1. Home
  2. ஜோதிடம்

28-7-2018 தினப்பலன் - இந்த ராசிகாரர்களுக்கு வீண் செலவு ஏற்படும்!

28-7-2018 தினப்பலன் - இந்த ராசிகாரர்களுக்கு வீண் செலவு ஏற்படும்!

daily-free-astrology-28-7-2018

28-7-2018 தினப்பலன் - இந்த ராசிகாரர்களுக்கு வீண் செலவு ஏற்படும்!

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

சனிக்கிழமை - இன்றைய பஞ்சாங்கம்

விளம்பி வருஷம் I தக்ஷிணாயணம் I க்ரீஷ்மருது I ஆடி 12 I இங்கிலீஷ்: 28 July 2018 I சனிக்கிழமை

பிரதமை மறு நாள் காலை 4.22 மணி வ ரை. பின் துவிதியை I திருவோணம் மறு நாள் காலை 4.18 மணி வரை. பின் அவிட்டம்

ப்ரீதி நாமயோகம் I பாலவம் கரணம் I சித்த யோகம் I தியாஜ்ஜியம்: 0.19 I அகசு: 31.14

நேத்ரம்: 2 I ஜீவன்: 1 I கடக லக்ன இ ருப்பு: 7.31 I சூர்ய உதயம்: 6.04

ராகு காலம்: காலை 9.00 - 10.30 I எமகண்டம்: மதியம் 1.30 - 3.00 I குளிகை: காலை 6.00 - 7.30 I சூலம்: கிழக்கு I பரிகாரம்: தயிர்

குறிப்பு: இன்று மேல் நோக்கு நாள் I திருவோண விரதம். ஸ்ரீ வில்லி புத்தூர் ஸ்ரீ பெரியபெருமாள் புறப்பாடு.

உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாஸப் பெருமாள் புறப்பாடு.

திதி: பிரதமை I சந்திராஷ்டமம்: பு னர்பூசம்

சந்திர கிரகணம் முடிந்தது: இந்த நட்சத்திரக்காரர்கள் எல்லாம் பரிகாரம் செய்தீர்களா?

மேஷம்: கிரகநிலை: சுக ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது, சந்திரன் - என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் உண்டாகலாம் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படும் நிலை உருவாகலாம். பிள்ளைகளுடன் பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 1, 3 2018 ஆகஸ்டு மாத ராசி பலன்கள் - பரிகாரங்கள்!ரிஷபம்: கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது, சந்திரன் - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் சந்திப்பு உண்டாகும். வீண் செலவும் ஏற்படலாம். கோபத்தை குறைப்பது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 1, 3, 9மிதுனம்: கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது, சந்திரன் - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். அதே நேரத்தில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும். செல்வ சேர்க்கை உண்டாகும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சாம்பல் நிறம் அதிர்ஷ்ட எண்: 2, 6கடகம்: கிரகநிலை: ராசியில் ராகு, புதன்( வ), சூர்யன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது, சந்திரன் - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று ஏற்ற தாழ்வு பார்க்காமல் எல்லோரிடமும் சமமாக பழகுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றி, நன்மதிப்பு பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம்.  அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 5சிம்மம்: கிரகநிலை: ராசியில் சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது, சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று உடற் சோர்வுகள் வரலாம். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண்டாகும். வீடு, வாகனம் தொடர்பான செலவு குறையும். வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 2, 9கன்னி: கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது, சந்திரன் - லாப ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன் - என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்த தடங்கல்கள் நீங்கும். சாதூரியமான பேச்சு வியாபார விருத்திக்கு கைகொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணி தொடர்பாக அலைய நேரிடலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 1, 3துலாம்: கிரகநிலை: ராசியில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது, சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - லாப ஸ்தானத்தில் சுக்ரன் - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்னைகள் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்ய முற்படுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 7விருச்சிகம்: கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது, சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு - என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சாதூரியமான பேச்சு வெற்றிக்கு உதவும். மாணவர்கள் பாடங்களை நன்கு படித்து மற்றவர்களின் மதிப்புக்கு ஆளாவீர்கள். திறமையான செயல்பாடுகள் வெற்றிக்கு உதவும்.  அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9தனுசு: கிரகநிலை: ராசியில் சனி (வ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது, சந்திரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் குரு - என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று எதிர்ப்புகள் விலகும். போட்டிகள் குறையும். எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். அடுத்தவர்களை அனுசரித்து போய் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத செலவு ஏற்படும்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9மகரம்: கிரகநிலை: ராசியில் செவ்வாய் ( வ), கேது, சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். பணவரவு இருக்கும். அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். பெரியோர் உதவி கிடைக்கும். காரிய தடைகள் வரலாம். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9 கட்சியே தோற்றாலும் தனி ஆளாய்ஜெயித்த கருணாநிதி...கும்பம்: கிரகநிலை: ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது, சந்திரன் - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9மீனம்: கிரகநிலை: பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது, சந்திரன் - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அவ்வப்போது வாக்கு வாதங்கள் உண்டாகலாம்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

newstm.in

Trending News

Latest News

You May Like