1. Home
  2. ஜோதிடம்

27-6-2018 தினப்பலன் - பரணி, கார்த்திகை நட்சத்திரகாரர்கள் இன்று வாய் திறக்க வேண்டாம்!


daily-free-astrology-27-6-2018

27-6-2018 தினப்பலன் - பரணி, கார்த்திகை நட்சத்திரகாரர்கள் இன்று வாய் திறக்க வேண்டாம்!

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்!

விளம்பி வருஷம் I உத்தராயணம் I க்ரீஷ்மருது

ஆனி 13 I இங்கிலீஷ்: 27 June 2018 I புதன்கிழமை

சதுர்த்தசி காலை 9.26 மணி வரை. பின் பௌர்ணமி

கேட்டை பகல் 11.03 மணி வரை. பி ன் மூலம்

சுப்ரம் நாமயோகம் I வணிஜை கரணம் I சித்த யோகம்

ராகு காலம்: மதியம் 12.00 - 1.30 I எமகண்டம்: காலை 7.30 - 9.00 I குளிகை: காலை 10.30 - 12.00

சூலம்: வடக்கு I பரிகாரம்: பால் I இன்று சம நோக்கு நாள்

சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெரு மாள் புறப்பாடு கண்டருளல். பௌர்ணமி.

திதி: பௌர்ணமி I சந்திராஷ்ட மம்: பரணி, கார்த்திகை

மேஷம்

கிரகநிலை:

தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன் - சுக ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் - களத்திர ஸ்தானத்தில் குரு(வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன

பலன்:

இன்று எல்லா காரியங்களிலும் அதிக கவனம் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

ரிஷபம்

கிரகநிலை:

தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு(வ) - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று உழைப்பு வீணாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். அதே நேரத்தில் பொருள்வரத்து அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை, பிரவுன்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

மிதுனம்

கிரகநிலை:

ராசியில் சூர்யன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று மனை, வீடு சம்பந்தமாக வங்கிக்கடன் எதிர்பார்த்திருந்தவர்களுக்கு உடனடியாக உதவி கிடைக்கும். நான்கு சக்கர வாகனம் வாங்க வேண்டும் என்ற உடையவர்களுக்கு நல்ல வாகனம் அமை யும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

கடகம்

கிரகநிலை:

ராசியில் ராகு, சுக்ரன், புதன் - சுக ஸ்தானத்தில் குரு(வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சூர் யன் என கிரகங்கள் வலம் வருகின்றன..

பலன்:

இன்று பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். கூட்டுத்தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வெளிநாடு சம்பந்தமான வேலைகளில் நிறைய லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். ஆர்டர்கள் எ ளிதில் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் சீக்கிரமாக அவற்றை நிறைவு செய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

சிம்மம்

கிரகநிலை:

தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு(வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - சுக ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் சூர்யன் - அயன சயன போக ஸ்தானத் தில் ராகு, சுக்ரன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று உங்களின் செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். மேலதிகாரிகளின் கனிவான பார்வை உங்களின் மீது விழும். உங்களின் உழைப்பு அங்கீகரி க்கப்படும். ஏற்கனவே எதிர்பார்த்திருந்த இடமாற்றம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

கன்னி

கிரகநிலை:

தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு(வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம பூர்வ புண்ணியஸ்தானத்தில் செவ்வாய், கேது - தொழில் ஸ்தானத்தில் சூர்யன் - லாப ஸ்தானத்தில் ராகு, சுக்ர ன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று குடும்பத்தை விட்டு பிரிந்திருந்து வேலை பார்த்தவர்கள் தற்போது குடும்பத்தினரிடம் மீண்டும் சேர வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னை குறையும். கணவன், மனைவி இருவரும் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து திருப்தியடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா

அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6

துலாம்

கிரகநிலை:

ராசியில் குரு(வ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் என கி ரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று அடுத்தவர்களுக்காக எந்த பொ றுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் குறையும். ஆனாலும் தாய் வழி உறவினர்களுடன் சற்று ஒதுங்கி யிருப்பது நல்லது. வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரத்து கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

விருச்சிகம்

கிரகநிலை:

ராசியில் சந்திரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் - அயன சயன போக ஸ் தானத்தில் குரு(வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று வெளியூர் பயணம் செல்ல நேரலாம். புதிய ஆடைகள் ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். அழகு சாதனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை. அலர்ஜி போன்று ஏற்படலாம். புதிய ஒப்பந்தங்களால் பொருளாதா ர லாபம் கிடைக்கும். எதிர்பார்த்திருந்த வெற்றி வாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

தனுசு

கிரகநிலை:

ராசியில் சனி (வ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், கேது - களத்திர ஸ்தானத்தில் சூர்யன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் - லாப ஸ்தானத்தில் குரு(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று பாராட்டுகள் கிடைக்கும். பணத்தை விட அதிக உழைப்பின் மூலம் செய்யும் தொழிலால் அதிக வருவாய் கிடைக்கும். தீவிர முயற்சியின் பேரிலேயே ஒப்பந்தங்கள் நிறைவேறும். ஆனாலும் அனுகூலமான போக்கே காணப்படுகிறது. நல்ல பெயர் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். கைவிட்டுப் போன சொத்துக்கள் மீண்டும் வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 7, 9

மகரம்

கிரகநிலை:

ராசியில் செவ்வாய், கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் - தொழில் ஸ்தானத்தில் குரு(வ) - லாப ஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன..

பலன்:

இன்று வெற்றிபெற தடைகளை தாண்டி படிக்க வேண்டி இருக்கும். பெரியோரின் ஆலோசனை படி செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த காரியங்கள் நடக்க அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். மனம் தளர வேண்டாம். எல்லாம் நல்லபடியாகவே நடக்கும். எந்த ஒரு காரியத்திலும் கவனத்துடன் இருங்கள். கவலையின்றி உங்கள் காரியத்தில் கண்ணாயிருங்கள்... எல்லாம் வெற்றியாகவே அமையும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

கும்பம்

கிரகநிலை:

பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு(வ) - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பண வரத்து கூடும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். இருப்பினும் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். நிதானத்துடன் நிலைமை உணர்ந்து நடந்துகொண்டால் நன்மையே.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஊதா

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

மீனம்

கிரகநிலை:

சுக ஸ்தானத்தில் சூர்யன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு(வ) - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். வாக்கு வன்மையால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். தடைபட்ட ஆர்டர்கள் வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

newstm.in

Trending News

Latest News

You May Like