1. Home
  2. ஜோதிடம்

30-07-2020 - தினப்பலன்: இந்த ராசிகளுக்கு அமோகமாக இருக்கும்!!

30-07-2020 - தினப்பலன்: இந்த ராசிகளுக்கு அமோகமாக இருக்கும்!!

30-07-2020 - தினப்பலன்: இந்த ராசிகளுக்கு அமோகமாக இருக்கும்!!

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன்  - தைரிய ஸ்தானத்தில் ராஹூ - சுகஸ்தானத்தில் சூர்யன், புதன் - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன்  -  பாக்கிய ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ)  - விரைய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன. 

இன்று மாலை 5.42 மணிக்கு சுக்கிர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். அதிலும் கலைத்துறையில் டெக்னிக்கல் சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் குவியும். நல்ல நட்பு வட்டாரம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

கிரகநிலை:

ராசியில் சுக்ரன்  - குடும்ப ஸ்தானத்தில்  ராஹூ - தைரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - களத்திர ஸ்தானத்தில் சந்திரன்  -   அஷ்டம ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ)  - லாப ஸ்தானத்தில் செவ்வாய்   என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று மாலை 5.42 மணிக்கு சுக்கிர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று இலக்கியம், கதை, கவிதைத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். பங்குதாரர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். தங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்ள சரியான நாளிது. கலைத்துறையினருக்கு ஓரளவு முன்னேற்றம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

கிரகநிலை:

ராசியில்  ராஹூ - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன்  -  களத்திர ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ)  - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - விரைய ஸ்தானத்தில் சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று மாலை 5.42 மணிக்கு சுக்கிர பகவான் ராசிக்கு மாறுகிறார்.

பலன்:

இன்று புதிய பொறுப்புகள் வந்து சேரும். கிடப்பில் போட்டிருந்த வேலைகளை செய்வீர்கள். ஊதிய விஷயங்களில் நல்ல மனநிலை இருக்கும். வியாபாரிகளுக்கு லாபம் ஈட்டும் காலமிது. பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

கிரகநிலை:

ராசியில் சூர்யன், புதன் - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - ரண, ருண ஸ்தானத்தில்  கேது, குரு (வ), சனி (வ)  -  பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சுக்ரன்  - அயன, சயன, போக ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று மாலை 5.42 மணிக்கு சுக்கிர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று பிதுரார்ஜித சொத்து விஷயங்களில் ஒரு நல்ல முடிவுகள் வந்து சேரும். குடும்பச் செலவினங்கள் தாராளமாகும். பிள்ளைகள் வழியில் கடன்பெற வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பார்த்துக் கொண்டிருக்கும் வேலையில் இடமாறுதல்கள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

கிரகநிலை:

சுக ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில்  கேது, குரு (வ), சனி (வ)  -  அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன்  -  லாப ஸ்தானத்தில்  ராஹூ - விரைய ஸ்தானத்தில் சூர்யன், புதன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று மாலை 5.42 மணிக்கு சுக்கிர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று தம்பதிகளுக்குள் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். வழக்கு வியாஜ்ஜியங்களில் நிலுவைகள் தொய்வு ஏற்படலாம். ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் சந்திரன் - சுக  ஸ்தானத்தில்  கேது, குரு (வ), சனி (வ)  - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன்  - தொழில்  ஸ்தானத்தில்  ராஹூ - லாப ஸ்தானத்தில்  சூர்யன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று மாலை 5.42 மணிக்கு சுக்கிர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று தடைபட்டிருந்த சுபகாரியங்கள் அனைத்தும் நடப்பதற்குண்டான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். வீடு கட்டும் முயற்சியில் உள்ளவர்களுக்கு துரித கதியில் பணிகள் நடைபெறும். உறவுகள், நண்பர்கள் மத்தியில் இருந்த கருத்து வேற்றுமை அகலும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - தைரிய ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ)  - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன்  - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன. 

இன்று மாலை 5.42 மணிக்கு சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று சுமூகமான அணுகுமுறைகளை வகுத்துக் கொள்வீர்கள். பத்தில் உலவும் புதன் வழக்கில் வெற்றி அடைவதற்குண்டான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவார். நெடுங்காலமாக மனதில் தேங்கிக் கிடந்த திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

கிரகநிலை:

ராசியில் சந்திரன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ)   -  பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன்   - அஷ்டம  ஸ்தானத்தில் ராஹு - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று மாலை 5.42 மணிக்கு சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். ஆன்மீக விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். புதிய நட்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். நல்ல பல குணாம்சங்கள் வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

கிரகநிலை:

ராசியில்  கேது, குரு (வ), சனி (வ)  -  சுக ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன்  -  களத்திர ஸ்தானத்தில்  ராஹு - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன் - விரைய ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று மாலை 5.42 மணிக்கு சுக்கிர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று புதிய கடனுக்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல் நன்மை பயக்கும். தொழிற்சாலைகளில் பணி செய்வோருக்கு கடுமையான உழைக்க வேண்டிய நாளிது. கலைத்துறையில் உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும் நாளிது. எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன்  - ரண, ருண  ஸ்தானத்தில்  ராஹூ - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன் - லாப ஸ்தானத்தில் சந்திரன்   -  அயன, சயன,  போக ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ)   என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று மாலை 5.42 மணிக்கு சுக்கிர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று புதிய பணியில் சேர்ந்தவர்களுக்கு அமைதியான முறையில் மனச்சஞ்சலங்கள் விலகும். வெளிநாட்டு வேலை எதிர்பார்ப்பவர்களுக்கு அழைப்புகள் வந்து சேரும் காலமிது. எதிர்பாராத செலவுகள் நேரிடலாம். புதிய வியாபார ஒப்பந்தங்கள் நடந்தேறும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சுக்ரன்  - பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - தொழில்  ஸ்தானத்தில் சந்திரன்   - லாப ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ)   என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று மாலை 5.42 மணிக்கு சுக்கிர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று உறவுகள் வழியில் மனச் சிக்கல்கள் ஏற்படலாம். சொத்து விஷயங்களில் சிக்கல்கள் ஏற்பட்டு மறையும். உங்கள் மேல் போட்டி மற்றும் பொறாமை கொண்டவர்கள் ஒதுங்கிவிடுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு காத்திருந்த இடமாற்றம், பதவி உயர்வு தேடி வரும். மேன்மைகளை அடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

கிரகநிலை:

ராசியில் செவ்வாய் - தைரிய ஸ்தானத்தில் சுக்ரன்   -  சுக ஸ்தானத்தில்  ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன்  -  தொழில்  ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ)  என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று மாலை 5.42 மணிக்கு சுக்கிர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று வீட்டில் நடைபெற வேண்டிய சுபகாரியங்கள் சுமூகமாக நடைபெறும். தடைபட்டிருந்த திருமண ஏற்பாடுகள் இனிதே நிறைவேறும். பிள்ளைகள் வழியில் சின்னச் சின்ன செலவுகள் நேரிடலாம். கணவன் மனைவி இடையே ஒற்றுமை தேவை.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

Trending News

Latest News

You May Like