26-07-2020 - இன்றைய தினப்பலன் : இன்று இந்த ராசிக்காரர்களுக்கு கவனம் தேவை..!
26-07-2020 - இன்றைய தினப்பலன் : இன்று இந்த ராசிக்காரர்களுக்கு கவனம் தேவை..!

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய ஸ்தானத்தில் ராஹூ, புதன் - சுகஸ்தானத்தில் சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) - விரைய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.
இன்று இரவு 2.53 மணிக்கு சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இன்று வீண் செலவுகள் கவுரவ குறைச்சல் ஏற்படலாம். மிகவும் கவனம் தேவை. தாய் தந்தையின் உடல் நிலையிலும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரத்தில் மெத்தனப் போக்கு காணப்பட்டாலும் தேவையான பணவரத்தும் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
கிரகநிலை:
ராசியில் சுக்ரன் - குடும்ப ஸ்தானத்தில் ராஹூ, புதன் - தைரிய ஸ்தானத்தில் சூர்யன் - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.
இன்று இரவு 2.53 மணிக்கு சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இன்று புதிய முயற்சிகளில் தாமதமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சல் காரியங்களில் இழுபறி என்ற நிலையை காண்பீர்கள். பேச்சை குறைத்து செயலில் ஈடுபடுவது நன்மையை தரும். குடும்பத்தில் சுமூகமான நிலை காணப்படும். ஆனாலும் மனதில் குடும்பம் தொடர்பான கவலை, பிள்ளைகள் பற்றிய கவலை இருந்து வரும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7
கிரகநிலை:
ராசியில் ராஹூ, புதன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் - சுகஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - விரைய ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
இன்று இரவு 2.53 மணிக்கு சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இன்று தொல்லைகள் குறையும். வீண் செலவுகள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. இனிமையான பேச்சின் மூலம் சிக்கலான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள் திறமையை கண்டு அடுத்தவர்கள் வியப்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
கிரகநிலை:
ராசியில் சூரியன் - தைரிய ஸ்தானத்தில் சந்திரன் - ரண, ருண ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சுக்ரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் ராஹூ, புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
இன்று இரவு 2.53 மணிக்கு சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இன்று திடீர் கோபம் வரும். அதை கட்டுப்படுத்துவது நல்லது. அலைச்சலை தவிர்ப்பதன் மூலம் களைப்பு ஏற்படாமல் தடுத்து கொள்ள முடியும். வேளை தவறி உணவு உண்ணாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் ராஹூ, புதன் - விரைய ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
இன்று இரவு 2.53 மணிக்கு சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இன்று தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமாக செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். ஆனால் வேலை செய்பவர்களிடம் கோபப்படாமல் தட்டி கொடுத்து வேலை வாங்குவது நன்மையை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். ஆனால் கடுமையான பணியின் காரணமாக சோர்வு உண்டாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6
கிரகநிலை:
ராசியில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் ராஹூ, புதன் - லாப ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
இன்று இரவு 2.53 மணிக்கு சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இன்று குடும்ப விஷயங்களில் ஆர்வம் காண்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் கவனம் செல்லும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். திடீர் என்று கோபம் உண்டாவதை தவிர்ப்பது நல்லது. திறமையை கண்டு மற்றவர்கள் பாராட்டுவார்கள். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ, புதன் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன் - விரைய ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
இன்று இரவு 2.53 மணிக்கு சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார்.
பலன்:
இன்று கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கலாம். ஆடை, அலங்கார பொருட்கள் வாங்கும் எண்ணம் தோன்றும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் சூழ்நிலை ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
கிரகநிலை:
தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் ராஹு, புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் - லாப ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
இன்று இரவு 2.53 மணிக்கு சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இன்று பணவரத்து கூடும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட தூர தகவல் கள் நல்ல தகவல்களாக வரும். முயற்சி களில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்துசேரும். திருப்திகரமான லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6
கிரகநிலை:
ராசியில் கேது, குரு (வ), சனி (வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் ராஹு, புதன் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
இன்று இரவு 2.53 மணிக்கு சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கப்பெறுவார்கள். அத்துடன் பணம் வரத்தும் திருப்திகரமாக இருக்கும். கடினமான பணிகளை கூட எளிதாக முடிக்கும் ஆற்றல் வரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9
கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் - ரண, ருண ஸ்தானத்தில் ராஹூ, புதன் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.
இன்று இரவு 2.53 மணிக்கு சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன்மனைவிக்கி டையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். குழந்தைகள் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்களால் பெருமை சேரும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ, புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.
இன்று இரவு 2.53 மணிக்கு சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இன்று நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் மன திருப்தியை தருவதாக இருக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து கூடும். செல்வம் சேரும். செயல்திறன் கூடும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
கிரகநிலை:
ராசியில் செவ்வாய் - தைரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் ராஹூ, புதன் - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.
இன்று இரவு 2.53 மணிக்கு சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இன்று வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாக நடந்து முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5