28-07-2019-newstm-daily-astrology

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
28-Jul-19 விகாரி வருஷம்
தக்ஷிணாயணம் க்ரீஷ்மருது
ஆடி - 12 ஞாயிற்றுக்கிழமை
ஏகாதசி மாலை 3.52 மணி வரை. பின் துவாதசி
ரோகிணி மாலை 5.08 மணி வரை பின் மிருக சீரிஷம்
சித்த யோகம்
நாமயோகம்: த்ருவம்
கரணம்: பாலவம்
அகஸ்: 31.14
த்யாஜ்ஜியம்: 7.34
நேத்ரம்: 1
ஜீவன்: 1/2
கடக லக்ன இருப்பு (நா.வி): 3.32
சூரிய உதயம்: 6.04
ராகு காலம்: மாலை 4.30 - 6.00
எமகண்டம்: மதியம் 12.00 - 1.30
குளிகை: மதியம் 3.00 - 4.30
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
ஸர்வ ஏகாதசி.
நயினார் கோவில் ஸ்ரீசௌந்திரநாயகி அம்மனை ஆடிவரும் திருக்கோலமாய் காட்சியருளல்.
மன்னார்குடி ஸ்ரீசெங்கமலத்தாயார் சந்திரப்பிரபையில் புறப்பாடு கண்டருளல்.
திதி: ஏகாதசி
சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை
சூரியன் பூசம் 3ம் பாதம் - பகை
சந்திரன் ரிஷபம் - உச்சம்
செவ்வாய் ஆயில்யம் 2ம் பாதம் - நீசம்
புதன் புனர்பூசம் 1ம் பாதம் - நட்பு
குரு கேட்டை 2ம் பாதம் - பகை
சுக்ரன் பூசம் 1ம் பாதம் - பகை
சனி பூராடம் 1ம் பாதம் - நட்பு
ராகு புனர்பூசம் 1ம் பாதம் - நட்பு
கேது பூராடம் 3ம் பாதம் - நட்பு
மேஷம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன் (வ), ராஹூ - சுகஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் குரு (வ) - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. அவருக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஆனால் கைக்கு பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். புதிய ஆர்டர்கள் கூடுதலாக உழைப்பதன் பேரில் கிடைக்கும். பணவரத்து கூடும். உடல் சோர்வு உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9 ரிஷபம்: கிரகநிலை: ராசியில் சந்திரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன் (வ), ராஹூ - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் குரு (வ) - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய முற்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்வார்கள். கணவன் மனைவிக்கிடையே சில்லறை பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் மூலம் மதிப்பு உயரும். முன்விரோதம் காரணமாக சில சங்கடங்கள் உருவாகலாம், என்றாலும் அவற்றை சமாளிக்கும் வழிகள் உங்களுக்கு புலப்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3 மிதுனம்: கிரகநிலை: ராசியில் புதன் (வ), ராஹூ - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு (வ) - களத்திர ஸ்தானத்தில் சனி (வ), கேது - விரைய ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று நண்பர்கள் மூலம் நன்மை உண்டாகும். தன்னம்பிக்கையுடன் துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். எதிர்பாராத செலவு உண்டாகும். இரவு பகலாக உழைக்க வேண்டி இருக்கும். அடுத்தவர் வேலையையும் தானே செய்யும் நிலை உருவாகும். எனினும் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். பிரிந்த குடும்பம் ஒன்றுசேரும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6 கடகம்: கிரகநிலை: ராசியில் செவ்வாய், சூர்யன், சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் குரு (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ), கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன் - விரைய ஸ்தானத்தில் புதன் (வ), ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று வரவேண்டிய பணம் இழுபறியாக இருந்தாலும் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்திலிருந்து சந்தோஷமான செய்தி வரும். தொண்டர்கள் உங்கள் சொல்படி நடந்து கொள்வது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எதிலும் சிறிதளவு ஆதாயம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6 சிம்மம்: கிரகநிலை: சுகஸ்தானத்தில் குரு (வ) - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ), கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் புதன் (வ), ராஹூ - விரைய ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று பிள்ளைகளின் -கல்விக்கான செலவு கூடும். இல்லறத்தில் இருந்த சச்சரவு தீரும். பலவிதத்திலும் பணவரத்து உண்டாகும். ஆனாலும் சுபச்செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7 கன்னி: கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு (வ) - சுகஸ்தானத்தில் சனி (வ), கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் புதன் (வ), ராஹூ - லாப ஸ்தானத்தில் செவ்வாய்- என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது. ஆரோக்கியம் சம்பந்தமான குறைபாடு வரலாம். தொழில் வியாபாரத்தில் வேகமான முன்னேற்றம் இருப்பது கடினம். எதிர்த்து செயல்பட்டவர்கள் ஒதுங்கி விடுவார்கள். நீண்ட நாள் கஷ்டங்கள் நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை அதிர்ஷ்ட எண்: 1, 7 துலாம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ), கேது - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் புதன் (வ), ராஹூ - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் சுபகாரியங்கள், மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். அதேநேரத்தில் கணவன், மனைவிக்கிடையே ஏதேனும் மனவருத்தம் ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 4, 5 விருச்சிகம்: கிரகநிலை: ராசியில் குரு (வ) - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ), கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் புதன் (வ), ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று அக்கம் பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள் வரலாம் கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பது நல்லது. தடைபட்ட காரியங்கள் தடைநீங்கி நல்லபடியாக நடந்து முடியும். பணவரத்து திருப்தி தரும். செய்யும் உத்தியோகத்தில் இடமாற்றமோ அல்லது பணி நிரந்தரமோ ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 5 தனுசு: கிரகநிலை: ராசியில் சனி (வ), கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் புதன் (வ), ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், சுக்ரன் - விரைய ஸ்தானத்தில் குரு (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று கடுமையாக உழைப்பின் மூலம் முன்னேற வேண்டி இருக்கும். நண்பர்களின் உதவியால் நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது. வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். மேலிடத்திலிருந்து முக்கிய பொறுப்புகள் உங்கள் கையில் வரும். அரசுப்பணியில் உள்ளவர்கள் உடன் பணிபுரிகின்றவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 3 மகரம்: கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன் (வ), ராஹூ - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், சுக்ரன் - லாப ஸ்தானத்தில் குரு (வ) - விரைய ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று சந்தோஷமான செய்தி வந்து சேரும். மாணவர்கள் பாடங்களை கவனமாக படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மனநிம்மதி கிடைக்கும். சில குழப்பங்கள் நேர்ந்தாலும் இதுவரை நடக்காமல் இருந்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து மனநிம்மதி அடைவீர்கள். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9 கும்பம்: கிரகநிலை: சுகஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் புதன் (வ), ராஹூ - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் குரு (வ) - லாப ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் நடந்து முடியும். முக்கிய நபர்கள் மூலம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் கவுரவம் கூடும். தூரத்திலிருந்து வரும் செய்திகள் உங்கள் மனதிற்கு மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7 மீனம்: கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - சுகஸ்தானத்தில் புதன் (வ), ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு (வ) - தொழில் ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தொழில் வியாபாரம் நன்கு நடக்க தேவையான உதவிகள் கிடைக்கும். வாடிக்கையாளர் தேவை அறிந்து பொருள்களை அனுப்பி அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக பணிகளை செய்து முடித்து நிர்வாகத்தில் நல்ல பெயர் பெறுவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். சிக்கன நடவடிக்கையை மேற்கொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
newstm.in