1. Home
  2. ஜோதிடம்

(27-09-2020) இன்றைய நாள் வெற்றிகரமாக அமைய... இன்றைய ராசிபலன்கள்

(27-09-2020) இன்றைய நாள் வெற்றிகரமாக அமைய... இன்றைய ராசிபலன்கள்

(27-09-2020) இன்றைய நாள் வெற்றிகரமாக அமைய... இன்றைய ராசிபலன்கள்

கிரகநிலை:

ராசியில் செவ்வாய்() - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் புதன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் குரு, சனி - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம். தோழிகளுடன் சுமுகமாக பேசி பழகுவது நல்லது. சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வெளியூர் தகவல்கள் சாதகமானதாக இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் வேகமாக நடைபெறும். தடைகள் அகலும். எதிர்பார்த்த அளவு வியாபாரம் பெருகி பணவரத்தும் இருக்கும். தொழிலாளர்களால் மிகுந்த லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கிரகநிலை:

ராசியில் ராஹூ - தைரிய ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன் - களத்திர ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் குரு, சனி - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - விரைய ஸ்தானத்தில் செவ்வாய்() என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலம் முன்னேற்றம் காண உதவி கிடைக்கும். எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. காரிய வெற்றி கிடைக்கும். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகப்படும். தடைபட்டு வந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். சக ஊழியர்களால் உதவியும் இருக்கும். உற்பத்தி துறையில் இருப்பவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் கைகூடி வரும். வாழ்க்கை துணை மூலம் நன்மை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் சூர்யன் - பஞ்சம ஸ்தானத்தில் புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் குரு, சனி - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய்() - அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று மாணவர்களுக்கு கல்வியில் வேகம் காணப்படும். சக மாணவர்களிடம் சுமுகமாக அனுசரித்துபோவது நல்லது. காரிய வெற்றி உண்டாகும். குடும்ப கவலை தீரும். கடின உழைப்பும், மனோ தைரியமும் அதிகரிக்கும். மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடக்கலாம். குடும்பத்தில் உள்ள சிக்கல்கள் நிவர்த்தியாகி உங்கள் சொற்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். வழக்கு விவகாரங்களில் கால தாமதமான நிலை காணப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

கிரகநிலை:

ராசியில் சுக்ரன் - தைரிய ஸ்தானத்தில் சூர்யன் - சுக ஸ்தானத்தில் புதன் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - ரண, ருண ஸ்தானத்தில் குரு, சனி - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய்() - லாப ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று உடல் ஆரோக்கியம் ஏற்படும். எதிர்பாலினத்தாரால் லாபம் கிடைக்கக் கூடும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய நேரிடும். பணவரத்து கூடும். வீண் அலைச்சல் திடீர் கோபம் உண்டாகலாம். காரிய வெற்றி உண்டாகும். மதிப்பும், அந்தஸ்தும் உயரும். தடைபட்டு வந்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கடித போக்குவரத்து சாதகமான பலன் தரும். கலைத்துறையினருக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. தொழில் மந்தமாக காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் - தைரிய ஸ்தானத்தில் புதன் - சுகஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் குரு, சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய்() - தொழில் ஸ்தானத்தில் ராஹூ - விரைய ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு கடன் பிரச்சனைகள் தீரும். போட்டிகள் குறையும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்தவை நல்லபடியாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சில விஷயங்களை தவறாக புரிந்து கொண்டு சங்கடப்பட வேண்டி இருக்கும். வாக்குவன்மையால் நன்மை ஏற்படும். திட்ட மிட்டு செய்யும் காரியங்கள் நல்ல பலன் தரும். வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. அரசியல் துறையினர் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக மனிதர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. கவனத்தை சிதறவிடாமல் உழைப்பது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கிரகநிலை:

ராசியில் சூர்யன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன் - தைரிய ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் குரு, சனி - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய்() - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ - லாப ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த இடைவெளி குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். நண்பர்களால் தொந்தரவுகள் ஏற்படலாம். கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு வலியசென்று உதவிகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு பாடங்களை படிப்பது பற்றிய கவலை நீங்கும். மனதில் உற்சாகம் பிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

கிரகநிலை:

ராசியில் புதன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - தைரிய ஸ்தானத்தில் குரு, சனி - சுக ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய்() - அஷ்டம ஸ்தானத்தில் ராஹூ - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று மற்றவர்களுக்கு உதவி செய்வதால் வீண் அலைச்சல் உண்டாகலாம். காரிய வெற்றி பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். கலைத்துறையினருக்கு இருந்த போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். சக கலைஞர்கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் நன் மதிப்பை பெறுவீர்கள். சகோதரர்கள் வகையில் இருந்த மனத்தாங்கல் மறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பூமி தொடர்பான பிரச்சனைகள் இழுபறியான நிலை காணப்படும். மனத்தெம்பும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்தமான நிலை காணப்பட்டாலும் லாபத்திற்கு பஞ்சமிருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

கிரகநிலை:

ராசியில் கேது - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு, சனி - தைரிய ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய்() - களத்திர ஸ்தானத்தில் ராஹு - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் சூர்யன் - விரைய ஸ்தானத்தில் புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து பாராட்டுக்கள் கிடைக்க பெறுவீர்கள். உயர் பதவிகள் கிடைக்க கூடும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரத்து அதிகரிக்கும். தடைகள் நீங்கி முன்னேற்றம் காண்பீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு கிடைக்க தாமதமானாலும் கட்டாயம் கிடைக்கும். போட்டிகளை சமாளிக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க நேரிடும். நிதானமாக இருப்பது நல்லது. அலுவலகத்தில் நல்ல பெயர் கிட்டும். மேலிடத்திலிருந்து அதிகமான சுமைகளைத் தருவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

கிரகநிலை:

ராசியில் குரு, சனி - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய்() - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராஹு - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன் - லாப ஸ்தானத்தில் புதன்- அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று மாணவர்களுக்கு சாமர்த்தியமான செயல்களால் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள். பாடங்களில் கவனம் செலுத்துவது அதிகரிக்கும். மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். எந்த நேரத்திலும் அனைவருக்கும் உதவும் எண்ணம் தோன்றும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி அமைதி காணப்படும். கணவன் அல்லது மனைவி மூலம் இருந்த பிரச்சனைகள் நல்ல முடிவை தரும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பதைகண்டு மனம் மகிழ்வீர்கள். நண்பர்கள் உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வழக்குகள் இழுபறியாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

கிரகநிலை:

ராசியில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய்() - பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் புதன் - லாப ஸ்தானத்தில் கேது - அயன, சயன, போக ஸ்தானத்தில் குரு, சனி என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று கற்பனை வளமும் கலையார்வமும் அதிகரிக்கும். நட்பிற்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். விருப்பங்கள் கைகூடும். பயன் தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். மனதில் தைரியமும் மகிழ்ச்சியும் உண்டாகும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் செவ்வாய்() - சுக ஸ்தானத்தில் ராஹூ - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் புதன் - தொழில் ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் குரு, சனி - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று பணவரத்து குறையும். வாழ்க்கை துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் நெருக்கடி ஏற்பட்டு நீங்கும். வழக்கம்போல் வியாபாரம் இருந்தாலும் திடீர் பணதேவை ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த வேலையை செய்யும் முன்பும் அதுபற்றி அதிகம் யோசிப்பார்கள். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும். அரசியல் துறையினர் தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய்() - தைரிய ஸ்தானத்தில் ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன் - அஷ்டம ஸ்தானத்தில் புதன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் குரு, சனி - லாப ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று சிலருக்கு புதிய வேலையும் கிடைக்கலாம். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். உறவினர்கள் வகையில் செலவுகள் ஏற்படலாம். நண்பர்களால் இருந்து வந்த கருத்து வேற்றுமை அகலும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பது பற்றிய கவலை அதிகரிக்கும். ஆனாலும் உற்சாகமான மனநிலை காணப்படும். விளையாட்டு போட்டிகளில் பரிசுகள் கிடைக்கும். குடும்ப கஷ்டங்கள் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

Trending News

Latest News

You May Like