29-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு . தேவையான உதவிகள் கிடைக்கும்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணிப்பில் இன்றைய ராசிபலன்

29-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு . தேவையான உதவிகள் கிடைக்கும்
X

29-09-2019-newstm-daily-astrology

29-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு . தேவையான உதவிகள் கிடைக்கும்

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

29-Sep-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
புரட்டாசி - 12
ஞாயிற்றுக்கிழமை

பிரதமை இரவு 10.32 மணி வரை. பின் துவிதியை
ஹஸ்தம் இரவு 9.54 மணி வரை பின் சித்திரை
அமிர்த யோகம்
நாமயோகம்: ப்ராம்மம்
கரணம்: கிம்ஸ்துக்னம்

அகஸ்: 29.51
த்யாஜ்ஜியம்: 3.01
நேத்ரம்: 0
ஜீவன்: 0
கன்னி லக்ன இருப்பு (நா.வி): 3.07
சூரிய உதயம்: 6.05


ராகு காலம்: மாலை 4.30 - 6.00
எமகண்டம்: மதியம் 12.00 - 1.30
குளிகை: மதியம் 3.00 - 4.30
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
நவராத்திரி ஆரம்பம்.
அருப்புக்கோட்டை ஸ்ரீசௌடாம்பிகை, கழுகுமலை ஸ்ரீமுருகப்பெருமான், மதுரை ஸ்ரீநவநீதகிருஷ்ணஸ்வாமி உற்ஸவாரம்பம்.

திதி: பிரதமை
சந்திராஷ்டமம்: பூரட்டாதி, உத்திரட்டாதி
சூரியன்
ஹஸ்தம் 1ம் பாதம் - பகை
சந்திரன்
கன்னி - நட்பு
செவ்வாய்
உத்திரம் 2ம் பாதம் - நட்பு
புதன்
சித்திரை 4ம் பாதம் - நட்பு
குரு
கேட்டை 3ம் பாதம் - பகை
சுக்ரன்
ஹஸ்தம் 4ம் பாதம் - நீசம்
சனி
பூராடம் 1ம் பாதம் - நட்பு
ராகு
திருவாதிரை 4ம் பாதம் - நட்பு
கேது
பூராடம் 2ம் பாதம் - நட்பு

மேஷம்: கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில் ராஹூ -  பஞ்சம ஸ்தானத்தில்   சந்திரன் -  ரண, ருண ஸ்தானத்தில் சூர்யன்,  சுக்ரன், செவ்வாய் -  களத்திர ஸ்தானத்தில் புதன், அஷ்டம ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி , கேது   என கிரகங்கள் வலம் வருகின்றன.    இன்று காலை 06.39 மணிக்கு  சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் அதிகரிக்கும்.  புதிய ஆர்டர்கள் பெறுவதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தயக்கத்துடன் தங்களது பணிகளை செய்ய வேண்டி இருக்கும்.உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 2, 9ரிஷபம்: கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில், ராஹூ -  சுக ஸ்தானத்தில்   சந்திரன்  -  பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன்,   சுக்ரன் , செவ்வாய்  -  ரண, ருண ஸ்தானத்தில் புதன்,களத்திர ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் சனி, கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று காலை 06.39 மணிக்கு  சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று எந்திரங்களை  இயக்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகளிடம் கவனமாக பேசுவது  நல்லது. உடன்பிறந்தவர்கள் நல்ல ஒற்றுமையுடன் உங்களுக்கு நல் ஆதரவை கொடுப்பார்கள். தாயாரின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள்.   அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 1, 3மிதுனம்: கிரகநிலை: ராசியில்  ராஹூ -  தைரிய ஸ்தானத்தில்  சந்திரன்  - சுக ஸ்தானத்தில் சூர்யன்,  சுக்ரன், செவ்வாய்  - பஞ்சம ஸ்தானத்தில் புதன்,  ரண ருண ஸ்தானத்தில் குரு  - களத்திர ஸ்தானத்தில் சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று காலை 06.39 மணிக்கு  சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று உறவினர்கள் வருகை இருக்கும். சொத்துக்கள் வாங்க எடுக்கும் முயற்சிகள் தாமதப்படும். எடுத்த முடிவை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தாமதப்படும். பிள்ளைகளால் பெருமை அடைவதற்கு வாய்ப்பு உள்ளது. திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 7 கடகம்: கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில்  சந்திரன் - தைரிய,  வீர்ய ஸ்தானத்தில் சூர்யன்,  சுக்ரன், செவ்வாய்  - சுக ஸ்தானத்தில்  புதன்,  பஞ்சம ஸ்தானத்தில் குரு - ரண, ருண ஸ்தானத்தில் சனி , கேது -  அயன, சயன, போக ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று காலை 06.39 மணிக்கு  சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற மிகவும் கவனமாக பாடங்களை படிப்பீர்கள்.மனகுழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை மேலோங்கும். கஷ்டங்கள் நீங்கி சுகம் உண்டாகும். வாழ்க்கை வளம் பெறும். தொழில் துறையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டாலும் பெரிதாக எந்தப் பாதிப்பும் இருக்காது. சிலர் எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைப்பது சற்று தள்ளிப் போகலாம்.  அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9சிம்மம்: கிரகநிலை: ராசியில்  சந்திரன் -    குடும்ப ஸ்தானத்தில் சூர்யன்,  சுக்ரன், செவ்வாய் -  தைரிய ஸ்தானத்தில்  புதன்- சுக  ஸ்தானத்தில்  குரு -  பஞ்சம ஸ்தானத்தில்  சனி , கேது -  லாப ஸ்தானத்தில்  ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று காலை 06.39 மணிக்கு  சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று பணபற்றாக்குறை நீங்கும். மற்றவர்களால் குற்றம் சாட்டப்படும் சூழ்நிலை உருவாகலாம் கவனம் தேவை. எதிர்பாராத செலவு உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த தடைகளை உடைப்பதற்கு நீங்கள் சற்று கடினமாக உழைக்க வேண்டி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு மனநிம்மதி கிடைக்காமல் அவதிப்படுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9கன்னி: கிரகநிலை: ராசியில் சூர்யன்,  சுக்ரன் , செவ்வாய் -  தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  புதன் - தைரிய ஸ்தானத்தில்  குரு -  சுக  ஸ்தானத்தில்  சனி , கேது - தொழில்  ஸ்தானத்தில்   ராஹூ  - அயன, சயன, போக ஸ்தானத்தில்  சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று காலை 06.39 மணிக்கு  சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார். பலன்: இன்று வீடு, வாகனம் போன்றவற்றை புதுப்பிக்கும்  பணியில் ஈடுபடுவீர்கள். மனோதைரியம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக பணிகளை செய்து பாராட்டு பெறுவார்கள். சிலரது தகுதியின்மை உங்களுக்கு தெரிய வருவதினால் மனதில் வருத்தம் ஏற்படும். உங்கள் ஆதங்கத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9துலாம்: கிரகநிலை: ராசியில்  புதன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  குரு - தைரிய ஸ்தானத்தில்  சனி , கேது - பாக்கிய ஸ்தானத்தில்  ராஹூ -   லாப ஸ்தானத்தில்  சந்திரன் -   அயன, சயன, போக ஸ்தானத்தில் சூர்யன்,  சுக்ரன் , செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று காலை 06.39 மணிக்கு  சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று பதவி உயர்வு கிடைக்கக்கூடும். வேண்டீய இடமாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் கஷ்டம், சுகம் இரண்டும் ஏற்படலாம். எல்லாரும் நட்புடன் பழகுவார்கள். அரசியல் துறையினர் அரசு சம்மந்தமான வேலைகளில் இறங்கும் போது ஆவணங்களை சரிபார்த்துக் கொள்வது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9விருச்சிகம்: கிரகநிலை: ராசியில்  குரு - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சனி , கேது -   அஷ்டம  ஸ்தானத்தில் ராஹு- தொழில் ஸ்தானத்தில்  சந்திரன் - லாப ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், செவ்வாய்  - அயன, சயன, போக ஸ்தானத்தில் புதன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று காலை 06.39 மணிக்கு  சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நடந்து முடியும். மாணவர்கள் அவசரப்படாமல் நிதானமாக மனதில் பதியும்படியாக பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். திறமை வெளிப்படும். மாணவ மணிகள் மேற்கல்வி பயில விரும்புபவர்கள் சிறு தடங்கல்களைச் சந்திக்க நேரலாம்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 6தனுசு: கிரகநிலை: ராசியில்  சனி , கேது -   களத்திர ஸ்தானத்தில் ராஹு-  பாக்கிய ஸ்தானத்தில்  சந்திரன் -  தொழில் ஸ்தானத்தில் சூர்யன்,  சுக்ரன், செவ்வாய் - லாப ஸ்தானத்தில்  புதன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் குரு  என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று காலை 06.39 மணிக்கு  சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று அடுத்தவர் யாரும் குறைகூறக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பீர்கள். எதிலும் லாபம் கிடைக்கும். காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண்கவலை நீங்கும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். கவனத்தைச் சிதற விடாமல் கல்வியில் நாட்டத்தைச் செலுத்துங்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7மகரம்: கிரகநிலை: ரண, ருண ஸ்தானத்தில் ராஹூ -   அஷ்டம ஸ்தானத்தில்  சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன்,  சுக்ரன், செவ்வாய் -  தொழில் ஸ்தானத்தில் புதன் -  லாப ஸ்தானத்தில்  குரு - அயன, சயன, போக ஸ்தானத்தில் சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று காலை 06.39 மணிக்கு  சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று தொழில் வியாபாரம் விருத்தியடையும். தடைபட்ட நிதி உதவி கிடைக்கும். ஏற்கனவே வரவேண்டி இருந்து வராமல் நின்ற ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் வேலைபளு வீண் அலைச்சல் குறையும். தொண்டர்கள் உங்களுக்கு உற்சாகத்தை நல்குவர். எதிரிகளின் வலைப் பின்னலில் சிக்க மாட்டீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9கும்பம்: கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ - களத்திர ஸ்தானத்தில்  சந்திரன் -  அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில்  புதன் - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று காலை 06.39 மணிக்கு  சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். புதிய வீடுவாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சிலர் பழைய வீட்டை புதுப்பிப்பார்கள். வாகனம் மூலம் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகள் சந்தோஷமாக காணப்படுவார்கள். குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடலாம்.   ஆசிரியரிடமிருந்து நல் பாராட்டுகளை எதிர்பார்க்கலாம்.  அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9மீனம்: கிரகநிலை: சுக ஸ்தானத்தில்   ராஹூ -   ரண, ருண ஸ்தானத்தில்   சந்திரன்  -  களத்திர ஸ்தானத்தில் சூர்யன்,  சுக்ரன், செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் புதன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில்  ஸ்தானத்தில் சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று காலை 06.39 மணிக்கு  சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று மனக்குழப்பம் தீரும். தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு மிக கவனமாக பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சி செய்வீர்கள்.  தேவையான உதவிகள் கிடைக்கும். பெண்மணிகள் அனுகூலத்தை எதிர்பார்க்கக் கூடிய நாள். மாமியார் மருமகள் பிரச்சினை இருக்காது.  அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 7

newstm.in

Tags:
Next Story
Share it