1. Home
  2. ஜோதிடம்

30-10-2018 தினப்பலன்- இந்த ராசிக்காரர்கள் எந்த வேலையில் ஈடுபட்டாலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

30-10-2018 தினப்பலன்- இந்த ராசிக்காரர்கள் எந்த வேலையில் ஈடுபட்டாலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

30-10-2018-newstm-daily-free-astrology

30-10-2018 தினப்பலன்- இந்த ராசிக்காரர்கள் எந்த வேலையில் ஈடுபட்டாலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்

விளம்பி வருஷம் I தக்ஷிணாயணம் Iசரத்ருது I ஐப்பசி 13 I இங்கிலீஷ்: 30 October 2018 I செவ்வாய்க்கிழமை

ஷஷ்டி பகல் 2.26 மணி வரை. பின் ஸப்தமி I திருவாதிரை காலை 7.04 வரை பின் புனர்பூசம். I புனர்பூசம் மறு நாள் காலை 5.31 மணி வரை. பின் பூசம்

ஸித்தம் நாமயோகம் I வணிஜை கரணம் I மரண யோகம்

தியாஜ்ஜியம்: 30.23 Iஅகசு: 29.08 I நேத்ரம்: 2 I ஜீவன்: ½ I துலாம் லக்ன இருப்பு: 7.20 I சூர்ய உதயம்: 6.08

ராகு காலம்: மதியம் 3.00 - 4.30 I எமகண்டம்: காலை 9.00 - 10.30 I குளிகை: மதியம் 12.00 - 1.30 I சூலம்: வடக்கு I பரிகாரம்: பால்

குறிப்பு:இன்று சமநோக்கு நாள் I பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு.

திதி: திதித்துவயம் I சந்திராஷ்டமம்: மூலம்

உங்கள் ராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்கள் மற்றும் பாிகாரங்களை படிக்க கிளிக் செய்யுங்கள்...

மேஷம்: கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - சுகஸ்தானத்தில் ராகு - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன்(வ), சூர்யன்  - அஷ்டம ஸ்தானத்தில் குரு, புதன்   - பாக்கிய ஸ்தானத்தில் சனி  - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறையும். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனில் அக்கறைகாட்ட வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே மறைமுக மனவருத்தம் இருக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9ரிஷபம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன்(வ), சூர்யன்   - களத்திர ஸ்தானத்தில் குரு, புதன்   - அஷ்டம ஸ்தானத்தில் சனி  - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று ஏதாவது ஒரு காரணமாக வாக்குவாதம் ஏற்படலாம். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது.  காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பயணம் செல்ல நேரலாம். வீண் அலைச்சல், காரிய தடை, மனகுழப்பம் ஏற்படலாம். கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5மிதுனம்: கிரகநிலை: ராசியில் சந்திரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில்  சுக்ரன்(வ), சூர்யன்   - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு, புதன்   - களத்திர ஸ்தானத்தில்  சனி  - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று எதிர்பார்த்த காரிய நன்மைகள் உண்டாகும். செல்வம் சேரும். எதிர்ப்புகள் விலகும். பயணத்தின்  மூலம் லாபம் உண்டாகும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6 தினம் ஒரு மந்திரம் - மழலை செல்வத்திற்கு ஏங்குபவரா? இந்த சுலோகத்தை தினமும் சொல்லுங்கள்கடகம்: கிரகநிலை: ராசியில் ராகு - சுக ஸ்தானத்தில்  சுக்ரன்(வ), சூர்யன்   - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு, புதன்   - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி  - களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய், கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று விரும்பிய பொருள்களை வாங்க  எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த இழுபறியான  நிலை நீங்கி சாதகமான பலன் கிடைக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6சிம்மம்: கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன்(வ), சூர்யன்   - சுகஸ்தானத்தில் குரு, புதன்   - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி  - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன்  - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவை தொகை  வந்து சேரலாம். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சகஜமான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே  இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9கன்னி: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன்(வ), சூர்யன்   - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு, புதன்   - சுக ஸ்தானத்தில் சனி  - பஞ்சம் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன்  - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நீண்டதூர தகவல்கள் சாதகமானதாக இருக்கும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. வீண் அலைச்சலும் காரிய தாமதமும் உண்டாகும். புதிய நபர்களின்  நட்பை ஏற்படுத்தும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 வீட்டில் கண் திருஷ்டி நீங்க, தினமும் இதை செய்யுங்கள்துலாம்: கிரகநிலை: ராசியில் சுக்ரன்(வ), சூர்யன்   - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, புதன்   - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி  - சுக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன்  - தொழில் ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று  உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். சில்லறை பிரச்சனையை சமாளிக்க  வேண்டி இருக்கும். பணம் இருந்தும் உரிய நேரத்தில் கைக்கு கிடைக்காமல் தாமதமாக வரும். தொழில் வியாபாரம் சீராக நடக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.  பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நன்மைதரும்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9விருச்சிகம்: கிரகநிலை: ராசியில் குரு, புதன்   - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி  -  தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன்  - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன்(வ), சூர்யன்   என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் அலுவலக வேலைகளை  செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கோபமான பேச்சு தலைதூக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 6தனுசு: கிரகநிலை: ராசியில் சனி  - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன்  - அஷ்டம ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் சுக்ரன்(வ), சூர்யன்   - அயன சயன போக ஸ்தானத்தில் குரு, புதன்   என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. அடுத்தவர் கூறுவதை யோசித்து பார்த்து அதன் பிறகு அந்த காரியத்தில்  ஈடுபடுவது நன்மை தரும். நட்பு வட்டம் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6 இந்திர பூஜையை விட மேலான கோ பூஜைமகரம்: கிரகநிலை: ராசியில் செவ்வாய், கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன்  - களத்திர ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில்  சுக்ரன்(வ), சூர்யன்   - லாப ஸ்தானத்தில் குரு, புதன்   - அயன சயன போக ஸ்தானத்தில் சனி  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று குழப்பங்கள் நீங்கும். எதிர்ப்புகள் அகலும். நீங்கள் எதிலும் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். ஏதாவது ஒரு கவலை மனதில் இருக்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.   அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6கும்பம்: கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில்  சுக்ரன்(வ), சூர்யன்   - தொழில் ஸ்தானத்தில் குரு, புதன்   - லாப ஸ்தானத்தில் சனி  - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று பணவரத்து தாமதமாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்கு பாடுபட வேண்டி இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள்  எதிலும்  எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படாமல் ஆலோசித்து  செயல்படுவது வெற்றிக்கு உதவும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் பக்குவமாக  செயல்படுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9    மீனம்: கிரகநிலை: சுகஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன்(வ), சூர்யன்   - பாக்கிய ஸ்தானத்தில் குரு, புதன்   - தொழில்  ஸ்தானத்தில் சனி  - லாப ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று குடும்பத்தில் உங்களது வார்த்தைக்கு மதிப்பு இருக்கும். கணவன், மனைவிக் கிடையே  சகஜநிலை காணப்படும்.  பிள்ளைகள் மூலம் நன்மை உண்டாகும். எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் எச்சரிக்கையுடன்  செயல்படுவது நல்லது.  அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5

newstm.in

Trending News

Latest News

You May Like