1. Home
  2. ஜோதிடம்

26-6-2018 தினபலன்: இந்த ராசிகாரர்களுக்கு சாதகமான நாள் இன்று!

26-6-2018 தினபலன்: இந்த ராசிகாரர்களுக்கு சாதகமான நாள் இன்று!

daily-free-astrology-26-6-2018

26-6-2018 தினபலன்: இந்த ராசிகாரர்களுக்கு சாதகமான நாள் இன்று!

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்!

விளம்பி வருஷம் I உத்தராயணம் I க்ரீஷ்மருது

ஆனி 12 I இங்கிலீஷ்: 26 June 2018 I செவ்வாய்க்கிழமை

த்ரயோதசி காலை 8.08 மணி வரை. பின் சதுர்த்தசி

அனுஷம் காலை 9.04 மணி வரை. பின் கேட்டை

சுபம் நாமயோகம் I தைதுலம் கரணம் I சித்த யோகம்

ராகு காலம்: மதியம் 3.00 - 4.30 I எமகண்டம்: காலை 9.00 - 10.30 I குளிகை: மதியம் 12.00 - 1.30

சூலம்: வடக்கு I பரிகாரம்: பால் I இன்று சம நோக்கு நாள்

கண்டதேவி ஸ்ரீ சிவபெருமான் ரதோற்சவம். சோழவந்தான் ஸ்ரீ ஜனகமாரியம்மன்பாற்குடக்காட்சி.

திதி:சதுர்த்தசி I சந்திராஷ்டமம்: பரணி

மேஷம்

கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன் - சுக ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் - களத்திர ஸ்தானத்தில் குரு(வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று கிரகசூழ்நிலை அருமையாக உள்ளது. இந்த காலகட்டத்தில் நீங்கள் விரும்பிய இடமாற்றம் உண்டாகும். எதை செய்தாலும் ஒரு குறிக்கோளுடன் செய்வீர்கள். செலவும் அதிகரிக்கும். அதே வேளையில் பணவரவும் உண்டாகும். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

ரிஷபம்

கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு(வ) - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி(வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று மனோதைரியம் கூடும். புதிய நட்பு கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மைதரும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத தடங்கல்கள் வரலாம். பணவரத்து இருந்தாலும் தேவை அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

மிதுனம்

கிரகநிலை: ராசியில் சூர்யன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று சரக்குகளை சரியான நேரத்தில் கொண்டு சேர்ப்பீர்கள். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோர் மிகுந்த லாபம் பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிபுரிவார்கள். சிலருக்கு புதிய பதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

கடகம்

கிரகநிலை: ராசியில் ராகு, சுக்ரன், புதன் - சுக ஸ்தானத்தில் குரு(வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன

பலன்: இன்று குடும்பத்தை விட்டு வெளியே சென்று தங்க நேரிடலாம். மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழும். மேல் பதவி செல்வதற்கு எழுதிய தேர்வில் தேர்ச்சி பெறுவீர்கள். இடமாற்றம் உறுதிபடுத்தப்படும். நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

சிம்மம்

கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு(வ) - சுக ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - லாப ஸ்தானத்தில் சூர்யன் - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் சிறப்பான முறையில் நடந்தேறும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். விருந்தினர்கள் வருகை இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். பிள்ளைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெள்ளை, மஞ்சள்

கன்னி

கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு(வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் சனி (வ) பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - தொழில் ஸ்தானத்தில் சூர்யன் - லாப ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று குடும்பத்தில் அனுகூலமான சூழ்நிலையைக் காண்பீர்கள். உங்கள் உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். உற்றார், உறவினர்கள் பாசத்தோடு பழகுவார்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 6

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், சிவப்பு

துலாம்

கிரகநிலை: ராசியில் குரு(வ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று பெரியோரின் ஆலோசனைப்படி நடந்துகொண்டு, குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டாலும் தப்பித்துக்கொள்வீர்கள். குழந்தைகள் உங்கள் சொற்படி கேட்பார்கள். புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதற்குத் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

அதிர்ஷ்ட எண்: 2, 9

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

விருச்சிகம்

கிரகநிலை: ராசியில் சந்திரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு(வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று உங்கள் சுய கௌரவத்துக்குப் பங்கம் ஏற்படாது. சக ஊழியர்களின் உதவியால் உங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். பணியின் நிமித்தமாக வெளிநாட்டிற்கு பயணம் செய்வீர்கள். டெக்னிக்கல் சார்ந்த கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வந்து குவியும்.

அதிர்ஷ்ட எண்: 4, 6

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

தனுசு

கிரகநிலை: ராசியில் சனி (வ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், கேது -- களத்திர ஸ்தானத்தில் சூர்யன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் - லாப ஸ்தானத்தில் குரு(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று புதிய பதவிகள் வரும். செய்கின்ற காரியங்களில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே அமையும். பொதுநலனோடு இயைந்த சமுதாய நலன் சார்ந்த எண்ணங்களைச் செயல்படுத்த முனைவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் அகலும். மேலிடத்திடம் இருந்து வந்த மனக்கசப்புகள் அகலும்.

அதிர்ஷ்ட எண்: 2, 3

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

மகரம்

கிரகநிலை: ராசியில் செவ்வாய், கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் - தொழில் ஸ்தானத்தில் குரு(வ) - லாப ஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று திடீரென்று கோபம் வரும். ஏதாவது ஒருவகையில் அடுத்தவரிடம் வீண்பேச்சு கேட்க நேரலாம் கவனம் தேவை. மற்றவர்கள் செய்கைகளால் மனவருத்தம் உண்டாகலாம். அதேவேளையில் நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்னை முடிவுக்கு வரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

கும்பம்

கிரகநிலை: பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு(வ) - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். வியாபார போட்டிகள் தடை தாமதங்கள் நீங்கும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு உண்டாகும். மனதில் அமைதி நிலவும். நிம்மதியாக உறங்குவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு

மீனம்

கிரகநிலை: சுக ஸ்தானத்தில் சூர்யன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு(வ) - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்: இன்று வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்து சேரும். உங்கள் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். அனைத்து விஷயங்களையும் நல்ல கண்ணோட்டத்துடன் காண்பீர்கள். பங்கு வர்த்தகத்தில் லாபம் குவியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 4, 6

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பிரவுண்

newstm.in

Trending News

Latest News

You May Like