25-10-2018 தினப்பலன் -இந்த ராசிக்காரர்களுக்கு வீண் பண விரயம் ஏற்படலாம்.
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணித்த இன்றைய ராசி பலன் மற்றும் பஞ்சாங்கம்!

25-10-2018-newstm-daily-free-astrology
கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
இன்றைய பஞ்சாங்கம்
விளம்பி வருஷம் I தக்ஷிணாயணம் I சரத்ருதுI ஐப்பசி 08 Iஇங்கிலீஷ்: 25 October 2018 I வியாழக்கிழமை
பிரதமை இரவு 10.30 மணி வரை. பின் துவிதியை I அசுபதி பகல் 11.00 மணி வரை. பின் பரணி
வஜ்ரம் நாமயோகம் I பாலவம் கரணம் Iஅமிர்த யோகம்
தியாஜ்ஜியம்: 2.01 I அகசு: 29.14 I நேத்ரம்: 2 Iஜீவன்: 1I துலாம் லக்ன இருப்பு: 7.39 I சூர்ய உதயம்: 6.07
ராகு காலம்: மதியம் 1.30 - 3.00 I எமகண்டம்: காலை 6.00 - 7.30 I குளிகை: காலை 9.00 - 10.30 I சூலம்: தெற்கு I பரிகாரம்: நல்லெண்ணெய்
குறிப்பு:இன்று சமநோக்கு நாள் I சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்
திதி: பிரதமை I சந்திராஷ்டமம்: சித்திரை
உங்கள் ராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்கள் மற்றும் பாிகாரங்களை படிக்க கிளிக் செய்யுங்கள்...
மேஷம்: கிரகநிலை: ராசியில் சந்திரன் - சுகஸ்தானத்தில் ராகு - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன்(வ), சூர்யன் - அஷ்டம ஸ்தானத்தில் குரு, புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று எந்திரங்களை இயக்கும் போதும் ஆயுதங்களை பயன்படுத்தும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையில் சில்லறை சண்டைகள் ஏற்படும். பிள்ளைகள் நீங்கள் கூறியபடி நடக்கவில்லையே என்ற கவலை உங்களுக்கு ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5ரிஷபம்: கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன்(வ), சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் குரு, புதன் - அஷ்டம ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று பணவரத்து கூடும். எதிர்பார்த்த தகவல் தாமதமாக வரும். ஏதாவது கவலை மனதில் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் மதிப்பெண் பெற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். பாடங்களில் சந்தேகம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5மிதுனம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்ரன்(வ), சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு, புதன் - களத்திர ஸ்தானத்தில் சனி - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று மனதில் தைரியம் உண்டாகும். எந்த காரியத்திலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். மனதில் உற்சாகம் உண்டாகும். வீண் அலைச்சல் அதனால் கண்விழிக்கும் நிலை ஏற்படலாம். எதிர்பாராத செலவு வரலாம். நிர்பந்தமாக வெளியூர் செல்ல நேரிடும். அடுத்தவர்கள் விவகாரத்தில் ஈடுபடுவதால் சிக்கல் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7 தினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்கடகம்: கிரகநிலை: ராசியில் ராஹ - சுக ஸ்தானத்தில் சுக்ரன்(வ), சூர்யன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு, புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தொழில் வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் ஏற்படும். உற்சாகமாக செயல் பட்டு புதிய வாடிக்கையாளர்களை பிடிப்பீர்கள். அதே நேரத்தில் போட்டியும் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை விரைவாக செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். கடன் விஷயத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9சிம்மம்: கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன்(வ), சூர்யன் - சுகஸ்தானத்தில் குரு, புதன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும் மறைமுகமாக சில பிரச்சனைகள் தோன்றும். கணவன் மனைவிக்கிடையே பரஸ்பரம் அனுசரித்து செல்வது நன்மை தரும். பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9கன்னி: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன்(வ), சூர்யன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு, புதன் - சுக ஸ்தானத்தில் சனி - பஞ்சம் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று திடீர் செலவு உண்டாகும். வீண் அலைச்சலை தவிர்க்க திட்ட மிட்டு செயல்படுவது நல்லது. மாணவர்கள் உற்சாகமாக செயல்பட்டு பாடங்களை படிப்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். காரியதாமதம், அதனால் மனக் கவலை ஏற்படலாம். வீண் வாக்கு வாதங்களை உண்டாக்கும். அதனால் அடுத்தவரின் பகைக்கு ஆளாக நேரிடலாம். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 9 அங்காரகன் (செவ்வாய்) பயோடேட்டாதுலாம்: கிரகநிலை: ராசியில் சுக்ரன்(வ), சூர்யன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று பணவரத்து அதிகரிக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். சகோதரர்களால் நன்மை ஏற்படும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தடையும், தாமதமும் ஏற்படலாம். ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றும். கடிதப் போக்குவரத்தால் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பேச்சை கட்டுப்படுத்தி கருத்து வேற்றுமை வராமல் கவனமாக இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6விருச்சிகம்: கிரகநிலை: ராசியில் குரு, புதன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன்(வ), சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் கூறும் கருத்துக்களை கவனமாக கேட்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையில் ஒற்றுமை அதிகரிக்க வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் நேசமுடன் பேசுவது அவர்கள் கருத்தை அறிந்து செயல்படுவது நன்மைதரும். வீண் வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியாக பேசுவது நல்லது. பணவரத்து திருப்திதரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5தனுசு: கிரகநிலை: ராசியில் சனி - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் சுக்ரன்(வ), சூர்யன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு, புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று மாணவர்களுக்கு கல்வி தொடர்பான கடிதப்போக்குவரத்து சாதகமாக பலன் தரும். சகமாணவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. சாதூரியத்தால் காரிய நன்மைகள் உண்டாகும். பணவரவு கூடும். பயணங்களால் நன்மை உண்டாகும். வீணான பயஉணர்வு தோன்றும். மனநிம்மதி உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 2, 9 புண்ணியம் தரும் ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம்மகரம்: கிரகநிலை: ராசியில் செவ்வாய், கேது - சுகஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன்(வ), சூர்யன் - லாப ஸ்தானத்தில் குரு, புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று முயற்சிகள் சாதகமான பலன் தரும். வெளி வட்டார தொடர்புகளில் கவனம் தேவை. அடுத்தவர் கூறுவதை முழுமையாக நம்பும்முன் யோசிப்பது நல்லது. உழைப்பின் மூலம் தொழில் வியாபாரம் முன்னேற்றமடையும். தடை பட்ட திட்டங்கள் நிறைவேறும். எதிலும் மெத்தனம், பிடிவாதம் இல்லாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5கும்பம்: கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன்(வ), சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் குரு, புதன் - லாப ஸ்தானத்தில் சனி - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று குடும்பத்தில் நிதானமான போக்கு காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். ஒருவரது கருத்தை மற்றவர் கேட்பது நல்லது. பிள்ளைகள் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். அவர்களுடன் கேளிக்கை, விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9மீனம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன்(வ), சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு, புதன் - தொழில் ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு பாடங்களை படிப்பீர்கள். பிடிவாதத்தை விடுவது நன்மைதரும். கோபத்தால் வீண் பிரச்சனை ஏற்படும். பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. காரிய தாமதம் ஏற்படும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். குறிக்கோளற்ற பயணம் செல்ல வேண்டி இருக்கும். விருப்பத்திற்கு மாறாக சில விஷயங்கள் நடக்கலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9newstm.in
Tags:
Next Story