1. Home
  2. ஜோதிடம்

27.09.2018 தினப்பலன் - இந்த நான்கு ராசிகாரர்களுக்கு கடன் தொல்லையிலிருந்து விடுதலை

27.09.2018 தினப்பலன் - இந்த நான்கு ராசிகாரர்களுக்கு கடன் தொல்லையிலிருந்து விடுதலை

27-09-2018-newstm-astrology

27.09.2018 தினப்பலன் - இந்த நான்கு ராசிகாரர்களுக்கு கடன் தொல்லையிலிருந்து விடுதலை

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்!

விளம்பி வருஷம் I தக்ஷிணாயணம் I வர்ஷருது I புரட்டாசி 11I இங்கிலீஷ்: 27 September 2018 I வியாழக்கிழமை

துவிதியை காலை 9.25 மணி வரை. பின் திரி தியைI அசுபதி மறு நாள் காலை 3.22 மணி வரை. பின் பரணி

வ்யாகாதம் நாமயோகம் Iகரஜை கரணம் Iஅமிர்த யோகம்

தியாஜ்ஜியம்: 43.05 I அகசு: 29.54 Iநேத்ரம்: 2 I ஜீவன்: 1I கன்னி லக்ன இருப்பு: 7.26 Iசூர்ய உதயம்: 6.05

ராகு காலம்: மதியம் 1.30 - 3.00 I எமகண்டம்: காலை 6.00 - 7.30 I குளிகை: காலை 9.00 - 10.30 I சூலம்: தெற்கு I ப ரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு: இன்று சமநோக்கு நாள் I ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பா டு.

திதி: திரிதியை I சந்திராஷ்டமம்: ஹஸ்தம்

குரு பெயர்ச்சி 2018-19: உங்கள் ராசிக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்களை படிக்க கிளிக் செய்யுங்கள்!

மேஷம்:   கிரகநிலை: ராசியில் சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், புதன்  - களத்திர ஸ்தானத்தில் குரு, சுக்ரன் -  பாக்கிய ஸ்தானத்தில் சனி  - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.   பலன்: இன்று பிரச்சனைகள் ஒருபுறம் கவலையை உருவாக்கினாலும் அதற்குண்டான தீர்வுகளும் கிடைக்கும். வைத்தியச் செலவு இருக்காது. சேமிப்பு இல்லாவிட்டாலும் கடன் அடைபடுகிறதே என்று ஆறுதல் அடையலாம். புதிய முயற்சிகளைத் ஆரம்பிக்கும் முன் தகுந்த ஆலோசனை பெறவும்.  செய்த முயற்சிகளைத் தொடரவும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9 உங்கள் நட்சத்திரத்தைச் சொல்லுங்கள் நீங்கள் யார் என்று தெரிந்துகொள்ளுங்கள்... பகுதி 2ரிஷபம்:  கிரகநிலை: சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன்  - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு, சுக்ரன்  - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி  - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று உடல்நலம் சீராகும். இதுவரை நோய்களினால் அவதிப்பட்டவர்களுக்கு, நோயின் தாக்கம் முழுமையாகக் குறையும். பூரண குணம் ஏற்படும். அதனால் வைத்தியச் செலவுகளும் விலகும். தொழில்துறையில் போட்டியாளர்கள் காணாமல் போவார்கள். தொழிலை லாபகரமாக நடத்தலாம். கடன்களையும் அடைக்கலாம். சிறிது சிறிதாக சேமிக்கலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பிரவுண் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6மிதுனம்:  கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன்  - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு, சுக்ரன்  - களத்திர ஸ்தானத்தில் சனி  - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய், கேது -  லாப ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.   பலன்: இன்று தேவையற்ற விவகாரங்களை அடியோடு விலக்குவது நல்லது. குடும்பத்தில் அமைதியும் ஆனந்தமும் உண்டாகும். குடும்பத்தினர் வேண்டுவதை நிறைவேற்றி வைப்பீர்கள்.  உங்கள் மரியாதை உயரும். பழைய கடன்களை அடைத்து, வாக்கு நாணயத்தைக் காப்பாற்றி, புதிய கடன்களை வாங்கி தொழிலைப் பெருக்கலாம். தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 7 உங்கள் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன் மற்றும் பரிகாரங்களைத் தெரிந்துகொள்ள கிளிக் செய்யுங்கள்!கடகம்: கிரகநிலை:  தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன்  - சுக ஸ்தானத்தில் குரு, சுக்ரன்  - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி  - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று நீங்கள் பயமின்றி எந்த காரியத்திலும் இறங்கலாம். அவசரமாக எதையும் செய்ய தோன்றும்.  துணிச்சலுடன் எதிலும் ஈடுபடுவீர்கள்.  சாமர்த்தியமான பேச்சின் மூலம் எல்லா அனுகூலமும் கிடைக்க பெறும். ஆனால்  வீண்வாக்குவாதத்தால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9சிம்மம்:  கிரகநிலை: ராசியில் சூர்யன், புதன்  - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு, சுக்ரன்  - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி  - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், கேது  - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.   பலன்: இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டு  செயல்படுத்துவது வளர்ச்சிக்கு உதவும். வாடிக்கையாளர்களிடம்  சாதூர்யமாக பேச வேண்டி இருக்கும். உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு துணிச்சல் அதிகரிக்கும். எதை பற்றியும் கவலைப்படாமல் வேலையில்  வேகம் காட்டுவீர்கள். முக்கிய முடிவுகள்  எடுக்கும் போது அவசரப்படாமல் இருப்பது நல்லது.   அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9 குளித்து முடித்ததும் தலை துவட்டக்கூடாது ஏன் தெரியுமா?கன்னி:  கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, சுக்ரன்  - சுக ஸ்தானத்தில் சனி  - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது  - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், புதன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.   பலன்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன்  தன்மையாக பேசுவது நல்லது. கணவன்,  மனைவிக்கிடையே  ஒற்றுமை குறைவு ஏற்படலாம் கவனம் தேவை.  பிள்ளைகளுக்காக செய்யும்  வேலைகளில் தடை ஏற்படலாம். கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும் காலகட்டம்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9துலாம்:  கிரகநிலை: ராசியில் குரு, சுக்ரன்  - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி  - சுக ஸ்தானத்தில் செவ்வாய், கேது  - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.   பலன்: இன்று எந்த காரியத்திலும் அவசரம் காட்ட தோன்றும். நிதானமாக செய்தால் வெற்றி நிச்சயம். வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது  நல்லது.  மாணவர்களுக்கு எதிர்கால கல்வி தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து  தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும். நீங்கள் அவசரப்படுவதை தவிர்ப்பது நன்மை தரும். இந்த காலகட்டத்தில் வீண் செலவும், அலைச்சலும் உண்டாகலாம்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9விருச்சிகம்:  கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி  - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது  - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன்  - அயன சயன போக ஸ்தானத்தில் குரு, சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.   பலன்: இன்று எதிர்பாராத இடமாற்றம்  ஏற்படலாம்.  தேவையற்ற  குற்றச்சாட்டுக்கு ஆளாகலாம். எனவே  எதிலும் மிகவும் கவனத்துடன் ஈடுபடுவது நல்லது.  தொழில் வியாபாரம்  தொடர்பான  பணிகளில் தாமதம் ஏற்படும்.  வியாபாரம் தொடர்பான கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில்  இருப்பவர்கள் அடுத்தவர்களுக்கான பொறுப்புகளை ஏற்கும் போது எச்சரிக்கை தேவை.    அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7 மூன்றாவது நாயகர்கள் - பகுதி 5 | அசல் அதிரடி நாயகன் விஜயகாந்த்!தனுசு:  கிரகநிலை: ராசியில் சனி  - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், கேது  - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன்  - லாப ஸ்தானத்தில் குரு, சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.   பலன்: இன்று பாதகஸ்தானத்தில் உலவும் கிரக அமைப்பால் வாழ்க்கை துணையின் உடல்  ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகள் மூலம் மனகவலை  ஏற்படலாம். மற்றவர்களுக்கு உதவி செய்யபோய்  தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரலாம். கவனம் தேவை.   அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5மகரம்:  கிரகநிலை: ராசியில் செவ்வாய், கேது  - சுக ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன், புதன்  - தொழில் ஸ்தானத்தில் குரு, சுக்ரன்  - அயன சயன போக ஸ்தானத்தில் சனி  என கிரகங்கள் வலம் வருகின்றன.   பலன்: இன்று பிள்ளைகளின் கல்வியில் எதிர்பாராத தடை, தாமதம் உண்டாகலாம்.  சிறிய வேலையும் செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.  கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும்.  கடன் பிரச்சனை தீரும்.  எல்லாவிதமான முன்னேற்றமும் வந்து சேரும். வாகனங்களால் லாபம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7கும்பம்:  கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன்  - பாக்கிய ஸ்தானத்தில் குரு, சுக்ரன்  - லாப ஸ்தானத்தில் சனி  - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.   பலன்: இன்று மனதில் இருந்த குழப்பம் நீங்கும். புதிய நண்பர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட  தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். தொழில் வியாபாரம்  முன்னேற்றம் அடையும். புதிய தொழில்  அல்லது வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறன் அதிகரிக்கும்.    அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9மீனம்:  கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன்  - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு, சுக்ரன்  - தொழில் ஸ்தானத்தில் சனி  - லாப ஸ்தானத்தில் செவ்வாய், கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.   பலன்: இன்று குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். திருமணம்  தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும். குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவும், கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் உண்டாகும். மனக்குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

newstm.in

Trending News

Latest News

You May Like