள். சக ஊழியர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். என்னதான் சொந்தங்களுக்கு செலவு செய்தாலும் அவர்கள் உங்களை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அதற்காக உங்கள் இயல்பை நீங்கள் விட்டுக்கொடுத்துவிட வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9


மகரம்:

கிரகநிலை: ராசியில் செவ்வாய், கேது, சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில் குரு(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று ராசியை பார்க்கும் குரு பகவான், லாப ராசியைப் பார்க்கும் செவ்வாய் ஆகியோரால் போட்ட திட்டங்களுக்கு ஏற்பட்டுக் கொண்டிருந்த தன வருவாய் சிக்கல்களை மெல்ல மெல்ல சமாளிப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும். மகிழ்ச்சியான நாளாக இன்று இருக்கும்!

அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5


கும்பம்:

கிரகநிலை: சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் குரு(வ) - லாப ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், கேது, சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன

பலன்: இன்று வரவேண்டிய பணபாக்கிகள் வசூலாகும். பண விஷயங்கள் தாராளமயமாக இருக்கும். இருந்தபோதும் ராசியைப் பார்க்கும் கேதுவால் அவ்வப்போது சிற்சில வேளைகளில் கையைப் பிசைந்து கொண்டு இருப்பீர்கள். அது எல்லாம் தற்காலிகமானதுதான் என்பதால் கவலையின்றி துணிவுடன் செயல்படுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9


மீனம்:

கிரகநிலை: தைர்ய வீர்ய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு(வ) - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய், கேது, சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: நீங்கள் கஷ்டம் வெளியே தெரியாது. நீங்கள் எபோதுமே பிறர் கண்ணுக்கு சௌகரியமான வாழ்க்கை வாழும் ஆளாகத் காட்சி தருவீர்கள். நீங்கள் யாரிடமும் உங்களது குறைகளைத் தெரிவித்துக் கொள்ள மாட்டீர்கள். இன்று உங்கள் கஷ்டங்கள் மறையும். குடும்பத்தினருடன் சென்று இஷ்ட தெய்வத்தை வணங்கி வாருங்கள். நிம்மதி கிடைக்கும்!

அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

ராசி பலன்கள் மற்றும் செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ள newstm.in உடன் இணைந்திருங்கள்!

newstm.in

Trending News

Latest News

You May Like