1. Home
  2. ஜோதிடம்

(25-09-2020) இன்றைய ராசிபலன்கள்... எந்த ராசிக்கு வரவு ? எந்த ராசிக்கு செலவு ?

(25-09-2020) இன்றைய ராசிபலன்கள்... எந்த ராசிக்கு வரவு ? எந்த ராசிக்கு செலவு ?

(25-09-2020) இன்றைய ராசிபலன்கள்... எந்த ராசிக்கு வரவு ? எந்த ராசிக்கு செலவு ?

கிரகநிலை:

ராசியில் செவ்வாய்() - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் புதன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் குரு, சனி, சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

மறு நாள் காலை 5.31 மணிக்கு சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று தொலைதூர தகவல்கள் மன மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கண் நோய் ஏற்படலாம். வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். தொழிலில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது. கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வீண்கவலை இருக்கும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத சூழ்நிலை வரும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் சுறுசுறுப்பு காணப்படும். மற்றவர்களை விட கூடுதலாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 5

கிரகநிலை:

ராசியில் ராஹூ - தைரிய ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன் - களத்திர ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் குரு, சனி, சந்திரன் - விரைய ஸ்தானத்தில் செவ்வாய்() என கிரகங்கள் வலம் வருகின்றன.

மறு நாள் காலை 5.31 மணிக்கு சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று அலுவலகத்தில் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். மேலிடத்திடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. ஏதாவது வேண்டாத பிரச்சனை தலை தூக்கலாம். யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பண வரத்தில் நிறைவு இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் எதிர்பார்த்ததை விட சற்று நிதானமாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2, 9

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் சூர்யன் - பஞ்சம ஸ்தானத்தில் புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் குரு, சனி, சந்திரன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய்() - அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

மறு நாள் காலை 5.31 மணிக்கு சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். திறமை வெளிப்படும். குறைகள் நீங்கும். சட்டதிட்டங்களுக்கும், நீதி நேர்மை நியாயத்திற்கு கட்டுபட்டு நடப்பீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும். மன நிம்மதியும், மனோதிடமும் உண்டாகும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிதாக தொழில் ஆரம்பிப்பதற்கு ஏற்ற சூழல் கிடைக்கும். அரசாங்க அனுகூலம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்ற நிலை காண்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 1, 3

கிரகநிலை:

ராசியில் சுக்ரன் - தைரிய ஸ்தானத்தில் சூர்யன் - சுக ஸ்தானத்தில் புதன் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - ரண, ருண ஸ்தானத்தில் குரு, சனி, சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய்() - லாப ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

மறு நாள் காலை 5.31 மணிக்கு சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். திடீர் செலவு உண்டாகும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் மறைந்து மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் கலகலப்பு காணப்படும். வாழ்க்கை துணை உங்களை அனுசரித்து செல்வார். இதனால் மனதில் இருந்த கவலைகள் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 7

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் - தைரிய ஸ்தானத்தில் புதன் - சுகஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் குரு, சனி, சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய்() - தொழில் ஸ்தானத்தில் ராஹூ - விரைய ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

மறு நாள் காலை 5.31 மணிக்கு சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய பதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் எதிர் காலம் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வழக்குகளில் நிதான போக்கு காணப்படும். எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் நன்மை உண்டாகும். மன குழப்பம் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9

கிரகநிலை:

ராசியில் சூர்யன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன் - தைரிய ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் குரு, சனி, சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய்() - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ - லாப ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

மறு நாள் காலை 5.31 மணிக்கு சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். உறவினர் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்களை செய்து முடிப்பதில் திறமை வெளிப்படும் பணவரத்து கூடும். கலைத்துறையினர் எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுப்பார்கள். எனவே கவனமாக இருப்பது நல்லது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சில காரியங்கள் நடந்து முடியும். தொழிலில் லாபம் கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கிரகநிலை:

ராசியில் புதன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - தைரிய ஸ்தானத்தில் குரு, சனி, சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய்() - அஷ்டம ஸ்தானத்தில் ராஹூ - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

மறு நாள் காலை 5.31 மணிக்கு சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. மனக்கவலை உண்டாகும். வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. உடல் சோர்வு உண்டாகலாம். வீண் அலைச்சலை தவிர்த்து வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. அரசியல் துறையினர் வாக்கு வன்மையால் உங்கள் இருப்பை தக்கவைத்துக் கொள்வீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன பதவி உயர்வு, வர வேண்டிய பணம் வந்து சேரும். எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தருவதாக இருக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

கிரகநிலை:

ராசியில் கேது - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு, சனி, சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய்() - களத்திர ஸ்தானத்தில் ராஹு - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் சூர்யன் - விரைய ஸ்தானத்தில் புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

மறு நாள் காலை 5.31 மணிக்கு சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று அரசியல்துறையினருக்கு முன்னேற்றம் காணப்படும். அதே நேரத்தில் பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சந்தேகங்கள் உண்டாகலாம். உடனுக்குடன் அவற்றை கேட்டு தெரிந்து கொள்வது நல்லது. பொருள் வரத்து கூடும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

கிரகநிலை:

ராசியில் குரு, சனி, சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய்() - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராஹு - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன் - லாப ஸ்தானத்தில் புதன்- அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

மறு நாள் காலை 5.31 மணிக்கு சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று மாணவர்களுக்கு கல்வியில் நினைத்ததை விட கூடுதல் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். மனம் தளராது செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். மனக்கவலை தீரும். சமயோசித்தம் போல் செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். எதிர்ப்புகள் விலகும். பயணம் மூலம் லாபம் கிடைக்க கூடும். புதிய நபர்கள் நட்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

கிரகநிலை:

சுக ஸ்தானத்தில் செவ்வாய்() - பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் புதன் - லாப ஸ்தானத்தில் கேது - அயன, சயன, போக ஸ்தானத்தில் குரு, சனி, சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

மறு நாள் காலை 5.31 மணிக்கு சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார்.

பலன்:

இன்று கொடுத்த வேலைகளை கனகச்சிதமாக முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணவரத்து வந்து சேரும். மன நிம்மதி குறையலாம். வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். எனவே கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. அதே வேளையில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். எந்த காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பேச்சின் இனிமை புத்திசாலித்தனம் இவற்றால் முன்னேற்றம் பெறுவார்கள். சிலருக்கு புதிய ஆர்டர்களும் கிடைக்கும். ஏற்றுமதி சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய நபர்கள் அறிமுகவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் செவ்வாய்() - சுக ஸ்தானத்தில் ராஹூ - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் புதன் - தொழில் ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் குரு, சனி, சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

மறு நாள் காலை 5.31 மணிக்கு சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சலும், பண விரயமும் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன் செய்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பேச்சினால் மேல் அதிகாரிகளை கவர்ந்து விடுவார்கள். அதனால் எதிர்பார்த்த உதவியும் நன்மையும் கிடைக்கும். ஆனால் பொருட்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்ச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய்() - தைரிய ஸ்தானத்தில் ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன் - அஷ்டம ஸ்தானத்தில் புதன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் குரு, சனி, சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

மறு நாள் காலை 5.31 மணிக்கு சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சூழ்நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காண்பீர்கள். உடல் களைப்பும், சோர்வும் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. எடுத்த வேலைகளை மிகச்சரியாக செய்து நல்ல பெயர் எடுப்பீர்கள். குடும்பத்தில் இருந்த இறுக்கம் நீங்கி மனம் மகிழ்ச்சியடையும் விதமாக சம்பவங்கள் நடக்கலாம். உறவினர் மூலம் தேவையான உதவியும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

Trending News

Latest News

You May Like