1. Home
  2. ஜோதிடம்

26-09-2018 தினப்பலன் - இந்த 4 ராசிக்காரர்களுக்கு சுபச்செலவு அதிகரிக்கும்!

26-09-2018 தினப்பலன் - இந்த 4 ராசிக்காரர்களுக்கு சுபச்செலவு அதிகரிக்கும்!

26-09-2018-newstm-daily-free-astrology

26-09-2018 தினப்பலன் - இந்த 4 ராசிக்காரர்களுக்கு சுபச்செலவு அதிகரிக்கும்!

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்!

விளம்பி வருஷம் I தக்ஷிணாயணம் I வர்ஷருது I புரட்டாசி 10 I இங்கிலீஷ்: 26 September 2018 I புதன்கிழமை

பிரதமை காலை 9.25 மணி வரை . பின் துவிதியை I ரேவதி மறு நாள் காலை 3.04 மணி வரை. பின் அசுபதி

துருவம் நாமயோகம் I கௌலவம் கரணம் I மரண யோகம்

தியாஜ்ஜியம்: 21.26 I அகசு: 29.55 I நேத்ரம்: 2 I ஜீவன்: 1 I கன்னி லக்ன இருப்பு: 7.30 I சூர்ய உதயம்: 6.05

ராகு காலம்: மதியம் 12.00 - 1.30 I எமகண்டம்: காலை 7.30 - 9.00 I குளிகை: காலை 10.30 - 12.00 I சூலம்: வடக்கு I பரிகாரம்: பால்

குறி ப்பு: இன்று சம நோக்கு நாள் I கரூர் தான்தோன்றி ஸ்ரீ கல்யாண வேங்கடேசப் பெருமாள் ஊஞ்சலில் காட்சி I தேவகோட்டை ஸ்ரீரெங்கநாதர் புறப்பாடு

திதி: துவிதியை I சந்திராஷ்டமம்: உத்திரம்

குரு பெயர்ச்சி 2018-19: உங்கள் ராசிக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்களை படிக்க கிளிக் செய்யுங்கள்!

மேஷம்:  கிரகநிலை: பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - களத்திர ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று எதிலும் தைரியமாக செயல்படுவீர்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் அனுகூலமான போக்கு காணப்படும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பண வரவு திருப்தி தரும். குடும்பத்தில் சந்தோஷம் நிறைந்து இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9 உங்கள் நட்சத்திரத்தைச் சொல்லுங்கள் நீங்கள் யார் என்று தெரிந்துகொள்ளுங்கள்... பகுதி 2ரிஷபம்:  கிரகநிலை: சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக செயல் படுவது நல்லது. தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்களிடமிருந்து சந்தோஷமான செய்தி வந்து சேரும். குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முடிவெடுக்கும் போதும் அவசரம் வேண்டாம். கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3மிதுனம்:  கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் சனி - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய், கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நிதானத்தைக் கடை பிடிப்பது நன்மை தரும். சிறு உடல்நலக் குறைபாடாக இருந்தாலும் கவனமாக இருப்பது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் தேவை இல்லாத வாக்கு வாதங்களில் ஈடுபடவேண்டாம். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6 உங்கள் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன் மற்றும் பரிகாரங்களைத் தெரிந்துகொள்ள கிளிக் செய்யுங்கள்!கடகம்:  கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன் - சுக ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று உறவினர்கள் வகையில் தவிர்க்கமுடியாத சுபச் செலவுகளை சுமக்க நேரும். முக்கியமான பயணமும், முக்கிய பிரமுகர்களின் சந்திப்பும் உண்டாகும். அது உங்கள் எதிர்காலத்துக்கு நல்ல அஸ்திவாரமாக இருக்கும். சிலர் கூட்டு முயற்சிகளில் லாபம் தேடலாம். சிலர் குடும்பத்தினரோடு கூட்டுச் சேர்ந்து தொழில் செய்து லாபம் பார்க்கலாம். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 5, 9சிம்மம்:  கிரகநிலை: ராசியில் சூர்யன், புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொழில், வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் வெற்றி அடையலாம். சேமிப்பும் அடையலாம். உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் உங்களுக்கு முழுமையான பலனையும் திருப்தியையும் தரும். எதிர்ப்பும் இடையூறும் ஒருபுறம் இருந்தாலும், உங்களின் தன்னம்பிக்கையாலும் தைரியத்தாலும் அவற்றைப் போராடி எதிர்த்துநின்று வெற்றிகொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 குளித்து முடித்ததும் தலை துவட்டக்கூடாது ஏன் தெரியுமா?கன்னி:  கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - சுக ஸ்தானத்தில் சனி - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று கடமைகளைக் காப்பாற்றுவீர்கள். பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது என்றாலும், வைத்தியச் செலவும் அல்லது வீண்விரயச் செலவும் தவிர்க்க முடியாததாக இருக்கும். அதனால் சிலசமயம் விரக்தி ஏற்படலாம். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் பிரச்னை இருக்காது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 5, 7துலாம்:  கிரகநிலை: ராசியில் குரு, சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று குடும்பத்தில் உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. சுபநிகழ்ச்சிகள் இடம்பெறும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 மூன்றாவது நாயகர்கள் - பகுதி 5 | அசல் அதிரடி நாயகன் விஜயகாந்த்!விருச்சிகம்:  கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு, சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று சில அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்ய பணப்பற்றாக் குறையை சந்திக்கலாம். சனி ராசியில் இருப்பதால், ஒரு பிரச்சினை முடிந்ததும் இன்னொரு பிரச்சினை உருவாகலாம். ஆனாலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் பிரச்சினைகள் எவ்வளவு இருந்தாலும் தோல்வியும் தொய்வும் இல்லாமல் சமாளித்து ஜெயிக்கலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 7தனுசு:  கிரகநிலை: ராசியில் சனி - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், கேது - சுக ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - லாப ஸ்தானத்தில் குரு, சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். உங்கள் விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பழகும் நண்பர்களை எடைபோட முடியாது. வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பும் உங்கள் பெருந்தன்மையை கொஞ்சம் ஒதுக்கி வைக்கவும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 3மகரம்:  கிரகநிலை: ராசியில் செவ்வாய், கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன், புதன் - தொழில் ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று சில காரியங்கள் எதிர்மறையாக நடக்கும். பொதுவில் நீங்கள் இதுவரை எதிர்பார்த்த காரியங்கள் எல்லாம் இழுபறியாக நிறைவேறாமல் இருந்தாலும், ஏதோவொரு வகையில் எப்படியும் நடந்துவிடும் என்று நம்பிக்கை இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 6 நியூஸ்டிஎம் இன்றைய டாப் 10 செய்திகள்!கும்பம்:  கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - லாப ஸ்தானத்தில் சனி - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று பழகும் மனிதர்களின் வார்த்தைகளை நம்புவதா வேண்டாமா என்று சமயத்தில் சந்தேகம் ஏற்படலாம். கிரக அமைப்பு சலிப்பை உண்டாக்கினாலும், ராசிநாதன் சனி தனது பலத்தால் பாதிப்பை உண்டாக்காமல் காப்பாற்றி வருவார். இனிப்பும் கசப்பும் மாறிமாறி இன்றைய பலன்கள் இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 5, 9மீனம்:  கிரகநிலை: ராசியில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று உங்கள் காரியங்களும் முயற்சிகளும் தங்குதடையின்றி நடைபெறும். நீண்டகால திட்டங்கள் நிறைவேறும். கணவன் அல்லது மனைவியின் உடல்நிலையில் சுகமும் முன்னேற்றமும் உண்டாகும். குடும்பத்தில் அன்யோன்யமும் ஒற்றுமையும் ஏற்படும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்துப்போவார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

newstm.in

Trending News

Latest News

You May Like