1. Home
  2. ஜோதிடம்

25-8-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் எதை செய்வதாயிருந்தாலும் தகுந்த ஆலோசனை பெறவும்!

25-8-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் எதை செய்வதாயிருந்தாலும் தகுந்த ஆலோசனை பெறவும்!

25-8-2019-newstm-daily-astrology

25-8-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் எதை செய்வதாயிருந்தாலும் தகுந்த ஆலோசனை பெறவும்!

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

25-Aug-19
விகாரி வருஷம் தக்ஷிணாயணம்
வர்ஷருது ஆவணி - 08
ஞாயிற்றுக்கிழமை

தசமி இரவு 2.47 மணி வரை. பின் ஏகாதசி
மிருக சீரிஷம் இரவு 12.41 மணி வரை பின் திருவாதிரை
சித்த யோகம்
நாமயோகம்: ஹர்ஷணம்
கரணம்: வணிஜை

அகஸ்: 30.41
த்யாஜ்ஜியம்: 0.56
நேத்ரம்: 1
ஜீவன்: 1/2
சிம்ம லக்ன இருப்பு (நா.வி): 3.56
சூரிய உதயம்: 6.07


ராகு காலம்: மாலை 4.30 - 6.00
எமகண்டம்: மதியம் 12.00 - 1.30
குளிகை: மதியம் 3.00 - 4.30
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
சுபமுகூர்த்த தினம்.
திருச்செந்தூர் ஸ்ரீ முருகப் பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும் இரவு சுவாமி அம்பாள் தங்கமயில் வாகனத்திலும் திருவீதிவுலா. திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள்.

திதி: தசமி
சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை
சூரியன்
மகம் 3ம் பாதம் - ஆட்சி
சந்திரன்
ரிஷபம் - உச்சம்
செவ்வாய்
மகம் 3ம் பாதம் - பகை
புதன்
மகம் 2ம் பாதம் - பகை
குரு
கேட்டை 2ம் பாதம் - பகை
சுக்ரன்
மகம் 4ம் பாதம் - பகை
சனி
மூலம் 4ம் பாதம் - நட்பு
ராகு
திருவாதிரை 4ம் பாதம் - நட்பு
கேது
பூராடம் 2ம் பாதம் - நட்பு

ரிஷபம்: கிரகநிலை: ராசியில் சந்திரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன் - சுகஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில்  குரு  - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று பகல் 12.52 மணிக்கு சந்திர பகவான் ராசியில் இருந்து தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று புதிய வாகனம் சேரும். ஆபரணங்கள் சேர்க்கை சேரும்.   தடைபட்ட காரியங்களை செய்து முடிக்க மீண்டும் முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உற்சாகம் உண்டாகும். அலுவலகம் செல்வோருக்கும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை அதிர்ஷ்ட எண்: 1, 7  மேஷம்: கிரகநிலை: தனஸ்தானத்தில் சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராஹூ - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில்  குரு  - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று பகல் 12.52 மணிக்கு சந்திர பகவான் தனஸ்தானத்தில் இருந்து தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனகசப்பு மாறும். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். புதிய நண்பர்களின் சேர்க்கை அவரால் உதவி உண்டாகும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7  மிதுனம்: கிரகநிலை: ராசியில் ராஹூ - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன்  - ரண ருண ரோக ஸ்தானத்தில்  குரு  - களத்திர ஸ்தானத்தில் சனி (வ), கேது - விரைய ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று பகல் 12.52 மணிக்கு சந்திர பகவான் விரைய ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார். பலன்: இன்று கலைத்துறையினருக்கு எதிலும் கவனம் தேவை. உடன் பணிபுரிபவர்களிடம்  சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை வரலாம். அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 4, 5  கடகம்: கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில்  குரு  - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ), கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன் - விரைய ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று பகல் 12.52 மணிக்கு சந்திர பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று ஆக்கப் பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது.   அரசியல் துறையினருக்கு மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக  இருப்பது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 5  சிம்மம்: கிரகநிலை: ராசியில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - சுகஸ்தானத்தில்  குரு  - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ), கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று பகல் 12.52 மணிக்கு சந்திர பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று புதிய ஒப்பந்தங்கள் எதில் கையெழுத்திடுவது என்றாலும் அதிலுள்ள ஷரத்துகளை கவனமாக படித்து பின் கையோப்பமிடவும். எதை செய்வதாயிருந்தாலும் தகுந்த ஆலோசனை பெறவும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 3  கன்னி: கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில்  குரு  - சுகஸ்தானத்தில் சனி (வ), கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் ராஹூ - விரையஸ்தானத்தில்  சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று பகல் 12.52 மணிக்கு சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். சக மாணவர்களின் ஆதரவால் வெற்றிகள் கிடைக்கும். ஆசிரியர்களின்  ஆதரவு இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9  துலாம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில்  குரு  - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ), கேது - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ - லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று பகல் 12.52 மணிக்கு சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று பணத் தட்டுப்பாடு நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.  தனது நிதானத்தால் அனைவரையும் வசீகரிப்பீர்கள். உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றி அதன் மூலம் மதிப்பும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7  விருச்சிகம்: கிரகநிலை: ராசியில்  குரு  - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ), கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் ராஹூ - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று பகல் 12.52 மணிக்கு சந்திர பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று பணவரவு திருப்தி தரும். சிக்கலான சில விஷயங்களை சாதூரியமாக பேசி முடித்து விடுவீர்கள். வீண் பயத்தை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் முன்பு இருந்ததை விட முன்னேற்றம் காண்பீர்கள்.  வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9  தனுசு: கிரகநிலை: ராசியில் சனி (வ), கேது - ரண ருண ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர  ஸ்தானத்தில் ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் -  விரைய ஸ்தானத்தில்  குரு   என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று பகல் 12.52 மணிக்கு சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று கூட்டு வியாபாரம் அனுகூலத்தைத் தரும். எதிர்பார்த்த வங்கிக் கடனுதவி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்களது சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும்  திறம்பட செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவார்கள். உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9  மகரம்: கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன்  - லாப ஸ்தானத்தில்  குரு  - விரைய ஸ்தானத்தில் சனி (வ), கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று பகல் 12.52 மணிக்கு சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். தேவையற்ற வீண் பேச்சுக்களை  குறைப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி ஏற்படும். வாழ்க்கை துணையின் ஆதரவு உண்டு. பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடலாம். குடும்ப விவாவதத்தில் கோபத்தை தவிர்த்து பேசுவது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9  கும்பம்: கிரகநிலை: சுக ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ -  சப்தம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன்  - தொழில் ஸ்தானத்தில் குரு  - லாப ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று பகல் 12.52 மணிக்கு சந்திர பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று சாதூரியமான பேச்சின் மூலம் சிக்கலான பிரச்சனைகளையும் தீர்த்து விடுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடலாம். கலைத்துறையினர் அனுசரித்து போவது நன்மைதரும். வீண் பேச்சை குறைப்பது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6  மீனம்: கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில் சந்திரன் - சுகஸ்தானத்தில் ராஹூ - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில்  குரு  - தொழில் ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று பகல் 12.52 மணிக்கு சந்திர பகவான் தைரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் கவனம் தேவை.  பணவரத்து திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம்.   அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9  

newstm.in

Trending News

Latest News

You May Like