1. Home
  2. ஜோதிடம்

27-07-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிலும் லாபமான நிலை காணப்படும்.

27-07-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிலும் லாபமான நிலை காணப்படும்.

27-07-2019-newstm-daily-astrology

27-07-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிலும் லாபமான நிலை காணப்படும்.

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

27-Jul-19 விகாரி வருஷம்
தக்ஷிணாயணம் க்ரீஷ்மருது
ஆடி - 11 சனிக்கிழமை

தசமி மாலை 4.29 மணி வரை. பின் ஏகாதசி
கார்த்திகை மாலை 5.02 மணி வரை பின் ரோகிணி
அமிர்த யோகம்
நாமயோகம்: கண்டம்
கரணம்: பத்ரம்

அகஸ்: 31.15
த்யாஜ்ஜியம்: -
நேத்ரம்: 1
ஜீவன்: 1/2
கடக லக்ன இருப்பு (நா.வி): 3.43
சூரிய உதயம்: 6.04


ராகு காலம்: காலை 9.00 - 10.30
எமகண்டம்: மதியம் 1.30 - 3.00
குளிகை: காலை 6.00 - 7.30
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்

குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
சில ஸ்தலங்களில் கார்த்திகை விரதம்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீ ஆண்டாள் பிரம்மோற்ஸவாரம்பம்.
இன்று பகல் மணி 7.44க்கு மேல் 8.20க்குள் மனை, மடம், ஆலயம், கிணறு வாஸ்து செய்ய நன்று.

திதி: தசமி
சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்

மேஷம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன் (வ), ராஹூ - சுகஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், சுக்ரன்  - அஷ்டம ஸ்தானத்தில்  குரு (வ)  - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது உங்களுக்கு எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் பிரச்சனைகளை தவிர்க்க வழிவகை செய்யும். அரசியல்வாதிகள் கவனமுடன் செயல்பட்டால் மேலிடத்தின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். உங்களிடம் உதவி கேட்டு வருபவர்களை உதாசீனப் படுத்தாதீர்கள். பெண்களுக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். எதிர்ப்புகள் அகலும். பணவரத்து கூடும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6  ரிஷபம்: கிரகநிலை: ராசியில் சந்திரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன் (வ), ராஹூ - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், சுக்ரன்  - களத்திர ஸ்தானத்தில்  குரு (வ)  - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ), கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று மற்றவர்களின்  காரியங்களில் ஈடுபடும் போது கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு  பாடங்களை படிப்பதில் திருப்தி உண்டாகும். கல்வி தொடர்பான  பயணங்கள் செல்ல நேரிடலாம்.  எதிர்ப்புகள் விலகும். காரிய தடை நீங்கும். நிதானமாக பேசுவது காரிய வெற்றிக்கு உதவும்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6  மிதுனம்: கிரகநிலை: ராசியில் புதன் (வ), ராஹூ - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், சுக்ரன்  - ரண ருண ரோக ஸ்தானத்தில்  குரு (வ)  - களத்திர ஸ்தானத்தில் சனி (வ), கேது - விரைய ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று உழைப்பு வீணாகலாம். எனவே திட்டமிட்டு எதையும் செய்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாடிக்கையாளர்களை அனுசரித்து நிதானமாக  பேசுவது நன்மை தரும்.  கடனுக்கு பொருள்களை அனுப்பும் போது எச்சரிக்கை தேவை. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி உண்டாகும். கடினமான வேலை களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9  கடகம்: கிரகநிலை: ராசியில் செவ்வாய், சூர்யன், சுக்ரன்  - பஞ்சம ஸ்தானத்தில்  குரு (வ)  - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ), கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன்  - விரைய ஸ்தானத்தில் புதன் (வ), ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளுடன்  கவனமாக பேசுவது நல்லது. குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாமல் அனுசரித்து செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9  சிம்மம்: கிரகநிலை: சுகஸ்தானத்தில்  குரு (வ)  - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ), கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன்  - லாப ஸ்தானத்தில் புதன் (வ), ராஹூ - விரைய ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். கோபத்தை குறைப்பது நன்மை தரும். கலைத்துறையினருக்கு மிகவும் நன்மை பயக்கும் நாளாக அமையும். தொடர் பணிகளால் களைப்படைவீர்கள். வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தொழில், வியாபாரம், லாபகரமாக நடக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக பலன் தரும். பயணம் மூலம் வியாபாரம், தொழில் விரிவாக்கம் பெறும். பழைய பாக்கிகள் வசூலாகும்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9  கன்னி: கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில்  குரு (வ)  - சுகஸ்தானத்தில் சனி (வ), கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன்  - தொழில் ஸ்தானத்தில் புதன் (வ), ராஹூ - லாப ஸ்தானத்தில் செவ்வாய்-   என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று அரசியல்வாதிகளுக்கு உற்சாகமான நாள். கட்சிப் பணிகளுக்காக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். நேரத்தை வீணாக்காமல் உபயோகப்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். மாணவர்கள் சகமாணவர்களுடன் பழகும் போது கவனம் தேவை. கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இராது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 6  துலாம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில்  குரு (வ)  - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ), கேது - அஷ்டம  ஸ்தானத்தில் சந்திரன்  - பாக்கிய ஸ்தானத்தில் புதன் (வ), ராஹூ - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், சுக்ரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று சில சங்கடங்கள் நேரலாம். கெட்ட கனவுகள் உண்டாகலாம். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். உஷ்ண சம்பந்தமான நோய் ஏற்படலாம். எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதமாகும் அதனால் திடீர் பண நெருக்கடி வரலாம். இடம் பொருள் அறியாமல் பேசுவதால் அடுத்தவர்களிடம் மனஸ்தாபம் உண்டாகலாம். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சனைகள் வரக்கூடும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6  விருச்சிகம்: கிரகநிலை: ராசியில்  குரு (வ)  - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ), கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன்  - அஷ்டம ஸ்தானத்தில் புதன் (வ), ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தொழில் வியாபாரத்தில் திடீர் செலவுகள் உண்டாகும். பணவசூல் தாமதப்படலாம். வீண் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற பயணம் செல்ல நேரலாம். கூடுதல் பொறுப்புகள் அடுத்தவர் பணியை செய்வது போன்றவையும் வந்து சேரும்.  பகைவர்கள் பணிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு. தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும்.    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6  தனுசு: கிரகநிலை: ராசியில் சனி (வ), கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன்  - களத்திர  ஸ்தானத்தில் புதன் (வ), ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், சுக்ரன்  - விரைய ஸ்தானத்தில்  குரு (வ)  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மனம்விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தருவதாக இருக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை உண்டாகலாம்.  உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள்.    அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9      மகரம்: கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன் (வ), ராஹூ - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், சுக்ரன்  - லாப ஸ்தானத்தில்  குரு (வ)  - விரைய ஸ்தானத்தில் சனி (வ), கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று எதிர்பாராத செலவு உண்டாகும். அடுத்தவர்களிடம் பழகுவதில் கவனம் தேவை. பணவரத்து தாமதப்படும். சோதனைகள் மிகுந்த நாள். வாய்ப்புகள் இருந்தாலும் உடல்நலம் ஒத்துழைக்காமல் போகலாம். சிறு பிரச்சனையாக இருந்தாலும் கவனமுடன் இருப்பது நல்லது. பெரியோர் சொல்படி நடந்து கொண்டால் தொல்லைகளைத் தவிர்க்கலாம். பலவிதமான சூழ்நிலைகளில் உங்களுடைய சாதுர்யத்தால் சமாளிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5  கும்பம்: கிரகநிலை: சுகஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் புதன் (வ), ராஹூ - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், சுக்ரன்  - தொழில் ஸ்தானத்தில்  குரு (வ)  - லாப ஸ்தானத்தில் சனி (வ), கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று முன்னேற்றத்தில் தடைகள் இருக்கும். பொறுமையாக கையாள்வதன் மூலம் பெரிய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். மிகவும் பொறுமையாக செயல்பட வேண்டியது அவசியம். மாணவர்களுக்கு  எந்த ஒரு பாடத்தை படித்தாலும் கவனத்தை  சிதறவிடாமல் படிப்பது அவசியம். விளையாடும் போது கவனம் தேவை. பொதுவாக அன்றாடப் பணிகளை கவனித்துக் கொண்டு மிகவும் நிதானமாக இருக்க வேண்டும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6  மீனம்: கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - சுகஸ்தானத்தில் புதன் (வ), ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், சுக்ரன்  - பாக்கிய ஸ்தானத்தில்  குரு (வ)  - தொழில் ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று திருமண தடை நீங்கும். செல்வம் சேரும். எதிலும் லாபமான நிலை காணப்படும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து அதிகரிக்கும்.  துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு பாராட்டு பெறுவீர்கள். எதிலும் தயக்கமோ பயமோ இருக்காது. கஷ்டமில்லாத  சுக வாழ்க்கை உண்டாகும். வீட்டில் சுப காரியம் நடக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6  

newstm.in

Trending News

Latest News

You May Like