1. Home
  2. ஜோதிடம்

27-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும்.

27-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும்.

27-09-2019-newstm-daily-astrology

27-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும்.

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

27-Sep-19
விகாரி வருஷம் தக்ஷிணாயணம்
வர்ஷருது புரட்டாசி - 10
வெள்ளிக்கிழமை

சதுர்த்தசி மறு நாள் காலை 3.11 மணி வரை. பின் அமாவாசை
பூரம் இரவு 1.03 மணி வரை பின் உத்ரம்
சித்த யோகம்
நாமயோகம்: சுபம்
கரணம்: பத்ரம்

அகஸ்: 29.54
த்யாஜ்ஜியம்: 10.11
நேத்ரம்: 0
ஜீவன்: 0
கன்னி லக்ன இருப்பு (நா.வி): 3.27
சூரிய உதயம்: 6.05


ராகு காலம்: காலை 10.30 - 12.00
எமகண்டம்: மதியம் 3.00 - 4.30
குளிகை: காலை 7.30 - 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
மாத சிவராத்திரி.
திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர், ஸ்ரீகாந்திமதியம்மன் இருவருக்கும் திருமஞ்சன சேவை.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு.

திதி: சதுர்த்தசி
சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம்
சூரியன்
உத்திரம் 4ம் பாதம் - பகை
சந்திரன்
சிம்மம் - பகை
செவ்வாய்
உத்திரம் 2ம் பாதம் - நட்பு
புதன்
சித்திரை 3ம் பாதம் - நட்பு
குரு
கேட்டை 3ம் பாதம் - பகை
சுக்ரன்
ஹஸ்தம் 3ம் பாதம் - நீசம்
சனி
மூலம் 4ம் பாதம் - நட்பு
ராகு
திருவாதிரை 4ம் பாதம் - நட்பு
கேது
பூராடம் 2ம் பாதம் - நட்பு

மேஷம்: கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில் ராஹூ - சுக ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் -  ரண, ருண ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்ரன் -  அஷ்டம ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பான நிலை காணப்படும். பிள்ளைகளின் அறிவு திறமை வெளிப்படும். அடுத்தவர்கள்  பிரச்சனையை தீர்த்து வைப்பீர்கள். பயணங்கள் சாதகமான பலன் தரும். பொறுப்புகள் கூடும். எனினும் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. திடீரென்று கோபம் வரும். ஏதாவது ஒருவகையில் அடுத்தவரிடம் வீண்பேச்சு கேட்க நேரலாம் கவனம் தேவை.     அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9ரிஷபம்: கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - தைரிய ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில்  செவ்வாய் -  பஞ்சம ஸ்தானத்தில்சூர்யன், புதன்,  சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் சனி, கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் திருப்தி உண்டாகும். கல்வி தொடர்பான  பயணங்கள் செல்ல நேரிடலாம். எதிர்ப்புகள் விலகும். காரிய தடை நீங்கும். திடீர் கோபம் ஏற்படலாம். நிதானமாக பேசுவது காரிய வெற்றிக்கு உதவும்.மற்றவர்கள் செய்கைகளால் மனவருத்தம் உண்டாகலாம். நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும்.   அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9மிதுனம்: கிரகநிலை: ராசியில்  ராஹூ - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - தைரிய ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில்சூர்யன், புதன்,  சுக்ரன் - ரண, ருண ஸ்தானத்தில் குரு  - களத்திர ஸ்தானத்தில் சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று மற்றவர்களின்  காரியங்களில் ஈடுபடும் போது கவனம் தேவை.  உழைப்பு வீணாகலாம். எனவே திட்டமிட்டு எதையும் செய்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாடிக்கையாளர்களை அனுசரித்து நிதானமாக  பேசுவது நன்மை தரும். குடும்பத்தில் குதூகலம் நிறையும். குடும்பத்தில் அமைதி குறைவது போல் தோன்றும் சகோதரர்கள் வழியில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கலாம் கவனம் தேவை.  அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7கடகம்: கிரகநிலை: ராசியில் சந்திரன் - குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - தைரிய, வீர்ய ஸ்தானத்தில் சூர்யன், புதன்,  சுக்ரன் -  பஞ்சம ஸ்தானத்தில் குரு - ரண, ருண ஸ்தானத்தில் சனி , கேது -  அயன, சயன, போக ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று கடனுக்கு பொருள்களை அனுப்பும் போது எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளுடன்  கவனமாக பேசுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். வியாபார போட்டிகள் தடை தாமதங்கள் நீங்கும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5சிம்மம்: கிரகநிலை: ராசியில்  செவ்வாய் -    குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன்,  சுக்ரன்- சுக  ஸ்தானத்தில்  குரு -  பஞ்சம ஸ்தானத்தில்  சனி , கேது -  லாப ஸ்தானத்தில்  ராஹூ- அயன,சயன, போக ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாமல் அனுசரித்து செல்வது நல்லது.உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள்.  பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் உண்டாகும். . அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9கன்னி: கிரகநிலை: ராசியில் சூர்யன், புதன்,  சுக்ரன் - தைரிய ஸ்தானத்தில்  குரு -  சுக  ஸ்தானத்தில்  சனி , கேது - தொழில்  ஸ்தானத்தில்   ராஹூ -  லாப ஸ்தானத்தில் சந்திரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் செவ்வாய்  என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். கோபத்தை குறைப்பது நன்மை தரும். மாணவர்கள் சகமாணவர்களுடன் பழகும் போது கவனம் தேவை. கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள் விருப்பமான நபரை சந்தித்து மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9துலாம்: கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  குரு - தைரிய ஸ்தானத்தில்  சனி , கேது - பாக்கிய ஸ்தானத்தில்  ராஹூ - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் -  லாப ஸ்தானத்தில் செவ்வாய் -  அயன, சயன, போக ஸ்தானத்தில் சூர்யன், புதன்,  சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று மனதில் கொண்ட குறிக்கோளை அடையும் வரை சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கெட்ட கனவுகள் உண்டாகலாம். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். உஷ்ண சம்பந்தமான நோய் ஏற்படலாம். வீண் பேச்சுக்களை குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. எவருக்கும் அவசரப்பட்டு வாக்கு கொடுக்கமாட்டீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் உங்கள் சொல்லுக்குக் கட்டுப்படுவார்கள்.    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9விருச்சிகம்: கிரகநிலை: ராசியில்  குரு - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சனி , கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் -  அஷ்டம  ஸ்தானத்தில் ராஹு- தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சூர்யன்,புதன்,  சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதமாகும் அதனால் திடீர் பண நெருக்கடி வரலாம். இடம் பொருள் அறியாமல் பேசுவதால் அடுத்தவர்களிடம் மனஸ்தாபம் உண்டாகலாம். பெரிய எதிர்பார்ப்புகள் கைகூடும். அரசாங்க வழியிலும் சலுகைகள் கிடைக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். பணவரத்து திருப்தி தரும். கோபத்தை குறைப்பது நல்லது.   அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9தனுசு: கிரகநிலை: ராசியில்  சனி , கேது -   களத்திர ஸ்தானத்தில் ராஹு- அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன்,  சுக்ரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் குரு  என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று தொழில் வியாபாரத்தில் திடீர் செலவுகள் உண்டாகும். பணவசூல் தாமதப்படலாம். வீண் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற பயணம் செல்ல நேரலாம். கூடுதல் பொறுப்புகள் அடுத்தவர் பணியை செய்வது போன்றவையும் வந்து சேரும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். மனகஷ்டம் தீரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 மகரம்: கிரகநிலை: ரண, ருண ஸ்தானத்தில் ராஹூ - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் -  அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில்சூர்யன், புதன்,  சுக்ரன்-  லாப ஸ்தானத்தில்  குரு - அயன சயன போக ஸ்தானத்தில் சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மனம்விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தருவதாக இருக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை உண்டாகலாம். தான் உண்டு தன்வேலை உண்டு என்று இருப்பது நல்லது. எதிர்பாரத செல்வ சேர்க்கை உண்டாகும். அதே நேரத்தில் மனதில் வீண்கவலையும் ஏற்படலாம்.              அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7கும்பம்: கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில் -  ராஹூ, ரண, ருண ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய் -  அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன்,  சுக்ரன்- தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று எதிர்பாராத செலவு உண்டாகும். அடுத்தவர்களிடம் பழகுவதில் கவனம் தேவை. பணவரத்து தாமதப்படும். மாணவர்கள் எந்த ஒரு பாடத்தை படித்தாலும் கவனத்தை  சிதறவிடாமல் படிப்பது அவசியம். விளையாடும் போது கவனம் தேவை. தொழில் விஷயமாக வெளியூர் செல்ல நேரலாம். எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்க தாமதம் ஏற்படலாம்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5மீனம்: கிரகநிலை: சுக ஸ்தானத்தில் -  ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - ரண, ருண ஸ்தானத்தில்  செவ்வாய்  -  களத்திர ஸ்தானத்தில் சூர்யன்,புதன்,  சுக்ரன்-   பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில்  ஸ்தானத்தில் சனி , கேது   என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று அடுத்தவர்கள் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்கு ஆலோசனை கூற தயங்கமாட்டீர்கள். எதிலும் லாபமான நிலை காணப்படும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணம் வரத்து அதிகரிக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

newstm.in

Trending News

Latest News

You May Like