1. Home
  2. ஜோதிடம்

27-10-2018 தினப்பலன் - இந்த ராசிக்காரர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை

27-10-2018 தினப்பலன் - இந்த ராசிக்காரர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை

27-10-2018-newstm-daily-free-astrology

27-10-2018 தினப்பலன் - இந்த ராசிக்காரர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்

விளம்பி வருஷம்I தக்ஷிணாயணம் Iசரத்ருது I ஐப்பசி 10 Iஇங்கிலீஷ்: 27 October 2018 I சனிக்கிழமை

திரிதியை இரவு 8.16 மணி வரை. பின் சதுர்த்தி I கிருத்திகை காலை 10.29 மணி வரை. பின் ரோகிணி

வ்யதீ பாதம் நாமயோகம் I வணிஜை கரணம் Iஅமிர்த யோகம்

தியாஜ்ஜியம்: 49.27 I அகசு: 29.12 I நேத்ரம்: 2 I ஜீவன்: 1 I துலாம் லக்ன இருப்பு: 7.31I சூர்ய உதயம்: 6.07

ராகு காலம்: காலை 9.00 - 10.30 I எமகண்டம்: மதியம் 1.30 - 3.00 I குளிகை: காலை 6.00 - 7.30 I சூலம்: கிழக்கு I பரிகாரம்: தயிர்

குறிப்பு:இன்று கீழ்நோக்கு நாள் I சங்கடஹர சதுர்த்தி I பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

திதி: திரிதியை I சந்திராஷ்டமம்: விசாகம்

உங்கள் ராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்கள் மற்றும் பாிகாரங்களை படிக்க கிளிக் செய்யுங்கள்...

மேஷம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - சுகஸ்தானத்தில் ராகு - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன்(வ), சூர்யன்  - அஷ்டம ஸ்தானத்தில் குரு, புதன்   - பாக்கிய ஸ்தானத்தில் சனி  - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று வீட்டிற்கு தேவையான வசதிகள்  செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு உண்டாகும். பழைய சிக்கல்கள் தீர்வதில்   தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 3, 6ரிஷபம்: கிரகநிலை: ராசியில் சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன்(வ), சூர்யன்   - களத்திர ஸ்தானத்தில் குரு, புதன்   - அஷ்டம ஸ்தானத்தில் சனி  - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் எதிர்பாராத விருந்தினர் வருகையால் விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். அவர்களுக்காக பாடுபடுவீர்கள்.   அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெண் சிவப்பு அதிர்ஷ்ட எண்: 1, 3, 9மிதுனம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில்  சுக்ரன்(வ), சூர்யன்   - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு, புதன்   - களத்திர ஸ்தானத்தில்  சனி  - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று திட்டமிட்டு செய்தாலும் காரியங்களில் தடை ஏற்படும். எதிர் பாராத செலவு உண்டாகும். உத்தியோகம் தொடர்பான விஷயங்கள் தாமதமாக நடக்கும். புதிய நட்புகள் கிடைக்கும். மனம் தெளிவடையும். எதிர்பார்ப்பு நிறைவேறும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இள நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 5, 9 தினம் ஒரு மந்திரம் - மழலை செல்வத்திற்கு ஏங்குபவரா? இந்த சுலோகத்தை தினமும் சொல்லுங்கள்கடகம்: கிரகநிலை: ராசியில் ராகு - சுக ஸ்தானத்தில்  சுக்ரன்(வ), சூர்யன்   - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு, புதன்   - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி  - களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய், கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று உஷ்ணம் சம்பந்தமான நோய் ஏற்படலாம். வீண்பயம் ஏற்படும். ஏற்கனவே  செய்த காரியங்களுக்கான பலனை அடைய வேண்டி இருக்கும். சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம். வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம்  எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், கரும்பச்சை அதிர்ஷ்ட எண்: 5, 9சிம்மம்: கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன்(வ), சூர்யன்   - சுகஸ்தானத்தில் குரு, புதன்   - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி  - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன்  - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வரலாம். சிலர் வெளியூர் பயணம் செல்வார்கள். எதிர்பாலினத்தாருடன் பழகும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். பார்ட்னர்களுடன் சேர்ந்து தொழில் செய்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5கன்னி: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன்(வ), சூர்யன்   - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு, புதன்   - சுக ஸ்தானத்தில் சனி  - பஞ்சம் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன்  - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று கடன் தொல்லை தலைதூக்கலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை, இடமாற்றம், அலைச்சல் போன்றவை இருக்கக்கூடும். குடும்பத்தில் அமைதி நிலவ குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது.  கணவன், மனைவிக்கிடையே மன வருத்தம் உண்டாகலாம். பிள்ளைகள்   நலனில் அக்கறை காட்டுவது நல்லது.   அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 1, 3 வீட்டில் கண் திருஷ்டி நீங்க, தினமும் இதை செய்யுங்கள்துலாம்: கிரகநிலை: ராசியில் சுக்ரன்(வ), சூர்யன்   - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, புதன்   - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி  - சுக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன்  - தொழில் ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. எதிலும் தேவையற்ற வீண் கவலை உண்டாகும். பயணங்கள் செல்ல நேரிடலாம். கடன் விஷயங்களில் கவனம் தேவை.  மிகவும் கவனமாக பொருளாதார பிரச்சனைகளை கையாழுவது அவசியம். அக்கம் பக்கத்தினரிடம் நிதானமாக பழகுவது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 1, 3, 9விருச்சிகம்: கிரகநிலை: ராசியில் குரு, புதன்   - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி  -  தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன்  - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன்(வ), சூர்யன்   என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று வீண் அலைச்சல், காரிய தடை ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. மன குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். குறிக்கோளற்ற வீண் அலைச்சல் உண்டாகலாம். ஜீரணம் சம்பந்தமான கோளாறுகள்  ஏற்படலாம். உடல்சோர்வு உண்டாகும். பணம் பலவழிகளிலும் செலவாகும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சாம்பல் நிறம் அதிர்ஷ்ட எண்: 2, 6தனுசு: கிரகநிலை: ராசியில் சனி  - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன்  - அஷ்டம ஸ்தானத்தில் ராகு- லாப ஸ்தானத்தில் சுக்ரன்(வ), சூர்யன்   - அயன சயன போக ஸ்தானத்தில் குரு, புதன்   என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று காரியதாமதம் ஏற்படும். அடுத்தவர்களுக் காக  எந்த உத்தரவாதமும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வீண்கவலை ஏற்படும். வாகனங்களில் செல்லும்போது கவனம் அவசியம். நண்பர்கள் மூலம் கிடைக்க வேண்டிய உதவிகள் தாமதப்படும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 5 இந்திர பூஜையை விட மேலான கோ பூஜைமகரம்: கிரகநிலை: ராசியில் செவ்வாய், கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன்  - களத்திர ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில்  சுக்ரன்(வ), சூர்யன்   - லாப ஸ்தானத்தில் குரு, புதன்   - அயன சயன போக ஸ்தானத்தில் சனி  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தொழில் வியாபாரம் மந்தமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் உண்டாகும். புதிய ஆர்டர்கள் பிடிப்பது பற்றிய முயற்சிகள்  வீணாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீணாக உழைக்க வேண்டி இருக்கும். சம்பளம் தாமதப்படலாம். அலுவலக பணிகளில் கூடுதல் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 2, 9கும்பம்: கிரகநிலை: சுகஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில்  சுக்ரன்(வ), சூர்யன்   - தொழில் ஸ்தானத்தில் குரு, புதன்  - லாப ஸ்தானத்தில் சனி  - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை இருந்து வரும். கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை ஏற்பட்டு சுமுக உறவு இல்லாமல் இருக்கும். பிள்ளைகளின் நடவடிக்கைகள் மனதில் கவலையை ஏற்படுத்தும். பக்குவமாக அவர்களிடம் பேசுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 1, 3மீனம்: கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன்(வ), சூர்யன்   - பாக்கிய ஸ்தானத்தில் குரு, புதன்   - தொழில்  ஸ்தானத்தில் சனி  - லாப ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று மற்றவர்களுக்காக எந்த உத்திரவாதங்களும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத் தில் கவனம் தேவை. மனதில் உள்ள மந்தநிலை மாற கூடுதல் சிரத்தையுடன் காரியங்களை கவனிப்பது அவசியம். வாழ்க்கை தரம் உயரும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 7

newstm.in

Trending News

Latest News

You May Like