1. Home
  2. ஜோதிடம்

25-11-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு தடைப்பட்ட பண உதவி கிடைக்கும்

25-11-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு தடைப்பட்ட பண உதவி கிடைக்கும்

25-11-2019-newstm-dwstm-daily-astrology

25-11-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு தடைப்பட்ட பண உதவி கிடைக்கும்

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
கார்த்திகை - 09
திங்கட்கிழமை

சதுர்த்தசி இரவு 11.00 மணி வரை. பின் அமாவாசை
ஸ்வாதி பகல் 11.25 மணி வரை பின் விசாகம்
அமிர்த யோகம்
நாமயோகம்: சோபனம்
கரணம்: பத்ரம்

அகஸ்: 28.38
த்யாஜ்ஜியம்: 26.21
நேத்ரம்: 0
ஜீவன்: 1/2
விருச்சிக லக்ன இருப்பு (நா.வி): 4.02
சூரிய உதயம்: 6.16


ராகு காலம்: காலை 7.30 - 9.00
எமகண்டம்: காலை 10.30 - 12.00
குளிகை: மதியம் 1.30 - 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்

குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
அவிநாசி கோவிலில் அவிநாசி லிங்கேஸ்வரர் கார்த்திகை தீப உற்ஸவ விழா.
திருநெல்வேலி நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீபெரியாழ்வார் புறப்பாடு.

திதி: சதுர்த்தசி
சந்திராஷ்டமம்: ரேவதி, அசுபதி

சூரியன் அனுஷம் 2ம் பாதம் - பகை
சந்திரன் துலாம் - பகை
செவ்வாய் சுவாதி 1ம் பாதம் - நட்பு
புதன் சுவாதி 4ம் பாதம் - நட்பு
குரு மூலம் 2ம் பாதம் - ஆட்சி
சுக்ரன் மூலம் 1ம் பாதம் - நட்பு
சனி பூராடம் 2ம் பாதம் - நட்பு
ராகு திருவாதிரை 3ம் பாதம் - நட்பு
கேது பூராடம் 1ம் பாதம் - நட்பு

கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில்  ராஹூ -   களத்திர ஸ்தானத்தில் சந்திரன்,  புதன், செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன்  - பாக்கிய ஸ்தானத்தில்    சுக்ரன், குரு, சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.   மறு நாள் காலை 4.41 மணிக்கு  சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். தேவையற்ற வீண் வாக்குவாதம் ஏற்படும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது  காரிய வெற்றிக்கு உதவும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6  கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில்  ராஹூ  -   ரண, ருண ஸ்தானத்தில் சந்திரன்,  புதன்,   செவ்வாய்   -  களத்திர ஸ்தானத்தில்  சூர்யன்  - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன்,  குரு, சனி, கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. மறு நாள் காலை 4.41 மணிக்கு  சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சனைகள் நீங்கி அமைதி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன கசப்பு மாறும். விருந்தினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவுகள் குறையும். பிள்ளைகள் உங்களது ஆலோசனைகளை கேட்பார்கள். அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7  கிரகநிலை: ராசியில்  ராஹூ -   பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன்,  புதன், செவ்வாய் -  ரண, ருண ஸ்தானத்தில்  சூர்யன்  -   களத்திர ஸ்தானத்தில்  சுக்ரன், குரு, சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. மறு நாள் காலை 4.41 மணிக்கு  சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும். நண்பர்கள் - உறவினர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும். செயல்திறமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9                                             கிரகநிலை: சுக ஸ்தானத்தில் சந்திரன், புதன், செவ்வாய் -   பஞ்சம ஸ்தானத்தில்  சூர்யன் - ரண, ருண ஸ்தானத்தில் சுக்ரன்,  குரு, சனி , கேது   -   அயன, சயன, போக ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. மறு நாள் காலை 4.41 மணிக்கு  சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். தேவையான நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தேவையான சரக்குகளை வாங்குவீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3  கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில்  சந்திரன், புதன், செவ்வாய் -  சுக  ஸ்தானத்தில்  சூர்யன்  -   பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன், குரு, சனி , கேது   -  லாப ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.  மறு நாள் காலை 4.41 மணிக்கு  சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பை பெறுவீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கணவன்மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்:  4, 6கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சந்திரன்,  புதன், செவ்வாய் -  தைரிய, வீர்ய ஸ்தானத்தில்  சூர்யன்  -  சுக  ஸ்தானத்தில்  சுக்ரன், குரு, சனி , கேது  -  தொழில்  ஸ்தானத்தில்   ராஹூ   என கிரகங்கள் வலம் வருகின்றன.  மறு நாள் காலை 4.41 மணிக்கு  சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். வரவேண்டிய பணம் வந்து சேரும். செயல் திறமை அதிகரிக்கும். பெற்றோர் ஆதரவு கிடைக்கும். சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். மாணவர்கள் எதிர்கால நலன் கருதி எந்த காரியத்தையும் செய்வது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6  கிரகநிலை: ராசியில்  சந்திரன், செவ்வாய்,  புதன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன் -  தைரிய ஸ்தானத்தில்  சுக்ரன், குரு, சனி , கேது -  பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ   என கிரகங்கள் வலம் வருகின்றன.   மறு நாள் காலை 4.41 மணிக்கு  சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம். வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம். பெண்களுக்கு புத்திசாதூரியம் அதிகரிக்கும் எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள்  உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7  கிரகநிலை: ராசியில்  சூர்யன்  - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சுக்ரன், குரு, சனி , கேது  - அஷ்டம  ஸ்தானத்தில்  ராஹு-  அயன, சயன, போக ஸ்தானத்தில் -  சந்திரன்,  புதன், செவ்வாய்  என கிரகங்கள் வலம் வருகின்றன.  மறு நாள் காலை 4.41 மணிக்கு  சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார். பலன்: இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் அலைச்சலுக்கு பின் நடந்து முடியும். தேவையான பண உதவி சற்று தாமதமாக கிடைக்கலாம். தொழில் தொடர்பாக எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். அவர்களை அனுசரித்து செல்வது நன்மையைத் தரும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7கிரகநிலை: ராசியில் சுக்ரன், குரு, சனி , கேது -  களத்திர ஸ்தானத்தில்  ராஹு  -  லாப ஸ்தானத்தில்  சந்திரன், செவ்வாய்,  புதன் -  அயன, சயன, போக ஸ்தானத்தில்   சூர்யன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.  மறு நாள் காலை 4.41 மணிக்கு  சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. உதவிகள் செய்யும்போது ஆலோசித்து செய்வது நல்லது. மாணவர்களுக்கு கல்விக்காக செலவு உண்டாகும். கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5கிரகநிலை: ரண, ருண , ஸ்தானத்தில்  ராஹூ -  தொழில் ஸ்தானத்தில்  சந்திரன், செவ்வாய்,  புதன் -  லாப ஸ்தானத்தில்  சூர்யன்  -   அயன, சயன,  போக ஸ்தானத்தில்  சுக்ரன்,  குரு,  சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.  மறு நாள் காலை 4.41 மணிக்கு  சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம். மனதில் தைரியம் உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும். இஷ்டத்திற்கு விரோதமாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும். வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9  கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ  -   பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்,  புதன் -  தொழில் ஸ்தானத்தில்  சூர்யன் -  லாப ஸ்தானத்தில் சுக்ரன், குரு, சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.  மறு நாள் காலை 4.41 மணிக்கு  சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9  கிரகநிலை: சுக ஸ்தானத்தில் ராஹூ  -   அஷ்டம ஸ்தானத்தில்  சந்திரன், செவ்வாய்,  புதன் - பாக்கிய ஸ்தானத்தில்  சூர்யன் - தொழில்  ஸ்தானத்தில் சுக்ரன், குரு, சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. மறு நாள் காலை 4.41 மணிக்கு  சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். பயணங்கள் ஏற்படும்.  குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் அவை நீங்குவதுடன் உடல் ஆரோக்கியமும் அடையும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. மனதில் பக்தி உண்டாகும். சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போதும் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9  

newstm.in

Trending News

Latest News

You May Like