1. Home
  2. ஜோதிடம்

28-6-2018 தினபலன்: இந்த ராசிகாரர்களுக்கு வேலைவாய்ப்பு தேடி வரும்!

28-6-2018 தினபலன்: இந்த ராசிகாரர்களுக்கு வேலைவாய்ப்பு தேடி வரும்!

daily-free-astrology-28-6-2018

28-6-2018 தினபலன்: இந்த ராசிகாரர்களுக்கு வேலைவாய்ப்பு தேடி வரும்!

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்!

விளம்பி வருஷம் I உத்தராயணம் I க்ரீஷ்மருது

ஆனி 14 I இங்கிலீஷ்: 28 June 2018 I வியாழக்கிழமை

பௌர்ணமி பகல் 11.04 மணி வரை. பின் பிரதமை I மூலம் பகல் 1.20 மணி வரை. பின் பூராடம்

ப்ராம்மம் நாமயோகம் I பவம் கரணம் I சித்த யோகம்

ராகு காலம்: மதியம் 1.30 - 3.00 I எமகண் டம்: காலை 6.00 - 7.30 I குளிகை: காலை 9.00 - 10.30

சூலம்: தெற்கு I பரிகாரம்: நல்லெண்ணெய் I இன்று கீழ் நோக்கு நாள்

மதுராந்தகம் ஸ்ரீகோதண்டராம ஸ்வா மி பவனி. சோழவந்தான் ஸ்ரீ ஜனக மாரியம்மன் யானை வாகனத்தில் திருவீதிவுலா.

திதி:பிரதமை I சந்திராஷ்டமம்: கார்த்திகை, ரோகிணி

மேஷம்

கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன் - சுக ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் - களத்திர ஸ்தானத்தில் குரு(வ) - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ), சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் நல்லமுறை யில் முடியும். படித்த பிள்ளைகளுக்கு தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு கிடைக்கும். உடல்நிலையில் இருந்துவந்த தொந்தரவுகள் நீங் கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சி வப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

ரிஷபம்

கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு(வ) - அஷ்டம ஆயுள் ஸ் தானத்தில் சனி (வ), சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று அடுத்தவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனாலும் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். இதுவரை உங்களுக்கு எதிர்ப்பாக செயல்பட்டு வந்த பிள்ளைகளின் மனநிலை மாறும். அவர்கள் நல்ல வேலை வாய்ப்பை அடைவார்கள். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் முடிவுக்கு வரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

மிதுனம்

கிரகநிலை: ராசியில் சூர்யன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ரா கு, சுக்ரன், புதன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு(வ) - களத்திர ஸ்தானத்தில் சனி (வ), சந்திரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் இருக்கிறார். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல முறையில் காரியங்கள் கை கூடி வரும். ஆனாலும் கூடுதல் பணிச் சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகளிடம் உங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாக பேசுவது நல்லது. உடன் பணி புரிபவர்களால் நன்மை ஏற்படும். இளைஞர்கள் மிகவும் எச்சரிக்கையாக வாகனங்களைக் கையாள வேண்டும். வேகத்தை விவேகத்துடன் செயல்படுத்தினால் விபத்தைத் தடுக்கலாம். பெற் றோர் பிள்ளைகளுக்காகத் தேடும் வரன்கள் நல்லபடியாக அமையும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

கடகம்

கிரகநிலை: ராசியில் ராகு, சுக்ரன், புதன் - சுக ஸ்தானத்தில் குரு(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ), சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அயன ச யன போக ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: எடுத்துக்கொண்ட காரியத்தில் வெற்றி பெறுவத ற்காக பம்பரமாகச் சுழன்று உழைப்பீர்கள். எதிர்பார்த்ததைவிட லாபங்கள் பெருகும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சுப காரியங்கள் நடக்கும். ஆனாலும் மூன்றாவது மனிதரின் தலையீட்டால் குடும்பத்தில் நிம்மதி குறையலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

சிம்மம்

கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு(வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி (வ), சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - லாப ஸ்தானத்தில் சூர்யன் - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று பிள்ளைகள் விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். பெண்களுக்கு சமையல் செய்யும் போது கவனம் தேவை. மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்னை உண்டாகலாம். கவனம் தேவை. பொறுமையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிக்கவேண்டும். பிள்ளைகளால் பெருமைப்படுவீர்கள். தொல்லை கொடுத்துவந்த உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கன்னி

கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு(வ) - சுக ஸ்தானத்தில் சனி (வ), சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - தொழில் ஸ்தா னத்தில் சூர்யன் - லாப ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று பண விஷயம் திருப்திகரமாக இருக்கும். ஆனாலும் சூரியன் 6ல் மறைவு பெறுவதால் எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் வாக்குவாதம் ஏற்படலாம். மே லிடத்தின் கனிவான பார்வை பெறுவீர்கள். முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். நினைத்தபடி அனைத்து நிலைகளிலும் நல்ல பலன்களைப் பெறுவார்கள். பொருளாதாரம் எப்போதும் சீராக இருக்கும். பிரிந்துசென்ற சொந்தங்கள் வலிய வந்துசேரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 9

துலாம்

கிரகநிலை: ராசியில் குரு(வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ), சந்திரன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் ரா கு, சுக்ரன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன

பலன்: இன்று பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக செல்வது நல்லது. கல்வி சம்பந்தமான விஷயங்களில் வெற்றி ஏற்படும். இதுவரை சந்தித்துவந்த தடை, தாமதங்கள் விலகிச் செல்லும். பணநிலையில் திருப்தியான வர வுகள் உண்டு. தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

விருச்சிகம்

கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ), சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு(வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கி சென்றாலும் வலிய வந்து சிலர் சண் டை போடலாம் கவனமாக இருப்பது நல்லது. கண் நோய் ஏற்படலாம். வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். தொழில் வியாபாரத்தில் பணவரவு இருக்கும். ஆனாலும் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது. வாடிக்கையாளர்கள் மன நிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

தனுசு

கிரகநிலை: ராசியில் சனி (வ), சந்திரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், கேது - களத்திர ஸ்தானத்தில் சூர்யன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் - லாப ஸ்தானத்தில் குரு(வ) என கிரகங்கள் வலம் வருகின்றன

பலன்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். வேலை செய்யும் இடத்திலும் மேல் அதிகாரிகளிடமு ம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. நேரத்தை வீணடித்தல் கூடாது. முடிந்தவரை வாக்கு கொடுக்கும் முன் சிந்தித்து வாக்கு கொடுக்கவும். உத்தியோக உயர்வு கிடைக்கும். சக ஊழியர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, ஆர ஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 9

மகர ம்

கிரகநி லை: ராசியில் செவ்வாய், கேது - ரண ரு ண ரோக ஸ்தானத்தில் சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் - தொழில் ஸ்தானத்தில் குரு(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ), சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பல ன்: இன்று குடும்பத்தில் ஏதாவது வேண்டாத பிரச்னை தலை தூக்கலாம். உறவினர்கள் நண்பர்கள் பிள்ளைகள் என்று யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. எல்லா நிலைகளிலும் காரியத் தடைகள் ஏற்படும். பின்பு அனைத்து செயல்களிலும் வெற்றியைக் காண்பீர்கள். பண வரவுக்குக் குறைவில்லை. பிள்ளைகள் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

கும் பம்

கிர கநிலை: பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு(வ) - லாப ஸ்தானத்தில் சனி (வ), சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பல ன்: இன்று மனக்கவலை உண்டாகும். வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவன மாக செயல்படுவது நல்லது. ஆனாலும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் நல்ல பெயர் கிடைக்கும். அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். சற்று முயற்சி எடுத்தால் பதவி உயர்வு உங்களை வந்து சேரும். குடும்பத்தில் குழப்பம் விளைவித்த உறவுகள் விலகிச்செல்வார்கள். திருமணமாகி குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். எப்போதும் சுற்றித் திரிந்த பிள்ளைகள் பெற்றோர் வழிகாட்டுதல்படி வேலைக்குச் செல்வார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

மீன ம்

கிரகநி லை: சுக ஸ்தானத்தில் சூர்யன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு(வ) - தொழில் ஸ் தானத்தில் சனி (வ), சந்திரன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று எதிர்பார்த்திருந்த பணி இடமாற்றம் உங்களை வந்து சேரும். மேலிடத்தின் அனுசரனை கிடைக்கும். சிறப்பான முன்னேற்றைப் பெறலாம். தைரியம் அதிகரிக்கும். எதிரிகளை வீழ்த்துவதற்குண்டான பாதைகளை வகுத்துக் கொள்வீர்கள். புதியதாக ஆர ம்பிக்கும் எந்த விஷயத்திலும் ஏற்றம் உண்டு. உங்கள் யோகத்தில் கணவன் / மனைவிக்கு நல்ல வருமானம் கிடைக்கும். கணவன்- மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

newstm.in

Trending News

Latest News

You May Like